Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சதியைப் புரிந்து கொள்வோம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச சதியை புரிந்துகொள்வோம்

- சுவிசிலிருந்து துருவாசன் -

தோல்வியில் இருந்து மீண்டெழுதல், இன்றைய வரலாற்றுக் கடமை இது

'இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி." இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து.

இன்றைய நிகழ்வுகளே நாளைய வரலாறாகிறது. அதேவேளை, நடந்து போன துயரமான நிகழ்வுகள் வெறும் வரலாறாக மட்டும் இருந்துவிட முடியாது. அவை, எதிர்காலத்துக்கான வழிகாட்டியாகவும் கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் செம்மையான, திருத்தமான செயற்பாடுகளை நோக்கி முன்செல்ல முடியும்.

வன்னியில் கடந்த மே 19 ஆம் திகதி முடிவுக்கு வந்த போர் தமிழினத்தின் வரலாற்றில் மிக மோசமான வடுவாக மாறிவிட்டது. இதன் தாக்கத்தில் இருந்து - அழிவுகளில் இருந்து ஈழத் தமிழினத்தால் இலகுவில் மீட்சி பெற்றுவிட முடியாது. ஆனால், நாம் வரலாற்றில் பின்தள்ளப்பட்டு விட்டோம் என்றோ - எம்மால் நிமிர்ந்து கொள்ள முடியாதென்றோ - முடங்கிப் போய் விடவும் முடியாது.

அப்படிச் செய்வது தமிழீழத் தாயகத்துக்காகப் போராடி - உயிர்கொடுத்த ஆயிரக்கணக்கான போராளிகள், பொதுமக்களின் ஆன்மாவை அவமதிப்பதாகி விடும். தமிழினத்தை வேரோடு சாய்த்து, அதன் வல்லமையை அழித்துவிடக் கங்கணம் கட்டிய சிங்களத் தேசியத்தின் நோக்கத்தை நாமே நிறைவேற்றியதாகி விடும்.

எனவே, நாம் மடிந்து போனவர்கள் அல்ல - முடிந்து போனவர்களும் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். நீறாகிப் போனாலும் நூறாக எழுவோம் என்பதை வரலாற்று ரீதியாக உணர்த்த வேண்டிய பொறுப்பு ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் உள்ளது.

மூன்று தசாப்தங்களாகக் கட்டி வளர்க்கப்பட்ட ஆயுதப் போராட்டம் மூன்று வருடப் படை நடவடிக்கைகளின் மூலம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இது ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டக் களத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. எமது வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளி விட்டிருக்கிறது.

ஒரு சிறிய கைத்துப்பாக்கியுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் ஆட்டிலறிகள், விமானங்கள், சண்டைப் படகுகள், போர்கப்பல்கள் என்று வளர்த்தெடுக்கப்பட்ட போதும் - கடைசியில் ஒரு தொடர் போருக்குள் சிக்கி அனைத்தையுமே இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இப்போது 1970-களில் இருந்த நிலைக்கு தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தள்ளப்பட்டிருக்கிறது. இது வரலாற்று ரீதியாக நிச்சயம் ஆய்வு செய்யப்பட வேண்டியதொரு விடயம்.

போர் என்பது வெற்றியையும் தோல்வியையும் கொடுக்கக் கூடியதொரு களம் தான். ஆனால் இந்த மூன்றாண்டுப் போர் என்பது தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியான பின்னடைவை - அழிவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடி விட்டு மிகப் பெரிய தோல்விக்குள் தமிழினம் தள்ளப்பட்டு நிற்கிறது.

இந்தக் கட்டத்தில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாக குழப்பம் - வெறுமை அனைவரையும் சூழ்ந்து நிற்கிறது.

விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு செயற்பட்ட தமிழினம் பொறுப்பற்ற சிலரின் சிறுபிள்ளைத்தனத்தைப் பார்த்து இன்று நிர்க்கதி நிலைக்குள் நிற்பது போன்ற உணர்வில் இருக்கிறது.

ஆயுதப் போராட்டமாகத் தொடங்கிய புலிகளின் போராட்டம் - பின்னர் அரசியல் போராட்டமாகி, இராஜதந்திரப் போர்களையும் நடத்தும் அளவுக்கு பரிணாம ரீதியாக வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால், இலங்கை அரசாங்கத்தின் தந்திரோபாயங்கள் அனைத்துமே - புலிகளின் அத்தனை இராணுவ, அரசியல், இராஜதந்திரப் போர்களையும் முறியடித்து வெற்றி பெற்றிருக்கிறது. அவர்களின் இந்த வெற்றியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. அதேவேளை தமிழினத்துக்கு ஏற்பட்ட - ஏற்படுத்தப்பட்ட இந்தத் தோல்வியையும் நாம் இலகுவில் மறந்து விட முடியாது.

இது தமிழினத்துக்கு எதிராக உலகமே செய்த சதி என்று தான் சொல்ல வேண்டும்.

திம்புப் பேச்சுகள் முறிந்த பின்னர தேசியத் தலைவர் பிரபாகரன் - ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். பேச்சுக்களில் இருந்து வெளியேறியதால் இந்தியாவின் ஆதரவைப் புலிகள் இழக்கும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியிருந்த நேரம் அது.

அப்போது தேசியத் தலைவர் பிரபாகரன் வெளியிட்ட அந்த அறிக்கையில் - 'நாம் எந்த வெளியுலக சக்தியையும் நம்பிப் போராட்டம் நடத்தவில்லை. எமது மக்களை நம்பியே போராட்டம் நடத்துகிறோம். எனவே யாருடையை ஆதரவை இழந்தாலும் எமது இலட்சியத்தில் வெற்றி பெறுவோம்" என்று கூறியிருந்தார்.

அதேபோன்று புலிகள் இயக்கம் கடைசி வரையில் மக்களின் ஆதரவில் - அவர்களின் நிழலில் தான் இருந்தது. அந்த மக்களை அழித்து - அவர்களுக்கு ஆதரவாக இருந்து நிழல் கொடுத்த மரங்களைத் தறித்தே - அரசாங்கம் இந்தப் போரில் வெற்றி பெற்றது.

அத்தோடு, வெளியுலகத்தை நம்பிப் போராட்டம் நடத்தவில்லை என்று கூறியிருந்த தலைவர் பிரபாகரன், தான் முன்னெடுக்கும் போராட்டம் மக்களுக்கானது என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் கடைசிக் காலகட்டத்தில் சர்வதேச உலக ஒழுங்குடன் ஒத்துப் போகும் நிலைக்கு வந்தார்.

தான் நேசித்த மக்களின் விடிவுக்காக சர்வதேச ஆதரவுவை உருவாக்கும் நோக்கில் - பொறுமையைக் கடைப்பிடிக்க முற்பட்டு, அவர்களுக்காகப் போரைப் பிரகடனம் செய்யாமல் தவிர்த்து, அவர்கள் உதவிக்கு வருவார்கள் என்று நம்பியே மோசம் போய்விட்ட வரலாற்று நிகழ்வும் அவரின் உயிரையே பறிக்கும் அளவிற்கு துரோகத்தனமாக நடந்தேறியிருக்கிறது.

உலக ஒழுங்கு என்பது வலிமை பெற்ற சக்திகளுக்கு ஒன்று என்ற வகையிலும் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இன்னொன்று என்ற வகையிலுமே அமைந்திருக்கிறது. புலிகள் பலமாக இருந்தவரை சர்வதேசம் அவர்களை எப்படியாவது அனுசரித்துப் போகவே விரும்பியது.

ஆனால், அவர்கள் பலமிழந்து வருகிறார்கள் என்று எப்போது கருதத் தொடங்கியதோ - அப்போதே புலிகள் என்றால் யார் என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.

தமிழ் மக்களுக்கு இப்போது ஒரு உண்மை தெளிவாகப் புரிந்திருக்கிறது.

ஐ.நா.வின் வாசலில் - அமெரிக்க வீதிகளில், பிரித்தானியா நாடாளுமன்றத்தில், ஜரோப்பிய பாராளுமன்ற சதுக்கங்களில் நடத்திய அகிம்சைப் போராட்டங்களை விடவும் வலிமையானது இராஜதந்திர உறவுமுறையும், தொடர்பாடல்களும் அதனுடன் பின்னிப்பிணைந்த ஆயுதப் போராட்டமுமே என்ற உண்மை இப்போது உணர வைக்கப்பட்டிருக்கிறது.

போரை நிறுத்துமாறு உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் எழுப்பிய குரல்களால் - மகிந்தவின் பீரங்கிகளின் சத்தத்துக்கு முன்னால் தாக்குப் பி;டிக்க முடியாது போய்விட்டது.

2000 இன் தொடக்கத்தில் புலிகள் படைவலுச் சமநிலை பெற்றிருந்தபோது - அவர்களுடன் சட்ட ரீதியாகவும் சட்டத்துக்கு முரணாகவும், தொடர்புகளைப் பேணிய உலகம், அந்தப் படைவலுச் சமநிலை மாற்றம் பெற்ற போது புலிகளைக் கண்டு கொள்ளவேயில்லை.

புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க சர்வதேசம் பெரும் முயற்சிகளைச் செய்ததாக இலங்கை அரசாங்கம் கூறிக் கொண்டிருப்பினும் - புலிகளின் அழிவை இரசித்த உலக நாடுகள் தான் அதிகம்.

இந்தியா, சீனா, ஈரான், பாகிஸ்தான், ரஸ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே, ஜரோப்பிய ஒன்றியம் போன்றன மறைமுகமான உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தன.

ஒரு காலத்தில் சமாதான வேடம் போட்ட ஜப்பான் கடைசி நேரத்தில் போருக்காக நிதியைக் கொடுத்து இலங்கை அரசாங்கத்தை ஊக்குவித்தது.

உண்மையில் இலங்கையில் கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற போரின் போது - உலக ஒழுங்கின் சகல ஓட்டத்துக்கு இசைவாகவும் முரணாகவும் பல நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. ஈழத் தமிழினத்தின் நண்பர்கள் எதிரிகளாகவும், எதிரிகள் நண்பர்களாகவும் முகம் காட்டியதொரு வித்தியாசமான களம் இது.

- ஏன் இந்த நிலை ஏற்பட்டது?

- எங்கே தவறுகள் நேரிட்டன?

- அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டதில் தவறுகள் நேர்ந்ததா?

- இராணுவ முனைப்புகளில் தவறிழைத்தோமா?

- இராஜதந்திர காய்நகர்த்தல்களில் பலவீனமாக இருந்தோமா?

- யாரை நம்பி நாம் மோசம் போனோம்?

- யாரையாவது நம்ப வைத்து கழுத்தறுத்தோமா?

- இல்லை, எமது தேசிய இனத்தின் வளர்ச்சியை - எழுச்சியை அடக்க நினைத்த சர்வதேச சக்தி அல்லது சக்திகள் எவை?

- அதற்கான காரணங்கள் என்ன?

- புவிசார் உலக ஒழுங்கிற்கு முரணாக எமது போராட்டம் நடத்தப்பட்டதா?

இப்படியே பல கேள்விகளின் ஊடாக எமது வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டிய கட்டத்துக்கு வந்து நிற்கிறோம்.

மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டம் மகிந்தவின் படைகள் நடத்திய மூன்று வருடப் போருக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் தகர்ந்து போனதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை.

இந்த வரலாற்றுத் தோல்வி என்பது தமிழினத்துக்கு நிரந்தரமான தோல்வியாக அமைந்து விடக் கூடாதென்று கருதும் எந்தவொரு தரப்புமே - இத்தகைய ஆய்வு அல்லது விசாரணையை நிச்சயம் விரும்பும். விடுதலைப் புலிகள் கூட இப்போது நிறையவே மாற்றங்களை விரும்புகின்றனர்.

எனவே இத்தகைய பகிரங்க விசாரணைக்கு - ஆய்வுக்கு அவர்கள் விரும்பம் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

தாயகத்தில் நடந்தேறிய அவலங்களையோ - மண்ணுக்காக உயிர் கொடுத்த உத்தமர்களையோ கேவலப்படுத்தாமல், கொச்சைப்படுத்தாமல் - அதேவேளை ஒரு பக்க சார்பற்ற ஆய்வு விசாரணை சர்வதேச அளவில் நடத்தப்பட வேண்டிய தருணம் வந்திருக்கிறது. இதில் மாற்றுக்கருத்துடையவர்களின் ஒத்துழைப்பும் உதவிகளும் கூட அவசியமாகின்றது.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் இத்தகைய பாரிய பின்னடைவைச் சந்தித்தற்கான காரணங்கள் ஆராயப்பட்டு, அவை கண்டறியப்பட வேண்டும். அப்போது தான் எமது வரலாற்றுத் தோல்வியில் இருந்து எம்மால் மீட்சிபெற முடியும். தோல்வியில் இருந்து பாடம் கற்கின்ற மனிதனே வரலாற்றைப் படைப்பான்.

அதுபோன்றே தமிழினத்துக்கு ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு - அவற்றைத் திருத்திக்கொண்டு, நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் வந்திருக்கிறது. தோல்வியை நினைத்து மனந்தளர்ந்து, சோர்ந்து போய்க் கிடப்பதால் எந்தப் பயனும் கிட்டப் போவதில்லை. அது எம்மை இன்னும் இன்னும் பின்நோக்கிக் கொண்டு செல்லவே வழி வகுக்கும்.

போரில் பெற்ற வெற்றியை வைத்துக்கொண்டு தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை - அதன் அரசியல் பரிமாணங்களின் சுவடுகளை அழிக்கின்ற முயற்சிகளில் சிங்கள தேசம் இறங்கி விட்டது. ஆனால், நாம் சரியான வழியில் செயற்படவோ - சிந்திக்கவோ தொடங்கவில்லை. இதற்கு ஒரு உடனடித் தேவை இருக்கிறது.

மூன்று வருடப் போர், அதற்கு முந்திய போர்நிறுத்த காலகட்டம் ஆகியவற்றுக்குள் நடந்தேறிய சம்பவங்களில் எவையெவை தமிழ் மக்களுக்கு சாதகமாக அமைந்திருந்தன? எவையெவை பாதகமான விளைவைக் கொடுத்தன? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அரசியல் ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ, இராஜதந்திர ரீதியாகவோ நாம் தவறிழைத்த பக்கங்கள் எவை? திருத்திக்கொள்ள வேண்டிய தவறுகள் எவை? என்று இனங்காண வேண்டும். அவற்றின் படிப்பினைகள் ஊடாக - சரியாக பாதையைத் தெரிவு செய்ய வேண்டிய நேரம் வந்திருக்கிறது. இந்தத் தவறுகள் தனியே மற்றொரு ஆயுதப் போராட்த்துக்கான தூண்டுதலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவதற்கு என்றாலும் சரி, இராஜதந்திர ரீதியில் சர்வதேச அளவில் தமிழ் மக்களின் பிரச்சினையை வெளிப்படுத்துவதற்கு என்றாலும் சரி - எமக்கென்றொரு கொள்கை - அணுகுமுறை வகுக்கப்பட வேண்டும்.

உலக ஒழுங்கோடு எப்போதும் ஒத்துப்போவது சரியான அணுகுமுறையாக இருக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். வளைய வேண்டிய இடத்தில் வளையாமல் நிற்பது எமக்கே சேதங்களை ஏற்படுத்தும். ஆனால், வளைந்து கொடுக்காமல் செல்ல வேண்டிய இடத்தில் நிமிர்ந்த நடையில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை.

எனவே, நிரந்தரமான கொள்கை அல்லது அணுகுமுறை வகுத்தல் என்பது எமது உரிமைப் போராட்டத்துக்கு உகந்ததாக அமையுமா அல்லது நெகிழ்வுத்தன்மையுள்ள போக்கு அதிக பயனைக் கொடுக்குமா என்று பார்க்க வேண்டும். இராணுவ ரீதியாகவும் நாம் தவறுகள் செய்திருக்கலாம். அதுவும் விரிவாக ஆராயப்பட வேண்டும்.

சர்வதேச அளவில் போரியல் நிபுணர்களை, அரசியல் ஆய்வாளர்களை, புலனாய்வு அனுபவஸ்தர்களை, இராஜதந்திர விற்பன்னர்களை அழைத்து இந்த ஆய்வை - விசாரணையை நடத்தலாம்.

சர்வதேச அளவில் எத்தனையோ எமது கல்விமான்கள் தேசத்துக்காக கைகொடுக்கத் தயாராக இருகிறார்கள். அவர்களின் ஆதரவுடன் இதைச் செய்வது இன்று எம்முன் விரிந்துள்ள அவசியமான கடமை.

37 வருடப் போராட்டம் பற்றிய ஒரு முறையான ஆய்வை - விசாரணையை நடத்தி அதில்; இனங்காணப்படும் தவறுகளைச் சரி செய்து கொண்டு எழுவதே முறையானது. எம்மைத் தூக்கி விட உலகில் இருந்து எந்தவொரு கையும் வரப் போவதில்லை என்று உணர்ந்திருக்கிறோம். அனுபவ ரீதியாக நாம் படித்துக் கொண்ட கசப்பான பாடம் இது.

எனினும், அவர்களின் ஆதரவை எப்படிப் பெறுவது? அவர்களை எமது பரப்புக்குள் எப்படிக் கொண்டு வருவது என்பது பற்றிய ஒரு திறந்த கொள்கை உருவாக்கப்பட்டாலே - அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக சிங்கள தேசத்துக்கு அமையும்.

போர் வெற்றியைக்கொண்டு தமிழினத்தை நிரந்தர அடிமைகளாக்கும் முயற்சியில் இறங்கி விட்ட சிங்கள தேசத்துக்கு எமது இத்தகைய முயற்சிகள் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும். இன்னும் அதிக உரிமைகளைக் கொடுத்து தமிழரின் போராட்டத்தை சரிக்கட்டும் முயற்சிகளில் இறங்க வைக்கும்.

இராணுவ வெற்றிகள் நிரந்தரமானதல்ல என்ற உண்மை எமக்குப் புரிந்திருக்கிறது.

இது சிங்கள தேசத்துக்கும் புரியும் காலம் விரைவில் உருவாகும். இனிமேல் இராணுவ வெற்றிகளின் மூலம் எமது உரிமைப் போராட்டத்தை வலுப்படுத்த முடியாது போனாலும் அரசியல், இராஜதந்திர அணுகுமுறைகளினூடாக சிங்கள தேசத்தின் இந்த இராணுவ வெற்றியை உடைக்க முடியும்.

இதைச் செய்வதற்கு எமது தோல்விகளின் காரணங்கள் ஆராய்ந்து அவற்றைக் களையும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தக் கட்டத்தில் எமது தோல்விக்கான காரணங்களை ஆராய்வது தேசத்துரோகம் என்றோ, இராணுவ இரகசியம் என்றோ, புலனாய்வுச் சதி என்றோ பிழையான கற்பிதங்களுக்குள்ளே சிக்கிக் கொண்டால் - எம்மை நாம் திருத்திக்கொள்ள முடியாது. எமது பாதையை செப்பனிட முடியாது போய்விடும். தவறுகள் திருத்தப்பட்டு சரியான பாதையில் பயணிப்பதற்கு சரியான வழிகாட்டி அவசியம்.

~வரலாறு தான் எமது வழிகாட்டி| என்று எமது தேசியத் தலைவரே கூறியிருக்கிறார். அந்த வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளத் தவறினால் அது எமது இனத்தை நிரந்தர அடிமைத்தனத்துக்குள் கொண்டு செல்லவே வழிகோலும்.

ஒன்று மட்டும் உண்மை ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு.

நன்றி: ~நிலவரம்|

http://www.tamilnaatham.com/articles/2009/...an_20090612.htm

Edited by thivas

கொஞ்சம் விளக்கமா, ஒரிரு வரிகளில் சொல்வது நல்லது என்பது என்னுடைய அபிப்பிராயம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D

கட்டுரையை சுருக்கிறது இருக்கட்டும்....

தலைப்பில் உள்ளது என்ன கோரிக்கை?

"புரிந்து கொள்வோம்?" அல்லது - "புரிந்து கொல்வோம்!?" - அப்படி என்றால் யாரை எப்ப எங்க??

ஏன் என்று அதை மட்டும் பிறகு ஆறுதலாய் சொல்லுங்கோ.... :wub:

Edited by Ilayapillai

  • கருத்துக்கள உறவுகள்

2 வரிகளில் சொல்ல வேண்டியதை இவ்வளவுக்கு இழுத்து...................................................

பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு தோற்கும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.........இது சிங்களத்திற்கும் பொருந்தும். சிங்களத்தின் இராணுவ வெற்றியே தமிழரின் அரசியல் வெற்றிக்கான காரணியாக மாறப் போகிறது.தமிழரின் ஆயுதப் போராட்டம் தமிழரின் பிரச்சனையை உலகிற்குப் புரிய வைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் அரசியல் போராட்டம் வெற்றியை அறுவடை செய்யும்

.) ஒஸ்லோ- 2002 கூட்டறிக்கைக்கு அமைய உள்ளக சுயநிர்ணய அதிகாரங்களைக் கொண்ட ஒரு (இடைக்கால) அரசியல் தீர்வு பற்றி புலிகள் தீவிரமாக பரிசீலனை செய்வது இன்றைய சர்வதேச சூழ்நிலையை லாவகமாக கையால வாய்ப்புள்ளதாக இருக்கும்.

2.) சிங்கள அரசினால் கூடிய பட்சம் தரக்கூடிய அரசியல் தீர்வு என்ன என்பதை சிங்கள அரசு உலகுக்கு முன் வைக்கவேண்டிய ஒரு அரசியல் நெருக்கடியை தமிழர் தரப்பால் முழுமையாக இன்னும் கொடுக்கப்படவில்லை. அதாவது 'இறுதி அரசியல் தீர்வு பற்றி பேசுவோம்' என்பதை சொல்லி சிங்கள தரப்பு உலகுக்குச் பூச்சாட்டி காட்டுவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய அவசியம் மட்டும் அல்ல அவசரமும் கூட உள்ளது என்பது எம்மில் பலரால் முழுமையாக உள்வாக்கப்பட்டதாக தெரியவில்லை.

3.) 'உமது கனவுகள் எதற்கு எமக்கு? ' எனும் உம்முடைய குதர்க்கத்துக்கு உமது பாணியில் பதில் எழுதவிரும்பவில்லை. அது எனது தனிப்பட்ட அவதானம். அதைவிட வேறு விளக்கங்கள் தருவது தற்போது தேவை அற்றது.

4.) தமிழ் மக்களின் பிரதிகள் யார் என்ற உமது கேள்வி, இன்றைய தமிழர் அரசியல் சார்ந்த நடைமுறை வெளிப்படையாக கொண்டிருக்கும் அம்சங்களை எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கணக்கில் எடுத்துக்கொண்டால் மட்டுமே விடை காணக்கூடியதொன்று. நாம் புலிகளின் தலைமையில் அசைக்க முடியாத நம்பிக்கை வைக்கும் எமது நியாயம் எப்படி எமக்கு சரி என்று படுகிறதோ அதேபோல் அதனை ஏற்றுக்கொள்ளாதவருக்கும் அவரது நியாயம் அவருக்கு சரி எனப்படுவதை அங்கீகரிப்பதுதான் சமூக பன்மைத்துவம்(Socio-diversity). இது பற்றி பலருக்கு விளக்கமில்லாததால் பன்மைத்துவம் தமிழர் அரசியல் அகராதியில் தீண்டத்தகாத சொல்லொன்றின் பொருள்பட கையாளப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோற்றம் தமிழர் அரசியல் அரங்கில் பன்மைத்துவ கோட்பாடு பற்றி உலக நாடுகளின் கேள்விகளுக்கு முன் விடை தயாரித்து வைத்திருந்த புலிகளின் அரசியல் சாணக்கியம். அது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டிய தேவையை, காலம் எமக்கு கட்டளையிடக் காத்திராது நாம் கருமம் ஆற்ற முன்வரவெண்டும். தமிழர் தேசிய கூட்டமைப்பு மற்றைய எல்லா தமிழ் அமைப்புகளுடன் ஒரு அரசியல் வேலைத்திட்டத்துக்கு முன்நகர்வதன் மூலம் எமது தேசிய விடுதலைக்கு சுருக்குக் கயிறு எறியத்திரியும் பிராந்திய வல்லரசான இந்திய- தமிழ் தேசிய முறுகல் நிலைக்கு ஒரு முடிவு கட்டலாம். இது உலக வல்லரசான அமெரிக்காவின் இலங்கைசார் அரசியல் இராணுவ அணுகு முறையில் சில மாற்றங்களை தூண்டலாம்.

தமிழர் தரப்பில் உள்ள வித்தியாசங்களை மற்றவர்கள் அங்கீகரித்து ஒரு ஐக்கிய முன்னணி (Unity in Diversity) அமைப்பதே தேசிய தலைமை உடனடியாக செய்ய வேண்டியது.

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=231089

வணக்கம் சமாதானாம்,

நீண்ட நட்களின் பின். சமாதானாமப் பேச்சுவார்த்தை என்னும் பெயரில் புலிகளும் தமிழர்களும் ஏமாற்றப்படுள்ளார்கள்.

தங்களின் பதில்களுக்கு நான் எழுப்பிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே முன்னைய கருத்தடாலில் உள்ளன.

இராணுவ ரீதியாக புலிகளை இந்திய வல்லாதிக்கம் சர்வதேச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து அழித்துவிட்டது.இதற்கான கால அவகாசத்தையே சிறிலங்காப் படைகளுக்கு வழங்கவே சமாதான நாடாகம் நடாத்தப்பட்டது.அதுவே உண்மை.

இதில் நீங்கள் சொல்லும் பன்மைத்துவம் என்றால் என்ன? அதனை நீங்கள் இனி நடைமுறைப்படுதலாமே?

உண்மை எதுவெனில் எல்லோருக்கும் புலிகளின் ஆயுத பலமே பிரச்சினையாக இருந்தது.அதை சமாதானத்தின் பெயரால் அழித்து விட்டார்கள்.இனி எவாராலும் எதனையுமே தமிழர்களுக்குச் செய்து விட முடியாது.புலிகளின் ஆயுத பலமே தமிழரின் பலமாக இருந்தது.இனி சிறிலங்கா அரசு சொல்வதே எல்லோரும் கேட்க வேண்டும்.

புலிகள் தவறு இழைத்து உள்ளனரே.இந்தியாவின் சதியை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.அதற்கான தற்காப்பு நிலைகளை எடுக்கவில்லை.

நலங்களின் அடிப்படையில் இயங்கும் உலகை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.உங்களைப்போன்ற இடைத்தரகர்களின் பேச்சை நம்பினார்கள்.உலகம் நியாயமாக நடக்கும் என்று நம்பினார்கள்.

நீங்கள் சொல்லும் பன்மைத்துவம் என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது வந்தது என்று என்னால் யூகிக்க முடிகிறது.ஏனெனில் லண்டனில் இருக்கும் சில முன்னாள் இரோசு உறுபினர்களால் மூன்று ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான ஒரு முன் மொழிவு இந்தியாவின் ரோவினானால் நடாத்தப்பட்ட ஒரு கருதரங்கில் முன் வைக்கப்பட்டது.இதனைப் புலிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று புலிகளுக்குக் கூறப்பட்டது.இதனைச் செய்து முடித்து விட்டீர்கள்.இனியாவது நீங்கள் உங்கள் பழி தீர்க்கும் மனோபாவத்தை விட்டொழிந்து ரோவுடன் சேர்ந்து குறைந்த பட்சமாக முட்கம்பி வேலிக்குள் இருக்கும் மக்களை விடுவித்து அவர்களுக்கு இயல்பான ஒரு வாழிக்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.பல் ஆயிரம் மக்களைப் படுகொலை செய்து உள்ளீர்கள்.இது தான் சமாதானப் பேச்சுவார்த்தை தமிழருக்கு அழித்த பரிசு.

என்னைப் பொறுத்தவரை இந்தியா என்னும் பிராந்திய வல்லரிசின் அழிவில் இருந்தே தமீழீழம் மலரும்.அன்றே எமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.பல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த யுத்ததைன் சிறு பகுதியே புலிகள் நடாத்திய தேசிய விடுதலைப் போராட்டம்.இது இத்தோடு முடிந்து விடப்போவதில்லை.அடுத்த போராட்டத்தை அடுத்த சந்ததி இந்தப்போரின் முடிவில் இருந்து கற்றுக் கொண்ட பாடாத்தில் இருந்து நடாத்தும்.அது சீனாவுடன் கூட்டுச் சேர்ந்தோ அல்லது இந்தியப்பிராந்திய வல் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டக்ச் சக்திகளுடன் சேர்ந்தோ நடாத்தப்படலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
There is plenty of guilt in our region. No one is innocent, but as long as we allow the events on the ground to dictate policies, we are in trouble
. :unsure::rolleyes::rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சமாதானாம்,

நீண்ட நட்களின் பின். சமாதானாமப் பேச்சுவார்த்தை என்னும் பெயரில் புலிகளும் தமிழர்களும் ஏமாற்றப்படுள்ளார்கள்.

தங்களின் பதில்களுக்கு நான் எழுப்பிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே முன்னைய கருத்தடாலில் உள்ளன.

இராணுவ ரீதியாக புலிகளை இந்திய வல்லாதிக்கம் சர்வதேச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து அழித்துவிட்டது.இதற்கான கால அவகாசத்தையே சிறிலங்காப் படைகளுக்கு வழங்கவே சமாதான நாடாகம் நடாத்தப்பட்டது.அதுவே உண்மை.

இதில் நீங்கள் சொல்லும் பன்மைத்துவம் என்றால் என்ன? அதனை நீங்கள் இனி நடைமுறைப்படுதலாமே?

உண்மை எதுவெனில் எல்லோருக்கும் புலிகளின் ஆயுத பலமே பிரச்சினையாக இருந்தது.அதை சமாதானத்தின் பெயரால் அழித்து விட்டார்கள்.இனி எவாராலும் எதனையுமே தமிழர்களுக்குச் செய்து விட முடியாது.புலிகளின் ஆயுத பலமே தமிழரின் பலமாக இருந்தது.இனி சிறிலங்கா அரசு சொல்வதே எல்லோரும் கேட்க வேண்டும்.

புலிகள் தவறு இழைத்து உள்ளனரே.இந்தியாவின் சதியை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.அதற்கான தற்காப்பு நிலைகளை எடுக்கவில்லை.

நலங்களின் அடிப்படையில் இயங்கும் உலகை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.உங்களைப்போன்ற இடைத்தரகர்களின் பேச்சை நம்பினார்கள்.உலகம் நியாயமாக நடக்கும் என்று நம்பினார்கள்.

நீங்கள் சொல்லும் பன்மைத்துவம் என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது வந்தது என்று என்னால் யூகிக்க முடிகிறது.ஏனெனில் லண்டனில் இருக்கும் சில முன்னாள் இரோசு உறுபினர்களால் மூன்று ஆண்டுகளுக்கு முன் இவ்வாறான ஒரு முன் மொழிவு இந்தியாவின் ரோவினானால் நடாத்தப்பட்ட ஒரு கருதரங்கில் முன் வைக்கப்பட்டது.இதனைப் புலிகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று புலிகளுக்குக் கூறப்பட்டது.இதனைச் செய்து முடித்து விட்டீர்கள்.இனியாவது நீங்கள் உங்கள் பழி தீர்க்கும் மனோபாவத்தை விட்டொழிந்து ரோவுடன் சேர்ந்து குறைந்த பட்சமாக முட்கம்பி வேலிக்குள் இருக்கும் மக்களை விடுவித்து அவர்களுக்கு இயல்பான ஒரு வாழிக்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.பல் ஆயிரம் மக்களைப் படுகொலை செய்து உள்ளீர்கள்.இது தான் சமாதானப் பேச்சுவார்த்தை தமிழருக்கு அழித்த பரிசு.

என்னைப் பொறுத்தவரை இந்தியா என்னும் பிராந்திய வல்லரிசின் அழிவில் இருந்தே தமீழீழம் மலரும்.அன்றே எமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.பல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த யுத்ததைன் சிறு பகுதியே புலிகள் நடாத்திய தேசிய விடுதலைப் போராட்டம்.இது இத்தோடு முடிந்து விடப்போவதில்லை.அடுத்த போராட்டத்தை அடுத்த சந்ததி இந்தப்போரின் முடிவில் இருந்து கற்றுக் கொண்ட பாடாத்தில் இருந்து நடாத்தும்.அது சீனாவுடன் கூட்டுச் சேர்ந்தோ அல்லது இந்தியப்பிராந்திய வல் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டக்ச் சக்திகளுடன் சேர்ந்தோ நடாத்தப்படலாம்.

நீண்ட நட்களின் பின். சமாதானாமப் பேச்சுவார்த்தை என்னும் பெயரில் புலிகளும் தமிழர்களும் ஏமாற்றப்படுள்ளார்கள்.

தங்களின் பதில்களுக்கு நான் எழுப்பிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே முன்னைய கருத்தடாலில் உள்ளன.

இராணுவ ரீதியாக புலிகளை இந்திய வல்லாதிக்கம் சர்வதேச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து அழித்துவிட்டது.இதற்கான கால அவகாசத்தையே சிறிலங்காப் படைகளுக்கு வழங்கவே சமாதான நாடாகம் நடாத்தப்பட்டது.அதுவே உண்மை./quote]

நாரதரே நீங்கள் கூறுவது 100% உண்மை. புலிகளின் பலத்தின் நிழலில் தான் எம்மை சிங்களவனுடன் சேர்ந்து அழித்து அரசியல் செய்த டக்கிலசோ, ஆனந்தசங்கரியோ, .... நின்றார்கள்.

ஆனால் ..........???????????

இது கதையல்ல .....

"ஓர் ஊரில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவன். கடவுளின் அனுக்கிரகங்களையும் பெற்றவன். அதனால் கடவுள் என்றும் தன்னை கைவிட மாட்டார் என்று உறுதியாக நம்பி வந்தான். அவ்வாறும் நிகழ்ந்து வந்தது.

....... திடீரென ஒரு நாள், அவ்வூரின் அருகே உள்ள குளமோ/ஆறோ உடைத்து பெருக்கெடுத்து அவ்வூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவ்வூரில் இருந்த பல மக்கள் தமது உடைமைகளுடன் பாதுகாப்பு தேடி அயலிலுள்ள கிராமங்கள் நோக்கி ஓடினார்கல்.

ஆனால் இந்த கடவுளின் அனுக்கிரகங்களை பெற்றவனோ, என்னை ஆண்டவன் கைவிடார். காப்பாற்றுவார். என கூறி, தனது வீட்டின் கூரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டிருந்தான்.

வெள்ளமோ பெருக்கெடுத்து வீடுகள் மூழ்கி விடும் சூழ்நிலையில் ......

அடுத்ததாக ஓர் படகு அவ்வூரில் எஞ்சி இருப்பவர்களை காப்பாற்ற வந்தது. ஆனால் அவனோ ஏற மறுத்தான். என்னை ஆண்டவன் காப்பாற்றுவான் என்றான்.

இறுதியாக ஓர் உலங்குவானூர்த்தியும் எச்ச சொச்சங்களை தூக்க வந்ததாம். அதனையும் அன்புடன் மறுத்தானாம். ஏன்????? ஆண்டவர் என்னை கைவிடார் என்ற நம்பிக்கையில்.

இறுதியாக வெள்ளம் அவனது வீட்டையும் மூடி, அவனது உயிரையும் எடுத்த பின் ....... மேலை போய் ஆண்டவனை கண்டிருக்கிறான் ... ஆண்டவனிடம் .... ஆண்டவா, உன்னை நம்பி இருந்தேன், என்னை முழுமையாக கை விட்டு விட்டாய்?! என் உயிரையும் பறித்து விட்டாய்?! .... என்றவுடன் ஆண்டவர் சொன்னாராம் ..... உனக்கு மூன்று சந்தார்ப்பங்கள் வழங்கினேன்!!!! ஆனால் நீ அதனை பயன்படுத்த தவறி விட்டாய்!!! .............."

இக்கதை யாருக்கு புரிகிறதோ? இல்லையோ? இன்று எமக்குப் புரிகிறது! .... இது சுடலைஞானம் என்போமோ? ....

  • கருத்துக்கள உறவுகள்

நாரதரே நீங்கள் கூறுவது 100% உண்மை. புலிகளின் பலத்தின் நிழலில் தான் எம்மை சிங்களவனுடன் சேர்ந்து அழித்து அரசியல் செய்த டக்கிலசோ, ஆனந்தசங்கரியோ, .... நின்றார்கள்.

ஆனால் ..........???????????

அண்ணா புலிகள் தவற விட்ட அந்த 3 சந்தர்ப்பங்கள் எவை என கூறுவீர்களா?

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா இதயசுத்தியுடன் அணுகாமைக்குரிய விலையை கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

ஷிட் லங்கா பிரிந்தால் என்ன நிகழுமோ என்று இந்தியா பயந்ததோ, அது இன்று நாடு பிரியாமலே நடக்க அரம்பித்திவிட்டது.

சீனா இலங்கையினுள் இராணுவ, அரசியல், பொருளாதார மற்றும் சர்வதேச ரீதியாக ஒரு முக்கிய செல்வாக்கு மிக்க பங்காளியாக நுழைந்து விட்டது.

இந்த‌ சீன , ஷிட் ல‌ங்கா உறவு இன்னும் பல வருடங்கள் நீடிக்கும். பலமடையும். சீன முதலீட்டாளர்கள் குழு வருகை தர உள்ளார்கள்.

இனி இந்தியாவால் இலங்கையை ஒன்றும் செய்ய முடியாது. ஏதொ சாணக்கியம் பண்ணுவதாக நினைத்து பூரித்துக் கொண்ட‌ ப‌ஜ்ஜிக‌ள் பெரிய‌ ஆப்பாக‌ த‌ம‌க்குத் தாமே சொரிகிக் கொண்டு வ‌லியையும் ம‌றைத்துக்கொண்டு ம‌கிந்த‌வின் விருந்தில் ப‌ல்லைக் காட்டுகின்ற‌ன‌.

இந்தியாவே, இலங்கையை வழிக்குக் கொண்டுவர இனி மேற்கின் உதவியைத்தான் நாடவேண்டும். இப்ப‌டி இருக்க‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ள் ப‌ழைய‌ குருடி க‌த‌வை திற‌வ‌டி என்று மீண்டும் இந்தியாவிட‌ம் செல்வ‌து ப‌ய‌ன‌ற்ற‌து.

சர்வதேச சதியை புரிந்து கொண்டாயிற்று. இனிமேல் சர்வதேசத்திற்கு நமது நிலையை புரியவைக்க முயல்வோம்.

சர்வதேசம் நமது விடயத்தில் பராமுகமாகவே இருப்பது ஏனென்றுதான் புரியவில்லை. ஒரு நாய்க்குட்டி வதைக்கப்பட்டாலே ஓடிவந்து குரல்கொடுக்கும் சர்வதேச ஜீவகாருண்யகாரர்களுக்கு நமது மக்களின் அவலங்களும், துன்பங்களும் தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதமாதிரி இருந்தார்களா?... இருக்கின்றார்களா?

அவர்களுக்கு "விளங்கக்கூடிய மாதிரி" புரியவைக்க வேண்டும்.

சர்வதேசம் நமது விடயத்தில் பராமுகமாகவே இருப்பது ஏனென்றுதான் புரியவில்லை. ஒரு நாய்க்குட்டி வதைக்கப்பட்டாலே ஓடிவந்து குரல்கொடுக்கும் சர்வதேச ஜீவகாருண்யகாரர்களுக்கு நமது மக்களின் அவலங்களும், துன்பங்களும் தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாதமாதிரி இருந்தார்களா?... இருக்கின்றார்களா?

என்னைப் பொறுத்தவரை இந்தியா என்னும் பிராந்திய வல்லரிசின் அழிவில் இருந்தே தமீழீழம் மலரும்.அன்றே எமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.பல் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த யுத்ததைன் சிறு பகுதியே புலிகள் நடாத்திய தேசிய விடுதலைப் போராட்டம்.இது இத்தோடு முடிந்து விடப்போவதில்லை.அடுத்த போராட்டத்தை அடுத்த சந்ததி இந்தப்போரின் முடிவில் இருந்து கற்றுக் கொண்ட பாடாத்தில் இருந்து நடாத்தும்.அது சீனாவுடன் கூட்டுச் சேர்ந்தோ அல்லது இந்தியப்பிராந்திய வல் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டக்ச் சக்திகளுடன் சேர்ந்தோ நடாத்தப்படலாம்.

அவர்களுக்கு "விளங்கக்கூடிய மாதிரி" புரியவைக்க வேண்டும்.

<_< + <_< + :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.