Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹம் அம்மன் கோவில்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம் நகரத்திலை இருக்கிற அம்மன் கோயிலிலை வாற கிழமை தேராம். சனங்கள் ஊரிலை கோயிலுகள் எல்லாத்தையும் விட்டிட்டு அகதி முகாமிலை சிங்களவனிட்டை கையேந்துதுகள். ஊரிலை உள்ள சாமியள் எல்லாம் என்ன செய்யுது? இஞ்சை ஐயருக்குக் கொண்டாட்டம்.

ஜயரை சொல்லி குற்றமில்லை பின்னாலை திரியிறதுகளை சொல்லவேணும். உண்மையிலை இவங்களை செருப்பாலை அடிக்கவேணும்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் இப்ப தான் வெயில் வந்து கொண்டிருக்காம். இனி பாருங்கோவன் விளையாட்டுகளை.

  • கருத்துக்கள உறவுகள்

கம் நகரத்திலை இருக்கிற அம்மன் கோயிலிலை வாற கிழமை தேராம். சனங்கள் ஊரிலை கோயிலுகள் எல்லாத்தையும் விட்டிட்டு அகதி முகாமிலை சிங்களவனிட்டை கையேந்துதுகள். ஊரிலை உள்ள சாமியள் எல்லாம் என்ன செய்யுது? இஞ்சை ஐயருக்குக் கொண்டாட்டம்.

இப்ப சிலபேர் சன்னதம் கொண்டாடினாலும் ஆச்சரியப்படேலாது. என்றாலும் தேவை கருதி சுட்டவேண்டியுள்ளது. சில நேரம் " நாத்திகன்" என்று பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள். அன்பே சிவம் என்பது உண்மையானால் எமது உறவுகள் துன்பத்தில் துடிக்கையிலே எங்களுக்கு என்ன தேரோட்டம். சிங்களவனை உற்சாகப்படுத்தவும், எமது உறவுகளின் அவலத்தை மறைக்கவுமே இது உதவும். ஐயரை விடுவோம் அவருக்கு இதுதானே சீசன். எது நடந்தால் என்ன? ஆனால் எமது உறவுகள் இது தொடர்பில் முடிவெடுக்க வேண்டாமா? எமது உறவுகள் பராரிகளாகப் பரிதாப நிலையோடு எப்போது சாவுவரும் அல்லது எவருக்குச் சாவுவரும் என்று துன்பச் சிறையிலே துடிக்கும் வேளையிலே எப்படி எம்மால் இவ்வாறு விழாவெடுக்க முடிகிறது.

ஐயராவது சிந்தித்துச் சாதாரண பூசைகளோடு நிறைவு செய்வதே இக் காலத்திற்குப் பொருத்தமானது. இது விழாக்காலமா? விழிநீர் சொரிய திசையற்றிருக்கும் எம்மவரின் விழிநீர் துடைக்கும் காலமெனக் கொள்வதே பொருத்தமாகும்.

இந்த ஐயரிடம் ஒரு வினாவொன்று, தங்களோடு தொடர்பிலுள்ள அதிகாரிகள் நகரமன்றினர் போன்றவர்களோடு,எமது நிலைதொடர்பாக என்றாவது எந்த நபரோடாவது உரையாடியுள்ளாரா?

இதிலும் ஒரு தொகைப்பணம் இந்தியா ஊடாக எம்மையழிக்க மறைமுகமாக உதவியுள்ளது.

எம் தாய் மண்ணிலே குழந்தைகளில் இருந்து முதியவர் வரையிலான அவல ஓலம் இன்னும்

கேட்டுக்கொண்டிருக்கிறது...........

ஏன் எங்கள் மனங்களையும் அந்த ஓலம் இரவு பகலாக வதைத்துக் கொண்டிருக்கிறது

இப்படி நிலமை இருக்க இங்கே கோயில் திருவிழா..... இல்லை இல்லை திறந்த வெளி அரங்கில் மலிவு விற்பனை விழா நடக்க போகிறது......... அதற்கு கடவுளைச் சாட்டி (தமிழன் மற்ரவனைச் சாட்டி

வாழுகிறவன் தானே) திருவிழா என்ற பெயரில் (ஒவ்வொரு வருடமும் அப்படித்தான்) சனம் 1000 யிர கணக்கில போகப் போகுது...... எங்கட சனத்தை திருத்த இயலாது இனி இந்த இளையோர்

தங்கட வாழ்க்கை முறையை பின் பற்றி ஏதாவது விமோர்சனம் வந்தாலே ஒளிய மற்ரப்படி

இது தொடர் கதைதான்...............

இவ்வளவு நாளும் தாய் மண்ணில உள்ள எங்கட சனத்தை கொல்ல நாங்கள் மில்லியன் கணக்கில காசு குடுத்தக் கொண்டிருந்தனாங்கள்..........

இனி எங்கட தாய் நிலத்தில சிங்களவனை குடியமர்த்த காசு குடுக்க ஆரம்பிச்சிட்டம்.......

இது தான் உண்மை..............

இந்த நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் ஊடகங்களும் துணை போகின்றன........

கவர்ச்சி கரமான வளம்பரங்கள்............மொத்தத்தில் எல்லா தமிழனும் பணத்தை

அடிப்படையாக கொண்டே தாய் மொழி கலை கலாச்சார விடயங்களில்

மும்மரமாக செயல்படுகிறான்..............

குறிப்பு:

தாய் மண்ணில் இந்த வருட முற் பகுதியில் போர் நடந்து கொண்டிருந்த போது

தொலைக் காட்சிகளில் கம் கோயில் காணி காணாதாம் எண்டு ஆக்களை காணி

வாங்கி தரும்படியான விளம்பரம் ஒண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.........

சிங்களவன் எங்கட புhர்வீக நிலங்கள் எல்லாத்தையும் தன் வசம் கொண்டு வந்து சிங்களவனை குடியேத்துறான் இஞ்ச என்னண்டால் இவை வந்தேறு குடியளாய் இருந்து கொண்டு

நிலம் வாங்கி கோயில் கட்டினமாம்............

இவை எல்லாரையும் எப்ப அடிச்சு துரத்துவினமோ தெரியாது அப்ப எங்க போகப் போகினம் எண்டு தான் பாப்பம்..................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐயரிடம் ஒரு வினாவொன்று, தங்களோடு தொடர்பிலுள்ள அதிகாரிகள் நகரமன்றினர் போன்றவர்களோடு,எமது நிலைதொடர்பாக என்றாவது எந்த நபரோடாவது உரையாடியுள்ளாரா?

யாராவது கேட்டு சொல்லுங்களேன்

யாராவது கேட்டு சொல்லுங்களேன்

அவருக்கு கடவுளுடன் மட்டும் தான் கதைக்க தெரியும்(ஒன்லி வித் கொட்)

கம் நகரத்திலை இருக்கிற அம்மன் கோயிலிலை வாற கிழமை தேராம். சனங்கள் ஊரிலை கோயிலுகள் எல்லாத்தையும் விட்டிட்டு அகதி முகாமிலை சிங்களவனிட்டை கையேந்துதுகள். ஊரிலை உள்ள சாமியள் எல்லாம் என்ன செய்யுது? இஞ்சை ஐயருக்குக் கொண்டாட்டம்.

இல்லை தெரியாமல் கேட்கின்றேன். அங்கு சனங்கள் அப்படி கஸ்டபட்டால் இங்கு நீங்கள் அவர்களுக்காக என்ன செய்கின்றீர்கள். இடம் ஒன்று இலவசமாய் கிடைத்தால் ஆளுக்காள் வாயில வவற எல்லாத்தையும் வந்து சொல்லுவீங்கள். அவனுக்கு பிடிகுது கொண்டாடுகின்றான் உங்களுக்கு பிடிக்காவிட்டால் மூடிக்கொண்டு வேற வேலையை பார்க்கின்றது தானே. ஏதோ அங்கு வன்னியில சனங்கள் பட்டினி கிடந்த போது இங்கு நீங்கள் 3 வேளையும் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு ரீவீல , இண்டர் நெட்டுல ஸ்கோரையும் பார்த்துகொண்டு நல்ல ஏப்பம் விட்டு நித்திரை கொண்டீர்கள் தானே ?? பின் இப்போ என்ன கதைக்க கதை இல்லை என்றால் நல்ல ஒரு நடிப்பு விடுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பே சிவம் என்பது உண்மையானால் எமது உறவுகள் துன்பத்தில் துடிக்கையிலே எங்களுக்கு என்ன தேரோட்டம்.

முடிவெடுத்தது ஐயர்

ஆனால் தேரோட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய மக்கள்சக்கி நாங்கள்.

அனைவரும் புறக்கணித்தால் அல்லது திருவிழாவில் சேரும் பல்லாயிரம் ஒயிரோப் பணத்தையும்

நம்மவர் புனர்வாழ்விற்கு கொடுக்குமாறு அனைவருமாகத் தூண்டுதல் செய்தால்........

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர் புனர்வாழ்விற்கு கொடுக்குமாறு அனைவருமாகத் தூண்டுதல் செய்தால்........

செய்தால் நல்லம் செய்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வர்ரீங்க என்பது எனக்கு சரியா விளங்கேல்லை.

பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு உதவுவதையும் எங்கள் கலை கலாச்சாரம் என்பனவற்றை புலம்பெயர்ந்த மண்ணில் தொடர்ந்து முன்னெடுப்பதையும் ஒரே வேளையில் செய்யமுடியும்.

அப்படி இல்லை வன்னிமக்களுக்காக பல கருமங்களை புலம்பெயர்ந்த மக்கள் நிறுத்தியே ஆகவேண்டும் என்றால்,

நல்ல உணவு உண்பது, மூன்றுவேளை சாப்பாடு, புதிய உடை வாங்கி உடுப்பது, பிறந்தநாள் விழா கொண்டாடுவது, உறவினர் நண்பர்களுடன் கூடுவது,

திருவிழா கொண்டாட்டங்கள் என்று இப்படியே அடிக்கிக்கொண்டே போகலாம். இதில் நாங்கள் எதை செய்யக்கூடாது என்று பட்டியல் ஒன்று இருந்தால் தாருங்கள்.

புலம்பொயர்ந்த மண்ணில் பிணங்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் எமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும்.

சமுக ஈடுபாடுகளைத் தடைசெய்வது முடியாத காரியம். மக்கள் விரும்பினால் தாமே உணர்ந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வார்கள்.

கட்டாயப்படுத்த வேண்டிய தேவையில்லை. கம் அம்மன் கோயிலுக்குச் செல்பவர்கள் வன்னி மக்களின் நிலைபற்றி கரிசனையில்லாதவர்கள் என்று முடிவெடுத்துவிடவேண்டாம்.

கடந்த கால நிகழ்வுகளின் பயனாக ஏற்பட்ட மனச்சஞ்சலத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் முதலில் விடுபடவேண்டும்.

நீங்கள் செய்யவேண்டியது மிகச் சுலபமான விடயம். அதாவது இம்முறை யாரும் போகாதீங்க.அப்புறம் பாருங்க.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வர்ரீங்க என்பது எனக்கு சரியா விளங்கேல்லை.

பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு உதவுவதையும் எங்கள் கலை கலாச்சாரம் என்பனவற்றை புலம்பெயர்ந்த மண்ணில் தொடர்ந்து முன்னெடுப்பதையும் ஒரே வேளையில் செய்யமுடியும்.

அப்படி இல்லை வன்னிமக்களுக்காக பல கருமங்களை புலம்பெயர்ந்த மக்கள் நிறுத்தியே ஆகவேண்டும் என்றால்,

நல்ல உணவு உண்பது, மூன்றுவேளை சாப்பாடு, புதிய உடை வாங்கி உடுப்பது, பிறந்தநாள் விழா கொண்டாடுவது, உறவினர் நண்பர்களுடன் கூடுவது,

திருவிழா கொண்டாட்டங்கள் என்று இப்படியே அடிக்கிக்கொண்டே போகலாம். இதில் நாங்கள் எதை செய்யக்கூடாது என்று பட்டியல் ஒன்று இருந்தால் தாருங்கள்.

புலம்பொயர்ந்த மண்ணில் பிணங்களாய் நாம் வாழ்ந்து கொண்டிருந்தால் எமது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும்.

சமுக ஈடுபாடுகளைத் தடைசெய்வது முடியாத காரியம். மக்கள் விரும்பினால் தாமே உணர்ந்து செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வார்கள்.

கட்டாயப்படுத்த வேண்டிய தேவையில்லை. கம் அம்மன் கோயிலுக்குச் செல்பவர்கள் வன்னி மக்களின் நிலைபற்றி கரிசனையில்லாதவர்கள் என்று முடிவெடுத்துவிடவேண்டாம்.

கடந்த கால நிகழ்வுகளின் பயனாக ஏற்பட்ட மனச்சஞ்சலத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் முதலில் விடுபடவேண்டும்.

மன அமைதியை அடைய அல்லது பெற………… !

0) ஒரு எண்ணெய் விளக்கினை ஏற்றி வைத்துவிட்டு அமைதியாகத் தியானம் செய்யலாம்.

0) ஒரு மண்டபத்திலோ அல்லது ஒருவரது வீட்டிலோ பத்துக் குடும்பங்கள் சேர்ந்து ஒன்றுகூடித் தியானம் செய்யலாம்.

0) அதாவது தமிழ்க் கலைகலாச்சாரம் கம் கோயிலுக்குப் போனால்தான் பாதுகாக்கப்படுமா? கிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் இதிலை எங்க தமிழ் இருக்குது.

0) அத்தியாவசியமற்ற கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டுமென்று தமிழினம் எதிர்பார்க்கிறதேயன்றி உணவு உண்ண வேண்டாம் என்று சொல்லவில்லை.

0) நானறியப் பல பிள்ளைகள் தமது பிறந்தநாளைக் கொண்டாடாது தவிர்த்துள்ளனர்.

0) சமூக ஈடுபாட்டிற்கும் தேரோட்டத்திற்கும் என்ன உடன்பாடு உள்ளது.

0) புலம்பெயர் நாடுகளில் வீதிகள்தோறும் தமிழின அழிவை பரப்புரை செய்தவாறு எப்படித் தமிழினம் இதையும் செய்கிறது என்று ஏனைய சமூகத்தவர் சிரிக்கமாட்டார்களா என்றும் நாம் சிந்திக்க வேண்டாமா?

இது கூடச் சமூக உடன்பாடின்மையால் வந்த விமர்சனமே. ஏன் ஆலய பரி(றி)பாலனத்தினர் இதனைச் சிந்திகக் கூடாதா?

நீங்கள் செய்யவேண்டியது மிகச் சுலபமான விடயம். அதாவது இம்முறை யாரும் போகாதீங்க.அப்புறம் பாருங்க.
:lol: எங்கட சனத்துக்கா சொல்லுறீங்கள்?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சம்பவம் நியாபகத்திட்கு வருது இப்ப குட்டி..

பல வாரங்களுக்கு முன்னம், லண்டன் பாரளுமன்ற சதுக்கத்தில் பேரணியின் போது - ஒரு மூன்று நான்கு நடுத்தர வயது அம்மணிகள்.. தாங்கள் இந்த நாட்டிற்கு வந்து பல காலம் என்று காட்டி கொள்ளும் முயற்சியில் ஆங்கிலம் கலந்தடிச்சு தமிழையும் கொன்று கொண்டு நிண்டார்கள்...

"எல்லாரும் கத்துங்கோ - முன்னுக்கு வாங்கோ" என்று பாவம் ஒரு சிலரின் ஊக்குவித்தலையும் கணக்கெடுக்காது, இஞ்சால auntyமார் அலட்டல்... எனக்கு சாடையா எறில் ஏறினாலும் - இவயலை பார்த்தால் கண நேரம் இதில நின்று மினக்கடுற ஆக்கள் மாதிரி தெரியேல்லை..எனெவே போய் துலையட்டும் கொஞ்ச நேரத்தில் என்று நானும் பெருமூச்சு விட்டு விட்டு கத்தி கொண்டு இருந்தேன், போராட்டகாரர்களோடு சேர்ந்து..

எங்கள் கவனத்தை தாங்கள் தங்கட அலட்டளால் குழப்புகிறோமே என்ற கவலை இல்லாமல், தங்கட ஊர் துலாவாரம் எல்லாம் முடிய - ஒராள் மற்ற மூன்று பேருக்கும் வழி சொல்லிட்டு வெளிக்கிடுது - "okda, we must get together soon and do something together - என்ன செய்வம், நங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு தேர் இழுப்பம், its quite nice, no?!" என்று.

அந்த நாட்களில் வன்னியில் நடந்த கொடூரம் சொல்லி மாளாது....அப்படியான ஒரு இக்கட்டான காலகட்டத்தில், அண்டைக்கு விடிய பார்த்த காநொளிகளின் அவலங்கள் மனதில் ஓடி கொண்டு இருக்கும் போது - இந்த விசருகளின் கதையை கேட்கேக்க பதாகையால ஒன்று மண்டையில போடோனும் போல தான் இருந்தது!

சனம்...... ச்ச! :lol:

ஒரு சம்பவம் நியாபகத்திட்கு வருது இப்ப குட்டி..

...ஒராள் மற்ற மூன்று பேருக்கும் வழி சொல்லிட்டு வெளிக்கிடுது - "okda, we must get together soon and do something together - என்ன செய்வம், நங்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு தேர் இழுப்பம், its quite nice, no?!" என்று. ...

சனம்...... ச்ச! :lol:

get together-க்கு தேர் இழுக்கிறதா? :D வேண்டுதலுக்கு தேர் இழுத்த காலம் போய் இப்ப எல்லாமே ஒரு fashion ஆகிப் போய்விட்டது... என்ன கொடுமை சரவணன் சார் இது??

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கேள்விப்பட்டனங்கோ!

அதாவது கனடாவிலை விரம்ரன்[Brampton} என்ற இடத்திலையும் நேற்று தேராம், பக்தகோடிகளும் அந்தமாதிரி அலைமோதிச்சினமாம், எனக்கு ஒன்னுமே புரியல்லையப்பா அதாவது இது சரியா அல்லது தப்பா என்று.

தமிழன் பித்துப் பிடித்து என்ன செய்யவது எண்டு தெரியாமல் எதோ

கால் போன போக்கில போய்க்கொண்டிருக்கிறான்..............

இவர்கள் திருந்தா nஐன்மங்கள்.............

ஊரில பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட நிலையில

எங்கட கலாச்சாரத்தில துடக்கு அது இது எண்டெல்லாம் இருக்கு

(ஆனால் மனச்சாட்சி இல்லை) அதோடையும் கோயிலுக்கு போறிணமாமோ.....

அல்லது போறவையின்ர ஆக்கள் ஒருவரும் இறக்;கேலையோ எண்டதும்

ஒரு கேள்வியாய் இருக்குது........????

கடவுளை மனிதன் ஏமாற்றி வாழ்வதால்

கடவுளும் ஏனோ தானோ எண்ட நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்

பாவம் கடவுள்............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்கோவிலில் பூசைசெய்பவர் பூசாரியுமில்லை, தேர் இழுப்பவர்கள் பக்தருமில்லை. எல்லாமே மாதிரி தான். தேர் திருவிழாவில் நாலுகாசு பார்க்கிறது ஐயர்மட்டுமில்லை சண் ரீவியும்தான். தமிழீழத்தில் இனச்சுத்திகரிப்பு நடக்கிறது. ஒரு மணித்துளிகூட அது பற்றியசெய்திகளை மறந்தும் இணைத்துக்கொள்ளாத ரீவியை கம் கோவிலில் வைத்து எம்கோடாரிக்காம்புகளே கூவிக்கூவி விற்பனைசெய்யும் அவலத்தையும் அங்கே காணலாம்.

அரசி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கோடரிக் கம்புகளை ஓடஓடவிரட்டியடிக்கமாட்டோமா? கொதிப்பாக இருக்கிறது. எமது இனத்தினது அழிவில் இந்தக் குழுமத்தினது கைவரிசையை உணராத ஜடங்களாக ஏனிந்தத் தமிழினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுப்புப் பாக்கவும் ,விடுப்புப் புடுங்கவும் போறதுகள் ஒருபக்கம்

புதுச் சீலை மலிவா வாங்கப் போறதுகள்..அடுத்த பக்கம் இருக்கிற நகையெல்லாம் அடுக்கிகாட்டுறவை மற்றபக்கம்

காணாதவையைக் காண பஸ்சில மலிவாகப் போறவை இன்னொரு பக்கம்

தள்ளுமுள்ளுப்பட்டு வீட்டி லை கிடைக்காதது போற இடத்தில கிடைக்குமெண்டு போற காஞ்ச மாடுகள் ஒரு பக்கம்.

பெட்டைகள் பாக்க -பிடிக்க அலையுற பொடியள் ---பெட்டையள் எல்லாப்பக்கமும்

இப்பிடி தலை இருக்கிற முண்டங்கள்

,திருநீறு பூசினால் வடிவில்லை , எண்டு நினைக்கிற வெக்கப்படுகிற பிண்டங்கள் கனபேர்

அம்மாளையும் தேரையும் சாட்டி அங்கை போய் நிற்குங்கள்.

25 நாட்களுக்கு ஆலயத்தில் பெறப்படும் நிதி தாயகத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் சிறார்களுக்காக் கொடுக்கப்படும் என அறிவிப்பு 31-05௨009 அன்று இலண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவ்வருடம் நடைபெற இருக்கும் மகோற்சவத்தின் போது இருபத்தைந்து நாட்களும் ஆலயத்தினால் பெறப்படும் அனைத்து வருமானமும் தாயகத்தில் இடம்பெயர்ந்து, பெற்றோரை இழந்து தவிக்கும் சிறார்களின் பராமரிப்பிற்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என முன் வைக்கப்பட்ட வேண்டுகோள் பொதுச்சபையினால் ஏகமனதாக ஏற்கப்பட்டு மகோற்சவ காலத்தில் 25 நாட்களும் கிடைக்கும் மொத்த நிதியும் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.

மேலும் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறார்களைப் பராமரிக்க உதவி வரும் 'காக்கம் கரங்கள்' திட்டம், தாயகத்தில் வசதி குறைந்த மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு கணினிக் கல்வியை வழங்கும் நோக்குடன் நடாத்தப்பட்டு வரும் கணினி நிலையங்கள், தொழில்சார் தையல் நிலையங்கள் போன்ற பல சமூகப் பணிகளுக்கு எமது ஆலயமானது தொடர்ந்து நிதிப் பங்களிப்பு வழங்கி வருவதோடு இது வரை தாயகப் பணிகளுக்கென £1,202,153.00 நிதியுதவி வழங்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு

வேறு இனைய வலையில் இருந்து எடுத்து தேவை கருதி இணைக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வருடம் நடைபெற இருக்கும் மகோற்சவத்தின் போது இருபத்தைந்து நாட்களும் ஆலயத்தினால் பெறப்படும் அனைத்து வருமானமும் தாயகத்தில் இடம்பெயர்ந்து, பெற்றோரை இழந்து தவிக்கும் சிறார்களின் பராமரிப்பிற்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என முன் வைக்கப்பட்ட வேண்டுகோள் பொதுச்சபையினால் ஏகமனதாக ஏற்கப்பட்டு மகோற்சவ காலத்தில் 25 நாட்களும் கிடைக்கும் மொத்த நிதியும் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.

வரவேற்கப்படவேண்டியது

மற்றவனை குறை சொல்லி என்ன செய்கிறது. நானே இண்டைக்கு கனடா ரிச்மண்ட் பிள்ளையார் கோயிலுக்குபோய் தேர் இழுத்துப்போட்டுத்தான் வந்து நிக்கிறன். மோர்ப்பந்தல் என்ன, ஐஸ்கிரீம் என்ன, கச்சான் என்ன, அன்னதானம் என்ன.. எல்லாம் ஆகா ஓகோ எண்டு இருந்திச்சிது. ஒரே ஒரு குறை என்ன எண்டால் அந்த பீபீ எண்டு ஊதுற அம்மம்மா குழலுகள் ஒண்டும் விக்க இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைவ சமயமுறைப்படி ஒரு வீட்டிலை இறப்பு நடந்தால்

அந்திரட்டிவரை ஒருமாதத்திற்கு துக்கம் காப்பார்கள்.

ஆட்டுத்திவசம்வரை ஒரு வருடத்திற்கு கோயில் குளம், கல்யாணம்காட்சியள் போன்ற நிகழ்வுகளிற்குப் போக மாட்டினம்.

எமது இனத்திற்கே இழவு நடந்திருக்கு ஆனால் நாங்கள்?

ஆனால் நாங்கள் ஜாலிக்குத் தேரிளுப்பம்.

இன்னும் என்வெல்லாம் செய்வமோ?

அந்த ஆண்டனுக்குத்தான் தெரியும்.

Edited by naanal

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.