Jump to content

எனக்கு பெண் பார்கிறாங்களங்கோ.......


Recommended Posts

பதியப்பட்டது

எனக்கு பெண் பார்கிறாங்களங்கோ.......

ஆமா....வயசு வந்திடிச்சு......(வயசுக்கு வந்து நீண்ட காலம் ஆயிட்டுது...அது வேற கதை)அது தானுங்கோ கல்யாண வயசு....... காதலின் விண்ணப்பங்கள் எல்லாத்தையும் ஒருபடி சமாளிச்சு அந்த வலையில மாட்டுப்பட்டு எனது கற்பை(?) கரைச்சிடாமல் ஒருவாறு நெளிஞ்சு.... சுளிஞ்சு.... இந்தளவிற்கும் வந்தாச்சு.....

இப்போ பெண் பார்க்கிறாங்களங்கோ......பெரியவ

Posted

ஆஆ.... சிக்கல்தான்.. :lol:

கல்யாண வாழ்க்கை அமைவது எண்டிறது ஹிட் ஓ மிஸ் (Hit or miss) தான்.. எதற்கும் நல்லதோர் இல்லறம் அமைய வாழ்த்துக்கள்..! :D

இந்த‌ உல‌கில் ந‌ல்ல‌வ‌ர் கெட்ட‌வ‌ர் என்று யாரும் இல்லை.. நீங்க‌ள் எவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வ‌ர் என்ப‌தை உங்க‌ள் சூழ்நிலைக‌ளே தீர்மானிக்கின்ற‌ன‌. சில சூழ்நிலைகளில் நல்லவராக நடந்துகொள்பவர் வேறு ஒரு சூழ்நிலையில் கெட்டவராக நடந்து கொள்ளலாம். அந்த ஒரு சூழ்நிலை ஏற்படாத வரையில் அவர் நல்லவராகவே தென்படுவார். ஆளாளுக்கு எந்தச் சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வார்கள் என்பது வேறுபடுகிறது. அதனால்தான் உலகில் நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் யாருமில்லை. இதை ம‌ட்டும் இருவ‌ரும் ம‌ன‌தில் வைத்துக்கொண்டால் போதும். இல்வாழ்க்கை மிஸ் ஆகாது .. ஹிட்தான்.... :lol:

(ச்சே.. எப்பிடி இந்த மாதிரியெல்லாம்..? முடியல... :lol: )

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு பெண் பார்கிறாங்களங்கோ.......

ஆமா....வயசு வந்திடிச்சு......(வயசுக்கு வந்து நீண்ட காலம் ஆயிட்டுது...அது வேற கதை)அது தானுங்கோ கல்யாண வயசு....... காதலின் விண்ணப்பங்கள் எல்லாத்தையும் ஒருபடி சமாளிச்சு அந்த வலையில மாட்டுப்பட்டு எனது கற்பை(?) கரைச்சிடாமல் ஒருவாறு நெளிஞ்சு.... சுளிஞ்சு.... இந்தளவிற்கும் வந்தாச்சு.....

இப்போ பெண் பார்க்கிறாங்களங்கோ......பெரியவ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இது தொடர்பாக அட்வைஸ் வழங்க சொந்த அனுபவம் ஏதும் இல்லை என்றாலும் ஊர் உலகத்தில் அவதானிச்சதை வைச்சுச் சொல்லுறன்..

நீங்களே உங்களை.. பாழாங் கிணற்றுக்க தள்ளப் போறீங்க என்று மட்டும் தெரியுது. முறிவு நெறிவின்றி வெளியில வந்திட்டா அதிஸ்டசாலி..! இல்ல... துரதிஸ்டசாலி..!

எதுஎப்படியோ.. பாழாங் கிணற்றுக்க பாய்ஞ்சு பார்க்கிறது என்று துணிஞ்சு முடிவெடுத்தது பாராட்டத்தக்கதே..! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இது தொடர்பாக அட்வைஸ் வழங்க சொந்த அனுபவம் ஏதும் இல்லை என்றாலும் ஊர் உலகத்தில் அவதானிச்சதை வைச்சுச் சொல்லுறன்..

நீங்களே உங்களை.. பாழாங் கிணற்றுக்க தள்ளப் போறீங்க என்று மட்டும் தெரியுது. முறிவு நெறிவின்றி வெளியில வந்திட்டா அதிஸ்டசாலி..! இல்ல... துரதிஸ்டசாலி..!

எதுஎப்படியோ.. பாழாங் கிணற்றுக்க பாய்ஞ்சு பார்க்கிறது என்று துணிஞ்சு முடிவெடுத்தது பாராட்டத்தக்கதே..! :D

நெடுக்ஸின் இந்த கருத்து , பயங்கர வைத்தெரிச்சலில் எழுதியதாகவே எனக்கு படுகின்றது .

" தானும் கிடவான் ...... தள்ளியும் படுக்கான் " என்னும் பழமொழி என்ன கோதாரிக்கோ ....... இந்த நேரம் ஞாபகம் வந்து தொலைக்குது .

Posted

எனக்கு இது தொடர்பாக அட்வைஸ் வழங்க சொந்த அனுபவம் ஏதும் இல்லை என்றாலும் ஊர் உலகத்தில் அவதானிச்சதை வைச்சுச் சொல்லுறன்.. நீங்களே உங்களை.. பாழாங் கிணற்றுக்க தள்ளப் போறீங்க என்று மட்டும் தெரியுது. முறிவு நெறிவின்றி வெளியில வந்திட்டா அதிஸ்டசாலி..! இல்ல... துரதிஸ்டசாலி..! எதுஎப்படியோ.. பாழாங் கிணற்றுக்க பாய்ஞ்சு பார்க்கிறது என்று துணிஞ்சு முடிவெடுத்தது பாராட்டத்தக்கதே..! :D

இதையே ஓரு பெண் எனக்கு ஆண் பார்கிறாங்களங்கோ என்று சொல்லி இஞ்ச எழுதி இருந்தால் சொல்லுவீங்களோ? இந்த விசயத்தை மேல டங்குவார் சொன்னமாதிரி ஹிட் அல்லது மிஸ் என்கின்ற வகையிலதான் அணுகவேண்டி இருக்கிது. மற்றும்படி ஆண், பெண் என்று பிரித்துப்பார்க்க ஏலாது. இரண்டு வகைகளிலும் கொள்ளிக்கட்டைகள் இருக்கிது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

எனக்கு இது தொடர்பாக அட்வைஸ் வழங்க சொந்த அனுபவம் ஏதும் இல்லை என்றாலும் ஊர் உலகத்தில் அவதானிச்சதை வைச்சுச் சொல்லுறன்..

நீங்களே உங்களை.. பாழாங் கிணற்றுக்க தள்ளப் போறீங்க என்று மட்டும் தெரியுது. முறிவு நெறிவின்றி வெளியில வந்திட்டா அதிஸ்டசாலி..! இல்ல... துரதிஸ்டசாலி..!

எதுஎப்படியோ.. பாழாங் கிணற்றுக்க பாய்ஞ்சு பார்க்கிறது என்று துணிஞ்சு முடிவெடுத்தது பாராட்டத்தக்கதே..! :D

^_^

நெடுக்காலபோவான், பாழாங்கிணத்தில குதிக்கிறது என்றது காதலிக்கிறதுக்கு தான் சரி.... கல்யாணம் என்றது அதுக்கும் ஒரு படி மேல...

அது கழுத்தில ஒரு பெரிய கருங்கல்லை கட்டி கொண்டு ஆழ் சமுத்திரதுக்குள்ள dive அடிக்கிறது மாதிரி!!!! :)

ஆழ் சமுத்திரதுக்குள்ளால இரண்டு திருக்கையுடன் மீண்டு வர எனது வாழ்த்துக்கள் நளீம்... :lol::lol:

(ok ok, All the best dude! :lol: )

Posted

சும்மா ஆளாளுக்குப் பயபப்பிடுத்தாதேய்ங்கோ... பாவம் நளீம்...

பெருசுகள் பார்க்கிற எல்லாத்துக்கும் மண்டைய, மண்டைய ஆட்டாமல்... உங்களுக்கு என்று ஒரு ரசனை இருந்தால் அதை முன்கூட்டியே பெரியவாளின் காதில போட்டு வைக்கிறது நல்லது... பிறகு கொஞ்சக்காலம் போனாப்பிறகு மனம் மாறாமல்... வாழப் போறது நீங்களும் உங்களுக்கு வரப் போற பெண்ணும்.... அதனால எல்லாத்தையும் பெருசுகளிட்ட பொறுப்பைக் குடுக்காமல்...(இப்ப இருக்கிற பெருசுகளுக்கு மூக்கு நீளம், சின்னனுகளுக்கு வாய் நீளம்...) நீங்களும் முடிவுகளை துணிஞ்சு எடுக்கவேணும் என்பது ஒரு சின்ன அறிவுரை...

நிலையான, நிமதியான வாழ்வு அமைய வாழ்த்துக்கள் நளீம் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானுந்தான் எனக்கு பொண்ணு பார்க்கிறேன். ஒண்ணுமே மாட்டுப்படுது இல்லை :D

Posted

அட கனபேர் கலியாணம் கட்ட இருக்கினம்... எது எது எப்ப எப்ப எப்பிடி எப்பிடி நடக்க இருக்கோ, அது அது அப்ப அப்ப அப்பிடி அப்பிடி நடக்கும்... கவலைப் படாதேங்கோ... :D

கலியாணம் கட்டப் போவோருக்கு ஒரு சமர்ப்பணம்.... எதோ என்னால முடிஞ்சது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கலியாணம் கட்டப் போவோருக்கு ஒரு சமர்ப்பணம்.... எதோ என்னால முடிஞ்சது....

:lol:

மிக அருமையான பாட்டு!!!!!

இணைப்பிற்கு நன்றி குட்டி :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்ஸின் இந்த கருத்து , பயங்கர வைத்தெரிச்சலில் எழுதியதாகவே எனக்கு படுகின்றது .

" தானும் கிடவான் ...... தள்ளியும் படுக்கான் " என்னும் பழமொழி என்ன கோதாரிக்கோ ....... இந்த நேரம் ஞாபகம் வந்து தொலைக்குது .

அண்ண நீங்கள் பட்ட அவஸ்தையை மற்றவனும் படட்டும் என்று மாட்டிவிடப் பார்க்கிறீங்க. பாவம் அண்ண.. அந்தாளை விடுங்க. அப்பாவியா தெரியுறாரு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானுந்தான் எனக்கு பொண்ணு பார்க்கிறேன். ஒண்ணுமே மாட்டுப்படுது இல்லை :)

முதலில பெயரை மாத்துங்க.. இதென்னடா பொண்ணு.. பொண்ணைப் பார்க்குதென்று தப்பா நினைக்கப் போறாங்க...! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானுந்தான் எனக்கு பொண்ணு பார்க்கிறேன். ஒண்ணுமே மாட்டுப்படுது இல்லை :lol:

நானும் தான் எனக்கு ஒரு பெடியன் பாக்கிறன் கிடைக்கிறான் இல்லை...

நான் பொன்னா பிறந்தது வேஸ்ட் :):lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் தான் எனக்கு ஒரு பெடியன் பாக்கிறன் கிடைக்கிறான் இல்லை...

நான் பொன்னா பிறந்தது வேஸ்ட் :lol::)

பையனின் குறும்பை பார்த்து ரசித்தேன் .

Posted

எனக்கு பெண் பார்கிறாங்களங்கோ.......

ஆமா....வயசு வந்திடிச்சு......(வயசுக்கு வந்து நீண்ட காலம் ஆயிட்டுது...)அது தானுங்கோ கல்யாண வயசு....... காதலின் விண்ணப்பங்கள் எல்லாத்தையும் ஒருபடி சமாளிச்சு அந்த வலையில மாட்டுப்பட்டு எனது கற்பை(?) கரைச்சிடாமல் ஒருவாறு நெளிஞ்சு.... சுளிஞ்சு.... இந்தளவிற்கும் வந்தாச்சு, இப்பதான் தோனுது இதைவிட காதலிச்சேயிருக்கலாம் என்று.....இப்பதான் என்னையே கட்டிக்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்ற எனது தோழிகள், கட்டினால் உன்னைத்தான் என்று அடம்பிடித்து இன்று 2 பிள்ளைக்கு தாயாகி(திருமணமாகி) கனடாவில் வசிக்கும் இன்னொரு பள்ளித் தோழி.... பள்ளி நாட்களில் காதல் அரும்பும் வயசில் நான் மட்டும் ஏதோ மன்மதன் என்ற நினைப்பில் என் நண்பனைக் காதலித்தவளின் தோழி என் நண்பனினூடாக தனது காதல் ஆசையை என்னிடம் வெளிப்படுத்தியபோதும்...உள்ளு

Posted

முதலில எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களிற்கும் எனது நன்றிகள்.

நானுந்தான் எனக்கு பொண்ணு பார்க்கிறேன். ஒண்ணுமே மாட்டுப்படுது இல்லை

நானும் தான் எனக்கு ஒரு பெடியன் பாக்கிறன் கிடைக்கிறான் இல்லை...

இஞ்ச பாருங்கோ நான் கே, அல்லது லெஸ்பியனோ இல்லைப்பாருங்கோ....காரணம் அவைகளும் இங்கை உலாவினம் போல கிடக்குது(அது அவையின்ர உரிமை பாருங்கோ அதை நான் மதிக்கின்றன் ஆனால் எதற்கும் சும்மா ஒருக்கா உறுதிப்படுத்துறதுக்குத் தான்...ஏன் என்றால் போற போக்கைப் பார்த்தால் சாத்திரம் சம்பிரதாயம் எல்லாம் பெரிய நுணுக்கமாக பார்த்து கஸ்ரப்பட்டு கரைச்சல் பட்டு இந்த பெரிசுகள் பொருந்திட்டு பார்க்கும்போது கடைசியா ஆம்பிளை தான் அமைஞ்சிடுமோ என்று பயமாகிடக்கு பாருங்கோ.... ஏன் என்றால் சாத்திரத்தை பார்க்கிற அளவிற்கு ஏனையவையைப்பார்க்கிறதா தெரியலை )

நீங்கள் வயதுக்கு வந்த முதல் நாளை , எப்பிடி அறிஞ்சீங்கள் . அதையும் எழுதினால் நாங்கள் வாசிப்போம் தானே .......

சிறி அண்ணை நீங்க என்னதான் இருந்தாலும் இதெல்லாம் பப்ளிக்கில....ச்சீச்சீ....என்ன பழக்கமிது....எத்தினை வயசுக்கு வராதவர்கள் எல்லாம் வாற இடம்......கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ.....

உங்கடை கற்பை கரைக்காமல் இருந்தனீங்கள் எண்டு சொல்லுறியள் ..... அதை நாங்கள் நம்புறம் .

ஏன் மதுரையை நான் இனி எரித்துக் காட்டியா உங்களிற்கு நிரூபிக்கிறது....

திருமணம் என்பது காசு , அழகு போன்றவற்றில் மயங்கி செய்யக் கூடாது .

உங்களின் எண்ணங்களும் ( சிந்தனை ) ....... வருங்கால மனைவியின் எண்ணங்களும் கிட்டத்தட்ட ஒரு நேர்கோட்டில் இருந்தால் வாழ்க்கையில் எந்த இடையூறும் ஏற்படாது .

மிகவும் யதார்த்தபூர்வமான கருத்துக்கள்...நன்றிகள்.....

ஆழ் சமுத்திரதுக்குள்ளால இரண்டு திருக்கையுடன் மீண்டு வர எனது வாழ்த்துக்கள் நளீம்...

(ok ok, All the best dude! )

நன்றி இளையபிள்ளை உங்களது வெருட்டுக்கும் வாழ்த்துக்கும்.....

உங்களுக்கு என்று ஒரு ரசனை இருந்தால் அதை முன்கூட்டியே பெரியவாளின் காதில போட்டு வைக்கிறது நல்லது... பிறகு கொஞ்சக்காலம் போனாப்பிறகு மனம் மாறாமல்... வாழப் போறது நீங்களும் உங்களுக்கு வரப் போற பெண்ணும்.... அதனால எல்லாத்தையும் பெருசுகளிட்ட பொறுப்பைக் குடுக்காமல்...(இப்ப இருக்கிற பெருசுகளுக்கு மூக்கு நீளம், சின்னனுகளுக்கு வாய் நீளம்...) நீங்களும் முடிவுகளை துணிஞ்சு எடுக்கவேணும் என்பது ஒரு சின்ன அறிவுரை...

நிலையான, நிமதியான வாழ்வு அமைய வாழ்த்துக்கள் நளீம்

மிவும் அருமையான நடைமுறையான கருத்துக்கள்.....

பெருசுகள் பார்க்கிற எல்லாத்துக்கும் மண்டைய, மண்டைய ஆட்டாமல்...

இதைதான் நான் இப்போ யதார்த்த பூர்வமாக கற்றிருக்கின்றேன்....

Posted

இப்ப பெண்கள் அதுவும் வெளிநாடுகளில இருக்கிற எங்கடை பெண்கள் ரொம்ப உசாரானவங்க. உங்கடை பழைய ஊர்க் கதைகளை அதுவும் கலியாணம் கட்டப்போற இந்த நேரத்தில சொல்லத்துவங்கி காரியத்தை கெடுக்கப்போறீங்கள் போல இருக்கிது. கலியாணம் எல்லாம் முடிஞ்சு ஆறுதலாய் மனுசியோடவந்து உங்கடை வீர தீரச் செயல்களை சொல்லுங்கோ. அலைவரும்போதே தலை முழுகாமல் இருந்து இருக்கிறீங்கள். என்னமோ எல்லாம் நல்லபடியாய் உங்களுக்கு நடக்கவேணும் எண்டு அப்புச்சாமியிட்ட வேண்டிக்கொள்ளுங்கோ. வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விதி யாரைத்தான் விட்டுது :lol: என்றாலும் வாழ்த்துக்கள் :)

இப்ப பெண்கள் அதுவும் வெளிநாடுகளில இருக்கிற எங்கடை பெண்கள் ரொம்ப உசாரானவங்க. உங்கடை பழைய ஊர்க் கதைகளை அதுவும் கலியாணம் கட்டப்போற இந்த நேரத்தில சொல்லத்துவங்கி காரியத்தை கெடுக்கப்போறீங்கள் போல இருக்கிது. கலியாணம் எல்லாம் முடிஞ்சு ஆறுதலாய் மனுசியோடவந்து உங்கடை வீர தீரச் செயல்களை சொல்லுங்கோ. அலைவரும்போதே தலை முழுகாமல் இருந்து இருக்கிறீங்கள். என்னமோ எல்லாம் நல்லபடியாய் உங்களுக்கு நடக்கவேணும் எண்டு அப்புச்சாமியிட்ட வேண்டிக்கொள்ளுங்கோ. வாழ்த்துகள்!

இதுவும் ஆப்புதான் :lol:

Posted

நீங்களும் 24மணிநேரமும் உசாராய்த்தான் இருக்கிறீங்கள் போல சஜீவன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கிறீங்க எண்டு நல்லா தெரியுது. அதையே தொடருணுமெண்ணா நான் சொல்றபடி செஞ்சு பாருங்க.

பெண் பாக்கிற அத்தனை பேரும் பெண்ணை தங்க இஸ்டத்துக்குதான் பாப்பாங்க? அதனாலை அது கடசிலை உங்களுக்குப் பாத்ததா இருக்காது.

இது தெரிய வரும்போது எப்படியும் ஒரு 5-10 வருசம் கடந்திருக்கும். 2 புள்ள குட்டியும் பிறந்திருக்கும்.

பிறகு நீங்களாவே உங்களுக்கு பெண்பாக்க வேண்டியநிலைமை ஒண்ணு வந்தா நீங்க பல பெண்களைப் போய் பாக்கவேண்டி வரும்.

அதனாலை முதல்லையே உங்கடை பெண்ணை நீங்களே பாத்திடுங்கோ, நல்லதோ கெட்டதோ அதுக்கு நீங்கள்தானே பொறுப்பு.

இதுதான் இப்போதைக்கு நான் சொல்லக்கூடியது.

Posted

எனக்கென்று ஆசைகள் உள்ளது....

கனவுகள் உள்ளது.....

குறிக்கோள் உள்ளது.....

எனது தேவதை இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது....(அழகைச் சொல்லவில்லை - சுமாராக இருந்தாலே போதும்)....

எத்தனையோ ஆயிரம் பேர்களுடன் பழகினாலும்...சிலருடன்தான் திரும்பத்திரும்ப பழகச் சொல்லும்...சிலருடன் தான் நாம் சிலவற்றை பரிமாறலாம் என்று தோன்றும்....சிலரால் தான் எமக்குள் ஓர் அமைதியான சந்தோசம் தோன்றும்.....

எங்கள் எதிர்பார்ப்பெல்லாம் அது அல்லவா.....யாரவள்......

இவளோடு பாழகனும்....

இவளோடே வாழனும் என்று தோன்றுமே.......

எங்களின் அந்த உணர்விற்கு மதிப்பளித்து எவருமே பெண்பார்ப்பதாக தெரியவில்லை......

சுற்றத்தாரின் அன்பை பெற நாமும் ஒத்துழைத்தோம்....ஏன் அவர்கள் மட்டும் எம்மை தங்களின் சுயநலங்களிற்கு பலியாக்கப் பார்க்கின்றார்கள்( எனக்குப் புரிகின்றது அவர்கள் எல்லோரும் சுயநலவாதிகள் அல்ல. அவர்கள் என் மீது கொண்ட பாசத்தாலும் என்னைப் பற்றிய அவர்களது உயர்ந்த எண்ணமுமே அவர்களை அப்படி செய்யவைக்கின்றது...ஆனால் அவர்களும் ஏன் என் உணர்வைப் பார்க்க இந்த விடயத்தில் மறந்து விடுகின்றார்கள்....????)

இப்படியாக பெண்பார்க்கும் படலம் ஆரம்பத்திலிருந்தே எனக்குள் வாழ்க்கையின் நிறையப் பாடங்களைக் கற்றுத்தருகின்றது....அது உங்களிற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கே பதிகின்றேன்......அடுத்து இந்த பெண்பார்க்கும் படலத்தில் வேறு என்ன எல்லாம் பார்க்கின்றார்கள் எனவும் என்ன என்ன தடைகள் சுவாரஸ்யங்கள் மற்றும் மூட நம்பிக்கைகள்....யதார்த்திற்கு புறம்பான நடைமுறைகள்.....என்பவை பற்றி தொடர்ந்து நடைபெறும் உண்மை அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன் காத்திருங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவளோடு பாழகனும்....

நலிம்: பா இல இருக்கிற அரவை (ா) எடுத்தாலும் சரியா இருக்குது (பழகனும்) அல்லது ழ க்கு ஒரு அரவை (ா) வைப் போட்டாலும் சரியா இருக்குது (பாழாகனும்). இதிலை எது சரி? :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னை பொறுத்தவரையில் நேர காலத்துடன் பார்த்து .....பெற்றவர் அனுமதி பெற்று . பழகி ........

..கலியாணம் வரை செல்வதே சிறந்தது . i

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மனைவி அமைவதென்றால் இறைவன் கொடுத்த வரம்

பணம் வரும் போகும்,

அழகு நிலையில்லை.

குணம் தான் பெரிது.

நல்ல குணமான பெண்தான்

நல்ல குடும்பம்.

பென்மன்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.