Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

515320075_9504bd90d7.jpg

Nallur.jpg

22208786_7af1e8d98a.jpg

303740174_6f284cd633_o.jpg

வீரகேசரி இணையம் - வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்த திருவிழா உற்சவம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது.

ஆலய சுற்றாடலில் பொது மக்களின் நன்மை கருதி நான்கு வீதிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆலய சுற்றாடலில் பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாருடன் சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஊள்ளூர் தொண்டர் அமைப்புகளும் கடமையில் ஈடுபடவுள்ளன.

Edited by தமிழ் சிறி

தேரில் ஏறினாய் தினமும் தீர்த்தமாடினாய் தமிழ்மக்கள் துயர்தீர்க்க எப்ப மலையில் ஏறுவாய் என்று கவி வடித்தவும் இன்று சிறையில் ...

நல்லூர் கந்தனுக்கு அரோகரா

  • கருத்துக்கள உறவுகள்

கொடியேற்றம் முக்கியம்தான். ஆனால் உந்தக் கொடிக்கம்பத்தில இருந்து வெறும் 90 மைல் தூரத்தில முற்கம்பிக்குப் பின்னால சித்திரவதை அனுபவிக்கிற 3 லட்சம் சனத்தையும் கொஞ்சம் யோசிப்பம். குறைஞ்சது அவர்களுக்கு விரைவாக விடுதலை வேண்டும் என்றாவது முருகனைக் கேட்பம்.

இம்முறை வரலாற்றில் என்றும் நடந்திராதளவு சிறப்பாக திருவிழா நடக்கவேண்டும். கந்தனை மகிழ்ச்சிக் கடலில் நீராட்ட ஒவ்வொருவரும் ஒத்துளைத்தால் நிச்சயம் வன்னி மக்களுக்கு ஒரு விடிவை கந்தன் ஏற்படுத்த வாய்ப்பிருக்கின்றது. இதை உள்ளூர உணர்ந்த டக்களஸ் அவர்கள் திருவிளாக்களுக்கு அதிக செலவு செய்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. இந்த விசயத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் அவருக்கு கடமைப்பட்டுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் துன்பம் நீங்க ........

இன்றையிலிருந்து மீன் , இறைச்சி சாப்பிடாமல் தினமும் குளித்து ...... நல்லூர் கந்தனுக்கு எல்லாரும் விரதம் பிடியுங்கோ .

நாற்பதினாயிரம் தமிழ் மக்கள் மண்ணுக்குள், மூன்று இலட்சம் தமிழர்கள் வெஞ்சிறைக் கூண்டுக்குள். உனக்கோ கொடியோடு கொண்டாட்டம். ம்.....! அரோகரா. வள்ளி தெய்வயானையாவது கவனமாகப் பார்த்துக் கொள். அரோகரா.

ஜானா

இந்தா...... இப்படி கடவுள்மாரோட சண்டைக்குபோய்தான்.. இப்படியிருக்கிறோம்...

இனியாவது சபேசனுடைய பக்கத்திக்குபோவதை தவிர்க்கவும்...

தெய்வகுத்தமாயிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேடுகெட்ட தமிழினமே!

உனக்கு சகல வசதி செய்து தந்திருந்தும் அதனை உன்னால் தந்திரோபமாக காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.

அதை விட்டு இன்னும் மற்றவர்களையே பிழை பிடிப்பதில் தீவிரமாயிருக்கின்றாய்?

தமிழ் மக்களின் துன்பம் நீங்க ........

இன்றையிலிருந்து மீன் , இறைச்சி சாப்பிடாமல் தினமும் குளித்து ...... நல்லூர் கந்தனுக்கு எல்லாரும் விரதம் பிடியுங்கோ .

:D

nallur_20090727001.jpg

nallur_20090727002.jpg

nallur_20090727003.jpg

nallur_20090727008.jpg

nallur_20090727006.jpg

nallur_20090727009.jpg

nallur_20090727007.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றையிலிருந்து மீன் , இறைச்சி சாப்பிடாமல் தினமும் குளித்து ...... நல்லூர் கந்தனுக்கு எல்லாரும் விரதம் பிடியுங்கோ .

:D

தினமும் குளித்து என்றவுடன் ........ குட்டி ஏன் முகத்தை சுழிக்கிறார். :D

இந்தா...... இப்படி கடவுள்மாரோட சண்டைக்குபோய்தான்.. இப்படியிருக்கிறோம்...

இனியாவது சபேசனுடைய பக்கத்திக்குபோவதை தவிர்க்கவும்...

தெய்வகுத்தமாயிடும்.

நீங்கள் சொல்வது பகிடி இல்லை, உண்மையயித்தான் சொல்லியிருக்கிறீர்கள், எமக்கு என ஒரு தலைவன், 30 நாட்கள் இடுப்பளவு தண்ணியில், சாப்பாடு இல்லாமல், தூக்காம் இல்லாமல் இத்தாவிலில் நின்று போராடிய மாவீரர்கள் இருக்க தேவை இல்லாமல் என்கோ கிடந்த ஒரு பைத்தியக்க்காரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்களே அதற்குத் தான் எமது முழு இனமும் இப்போது அழுகிறது,

அது சரி கடவுள் இல்லை என்பவனெல்லாம் ஏன் கோவிலுக்கு முன் போய் கத்துகிரார்கள், தேவாலயத்திற்கு முன்போ அல்லது பள்ளி வாசலுக்கு முன்போ போய் காத்த வேண்டியது தானே

,

அது சரி கடவுள் இல்லை என்பவனெல்லாம் ஏன் கோவிலுக்கு முன் போய் கத்துகிரார்கள், தேவாலயத்திற்கு முன்போ அல்லது பள்ளி வாசலுக்கு முன்போ போய் காத்த வேண்டியது தானே

உயிருடன் இருக்க வேண்டும் என்றால் கோயிலுக்கு முன் தான் கத்தலாம்,தேவாலயம் ,பள்ளிவாசலுக்கு முன் கத்தினா ஆளை அடுத்த நிமிடமே கடவுளிடம் பக்கத்தில நிக்கிறவன் அனுப்பி போடுவான்

உயிருடன் இருக்க வேண்டும் என்றால் கோயிலுக்கு முன் தான் கத்தலாம்,தேவாலயம் ,பள்ளிவாசலுக்கு முன் கத்தினா ஆளை அடுத்த நிமிடமே கடவுளிடம் பக்கத்தில நிக்கிறவன் அனுப்பி போடுவான்

அது தானே, கடவுள் இல்லை என்று சொன்னால், நீ நேரடியாகவே போய் கடவுளைப் பார்த்து விட்டு வந்து கடவுள் இருக்கீராரா இல்லையா என்று சொல் என்று நேரடியாகவே

அனுப்பிவிடுவானே !!!!!!! :D :D :D:blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா அரோகரா

தினமும் குளித்து என்றவுடன் ........ குட்டி ஏன் முகத்தை சுழிக்கிறார். :D

நான் முகம் சுழிக்க இல்லை... முக்கியமாததைச் சொல்லி இருக்கிறீர்கள்... சனம் குளிச்சாலே பாதிப் பிரச்சனை தீர்ந்து போகுது...அதை நினைச்சுத் தான் சிரிச்சன்...

...

அது சரி கடவுள் இல்லை என்பவனெல்லாம் ஏன் கோவிலுக்கு முன் போய் கத்துகிரார்கள், தேவாலயத்திற்கு முன்போ அல்லது பள்ளி வாசலுக்கு முன்போ போய் காத்த வேண்டியது தானே

உயிருடன் இருக்க வேண்டும் என்றால் கோயிலுக்கு முன் தான் கத்தலாம்,தேவாலயம் ,பள்ளிவாசலுக்கு முன் கத்தினா ஆளை அடுத்த நிமிடமே கடவுளிடம் பக்கத்தில நிக்கிறவன் அனுப்பி போடுவான்

கடவுள் பக்தி இல்லாதவர்களுக்கு கோவிலும் ஒன்று தான் தேவாலயம், பள்ளிவாசலும் ஒன்று தான்... எந்த மதத்தையும் அனாவசியமா குறைகாதேங்கோ...

நன்றி

...

கடவுள் பக்தி இல்லாதவர்களுக்கு கோவிலும் ஒன்று தான் தேவாலயம், பள்ளிவாசலும் ஒன்று தான்... எந்த மதத்தையும் அனாவசியமா குறைகாதேங்கோ...

நன்றி

கடவுளே இது என்ன சோதனை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் உதவி வேண்டும் என்று கத்தினேன். கதறினேன். இந்த உலகத்திலுள்ள எல்லா தெய்வங்களிடமும் முறையிட்டேன். கடைசியில் உதவி வந்தது. ஆனால் அந்த உதவி எனக்குள்ளிருந்துதான் வந்தது.

--சுவாமி விவேகானந்தர்.

நல்லூர் கந்தன் ஆலயத்தில் கொடியேற்றமா? மிகவும்நல்லது. என்னை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களுக்காக சிலவற்றை இங்கே எழுதுகிறேன்.

நல்லூர் முருகன் என்று அழகு தமிழில் சொல்லாமல் கந்தன் என்று வடமொழிப் பெயரை சொல்வது ஏன்?

முருகன் என்றால் அழகன். முருகு என்றால் அழகு

சரி, கந்தன் என்றால் என்ன?

சங்க இலக்கியங்களில் தூண் என்பதை கந்து என்றும் சொல்கிறார்கள். தமிழர்களை தூண் போன்று காத்து நின்றவன் என்பதால் கந்தன் என்று பெயர் வந்திருக்குமோ?

இல்லை. ஸ்கந்த என்பதையே தமிழர்கள் கந்தன் என்று சொல்கிறார்கள். இந்தப் பெயர் வரக் காரணம் என்ன?

காரணம் விரைவில்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முருகனுக்கு அரோகரா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் முகம் சுழிக்க இல்லை... முக்கியமாததைச் சொல்லி இருக்கிறீர்கள்... சனம் குளிச்சாலே பாதிப் பிரச்சனை தீர்ந்து போகுது...அதை நினைச்சுத் தான் சிரிச்சன்...

உண்மை தான் குட்டி ,

சிலர் பல்லு விளக்கி , முகம் கழுவவே பஞ்சிப் படும் போது ........ குளிக்கிறதாவது. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்த் திருவிழாவை முன்னிட்டு தினமும் ஐந்து விசேட விமான சேவைகள் - சுற்றுலாத்துறை அமைச்சு ஏற்பாடு

வீரகேசரி நாளேடு 7/30/2009 - யாழ். நல்லூர்க் கந்தன் திருவிழாவிற்குச் செல்ல விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களின் நலன் கருதி, விமானப்படையினருடன் இணைந்து விசேட விமான சேவைகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு ஐந்து விமான சேவைகள் நடத்தப்படவுள்ளதுடன், இருவழி பயணக் கட்டணமாக 17 ஆயிரம் ரூபா மாத்திரமே அறவிடப்படும். அத்தோடு, வெளிநாடு களில் இருந்து நல்லூர் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை வருவோர்களுக்கு, 24 மணித்தியாலத்திற்குள் யாழ். செல்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுத் தரவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறை சபையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஊக்குவிப்பு அமைச்சர் பைஸர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மடுவிலும் மடு உற்சவம் நடைபெறப்போகுது உங்களில் யாருக்காவது துணிவு இருந்தால் அதையும் நக்கல் அடிப்பியலோ, செய்யமாட்டியலே உங்களது செயற்பாட்டிற்கும் அந்தக் கருணாநிதிக்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது ஏன் என்றால் அவனும் இப்படித்தான் சைவ மதம் என்றால் நிந்திப்பன், மற்றைய மதங்கள் என்ரால் முண்டியடித்துக் கொண்டு வாழ்த்துவான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.