Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!

Featured Replies

அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம்.

சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம்.

வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது.

கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம்.

எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்திருக்கின்றோம்.

எமது மனங்களில் என்ன இருந்தாலும் - நாம் நம்ப மறுத்தாலும் - அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது.

leader_20090610001.jpg

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை பற்றிய தூய்மையான கனவைச் சுமந்து - 37 ஆண்டுகளாக அந்தக் கனவை நனவாக்குவதற்கு மட்டுமே போராடிய அந்த உன்னதமான மனிதர் - எமது இனத்தின் பெருந் தலைவர் - அந்தப் போராட்டக் களத்திலேயே வீழ்ந்து போனார்.

'தமிழீழத் தனியரசு' ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்பினார். அதனை அமைப்பதற்குச் சிறந்த வழி என தான் நம்பிய ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியிலே தன் பின்னால் அணிதிரண்ட ஆயிரமாயிரம் போராளிகளுக்கு அவர் தலைமையேற்றார். அந்த வழியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்து - எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாமல் போராடினார். அந்த வழியிலேயே தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒவ்வொரு போராளியையும் அவர் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே அந்தப் போராளிகளை வழிநடத்திய தனது தளபதிகளையும் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே தானும் போராடி எமது கண்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து அவர் போய்விட்டார்.

தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழீழத்தின் தலைமைப் போர்த் தளகர்த்தருமான மேன்மை மிகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் - தமிழர் சரித்திரத்தின் மகுடமாக, எமது நெஞ்சத்தில் நிலைத்த நினைவாக, எம்மை வழிநடத்திச் செல்லும் ஆன்ம சக்தியாக - இனி எங்கள் மனங்களிலும், அறிவிலும் வாழ்வார்.

அந்தப் படங்களைப் பார்த்தேன்: தமிழ்த் தேசிய இனத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாறு அங்கே சரிந்து கிடந்தது.

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும்.

விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும்.

விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும்.

ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம் தளராமல் - விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.

leader_20090610004.jpg

கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை.

தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?...

அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - வெளிநாட்டுப் பயணங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்திவிட்டார் என்று நினைத்திருப்பாரா?...

அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், இராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை இராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த இராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?...

அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?..

அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?..

எனக்கு எதுவும் தெரியாது.

ஆனால் - கடைசிக் காலத்தில் - குழப்பங்கள் ஏதுமற்று அந்த மனிதர் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகின்றது.

தப்பி ஓடி வேறு ஊர்களுக்குச் சென்று விடாமல் அந்த மண்ணிலேயே அவர் வாழ்ந்திருக்கின்றார்.

வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார்.

உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார்.

அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட 'தமிழீழம்' என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார்.

மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் - தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி - தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார்.

ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் அணிவித்து களத்திற்கு அனுப்பிய சயனைட் நச்சுக்குப்பியை தன் கழுத்திலும் அவர் அணிந்திருக்கின்றார்.

எத்தனையோ கரும்புலிகளின் உடல்களில் அணிந்து அனுப்பி வைத்த வெடிகுண்டு அங்கியை - துப்பாக்கி குண்டு பட்டு தற்செயலாக வெடித்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பொட்டம்மான் வற்புறுத்திக் கழற்றும் வரையிலும் - தன் உடலில் அவர் அணிந்திருந்திருக்கின்றார்.

எல்லாவற்றுக்கும் மேலாக - தானே துப்பாக்கியை ஏந்திப் போரிட்டு, இறுதியில் தன்னைத் தானே சுட்டு - களத்தில் அவர் மடிந்திருக்கின்றார்.

மில்லர் முதல், திலீபன் முதல் - தான் வழியனுப்பி வைத்த ஒவ்வொரு கரும்புலி வீரரிடமும் - "நீங்கள் முன்னாலே செல்லுங்கள் நான் பின்னாலே வருவேன்" என்று எவ்வளவு தெளிவுடன் சொன்னாரோ - அதே தெளிவுடனேயே அவர்கள் பின்னாலேயே அவரும் சென்றிருக்கின்றார்.

தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் படி அடுத்தவர்களிடம் கேட்காத மகோன்னதமான தலைமைத்துவப் பண்பின் இலக்கணமாக அவர் வாழ்ந்திருக்கின்றார்... வீழ்ந்திருக்கின்றார்.

leader_20090610002.jpg

முப்பது வருட காலமாகப் போராடி - சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்த்த தமிழ் சாம்ராச்சியம் - அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்த நொருங்கி மண்ணோடு மண்ணாகி விட்டது. ஆனால் -

இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. ஏனெனில் - மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம்ராச்சியங்கள் எழுவதும் வீழ்வதுமே வரலாறு.

பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது - ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம் தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது.

'தமிழீழம்' என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறிவிற்குள்ளும் அவர் ஆழப் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றார்.

விடுதலை பெற்ற மனிதர்களாக - மதிப்புடனும் பெருமையுடனும் - இந்த உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வெறியையும், வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்.

தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் போரிக்கையைப் பலப்படுத்தி -

எங்கள் இனத்தின் சின்னமாக, எங்களது அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும் சோகத்தினதும் மகிழ்ச்சியினதும் வெளிப்பாடாக - தனது சாவுக்குப் பின்னாலும் நின்று நிலைத்து வாழும் வகையான ஒரு கொடியைத் தமிழுக்கு அவர் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.

leader_20090610005.jpg

இன்று இந்த உலகமும், சிங்களவர்களும், இந்தியாவும் அச்சப்படும் விடயம் -

பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டியெழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிவிட்டுச் சென்றிருக்கும் உறுதியும் துணிவும் வீரமும் தான்.

பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் - வீரம், துணிவு, உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து, திரைப்படங்களில் பார்த்ததோடு சரி.

ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

சரியோ தவறோ - அந்த மனிதர் மட்டுமே தொடர்ந்து நடந்தார்; அந்த மனிதர் மட்டுமே - எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார்.

அந்த மனிதர் மட்டுமே - எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார்.

தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம்.

சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஒரு புனிதமான கனவோடு வாழ்ந்தார். நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி எனத் தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார்.

அந்தப் பயணத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்தவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள் தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும் போது - அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மை தான்.

அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களை தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பது தான் அவர் வரித்துக்கொண்ட இலட்சியம். அந்த இலட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார்.

அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, அந்த இலட்சியத்திற்காகவே வீழ்ந்தும் போனார் அந்தப் பெருமனிதன்.

leader_20090610003.jpg

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா

அவரது இழப்பைத் தாங்கும் மனத் திடம் எமக்கு இல்லாமலிருக்கலாம்; அல்லது, அவரது வீரச்சாவை ஏற்க முடியாமல் வேறு ஏதும் காரணங்கள் எம்மைத் தடுக்கலாம்; ஆனால், அத்தகைய எமது மனப் பலவீனங்களோ, அல்லது வேறு காரணங்களோ - 37 ஆண்டுகளாக எமக்காகவே போராடி வீழ்ந்த அந்த மாதலைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய இறுதி வணக்க மரியாதைகளைச் செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவையாக இருப்பது நியாயப்படுத்த முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது நாம் அவருக்கு இழைக்கும் துரோகமும் கூட.

அவர் "இருக்கிறார்" என்றும் "இல்லை" என்றும் ஒரு மர்மத்தை நீடித்துச் சென்று, அவர் இருப்பதைப் போலவே ஒரு மாயையை வளர்த்துச் சென்று, திரும்பவும் எழுந்தருளி அவர் வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டிச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம்.

அவரது இல்லாமையை ஏற்றுக்கொண்டு, அவருக்குரிய இறுதி வணக்கங்களைச் செலுத்திவிட்டு, விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான தெளிவைப் பெற்றுக்கொண்டு, அவர் விட்டுச் சென்றிருக்கும் தலைமைத்துவ இடைவெளியைப் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்துகொண்டு - வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நாம் எல்லோருமாகச் சேர்ந்து நகர்த்துவதே தேவையானதும் நேர்மையானதுமாகும்... ஒரு வகையில் அதுவே நாம் அவருக்குக்கு வழங்கும் மரியாதையும் கூட.

தேசத் தந்தை எஸ். ஜே.வி செல்வநாயகத்தி்ன் மறைவுடன் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 1' முடிவுக்கு வந்தது.

தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீரச்சாவுடன் ஆயுதம் தாங்கி முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 2' முடிவுக்கு வந்துள்ளது.

ஆனால் - தமிழர் போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த எமது ஆட்சியும், கடந்த அறுபது ஆண்டு காலமாக நாம் இழந்து வரும் எம் அடிப்படை அரசியல் உரிமைகளும் இன்னும் மீளவும் வென்று எடுக்கப்பட்டுவிடவில்லை.

மிகக் கொடூரமான இன அழிப்புப் போருக்குள் சிக்கி - உருக்குலைந்து - முட்கம்பி வேலிகளுக்குள் முடங்கிச் சிறையிடப்பட்டிருக்கும் எமது மக்களின் கெளரவமான வாழ்வு இன்னும் மீளவும் பெற்று எடுக்கப்பட்டுவிடவில்லை.

முன்னாலே சென்றுவிட்ட அந்தத் தலைவன் வழியில் பின்னாலே செல்வதே இப்போது எம் முன்னால் உள்ள தலையாய கடமை.

பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலில் - புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் - இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும் அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் - திறந்த மனதுடன் - 'தமிழர்கள்' என்ற ஒரே அடையாளத்தின் கீழ் மட்டும் நாம் அணிதிரள்வோம்.

அவர் காட்டிய உறுதியுடன்... அவர் காட்டிய விடா முயற்சியுடன்... அவர் காட்டிய ஒழுக்கத்துடன்... அவர் காட்டிய இன பக்தியுடன்... - 30 ஆயிரம் தமிழ் போர் வீரர்கள் அணிவகுத்த - அவர் ஏற்றி வைத்துவிட்டுப் போயிருக்கும் எங்கள் தேசத்தின் தேசியக் கொடியின் கீழ் நாமும் அணிதிரள்வோம்.

அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து புதிய வேகத்துடன், முன்னெடுப்போம்... 'தமிழீழப் போர் - 3'

தி.வழுதி

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம்.

கற்பனை உலகில் இருக்கும் எம்மவர்களில் சிலர் புதினம் இணையத்தளத்துக்கு சேறு பூசினாலும் பூசுவார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்....

நம் நம்பிக்கை அழியாது.... புதினம் சொன்னால் என்ன.... ஏன் தமிழ் நெற்றே சொன்னால் என்ன தலைவர் இருக்கிறார் என்று நம்புபவர்கள் நம்பிக்கொண்டு தான் இருப்பார்கள்!

உங்கள் அரசியலை சற்று ஒதுக்கி எம் உணர்வுக்கு மதிப்பு கொடுங்கள்...!

தலைவர் வீரச்சாவு என்பதை உறுதிப்படுத்திய செய்திகளை கேட்டு மனம் குளிர துரோகிகள் மட்டுமல்ல நம்மவர்களும் காத்திருக்கின்றனர்.... போல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் எப்போதும் நம் மனதில் உயிருடன் தான் இருப்பார். அவருடைய இலட்ச்யத்தை நோக்கி பயணிப்பதே நம் கடமை. தயவு செய்து வாத பிரதிவாதங்களை தவிர்த்து நமது விடுதலை நோக்கி அண்ணன் வழியில் செல்வோம்.

யார் இந்த வழுதி? இவர் எப்படி உறுதிபடுத்தி இப்படிகட்டுரை எழுதுகிறார்? இனி எந்த தலைமையை நம்பி இயங்க சொல்கிறார்?

நன்றாகவே வழுதி சில விசங்களை விதைத்திருக்கின்றார்

குறிப்பாக அன்ரன் பாலசிங்கம் தமிழ்ச்செல்வன்

தன் மனதின் விசத்தை மற்றவர்களிற்கு விதைப்பதில் எம்மவர்கள் கைதேர்ந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும்

இவர்கள் எல்லாம் ஒரு சாமி தங்களை வழிநடத்துகிறார் என்று பரம்பரைபரபரையாக நம்பினம் தானே '.அதுபோல் நாமும் நம் தலைவன் முருகனுக்கே நிகரானவன் என்று நம்புவோம்

உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார்.

:unsure::(

இப்படி மடையன் மாதிரி சாவதற்க்கு தலைவருக்கு என்ன பைத்தியமா.... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம் என்று எழுதமுடியாது என்னால்....

மன்னிப்பீராக என் தலைவா

உனக்கு ஒன்று நடந்திருந்தால்...........

என்னால் முடியாது

முடியவும் கூடாது

எனக்கு நீ வேண்டும்

எனக்கு நீ வேண்டும்

நீ இல்லையேல் நான்.................?????

இப்படி மடையன் மாதிரி சாவதற்க்கு தலைவருக்கு என்ன பைத்தியமா.... :unsure:

50 ஆயிரம் இராணுவத்தினரும்

15ஆயிரம் கடற்படையினரும்

அதையும் தாண்டி

பல லட்சம் இந்திய நாய்களும்

அதையும் தாண்டி பல கோடி உலக வல்லூறுகளும் காத்திருக்க........

வெளியே ஓடி பிடிபட்டு ...சாவதற்க்கு தலைவருக்கு என்ன பைத்தியமா....

தென்னிலங்கைக்கு விஷ வாயு அடித்திருக்கலாம்.

5 வருஷத்துக்கு முதல் தற்கொலை செய்திருக்கலாம்.

ஒவ்வோரு சிங்கள் பாடசாலைக்கும் 20 PKகாறரை அனுப்பி கொத்துகறி போட்டிருக்கலாம்.

உண்மையில் பிரபாகரன் இறந்திருந்தால்....... அவர் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வழுதியைப்பற்றியோ

அவரது எழுத்துப்பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது

அதைப்பற்றி அக்கறையும் கிடையாது

ஆனால்

எனக்கு இருக்கும் சில கேள்விகளுக்கு.........

எனக்கு இருக்கும் சில ஏக்கங்களுக்கு..........

எனது அடுத்த நடவடிக்கைகளுக்கு...

எனது சில தேடுதல்களுக்கு விடையிருப்பதுபோல் உள்ளது

துரோகிகளாகும் தமிழினம்!

ஒரு தலைவன் நம்மை விட்டு போய்விட்டான் என்று இனி தலைவன் வந்து சொன்னாலும் நம்ப மறுக்கும் தமிழினம் மாபெரும் துரோகம் இழைத்த ஒரு இனமாகவே இனி வாழும்! தலைவனின் மறைவை மறுக்கும் ஒவ்வருவரும் இனி துரோகிகள்! நமது போராட்டத்தை நசுக்க துடிக்கும் துரோகிகள்! யார் இந்த வழுதி என கேள்வி கேட்கும் அற்பர்கள் இதே வழுதி போராட்டம் பற்றி முன்பு எழுதியபோது நம்பியவர்கள் இன்று நம்ப மறுப்பது தான் துரோகம்! முதலில் கே.பி துரோகி, பின்னர் தயா மோகன் துரோகி அதன் பின்னர் மட்டு முத்த தளபதி ராம் துரோகி!

போதும் நிறுத்துங்கள்! இனி நம் தலைவனின் இழப்பை மறுக்கும் அனைவரும் துரோகிகள்.

தலைவனை வழியனுப்ப தமிழீழ மக்களே தயாராகுங்கள்! குறைந்த பட்சம் அந்த தலைவனின் 45வது நாள் நினைவிலாவது நம்மை அஞ்சலி செலுத்த விடுங்கள்! அழுது குளறுவோம் நம் ஆத்ம திருப்பதிக்காகவும் நம் தலைவனினதும் அவன் குடும்பம் மற்றும் அவனுடன் மரணித்த அனைத்து போராளிகள் மக்களுக்காகவும்! தயவு செய்து உங்களை மன்றாடி கேட்கிறோம் நம்மை அழ விடுங்கள்! ஆறாத்துயரில் உள்ள மக்களின் வேதனையை போக்க தயவு செய்து அழவிடுங்கள்!

தமிழினமே இதை நீ செய்ய மறுத்தால் இனி காலம் முழுதும் நீ ஒரு துரோக இனம்!

நன்றி!

வணக்கம் செலுத்தி அவரின் போராட்டத்தை கொச்சைகப்படுத்த வேண்டாம்

இருக்கின்றார். இருப்பார். இறுதிவரை இருப்பார்.

எம் போராட்டத்தை குறைகக்க தடுக்க நாங்களே போடும் அணைதான் இந்த இறப்பு பற்றி வதந்தி

பல மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய நாம் இன்று ஒரு தலைவனுக்கு வீரவணக்கம் செய்ய மறுப்பது மாபெரும் துரோகம்! இன்று புரியாவிட்டாலும் என்றோ ஒரு நாள் புரியம்போது நீங்கள் வடிக்கும் கண்ணீர்கள் நீலிக்கண்ணீர்களே! இது போராட்டத்திற்கு செய்யும் துரோகம்! நமது தலைவனின் மறைவை குளப்பி சர்வதேச தமிழின எழுச்சியை அடக்க சிறீ லங்கா மற்றும் இந்தியா போட்ட மாய வலைக்குள் நின்று தலைவன் இருக்கிறான் மயங்காதே என்று சினிமா பாட்டு பாடுவதே போராட்டத்தை கொச்சைப்படுத்துவது.

பேர் அலை போல் எழவேண்டிய தமிழினம் முடங்கி கிடப்பதே இன்றைய வரலாற்று தவறு!

தொடருங்கள் உங்கள் துரோகங்களை! மறுங்கள் உண்மையின் யதார்தத்தை! பெங்கியெழ வேண்டிய போராட்த்தை அணைபோட்டு தடுத்தவர்கள் தலைவனின் மறைவை மறுத்தவர்கள்! அவனுக்கு தலை சாய்க்க மறுத்தவர்கள்! காலம் பதில் சொல்கையில் காறி உமுழுவார்கள் அதற்கும் தயாராகுங்கள்!

துரோகிகளாகும் தமிழினம்! நன்றி!

என் பார்வையில் எல்லா தமிழரும் துரோகிகள்..... :icon_idea:

90 மில்லியன் உலக்க தமிழரும் ஒன்றுகூடி தற்கொலை செய்து கொண்டாலும்..

இலங்கையில் இருக்கும் மிச்ச சொச்சம் தமிழர்கள் தற்கொலைகூட செய்யமுடியாமல் அடிமையாகதான் வாழ்வர்கள்...

தலைவரும் புலிகளும்தான் ஒரே வழி... இல்லாதபட்சத்தில் அவனவன் அவனுண்ட வேலையை பாத்துக்கொண்டு போகவேண்டியதுதான்.

இப்ப இல்லை என்று சொன்னால் என்ன நடக்கும்

எல்லாம் மாறித்தான் நடக்கும்

அங்கொன்று இங்கொன்றாக நடக்கின்ற போராட்டங்களும் முடக்கப்பட்டு விடும்

துரோகிகளாகும் தமிழினம்!

....

போதும் நிறுத்துங்கள்! இனி நம் தலைவனின் இழப்பை மறுக்கும் அனைவரும் துரோகிகள்.

தலைவனை வழியனுப்ப தமிழீழ மக்களே தயாராகுங்கள்! குறைந்த பட்சம் அந்த தலைவனின் 45வது நாள் நினைவிலாவது நம்மை அஞ்சலி செலுத்த விடுங்கள்! அழுது குளறுவோம் நம் ஆத்ம திருப்பதிக்காகவும் நம் தலைவனினதும் அவன் குடும்பம் மற்றும் அவனுடன் மரணித்த அனைத்து போராளிகள் மக்களுக்காகவும்! தயவு செய்து உங்களை மன்றாடி கேட்கிறோம் நம்மை அழ விடுங்கள்! ஆறாத்துயரில் உள்ள மக்களின் வேதனையை போக்க தயவு செய்து அழவிடுங்கள்!

தமிழினமே இதை நீ செய்ய மறுத்தால் இனி காலம் முழுதும் நீ ஒரு துரோக இனம்!

நன்றி!

பாண்டு, அழுது குளறுகிறது ஒவ்வொருத்தருடைய சுபாவம்... அது தான் உங்கள் சுபாவம் எண்டால் நீங்கள் தனியாகச் செய்யுங்கள்... அதற்காக தமிழ் இனத்தை துரோக இனம் என்று சொல்வது முற்றிலும் பிழை!!!!! icon_nono.gif

தலைவனை வழியனுப்ப நீங்கள் தயாராகிறீங்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது அதற்காக தலைவரின் நம்பிக்கையில் வாழும் தமிழ் இனத்தை தயாராகச் சொல்லாதீர்கள். icon_spat.gificon_ranting.gif

தலைவர் காலம் வரும்போது வருவார்...அதுவரை புலத்தினில் முன்னெடுக்கும் போராட்டங்களை இப்படியான கருத்துகள் சொல்லி முடக்கி விடாமல் இருபது நன்று!

இல்லை, ஆம் சொல்ல இது ஆம் இல்லை போட்டி அல்ல! அடக்கப்படுபவன் அடக்கப்படும் வரை போராட்டம் தொடரும்! இது பிரபாகரன் என்ற தனி மனிதனுக்காக தெரடங்கிய போராடம் அல்ல அவர் இறந்ததும் இது நின்றுபோவதற்கு! அனால் தனது வாழ் நாளை விடுதலைக்காக சமர்ப்பித்து தன் குடும்பத்தையும் இந்த போராட்டத்திற்கு சமர்ப்பித்த ஒரு தானை தலைவனுக்கு செலுத்தும் அஞ்சலிகள் எமது போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் உரங்கள்! போராட மறுக்கும் ஒவ்வரு கணமும் நாம் போராட்டத்தை பிற்போடும் நாட்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலில் - புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் - இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும் அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் - திறந்த மனதுடன் - 'தமிழர்கள்' என்ற ஒரே அடையாளத்தின் கீழ் மட்டும் நாம் அணிதிரள்வோம்.

இந்த கட்டுரையில் இது என்ன புதுசா இருக்கு யாராவது விளக்கம் கொடுங்கப்பா :icon_idea:

நிறையபேரிற்கு தலைவர் இருந்தது பிரச்சினை போல இருக்கிறது. அதுதூன் அவரை அவசரப்பட்டு அனுப்ப நினைக்கின்றார்கள். இப்பதானே உண்மை முகங்கள் தெரிகின்றது

இல்லை, ஆம் சொல்ல இது ஆம் இல்லை போட்டி அல்ல! ... போராட மறுக்கும் ஒவ்வரு கணமும் நாம் போராட்டத்தை பிற்போடும் நாட்கள்!

இது போட்டி இல்லை! நீங்கள் மக்களைக் குழப்பி, கட்டாயப் படுத்தி உயிரோடு இருக்கும் தலைவருக்கு அஞ்சலி செலுத்த ஒன்றரைக் காலில் நிற்பது புரிகிறது...

தலைவர் இருக்கிறார் என்பதை மறுத்து, போராட மறுக்கும் ஒவ்வரு கணமும் நீங்கள் போராட்டத்தை பிற்போடும் நாட்கள் என்பதை கருத்தில் கொள்ளவும்!!

  • கருத்துக்கள உறவுகள்

பலர் சொல்லிவிட்டார்கள்...அவர் இறந்துவிட்டார் என்று! ஆனாலும் மனம் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று விடாப்பிடியாக நிற்கிறது. நான் விரும்பினாலும்கூட அது விடுவதாயில்லை. எத்தனையோ முறை முயன்று பார்த்துவிட்டேன், வேண்டுமென்றெ எனக்கு நானே "தலைவர் இனி இல்லை" என்று சொல்லியும்பார்த்துவிட்டேன். ஆனால் எதையுமே மனம் நம்பத் தயாராக இல்லை. திரும்பத் திரும்ப அவர் இன்னும் இருக்கிறார் என்று சுற்றிச் சுற்றி வருகிறது. பின்னர் ஒருவாறு என் முன்னால் அமர்ந்துகொண்டே, "நீ யோசிக்க வேண்டாம், தலைவர் எங்களை விட்டுப் போகவில்லை" என்று எனக்கே அறிவுறையும் ஆறுதலும் கூறுகிறது .

இனி எவராலும் கூட, ஏன், என்னாலும் கூட எனது மனதைத்திருத்த முடியாது! அந்த எண்ணம் எனக்கு மூளை பிழைக்கும் வரை என்னுடனேயே இருக்கும். இது சரி, பிழை, யதார்த்தம், உணர்வு....என்ற எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டுத் தொடர்ந்து எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

ஒன்று மட்டும் விளங்குகிறது ! மனிதர்களுக்குத்தான் சாவு ! அது கடவுளுக்கு வருவதில்லை !இது மனதுக்குத் தெரிகிறது...பாலாய்ப்போன மூளைக்குத் தெரியவில்லையே !!!!!

நிறையபேரிற்கு தலைவர் இருந்தது பிரச்சினை போல இருக்கிறது. அதுதூன் அவரை அவசரப்பட்டு அனுப்ப நினைக்கின்றார்கள். இப்பதானே உண்மை முகங்கள் தெரிகின்றது

சங்கரி, டக்ஸ் போன்றோர் நிறையபேருக்கு சோடாவில என்னத்தையோ கலந்து குடுத்திட்டங்கள் போல....

அதைக் குடிச்சிட்டு இங்கவந்து வாந்தி எடுக்குதுகள் சனம்... :icon_idea:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருக்கே வழிகாட்டிறாங்கப்பா...??!

வழுதி என்ற எல்லாம் அறிந்த ஞானி அவர்களே..

உங்களின் வாய்ப்பாட்டை "முன்னால் செல்லுங்கள் நான் பின்னால் வருகிறேன்" என்று தலைவர் சொன்னதாகச் சொல்லிக் கொள்கிறீர்கள்.

தலைவரின் வழியில் தலைவரில் பாதையில் வரிந்து நின்ற போராளிகளுக்குத்தான் தெரியும் தலைவர் எத்தனையோ சமர்க்களங்களை தானே முன்னின்று நடத்த துடித்ததும் போராளிகளின் தளபதிகளின் பலமான வேண்டுகோள்களைக் கூட தலைவர் ஏற்க மறுத்து கள மாடிய சரித்திரமும் உண்டு.

ஒரு விடயத்தை தெரிந்து கொண்டு எழுத வேண்டும். நேராக எழுதுவதாக எதிர்மறைக் கருத்துக்களை ஊட்டும் புதினத்தின் செயலை கண்டிக்கின்றேன்.

தலைவரின் கொள்கைகளை அவரின் தலைமைதான் காத்தது என்றால் அதை எவரும்.. மறுதலிக்க முடியாது.

நான் நினைக்கவில்லை.. தலைவரை பிரதியீடு செய்யக் கூடிய எவரும் எனி வருவார்கள் என்று. ஆனால் தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்த ஆட்கள் வரலாம். ஆனால் அவர்கள் தலைவர் போல் இருக்கமாட்டார்கள் என்பது மட்டும் திண்ணம்..! :icon_idea:

என்னைப் பொறுத்தவரை சிறீலங்காவில் எனி ஜனநாயமும் இல்லை சுதந்திரமும் இல்லை தமிழர்களுக்கு..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.