Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களது நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களது நம்பிக்கையை இந்தியா இழந்துவிட்டது

கூறுவது ராமன்

சென்னை: இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால்இ உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்து போய் விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுஇ தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ஆழப் பரவி விட்டது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர் பி.ராமன்.

மத்திய அமைச்சரவையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.ராமன். இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் டாப்பிகல் ஸ்டடீஸ் மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராமன் கூறுவதாவது...

இந்திரா காந்தியை இன்றும் நன்றியுடனும்இ உணர்வுடனும் நினைத்து்ப பார்க்கும் தமிழர்கள் அதிகம். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்திரா காந்தி மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. காரணம்இ நமக்காக அவர் துடித்தார்இ நமக்காக பரிவு காட்டினார்இ நம் மீது அன்பும்இ பாசமும் கொண்டிருந்தார்இ நாம் ரத்தம் சிந்தியபோது வேதனைப்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான்.

ஆனால் இன்று ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களும் மத்திய அரசின் மீது குறிப்பாக காங்கிரஸ் மீதும்இ சோனியா காந்தியின் மீதும் மிகப் பெரும் வருத்தத்தில்இ கோபத்தில் உள்ளனர்.

அதற்குக் காரணம்இ விடுதலைப் புலிகளுக்கு உதவியாக இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அல்லஇ பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மிகக் கொடூரமான இனப்படுகொலைக்கு ஆளானபோதும் இந்தியா அதைக் கண்டும் காணாமல் விட்டு விட்டதேஇ கைவிட்டு விட்டதே என்ற வேதனையில்தான்.

ஈழத் தமிழர்களின் இந்தக் கோபம் இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல என்ற கருத்து பரவிக் கிடக்கிறது. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஈழத் தமிழ் சமுதாயத்தினர் மத்தியில் ஆழ வேரூண்றி விட்ட இந்த எண்ணத்தை துடைக்க வேண்டிய கடமையும்இ பொறுப்பும் இந்தியாவிடம் உள்ளது.

இலங்கை விவகாரத்தில்இ இந்தியா இரட்டை வேடம் போட்டது என்பதில் ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரிஇ உலக நாடுகள் பலவற்றில் பரந்து விரிந்திருக்கும் தமிழ் சமுதாயத்தினர் மத்தியிலும் சரி யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக இவர்கள் வேதனைப்படுகின்றனர். தமிழர்களை அழித்த ராஜபக்சேவுக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியதற்காக கோபத்துடனும் உள்ளனர்.

இலங்கையில்இ கொடூரமான இனப்படுகொலை நடந்ததை இந்தியத் தரப்பிலிருந்து கடுமையாக யாரும் கண்டிக்காததவும்இ அதைத் தடுக்க முயலாததும் உலகத் தமிழ் சமுதாயத்தினரை மிகவும் வேதனைப்படுத்தி விட்டது.

தமிழர்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்கிறோமோ அதற்கெல்லாம் இந்தியாவின் முழு ஆதரவும் இருக்கிறது என்ற எண்ணத்தை ஆணித்தரமாக அவ்வப்போது கோத்தபாய ராஜபக்சேவும்இ சரத் பொன்சேகாவும் நிரூபிக்க முயன்றபோது அதை தடுக்கவோஇ மறுக்கவே இந்தியா முயலவில்லை என்பதும் இந்தியா மீதான உலகத் தமிழர்களின் வருத்தத்திற்கு இன்னொரு காரணம்.

இந்திய அரசும்இ காங்கிரஸும்இ இலங்கை இனப்பிரச்சினையில் நடந்து கொண்ட விதத்தால்தான் இன்று ஈழத் தமிழர்கள்இ சோனியா காந்தி கோபமாக இருக்க முக்கியக் காரணம்.

இந்தக் கோபம்தான் இப்போது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் ரூபத்தில்இ கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் கருத்தாகஇ இணையதளங்களில் வெளியாகும் பல்வேறு கட்டுரைகள்இ செய்திகள்இ ஆய்வு செய்திகள் மூலம் உலா வந்து கொண்டுள்ளன.

குறிப்பாக சோனியா காந்தியை தமிழர் விரோத சக்தியாக சித்தரித்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதேபோலஇ முதல்வர் கருணாநிதியையும் தமிழர் விரோத சக்தியாக மாற்றி வருகின்றனர்.

சோனியா காந்தியும்இ கருணாநிதியும் தமிழர்களை இக்கட்டான நிலையிலிருந்து மீட்காமல்இ அழிய விட்டு விட்டதாக கடும் கோபத்துடன் உள்ளது ஈழத் தமிழ் சமுதாயம்.

அதேபோல விடுதலைப் புலிகளும் கூட லெபனான் மீது இஸ்ரேல் 2006ம் ஆண்டு கடும் தாக்குதல் நடத்தியபோது உலக சமுதாயம் அழுத்தம் கொடுத்து இஸ்ரேலை அடக்கியது போலஇ இப்போதும் உலக சமுதாயம் இலங்கையை கட்டுப்படுத்தி விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அது பொய்த்துப் போய் விட்டது.

பக்கத்தில் இருக்கும் இந்தியாவே அமைதியாக இருந்ததால் உலக சமுதாயமும்இ ஒப்புக்கு சில கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டு அமைதியாகி விட்டது.

அதேசமயம்இ விடுதலைப் புலிகள் இயக்கம்இ அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதாக வெளியான செய்திகளால் பிரபாகரன் மீதும்இ புலிகள் இயக்கம் மீதும் எதிர்மறையான கருத்துக்கள் பரவக் காரணமாகி விட்டது.

தென் ஆப்பிரிக்காவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸைத் தவிர வேறு எந்த உலக அமைப்பும் விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தர முன்வரவில்லை.

இந்தியாஇ இப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான நாடாக மட்டுமல்லாமல்இ தமிழ் விரோத நாடாகவும் உலகத் தமிழர்களால் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இது இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல.

இந்திரா காந்தி மீது இன்னும் ஈழத் தமிழர்கள் நன்றியுடன் இருப்பதற்கு அவர் செயல்பட்டவிதமும்இ அவர் தமிழர்கள் பால் காட்டிய அன்பும்இ பரிவும்இ பச்சாதாபமும்தான் காரணம் என்பதை இந்திய அரசு மறந்து விட்டதாகவே தெரிகிறது.

தமிழர்களின் துயரங்களுக்காகவும்இ அவர்கள் இழந்த உரிமைகளைப் பெறவும் இந்திரா காந்தி துடித்தார். ஆனால் தற்போது உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ அப்படியே இந்திராவுக்கு நேர் மாறாக இருப்பதாக ஈழத் தமிழர்கள் கருதுகிறார்கள்.

தமிழ் மக்களின் துயரத்தை கொஞ்சம் கூட பகிர்ந்து கொள்ளவோஇ பரிவு காட்டவோ சோனியா முன்வரவில்லை என்பது அவர்களின் ஆழமான வருத்தமாக உள்ளது.

இந்த எண்ணத்தைத் துடைத்துஇ தமிழர்கள் மீது பாசத்துடன்தான் உள்ளோம் என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் நிரூபிக்க வேண்டும்.

அதற்குஇ இலங்கையை நிர்ப்பந்தப்படுத்திஇ தமிழர்களுக்கும் சம உரிமைஇ சம அந்தஸ்துஇ கெளரவமானஇ அமைதியான வாழ்க்கையைப் பெற்றுத் தர இந்தியா முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.

அது மட்டும்தான் இந்தியா மீதான அவப் பெயரை துடைக்க ஒரே வழி

பின்னூட்டம்.

நான் எனது பேரனுக்கும் பேரனது பேரனுக்கும் இந்தியாவின் துரோகத்தை கூறியே வளர்ப்பேன்

தயவு செயது மன்னிக்கவும் இச்செய்தி தற்ஸ்தமிழ் வலைப்பதிவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.

நான் எனது பேரனுக்கும் பேரனது பேரனுக்கும் இந்தியாவின் துரோகத்தை கூறியே வளர்ப்பேன்

நானும் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயிற்றுவலியை நம்பினாலும் வடக்கை உள்ளவனை நம்பாதே என்பது தமிழ்நாட்டுப் பழமொழி. இதை அவர்கள் நிருபித்துள்ளனர். இந்தியா ஒரு பெரிய நாடாக இருக்கும் வரை ஈழத்தமிழர் என்றைக்கும் நிம்மதியாக வாழமுடியாது என்பது யதார்த்தம். ஈழம் அமைக்கமுன் நம் செய்யவேண்டிய பெரியதொரு மாற்றம் அப்பிராந்தியத்தில் உள்ளது. அது முக்கியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு தமிழனும் இந்தியா எமது எதிரி நாடு என்பதை மனதில் ஆழப்பதிவு செய்து கொள்ள வேண்டும், எதை மறந்தாலும் எமது பழிவாங்கும் எண்ணத்தை மட்டும் மறந்து விட கூடாது அதைமறந்தால், இந்தியா எமது நேச நாடு ஆகிவிடும், சிங்களத்துக்கு நாம் என்றும் அடிமையாகவே இருக்க வேண்டி வரும்.

நான் எனது பேரனுக்கும் பேரனது பேரனுக்கும் இந்தியாவின் துரோகத்தை கூறியே வளர்ப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் எனது பேரனுக்கும் பேரனது பேரனுக்கும் இந்தியாவின் துரோகத்தை கூறியே வளர்ப்பேன்

எனக்கும் என்ர பரம்பரைக்கு ஏற்கனவே எதிரிதான் இந்தியா..... ஆனா தாயகத் தலைமை, நேசசக்திகள் என்று சொல்லிச் சொல்லி என்ர கோபத்தை வளரவிடாமல் தடுத்து இருந்தவங்கள்.. ஆனால் இப்ப முன்னிலும் பன்மடங்கா எனக்கு கோபத்தைவிடப் பழிவாங்கோணும் என்டு தோன்றுது.

எனது முதல் எதிரி இந்தியா

எனது இரண்டாவது எதிரி இந்தியா

எனது முன்றாவது எதிரி இந்தியா.

இனி வரும் எம் தலைமுறைக்கும் இதைக் கூறுவோம்.

ஜானா

இந்தியா எமக்கு செய்த அனைத்து விதமான அட்டூழியங்களும், அநியாயங்களும் ஒன்று விடாமல் ஆவணப் படுத்தப் படல் வேண்டும். இந்த ஆவணப் படுத்தலில் செய்திகள், புகைப்படங்கள், ஒளிப் படங்கள் அனைத்தும் இணைக்கப் பட்டு எமது எதிர்கால சந்ததிக்கான முழுமையான வரலாற்று ஆவணமாக கையளிக்கப் படல் வேண்டும். அப்போதுதான் இந்தியா எனும் வன்முறை சார்ந்த தேசம், உலகின் எந்தவிதமான மானுட கோட்பாடுகளினையும் பின்பற்றாமல் எம்மக்கள் மீதான அனைத்து விதமான கொடூரங்களையும் அரங்கேற்றியது என்பதை எம் எதிர்கால சந்ததியும், எதிர்கால உலக வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக் கொள்வர்

ஒரு ராஜீவ் எனும் அரக்கனின் உயிரிற்காய், பல்லாயிரக்கணகான எம் மக்களின் சாவின் மூலம் இந்தியாவால் தீர்க்கப் பட்ட பழியை நெஞ்சில் சுமந்து தீயாய் எம் எதிர்கால சந்ததி சுடர் விடல் வேண்டும். அதன் வெப்பம் நிச்சயம் இந்தியாவின் பாசிச முகத்தினை கிழித்தெறிய வேண்டும்.

இந்த ஆவணப்படுத்தலில் இறங்குவதற்கு என்னாலான அனைத்துவித உதவிகளையும் செய்ய காத்திருக்கின்றேன். இந்த முயற்சியில் அனைவரும் இணைவோம். இப்படியான ஒரு ஆவணப் படுத்தலை நிச்சயம் இந்திய அரக்க தேசம் எல்லாவிதமான வழிகளிலும் தடுக்க முனையும் என்பதை மனதில் கொண்டு அதனை முறியடித்து எம் பணியை ஆரம்பிப்போம்

Edited by நிழலி

யோசிச்சுப் பாத்தா.....

அட இழவுவிழப்போற இந்தியா கட்டங்கட்டமா எங்களை அழிச்சு ஆக்கிரமிச்சிருக்கு...

கண்டிப்பா ஆவனப்படுத்தத்தான் வேணும்...

[

நான் எனது பேரனுக்கும் பேரனது பேரனுக்கும் இந்தியாவின் துரோகத்தை கூறியே வளர்ப்பேன் .........................................

Edited by எல்லாளன்2009

நீங்கள் என்ன நினைக்கிரிங்களோ தெரியாது

ஆனால் எனது 6 வயதுக்கு விளக்கம் சொல்லி கொண்ட்டு தான் இருக்கேன்

எப்படியயவது பெரிய நிலையில் இருந்து இந்த உலகம் செய்த மாபெரும் நம்பிக்கைதூரோகத்தை அறிவால் பழி தீர்க்கனும்.

எல்லாரும் பிள்ளைகளை நல்ல ஆளுமை பதவிக்கு கொண்டு ்வாருங்கள்.

எமது பிள்ளைகள் தங்கள் அறிவவல் பழிக்கு பழி( ஜநா) வழியில் தீர்க்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பரம்பரைக்கே தமிழகம் தவிர்ந்;த இந்தியா எதிரி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு தாய்ப்பாலோடு இந்தியாவின் துரோகச்செயலையும், எட்டபர்களையும் செயலையும் சொல்லி ஊட்டுங்கள்.....

Edited by tamilmahan01

இந்தியா எமக்கு செய்த அனைத்து விதமான அட்டூழியங்களும், அநியாயங்களும் ஒன்று விடாமல் ஆவணப் படுத்தப் படல் வேண்டும். இந்த ஆவணப் படுத்தலில் செய்திகள், புகைப்படங்கள், ஒளிப் படங்கள் அனைத்தும் இணைக்கப் பட்டு எமது எதிர்கால சந்ததிக்கான முழுமையான வரலாற்று ஆவணமாக கையளிக்கப் படல் வேண்டும். அப்போதுதான் இந்தியா எனும் வன்முறை சார்ந்த தேசம், உலகின் எந்தவிதமான மானுட கோட்பாடுகளினையும் பின்பற்றாமல் எம்மக்கள் மீதான அனைத்து விதமான கொடூரங்களையும் அரங்கேற்றியது என்பதை எம் எதிர்கால சந்ததியும், எதிர்கால உலக வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக் கொள்வர்

ஒரு ராஜீவ் எனும் அரக்கனின் உயிரிற்காய், பல்லாயிரக்கணகான எம் மக்களின் சாவின் மூலம் இந்தியாவால் தீர்க்கப் பட்ட பழியை நெஞ்சில் சுமந்து தீயாய் எம் எதிர்கால சந்ததி சுடர் விடல் வேண்டும். அதன் வெப்பம் நிச்சயம் இந்தியாவின் பாசிச முகத்தினை கிழித்தெறிய வேண்டும்.

இந்த ஆவணப்படுத்தலில் இறங்குவதற்கு என்னாலான அனைத்துவித உதவிகளையும் செய்ய காத்திருக்கின்றேன். இந்த முயற்சியில் அனைவரும் இணைவோம். இப்படியான ஒரு ஆவணப் படுத்தலை நிச்சயம் இந்திய அரக்க தேசம் எல்லாவிதமான வழிகளிலும் தடுக்க முனையும் என்பதை மனதில் கொண்டு அதனை முறியடித்து எம் பணியை ஆரம்பிப்போம்

:):D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது குழந்தைகளுக்கு இந்தியாவினது முழுமையான துரோகத்தையும், அவர்கள் செய்த அழிப்பு முதல் அனைத்தையும், சொல்லியே வளர்க்க வேண்டும். அத்துடன் நில்லாது 1987 முதல் கொலை, பாலியல் வன்புணர்வு உட்பட அனைத்தையும் பதிவாக்க வேண்டும்.பகிரங்கப்டுத்த வேண்டும். அத்தோடு சிறிலங்காவுக்குச் செய்த அனைத்துப் படைத்துறை உதவிகளும் பட்டியலிடப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலே சொன்னதுதான் மீண்டும் சொல்கிறேன் இந்தியா எப்ப அளியுதோ அப்பதான் எனக்கு தீபாவழி.

நான் எனது பேரனுக்கும் பேரனது பேரனுக்கும் இந்தியாவின் துரோகத்தை கூறியே வளர்ப்பேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.