Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உராய்வு

Featured Replies

அடபாவி வசி அழைத்து சென்று வழி காட்டி விட இப்படி சொல்லியிருக்கு .... எழுத நேரமில்லை. வெளியில் போகணும் வந்து வசியின் குறும்புதனங்களை சொல்லுறன் :P

  • Replies 318
  • Views 42.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உராய்வு புத்தக வெளியீட்டு விழா இனிதே சிறப்பாக நடை பெற்றது..வசி,சுதா மதன் வந்திருந்தார்கள்... கிருபனும் குறுந்தாடியுடன் வந்தார் என்று கேள்வி... இளைஞனை தவிர வேற கள உறவுகள் அவரை சந்திக்கவில்லை ..

இளைஞனை தாசீசியஸ் மாஸ்ரர் உரிமையோடு கவிதையை பாடச் செய்ததும், அவரும் கீழ்ப்படிவுள்ள மாணவன் போன்று கவிதைகளைப் பாடிக் காட்டியதும் நிகழ்ச்சிக்குக் கலகலப்பூட்டியது.

எதிர்பார்த்த பலர் பாராட்ட வரவில்லை என்ற ஆதங்கமும் பலரின் பேச்சில் தொனித்தது. எனினும் இளைஞனின் கவிதைகளைப் படிப்பதற்கு விமர்சகர்களின் பரிந்துரைப்பு தேவையில்லை என்றே எண்ணுகின்றேன்.

உலக நாணயங்களையும், பணத்தாள்களையும் ஒரே இடத்தில் பார்க்கக் கூடியதாக இருந்தது. அன்ரன் யோசேப்பின் கடின உழைப்பிற்குப் பாராட்டுக்கள்.

எட்டு மணிக்கு வேறோர் இடத்திற்குச் செல்ல வேண்டிய தேவை இருந்ததால் இறுதி வரை நிற்க முடியவில்லை. அதனால் யாழ்கள உறவுகளுடன் பேச முடியவில்லை. இன்னோர் விழாவில் கட்டாயம் சந்திப்போம்.

ஸ்ராலின் பாத்தப்பு தமிழ் மாணவர் பேரவை தாபகர் சத்திய சிலணெண்டு எழுதியிருக்கிறீர் புஸ்பராசா கேள்விபட்டா கோவிக்க போறர் அடுத்து உந்த புத்தக வெளியீடு வரவேற்க வேண்டியவிடயம் நானும் வரவேற்றனான் ஆனாலும் பல நெருடலான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன அதை பற்றி வpரிவா ஒரு கட்டுரை பிறகு எழுதுறன் ஏணெண்டா பல பிரச்சனைக்கு மத்தியிலை உந்த வெளியீட்டை நடத்தின இளைஞனை உடனை குளப்ப கூடாதல்லோ

தொடங்கிடாங்கையா....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழுதியும் வந்திருந்தார். இளைஞனுக்கு எனது வாழ்த்துக்கள். தரமான படைப்புகள். சில நிகழ்வுகள் மனதில் ஒட்டவில்லை.

- வழுதி

அடபாவி வசி அழைத்து சென்று வழி காட்டி விட இப்படி சொல்லியிருக்கு .... எழுத நேரமில்லை. வெளியில் போகணும் வந்து வசியின் குறும்புதனங்களை சொல்லுறன் :P

மதன் நீர் 1பவுண்ட் காசுதந்து என்னை நடுரோட்டில் விட்டுப்போகலையா? ஆமா இல்லலையா? :evil:

  • கருத்துக்கள உறவுகள்

வசி என்ன இருந்தாலும் மதன் உம்மைகுடும்பத்தோடை நடு றோட்டிலை விட்டிருக்க கூடாது :P

வசி என்ன இருந்தாலும் மதன் உம்மைகுடும்பத்தோடை நடு றோட்டிலை விட்டிருக்க கூடாது :P

பாவம் வசி :lol: மதன் என்டாலும் நீங்கள் இப்படி செய்து இருக்க கூடாது :lol:

நாங்கள் எப்படி போனம் என்னத்தில போனம் எப்படி வந்தம் என்றே தெரியாத

சாத்திரி.. நான் இங்க எழுதின வைச்சு எனக்கே பிலிம்

காட்டப்பார்க்கிறீங்களா? :evil: :roll:

நீங்கள் விழாவிற்கு வந்தவர் மாதிரி காட்டிக்கொள்ள

முயற்சி செய்கிறீங்கள்.. ஆனா அது சரிவரேல்லை..

இன்னும் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்... :lol::lol:

உராய்வு வெளியீட்டுக்கு வந்த கள உறவுகள் ஸ்டாலின் அண்ணா..

மதன் ஆகியோரை சந்தித்தது மிக்க மகிழ்ச்சியாக

இருந்தது :lol: .

மதனும் இளைஞனும் என்னை திரைப்படம் பார்க்க கூட்டிக்

கொண்டு போவதாக சொல்லி முழு லண்டனும் சுத்திக் காட்டினர் :evil:

படம் தொடங்கி அரை மணித்தியாலத்துக்கு பிறகுதான் தியேட்டரை அடைய முடிந்தது...

பிறகு இளைஞனை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டு.. மதன் என்னை கூட்டிவந்து நடுரோட்டில்

இரவு 2 மணிக்கு விட்டுட்டு 1பவுண் காசு தந்து வீட்டபோகச் சொல்லி போயிட்டான்..

பிறகு நான் அழுதுகொண்டு வீட்டுக்கு வந்து சேர இரவு 3.15 மணி ஆச்சு.. :lol:

துரோகி மதன் என்னை பழிவாங்கிட்டான்.. :cry: :cry:

துரோகி என்று தெரிந்துதான் போனீங்களா?

படம் காட்டுறது எண்டு முழு லண்டனையும் சுத்தி படம் காட்டீட்டாங்க போல........................

நடக்கிறதும் உடம்புக்கு நல்லதுதானே வசிசுதா?

ஒரு பவுண் தந்து மதன் உங்களை இப்படிச் செய்திருக்கக் கூடாது?

என்ன மதன்?

நல்லாயில்ல என்று சொல்ல மாட்டன்.

பார்த்து நடக்கக் கூடாது. இப்படி எழுதுவாங்க எண்டு நம்பியிருக்க மாட்டீங்க: இல்ல.......................

நிகழ்ச்சி நன்றாக நடந்ததாக எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி...............

வெகு விரைவில் இளைஞனது உராய்வு புத்தக வெளியீட்டு விழா சுவிசிலும் நடக்க , ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கிறது.

எப்போ என்பதை விரைவில் அறியத் தருவேன்................

அது நிச்சயம் கல கலப்பான நிகழ்வாகவே இருக்கும்

அய்யோ அஜீவன் அண்ணா.. நாங்கள் நடந்துபோகவில்லை..

மதன் அவருடைய காரிலும் நான் என்னுடைய காரிலும் தான்

சுற்றினோம்.. நாங்கள் பாதை தெரியாமலும் சுற்றவில்லை..

நாங்கள் இளைஞனுக்கு லண்டன் சுத்திக் காட்டினாங்கள்..:lol:

மதன் என்னை நடுரோட்டில் விட இல்லை.. ஆனா ஒரு பவுண் தந்தது உண்மை...

அது எதற்கு என்றால் ரனல் கேற்றை கடப்பதற்கு 1 பவுண்

கொயின்ஸ் போட்டால் தான் வாகனம் அங்கால போகலாம்.

என்னிடம் சில்லறை இல்லாத படியால்(நாம எப்பவுமே

கிரடிட்காட் தான் :P )மதன் 1 பவுண் தந்தது. அது நடுரோட்டில

வைச்சுத்தான் தந்தவன்..:evil:

இந்த விளக்கம் போதுமா.. இல்லாட்டி சொல்லுங்கள் மதன்

வந்து மிச்சத்தை எழுதுவான்.. :wink: :wink:

விழா நல்லபடியாக நடைபெற்றது.. இளைஞனின் கவிதைகள்

சிலவற்றை பாடலாகவும் இசையுடன் பாடினார்கள்.. நன்றாக

இருந்தது.. புத்தக வெளியீடு நல்ல கலகலப்பாக நடைபெற்றது..

நல்ல சாப்பாடும் தந்தார்கள்.(நான் சத்தியமாக ஒருதடவைதான்

சாப்பிட்டனான்..)

பார்ப்பதற்கரிய நாணயங்கள் முத்திரைகள் கண்காட்சியும்

நடை பெற்றது. கண்காட்சி நடத்தியவரும் ஜேர்மனில் இருந்து

இளைஞனுடன் தான் வந்திருந்தார்.

விழா எல்லாம் முடிந்ததும் இளைஞனை வீட்டில் விட்டுவிட்டு

வரும் போது எங்களுக்கு கவலையாக இருந்து.. அவ்வளவு

கலகலப்பான இளைஞன்..

மதனும் பழகுவதற்கு நல்ல நண்பனாக இருந்தார்..

ஸ்டாலின் அண்ணாவும் விழாவிற்கு வந்திருந்தார்.. எங்கள் அனைவருடனும்

நல்ல நட்புறவுடன் சகஜமாக பேசினார்.

எல்லோரையும் பிரிந்து வரும் பொழுது கவலையாகதான் இருந்தது.

எல்லோரும் நீண்டநாட்கள் பழகியது போலவே இருந்தது.

கிருபன் அண்ணா அவரின் நண்பர் ஒருவரோடு வந்திருந்தார்.

அவரை நான் கவனித்தேன்.. அவர் போன பிறகு தான் அவர்தான்

கிருபன் அண்ணா என்று தெரியும்.. முதலே தெரிந்திருந்தால்

அவரோடும் பேசியிருக்கலாம்.

உங்கள் அநுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் வசி

தகவல்களுக்கு நன்றி உறவுகளே.

  • கருத்துக்கள உறவுகள்

வசி நான் நிகழ்ச்சிக்கு வரவில்லை ஆனால் எல்லாம் நேர்முக வர்ணனை போலை செய்தி வந்தது யெர்மன் நிகழ்ச்சிக்கு சில நேரம் போவன்

  • தொடங்கியவர்

வணக்கம் அனைவருக்கும்...

வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நான் தற்போதும் இலண்டனில் நிற்பதால் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய விரிவான தகவல்களை தரமுடியாதுள்ளது. இருந்தாலும் நிகழ்வு பற்றிய தகவல்களை இங்கிணைத்த ஸ்ராலின், கிருபனுக்கு நன்றிகள். மேலும் நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்த ஸ்ராலின், கிருபன், வசி, சுதா, மதன் மற்றும் அறிமுகப்படுத்தாமலே நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்த யாழ் கள உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமகிழ்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

நிகழ்வு பற்றிய விரிவான தகவல்களை நான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகின்றேன்.

வசி, சுதா, மதன், ஸ்ராலின் ஆகியோரோடு அரட்டை அடித்து மகிழ்ந்த அந்த பொழுதுகள் மறக்க முடியாதவை.

சாத்திரியின் நெருடல் எதுவாக இருந்தாலும் அதை இங்கே குறிப்பிட்டால் அறிந்து கொள்ள கூடியதாக இருக்கும். மற்றும் கவிதை தொகுப்பை பெற்று சென்ற நண்பர்கள் அதனை வாசித்து தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை இங்கே எழுதுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றேன்.

பி.கு.: தற்போது இலண்டனில் மதனுடன் இணைந்து ஊர்சுற்றுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உராய்வு இனிதே நடைபெற்றதில் மகிழச்சி. வசி வீடியோ எடுத்திருந்தால் யார் யார் என்ன செய்தீங்க என்று பாக்கலாம். இப்ப சொல்றது எல்லாத்தையும் கேக்கத்தானே வேணும். :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உராய்வு கவிதைகளை... வாசித்தேன்....அப்பொழுது தமிழக எழுத்தளாரன சுஜாதா ஒருமுறை கூறியது நினைவுக்கு வந்தது...ஈழத்து புது கவிகளான சேரன், ஜெயபாலனின் புது கவிதைகளின் திறமையைப்பார்த்து கூனி குறுகும் நிலையில் தமிழக படைப்பாளிகளிருக்கிறார்களென

உராய்வு கவிதைகளை... வாசித்தேன்....அப்பொழுது தமிழக எழுத்தளாரன சுஜாதா ஒருமுறை கூறியது நினைவுக்கு வந்தது...ஈழத்து புது கவிகளான சேரன், ஜெயபாலனின் புது கவிதைகளின் திறமையைப்பார்த்து கூனி குறுகும் நிலையில் தமிழக படைப்பாளிகளிருக்கிறார்களென

உராய்வு நிகழ்வு இனிதே நடைபெற்றதில் மகிழ்ச்சி. :lol:

இளைஞனின் ''உராய்வு'' புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது என லண்டன் யாழ்கள உறவுகள் எழுதியதை வாசித்தேன்.

மிக்க மகிழ்ச்சி.

பல கள உறவுகள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டது பற்றி அறிந்து இன்னும் மகிழ்ச்சியாக இருந்தாலும் என்னால் அன்று கலந்து கொள்ள முடியாமல் போனதையிட்டு கவலையாக இருந்தது.

தவிர்க்க முடியாத ஒரு சம்பவத்தால் அன்றைய தினம் நிகழ்ச்சிக்கு வரமுடியாமைக்கு இளைஞனிடம் மனம் வருந்திக்கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் இளைஞன்,

நான் இலண்டனில் இருந்து தொலைவில் இருந்தபடியால் வர முடியவில்லை.

மென் மேலும் உங்கள் முயற்ச்சிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

இளைஞன் அண்ணா விழா சிறப்பாக நடந்தது குறித்து சந்தோசம் :P

நான்தான் வரமுடியாமல் போயிட்டு (எங்கட பெரிய அண்ணாவின் என்கேஜ்மென்ட் பார்ட்டி) அதால மதன் அண்ணா வசி அண்ணா கிருபன அண்ணா எல்லாரையும் பாக்கேலாமல் போயிட்டு :(

படம் எடுத்திருப்பீங்க தானே அதை களத்தில போடுங்கோ பாக்க ப்ளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்...விழப சிறப்பாக நடைபெற்றதில் மகிழ்ச்சி அண்னா..

சில புகைபடங்களையும் இனைக்களாமே... :P

என்னிடம் கமறா இல்லை (நான் ஒரு ஏழை :cry: ) இருந்திருந்தா போட்டோ எடுத்துவந்து இங்க போட்டிருப்பேன் :(

"உராய்வு" வெளியீட்டு விழா இனிதே நிறைவேறியதை அறிந்து ரொம்ப சந்தோசம். :P

கள உறவுகளை சந்தித்து ரொம்ப மகிழ்வடைந்திருக்கிறீங்கள். ரொம்ப சந்தோசம். :P

ஓகே இளைஞன் அண்ணா மதன் அண்ணாவுடன் சேர்ந்து லண்டனை சுற்றிப்பார்த்து சந்தோசமாக ஜேர்மனி சென்று வெளியீட்டு நிகழ்வு பற்றிய மேலதிகமான சுவாரசியமான தகவல்களை தாருங்கள். :P

என்னிடம் கமறா இல்லை (நான் ஒரு ஏழை :cry: ) இருந்திருந்தா போட்டோ எடுத்துவந்து இங்க போட்டிருப்பேன் :(

வசியண்ணா சரி அழாதீங்க. ஆமா மதன் அண்ணா கமரா கொண்டுவந்திருப்பாரே. :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.