Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய இராணுவத்தினர் 5000 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய இராணுவத்தினர் 5000 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்?

இலங்கை வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 5 ஆயிரம் இந்திய இராணுவம் கொழும்பு வந்தடைந்திருப்பதாக தமிழகத்தில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கண்ணி வெடிகளை அகற்றவென இந்திய இராணுவத்தினர் 500பேர் இலங்கை வரவுள்ளனர் என்று பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக அண்மையில் தெரிவித்தார்.

ஆனால் தற்போது 5 ஆயிரம் வீரர்கள் வரை வந்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குச் சென்று பணியைத் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த இதழில் மேலும் கூறியிருப்பதாவது:

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதை சிறீலங்கா அரசு உடனடியாக நிறுத்திவிட்டது. இனித் தங்களுக்கு ஆயுதங்கள் தேவையில்லை என்று சிறீலங்காஅரசு அறிவித்துள்ள போதிலும், இந்திய அரசின் கண்டிப்புத்தான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 5 ஆயிரம் இந்திய வீரர்கள் இலங்கை சென்றுள்ளனர். ஐந்நூறு வீரர்கள் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ராஜபக்சவின் சகோதரர்கள் டில்லிக்குச் சென்றிருந்தபோது, நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக அவர்களது கோக்கையை ஏற்று 5 ஆயிரம் வீரர்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது.

தமிழர்களை விரைவில் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும் என்றும் இந்தியா கண்டிப்புடன் கூறியுள்ளது என அந்த இதழில் தெவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்திலுள்ள கொச்சின் துறைகம் வழியாகவே இந்திய வீரர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாகவும், அவர்களுடன் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் நவீன கருவிகளும் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்திய அரசு இதனை உறுதி செய்யவில்லை.

http://www.meenagam.org/?p=5947

சில வாரங்களுக்கு முன்

நெடுங்கேணியில் 200 குரங்குகள் அவுட்

கிளிநொச்சி அண்டியபகுதியில் 175 வரையிலான பன்றிகள் அவுட்

முல்லைத்தீவு காட்டுப்பகுதிக்கு மேச்சலுக்குச்சென்ற 1500 செம்மறிகளில்

10 மட்டும்தான் திரும்பியதாம் 1490 செம்மறிகளை காணவில்லையாம்

5000 எருமைகள் ஏர் பூட்டி உழவா வருகிறது?

யூகித்துக்கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"யோக்கியன் வாரான் செம்பை எடுத்து உள்ளே வை" என்ற கதைதான்.

ஆண்குறியோடி வெறிபிடித்தலையும் 'பொந்தியன் இராணுவம்' இனி எண்பதுகளில் ஈழத்தில் நடாத்திய 'சாதனை'களை மீண்டும் நிகழ்த்தாமல் இருக்க வேண்டும்.

0719-01.jpg

Naked women protestors shout slogans against the alleged rape, torture and murder of Thangjam Manorama by paramilitary soldiers in Imphal, capital of northeastern Indian state of Manipur, Thursday, July 15, 2004. In a highly unusual protest, some 40 women stripped naked and staged an angry demonstration outside the Assam Rifles base to protest the death in custody of 32-year old Manorama. (AP Photo/Str)

http://www.commondreams.org/headlines04/0719-03.htm

கன்னிவெடியகற்ற 5000? யாரப்பா கணக்கில வீக்கு? முதல்ல ஏதோ 500 எண்டாபில?

ஆணியை புடுங்கவேண்டாம்!

கன்னிவெடியகற்ற 5000? யாரப்பா கணக்கில வீக்கு? முதல்ல ஏதோ 500 எண்டாபில?

ஆணியை புடுங்கவேண்டாம்!

ஒரு 0 தானே அதிகம். அதற்குப் பெறுமதியில்லையென்று 0 ஐச் சேர்த்திருப்பார்களோ?

சிறீலங்கா படைகளைப் பலப்படுத்துவோம் என்கிறது பாகிஸ்தான்.- இந்தியாவிற்குப் போட்டியாக பாகிஸ்தான் களத்தில் இறங்கியுள்ளது.

சிறீலங்கா படைகளை பலப்படுத்த மேலும் உதவி செய்யப்படும் என, பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.எகிப்தில் சிறீலங்கா அதிபருடன் இடம்பெற்ற சந்திப்பு பற்றி பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா ஜிலானி பாகிஸ்தானி ஊடகம் ஒன்றிற்கு செவ்வி வழங்கியுள்ளார்.

இதன்போது, சிறீலங்கா படைகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இலவச பயிற்சியை வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், சிறீலங்கா படைகளைப் பலப்படுத்த மேலதிக உதவிகளைச் செய்ய இருப்பதாகக் கூறினார். சிறீலங்காவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் திறந்த பொருண்மியக் கொள்கைக்கான உடன்படிக்கை செய்யப்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தானியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்குப் போட்டியாக இந்தியா மிகநெருக்கமான வர்த்தக உறவை சிறீலங்காவுடன் கொண்டுள்ள நிலையில், இந்தியாவிற்குப் போட்டியாக பாகிஸ்தான் களத்தில் இறங்கியுள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சரை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் கொழும்பிற்கு வருமாறு சிறீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பிற்கும் இந்த சந்திப்பில் நன்றி கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் பயங்காரவாதத்தை எதிர்நோக்கி இருப்பதாகத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் யூசுப், அதனை ஒழிக்க பிராந்திய ரீதியாக இரு நாடுகளும் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

http://www.seithy.com/

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் புலிகளின் "மெளன கீதம்"

கன்னிவெடியகற்ற 5000? யாரப்பா கணக்கில வீக்கு? முதல்ல ஏதோ 500 எண்டாபில?

ஆணியை புடுங்கவேண்டாம்!

இப்படி இருக்கலாம், ஒரு வேலை புலிகள் கன்னி வெடியை புதைத்து விட்டு வந்த விதம் அவ்வளவு நுட்பம் மிக்கதாக இருக்கலாம், அதனால் ஒரு கன்னி வெடிக்கு ஒரு ஆள் வீதம் தேவைப்படுது போல

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி. இப்ப என்ன செய்யிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் அண்டு தொடக்கம் என்ன சொல்லுறம்?????????????

இந்தியாதான் எங்கடை பிரச்சனையை தீர்த்து வைக்கோணுமெண்டு???

பிறகு என்ன கோதாரிக்கு இப்ப வள் வள் எண்டு கத்துறியள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.