Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிரிழக்கவில்லையென்று சர்வதேச மட்டத்தில் சிலர் பிரசாரம் - அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்கிறார் அமைச்சர் யாப்பா

Featured Replies

வீரகேசரி நாளேடு 5/19/2009 8:39:55 PM - விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாதத்தை இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களில் முற்றாக ஒழித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் தொடர்பில் உலகத்தில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியவர்கள். முதன் முதலாக மனித வெடிகுண்டு என்ற அழிவு முன்மாதிரியை வெளிக்காட்டியவர்கள்.

எனது இளமைக் காலம் அரசியல் தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முக்கியமாக சிவிலியன்களை புலிகள் கொலை செய்தனர். மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. தமிழ் மக்களுக்கே துரோகம் இழைத்தனர்.

இலங்கையின் பொருளாதார மையங்களை அழித்தனர். புலிகளின் அழித்தல் தொடர்பான விடயங்களை கேள்வியுற்றவாறே எனது இளமை காலம் கழிந்தது. எப்போதும் நிம்மதியற்ற வகையிலேயே காலத்தை கழித்தோம். ஆனால், தற்போது எதிர்கால சந்ததியினருக்கு நாம் அதனை விட்டு வைக்கவில்லை.

இன்னும் புலிகளுக்கு சிலர் வக்காளத்து வாங்குவதாகவே தெரிகிறது. பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லையென சர்வதேச மட்டத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயற்படின் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்

பயமுறுத்தலா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போடா பன்னி

  • கருத்துக்கள உறவுகள்

சாவுக்கு பயந்தவன் தமிழன் இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இது பயமுறுத்தலல்ல. கொலைப் பயமுறுத்தல். ஒட்டு மொத்த உலகத் தமிழினத்துக்குமானது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா இது இறுதியின் ஆரம்பம் மறந்துவிடாதீர்கள்!

என்ன கொடுமை சரவணா

றோட்டிலை போற நாயெல்லாம் குலைக்குது

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருந்து குறித்த செய்தி பொய் என்பது புலனாகிறது.

மக்களை குழப்பி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும் புலம்பெயர் நாடுகளில் நடத்தப்படும் தொடர் போராட்டங்களை புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள் என்ற பொய்ப் பரப்புரை மூலம் முறியடிக்கவுமே எதிரி முயல்கிறான். அதற்காகவே அந்தத் தளபதி பலி. இவர் பலி..! என்று கதையளந்து திரிகிறான்.

சில மூத்த தலைவர்கள் உயிரிழந்துள்ளதை விடுதலைப்புலிகளே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில்.. தலைவர் பற்றிய பரப்புரை எதிரிக்கு தமிழ் மக்களின் போராட்ட ஓர்மத்தை மழுங்கடிக்க தேவை என்பதால் அதனை முன்னெடுக்கிறான்.

தலைவரின் உடலை.. கருணா என்பவன் இனங்காட்டியதாய் கதையளந்தார்கள். இப்போ டி என் ஏ ரெஸ்ட் செய்தார்களாம். நேற்றுச் சொன்னார்கள் உடலம் எரிந்து போய் விட்டது என்று. கருணாவால் ?? தெளிவாக அடையாளம் காணக்கூடிய உடலத்திற்கு எதற்கு டி என் ஏ பரிசோதனை...?!

ஒரே உடலம் ஒருக்கா வாய் மூடி இருக்குது. ஒருக்கா வாய் திறந்து இருக்குது. :(:unsure:

யாப்பா உனக்கு தான் அறிவில்லை என்றால் உலகத்தில உள்ள அனைவருக்குமா அப்படி. :o:(

Edited by nedukkalapoovan

முடிந்தால் என் முன்னே தனியாக வருவாயா?

எம் மக்கள் அனுபவித்த வேதனைகள் யாவும் விரைவில் நீயும் உன் மக்களும் அனுபவிப்பாயாக!

  • கருத்துக்கள உறவுகள்

name='nedukkalapoovan' date='May 19 2009, 09:27 PM' post='516587']

யாப்பா உனக்கு தான் அறிவில்லை என்றால் உலகத்தில உள்ள அனைவருக்குமா அப்படி. :( :(

உதெல்லாம் வெளியில் சொல்லகூடாது அமைச்சரின் மானம் போய் விடும் சிறிலங்காவின் அமைச்சரல்லவா அப்படித்தான் இருக்கும்

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை . எமது போராட்டத்தை நிறுத்த இந்திய சிங்களம் திட்டம் , மக்களே கவனம்

நல்லது யாப்பா நல்லது நாம் எமது உரிமைக்காக போராட தவறினாலும் நீங்கள் எங்களை போராடதூண்டிக்கொண்டே இருப்பீர்கள்.

முல்லைத்தீவு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முன்பு ராணுவம் கூறியதைப் போல தப்பி ஓட முயலவில்லை என்று பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் லட்சுமண் ஹலகலே கூறியுள்ளார்.

ஒரே நாளில் ராணுவம் இப்படி மாற்றிக் கூறியுள்ளதால், பிரபாகரன் எந்தச் சூழ்நிலையில் கொல்லப்பட்டார், யார் அவரை சுட்டுக் கொன்றது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவின்படி விடுதலை ப் புலிகள் இயக்க சீருடையில் கம்பீரமாக காணப்படும் பிரபாகரனின் தலையில் குண்டுகள் பாய்ந்துள்ளன.

முதலில் கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் பிரபாகரன் ஆம்புலன்ஸ் வேனில் தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது ராணுவம் அவரை சுட்டுக் கொன்றதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால் நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரன் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில் குண்டுக் காயம் உள்ளது. அதைக் காட்டாமல் மறைக்க துணியை வைத்து ராணுவம் மறைத்துவிட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

சயனைட் அருந்தி இறந்த பின் சுடப்பட்டாரா?:

மேலும், தப்பி ஓட முயன்றபோது சுட்டுக் கொன்றதாக முன்பு கூறப்பட்டதை இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஹலகலே இன்று மறுத்துள்ளார். இதனால் பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் தொடர்பாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மிகவும் நெருக்கத்தில் இருந்து பிரபாகரன் சுடப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

அவர் சயனடை அருந்தி தற்கொலை செய்த பின்னர் உடலை எடுத்து வந்து தலையில் சுட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் அவரது உடல் கிடந்த இடம் என்று ராணுவம் கூறுவது பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். அங்கு எப்படி அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரியவில்லை.

ஒரே நாளில் நடந்த டி.என்.ஏ சோதனை!:

இறந்தது பிரபாகரன் தான் என்றும், டி.என்.ஏ. சோதனைகள் அதை உறுதி செய்துள்ளதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது. 24 மணி நேரத்துக்குள் டி.என்.ஏ. சோதனைகள் எப்படி நடத்தப்பட்டன என்பதற்கு விடை இல்லை.

அதே போல பிரபாகரன் ஏன் புலிகள் உடையில் இருந்தார்?, தப்பியோட முயல்பவர் சாதாரண உடையில் இருந்திருக்க மாட்டாரா? என்ற கேள்விகளும், அவரது முகம் சேவ் செய்யப்பட்டுள்ளதே, கடந்த 3 நாட்களாக 500 மீட்டர் தூரத்தில் முடக்கப்பட்டதாகக் கூறப்பட்டவர் சேவ் செய்து கொண்டிருப்பாரா? போன்ற கேள்விகளும் எழுகின்றன.

தமிழனுக்கு வீரத்தை விதைத்தது தலைவன்டா

நாம தலை மாட்டில தலைவனிக்கு பதிலாக துப்பாக்கி வைத்து தூங்கிறது.. உன்ர வாய் வீரத்தை உன்ர சொறிலங்காவோடையே வைச்சு கோ

வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஒரு நாட்டின் அமைச்சரே கொலைமிரட்டல் விடுகிறாரா?

இந்த செய்தி உண்மையானால் இதை சம்பந்தப்பட்டவர்கள் தாம் இருக்கும் அரசாங்கங்களுக்கும் ஊடகத்துறைக்கும் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.

அதிலும் அமெரிக்கா தன் பிரஜைகளுக்கு விடுக்கப்படும் இப்படியான மிரட்டல்களுக்கு உடனடி விளக்கம் கேட்ட தவறுவதில்லை!

மாக்களே சயனைட் அருந்தி இறப்பதற்கோ தலையில் சூடு வேண்டி இறப்பதற்கோ அவர் கருணாவோ பிள்ளையானோ இல்லை. பிரபாகரன் தமிழனிற்கு விலாசம் வேண்டித்தந்த வீரன்.

தயவுசெய்து பொய்களையும் வதந்திகளையும் நம்பாதீர்கள். ஜபிசி வானொலிச்சேவையில் சில பிசாசுகள் எடுத்து அப்படி இப்படி என்று அளக்குதுகள். விசருகளிற்கு நம்பிக்கை இல்லாட்டி பிறகு ஏன் உடுப்பு போடுவான். அவிழ்த்துவிட்டு அம்மணமாய் திரியலாமே

இன்று சிங்கள அரசு காட்டித்திரியும் வீடியோவில் இருப்பது நிச்சயமாக பிரபாகரன் கிடையாது என்பது உறுதியாக தெரிகிறது.

அப்படி ஒரு நிலை தனக்கு வரும் என்றால், தனது சாம்பல் கூட சிங்களவனின் கைக்கு கிடைக்காத விதமாக அவர் ஏற்பாடு செய்திருப்பார்!

உயிருடனோ உயிரற்றோ தலைவர் தன் கைகளில் கிடைக்க மாட்டார் என்று உறுதியாக தெரிந்ததால் தான் சிங்களம் இந்த பொம்மை முக நாடகம் ஒன்றை அரங்கேற்றி உள்ளது. எனக்கென்னவோ இந்திய மேக்கப் துறையின் நிபுணத்துவம் அவசர அவசரமாக இறக்குமதி செய்யப்பட்டு அரைகுறை தயாரிப்பொன்றை வெளியிட்டு உள்ளார்கள் போல தோன்றுகிறது!

இருந்தாலும் தலைவர் கொஞ்ச நாளைக்கு இறந்ததாகவே இருக்கட்டுமே! அதுவும் நல்லது தான்.

ஒரு பிரபாகரனை தாண்டியும் தமிழர் விடுதலை போராட்டம் தொடரும் என்பதை சர்வதேசத்திற்கு நிருபிக்க இந்த கால இடைவெளியில் உழைப்போம்

தமிழர் தாகம் தமிழீழ தாயகம்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசாங்கம் ஆயதம் தரித்த உள்நாட்டு புலிகளை விட ஆயுதம் தரிக்காத வெளிவாட்டு புலிகளுக்குத்தான் நல்லா பயப்படுகுது.சரி தலைவர் இறந்து விட்டதாக அவர்கள் வைத்துக்கொள்ளட்டும்.அதன் மூலம் பயங்கரவாதம் முடிவுக்கு வந்து விட்டது.அபிவிருத்திக்கு பணம் தாருங்கோ என்று கேட்கப் போகிறார்கள்.இதுக்குத்தான் இந்த அவசரம்.நாங்கள் நீங்கள் புலிகளை அழி;த்து விட்டாலும் எங்கள் விடுதலைத்தாகம் அடங்காது என்று காட்டுவோம்.தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்று உரத்து முழங்குவோம்.

ஜ பி சி வானொலி, தெலைக்காட்சிகள் தொலை பேசியில் கருத்து சொல்லும் நிகழ்சிகள் செய்து தமிழ்தேசிய எழிச்சிக்கு வீழ்சி ஏற்படுத்துகின்றார்கள்.

சினிமா பாட்டு போட்டு கதைவிட்டுகொண்டு இருந்த நா---- எல்லாம் இப்ப அரசியல் ஆய்வில இறங்கிவிட்டுதுகள்.

அதைப் பின்பற்றி நேயர்களும் பிரசங்கம் பண்ண பளகிவிட்டினம்.

அறிவிப்பாளர்களுக்கு வேலை நேரத்தைப் போக்காட்டினால் சம்பளம். ஒவ்வொரு தமிழனும் தன் தன் கடமைகளைச் செய்யத்தவறியதால் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுது. தொடர்ந்தும் ஓடும்.

உந்த ஊடகங்கள் திருந்தாமல் ஒன்றும் நடக்கப்பேவது இல்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு தீபம் தொலைக்காட்சியில் கனடாவில் இருந்து சேரன் என்பவர் தனது பளைய இயக்க நச்சுக்கக்கினார்.

பிரபாகரனின் முகம் அழகாக சவரம் செய்யபட்டுள்ளதே எப்படி?

இறந்த உடலின் வாய் முகத்தை திருப்பும் போது எப்படி மூடித்திறக்கும்?

இறந்த உடல் இவ்வளவு வெள்ளையாகவுள்ளதே,அவரின் நிறம் கூட அதுவல்ல?

தப்பிச்செல்லும்போது எப்படி சீருடையணிந்திருப்பார்கள்?

விடைதாருங்கள்? ஊடகங்களே

ஏதோவொரு காரணத்திற்காக இலங்கை அரசு உடனடியாக யுத்ததை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்காக முகமூடிமூலம் நாடகமாடியுள்ளது.இதுதான் உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் புலிகளுக்கு சிலர் வக்காளத்து வாங்குவதாகவே தெரிகிறது. பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லையென சர்வதேச மட்டத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயற்படின் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அவர்களுக்கு விடப்பட்ட மிரட்டலாகவே இது தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று சிங்கள அரசு காட்டித்திரியும் வீடியோவில் இருப்பது நிச்சயமாக பிரபாகரன் கிடையாது என்பது உறுதியாக தெரிகிறது.

அப்படி ஒரு நிலை தனக்கு வரும் என்றால், தனது சாம்பல் கூட சிங்களவனின் கைக்கு கிடைக்காத விதமாக அவர் ஏற்பாடு செய்திருப்பார்!

இருந்தாலும் தலைவர் கொஞ்ச நாளைக்கு இறந்ததாகவே இருக்கட்டுமே! அதுவும் நல்லது தான்.

ஒரு பிரபாகரனை தாண்டியும் தமிழர் விடுதலை போராட்டம் தொடரும் என்பதை சர்வதேசத்திற்கு நிருபிக்க இந்த கால இடைவெளியில் உழைப்போம்

தமிழர் தாகம் தமிழீழ தாயகம்!!!

பத்மநாதன் ஐயாவுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறான் இவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உரக்கச்சொல்வோம் இன்னும் உறைக்கச்சொல்வோம்..

எங்கள் தலைவன் இருக்கின்றான். 'எமக்கான தலைவன் அண்ணை பிரபாகரன் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது யாப்பா நல்லது நாம் எமது உரிமைக்காக போராட தவறினாலும் நீங்கள் எங்களை போராடதூண்டிக்கொண்டே இருப்பீர்கள்.

சரியாகச்சொன்னீர்கள் கலைவாணி .

இந்த எல்லா அமைச்சர் மாரும் தங்களுக்கு என்ன நடக்குமோ

எண்ட பயத்தில நித்திரையே கொள்வதில்லையாம்.........

அதனால் தான் கண்ட படி அலம்புகிறார்கள். தாங்கள் அலம்புகிறது

மட்டுமல்ல அவேன்ர காலை நக்கிக்கொண்டிருக்கிறதுகளும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.