Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினை நாகபூ­ணி அம்மன் தேரேறி வந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ்ந்து அரோகரா கோஷம் எழுப்ப நயினை நாகபூஷணி அம்பாள் தேர் ஏறி வீதிவலம் வந்து அடியார் களுக்கு அருள் காட்சி வழங்கினார்.

நேற்றுமுன்தினம் மாலைமுதல் நேற்றுக் காலை வரை அலை அலை யாகச் சென்றடைந்த பக்தர்கள் பக்திபூர்வமாக தேர் உற்சவத்தில் பங்குபற் றினர். காவடிகள் எடுத்தும் பிரதிட்டை செய்தும் அடிஅழித்தும் தமது நேர்த்திகளை அவர்கள் பூர்த்தி செய்தனர்.

நேற்று அதிகாலை முதல் இடம்பெற்ற பூøசகளை அடுத்து 8.30 மணிக்கு வசந்த மண்டப பூøச நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 9.30 மணியளவில் அம்பாள் விநாயகர், முருகன் சகிதம்

தனித்தனியான தேர்களில் வீதிவலம் வந்து காட்சி கொடுத்தனர்.

நேற்றைய தேர்த்திருவிழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

அமைதியாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்ற தேர்த்திருவிழா நிகழ்ச்சி களை யாழ். எவ்.எம். வானொலி நேரடி யாக அஞ்சல் செய்தது.

பக்தர்களின் வசதிகருதி விசேட பஸ் மற்றும் படகுச் சேவைகள் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தன.

இன்று காலை தீர்த்தத் திருவிழாவும் இரவு திருவூஞ்சல், கொடியிறக்கம் ஆகியனவும் இடம்பெறவிருக்கிறது.

நாளை இரவு இடம்பெறும் தெப்போற் சவத்துடன் நயினை நாகேஸ்வரித் தாயின் பெருந்திருவிழா நிறைவு பெறவி ருக்கின்றது.

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

நயினை நாகபூ­ணி அம்மன் தேரேறி வந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

போர் நடந்தபோது அருள்பாலிக்க தவறி விட்டாரே

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மோர்ட்கேஜ் பேய் அவுட் பண்ண அருள் பாலிப்பாரா? :icon_idea::wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மோர்ட்கேஜ் பேய் அவுட் பண்ண அருள் பாலிப்பாரா? :icon_idea::wub::icon_idea:

அதெல்லாம் நீங்கள் வைக்கும் நம்பிக்கைகளை பொறுத்துள்ளது........ சும்மா தருவாரா என்றால் அவர் தருவாரா?

உடம்பினுள் ஊசியை ஏற்றி காவடி ஆடிட வேண்டும் குறைந்த பட்சம் இதையாவது செய்தால் உங்களை சிபாரிசு செய்யலாம். இல்லையென்றால் ஓரே ஒரு குறுக்கு வழிதான்....... மூன்று மாத மோர்ற்கேஜ் கட்டுப்பணத்தை ஒன்றாக சேர்த்து அம்பாளின் உண்டியலில் இடுவது. இதன் மூலம் மீதமுள்ள மோர்ற்கேஜ் கட்டணத்தை அம்பாள் பொறுப்பேற்பார். பணத்தை உண்டியலில் சேர்க்கும் மேலதிக விபரங்கள்ளுக்கு என்னை நாடலாம்..... எனது சொந்த வங்கி இலக்கமும் அம்பாளுடையதும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

நயினை நாகபூ­ணி அம்மன் தேரேறி வந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

தேரில ஏத்தினால் தான் அம்மன் அருள் பாலிப்பார் போல... மனுசர் தான் கைம்மாறு கேக்கிறார்கள் எண்டால் கடவுளுமா? அப்போ கடவுளுக்கும் மனுசருக்கும் என்னங்கோ வித்தியாசம்?? :icon_idea:

கோவிலாவது ஏதடா

குளங்களாவதேதடா

நட்ட கல்லை தெய்வம் என்று

நாலு புஷ்பம் சாத்தியே

சுத்தி வந்து முணு முணுன்னு

சொல்லும் மந்திரம்

ஏதடா

நட்ட கல்லு பேசுமோ

நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி தட்டுவம்

கறிச்சுவை அறியுமோ

===========

கோயிலாவதேதடா குளங்களாவதேதடா

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே

பூசை பூசை என்று நீர் பூசை செய்யும் பேதைகாள்

பூசையுள்ள தன்னிலே பூசை கொண்ட தெவ்விடம்

ஆதி பூசை கொண்டதோ அனாதி பூசை கொண்டதோ

ஏது பூசை கொண்டதோ இன்னதென்று இயம்புமே

இருக்க நாலு வேதமும் எழுத்தை அறவோதினும்

பெருக்கநீறு பூசினும் பிதற்றினும் பிரான் இரான்

உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லீரேல்

சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே

வாயிலே சுரக்கு நீரை எச்சில் என்று சொல்கிறீர்

வாயிலே குதப்புவேதம் எனப்படக் கடவதோ

தில்லைநாயகன் அவன் திருவரங்கனும் அவன்

எல்லையான புவனமும் ஏகமுத்தியானவன்

பல்லும்நாவும் உள்ளபேர் பகுத்துக் கூறி மகிழுவார்

வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே

சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்

தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என்செய்வேன்

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்றுரைக்கும் அன்பர்காள்

அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்லகாணும் அப்பொருள்

அஞ்செழுத்தும் நெஞ்செழுத்து அவ்வெழுத்து அறிந்தபின்

அஞ்செழுத்தும் அவ்வின்வண்ணம் ஆனதே சிவாயமே

(சிவவாக்கிய சித்தர்)

Edited by நிழலி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்ன ஆச்சரியம் என்னவென்டால் வன்னியில் இவ்வளவு சனம் செத்தும் யாழ்ப்பாணத்தில் உள்ள சனம் ஒரு பிரச்சனையும் இல்லாத மாதிரி திருவிழாவுக்கு போய் இருக்குறார்கள்.[அதுவும் கடுமையான செக்கிங்காம்]

ரதி அக்கா

யாழ்ப்பாணத்துச் சனம் மட்டுமில்லை. இங்கே புலத்துக் கூட்டமும் தேர் திருவிழா எண்டு கிளம்பத் தொடங்கிட்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களை கொஞ்சம் காற்றோட்டமாக வாழவிடுங்கள்.

புலம்பெயர்தமிழர்களே! தற்போதைக்கு வாத விதண்டாவாதங்களை அவரவர் மனைவிமக்களுடன் வைத்துக்கொள்வதே சாலச்சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைக்கு வாத விதண்டாவாதங்களை அவரவர் மனைவிமக்களுடன் வைத்துக்கொள்வதே சாலச்சிறந்தது.

ஏன் மனைவிமாரிடம் வாயைக்குடுத்து அடி வாங்கச் சொல்கிறிரோ?

எனக்கு என்ன ஆச்சரியம் என்னவென்டால் வன்னியில் இவ்வளவு சனம் செத்தும் யாழ்ப்பாணத்தில் உள்ள சனம் ஒரு பிரச்சனையும் இல்லாத மாதிரி திருவிழாவுக்கு போய் இருக்குறார்கள்.[அதுவும் கடுமையான செக்கிங்காம்]

நாங்க இங்க வெளினாட்டில வசதியாக இருந்து கொண்டு, அங்குள்ள மக்களைப் பார்த்து அதைச் செய், இதைச் செய் என்று சொல்வது நல்லதாகப் படவில்லை.

quote name='கந்தப்பு' date='Jul 8 2009, 12:59 AM' post='528163']

ஏன் மனைவிமாரிடம் வாயைக்குடுத்து அடி வாங்கச் சொல்கிறிரோ?

^_^:o

Edited by yarlkavi

  • கருத்துக்கள உறவுகள்

quote name='கந்தப்பு' date='Jul 8 2009, 12:59 AM' post='528163']

ஏன் மனைவிமாரிடம் வாயைக்குடுத்து அடி வாங்கச் சொல்கிறிரோ?

^_^:o

சில இடங்களில அதிசயமாக மாறியும் நடக்கிறது.

யாழ் செய்தியாளர் சிறீதரன் 08/07/2009, 03:05

நாகபூசணி அம்மன் தேர் - படையினர் கெடுபிடி

யாழ் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவிற்குச் சென்ற பக்தர்கள் சிறீலங்கா படையினரது சோதனை நடவடிக்கைகளால், பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அல்லைப்பிட்டியில் பாரிய சோதனைக் கெடுபிடிகளை மேற்கொண்ட சிறீலங்கா கடற்படையினர், 50 சிறிய படகுகளில் மட்டும் மக்களை நைனாதீவிற்கு அழைத்துச் சென்றிருந்தனர்.

இதேபோன்று குறிகட்டுவான் இறங்குதுறையிலும் சிறீலங்கா கடற் படையினர் பாரிய கெடுபிடிகளை மேற்கொண்டிருந்தனர்.

தமிழ் மக்கள் தமது சமய வழிபாடுகளில் ஈடுபடும் உரிமைகூட, சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் மறுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களுக்கான சிறீலங்கா அரசின் தீர்வு பற்றி சிந்திக்க வேண்டி இருப்பதாக, வழிபாடுகளில் கலந்து கொண்ட மக்கள் கூறியுள்ளனர்.

http://www.pathivu.com/news/2608/68//d,art_full.aspx

ஈழத்தமிழர்களை கொஞ்சம் காற்றோட்டமாக வாழவிடுங்கள்.

புலம்பெயர்தமிழர்களே! தற்போதைக்கு வாத விதண்டாவாதங்களை அவரவர் மனைவிமக்களுடன் வைத்துக்கொள்வதே சாலச்சிறந்தது.

நல்லதொரு கற்பனை குமாரசாமி அண்ணா. புலம்பெயர் தமிழர்கள் அங்குள்ள தமிழர்களின் கோவணத்தை உருவி காற்றோட்டத்தை ஏற்படுத்துவார்களே ஒழிய விதண்டாவாதங்களை ஒருபோதும் நிறுத்தமாட்டார்கள். புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழீழம் வேண்டும். ஆனால்.. அதற்கு தாயக மக்கள் உயிரைக்கொடுக்க வேண்டும். அதற்கு தாயக மக்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவேண்டும். ஏதாவது அனுபவிப்பது என்றால் வெளிநாடுகளுக்கு வந்து அனுபவிக்கலாம். இதற்காகவே நாங்கள் வெளிநாடுகளில் தெருவுக்குத்தெரு கோயில்கள் கட்டிவச்சு இருக்கின்றோம். கட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

நாகபூசணியை விட்டுபோட்டு... எங்கடை வீட்டு basementகளில இயங்கிற பிள்ளையார், முருகன், அம்மன் கோயில்களுக்கு வாருங்கோ. டென்மார்க்குக்கு போனால்.. நாகபூசணியை உயிரோட, குடும்பசமேதராய் தரிசித்து மகிழமுடியும்.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் வசதியாக இருக்கிறார்கள் என எதை வைத்து சொல்கிறீர்களோ எனக்கு தெரியவில்லை...இங்கேயும் மக்கள் கஸ்டப்பட்டு தான் வேலை செய்கிறார்கள்.பல பேர் இரண்டு வேலைக்கு போகிறார்கள் சாப்பிட கூட நேரமில்லாமல் அப்படி உழைத்து தான் புலிக்கும் நாட்டுக்கும் என கொடுத்துக் கொண்டு இருக்குறார்கள்[நான் சொல்வது காசு கொடுப்பவர்களை பற்றி]இலங்கையில் இருக்கும் மக்கள் யுத்தம் வந்தால் மட்டுமே கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.அங்கு இருப்பதால் அவர்கள் சாகிறார்கள் இங்கே இருப்பதால் நாங்கள் தப்பி விட்டோம் என சொல்வது பொய் என்பது எனது கருத்து நாளைக்கே நான் றோட்டால் போகும் விபத்தில் சாக வேண்டுமென இருந்தால் நான் சாகத் தான் போறேன் இதை யாராலும் தடுக்க முடியாது இனி விடயத்திற்கு வருகிறேன்.

நாகபூசனி அம்மன் தேர் நடக்க வேண்டாம் என நான் சொல்லவில்லை அதற்கு நயினாதீவுயில் உள்ள மக்கள் மட்டும் போயிருக்கலாம்.இவ்வளவு மக்கள் தேருக்கு போயிருக்கிறார்கள் பிறகு அங்கு[ஈழத்தில்] என்ன பிரச்சனை?

இன்று நாகபூசனி அம்மனுக்கு 50,000 மக்கள் சென்றார்கள் நாளை நல்லூருக்கு 1 லட்சம் மக்கள் செல்வார்கள் அரசு அதனை வைத்து அரசியலாக்கும்.

வன்னியில் செத்த காயப்பட்ட மக்கள் எல்லோரும் ஒரே தமிழர் தானே பிறகு எப்படி அவர்களால் ஒன்றும் நடக்காத மாதிரி திருவிழாவுக்கெல்லாம் போக முடிகிறது.அவர்கள் ஒரே நாட்டில் இருந்து கொண்டே இப்படி இருக்கலாம் என்றால் புலம் பெயர் நாட்டில் உள்ள மக்கள் இங்கு தேருக்குப் போவதில் என்ன தவறு?

புலம் பெயர் நாட்டில் உள்ள மக்கள் அதிகளவில் ஊர்வலங்களுக்கு போனால் அது தலைப்பு செய்தி...ஆனால் ஈழத்தில் உள்ள மக்கள் அதிகளவில் இப்படியான தேர் திருவிழாவுக்கு போனால் அது தான் தலைப்பு செய்தி.

இது என்னோட தனிப்பட்ட கருத்து.

ரதி அக்கா என்ன சொல்ல வாறியள்?

தாயகத்திலை இருக்கிற சனம் தேரிழுக்கக் கூடாது. ஆனால் நாங்கள் இங்கை இருக்கிற கோயிலுகளிலை தேரிழுக்க வேணும். கோயிலுக்கு பட்டாடை உடுத்துப் போய் வர வேணும்.

இங்கையும் நாங்கள் எங்கடை சனத்தின்ரை அவலத்தைக் கண்டு துடிக்கிறம். கவலைப் படுறம் எண்டு கறுப்புக் கொடி தூக்கி ஆர்ப்பாட்டம் செய்யிறம். பிறகு அரோகராக் கோசம் போட்டு திருவிழாக் கொண்டாடினால் அதையும் அரசியலாக்கலாம் தானே?

புலத்திலை இருந்து தாயத்துக்காக எவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வளவு பெரிய தியாகம் செய்து கொண்டிருக்கிறம் எண்டதைப் பற்றி எழுதிறதெண்டால் பக்கக் கணக்கா எழுதலாம்.........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது என்னவென்றால் ஈழத்தில் இருப்பவர்களோ அல்லது புலத்தில் இருப்பவர்களோ இந்த வருடம் என்டாலும் எல்லாத்தையும் அடக்கி வைக்கலாம் என்பதைத் தான்..அவர்களே அங்கு இருந்து கொண்டு இப்படி செய்தார்கள் என்றால் இங்கியிருக்கும் மக்கள் சொல்வார்கள் ஊரில் இருக்கும் மக்களே விழாக்களுக்கு எல்லாம் போகிறார்கள் நாங்கள் தான் எல்லாத்தையும் புறக்கணிக்க வேண்டுமா என[நான் புறக்கணிப்பவர்களை பற்றி மட்டும் தான் கதைக்கிறேன்.]

நான் திரும்பவும் தாயகத்திற்கு உதவும் மக்களை பற்றி மட்டுமே கதைக்கிறேன்.

எந்த மதம் சார்ந்த விழாக்களும் இந்த ஆண்டு செய்யாமல் விடுவது (புறக்கணிப்பது) நன்று... பல்லாயிரக் கணக்கான மக்களை நாம் இழந்துள்ளோம். இந்த நிலையில் பிராத்தனை செய்வோர் தங்கட வீடுகளில் இருந்து செய்தால் என்ன? தேர் திருவிழாவும், சாப்பாடும் முடிந்த கையோட அடிபிடியும், இன்னும் ஜூலை மாதக் கடைசியில் வோல்ஸிங்கம் மாதா யாத்திரையும்... அங்கே கார் ஓடும் போட்டியின் பின் அடிபிடியும்... இப்படி என்கேங்க போன வருஷம் விட்டிசினமோ அங்க இருந்து தொடருவினம் எங்கட ஆட்கள்... ஏற்பாட்டாளர்கள் இந்த விழாக்களை ஏற்பாடு செய்ய விட்டால் சனம் பேசாமல் இருக்கும் தானே?? மதக்குருக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மோர்ட்கேஜ் பேய் அவுட் பண்ண அருள் பாலிப்பாரா? ^_^:wub::o

பாலிப்பார் பாலிப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மனைவிமாரிடம் வாயைக்குடுத்து அடி வாங்கச் சொல்கிறிரோ?

இப்பவும் குந்தியிருந்து எழும்பேக்கை பழைய உள்நோக்கள் எல்லாம் நினைவலையாய் வந்து பயமுறுத்துதோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்ச வெளிநாடுகளில கோயில் கொடியேறி தேர் இழுத்தாத்தானே பானைபோலகிடக்கிற பியர் வண்டியையும்தள்ளிக்கொண்டு பெரியபெந்தன் சங்கிலியையும் போட்டு க்கொண்டு முன்னுக்கு நிக்கலாம்.

நான் சொன்னது என்னவென்றால் ஈழத்தில் இருப்பவர்களோ அல்லது புலத்தில் இருப்பவர்களோ இந்த வருடம் என்டாலும் எல்லாத்தையும் அடக்கி வைக்கலாம் என்பதைத் தான்.

"நாகபூசனி அம்மன் தேர் நடக்க வேண்டாம் என நான் சொல்லவில்லை அதற்கு நயினாதீவுயில் உள்ள மக்கள் மட்டும் போயிருக்கலாம்," என்று உங்கள் கருத்தில் எழுதியிருக்கிறீர்கள். அதன் பொருள் ஈழத்தில் இருப்பவர்களோ அல்லது புலத்தில் இருப்பவர்களோ இந்த வருடம் எண்டாலும் எல்லாத்தையும் அடக்கி வைக்கலாம் என்பது எனக்கு இப்பொழுது தான் புரிகிறது. புலத்தில் தமிழ் படித்ததால் எனக்குத்தமிழ் விளக்கம் குறைவு. மன்னித்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்ச வெளிநாடுகளில கோயில் கொடியேறி தேர் இழுத்தாத்தானே பானைபோலகிடக்கிற பியர் வண்டியையும்தள்ளிக்கொண்டு பெரியபெந்தன் சங்கிலியையும் போட்டு க்கொண்டு முன்னுக்கு நிக்கலாம்.

அப்ப நீங்கள் எந்த நாட்டிலை இருந்து வந்திருக்கிறியள்?

எங்கடை நாட்டு தேர்த்திருவிழாவிலை கள்ளுவண்டியையும் அதுக்குமுன்னாலை சிவனே எண்டு புலிப்பல்லோடை தொங்கிக்கொண்டிருக்கிற சங்கிலியையும் காணேல்லை போலை கிடக்கு?

அதுசரி எங்கடையள் சங்கிலி போட்டால் கேவலம்

கறுவல்கள் நாய்ச்சங்கிலி போட்டால் ஸ்ரையில்

முதல் இஞ்ச இருக்கிற தமிழ் ஆட்கள் யோசிச்சு நடவுங்கோ. பிறகு தாயக மக்களை பற்றி கதைப்பம்.

சென்ற கிழமை தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலை குறைடன் பல ஆயிரம் பவுண்ட் செலவு செய்து பெரிய மண்டபத்தில் ஆண்டு விழா நடாத்தினார்கள். அங்கு வரும் பெற்றோரின் பல உறவினர் அகதி முகாமில் இருக்கிறார்கள். ,கற்பிக்கும் ஆசிரியரின் சொந்தங்கள் அகதி முகாமில் இருக்கிறார்கள்.

முள்ளிவாய்க்கால் அவலக்குரல் இன்னும் காதை விட்டு அகலவில்லை.

நிர்வாகம் அது பற்றி எல்லாம் கணக்கு எடுத்ததா? ஒன்றும் இல்லை

இந்த பள்ளி ஆண்டுடன் தாங்கள் பதவி விட்டு போகமுன் ஆண்டு விழா நடாத்தியே ஆக வேண்டும் என்பது தான் நிர்வாகத்தின் குறிக்கோளாக இருந்தது. நடாத்தியும் விட்டார்கள்

இப்ப வருகிற சனிக்கிழமை பிள்ளளைகள் என்யோய் பண்ணோனமாம் விளையாட்டு போட்டியும் வைக்கினம்.

அங்கு சிறையில் இருக்கும் மக்கள் அடுத்த நாள் வாழ்வு என்னாகும் என்றுதெரியாத நிலையில் அதை எல்லாம் இலகுவாக மறந்து குறுகிய காலத்துள் அங்கு ஒன்றும் நடவாதது போல் மீண்டும் நாங்கள் கேளிக்கை கொண்டாட்டங்கள் நடாத்த மக்கள் சார்ந்த அமைப்புக்கள் முற்படுவது காட்டு மிராண்டித்தனம்.

பண்பற்ற அமைப்புக்கள்.

சரி அந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் செல்லும் வரையாதல் இப்படியான கேளிக்கை கொண்டாட்டங்களை மக்கள் சார்ந்த அமைப்புக்கள் நடாத்தாமல் தவிர்ப்பதே

பண்பானது..

இப்பாடசாலை தமிழை வளர்க்க அரும் பாடு படுகிறதாம். அனால் அந்த தமிழரின் உணர்வை மதிக்கவில்லை

இப்பாடசாலை தமிழை வளர்க்க அரும் பாடு படுகிறதாம். அனால் அந்த தமிழரின் உணர்வை மதிக்கவில்லை

சிந்தித்து பார்த்தால் மனித குலமே எல்லாம் சுயநலவாதிகள்தான் நான் உள்ப்பட ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.