Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியா கவிதைகள்

Featured Replies

நன்றி உங்கள் பதிவுக்கு..

ம் ம்

அது ஏன் என்று தெரியல்லை அருவி தம்பி :wink:

கவிதை எழுத நினைத்தாலே

சோகமாகத்தான் வருது :? :lol:

நீங்க ஒரு தலைப்பு சொல்லுங்கோ

கிக்கா வருதா என்று பார்க்கிறேன் :lol:

:lol::lol: பட் ரகசியமாய் சொல்லுங்கோ...

எழுத வராட்டி தப்பிக்களாம் பாருங்கோ ?? :lol:

  • Replies 220
  • Views 28.5k
  • Created
  • Last Reply

goodbye.jpeg

ஸ்பரிசங்கள்

பரிமாறிய என்

காதலன் முகம்

முழு நிறை சந்திரன் போல

பிரகாசமானது..

ஆயிரம் நட்சத்திரம்

சேர்ந்த நீர்குமிழ் போல்

மின்னும் ஒவ்வேரு

விழியும்..

வானவில்லின் வளைவு

எடுத்து முத்துக்களால்

தொடுத்தது போல் அவன்

புன்னகை..

வானத்தையே நான்

வார்த்தை தேடும்

அளவு பரந்தது

அவன் மார்பு..

என் தோள் பற்றியபோது

ராமன் எந்த வீரத்தால்

வில் உடைத்தான் என

அறிந்தேன்..

அவன் தாய்மகன்

மிருதுவானவன்

அதுதான் மிருதுவான

என் காதலும்

உடைந்து போய்விட்டது

பொருத்த முடியாமல்.

ஆயிரம் நட்சத்திரம்

சேர்ந்த நீர்குமிழ் போல்

மின்னும் ஒவ்வேரு

விழியும்..

காதல் உடைந்து போய் விட்டது என்பதை முதலிலே நீர்க்குமிழினுடன் ஒப்பிட்டுக் காட்டிவிட்டீர்கள்

அவன் தாய்மகன்

மிருதுவானவன்

அதுதான் மிருதுவான

என் காதலும்

முதற்தடவையில் விளங்கல பிறகு திரும்பவும் படிக்கும்போது விளங்கிக்கொண்டேன்.

அவன் தாய்மகன்

மிருதுவானவன்

அதுதான் மிருதுவான

என் காதலும்

உடைந்து போய்விட்டது

பொருத்த முடியாமல்.

நித்தியா கவி நல்லா இருக்கு மேலும் தொடருங்கோ

  • 4 weeks later...

letter.jpg

நினைத்துப் பார்த்ததுண்டு

சூரியன் அஸ்தமிக்கும்

கடைசி நாள்

நினைத்துப் பார்த்ததுண்டு..

தென்றல் உறங்கிடும்

கடைசி நாள்

நினைத்துப் பார்த்ததுண்டு..

நிலப்பரப்பு எல்லாம் நெருப்பாகும்

கடைசி நாள்

நினைத்துப் பார்த்ததுண்டு..

என் உயிர் மரணிக்கும்

கடைசி நாள்

நினைத்துப் பார்த்ததுண்டு..

ஆனால் காதலனே..

நம் விழிகள் சந்திக்கும்

கடைசி நாள்

உன் கரங்களுக்குள் சிறைப்படும்

கடைசி நாள்

உன் முத்தம் பதிக்கும்

கடைசி நாள்

நினைத்துப் பார்க்காமலே..

நினைவில் மட்டுமல்ல

நிஐத்திலும் வந்ததுண்டு..!

நினைவுள்ளவரை

-நித்தியா..

ஒலிவடிவில் கேட்க

http://www.acidplanet.com/components/embed...6&T=9179

கவிதை சூப்பர் நித்யா... உங்க குரலில் கேக்கவும் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்... உங்கள் கவிதைகளை வாசிக்கவும் , ஒலிவடிவில் கேக்கவும் ஆவல்.... தொடருங்கள் .. :P

wuther-m.jpg

அழகான கவி வரிகளை

மிருதுவான குரலில்

தேடி எடுத்த பாடல்களோடு

கேட்பது இனிமை...........

வாழ்த்துக்கள் நித்யா.

தொடர்ந்து படையுங்கள்.............

நல்லாயிருக்கு ,திறமையானவர் நீங்கள்.

ஏன் இன்னும் காதலனுக்குள்ளும்,காதலுக்குள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

þÐ ¿¡Á ¯í¸ ÅçÅüÒ À̾¢Ä À¾¢îºÐ. ´Õ §Å¨Ç «í¸ ¸ñÎ츧Äñ½¡, þí¸ ¸ñÎìÌí¸!

Ò¾¢¾¡ö ´Õ «ò¾¢ô â...

±ô§À¡§¾¡ ±í§¸¡ âìÌõ

«ò¾¢ô â¨Å Å¢¼,

¿¢ò¾Óõ ÓüÈò¾¢ø

âòÐî ¦º¡Ã¢Ôõ

¿¢ò¾¢Â ¸øÂ¡½¢ô âÅ¡ö þÕí¸û

¡ú ¸Çò¾¢üÌ!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியா கவிதைகள் மிக நன்றாக இருக்கு வாழ்த்துக்கள். மேலும் உங்கள் குரலில் கவிதைகளை தாருங்கள்

þÐ ¿¡Á ¯í¸ ÅçÅüÒ À̾¢Ä À¾¢îºÐ. ´Õ §Å¨Ç «í¸ ¸ñÎ츧Äñ½¡, þí¸ ¸ñÎìÌí¸!

Ò¾¢¾¡ö ´Õ «ò¾¢ô â...

±ô§À¡§¾¡ ±í§¸¡ âìÌõ

«ò¾¢ô â¨Å Å¢¼,

¿¢ò¾Óõ ÓüÈò¾¢ø

âòÐî ¦º¡Ã¢Ôõ

¿¢ò¾¢Â ¸øÂ¡½¢ô âÅ¡ö þÕí¸û

¡ú ¸Çò¾¢üÌ!!!

நன்றி கவிதன் சாணக்கியன்

நாரதர் மற்றும் அனிதா

அஜிவன்..!

உங்கள் பாராட்டுக்கு நன்றி..!

சாணக்கியன்

நித்தியகல்யாணி ம் ம் அழகான

பெயர்தான் பூவும் அப்படித்தானா?

நாரதரே..

காதலுக்குள்ளும் புரட்சி இருக்கல்லவா?

சிறையேல்லாம் நான் என்னை வைக்கவில்லை..

நன்றி

நன்றாக இருக்குது அக்கா,

உங்க கவிதை மட்டுமல்ல அதற்காக நீங்க தேர்ந்தெடுத்த பாடலும் கூட.

  • 3 months later...

uu.jpg

எங்கு வந்தாய்..?

மறந்துவிட்டேன்

இறந்துவிட்டேன் என்று

பார்க்க வந்தாயா..?

காதலாகி கசிந்து நீ

எனக்கு வரைந்த காதல்மடல்கள்

இதோ இந்த மூலையில்தான்

கிடக்கின்றன..

நான் மறக்கவில்லை..

புகைந்தது என் வாழ்வு

என்று நீ விட்டெறிந்த நம்

திருமணப் "புகை"ப்படம்

இங்குதான் சிதறிக்கிடக்கிறது..

நான் மறக்கவில்லை...

எந்தப் புடவை எதற்காக

எரித்தாய் என்று இன்னும்

திகதியுடன் கூறுவேன்..

நான் மறக்கவில்லை..

எந்தத் தழும்பு எப்போது

போட்டாய் என்று உன் கைரேகைகளை

ஞாபகம் வைத்திருக்கும் அதே

தேகம்தான் இது

நான் மறக்கவில்லை..

மன்னித்துவிடு

நான் மாறிவிட்டேன்

இனியும் ஒருதடவை -உன்

பின்னால் வரமுடியாது..

காதலும் இல்லாமல்

கருணையும் இல்லாமல்

கட்டிலிலே..

மூச்சுத்திணற - என்

அடிவயிற்றை அமத்தியவாறு

பெண்விடுதலை பற்றிப்

பேசியவன்தானே

நீ..????

ஒலிவடிவில் கேட்க இங்கே அழுத்தவும் :-)

http://www.acidplanet.com/components/embed...D=700430&T=5764

மன்னிக்கவும்

"விடுதலை" என்று தலைப்பிட மறந்துட்டேன்.

அற்புதமான கவிதை நித்யா!

வெளிப்பேச்சுக்கு மட்டும் பெண்விடுதலை பேசும் ஒருசிலர்-அணிந்திருக்கும் முகமூடியை - இழுத்து பறித்து - நிஜமுகத்தை அம்பலப்படுத்துகிறது- உங்கள் வரிகள்! 8)

காதலும் இல்லாமல்

கருணையும் இல்லாமல்

கட்டிலிலே..

மூச்சுத்திணற - என்

அடிவயிற்றை அமத்தியவாறு

பெண்விடுதலை பற்றிப்

பேசியவன்தானே

நீ..????

கவிதையிலே எங்கே வக்கிரம் வந்து விடுமோ என எழுத தயங்கும் வரிகள். உங்கள் கவிதையின் கருவுடன் சேர்த்து படிக்கும்போது வக்கிரம் தெரியாது, கருத்துடன் சேர்ந்து மிளிர்கின்ற வார்த்தைகள், வாழ்த்துக்கள் கவிதைக்கும், துணிச்சலுக்கும். :wink:

காதலும் இல்லாமல்

கருணையும் இல்லாமல்

கட்டிலிலே..

மூச்சுத்திணற - என்

அடிவயிற்றை அமத்தியவாறு

பெண்விடுதலை பற்றிப்

பேசியவன்தானே

நீ..????

கவிதையிலே எங்கே வக்கிரம் வந்து விடுமோ என எழுத தயங்கும் வரிகள். உங்கள் கவிதையின் கருவுடன் சேர்த்து படிக்கும்போது வக்கிரம் தெரியாது, கருத்துடன் சேர்ந்து

மிளிர்கின்ற வார்த்தைகள், வாழ்த்துக்கள் கவிதைக்கும், துணிச்சலுக்கும். :wink:

ஏன் சகோதரா- அந்த வரிகள் சுட்டி நிற்பது வக்கிரத்தையா?

தெரியல- நித்யா வந்து சொல்லட்டும்-!

நான் புரிந்து கொண்டது- உன் சகோதரன் நெஞ்சில் மிதித்து கொண்டு- அடுத்த வீட்டு காரன் - சண்டையை - விலக்கிவிட எண்ணாதே- என்பதே! 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சகோதரா- அந்த வரிகள் சுட்டி நிற்பது வக்கிரத்தையா?

தெரியல- நித்யா வந்து சொல்லட்டும்-!

நான் புரிந்து கொண்டது- உன் சகோதரன் நெஞ்சில் மிதித்து கொண்டு- அடுத்த வீட்டு காரன் - சண்டையை - விலக்கிவிட எண்ணாதே- என்பதே! 8)

ÀÄ÷ ¦ÀñŢξ¨Ä ±ýÀÐ «Îò¾Åý Á¨ÉÅ¢ìÌ ÁðÎõ ¸¢¨¼ì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷ôÀ¡÷¸û. þýÛõ º¢Ä÷ °Ã¢üÌ ¯À§¾ºõ ¬É¡ø Å£ðʧġ §¿÷Á¡Ú. þó¾ þÃñ¼¡ÅРŨ¸Â¢É¨Ãô ÀüÈ¢ò¾¡ý «ó¾ Àó¾¢ ÌÈ¢ôÀ¢Îž¡¸ ¿¡ý ¿¢¨É츢§Èý.

நீங்கள் சொன்னதைதான் நானும் நினைத்தேன் - சாணக்யன்! 8)

ÀÄ÷ ¦ÀñŢξ¨Ä ±ýÀÐ «Îò¾Åý Á¨ÉÅ¢ìÌ ÁðÎõ ¸¢¨¼ì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷ôÀ¡÷¸û. þýÛõ º¢Ä÷ °Ã¢üÌ ¯À§¾ºõ ¬É¡ø Å£ðʧġ §¿÷Á¡Ú. þó¾ þÃñ¼¡ÅРŨ¸Â¢É¨Ãô ÀüÈ¢ò¾¡ý «ó¾ Àó¾¢ ÌÈ¢ôÀ¢Îž¡¸ ¿¡ý ¿¢¨É츢§Èý.

இது சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். வக்கிரம் என்பதைவிட விரகம் என்பது பொருத்தமாக இருக்கும். இறுதி நான்கு வரிகளையும் கவிதையுடன் படிப்பதற்கும், தனித்து படிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்குபட்டது, ஒரு பெண்னின் விருப்பமின்றி ஒருவன் அந்த பெண்ணுடன் சேர்வதை வக்கிரம் என்பதா? விரகம் என்பதா? :wink:

ஆகா..

நல்லா இருக்கே..

ஆனால் எல்லாரும் ஓரே கருத்ததைத்தான் சொல்கிறமாதிரி இருக்கு..

"ÀÄ÷ ¦ÀñŢξ¨Ä ±ýÀÐ «Îò¾Åý Á¨ÉÅ¢ìÌ ÁðÎõ ¸¢¨¼ì¸ §ÅñÎõ ±ýÚ ±¾¢÷À¡÷ôÀ¡÷¸û. þýÛõ º¢Ä÷ °Ã¢üÌ ¯À§¾ºõ ¬É¡ø Å£ðʧġ §¿÷Á¡Ú. þó¾ þÃñ¼¡ÅРŨ¸Â¢É¨Ãô ÀüÈ¢ò¾¡ý «ó¾ Àó¾¢ ÌÈ¢ôÀ¢Îž¡¸ ¿¡ý ¿¢¨É츢§Èý"

இதுவும் சரியாகத்தான் இருக்கு :-)

"நான் புரிந்து கொண்டது- உன் சகோதரன் நெஞ்சில் மிதித்து கொண்டு- அடுத்த வீட்டு காரன் - சண்டையை - விலக்கிவிட எண்ணாதே- என்பதே!"

இதுவும் சரியாகத்தான் இருக்கு :-)

"இது சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். வக்கிரம் என்பதைவிட விரகம் என்பது பொருத்தமாக இருக்கும். இறுதி நான்கு வரிகளையும் கவிதையுடன் படிப்பதற்கும், தனித்து படிப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக எனக்குபட்டது, ஒரு பெண்னின் விருப்பமின்றி ஒருவன் அந்த பெண்ணுடன் சேர்வதை வக்கிரம் என்பதா? விரகம் என்பதா?"

இதுவும் சரியாகத்தான் இருக்கு :-):-)

வக்கிரம் என்பதா? விரகம் என்பதா? :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.