Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள் - அனிதா பிரதாப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள் - அனிதா பிரதாப்

[ வா.கி.குமார் ]

திங்கள், 01 ஜூன் 2009 08:57

ஈழம் தொடர்பாக பிரபாகரன் விட்டுக்கொடுப்புக்கு முன்வரவில்லை. தனது நோக்கத்தில் அவர் தோல்வி கண்டதுமட்டுமன்றி தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பமும் ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க அவர் முயன்றார். ஆனால் தமிழர், சிங்களவர் உட்பட இலங்கையரின் முழுத் தலைமுறையுமே இதற்கு அதிக விலை செலுத்தியுள்ளது என்று இந்தியாவின் முன்னணிப் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டுள்ளார்.

"புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள்' என்ற தலையங்கத்தில் அவர் எழுதிய கட்டுரை "த வீக்' சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு புனர்வாழ்வளித்து உள்ளீர்க்கப்பட்ட நேர்மையான இலங்கையர் சமூகத்தைக் கட்டியெழுப்ப இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வரலாற்று ரீதியான சந்தர்ப்பம் இப்போது கிடைத்திருப்பதாகவும் அவர் யதார்த்தத்தை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி ஞானத்துடன் செயற்பட்டால் இலங்கையானது ஸ்திரத்தன்மையையும் சுபீட்சத்தையும் வென்றெடுக்குமென எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை இந்தியா தனது வட்டத்திற்குள் கொண்டு வருவதே இப்போதுள்ள சவால் என்றும் சீனா, பாகிஸ்தானின் செல்வாக்கினால் இந்த விடயம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அனிதா பிரதாப், சிறந்த வெளிநாட்டுக் கொள்கையின் மூலம் அதனை மேற்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,பிராந்தியத்தில் வல்லரசாக இருக்கும் இந்தியாவானது ரஷ்யா, சீனா போன்றில்லாமல் உலக பெறுமானங்களை நம்புவதாகவும் இதுவே ஸ்திரத்தன்மையையும் அமெரிக்கா, ஐரோப்பியாவுடன் தேச அணியையும் ஏற்படுத்த உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக் கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முதலாவதும் அதிமுக்கியமான பாடமாகவும் அமைவது இலங்கையின் வெற்றியானது மிகத் தெளிவானதும் திட்டவட்டமானதுமான புதிய உலக ஒழுங்கு விதியை அடையாளப்படுத்துகின்றது. இது ஒரு முன்மாதிரியான மாற்றமாகும்.

அமெரிக்க மேலாதிக்க ஏகத்துவ உலகத்திலிருந்து எதிர்த்துருவமாக சீனா வெளிக்கிளம்பியிருக்கின்ற இருதுருவ உலகத்திற்கு நாம் நகர்ந்திருக்கின்றோம். அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஜனநாயகம், சுதந்திரம், மனிதஉரிமைகள் போன்ற உலகப் பெறுமானங்களை பற்றிப்பிடித்திருக்கின்றன.

ஆனால், சீனா வெளிக்கிளம்பியிருக்கும் எதிர்த்துருவமானது சுதந்திரமானதும் உலகப் பெறுமானங்கள் பற்றி அக்கறையற்றதுமாகவும் காணப்படுகிறது.

தத்துவார்த்தக் கோட்பாடற்றதாகவும் நடைமுறைச் சாத்தியமானதாகவும் தந்திரோபாய ரீதியான ஆதரவுக்கு தடையற்றதாகவும் அல்லது பொருளாதார நேச அணியின் ஆட்சி ஸ்திரத்தன்மைக்கு ஆதரவு வழங்குவதில் சமநிலையான தன்மையை பற்றிப் பிடித்திருக்காததாகவும் சீனாவின் உலக ஒழுங்கு கோடிடப்பட்டிருக்கிறது.

கெடுபிடி யுத்தத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இருதுருவங்களாக இருந்தன. அந்த இருதுருவ உலகைப் போன்று அல்லாமல் 21 ஆம் நூற்றாண்டின் இருதுருவ உலகமானது வேறுபட்டதாக உள்ளது.

"மீதியானவற்றின் எழுச்சி' என்று பரீட் ஷக்காரியா அழைப்பதை இது பிரதிநிதித்துவப்படுத்துகிற

அனிதா பிரதாப்பும் தனது குணத்தைகாட்டிவிட்டாரா... :lol: :lol: அல்லது ....

எமது தமிழ் ஊடகங்கள்தான் ஆட்களை தெரியாமல் தலையில்வைத்தாட அவர்கள் எமக்கு அருமையாக ஆப்புவைக்க உதவியதோ :lol: :lol: :(

(இதே கட்டுரையை Tamilwin காரர் வேறுமாதிரி எழுதியுள்ளார்கள் அந்ந கட்டுரைதான் இதாக்குமென அதற்காகத்தான் மேலுள்ள கருத்தை எழுதியிருந்தேன் :lol: )

Edited by Netfriend

உலகில் சீனாவை மையப் படுத்தி மேற்குலகிற்கெதிராக எழும் ஒரு அணியினை பற்றி ஓரள்விற்கு அனிதா விளக்கியுள்ளார். துரதிஷ்டமாக, தமிழர்கள் நாம் இந்த உலக புதிய ஒழுக்கினை சரியாக புரிந்து கொள்ள தவறி விட்டோம். ஆனால், எமக்கான வாய்ப்புகள் முற்றாக முடிந்து போய் விடவில்லை.

நிச்சயம் புதிய தலைமுறையானது விடுதலைப் போரின் தோல்விக்கான காரணங்களை வியாபார நோக்கற்று, மக்களை மாயைக்குள் வைத்திருக்க உதவிய வெற்று கோசங்களில் இருந்து விலகி நின்று அலசி ஆராய்ந்து விடுதலைக்கான புதிய வழிகளை கண்டு பிடிக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா பிரதாப்பும் தனது குணத்தைகாட்டிவிட்டாரா... :lol: :lol: அல்லது ....

எமது தமிழ் ஊடகங்கள்தான் ஆட்களை தெரியாமல் தலையில்வைத்தாட அவர்கள் எமக்கு அருமையாக ஆப்புவைக்க உதவியதோ :lol: :lol: :(

(இதே கட்டுரையை Tamilwin காரர் வேறுமாதிரி எழுதியுள்ளார்கள் அந்ந கட்டுரைதான் இதாக்குமென அதற்காகத்தான் மேலுள்ள கருத்தை எழுதியிருந்தேன் :lol: )

நாம் வலுவாக இல்லாவிடின் போவோர் வருவோனெல்லாம் எட்டி மிதித்து சென்றிடுவான்

அதிலும் மலையாளியைப்பற்றிக்கேட்க வேண்டியதில்லை

தேசியத்தலைவரப்பற்றி சிலாகித்து எழுதியவர் இவர்.

எந்த ஒரு மலையாளத்தானுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டம் கசப்பானது

முன்பு எழுதிய தன்னுடைய புத்தகத்தின் விற்பனைக்காக சிலாகித்திருக்கலாம்

எல்லாமே பாடங்களாக இருந்த போதிலும் அதைக் காலாவதியான நேரத்தில் கற்றுக்கொண்டிருப்பது வேதனையான உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

அனிதா பிரதாப்புக்கு இப்படி ஒரு கட்டுரை வரைய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனென்றால் அவர்தான் இந்தியத் தேர்தல் முடிவுக்குப் பின் புலிகள் தாக்குவார்கள் என்று ஏற்கனவே ஒரு கட்டுரை வரைந்தவர். :lol:

உலக அரங்கைப் பொறுத்தவரையில், சிறீலங்கா மேற்குலகத்தை நம்பவைத்து அதனிடம் வாங்கவேண்டியதை மட்டும் வாங்கிக்கொண்டு (பயங்கரவாதத்துக்கு எதிரான போர்) இப்போது அணி தாவிவிட்டது. இந்தியா நமது நண்பன் என்று சொல்லியவாறே புலிகளும் அமெரிக்கா முதலான மேற்கு நாடுகளை நோக்கிச் சென்றதை இறுதியில் கண்டோம். இது புலிகள் ஏற்கனவே திட்டமிட்டதா அல்லது இறுதி நேர முடிவா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது ஒரு தெளிவு பிறந்துள்ளது.

இலங்கை மீண்டும் மேற்குலகை வளைக்காமல் இருப்பது நம் கைகளிலேயே உள்ளது. இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு விடை காணாமலேயே மேற்குலகம் இலங்கையை நோக்கி மீண்டும் நகர அனுமதிக்கக் கூடாது. ஆனால் சிங்களவன் ஒரு கட்டத்தில் இதைச் செய்ய முனையலாம். சீனாவையும் இந்தியாவையும் ஒரு வண்டிலில் பூட்டி தன்னை இழுக்க வைப்பவன் இதைச் செய்ய மாட்டானா? :lol:

ஓம் ஓம்... எம்மைப் பற்றி எவர் நல்லா எழுதினாலும், உடனே தலையில் வைத்து கொண்டாடுவோம்...அதே நபர் எம்மை விமர்சித்தவுடன் அவரை கேவலமாக அவர் சார்ந்த இனத்தின் பெயரால் திட்டுவோம்.... அல்லது இருக்கவே இருக்குது துரோகி என்ற முத்திரை.. அதையும் குத்தி அழகு பார்ப்போம்

இதே அனிதா பிரதாப், தலைவர் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து ஹோட்டல் ஒன்றில் வீட்டு சிறையில் வைத்திருக்கும் போது பெண் துப்பரவு தொழிலாளி போன்று மாறுவேடத்தில் போய் பேட்டி கண்டு தலைவரை வீட்டுச் சிறையில் இந்தியா வைத்திருந்து அவமானப் படுத்துகின்றது என என உலகிற்கு அவர் உணர்த்தும் போது இந்த மலையாளி முத்திரை எங்கே போனது?

விமர்சனங்களை எதிர்கொள்ளாமல், விமர்சிப்போம் அனைவரையும் எதிரிகளாக்கியதால் இலட்சக்கணக்கில் பாதிக்கப் பட்டு, இலங்கை அரசு போடும் மூன்று வேளை பிச்சை உணவிற்கு கையேந்தும் நிலமைக்கு எம் மக்களை கொண்டு வந்து விட்டு விட்டோம்... மிக மோசமான இனவழிப்புக்குள்ளாகியும் அதனை உறுதிப் படுத்தும் சான்றுகள் இருந்தும் கூட, எமக்காக குரல் தரவல்ல ஒரு சக்தியும் இல்லாமல் அனாதை ஆகிவிட்டோம்....ஆனால், இந்த முத்திரை குத்தல்கள, எவரையும் எதிரியாக்கும் போக்கை மட்டும் நிப்பாட்ட மாட்டம்

Edited by நிழலி

புலிகள் தாக்குவார்களா மாட்டார்களா என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

இப்போதே முடிவுசெய்ய வேண்டியதில்லை

வலிமையான தாக்குதலுக்கு மத்தியிலும் இறுதிவரை உலகத்துடன் தொடர்பில் இருந்த புலிகள்,

இனிமேலும் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்பதை தற்போது கூற முடியாது

ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரே அச்சில் இணைந்திருக்க, ஈழத்தமிழர்கள் மட்டும் மேற்கு நோக்கிபோவதற்கு

தமிழகத்தமிழர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டும்

ஏனென்றால், வியாபாரப்பந்தயத்தில் முன்னே செல்லும் குதிரையாகிய இந்தியாவின் மீது பணம் கட்டியிருக்கும் மேற்கு நாடுகள்

இந்தியக்குதிரையின் லகானைப்பிடித்திழுக்க (எப்படி பாகிஸ்தானிற்கு காஸ்மீர் இருக்கிறதோ) தமிழகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்

இப்போது இருக்கும் தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்து மனதளவில் பிரிந்தே இருக்கிறது

தேவையான பின்புலம் இல்லாமையால் தமிழக மக்கள் சற்று அடங்கி இருக்கிறார்கள்

அமெரிக்கா , அத்தகைய பின்புலத்தை ஒரு தலைமையின் ரூபத்தில் தமிழகத்தில் ஏற்படுத்த இயலும்

இல்லை நிழலி,

மலையாளிகளின் விஷயத்தில் உங்களைக்காட்டிலும் எனக்கு அனுபவம் அதிகம்

நீங்கள் கூறியது போல நான் என்றைக்குமே அனிதா பிரதாப்பைபோற்றியது இல்லை

எப்போதுமே சந்தேகக்கண்ணோடுதான் பார்த்து வந்திருக்கிறேன்

எனினும் நீங்கள் கூறியது எனக்கானது அல்லாது பொதுவாகக்கூறியிருக்கிறீர் கள் என்று எடுத்துக்கொள்கிறேன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இருக்கும் தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்து மனதளவில் பிரிந்தே இருக்கிறது

தேவையான பின்புலம் இல்லாமையால் தமிழக மக்கள் சற்று அடங்கி இருக்கிறார்கள்.

இக்கருத்தென்னவோ உண்மைதான். ஆனால் தமிழக மக்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை, ஆட்டுமந்தைகளென மலிவான சலுகைகளுக்கு விலைபோகும் அற்ப குணங்கள், அரசியல் கட்சிகளின் சுயநலம், என்ன ஏறி மிதித்தாலும் எருமை மாட்டில் மழைபெய்த மாதிரி கண்டுகொள்ளாமல், வெந்த சோத்துக்கு தன்னையிழந்து அடிமையாகவே வாழ நினைப்பது...

இக்குணங்கள் மாறினால், சில அதிசயங்கள் நடக்கலாம். அதற்கு பிரபாகரன் மாதிரி விலைபோகா தலைமை வேண்டும்.. இதெல்லாம் நடக்குற காரியமா?

புலிகள் தாக்குவார்களா மாட்டார்களா என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

இப்போதே முடிவுசெய்ய வேண்டியதில்லை

வலிமையான தாக்குதலுக்கு மத்தியிலும் இறுதிவரை உலகத்துடன் தொடர்பில் இருந்த புலிகள்,

இனிமேலும் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்பதை தற்போது கூற முடியாது

ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரே அச்சில் இணைந்திருக்க, ஈழத்தமிழர்கள் மட்டும் மேற்கு நோக்கிபோவதற்கு

தமிழகத்தமிழர்களின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டும்

ஏனென்றால், வியாபாரப்பந்தயத்தில் முன்னே செல்லும் குதிரையாகிய இந்தியாவின் மீது பணம் கட்டியிருக்கும் மேற்கு நாடுகள்

இந்தியக்குதிரையின் லகானைப்பிடித்திழுக்க (எப்படி பாகிஸ்தானிற்கு காஸ்மீர் இருக்கிறதோ) தமிழகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்

இப்போது இருக்கும் தமிழகம் மற்ற மாநிலங்களிலிருந்து மனதளவில் பிரிந்தே இருக்கிறது

தேவையான பின்புலம் இல்லாமையால் தமிழக மக்கள் சற்று அடங்கி இருக்கிறார்கள்

அமெரிக்கா , அத்தகைய பின்புலத்தை ஒரு தலைமையின் ரூபத்தில் தமிழகத்தில் ஏற்படுத்த இயலும்

இல்லை நிழலி,

மலையாளிகளின் விஷயத்தில் உங்களைக்காட்டிலும் எனக்கு அனுபவம் அதிகம்

நீங்கள் கூறியது போல நான் என்றைக்குமே அனிதா பிரதாப்பைபோற்றியது இல்லை

எப்போதுமே சந்தேகக்கண்ணோடுதான் பார்த்து வந்திருக்கிறேன்

எனினும் நீங்கள் கூறியது எனக்கானது அல்லாது பொதுவாகக்கூறியிருக்கிறீர் கள் என்று எடுத்துக்கொள்கிறேன் :lol:

உங்களுக்கான தனிப்பட்ட பதில் அல்ல

மற்றப் படி, 5 வருடம் மலையாளி ஒருவரை Project Manager ஆக கொண்டு நான் பட்ட பாட்டை ஒரு பெரிய நாவலாகவே என்னால் எழுத முடியும்... இப்ப நினைச்சாலும் வாழ்கை வெறுத்து போகும் அனுபவம் அது

எல்லாம் ஊடக விபச்சாரம்.. மலையாளியோ.. யப்னாடமிலோ.. யாரும் தப்பமுடியாது. :lol:

எனக்கு சில மலையாளிகளை தெரியும்.. எமது விடுதலை விடையத்தில் எனக்குத்தெரிந்த பல ஈழத்தமிழர்களைவிட ஈடுபாடு உள்ளவர்கள்.... யாழில் தென்படுவது துவேஷம்.. அறியாமை.. கொழுப்பு.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெழிறிப்போன முகங்கள்.. ஒவ்வொன்றும் முன் கொணரப்படும். இதில்் மொத்தத்தில் சமூகம் சார்த்த பொது நலனைக்காணவில்லை. தங்களின் ஆராய்சியும் தாங்கள் மிகவும் திறமையான பத்திரிகையாளரும் என்று நேரத்துக்கு நேரம் பறைசாற்றப்பட எழுத்துக்கள். வியாபார யுத்தியே மேலோங்கி உள்ளது.

காலம் நிச்சயமாக சிறந்த பதிலையும், நீதியையும் கொண்டுவரும்.

நம்புவோமாக.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"இலங்கையிடம் என்னதான் இருக்கின்றதோ தெரியவில்லை... எல்லோரும் இப்படி support செய்கின்றர்கள். இலங்கைதமிழர் களே மன்னியுங்கள் எங்களை.. அனைத்து தமிழர்களுக்கும் நல்ல இன உணர்வு உள்ளது. ஆனால் உங்களை போல் தன் உயிரையும் தன் மகன் உயிரையும் கொடுக்கும் அளவுக்கு நல்ல தலைவர்களை நாங்கள் பெறவில்லை!!! அதே நேரத்தில் இங்கு பலர் தங்கள் இன்னுய்ரை ஈந்துள்ளனர்."

comment added: www.thatstamil.com

5 வருடம் மலையாளி ஒருவரை Project Manager ஆக கொண்டு நான் பட்ட பாட்டை ஒரு பெரிய நாவலாகவே என்னால் எழுத முடியும்... இப்ப நினைச்சாலும் வாழ்கை வெறுத்து போகும் அனுபவம் அது

சிறுவயதில் சுப்பர் மார்கட்டில் வேலைசெய்யும் போது, ஒரு தமிழ் மனேஜரிடம் நான் பட்டபடு... தண்ட சொந்தங்களை கொண்டுவந்து போடுவதற்க்காக பல பொடியங்களுக்கு வேட்டு வைத்தவன்.. கடைசியில் ஒரு இடத்தில் வசமாக அம்பிட்டு நேராக நடக்கும் பாக்கியத்தையும் மூக்கையும் இழந்தவர்.. :lol:

90க்களில் வெம்பிளியில் வசித்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

5 வருடம் மலையாளி ஒருவரை Project Manager ஆக கொண்டு நான் பட்ட பாட்டை ஒரு பெரிய நாவலாகவே என்னால் எழுத முடியும்... இப்ப நினைச்சாலும் வாழ்கை வெறுத்து போகும் அனுபவம் அது

ஆக மொத்தத்தில் மல்லுகள், தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் எவருக்கும் குழிபறித்து, மேலதிகாரிகளுக்களின் மனநிலைபார்த்து மஜா செய்தே முன்னேறுகிறார்களென்பதை சொல்லாமல் சொல்கிறீர்கள்...!

உண்மையும் அதுதான்.

சிறுவயதில் சுப்பர் மார்கட்டில் வேலைசெய்யும் போது, ஒரு தமிழ் மனேஜரிடம் நான் பட்டபடு... தண்ட சொந்தங்களை கொண்டுவந்து போடுவதற்க்காக பல பொடியங்களுக்கு வேட்டு வைத்தவன்.. கடைசியில் ஒரு இடத்தில் வசமாக அம்பிட்டு நேராக நடக்கும் பாக்கியத்தையும் மூக்கையும் இழந்தவர்.. :lol:

90க்களில் வெம்பிளியில் வசித்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

உணமைதான்... நான் கனடாவிற்கு வந்த புதிதில் என் நல்ல நண்பர்கள் செய்த அறிவுரைகள் இரண்டு...

1. தமிழ் நிறுவனங்களில் எந்த நிலை வந்தாலும் வேலைக்கு சேர்ந்திடாத

2. தமிழ் சனம் வேலை செய்யும் நிறுவனங்கள் எனில் கூடிய வரைக்கும் விலகி இருக்க பார்

ஆக மொத்தத்தில் மல்லுகள், தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் எவருக்கும் குழிபறித்து, மேலதிகாரிகளுக்களின் மனநிலைபார்த்து மஜா செய்தே முன்னேறுகிறார்களென்பதை சொல்லாமல் சொல்கிறீர்கள்...!

உண்மையும் அதுதான்.

என்னை டுபாய் நிறுவனத்திற்கு நேர்முக தேர்வு செய்து பல இந்திய விண்ணப்பதாரிகளிற்கும் மத்தியில் இலங்கையில் இருந்து தகுதியின் அடிப்படையில் (அப்படி ஒன்று எனக்கு இருக்கின்றதோ என்பது வேறு விடயம்) தெரிவு செய்தது ஒரு அழகான மலையாள பெண்மணி. அந்த வாய்ப்புதான் எனக்கு பல கதவுகளை திறந்து விட்டது (இரட்டை அர்த்தத்தில் எடுக்க கூடாது, சொல்லிப் போட்டன்)...

நிழலி.. நீங்கள் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் இதில இருக்கிற‌ உள்குத்து விள‌ங்குது..! கணினிக்குள்ளாலயே வழியுதே..!! :lol:

(

இரட்டை அர்த்தத்தில் எடுக்க கூடாது, சொல்லிப் போட்டன்)...

சா சா என்ன நீங்கள் நாங்களா அப்படி நினைபோம்?

நிழலி.. நீங்கள் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் இதில இருக்கிற‌ உள்குத்து விள‌ங்குது..! கணினிக்குள்ளாலயே வழியுதே..!! :lol:

நீங்கள் வேற நான் துடைச்சு கொண்டு இருகேன் கனனியை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் மல்லுகள், தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் எவருக்கும் குழிபறித்து, மேலதிகாரிகளுக்களின் மனநிலைபார்த்து மஜா செய்தே முன்னேறுகிறார்களென்பதை சொல்லாமல் சொல்கிறீர்கள்...!

உண்மையும் அதுதான்.

உன்மையை சொல்கிறீர்கள் ராஜவன்னியன் ஆகையால் உங்களுக்கு என் பாராட்டுகள் மலையாளிகளை பற்றி புரிதல் அழகு :lol::lol:

புலிகளின் தோல்வியிலிருந்து பாடங்கள் - அனிதா பிரதாப்

தலைப்பு ஓகோவெனெ போகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் இங்கு தோறகவில்லை. அடைந்தால் தமிழீழம் அல்லது சாவு என்ற ஒரு நிலைக்கே சென்றுள்ளனர். முழுக்க முழுக்கத் தோற்றுப்Nபுhனது இந்தியா தான் என்பதை வருங்காலம் விடைபகரும். அந்த நாள் மிகத்தொலைவில் இல்லை. இந்தியத இப்போது 'செக்மேற்" நிலையிலுள்ளது.

சீனா, பாகிஸ்த்தான், இலங்கை 'செக்மேற்" நகரமுடியுமா? நகர்த்தமுடியுமா?

காலம்தான் பதில் சொல்லவேண்டும். தமிழர்களுக்கு இழப்பே ஒழிய தோல்வி இல்லை. தமிழர் சிங்களவருடனும் சேரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றப் படி, 5 வருடம் மலையாளி ஒருவரை Project Manager ஆக கொண்டு நான் பட்ட பாட்டை ஒரு பெரிய நாவலாகவே என்னால் எழுத முடியும்... இப்ப நினைச்சாலும் வாழ்கை வெறுத்து போகும் அனுபவம் அது

-----

என்னை டுபாய் நிறுவனத்திற்கு நேர்முக தேர்வு செய்து பல இந்திய விண்ணப்பதாரிகளிற்கும் மத்தியில் இலங்கையில் இருந்து தகுதியின் அடிப்படையில் (அப்படி ஒன்று எனக்கு இருக்கின்றதோ என்பது வேறு விடயம்) தெரிவு செய்தது ஒரு அழகான மலையாள பெண்மணி. அந்த வாய்ப்புதான் எனக்கு பல கதவுகளை திறந்து விட்டது (இரட்டை அர்த்தத்தில் எடுக்க கூடாது, சொல்லிப் போட்டன்)...

நிழலி சொல்லுறதை பார்த்தால் , தமிழனுக்கு சேட்டன்கள் தான் எதிரி , சேச்சிகள் நல்லவை போலுள்ளதே ......... :lol:

சேச்சிகள் எல்லாருமே நல்லவர்கள் என்று என் மற்ற நண்பர்கள் சொன்னார்கள்... நான் அச்சாப் பிள்ளை என்பதால் எனக்கு ஒன்றும் இது பற்றி தெரியாது:lol: .........ஆனால் ...

பொதுவாக சொந்த அனுபவப்பட்டவர்களின் அனுபவ படி ஈழத்தமிழர் மீது சேச்சிகள் கோவிச்சது இல்லை ஆஅனால் ஈழத்து நங்கைகள் ததன் புறத்து வண்டுகளுக்கு இட்ம கொடுத்து ஈழத்து வண்டுகளை வெறுப்பேத்தினார்கள் என்று சொல்வார்கள்.

எல்லாம் கேள்விப்பட்டது.

புலிகள் மீண்டும் வரும்போதும் அதற்கேற்றமாதிரி கட்டுரை எழுதுவார்.

தமிழ் மக்களின் மனங்கள் சோர்ந்து விடக்கூடாது என்பதற்காக எழுதப்பட்ட தாயக கட்டுரையாளர்களின் கருத்துக்களுக்கு தாறுமாறாக விமர்சனம் எழுதிய பலரிற்கு இது சமர்ப்பணம்.

எழுத்துகளின் நோக்கங்கள் வேறுபட்டவை.

அதனை அவதானித்து அதற்கேற்றமாதிரி அவற்றை விளங்கிக் கொள்வது அவசியம் உறவுகளே!

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களே எல்லாமே முடிஞ்சமாதிரி அலுத்துக்கொள்ளும்போது அந்த பெண்மணி என்ன பண்ணுவாங்க?

இது வெற்றியின் ஆரம்பம் என்பதை புரிந்துகொள்ளுங்கோப்பா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.