Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் உள்ளார் - தமிழ்நெட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தமிழர் அமைப்பை இயக்குவது யார்? புலிகள் தரப்பு என்றுதான் இதுவரை நினைத்துக்கொண்டு இருக்கிறேன்..! :(:rolleyes:

தலைவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள். தலைவரின் அருமையை இப்போது இன்னும் இன்னும் மக்கள் உணர்ந்திருப்பார்கள்..! :rolleyes:

இங்கு கொஞ்ச காலமாய் இலங்கை பார்லிமென்ட்லை வேலை செய்த ஒருவர் இருக்கிறார் இவர் லீவிலைதான் வந்து இருக்கிறார் திரும்பி போகணும் வேலைக்கு... அவரின் குடும்பம் வசதி படைத்தவர்... அவர் எங்க கிட்ட சொல்லுவார் எங்க குடும்பம் இப்படி வசதி என்று சொல்ல வேணாம் காசு கேட்டு எங்க வீட்டையும் வந்து விடுவார் என்று.. அவரின் குடும்பம் எல்லாம் கொழும்பில் இருக்கினம்...அவர் முதல்ல சொல்லுவார் ஏன் சண்டை எல்லாம் அவர்களுடன் கூட இருக்கலாம்தானே என்று...

ஆனால் தலைவரின் செய்தி கேட்டு அன்று என் முன்னாலை இருந்து அழுதார்... அவரின் அண்ணா பேசி இருக்கிறார் கொழும்பில் இருந்து சிங்கள ஆக்கள் காசு கேட்டு இருக்கினம் பட்டாசு கொழுத்த ஒரே அடி தடி இவை இருக்கிற இடத்தில்.. சொன்னார் தலைவர் இருக்கிற வரைதான் நம் சந்தோசம் அவர் இல்லை என்னால் எதுமே இல்லை என்று.. அவர் இப்ப கொழும்பிலை போய் இவர் செய்த வேலை பாக்க பயப்படுறார்.. அவர் போகலை என்று சொன்னார்... நிம்மத்தியா வாழ முடியாது என்று.....

நான் கேட்டன் நீங்கதானே சொன்னிங்க போய் அவர்கள் கூட இருக்கலாம் என்று போங்களன் என்றன்... இல்லை என்றார்... தலைவர் இருந்த வரைதான் எல்லாரோடையும் சந்தோசம் என்றார்.....

நெடுக்கு அண்ணா சொன்னது போல் தலைவரின் அருமை உணராதவர்களும் உணர்ந்து இருக்கிறார்கள்...தலைவர் நீடூழி வாழ வாழ்த்துக்கள்

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்செய்தி அறிந்து பலர் என்னுடன் தொடர்பு கொண்டு கேட்கின்றார்கள்

உலக தமிழர் தொலைபேசி 416 -- 438 -- 3030, 416 -- 303 -- 7675 , 514 -- 625 -- 5891

மின்னஞ்சல் : editor@worldtamils.com

இந்த செயற்பாட்டாளர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். இளையவர், மக்கள் எழிச்சி கண்டு. மிரண்டு போய் இருப்பவர்களில் இந்தச்செயற்பாட்டாளர்களும் அடங்குவர்.

தலைவருக்கு எதிரிகள் தொல்லை கொடுத்ததிலும் அதிகமாக துரோகிகளும், வெளிநாட்டு செயற்பாட்டளரும் தொல்லை கொடுத்தது அதிகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் உங்களுக்கு தலைவரை பற்றிய சந்தேகம் போகேலையெண்டு நல்லாவே தெரியுது

உங்களுக்காக யார் யார் வந்து அறிக்கை விடோணும் எண்டு எதிர்பாக்கிறீங்கள்

ஒருவேளை தலைவரே வந்து உங்கள் ஒவ்வொருத்தருக்கும் முன்னாலை வந்து நிண்டு (நம்பாதவைக்கு மட்டும்) நான் உயிரோடை தான் இருக்கிறன் எண்டு சொல்லோணுமெண்டு எதிர்பாக்கிறீங்களோ

ஏனய்யா அப்பத்தானே அவன் வந்து சுலபமா போட்டுத்தள்ள வசதியா இருக்கும்

எதிரி அவனே தலைவர் உயிரோடை இருக்கிறார் எண்டு தன்ரை செயல்கள் மூலமா தெளிவா நிரூபிக்கிறான்

நீங்கள் இன்னும் ஆதாரம் கேட்டுக்கொண்டிருக்கிறீங்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்::::: உத்தியோக பூர்வ அறிவிப்பு வரும் வரையில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா உலகத்தமிழர் இதை வேண்டுமென்றே திட்டமிட்டு விஷமத்தனமாக செய்திருந்தால் இதற்கு பொறுப்பானவர்களை மக்கள் தர்மஅடி கொடுத்தே சாக்காட்ட வேண்டும்.

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்::::: உத்தியோக பூர்வ அறிவிப்பு வரும் வரையில்.

இன்னும் எந்த உத்தியோக பூர்வ அறிவுப்புக்காய் காத்திருக்கின்றீர்கள் ஐயா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அப்பன் இருந்தால்த்தான் உப்பின் அருமை தெரியும்"

இனிவரும் காலங்கள் சிலருக்கு தேனாக இனித்தாலும் ஈழத்தமிழினத்திற்கு இனியில்லையென்ற கசப்பான நிகழ்வுகளை தரப்போகின்றன. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"அப்பன் இருந்தால்த்தான் உப்பின் அருமை தெரியும்"

இனிவரும் காலங்கள் சிலருக்கு தேனாக இனித்தாலும் ஈழத்தமிழினத்திற்கு இனியில்லையென்ற கசப்பான நிகழ்வுகளை தரப்போகின்றன. :rolleyes:

என்னத்தான் சொல்ல வரீங்க?

QUOTE (குமாரசாமி @ May 22 2009, 08:09 PM)

"அப்பன் இருந்தால்த்தான் உப்பின் அருமை தெரியும்"

இனிவரும் காலங்கள் சிலருக்கு தேனாக இனித்தாலும் ஈழத்தமிழினத்திற்கு இனியில்லையென்ற கசப்பான நிகழ்வுகளை தரப்போகின்றன.

உதவி செய்யா விட்டாலும் உபதிதிரம் செய்யாதே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எங்கள் சொந்த தலைவனையே இருக்கிறானா? இல்லையா என ஆராய்ச்சி செய்யும் போது???????????????

தலைவருக்கு மரண அத்தாட்சிப்பத்திரம் கொடுத்த சிங்களவன் இனி,இனிமேலும் வன்னியில் இருக்கும் எம்மவர்களை என்னசெய்வான் என்று உங்களுக்கு தெரியாதா?

பேசாமல் நடக்கவேண்டியதை பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE (குமாரசாமி @ May 22 2009, 08:09 PM)

"அப்பன் இருந்தால்த்தான் உப்பின் அருமை தெரியும்"

இனிவரும் காலங்கள் சிலருக்கு தேனாக இனித்தாலும் ஈழத்தமிழினத்திற்கு இனியில்லையென்ற கசப்பான நிகழ்வுகளை தரப்போகின்றன.

உதவி செய்யா விட்டாலும் உபதிதிரம் செய்யாதே

முப்பது வருட போராட்டத்தை முப்பது நாட்களில் இழந்துவிட்டோமே என்ற பிரம்மையில் நான் இருக்கின்றேன்.

இனி ஆரம்பத்தில் இருந்து வர வேண்டும்.அதன் வலிகளும் கடினமும் உங்களுக்குத்தெரியுமா?

ஈழமண்ணுக்காக எங்களைப்போன்ற ஆயிரக்கணக்கானோர் பல சொந்தபந்த உபத்திரபங்களை உதறித்தள்ளிவிட்டுள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமென நினக்கின்றேன்.

தேசியத் தலைமை பற்றிய அலசல்களைக் கைவிடுங்கள்.

தப்பித்த மக்களை காப்பற்றும் வழிகளை பாருங்கள்...

ஒப்பாரி.. வியாக்கியானம்.. வேண்டாம்

கூப்பாடு போடுங்கள்...

மீண்டும் பூஜ்ஜியத்தில்... இம்முறை ஒன்றிணைவோம் அதன்பின் சுதந்திரம் பற்றி சிந்திப்போம்.

அன்பான கனடா வாழ் தமிழர்களே

உலகத்தமிழர் அமைப்பினை அதற்கான தகுந்த காரணம் காட்டச்சொல்லுங்கள். அவ்வாறு தவறினால் நையப்புடைத்து வெளியேற்றுங்கள். இனிவரும் காலங்களில் நாம் எதிரிகளை களைவதை விட்டு புல்லுருவிகளை களைய வேண்டும்

அன்பான கனடா வாழ் தமிழர்களே

உலகத்தமிழர் அமைப்பினை அதற்கான தகுந்த காரணம் காட்டச்சொல்லுங்கள். அவ்வாறு தவறினால் நையப்புடைத்து வெளியேற்றுங்கள். இனிவரும் காலங்களில் நாம் எதிரிகளை களைவதை விட்டு புல்லுருவிகளை களைய வேண்டும்

நேற்று மக்களை குழப்பியடித்தது உலகத் தமிழர் அமைப்பும் மட்டும் அல்ல, மற்றும் பலர். .....கே.பி, காஸ்ரோ பெயர்களைச் சொல்லி திருப்பி திருப்பி புலம் பெயர் தமிழ் மக்களை மந்தைகள் ஆக்கும் நடவடிக்கைகள் தான் தொடருகின்றன.

எரியும் தாயின் பிணத்தினை எரிப்பதிலும் நீயா நானா என போட்டியிடும் இந்த பீத் தமிழ் சாதியை நம்பி தமிழீழ போராட்டத்தினை ஆரம்பித்த பிரபாகரன் மற்றும் ஏனைய தலைவர்களின் அறியாமையை எண்ணி அழுகை தான் வருகின்றது

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத் தலைமை பற்றிய அலசல்களைக் கைவிடுங்கள்.

தப்பித்த மக்களை காப்பற்றும் வழிகளை பாருங்கள்...

ஒப்பாரி.. வியாக்கியானம்.. வேண்டாம்

கூப்பாடு போடுங்கள்...

மீண்டும் பூஜ்ஜியத்தில்... இம்முறை ஒன்றிணைவோம் அதன்பின் சுதந்திரம் பற்றி சிந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவிலை தமிழீழ ஆதரவாளர்கள் பலர் தண்டிக்கப்படுவதிற்கு உங்களால் குறிப்பிடப்படும் இந்த உலகத்தமிழர் இயக்கத்தின் பல செயல்பாடுகளும் தான் காரனமாக இருந்துள்ளன.

இன்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் எச்சரிக்கை குறியுடன்தான் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சுருக்கமாக சொல்லப்போனால் அங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு கூட வெளிப்படையாக முகங்காட்ட முடியாதளவிற்கு எத்தனைபேர் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்ற கசப்பான செய்தியை பலர் அறிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.

உலகத்தமிழர் இயக்கம் தொண்ணூறுகளில் அதாவது மாணிக்கவாசகம் சுரேஸ் என்பர் பொறுப்பாளராக இருந்தபோது கண்ணியமாகவும், கட்டுப்பாட்டுடனும் இயங்கியது என்பதை யாவரும் அறிந்ததே.

Edited by eelanila

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மரணம்: பின் தொடரும் நிழல்களிலிருந்து....

[24 - May - 2009] [Font Size - A - A - A]

சமஸ்

ஒரு வழியாக மாவிலாற்றில் 2006இல் தொடங்கிய நான்காவது ஈழப் போர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் செதியுடன் முடிவடைந்திருக்கிறது. இலங்கை அரசுத் தரப்பினர், ""மூன்று தசாப்த காலப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கிறது; விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டனர்' என்று இச்சூழலை வர்ணித்துவரும் நிலையில், ஈழப் போரைத் தொடர்ந்து கூர்ந்து அவதானித்து வருபவர்களோ பல்வேறு யூகங்களை எழுப்புகின்றனர்.

மரணம் எழுப்பும் கேள்விகள்: இலங்கை அரசு பிரபாகரனின் சடலம் என்று சுட்டிக்காட்டும் சடலத்தை முன்வைத்தே பல்வேறு கேள்விகள் எழுப்பப்படு கின்றன. ஆழமற்ற களப்புப் பகுதியிலிருந்து பிரபாகரன் எங்கே தப்பிச் செல்ல முயன்றார்? கடல் பரப்பு முழுவதையும் இராணுவம் கைப்பற்றிவிட்ட நிலையில், நீரிழிவு நோயாளியான அவர் நீண்ட தூர கடல் பயணம் மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதியான நவீன படகு அல்லது கப்பலுக்கு அங்கு ஏது வழி? தப்பிச் செல்ல நினைக்கும் ஒருவர் முக அமைப்பை மாற்றிக்கொள்ளாமலோ, மாறுவேடத்திலோ இல்லாமல் சீருடையில் அடையாள அட்டையுடனா செல்வார்? அடையாளம் காண்பதில் குழப்பம் ஏற்படும் வகையில் தலைப் பகுதி சரியாக சிதைக்கப்பட்டிருப்பது எப்படி?...

இப்படி ஏராளமான கேள்விகள் முன்வைக்கப்படுவதோடு முக்கியமான ஒரு விடயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. அது: பிரபாகரன் போன்ற உருவத் தோற்றமுடையவரைப் பற்றிய செதிகள்.

நீண்ட காலமாகவே பிரபாகரனைப் போன்றே உருவத் தோற்றமுடையவரை புலிகள் வெளியுலகுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் உண்மையில், பிரபாகரன் இருக்குமிடம் அவருடைய நெருங்கிய சில கூட்டாளிகளைத் தவிர்த்து வேறு எவருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இதை புலிகளுக்கு மிக நெருக்கமானவர்களும் அந்த இயக்கத்திலிருந்தே விலகியவர்களும்கூட சொல்வதுண்டு. ஊடகங்களிலும் அவ்வப்போது இது தொடர்பான செதிகள் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில், பிரபாகரன் மரணச் செதியைத் திட்டமிட்டு புலிகள் கட்டமைத்திருக்கிறார்கள் என்று நம்புவதற்கு ஏராளமான தரவுகள் கிடைத்திருக்கின்றன.

பதுங்குக் குழி ஆதாரங்கள்:

பிரபாகரன் தங்கியிருந்ததாக இராணுவம் நம்பும் எல்லாப் பதுங்குக் குழிகளிலுமே பிரபாகரன் அங்கிருந்ததற்கான ஆதாரமாக ஏதேனும் சில பொருட்களை விட்டுச் செல்லும் தந்திரத்தை புலிகள் கையாண்டனர்.

சில பதுங்குக் குழிகளில் அவர் அணியக் கூடிய அளவுடைய சட்டை, தொப்பி சில இடங்களில் ""இன்சுலின்' ஊசிகள் (பிரபாகரன் நீரிழிவு நோயாளி), சில இடங்களில் அவர் படுத்திருந்தது என்று நம்பத் தக்க வகையில் படுக்கை, அவருடைய குடும்ப புகைப்படங்கள், சான்றிதழ்கள் இப்படி...

இதற்கு முன்னர், மரபணுச் சோதனை நடத்துவதற்கு பிரபாகரன் தொடர்பான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இலங்கை இராணுவத்திடம் ஏதும் இல்லாத நிலையில், இந்த ஆதாரங்களைத் திட்டமிட்டே புலிகள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதாவது, பிரபாகரன் உருவமைப்பைக் கொண்ட ஒரு நபர் பயன்படுத்திய பொருட்களை விட்டுச் சென்று, பிற்பாடு பிரபாகரனுக்குப் பதில் அவருடைய சிதைந்த சடலத்தை பிரபாகரன் என்று நம்ப வைப்பதற்கான ஓர் உத்தி.

பதுங்கும் இடத்தை யார் கூறுவார்?: பொதுவாக விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் இருக்குமிடங்களே பரம ரகசியமாக இருக்கும். ஆனால், ஒரு சதுர கிலோ மீற்றர் சுற்றளவுக்குள் சுற்றி வளைக்கப்படும் வரை பிரபாகரன் இங்குதான் இருக்கிறார் என்பதைத் திரும்பத் திரும்ப புலிகள் கூறிக்கொண்டிருந்தனர். இது பெரிய அளவிலான சந்தேகங்களை எழுப்புகிறது.

அந்த அமைப்பின் அரசியல் தொடர்பாளர் நடேசன் உள்ளிட்ட ஊடகத் தொடர்பாளர்கள் மட்டுமின்றி, அரசுப் படையினரிடம் சரணடைந்த புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்களும்கூட இதையே திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.

போரின் கடைசி இலக்கே பிரபாகரன்தான் என்ற சூழலில், பிரபாகரனைப் பாதுகாப்பதற்காகவே ஒரு சிறப்புப் படையையே நிறுவும் அளவுக்கு அவருடைய உயிரில் அக்கறையுடைய புலிகள், அவர் இருக்குமிடத்தை எப்படி அலட்சியமாகப் பறைச்சாற்றுவார்கள்?

ஆகையால், இராணுவத்தை திசைத் திருப்புவதற்காகவே புலிகள் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தங்கள் தந்திரத்துக்கு உறுதி சேர்க்கும் வகையிலேயே நடேசன் உள்ளிட்ட இரண்டாம் நிலைத் தலைவர்களை போர்க்களத்திலேயே இருக்குமாறு செதிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மரணச் செதி இரு தரப்புகளின் நிர்ப்பந்த சூழல்: இந்தப் போரின் வெவ்வேறு காலகட்டங்களிலும் இலக்குகளை மாற்றி மாற்றி அறிவித்தாலும், உண்மையில் இலங்கை அரசின் இறுதி இலக்கு பிரபாகரன்தான். போர்க் காலகட்டத்தின் இடையே நடைபெற்ற தேர்தல்களிலும் இதைப் பிரதான முழக்கமாக முன்வைத்தே இலங்கை அதிபர் ராஜபக்ஷ வெற்றிகளைக் குவித்தார்.

எனவே, வெறும் நிலப்பரப்பைக் கைப்பற்றியதோடு போரை முடித்துக்கொண்டதாக அறிவித்தால், அரசியல் ரீதியாக அவருக்குப் பெரும் பின்னடைவு ஏற்படுவதோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தை வேறறுத்துவிட்டதாக முன்னெடுக்கப்படும் பிரசாரமும் முழு வெற்றி பெறாது.

ஆகையால், இலங்கை அரசுக்கும் இராணுவத்துக்கும் பிரபாகரன் மரணத்தின் மீது வலுவான சந்தேகங்கள் இருந்தாலும், தற்போதைய சூழலில் அப்படியொரு அறிவிப்பை வெளியிட வேண்டிய நிலையிலேயே அரசு தரப்பு இருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, விடுதலைப் புலிகளும் இப்படியொரு நிர்ப்பந்தத்திலேயே இருக்கின்றனர். முக்கியமான காரணம், போர்ச் சூழலிலிருந்து விடுபடுவதாகும். முன்னதாக, அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்றதுமே அமெரிக்க அணுகுமுறையில் மாற்றங்களை அவர்கள் எதிர்பார்த்தனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர். இங்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படாவிடில் மேற்கொள்ள வேண்டிய காரியங்களை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனர். போர்ச் சூழலில் புதிய வாப்புகள் ஏதுமற்ற நிலையில், சில காலத்துக்கு பதுங்கியிருப்பதே நல்லது என்று அவர்கள் கருதினர். இந்நிலையில், பிரபாகரனின் மரணச் செதி இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தப்ப உதவுவதோடு, உலகின் கவனத்தையும் தமிழ் மக்களின் அவலத்தை நோக்கித் திருப்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

முடிவுகளைத் தீர்மானித்த ஆனந்தபுரம்: இந்தப் போரின் தொடக்கத்திலிருந்தே இராணுவம் உள்ளே புக அனுமதிப்பதை புலிகள் ஒரு தந்திரமாகப் பயன்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் இதேபோன்ற உத்தியைத்தான் அவர்கள் பின்பற்றினர். இலங்கை இராணுவம் முழுவதையும் உள்ளேவிட்டு, திடீரென ஊடறுப்புத் தாக்குதல் மூலம் ஏறத்தாழ 40,000 வீரர்களை அவர்கள் சுற்றி வளைத்தனர்.

அப்போது சர்வதேச நாடுகளும் இந்தியாவில் ஆட்சியிலிருந்த பா.ஜ.க தலைமையிலான அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டதன்பேரில், இலங்கை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இம்முறையும் இதே போன்ற ஒரு பாரிய தாக்குதலுக்கு புலிகள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக அவர்கள் ஒன்றுகூடிய இடம் ஆனந்தபுரம். ஒரு சிறிய பிரதேசத்தில் புலிகள் அமைப்பின் முக்கியமான களத் தளபதிகள் பலர் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் பெரும் தளவாடங்களுடன் குவிந்திருந்த இந்தச் செதியை "சுரா' அமைப்பின் மூலம் இலங்கை இராணுவம் அறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து இராணுவம் முன்னெடுத்த பாரிய தாக்குதலில் புலிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். ஏப்ரல் முதல் வாரத்தில் நடந்த இத்தாக்குதலில் இராணுவத் தரப்பில் சுமார் 15,000 வீரர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடும் போரின் இறுதியில் முக்கிய கள தளபதிகள் உட்பட ஏறத்தாழ அங்கு கூடியிருந்த அனைத்துப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்குப் பின்னரே, புலிகளின் மாபெரும் வீழ்ச்சி தொடங்கியது எனலாம். கிளிநொச்சியை கைவிட்டுப்போன பின்னர், ஏறத்தாழ மூன்று மாதங்கள் வரை புதுக்குடியிருப்பில் கடுமையாகப் போராடிய புலிகள் இத்தாக்குதலுக்குப் பின்னரே முற்றிலுமாக ஒடுங்கிப் போயினர்.

கிழக்குக்குத் தப்பினார் பிரபாகரன்?: ஆனந்தபுரம் வியூகம் தோல்வியடைந்த பின்னர், முடிவை புலிகள் ஓரளவுக்கு யூகிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்கத் தயாராக இருப்பதாக புலிகளே தகவல்களைக் கசியவிட்டனர். இராணுவத்தின் ஒட்டுமொத்த கவனமும் கடல் பரப்பின் மீது குவிந்திருந்த நிலையில், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டது.

இலங்கையின் கிழக்குப் பகுதி விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுவிட்டாலும், இன்னமும் அங்கு அவ்வப்போது கெரில்லா தாக்குதல்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றனர் புலிகள். குறிப்பாக யால காட்டுப் பகுதியில் ஏராளமான புலிகள் பதுங்கி இருக்கின்றனர்.

ஆகையால், ஏப்ரல் மத்தியில் கிழக்குப் பகுதிக்கு பிரபாகரன் தப்பியிருக்கலாம் என்று இலங்கை புலனாவுத் துறையே வலுவாகச் சந்தேகிக்கிறது. இன்னொருபுறம் சில மாதங்களுக்கு முன்னரே அவர் வெளிநாடுகளுக்குப் போ தப்பியிருக்கலாம் என்ற சந்தேகமும் அவர்களிடம் இருக்கிறது.

உலகம் முழுவதும் தொடர்புகள்: மேலெழுந்தவாரியாக பார்க்கும்போது ஒட்டுமொத்த புலிகள் அமைப்பும் ஏதோ முல்லைத்தீவுக்குள்ளேயே முடக்கப்பட்டுவிட்டது போன்றும் பிரபாகரனுடன் அந்த அமைப்பே அழிந்துவிட்டதுபோல தோன்றினாலும் உண்மை அதுவல்ல. உலகம் முழுவதும் புலிகள் அமைப்பு பரந்து விரிந்திருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சில ஆபிரிக்க நாடுகள் என்று உலகம் முழுவதும் இன்றளவும் மறைமுகமாகச் செயல்படும் ஏராளமானோர் அந்த அமைப்பில் இருக்கின்றனர். வலுவான பொருளாதாரப் பின்னணியும் ஆதரவளிக்க ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தமிழர்களும் இருக்கின்றனர்.

இது தவிர, பிரபாகரன் குடும்பத்தினர் தொடர்பான சந்தேகங்களும் எழுகின்றன. குறிப்பாக, வெளிநாட்டில் அவருக்கு இன்னொரு மகன் இருப்பதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டுவந்தாலும் அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அதேபோல, அவருடைய மனைவி, மகள் ஆகியோருடைய தற்போதைய நிலையும் தெரியவில்லை.

இந்நிலையில், பிரபாகரன் மரணச் செதியை அவரைப் பின்தொடரும் நிழல்களே உறுதிப்படுத்த வேண்டும்; அல்லது காலமும் வரலாறும் உறுதிப்படுத்தலாம்!

நன்றி தினக்குரல்.

''சுரா அமைப்பு'' இது எந்த அமைப்பு என யாருக்காவது தெரியுமா?

ரோ அமைப்பு என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.