Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கருத்துக்கள முடக்கம்: போராளிகள், தாயக மக்களின் தியாகங்களிற்கு யாழ் இணையத்திலும் மரியாதை செலுத்துவோம்!

Featured Replies

அனைவருக்கும் மீண்டும் இழவு வணக்கங்கள்,

தாயகத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள போராளிகளின், மக்களின் மாபெரும் பேரிழப்புக்கள் கணக்கில் அடங்காதவை. இங்கிருந்து கற்பனை செய்துபார்க்கப்பட முடியாதவை.

எங்கள் துயரைப் பகிரும்முகமாகவும் போரளிகள், மக்களின் உயிர்களிற்கு மதிப்பு கொடுக்கும்முகமாகவும் யாழ் இணையமும் ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊர்ப்புதினம், கவனயீர்ப்பு, மக்கள் அவலங்கள், யாழ் செயலரங்கம் பகுதிகள் போன்ற மிகவும் அவசியமான பகுதிகள் தவிர கருத்துக்களத்தில் உள்ள மிகுதி அனைத்துப்பகுதிகளையும் சில காலத்திற்கு முடக்கி வைப்பது // பூட்டுபோட்டு மூடுவது நல்லது என்று நினைக்கின்றேன். தயவுசெய்து யாழ் நிருவாகம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்கவும். நன்றி!

அண்மையில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும், மக்களுக்கும் வீரவணக்கங்கள். இதய அஞ்சலிகள்.

அனைவருக்கும் மீண்டும் இழவு வணக்கங்கள்,

தாயகத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள போராளிகளின், மக்களின் மாபெரும் பேரிழப்புக்கள் கணக்கில் அடங்காதவை. இங்கிருந்து கற்பனை செய்துபார்க்கப்பட முடியாதவை.

எங்கள் துயரைப் பகிரும்முகமாகவும் போரளிகள், மக்களின் உயிர்களிற்கு மதிப்பு கொடுக்கும்முகமாகவும் யாழ் இணையமும் ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊர்ப்புதினம், கவனயீர்ப்பு, மக்கள் அவலங்கள், யாழ் செயலரங்கம் பகுதிகள் போன்ற மிகவும் அவசியமான பகுதிகள் தவிர கருத்துக்களத்தில் உள்ள மிகுதி அனைத்துப்பகுதிகளையும் சில காலத்திற்கு முடக்கி வைப்பது // பூட்டுபோட்டு மூடுவது நல்லது என்று நினைக்கின்றேன். தயவுசெய்து யாழ் நிருவாகம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்கவும். நன்றி!

அண்மையில் வீரச்சாவு அடைந்த மாவீரர்களிற்கும், மக்களுக்கும் வீரவணக்கங்கள். இதய அஞ்சலிகள்.

நல்ல விடயம்.... பூட்டாமல் விடும் பகுதியில் படைப்புக் களத்தையும் உள்ளடக்கினால் நல்லது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதேபோல்.............

எமக்கு முக்கியமாக நல்லதொரு ஊடகம் தேவை.

முதலில் கலைஞர்(கொலைஞர்கருணா) கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சிகளை புலம்பெயர்நாடுகளில் அப்புறப்படுத்தவேண்டும் அல்லது ஒதுக்கி அழிக்க வேண்டும்.

அடுத்தது இங்கிருக்கும் எம்மவர் ஊடகங்களை திருத்தியெடுப்பது?

இனிவரும் காலங்களில் எமக்கு சினிமாக்களும் வேண்டாம்.

தொடர் நாடகங்களும் வேண்டாம்.

பள்ளி மாணவர்களை வைத்து நடாத்தும் சினிமா போட்டிகளும் வேண்டாம்.

தமிழக மக்கள் அந்த நாட்டில் பிறந்தவர்கள் அனுபவிக்கின்றார்கள்.அவர்கள் அனுபவிப்பதை நாம் அனுபவிக்கும் நிலைமையிலில்லை.எமது மண்ணுக்காக அடுத்த சந்ததிக்காக எங்கள் சுகபோகங்களை துறப்போம்.

இன்றும் ஒருசில சிங்களங்கள் தமிழருக்கெதிராய் கொக்கரிப்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்தது முக்கியமாக தமிழர்தரப்பில் உள்ள செய்திகளை திரட்டும் பிறமொழி ஊடகங்களுக்கு தன்னை முழுமுதற் ஊடகமாக முன்னிலைப்படுத்தும் ஒருதன்னலமற்ற ஊடகம் தனது ஊமைத்தன்மையை அவ்வப்போது காட்டுவதும் ஒரு பின்னடைவே.

எனினும் பகலில் சோகம் இரவில் கொண்டாட்டம் எனும் நிலைமை எம் ஊடகங்களுக்கு இருக்கக்கூடாது.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

எந்த உலகமும் எமது அவலக்குரலை கண்டுகொள்ளாமல் .......

படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் , பெண்கள் , முதியோர் , மருத்துவவசதி இன்றி தவித்து இறந்த நோயாளிகள் , அப்பாவி பொதுமக்கள் , போராளிகள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக , யாழ் களத்தின் முகப்பையும் மாற்றியமைக்கும் படி நிர்வாகத்தினரை கேட்டுக்கொள்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தரும் விடயங்களை பற்றி கதைப்பதை கள உறவுகள் யாழில் சுய தணிக்கை செய்ய வேண்டும். ஒரு மித்த குரலில் கருத்துக்கள் வரவேண்டும்,

முக்கியமாக: வாழ்த்து பிரிவு, உறுப்பினர்களுக்கு மட்டும், நகைச்சுவை பிரிவு, சினிமா பிரிவு, பொழுது போக்கு பிரிவு, உணவு பிரிவு போன்றவற்றுக்குள் கருத்துக்களை முன் வைக்க வேண்டாம்.

தற்பொழுது எமது இனம் அநாதையாக்கப்பட்டுவிட்டது. எமது விடியல் எப்போது என்று தெரியும் வரை எங்களுக்குள் ஒரு வட்டத்தை உருவாக்கி எமது விடியலுக்காக ஒன்றுபடுவோம்.

நானும் இதனை வரவேற்கிறேன். இப்போதைய சூழலில், நாம் அனைவரும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதோடு தாயகத்திற்கான பணிகளைச் செய்வதே சிறந்தது. குமாரசாமி அவர்கள் குறிப்பிட்டது போல, இங்குள்ள எமது தமிழ் ஊடகங்களைத் திருத்தவே முடியாது. இதற்குப் பின்னரும் திருந்தாதவர்கள் இனித் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அவர்களைப் புறக்கணிப்பதே பொருத்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே அந்த ராஜிவ் நினைவுகள் என்று கீழ் இருக்கு அதையும் எடுத்து விடுங்கொ அன்று இந்த வஞ்சகனால் காவு கொடுக்கப்பது ஈழ தமிழினம் அப்படி பட்டவனின் நினைவுதினம் எதற்க்காக யாழில்

அன்று அவனால்

.........................இன்று அவனது மனைவியால் அதையும் உடனடியாக எடுத்து விடுங்கள்

  • தொடங்கியவர்

இழவு வணக்கங்கள்,

இவ்வளவு அக்கிரமங்கள், அயோக்கியத்தனங்கள் எல்லாம் தாயகத்தில் நடந்து இருக்கின்றது, தொடர்ந்து நடக்கின்றது. சர்வதேசம் வேடிக்கை பார்க்கின்றது. யாழ் நிருவாகமும் வேடிக்கை பார்க்கின்றது.

ஆகக்குறைந்தது.... தமிழ் மக்களின் மன உறுதி... மன வலிமை கட்டி எழுப்பப்படுவதற்கு யாழ் இணையம் காத்திரமான ஏதாவது நடவடிக்கைகளில் இறங்கலாமே?

இன்றைய சூழலில் உடனடியாக தேவைப்படும் நடவடிக்கை இது. மேலும், தயவுசெய்து புண்ணாக்கு ஆராய்ச்சிகள் யாழில் ஊர்ப்புதினத்தில் வெட்டி ஒட்டப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்.

நன்றி!

என்னைப் பொறுத்தவரையில் யாழ் இணையத்தை முற்றுமுழுதாக இழுத்து மூடிவிட்டு முழுமையாக தாயக விடயத்தில் அக்கறை செலுத்தலாம் என்று நினைக்கிறேன். பொறுப்புணர்வுடன் யாரும் கருத்தெழுதுவதாகத் தெரியவில்லை. பலதடவைகள் சொல்லிவிட்டோம். ஆனாலும் யாரும் உணர்ந்தது போல தெரியவில்லை. செய்திகளை பொறுப்புணர்ந்து இணைக்கச் சொன்னோம். எல்லோரும் தங்கள் தளத்தை விளம்பரப்படுத்துவதில் தான் கவனமாக இருக்கிறார்கள். பண்பற்ற முறையில் பல சொற்பாவனைகள் உள்ளன. ஆங்கிலத்தில் கருத்துக்கள் எழுதப்படுகின்றன. ஆக்கங்களை உரிய பகுதியில் இணைப்பதில்லை. தங்கள் தங்கள் கருத்துக்களையும் ஒரு செய்தியாக புதிய தலைப்பாக இணைக்கிறார்கள். இவற்றையெல்லாம் சீர்செய்யவே எமக்கு அதிக நேரமெடுக்கிறது. இந்த நேரத்தை தாயக விடயங்களுக்கு பயன்படுத்தினால் உருப்படியாக இருக்கும். அதனால் யாழ் இணையத்தை முற்றுமுழுதாக மூடிவிட யோசித்துள்ளோம்.

*கலைஞன் சொன்ன விடயம் பற்றி யோசித்துள்ளோம். எதிர்வரும் 22ம் திகதி துக்கநாளாக அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் அன்றிலிருந்து வருகிற ஒரு மாத காலத்துக்கு யாழ் இணையம் அதனை நடைமுறைப்படுத்தும்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி நன்றிகள் தற்காலத்தில் நமது இனம் ஈழம் போராட்டம் சார்ந்த விடயங்களைத்தான் நாம் முன்னிறுத்தவேண்டும் அதுதான் நமக்கு முக்கியம் தேவைப்படும் நேரத்தில் அதனை நாம் செய்யவேண்டும் அப்போதுதான் நமக்கு ஒருவிடிவுகிடைக்கும் இல்லையெனில் நாம் வாழ்நாள்முழுவதும் அழவேண்டியதுதான் இந்த முயற்சியில் யாழ்களம் பல பங்காற்றியது இனியும் முழுமையாக அதில் கவணம் செலுத்தவேண்டும் என்பதுதான் எனதுவிருப்பமும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் இணையத்தை முற்றுமுழுதாக மூடிவிட யோசித்துள்ளோம்.

வலைஞன்

மூடிவிடுங்கள் மூடிவிட்டு பத்தோடு பதினொன்றாக எல்லோரும் தொலைந்து போய்விடுங்கள்.

நம்பியவர்கள் நடுச்சந்தியில் நிற்கட்டும் அதுதான் ஈழத்தமிழனின் தற்போதைய விதி

Edited by குமாரசாமி

குமாரசாமி உங்கள் கையெழுத்தில் இணைத்துள்ள கறுப்புப் பெட்டியை கலைஞன் போட்டிருக்கிற அளவில் போடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்வரும் 22ம் திகதி துக்கநாளாக அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் அன்றிலிருந்து வருகிற ஒரு மாத காலத்துக்கு யாழ் இணையம் அதனை நடைமுறைப்படுத்தும்.

யாழ் இணையத்தில்தான் எதுவாக இருந்தாலும் ஓடிவந்து பார்ப்பது. உடனடியாக செய்திகள் போடுவதுடன் சில செய்திகளின் உண்மை பொய்களை எடுத்துக் கூறும் பலரும் இங்கு இருக்கிறார்கள். யாழ் இணையம் மூடினால் சிலருக்கு கொண்டாட்டமாக இருக்கும். கலைஞன் சொல்வது போல குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் மூடிவிடலாம் என்பதே எனது வேண்டுகோள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
குமாரசாமி உங்கள் கையெழுத்தில் இணைத்துள்ள கறுப்புப் பெட்டியை கலைஞன் போட்டிருக்கிற அளவில் போடுங்கள்.
ம்... மாத்தியாச்சு. அளர்ந்து பாருங்கோ.

யாழ் இணையத்தை முற்றுமுழுதாக மூடிவிட யோசித்துள்ளோம்.

வலைஞன்

வணக்கம்

தயவுசெய்து யாழ்இணையத்தை மூடிவிடாதீர்கள் களஉறுப்பினர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்கள். இன்றைய நிலையில் எமது மனக்குமுறல்களைக்கட்டுப்படு

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு ..........நம்ம பசங்க சொல்வழி கேட்பாங்க. தகுதி யானாதை மட்டும் மட்டும் இணைக்கவும் எனும் அன்பு கடளை போடவும் என் போன்றவர்க்கு யாழ் இல்லாவிடால் தணீர் குடிக்காதது போல சேதி பார்ப்பதும் ஆறுதல் படுவதும் நம்ப தகுந்த்தும் இது தான்.........எனவே யாழை இருபதிரண்டுக்கு பின் மூடவேண்டாம். தயவு செய்து ........தகுதியா இல்லாதவற்றை வெட்டி விடவும் ..நன்றி.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாள் நிர்வாகத்தினருக்கு: தயவு செய்து மூடி விட வேண்டாம். எத்தனையோ புண் பட்ட மனங்கக்கு ஒரளுவுக்காவது ஆறுதல் தருகிற்து என்பது உண்மை.

உண்மைதான் முக்கியமாக பொழுது போக்கு அம்சங்களை நிறுத்துங்கள்....பயனுள்ள கருத்துகளை விடுதலைக்கு உதவும் கருத்துகளை மாத்திரம் எழுதுங்கள்.

இப்போரில் உயிர் நீத்த மாவீரர் செல்வங்களுக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் வணக்கம் செலுத்துவோம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

என்னைப் பொறுத்தவரையில் யாழ் இணையத்தை முற்றுமுழுதாக இழுத்து மூடிவிட்டு முழுமையாக தாயக விடயத்தில் அக்கறை செலுத்தலாம் என்று நினைக்கிறேன்.

தற்போது யாழ் இணையம் இருக்கும் நிலமையப் பார்த்தால் கொஞ்ச நாளைக்கு யாழை இழுத்துமூடிவிடுவது நல்லதாகவே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது யாழ் இணையம் இருக்கும் நிலமையப் பார்த்தால் கொஞ்ச நாளைக்கு யாழை இழுத்துமூடிவிடுவது நல்லதாகவே தெரிகின்றது.

ஏன் உங்களுக்கு இந்தக் கொலைவெறி.

சரி மூடிறதால என்ன நன்மைகளை பெறப் போறீங்க...! மக்களை இன்னும் இன்னும் குழப்பத்தில் ஆழ்த்திவிடுவது நன்றான செயலாக இருக்குமா..??!!

மக்கள் செயற்பட வழியின்றி தவிக்கும் நேரத்தில் வழிகாட்டுவதை விடுத்து.. இவ்வாறு நிர்கதியாக்குவது சரியான செயலா..??!

எமது துக்கமும் துயரமும்.. கறுப்புப் பட்டியிலும்.. கருத்துக்களத்தை மூடுவதன் மூலமும் தானா வெளிப்படும் என்று இன்னும் நம்புகிறீர்கள். எமது துக்கத்தால்... எமது இலட்சியம் அடையப் போகும் நன்மை என்ன..??! இலட்சியற்காக மடிந்த உயிர்களை விடவும்.. அந்த உயிர்கள் சுமந்த இலட்சியத்தை அடைய உதவுவதே இன்றைய நிலையில் அவசியம். அதற்கான செயற்பாடுகளை கருத்தியல் தளத்திலும் எடுத்துச் செல்ல வேண்டும்.

படிச்ச நீங்களே.. இப்படின்னா.. பாமரமக்களின் நிலை..??!

போராட்டத்தில் இழப்புக்களை எதிர்கொள்ள முடியல்லைன்னா எதுக்குப் போராடனும். இழப்புக்களில் இருந்து போராட்டத்தையும் மக்களையும் மீட்க வேண்டிய பணி இருக்கிறது. அதற்கு கருத்தியல் பிரச்சாரம் முக்கியமானது.

இன்று எதிரி முன்னெடுக்கும் கள யதார்த்ததிற்கு அப்பாலான கருத்தியல் போரே அவனை சர்வதேசக் குற்றங்களில் இருந்து கூடக் காக்கிறது. புலிகள் சிறுவர் படையணி நடத்துகிறார்கள்.. புலிகள் தற்கொலைப்படையணி நடத்துகிறார்கள் என்று சிங்களவன் காட்டிக் கொடுத்தானோ இல்லையோ தமிழன் தான் உலகிற்கும் சிங்களவனுக்கும் காட்டிக் கொடுத்தது. இந்த இலச்சனத்தில்.. எப்படி எதிரியின் கருத்தியல் போரை வெல்லப் போறீங்க..???! :rolleyes::D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நானும் பாமர மக்களில் ஒருவன்தான் நெடுக்காலபோவான். விடமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறீங்கள். சரி முன்னால போங்கோ பின்னால வாறம்.

1243461789.jpg

எனக்கு Domain தேவை இல்லை. Webspaceம் தேவை இல்லை. வேறு ஒரு விசயம் உடனடியாக தேவைப்படுகிது. அது என்னவெண்டால்... உங்களால வைரஸ் கிருமிகள் கொஞ்சம் கொஞ்ச காசுக்கு இல்லாட்டிக்கு இலவசமாக செய்து தர ஏலுமோ? செய்யக்கூடியதாய் இருந்தால் பிறகு ஒருக்கால் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் பாமர மக்களில் ஒருவன்தான் நெடுக்காலபோவான். விடமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறீங்கள். சரி முன்னால போங்கோ பின்னால வாறம்.

1243461789.jpg

எனக்கு Domain தேவை இல்லை. Webspaceம் தேவை இல்லை. வேறு ஒரு விசயம் உடனடியாக தேவைப்படுகிது. அது என்னவெண்டால்... உங்களால வைரஸ் கிருமிகள் கொஞ்சம் கொஞ்ச காசுக்கு இல்லாட்டிக்கு இலவசமாக செய்து தர ஏலுமோ? செய்யக்கூடியதாய் இருந்தால் பிறகு ஒருக்கால் சொல்லுங்கோ.

:D :D :D

தற்போது யாழ் இணையம் இருக்கும் நிலமையப் பார்த்தால் கொஞ்ச நாளைக்கு யாழை இழுத்துமூடிவிடுவது நல்லதாகவே தெரிகின்றது.

எதிரி எதனை எதிர் பார்க்கின்றானோ அதனையே நாமும் செய்வதில் தான் அவசரப் படுகின்றோம். போர் வெற்றி பற்றிய எதிர்பார்ப்பு இருக்கும் போது யாழ் செய்த பங்களிப்பை விட தமிழ் தேசியத்திற்கும் ஏதிலிகளாக்கப் பட்ட மக்களுக்கும் இனித் தான் அதிகம் கருத்தியல் ரீதியில் செய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்

நிழலி நீங்கள் இப்படி சொல்லுறீங்கள். யாழ் இணையம் பற்றி யாழில் எழுதாத வாசகர்கள் சிலருடன் கதைத்தபோது ஆட்கள் கண்டபடி பேசுகின்றார்கள். யாழில் எல்லாரும் கையுக்கு வந்தபடி முன்பின் ஒரு யோசனை ஒன்றும் இல்லாமல் கருத்து எழுதுகின்றார்கள் என்றும் தேவையில்லாமல் பிரச்சனைகளை உருவாக்குகின்றார்கள் என்றும் முறைப்பாடு செய்தார்கள்.

அதாரம் இல்லாத செய்திகள், மற்றும் ஒருவருக்கும் ஒன்றும் சரியாக தெரியாவிட்டால்... அடி நுனி தெரியாவிட்டால்.. அந்த ஆதாரம் இல்லாத செய்திகளின் அடிப்படையில் தங்கள் ஆய்வுகளை செய்வதை கொஞ்சம் நிறுத்தி வைக்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்

எதிரி எமது ஊடகவியலாளர்களை கொல்வதும் , கடத்துவதுமாக இருப்பதால் எமது ஊடகங்கள் சுயமாக செய்தியை வெளியிட முடியாமல் இருக்கிறார்கள். இதனை அரசு தனக்கு சாதகமாக பயன் படுத்தி தனது பொய் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளது. ஒட்டுக்குழுக்களும் தமது பங்குக்கு மக்களை போட்டு குழப்பி அடிக்கிறது. வெளி நாட்டு ஊடகங்கள் நாட்டை விட்டே அடிக்காத குறையாக விரட்டப்பட்டுள்ளார்கள். ஆக புலம் பெயர்ந்தவர்கள் தாம் அறிந்தவற்றை யாழில் எழுதி உண்மை நிலையை அறிய முயலுகிறார்கள் என நினைக்கிறேன்.

இந்த நிலையில் யாழை மூடி அநாதரவாக விடப்பட்ட மக்களை நிர்க்கதியில் விடப்போகிறோமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.