Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவசரமாக உங்கள் ஒத்துழைப்புத் தேவை!

Featured Replies

வணக்கம் அனைவருக்கும்,

எங்கள் மக்களின் இன்றைய அவல நிலையை மையப்படுத்தி, யேர்மன் மொழியிலான செய்தித்தாள் ஒன்றை (சிறப்பிதழாக) வெளியிட உள்ளோம். இது தொடர்பாக யாழ் இணையத்தில் நான் ஏற்கனவே இணைத்த விபரத்தை மீண்டும் கீழே இணைத்துள்ளேன். மீண்டும் இதனை இங்கே இணைப்பதற்கு காரணம் உங்களின் ஒத்துழைப்பு வேண்டியே. இரண்டு விடயங்களில் உங்களின் (குறிப்பாக யேர்மன் வாழ் தமிழ் மக்கள்) ஒத்துழைப்பு எமக்குத் தேவை.

1. செய்தித்தாள் அச்சிடுவதற்கான பணத்தை இன்னும் எம்மால் முழுமையாக புரட்டமுடியவில்லை. முடிந்தவர்கள் உங்களால் இயன்ற சிறிய பங்களிப்பாயினும், கீழே குறிப்பிட்டுள்ள வைப்பகக்கணக்குக்கு அனுப்பி உதவலாம்.

2. செய்தித்தாளை உங்கள் நகரங்களில் விநியோகிப்பதற்கான உதவி. செய்தித்தாள் இலவசமானது. குறிப்பிட்ட ஒரு நாளில் (குறிப்பிட்ட நேரத்துக்குள்) எல்லா யேர்மனிய நகரங்களிலும் செய்தித்தாளை விநியோகிக்க வேண்டும். குறிப்பாக பெரிய நகரங்களையே (ஊடகங்களின் கவனத்தைப் பெற்ற) மையப்படுத்த விரும்புகிறோம். விநியோகிக்கும் பொறுப்பை யாராவது எடுத்து செய்தால் நல்லது. இது ஒன்றும் எங்களின் சுயநலத் தேவைக்காக நாம் செய்யவில்லை. எமது மக்களின் பிரச்சனையை யேர்மனிய சமூகத்துக்கு வெளிப்படுத்தும் முயற்சியாகவே செய்கிறோம். இதுவரை இதற்கு ஒத்துழைப்புக் கேட்ட அனைத்து இடங்களிலும் ஏனோ தானோ என்று அக்கறையற்றே பலரும் இருக்கிறார்கள். கட்டுரைகளை எழுதி, யேர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் என நேர்காணல்களைப் பெற்று, செய்தித்தாளை வடிவமைத்து, அதற்கான பணத்தை செலவழித்து, அச்சடித்து எல்லாம் நாமே செய்து தருகிறோம். உங்களால் குறிப்பிட்ட ஒருநாளில் வீதியில் இறங்கி யேர்மனிய மக்களுக்கு விநியோகிக்கக் கூட முடியாதா? தயவுசெய்து கொஞ்சம் அக்கறை எடுத்து உங்கள் ஒத்துழைப்பைத் தாருங்கள். குறிப்பாக Köln, Duesseldorf, Frankfurt, Dortmund, Bonn, Duisburg, Bochum, Wuppertal, Essen, Münster, Stuttgart, München, Mannheim போன்ற நகரங்களிலிருந்து எமக்கு ஒத்துழைப்புத் தேவை. Hamburg, Berlin போன்ற தூர இடங்களுக்கு எம்மால் செய்தித்தாளைக் கொண்டுபோய் கொடுக்கமுடியாது. ஆனால் யாரும் அங்கிருந்து வந்து பெற்றுச்சென்று விநியோகிக்கமுடியுமென்றால் வரவேற்கிறோம். மக்களே நீங்கள் எமக்கு காசு தந்து செய்தித்தாளை வாங்கி விநியோகிக்கத் தேவையில்லை. இலவசமாக தருகிறோம் அவற்றை உங்கள் நகரங்களில் சிறிது நேரமெடுத்து விநியோகியுங்கள். அவ்வளவும் போதும்.

ஆர்வமுள்ளவர்கள் எனக்கு தனிமடலில் அறியத் தாருங்கள். அல்லது 00491734451306 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி

வணக்கம் நண்பர்களே,

கடந்த மே மாதம் முதலாம் நாள், யேர்மன் மொழியிலான செய்தித் தாள் ஒன்றை சுவிற்சர்லாந்து நாட்டில் வெளியிட்டிருந்தோம். இது ஒரு சிறப்பு இதழாக வெளியிடப்பட்டிருந்தது. அங்கு ஏற்கனவே வெளியாகிக் கொண்டிருக்கும் இலவச செய்தித்தாளான 20minutenஐ அடிப்படையாகக் கொண்டு 30minuten என்ற பெயரில் இதனைச் செய்திருந்தோம். அன்றிருந்த தாயக சூழலை மையப்படுத்தி, தாயக மக்களின் அவலங்களை வெளிக்கொணர முயற்சித்திருந்தோம். அது பெரும்பான்மையான சுவிற்சர்லாந்து மக்களைச் சென்றடைந்தது. ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததுடன், பரவலாகப் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, அதே வழியைப் பின்பற்றி மீண்டும் ஒரு யேர்மன் மொழியிலான செய்தித்தாளை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளோம். இம்முறை தனியே சுவிற்சர்லாந்து நாட்டில் மட்டுமல்லாது, யேர்மனியிலும் வெளியிட முடிவெடுத்துள்ளோம். சிறிலங்காவில் இன்றுள்ள சூழல் தொடர்பாக பேராசிரியர் பீட்டர் சால்க் அவர்களின் நேர்காணல், வதைமுகாம்களில் தமிழ் மக்கள் படும் அவலங்கள், மனித உரிமை மீறல்கள், gps+ ஐ நிறுத்துவது தொடர்பாக யேர்மனிய அமைச்சர் ஒருவரின் நேர்காணல், தயாக நிலை தொடர்பாக புலம்பெயர்ந்து வாழ்கிற இளைய தலைமுறையினரின் கருத்துக்கள் என பல்வேறு விடயங்களை இச் செய்தித்தாள் தாங்கிவரும்.

புலம்பெயர்ந்த வாழ்கிற இளைய தலைமுறையினராலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. செய்தித்தாளுக்கான அனைத்து ஊடகப்பணியையும் அனுபவம் வாய்ந்த சுவிஸ் நாட்டு ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொள்கிறார். வடிவமைப்பு வேலைகளை தொழில்ரீதியான வடிவமைப்பாளர் ஒருவர் மேற்கொள்கிறார். செய்தித்தாள் மேம்போக்காக வரக்கூடாது என்பதற்காகவே, துறைசார் ஆட்களைக் கொண்டு இதனைச் செய்கிறோம்.

சுவிற்சர்லாந்து நாட்டில் 200000 பிரதிகளும், யேர்மனியில் 100000 பிரதிகளுமாக மொத்தமாக 300000பிரதிகளை அச்சடிக்க உள்ளோம். எனவே, அச்சடிப்பதற்கான செலவு, போக்குவரத்துச் செலவு, வரி, ஊடகவியலாளருக்கான ஊதியம், வடிவமைப்பாளருக்கான ஊதியம் என பல்வேறு செலவுகள் உள்ளன. அறிவு வளமும், உடலுழைப்பு வளமும் உள்ள எம்மிடம் பொருதார வளம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறோம். நாம் எவ்வித இலாபநோக்குமற்றே இதனைச் செய்கிறோம். தாயக மக்களுக்கு ஒரு சுதந்திரமானதும் கெளரவமானதுமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே எம்மாலான முயற்சிகளை மேற்கொள்கிறோம். எனவே எமது இந்த முயற்சிக்கு பொருளாதார ரீதியாக எம்மைப் பலப்படுத்துமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். எமக்கு தெரியும், இன்றைய சூழல் எமக்கு ஏமாற்றம் அளிக்கும் சூழலாகவே இருக்கிறது. பல்வேறு ஏமாற்றங்களுக்குள்ளும், குழப்பங்களுக்குள்ளும், சந்தேகங்களுக்குள்ளும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விரக்தியுற்றவர்களாக, உள ரீதியாக சோர்வுற்றவர்களாக நாம் வாழ்கிறோம். எனவே, மேலும் மேலும் எமது மக்களாகிய உங்களை தொந்தரவு செய்ய நாம் விரும்பவில்லை. இருப்பினும், எந்த மக்களுக்காக நாம் இதுவரை புலத்தில் போராடினோமோ, அந்த மக்களுக்காக - அந்த மக்களின் வாழ்வுக்காக - இந்த செய்தித்தாளை வெளிக்கொணர்வதற்கான உங்களின் பங்களிப்பை வேண்டி நிற்கிறோம். அது எந்தச் சிறுதொகையாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்.

பின்வரும் வைப்பகக் கணக்குக்கு உங்கள் பங்களிப்பை அனுப்பிவையுங்கள்:

NAME: Tamil Diaspora e.V.

KONTO NR: 33422262

BLZ: 430 500 01

BANK: Sparkasse Bochum

ZWECK: PUNKT DE

நன்றி

* tamil diaspora என்கிற அமைப்பு புலம்பெயர்ந்து வாழ்கிற இளந்தலைமுறையினரை (குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள், படித்து முடித்தவர்கள்) கொண்டுள்ள அமைப்பு ஆகும். இது குறிப்பாக யேர்மனி, சுவிஸ், பிரான்ஸ், ஒஸ்ரியா ஆகிய நாடுகளை மையப்படுத்தி இயங்குகிறது.

* இந்த செயற்திட்டத்தில் இணைந்து செயற்பட விரும்புகிற அமைப்புகள், நிறுவனங்கள், மாணவர்கள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

* செய்தித்தாளை யேர்மனியில் தங்கள் தங்கள் நகரங்களில் விநியோகிப்பதற்கு விரும்புபவர்கள் என்னோடு தனிமடலூடாக தொடர்பு கொள்ளுங்கள். மேலதிக விபரங்கள் பற்றிக் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தின் தேவை கருதிய சிறந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. இதனை தொடர் செயற்பாடாக முன்னெடுக்க எல்லோரும் ஒன்றிணைய வேண்டியதுமாகும். மாதாந்தம் ஒரு சிறுபங்களிப்பைச் செய்வதூடாக முன்னெடுக்கலாம். இதனை சரியாக ஒருங்கிணைத்துச் செய்ய வேண்டியதும் அவசியமாகும். எப்போதோ செய்திருக்க வேண்டிய விடயம். இப்போதாவது செய்வோரை ஊக்கப்படுத்த வேண்டியது புலம் பெயர்ந்தோரது கடமையாகும்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

சிறு உதவியான தகவல்.

உங்களது முழு வெளிப்பாடுகளையும் ஆதாரமாக்கி, நம்பிக்கை தரதக்க வகையில் அதை கோப்பாக்கி ஜேர்மனியில் இயங்குகின்ற ஏதாவது ஒரு இந்துக்கோவிலை அனுகிப்பாருங்களேன். இளைஞர்களின் முயற்சிக்கு சில வேளை ஆதரவு தரக்கூடும்.

முயற்சி செய்யுங்கள்.

அப்படி கிடைத்து விட்டால் தொடராக வரக்கூடிய செலவை தாங்கும் ஒரு தொடர் உதவி நன்கொடையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதுமாதிரித்தன் தெரிகின்றது. தம்பி சரியான வழியிலை நீங்கள் போனால் நாங்களும் பின்னாலை வருவம். உங்களுக்கு பின்னாலை நாங்கள் வருவதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை. சிலருக்கு அப்படி ஈகோ இருக்கலாம். ஒரு விடயம் தம்பி பலர் செய்த தவறை நீங்களும் செய்ய வேண்டாம். உங்களுடைய வரவு செலவுகளை உதவி செய்பவர்களுக்கு தெரியப்படுத்துங்கள் அப்போதுதான் நீங்கள் சுமக்கின்ற சிலுவையின் பாரம் மற்றவர்களுக்கு தெரியும்..

பணம் எப்படி அனுப்புவது என்று தெரிவிக்கலாமே

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் இளையோர் சார்பில் நன்றி. நடா நீங்கள் யேர்மனியில் இருப்பவராக இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள வைப்பகக் கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கலாம். வேறு நாட்டில் வசிப்பவராக இருந்தால் எனது paypal முகவரிக்கு அனுப்பி வைத்தால், நான் அந்த வைப்பகக் கணக்குக்கு அனுப்பி வைப்பேன். தனிமடலில் paypal முகவரியை அனுப்பிவைக்கிறேன். வேறு யாரும் வேறு நாடுகளில் இருந்த இந்த செயற்திட்டத்துக்கு உதவ விரும்பினால் கூறவும். தனிமடலில் paypal விபரத்தையோ, அல்லது வேறு வழிமுறைகளையோ அனுப்பிவைக்கிறேன்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புள்ள நண்பர்களுக்கு எதிர் வரும் 09.07.2009 www.30min.ch பத்திரிகை வெளி வருகின்றது அதை உரிய நேரத்தில் அணைத்து இடங்களிலும் விணிஜோகிபதட்க்கு உங்களால் முடிந்த உதவி செய்ய முன்வருபவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்

0041763888101

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள நண்பர்களுக்கு எதிர் வரும் 09.07.2009 www.30min.ch பத்திரிகை வெளி வருகின்றது அதை உரிய நேரத்தில் அணைத்து இடங்களிலும் விணிஜோகிபதட்க்கு உங்களால் முடிந்த உதவி செய்ய முன்வருபவர்கள் உடன் தொடர்பு கொள்ளவும்

0041763888101

யெர்மனியிலும் www.30min.ch பத்திரிகை விநியோகத்திற்கு ஆர்வமுள்ளோரைத் முன்வருமாறு www.30min.ch யெர்மனுக்கான பொறுப்பானவர்கள் கோருகின்றார்கள்.

  • தொடங்கியவர்

செய்தித்தாள் அச்சடிக்கப்பட்டு முடிந்துவிட்டது. இனி சுவிசிலும் யேர்மனியிலும் இவற்றை விநியோகிக்கவேண்டும். உங்கள் உங்கள் இடங்களில் எங்கள் மக்களின் பிரச்சனையை சொல்வதற்கு இந்த செய்தித்தாளை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இலவசமான செய்தித்தாள். எனவே நீங்கள் எமக்கு காசு தந்து தான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று யோசிக்க வேண்டாம். உங்கள் இடத்தில் விநியோகிக்க எவ்வளவு பிரதிகள் வேண்டும் என்று சொன்னால் நாம் தருகிறோம். நீங்கள் விநியோகித்துக்கொள்ளலாம். குறிப்பாக உங்கள் இடங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், அரசியல் துறையினர், உதவி அமைப்புகள், சமூக அமைப்புகள் போன்றவற்றுக்கு நீங்கள் இந்த செய்தித்தாளை கொடுக்கலாம். அதேபோல உங்கள் இடங்களிலிருக்கும் ஊடகங்களுக்கும் சில பிரதிகளை அனுப்பியோ அல்லது நேரில் சென்றோ கொடுக்கலாம். எமது பிரச்சனையில் அக்கறையுள்ளவர்கள் என்று நீங்கள் கருதுகிற அல்லது எமது பிரச்சனையை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறவர்கள் என்று நீங்கள் அறிந்த உங்கள் ஊர் மக்களுக்கு (வேற்று இனத்தவர்) இந்த செய்தித்தாளைக் கொடுத்து அவர்கள் எங்கள் மக்களின் பிரச்சனையை அறியச் செய்யலாம். இவை தவிர சனநடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலும் (பேருந்து நிலையம், தொடருந்து நிலையம் போன்றவை) நின்று இந்த செய்தித்தாளை விநியோகிக்கலாம்.

மக்களே தயவுசெய்து முன்வாருங்கள். சுவிசில் நாளையிலிருந்து விநியோகிக்க தொடங்குகிறோம். சுவிசில் உள்ள யாழ் கருத்துக்கள உறவுகள் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். செய்தித்தாளை விநியோகிப்பதற்கான உங்கள் ஒத்துழைப்பை வழங்கலாம்.

அல்லது "உங்களை யார் இந்த வேண்டாத வேலையை செய்யச்சொன்னது - பிறகு யாழில வந்து புலம்பச் சொன்னது" என்றும் உங்கள் கருத்தை தெரிவிக்கலாம். எல்லாவற்றையும் வரவேற்கிறோம்.

நன்றி

  • தொடங்கியவர்

தொடர்பு விபரங்கள்:

சுவிஸ்: +41763888101

யேர்மன்: +491734451306

நீங்கள் வசிக்கும் இடங்களிலோ அல்லது உங்களுக்கு அருகாமையில் உள்ள பெரிய நகரங்களிலோ செய்தித்தாளை விநியோகிக்க ஆர்வமுள்ளவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணோடு தொடர்புகொள்ளுங்கள்.

  • தொடங்கியவர்

Heidelberg, Mannheim ஆகிய இடங்களில் வசிக்கும் யாழ் கருத்துகள உறவுகள் யாரும் இருந்தால் சொல்லவும். குறிப்பிட்ட இடங்களில் செய்தித்தாளை விநியோகிப்பதற்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது. :lol:

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்

Mannheim, Heidelberg, Lauda போன்ற இடங்களுக்கு செய்தித்தாளை விநியோகிப்பதற்கு கருத்துக்கள உறவு ஒருவர் பொறுப்பெடுத்திருக்கிறார்.

Idar Oberstein, Trier ஆகிய இடங்களுக்கும் இன்னொரு கருத்துக்கள உறவு பொறுப்பெடுத்திருக்கிறார்.

Frankfurt நகரில் 10000 செய்தித்தாள்களை யேர்மனியர்களுக்கு விநியோகிப்பதற்கும் யாரும் கருத்துக்கள உறவுகள் ஒத்துழைப்புத் தந்தால் நல்லது.

Edited by இளைஞன்

புலம்பிக்கொண்டு இருக்காமல் ... முயற்சி எடுத்த இளைஞனுக்கு ப்பாராட்டுக்கள்.

ஆங்கிலத்திலும் இவ்வாறு செய்ய வேண்டும்..

ஒரு ஊடகம் , அனைத்து மொழிகளிலும் தொடங்க வேண்டும்!

ஒன்று கூடி ப்போராட வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

இரசிய மொழி தெரிந்தவர்கள் அல்லது உக்கிரேனிய மொழி தெரிந்தவர்கள் உடன் தொடர்பு கொள்ளுங்கள். ஒரு கிழமைக்கு ஒரு மணித்தியாலமாவது உதவியாக செலவிட முடிந்தால் போதுமானது. மிகவும் பயன்தரத்தக்க ஒரு முயற்சிக்காகவே உங்கள் உதவி தேவை. தயவு செய்து தனி மடல் அனுப்புங்கள்.

நன்றி

  • தொடங்கியவர்

நன்றி.

Frankfurt நகருக்கும் அதனை அண்மித்த நகரங்களுக்கும் இளையோர் அமைப்பினர் பொறுப்பெடுத்துள்ளனர். அவர்களுடன் இணைந்து செய்தித்தாளை (Frankfurt நகரை அண்டிய) உங்கள் நகரங்களிலும் யேர்மனிய மக்களுக்கு விநியோகிக்க விருமு்பினால் Frankfurt இளையோர் அமைப்பினரோடு தொடர்பு கொள்ளுங்கள். அல்லது என்னோடு தனிமடலில் தொடர்புகொண்டால் மேலதிக விபரங்களை அறியத் தருகிறேன். Frankfurt பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் யாராவது இருந்தால் நீங்களும் இளையோர் அமைப்பினரிடம் செய்தித்தாளைப் பெற்று உங்கள் பல்கலைக்கழகத்தில் விநியோகிக்கலாம். எனவே, தாமதிக்காமல் 23யூலைக்கு முதல் (கறுப்பு யூலை) செய்தித்தாளை விநியோகிக்கப் பாருங்கள்.

Edited by இளைஞன்

உங்கள் முயற்ச்சியும்... செயல்களும்.... மற்றைய நம் இளைஞர்களுக்கும்.... எமக்கும்... எனக்கும்... இன்றுவரை வீண்பேச்சு பேசிக்கொண்டே இருக்கும்.... முக்கியமாக கள நண்பர்களுக்கும்... இன்றையகாலத்தில் ஓர் நல்ல எடுத்துக்காட்டு :D நன்றி இதைத்தான் என்னால் இப்போதைக்கு சொல்ல கூடியதாக உள்ளது நண்பனே :D

  • கருத்துக்கள உறவுகள்

பரப்புரைப் பணியென்பது ஒரு பாரிய வேலைத் திட்டம். எனவே இதிலே அனைவரும் தமது சக்திக்கேற்றவாறு இணைந்து கொள்வது அவசியமானது. குறிப்பாக நிதியுதவியென்பது முக்கியமானது. உண்மையிலேயே இந்த முயற்சியை முன்னெடுக்கும் இளைய தலைமுறை பாராட்டுக்குரியவர்கள். முகம் தெரியாது இருந்தவாறு காலத்தின் தேவைகருதி முயற்சியில் இறங்கியிருக்கும் செயற்றிறன் மிகு இளையோரின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு நாம் எம்மால் முடிந்த ஒத்துழைப்பை நல்குவோம். குறிப்பிட்டு ஒரு காலவரையறைக்குள் எமது இனத்தினது முழுமையான தகவல்களும் நாம் வாழும் நாட்டு மக்களிடம் கிரமமாக எடுத்துச் செல்லப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்பதை உணர்ந்துள்ள இளையோரினது செயற்பாட்டைப் பலமாக்குவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞன் உங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியன.

ஆங்கிலத்தில் எமது பிரச்சனைகளை வெளிப்படுத்தும் ஒரு விவரணப் படம் தயாராகி வருவதாகவும், அதனை ஜுலை 23 ம் திகதி மத்திய இலண்டனில் ஒரு விசேட காட்சியாக பிரிதானிய ஊடகவியலாளர்கள் மற்றும் பிரித்தானிய அரசியல்வாதிகள் மத்தியில்திரையிடப்படவுள்ளத

  • தொடங்கியவர்

Nürnberg, Karlsruhe போன்ற நகரங்களில் செய்தித்தாளை விநியோகிப்பதற்கு ஒத்துழைப்பு தேவை. செய்தித்தாள் Heilbronn நகரில் உள்ளதால், அவற்றை Heilbronn க்கு வந்து எடுத்துச் செல்ல முடிந்தால் நல்லது. அதே போல் München நகரில் (எதிர்வரும் வெள்ளிக்கிழமை) விநியோகிப்பதற்கு இளையோர் அமைப்பினர் பொறுப்பெடுத்துள்ளனர். அங்கிருந்து யாராவது Heilbronn நகருக்கு வருகைதருபவர்கள் இருந்தால், செய்தித்தாளை இளையோர் அமைப்பினரிடம் சேர்ப்பிக்க உதவினால் நல்லது. அல்லது, Stuttgart நகருக்கு யாரும் வருவதாக இருந்தாலும் அவர்களிடம் கையளிக்கலாம்.

மற்றும்

Bonn

Duisburg

Essen

Hattingen

Mühlheim

Dortmund

Bochum

Köln

Düsseldorf

Leverkusen

Neuss

Möchengladbach

Wuppertal

Gummersbach

Hamm

Soest

Paderborn

Sauerland

Bielefeld

Osnabrück

Münster

Hamburg

Frankfurt

Mannheim

Heidelberg

Trier

Saarbrücken

Hannover

Hildesheim

Göttingen

Kassel

Stuttgart

München

Berlin

ஆகிய நகரங்களில் செய்தித்தாளை விநியோகிப்பதில் உங்கள் ஒத்துழைப்பை வழங்க விரும்பினால் அந்தந்த நகரங்களில் உள்ள இளையோர் அமைப்பினரோடு தொடர்புகொள்ளுங்கள்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://xuitlacoche.blogspot.com/2009/04/ta...sri-lankan.html

ஆங்கில திறமையுள்ளவர்கள் உங்கள் கருத்துக்களையும், விளக்கங்களையும் இங்கே முன்வையுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்

நாளை DÜSSELDORF நகரில் நடைபெறும் கறுப்பு யூலை நிகழ்வை ஒட்டிய பேரணியில் யேர்மன் மொழியிலான .de செய்தித்தாள் விநியோகிக்கப்படவுள்ளது. அதேநேரம் வேறு வேறு நகரங்களிலிருந்து பேரணியில் கலந்துகொள்பவர்கள், செய்தித்தாளை பெற்றுச்சென்று உங்கள் நகரங்களில் உள்ள யேர்மனிய மக்களுக்கு விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் இளைஞன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அனைவருக்கும் நன்றி. இந்த முயற்சிக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் தந்த அனைவருக்கும் எமது நன்றி. ஒரு குழுவாக இளந் தலைமுறையினர் இணைந்து செய்த முயற்சி இது. இதற்கு பின்னால் பலரது கடும் உழைப்பு உள்ளது. யேர்மன் மொழியில் நாம் செய்த இரண்டாவது செய்தித்தாள் முயற்சி இது. முதல் தடவை இதனை நாம் செய்தபோது எமக்கு கிடைத்த பொருளாதார ஆதரவைக் காட்டிலும், இம்முறை மிக மிகக் குறைவாகவே ஆதரவு கிடைத்தது. காரணம், "எல்லாம் முடிந்துவிட்டது இனி இதைச் செய்து என்ன பயன்" என்கிற எமது மக்களின் மனநிலை தான். எமக்கு தேவைப்பட்ட பணத்தில் பாதிதான் எமக்கு கிடைத்தது. இந்த இரண்டாவது முயற்சியின் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியதுடன், படிப்பினைகளையும் பெற்றுக்கொண்டோம். இருப்பினும், எமக்கு ஒத்துழைப்புத் தந்து எம்மோடு சேர்ந்து இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

எதிர்வரும் காலத்தில் 4 மாத இடைவெளியில் யேர்மன் மொழியிலான செய்தித்தாளை யேர்மனி மற்றும் சுவிஸ் ஆகிய நாடுகளில் தொடர்ந்து வெளியிட முடிவுசெய்துள்ளோம். இதற்கு எமக்கு பொருளாதார ரீதியான ஒத்துழைப்பும், யேர்மனிய மக்களுக்கு விநியோகிப்பதற்கான ஒத்துழைப்பும் எமது மக்களிடமிருந்து எமக்கு வேண்டும். ஆர்வமிருப்பவர்கள், இந்த முயற்சி பயனுள்ளதெனக் கருதுபவர்கள் எமது இந்த முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலதிக விபரங்கள் தேவைப்படின் தனிமடலூடாகத் தொடர்புகொள்ளலாம். அடுத்த செய்தித்தாளினை நவம்பர் மாதமளவில் வெளியிட முடிவுசெய்துள்ளோம்.

இதுவரை வெளிவந்த செய்தித்தாள்களை வாசிக்க அல்லது யேர்மனிய நண்பர்களுக்கு அனுப்பிவைக்க:

http://30min.ch/

Edited by இளைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.