Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி: அர்த்தம் அறியாத வயதும்.. அறிந்த வயதும்.

Featured Replies

" முத்துச்சிப்பி திறந்தது விண்ணைப் பார்த்து

மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து"

நிழலி அண்ணா இது சிலேடையா பார்க்க நல்லா இருக்கு ஆழமா பார்த்தால்....

ஆழமாக பார்த்தால் தான் அது கவிதை !!

நீங்கள் இலங்கையில் ஆண்டு 10,11 கான (க.பொ.த. (O/L)) தமிழ் இலக்கிய புத்தகம் படித்தனீங்களா. இலங்கையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்றிருந்தால் (என்னை மாதிரி இளவயது (!!!) காரனானகவும் இருந்தால்) படித்திருப்பீர்கள்.. அதில் நளவெண்பா எனும் அத்தியாயம் இருக்கும்....ம்ம்ம்ம்... நளவெண்பாவில் எமக்கு கற்றுத்தர போடப்பட்டு இருந்த பாடல்களை ஒப்பிட்டால், இந்த பாடல்கள் எல்லாம் ஜுஜுபி....!!

அதனைப் படித்த பலர் யாழில் இருக்கினம்.... அவர்களை கேட்டுப்பாருங்கள்

  • Replies 106
  • Views 35.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பூங்கொடியே பூங்கொடியே..

படம்: ஸ்கூல் மாஸ்டர்

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

இரண்டாவது சரணத்தில்,

ஆண்:

பூமியிலே வான‌ம்வ‌ந்து..

போதைகொண்டு சேர்ந்துவிடும்..

பெண்:

சேர்ந்த‌வுட‌ன் ம‌ழைபொழியும்..

பூமியெங்கும் வெள்ள‌ம் வ‌ரும்..

வெள்ள‌த்தினால் முல்லைக‌ள்போல்..

பிள்ளை விளையாடும்.. :icon_idea:

<_<

சினிமாவுக்கு முற்பட்ட காலத்தில் புராணங்கள் சிற்பங்கள் சிலைகள் கடவுள் ஓவியங்கள் நாட்டியங்கள் எல்லாம் காமத்தை துர்ண்டும் வகையிலேயே இருந்தது. கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதாக பெண்களை உடற்பசிக்கு பயன்படுத்தினார்கள். இப்போதும் தேவதாசிகள் வாழ்வு மாறவில்லை. காமத்தை தூண்டுதலும் கடவுள் பெயரால் அச்சப்படுவதும் என கள்ளத்தன வழிகளே சமூகத்துக்கு போதிக்கப்பட்டது. சிலைகள் ஓவியங்களை பார்ப்பவர்கள் அவஸ்த்தைக்கு உள்ளாகி கனவுகளில் அந்த சிலைகளும் ஓவியங்களும் பல குழப்பங்களை உண்டு பண்ணும் போது அவைகள் கடவுளர்கள் அல்ல மோகினிகள் என்று போதிப்பார்கள். பின்னர் சொப்பனத்தில் ஸ்கலிதமாகிறதுக்கு லேகியம் கொடுப்பார்கள். உடன் கட்டை ஏறுவதும் கற்புக்கரசி கண்ணகியும் தேவதாசியும் காம சூத்திராவுமு; என்னும் பலவும் கலந்து எல்லாம் சகதியாக கள்ளத்தன உறவுகளையே போதித்தது.

அடுத்த காலத்தில் சினிமா. அதுவும் முந்தய காலத்தை தான் பின்பற்றுகின்றது. எவ்வளவு தூண்ட முடியுமோ அவ்வளவு தூண்டுதல்களை செய்வதும் பின்னர் மிக மோசமான கட்டுப்பாடுகளை போதிப்பதும் ஒழுக்கத்தை போதிப்பதும் நடக்கின்றது. விழைவு ஒன்றுதான் படலைகள் இருக்கும் போது வேலிபாய்தலும் கள்ளத்தனங்களை உருவாக்குதலும் தான் மிச்சம்.

http://www.youtube.com/watch?v=eUjjzyHyupE

சினிமாவுக்கு முற்பட்ட காலத்தில் புராணங்கள் சிற்பங்கள் சிலைகள் கடவுள் ஓவியங்கள் நாட்டியங்கள் எல்லாம் காமத்தை துர்ண்டும் வகையிலேயே இருந்தது. கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதாக பெண்களை உடற்பசிக்கு பயன்படுத்தினார்கள். இப்போதும் தேவதாசிகள் வாழ்வு மாறவில்லை. காமத்தை தூண்டுதலும் கடவுள் பெயரால் அச்சப்படுவதும் என கள்ளத்தன வழிகளே சமூகத்துக்கு போதிக்கப்பட்டது. சிலைகள் ஓவியங்களை பார்ப்பவர்கள் அவஸ்த்தைக்கு உள்ளாகி கனவுகளில் அந்த சிலைகளும் ஓவியங்களும் பல குழப்பங்களை உண்டு பண்ணும் போது அவைகள் கடவுளர்கள் அல்ல மோகினிகள் என்று போதிப்பார்கள். பின்னர் சொப்பனத்தில் ஸ்கலிதமாகிறதுக்கு லேகியம் கொடுப்பார்கள். உடன் கட்டை ஏறுவதும் கற்புக்கரசி கண்ணகியும் தேவதாசியும் காம சூத்திராவுமு; என்னும் பலவும் கலந்து எல்லாம் சகதியாக கள்ளத்தன உறவுகளையே போதித்தது.

http://www.youtube.com/watch?v=eUjjzyHyupE

நிங்கள் இந்திய / இந்து கலாச்சாரத்தை மட்டுமே மனதில் நிலை நிறுத்தி எழுதியுள்ளீர்கள்

உலகின் அனைத்து மொழிகளிலும் கலைகளிலும் காமம் புதைந்திருக்கையில் இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே இத்தகைய உடன்கட்டை ஏறுதல் போன்றன அதிகமானவை காணப்பட்டனதன் காரணம் என்ன (மற்ற கலாச்சாரங்களில் இவை முற்றாக இல்லை என நான் சொல்லவில்லை) ? ஆரியரினதும் அதன் பின் ஆங்கிலேயரினதும் வருகைக்கு பின்பே எம் கலாச்சாரத்தில் கள்ளத்தனம் கலந்துவிட்டுள்ளது என் நினைக்கின்றேன். பிரிட்டிஷ் சட்டங்கள் காலனித்துவ நாடுகளில் ஏற்படுத்திய செல்வாக்குதான் பாலியல் சுதந்திரத்தை கட்டுப் படுத்தி கள்ளத்தனத்தை சமூக பழக்கமாக அங்கீகரித்தது என கருதுகின்றேன். இன்றும் அத்தகைய காலனித்துவ செல்வாக்கற்ற தேசங்களிலும், பழங்குடி மக்களிலும் இத்தகைய கள்ளத்தனம் மிக குறைவாக இருக்கின்றன.

இந்திய இந்துக் கலாச்சாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதற்கு தானே எம்மை வழிநடத்துபவர்கள் போதிக்கின்றார்கள். சைவமுமு் தமிழும் என்றிருந்த யாழ்பாணம் எப்படி இந்துவாக மாறியது. விபுதீயை பிராமணி கையால் வாங்க மறுத்த சமூகம் இன்று பிள்ளைகளை புசாரி காலில் விழ வைத்து ஆசீர்வாதம் வாங்க பழக்குவிக்கின்றது. என்னும் எத்தனையோ கலையும் அப்படித்தான். இந்தியச் சினிமாவை பின்பற்றுதலையே செய்கின்றார்கள். தனித்துவம் என்பது சிதைந்து விட்டது.

நீங்கள் சொல்லும் ஆரியன் ஆங்கிலேயன் வருகை ஒரு காரணம் தான். இதில் ஆரியர் தமது பெண்களை மற்றவருடன் கலக்கக் கூடாது என்ற கோட்பாட்டில் சிறுவயதில் மணம் முடித்தலையும் கட்டுப்பாடுகளையும் ஆரம்பித்ததாக படித்திருக்கின்றேன் பின்னர் ஏனைய சாதிகளும் பின்பற்றியது. உடலுறவை மிகப்பெரும் பூதமாக்கி தலையில் தூக்கி வைத்து அதற்குள்ளாகவே மதம் பண்பாடு கலை அனைத்தும் குமைந்து போயிருப்பது தெரிகின்றது. இந்த விசயத்தில் இயற்கையான இயல்பு நிலை சீரளிக்கப்பட்டு விட்டது. பல பிரச்சனைகளுக்கு அடித்தளமாக இது இருக்கின்றது. இதில் இருந்து மீள வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழமாக பார்த்தால் தான் அது கவிதை !!

நீங்கள் இலங்கையில் ஆண்டு 10,11 கான (க.பொ.த. (O/L)) தமிழ் இலக்கிய புத்தகம் படித்தனீங்களா. இலங்கையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்றிருந்தால் (என்னை மாதிரி இளவயது (!!!) காரனானகவும் இருந்தால்) படித்திருப்பீர்கள்.. அதில் நளவெண்பா எனும் அத்தியாயம் இருக்கும்....ம்ம்ம்ம்... நளவெண்பாவில் எமக்கு கற்றுத்தர போடப்பட்டு இருந்த பாடல்களை ஒப்பிட்டால், இந்த பாடல்கள் எல்லாம் ஜுஜுபி....!!

அதனைப் படித்த பலர் யாழில் இருக்கினம்.... அவர்களை கேட்டுப்பாருங்கள்

தமிழ் படிச்சனான் ஆனால் தமிழ் இலக்கியம் படிக்கவில்லை. நளவெண்பா கொஞ்சம் கதை தெரியும் ஆனால் பாடல்கள் எல்லாம் தெரியாது.

அது சரி நீங்க எப்ப (எத்தனையாம் ஆண்டுO /L) படிச்சிங்க? நிழலி அண்ணா நான் படிச்சது ஒரு கலவன் பாடசாலையிலை ஒரு நாள் தமிழ் வாத்தியார் கம்பராமாயணம் படிப்பித்தார்..

அப்ப..பள்ளியறையில் ராமனின் கணையாழி சீதையின் மார்பில் இருந்ததாம் என்று சொன்னார் பொண்ணுங்க வெட்கப்பட்டு முழுச அண்டைக்கு படிப்பிக்காமல் விட்ட வாத்தியார் அதுக்கு பிறகு இப்படியான

எதுக்கும் விளக்கம் தாறது இல்லை கதையை மட்டும் சொல்லி..இன்ன இன்ன மாதிரி கேள்விகள் பரீட்சைக்கு வரும் படிச்சால் போதும் என்றார்... சரி என்று கம் என்று இருந்தது தான் மிஸ் பண்ணிட்டம் இப்படியான

சந்தர்ப்பத்தை.. நிழலி அண்ணா பரீட்சைக்காக படிப்பித்தார்கள்,படித்தோமே தவிர அதைப்பற்றி புரியவில்லை. நாங்க எல்லாம் புத்தக பூச்சியப்பா::

பாடமாக்கிட்டு பரீட்சையிலை பாடமாக்கியதை எழுதி A;B என்று எடுத்து அசத்தினோம்ல...ஆனால் எப்ப ஊருக்கு டாடா காட்டினமோ அன்றையிலிருந்து தான் புது உலகத்தை கண்டோம்.. இப்படியெல்லாம் இருக்குமா?

என் 21வயசு மட்டும் இதை பார்க்கலியே என்று நினைச்சன் சொந்தமா யாரினதும் விம்பமாக இல்லாமல் நான் நானாக இருப்பது இங்கை வந்தபின் தான்.

இது யாரின் தப்பு தெரியலை(புத்தக பூச்சியாய் இருப்பது) மாணவர்களினதா? இல்லை ஆசிரியர்களினதா? இல்லை கல்வித்திட்டத்தினதா? இல்லை எமது சமூகத்தினதா?

சின்ன வயதில் ஒரு குழந்தை தனது ஆணுறுப்பை தொடுவதையே(ஒரு குழந்தையின் வளர்ச்சி படி நிலைகளில் ஒன்று) தட்டிவிடும் நிறைய பெற்றோரை பார்த்திருக்கேன்.

யாரில் தப்பு தெரிஞ்சாக்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

படிச்ச ஆக்கள் நளவெண்பா சொல்லிதந்தால் நல்லது.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் ரொம்ப பேஜாரான ஆளா இருப்பார் போல இருக்கே..! :icon_idea:

ராமர் குறித்து நிறைய சர்;ச்சைகள் இருக்கின்றது. ராமர் ஒரு gay என்று நம்புகின்றவர்களும் இருக்கின்றார்கள். சீதையை கடத்தினாங்களா இல்லை அவளா ஓடினாளா இல்லை துரத்திவிட்டார்களா எதுவும் தெரியாது. இதை எல்லாம் ஆய்வு செய்யவும் முடியாது ஆய்வு செய்து ஒன்றும் ஆகப்போவதும் இல்லை. நேர விரையம் மட்டுமே மிச்சம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதைக் கேளுங்க.. !

ஆண்: முந்தானையில் மூட்ட கட்டு..

பெண்: முள்ளுக்குத்தும் இரத்தம் வராதே...

இதற்கு என்ன அர்த்தம்...???!

--------------------

ஜீவா அண்ணோய்.. இத்தனை பாடல்களும் நீலம் மஞ்சள் சிவப்பு என்றில்லாமல் சர்வ சாதாரணமாக இருக்கும் போது.. ஏன் மஞ்சள் பத்திரிகை ஒன்றை வெளியிடுறாங்களோ..!

நான் எந்த மஞ்சள் பத்திரிகையும் பார்த்ததும் இல்லை படித்ததும் இல்லை..! இது என் அறிவுக்கு எட்டிய வரை உண்மை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ராமர் குறித்து நிறைய சர்;ச்சைகள் இருக்கின்றது. ராமர் ஒரு gay என்று நம்புகின்றவர்களும் இருக்கின்றார்கள். சீதையை கடத்தினாங்களா இல்லை அவளா ஓடினாளா இல்லை துரத்திவிட்டார்களா எதுவும் தெரியாது. இதை எல்லாம் ஆய்வு செய்யவும் முடியாது ஆய்வு செய்து ஒன்றும் ஆகப்போவதும் இல்லை. நேர விரையம் மட்டுமே மிச்சம்.

ராமர் கதை என்பதே சுத்த பம்மாத்து, இயற்றப் பட்ட கதை, என்று சொல்ல ஆசைதான், ஆனால் இந்த திரியின் போக்கை மாற்ற விரும்பவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இதைத் தப்பொன்று நினைச்சிருந்தா இப்பதிவை இட்டுருக்கமாட்டேன்.

காதல் தப்பென்று எவன் சொன்னான். காதல் என்பதன் பெயரால் மனிதர்கள் செய்யும் செயல்களில் தான் தப்புக்கள் இருக்கின்றன. மனிதர்களின் காதலுக்கும் பிற உயிரினங்களின் காதலுக்கும் இடையில் வேறுபாட்டை மனிதன் இயற்றிவிட்டான். மனிதனின் காதல்.. காசு பணம்.. நாடு.. தேசம்.. அழகு அந்தஸ்து.. படிப்புப் பட்டம்.. வேலை.. கார் வீடு விசா.. இப்படிப் பல பார்த்து வரும். பிற உயிரிகளின் காதல் இயற்கையின் இயல்பைத் தொட்டு வரும்..! இதுதான் அந்த வேறுபாடு. நான் வகை இரண்டை மதிக்கிறேன். வகை ஒன்றை வெறுக்கிறேன்.

காமத்தை.. காமமாக இனங்காட்டுதல் தவறல்ல. காதலை காதலாக இனங்காட்டுவதும் தவறல்ல. ஆனால் உள்ளுக்குள் எல்லாவற்றையும் ரசிச்சுக்கொண்டு வெளிக்கு அடுத்தவனை மட்டும் மட்டம்தட்டிக் கொண்டு.. இருப்பவர்களைத் தான் கேட்கிறேன். ஏனிந்தப் பொய் வேசம். காமத்தை நீங்களும் தான் ரசிக்கிறீர்கள். அடுத்தவன் பேசினால்.. ரசிச்சால் தான் தப்பா..???!

ஆங்கிலப் பாடல்களில் வரும் காமம்.. அல்லது ஆபாசம் எல்லை கடந்தது காது கூசும் என்கிறீர்கள். இந்தப் பாடலில் சொல்லப்படும் அர்த்த்தை விடவா அது.. பெரிசு..??! அவர்கள் வெளிப்படையாக காமத்தை காமமாகப் பாடுகிறார்கள். இலகுவாக இனங்கண்டு பிடித்து.. அதை தெர்ந்தெடுக்கிறார்கள்... கேட்கிறார்கள். பிடிக்காதவர்கள் விலகிப் போகிறார்கள். ஆனால் இது.. விளக்கம் இன்றி காமத்தை மறைத்து வைத்துப் பாடி.. எல்லோரையும் கவர்ந்திழுத்து.. காமம் என்று அறியாமலே காமத்தில் எல்லோ மூழ்க விடுகிறார்கள்.

கம்பன்.. பாடினான்.. செந்தமிழில்.. இலகுவில் யாருக்கும் புரியாது. வள்ளுவன் பாடினான்.. காமத்துப் பால் என்று முத்திரயிட்டு. ஆனால் சினிமா..???! எம்மவர்கள்.. அதற்கு தரும்.. ஒளிப்பு மறைப்பு.. ஏன் என்பதுதான் கேள்வி.

அதற்காக காமம் என்பது அசிங்கமானது.. அதுவே காதல் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. உண்மையில் காமம்.. காதல் எல்லாம் உணரும் மனதின் தன்மையில் தான் அதன் உண்மைத் தன்மையும் புனிதத்தன்மையும்.. கொண்டிருக்கின்றன. நான் இரண்டையும் ஒரு எல்லைக்கு அப்பால் கொண்டு செல்ல விரும்பவில்லை. எனக்குரிய ரசிக்கக் கூடிய வடிவில் புனிதமாகவே பார்க்க விரும்புகிறேன்.அது என் இயல்பு. அது என் மனதிற்கு அழகு. அதனை நான் மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அவர்களிற்கு இன்னொரு வடிவில் அதைப் பார்ப்பது அழகாக இருக்கலாம்.

ஆனால் என்னையும் தவறாக வழிநடத்தி இருக்கிறது இந்தச் சமூகம். நான் இப்போ தெளிவு பெற்றுவிட்டேன். காமத்தை காமமாக கலையாக புனிதமாகக் கூட எண்ணி ரசிப்பதில் தவறில்லை. காதலை காதலாக ரசிப்பதில் தவறில்லை. ஆனால் காமத்தை காமமாகக் காட்டாமல்.. திணிப்பதுதான் கூடாது. காமத்தை வன்முறையாக்கி மனிதர்களை காயப்படுத்துவதுதான் கூடாது. காமத்தை விரும்பாத இன்னொருவரின் மீது திணிப்பதும்.. கூடாது என்றே நினைக்கிறேன். புரியாத மொழிகளில்.. கற்பனையில்.. காமம்.. அழகுபடுத்தப்படுவது தவறல்ல.. புரியாத மொழிகளூடு அதனைத் திணிப்பது.. வக்கிரத்தனத்தை ஏற்படுத்துவது தவறு. அதனைக் காட்டிலும்.. காமத்தைக் காமமாக இனங்காட்டி மக்களை அதன் பால் சரியான திசையில் வழிநடத்துதல்.. காமத்தையும் மக்கள் முகம் சுழிப்பின்றி.. கட்டுக்கோப்போடு பார்க்க கேட்க பேச.. வழி செய்யும் இல்லையா..! :icon_idea:

1) பிற உயிரியளுக்கு (geese, seahorse, pigeons போன்ற ஒன்று இரண்டை தவிர்த்து என்று நினைக்கிறேன் ) இயற்கையின் இயல்பை தொட்டு வாற காதல் ஊரு பட்ட சோடியளோட வருது.... அதை வரையறுக்க தான் - "மனிதனின் காதல்.. காசு பணம்.. நாடு.. தேசம்.. அழகு அந்தஸ்து.. படிப்புப் பட்டம்.. வேலை.. கார் வீடு விசா.. இப்படிப் பல பார்த்து வரும்." ஒன்றையும் பார்க்கா விட்டால் - பார்க்கிற எல்லாத்திலையும் தான் காதல் வரும். மனுசருக்கு அப்படி வந்தால் சமுதாயத்துக்கு நல்லதா? இருந்தாலும் இப்ப சனம் செய்யறது மாதிரி காசு/ விசா பார்த்து வாற காதல், பத்து பொருத்தம் பார்த்த பிறகு வாற காதல் - இதில் எல்லாம் எனக்கும் உடன்பாடு இல்லை.

2) இபோதைக்கு உடனே ஞாபகம் வரும் ஒரீரு ஆங்கில பாடல் வரிகள்.... மட்டருபட்டால் நான் பொறுப்பு அல்ல - இதை விட ஓவரான பாட்டுகள் இருந்தும் இவற்றை மட்டும் தான் போடுகிறேன்.. :unsure:

Akon's bellydancer lyrics:

..........

Girl shake ya body body

Wit somebody body

Whatever you do don't break your body body

After the party party

Grab a hottie hottie

In the back seat of your Mazaratti-ratti

Jiggle jiggle it to the left (ah ah ah)

Jiggle jiggle it to the right (ah ah ah)

Jiggle it to the front then jiggle it to the back

And jiggle jiggle it all all night (ah ah ah)

----

Amy Winehouse Back to Black lyrics:

He left no time to regret

Kept his dick wet

With his same old safe bet .........

------

Shaggy - It wasnt me:

honey came in and she caught me red-handed

creeping with the girl next door

picture this we were both butt-naked

banging on the bathroom floor

...

RikRok: but she caught me on the counter

Shaggy: it wasn't me

RikRok: saw me banging on the sofa

Shaggy: it wasn't me

RikRok: I even had her in the shower

Shaggy: it wasn't me

RikRok: she even caught me on camera

Shaggy: it wasn't me

RikRok: she saw the marks on my shoulder

Shaggy: it wasn't me

RikRok: heard the words that I told her

Shaggy: it wasn't me

RikRok: heard the screams getting louder

Shaggy: it wasn't me

RikRok: she stayed until it was over

----------

3) காமம் என்று உணராத வரைக்கும் அதில் எப்படி விழ முடியும்?

விளங்கினால் பிறகு விழுவது இல்லை - குதிப்பது தான்!

அது அவர் அவர் தனிமனித சுதந்திரம்...

4) கம்பன் திருவள்ளுவர் காலத்தில அவையல்ற பாசை அந்த காலத்தில உள்ள ஆக்களுக்கு பச்சையாக விளங்கி இருக்க கூடும் தானே?

இப்ப கம்பன் இல்லை, வள்ளுவர் இல்லை - வைரமுத்து இருக்கிறார்! "ஆணும் பெண்ணும் சிக்கி முக்கி கல்... ஒன்றுடன் ஒன்று உரச பொறி வருமே - ஆஆஆ ஆஆ ஆஆஆ" :lol: என்று எழுதினால் அவருக்கு சம்பளம் குடுக்கிறாங்கள். அதையும் நாலு சனம் வாங்கி கேக்குது. சேர்ந்து பாடுது. வியாபாரமும் ஓடுது! :rolleyes:

5) காமத்தை காமமாய் காண வேண்டுமாம்.....அதை விளக்கமாய் கேக்க இவளவு ஆலவட்டம்! :icon_mrgreen: (joke!)

பிள்ளைக்கு யாரும் adult films ஏதும் பரிந்துரையுங்கப்பா.... நான் மாறுறன்.... நித்திரை வருது! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இ.பிள்ளை.. அந்த ஆங்கிலப் பாடலை எந்த வகையில் இந்தத் தமிழ் பாடல்களோடு ஒப்பிடும் போது தவறென்று சொல்லலாம்.

வாடா மாப்பிள்ளை பலாப்பழத்தோப்பில் பாலிபோல் விளையாடலாம் என்ற பாடலை விடவா அது.. தவறாகச் சொல்லிவிட்டது. அது சொல்வது அப்படியே தெரிகிறது. அதில் இருப்பது என்னென்று. அதைக் கேட்க விரும்பாதவர்கள் தவிர்க்கலாம். ஆனால் இந்தத் தமிழ் பாட்டில் இருப்பது.. அதை விட மோசமான வர்ணனை. ஆனால்.. இரட்டை அர்த்தத்தில் அது பாடப்பட்டிருப்பதால்.. ஒளிக்கப்பட்டிருப்பது வெளியில் இலகுவாகத் தெரியவில்லை. அதற்காக அது ஆபாசத்தனமற்றது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதில் ஆபாசம் இருக்கிறது. காமம் வேறு ஆபாசம் வேறு.. என்றே நான் கருதுகின்றேன்...!

காமம் ஒரு உணர்ச்சி. இயற்கையானது. ஆபாசம்.. பாலியல் ரீதியான இட்டுக்கட்டுகை என்று சொல்லலாம். ஒன்றை அபரிமிதமாகக் காட்டி பாலியல் வக்கிரத்தனத்தை விதைத்தல் என்று கூடக் கூறலாம். இதையே இந்தச் சினிமாப்பாடல்கள் செய்கின்றன. இல்லையா..???! :icon_mrgreen:

இட்டுக்கட்டுகை

என்றால் என்ன? :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இட்டுக்கட்டுகை

என்றால் என்ன? :icon_idea:

exaggeration என்று சொல்லலாம்.

உதாரணத்துக்கு.. இந்த மாங்கனிக்கும் உண்மையான மாங்கனிக்கும் என்ன சம்பந்தம். வெறும் தசைகளும் இழையங்களும் கொண்ட ஒரு அங்கம்.. எப்படி மாங்கனிக்கு ஈடாகும். மாங்கனி.. அதன் சுவையே வேறு. இதென்ன... வெட்டி தின்னும் கனியா..! பரிமாற அதில் என்ன இருக்கிறது. சில உணர்ச்சியூட்டும் நோவை உண்டு பண்ணும் நரம்பு முடிவிடங்களைத் தவிர..???! ஆனால் உண்மையான மாங்கனியை வெட்டினாலும் அதற்கு உணர்ச்சி இருக்காது..! அது சாப்பிடுவதற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ளது. விதைகளின் பரம்பலுக்காக. இது குழந்தைக்கான உணவூட்டலுடன் உணர்ச்சியூட்டலுடன் மட்டும் சம்பந்தப்பட்டது..!

உண்மையில் இப்படியான இட்டுக்கட்டுகைகள் பெண்கள் குறித்த ஒரு போலித்தனமான பாலியல் வெறியூட்டலை.. அல்லது வக்கிரத்தனத்தையே வளர்க்கின்றன. இல்லை என்கிறீர்களா..???! :rolleyes::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

exaggeration என்று சொல்லலாம்.

உதாரணத்துக்கு.. இந்த மாங்கனிக்கும் உண்மையான மாங்கனிக்கும் என்ன சம்பந்தம். வெறும் தசைகளும் இழையங்களும் கொண்ட ஒரு அங்கம்.. எப்படி மாங்கனிக்கு ஈடாகும். மாங்கனி.. அதன் சுவையே வேறு. இதென்ன... வெட்டி தின்னும் கனியா..! பரிமாற அதில் என்ன இருக்கிறது. சில உணர்ச்சியூட்டும் நோவை உண்டு பண்ணும் நரம்பு முடிவிடங்களைத் தவிர..???! ஆனால் உண்மையான மாங்கனியை வெட்டினாலும் அதற்கு உணர்ச்சி இருக்காது..! அது சாப்பிடுவதற்கு என்றே உருவாக்கப்பட்டுள்ளது. விதைகளின் பரம்பலுக்காக. இது குழந்தைக்கான உணவூட்டலுடன் உணர்ச்சியூட்டலுடன் மட்டும் சம்பந்தப்பட்டது..!

உண்மையில் இப்படியான இட்டுக்கட்டுகைகள் பெண்கள் குறித்த ஒரு போலித்தனமான பாலியல் வெறியூட்டலை.. அல்லது வக்கிரத்தனத்தையே வளர்க்கின்றன. இல்லை என்கிறீர்களா..???! :lol::icon_mrgreen:

சரி, மிகை படுத்தலும் அப்பிடி இப்படி உவமையால் தாறதும் - பொய் சொல்றதும் கவிதைகள் பாட்டுகளில தாராளமாய் இருக்கு.....

ஆங்கில படங்களில படுக்கிற ஸீன் எல்லாம் தாராளமாய் இருக்கும்...தமிழ் படத்தில அப்படியானதுகளை சொல்ல வரேக்க பாட்டுகள் போட்டு விடுறாங்கள் - அப்படி போடுற பாட்டு வரிகள் தான் பெரும்பாலும் இப்படி இருக்கு....

ஆங்கில பட சீன்களுக்கும் எங்கட சனம் குடும்பமாய் இருந்து பார்க்க இயலாமல் தான் இருப்பார்கள். அதுக்கு இப்படி ஒருக்கா ரெண்டு தரம் கேட்க விளங்காத பாட்டுகள் இருந்திட்டு போறதில ஆகலும் பெரிய பிழை இருப்பதாக தெரியவில்லை.

ஆபாசம் = explicit தானே? இந்த ஆங்கில பாடல்களை கேட்டு பாருங்கள்...

Kelis - milkshake!: :rolleyes:

My milk shake brings all the boys to the yard,

and they're like,

its better than yours,

damn right its better than yours,

I can teach you,

but I have to charge

My milk shake brings all the boys to the yard,

and they're like,

its better than yours,

damn right its better than yours,

I can teach you,

but I have to charge

I know you want it,

the thing that makes me,

what the guys go crazy for.

They lose their minds,

the way I wind,

I think its time

la la-la la la,

warm it up.

la la-la la la,

the boys are waiting

----

Mika - Lollipop:

Hey,what's the big idea?

Yo, Mika!

I said sucking too hard on your lollipop

Oh, love's gonna get you down

-----

இந்த இரண்டு ஆங்கில பாட்டிலும் milkshake/lollipop - இவைகளுக்குள்ளும் அதிகபடியான ஆபாசம் உள்ளடக்கப்பட்டு இருக்கு.

இன்ன இன்ன உறுப்புகளை பற்றி பாட வர போறன் என்று உள்ளதை உள்ளமாதிரியா பாடுகிறார்கள்?

உண்மையில் இப்படியான இட்டுக்கட்டுகைகள் பெண்கள் குறித்த ஒரு போலித்தனமான பாலியல் வெறியூட்டலை.. அல்லது வக்கிரத்தனத்தையே வளர்க்கின்றன. இல்லை என்கிறீர்களா..???! :):icon_idea:

இருக்கலாம்... பெரும்பாலும் இருக்கு!

அதே நேரத்தில மாங்கனி/ etc etc என்று இருக்கிறது பரவாயில்ல்லை தானே - உன்ட மார்பில எப்ப கை வைக்கலாம் என்று கேட்கிறதை விட? இதென்ன நெடுக்க்ஸ் - உள்ளதை உள்ள படியே சொல்ல -மனுசர் வாழ்ற உலகம் என்ன Court House ஆ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத்தனமா சின்ன பையன் நான் இந்த திரியுக்கை வந்திட்டேன். நிழலி எழுதிற பேரீட்சை கதையில் கூட அவர் adults only எண்டு போட்டதால மற்ற பாக்கம் பாத்து கொண்டு போய்ட்டேன். இதில ஒண்டும் அப்பிடி போடாததனால, தெரியாத் தனமா வாசிக்க பாத்திட்டேன்... நல்ல காலம் இப்ப எண்டாலும் விளங்கிச்சுதே எண்டு நான் எஸ்கேப்..... :icon_mrgreen:

:rolleyes::icon_idea::unsure::icon_mrgreen:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::unsure::):rolleyes:

பொடி பயந்திட்டுது போல :icon_mrgreen: ,யாரும் சாமியை கூப்பிட்டு தண்ணி அடிக்கோணும் இல்லை திருநீறு அடிக்கோணும்(சுப்பண்ணையின் மனச்சாட்சி : டேய் சுப்பண்ணை உனக்கு எப்பவும் தண்ணி அடிக்கிற நினைப்புதான்)

எனக்கு உவர் வா(ளி)லியிண்ட பாட்டுக்கள் பிடிக்கும் ,பெண்ணை படைத்தது ஆணுக்காக ஆணை ( ஆணை என்றால் யானை இல்லை )படைத்தது பெண்ணுக்காக,பெண்ணை பற்றி ஆணும் ஆணை பற்றி பெண்ணும் எப்பிடி பாடினாலும் தப்பில்லை,ஒரு பெண் தான் ஆணுக்கு இந்த உலகத்திலே இன்பத்தை வழங்ககூடியவள். ஏன் ஒரு ஆணால ஆணுக்கு இன்பத்தை தரமுடியாதா என்று யாராவது கேட்பீர்களாக இருந்தால் நான் உங்களோடு கதைக்கவரல அப்பிடியான ஆக்கள் கொஞ்சம் தள்ளி நில்லுங்கோ(பக்கத்தில நிக்கிற தம்பி கவனம்).ஒரு பெண்ணை பார்த்து அவளை ரசித்து மாங்கனி தொங்குது என்று பாடாமல் ஆடு மாடை பார்த்து பலாப்பழம் தொங்குது என்றா பாடமுடியும். அவனவன் தான் ரசித்து அதை எங்களுக்கும் வஞ்சகம் செய்யாமல் எங்களுக்கும் தந்தால் நன்றி சொல்லுவம் எண்டு இல்லை குறை பிடிக்கினமாம் குறை.அதெங்க தூர நிண்டு பார்த்து சி இந்த பழம் புளிக்கும் என்று சொல்லுறவனுக்கும் அதுக்கு கிட்ட போய் திண்டு பார்த்து சி இந்த பழம் புளிக்கும் என்றாலும் சாப்பிட நல்லாத்தான் இருக்கு என்று சொல்லுறவனுக்கும் வித்தியாசம் இருக்குதானே.என்னதான் பொம்பிளையை பிடிக்காது என்றாலும் ராத்திரி நமீதா கனவில வராமல் விடுவாளா என்ன மோனே? (சரி சரி கோவிக்காதேங்கோ நமீதாவுக்கும் மாங்கனிக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்லுறது கேட்குது சத்தியமா சம்பந்தமே இல்லை வேற ஏதாவது ஜம்போ பழமா தேடனும்) :icon_idea:

Edited by suppannai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுப்பண்ண இந்த ஆக்கத்தின் நோக்கம்.. உங்களை கற்பனை பண்ணி ரசிக்க வேண்டாம் என்பதல்ல. ரசிக்கிறதை ஏன் வெளிப்படையாக செய்கிறார்கள் இல்லை எம்மவர்கள். இவர்கள் மறைமுகமாக ரசிப்பதை மற்றவர்கள் வெளிப்படையாக ரசிக்கும் போது.. சீ.. இதென்ன.. என்ற நடிப்பு ஏன்.. அதாவது கள்ளமாக ரசிக்கிற இந்த நடிப்பு ஏன் என்பதுதான் இந்த ஆக்கத்தின் தொனிப் பொருள் என்று நினைக்கிறேன்.

அதுமட்டுமன்றி ஆபாசத்தை அதிகம் கற்பனை கலந்து யதார்த்ததிற்கு புறம்பாக விதைப்பதும் ஒரு வகையில் மனிதர்களிடையே பாலியல் வக்கிரத்தனக்கள் பெருக வழிவகுப்பனவாக அமையலாம். அவற்றைத் தவிர்க்க செய்ய வேண்டியவை பற்றிய ஒரு நோக்கிற்காகவும் தான் இந்தச் சினிமாப்பாடல்களை மையமாக வைத்து இந்தக் கருத்தாடல் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அது இறுதியில்.. பலர் இப்படியான பாடல்களை ரசிக்கினம் என்று இனங்காட்டச் செய்துள்ள போதும்.. . அதைக் கள்ளமா ரசிப்பதைத்தான் இன்னும் விரும்புகிறார்கள் என்று காட்டிச் சென்றிருக்கிறது.

சிலர் இந்தத் தலைப்பை விமர்சிக்கீறார்கள். ஆனால் இந்தப் பாட்டுகளை வீட்டில் கேட்டு மகிழ்கிறார்கள்..! தலைப்பே பாட்டில் உள்ள ஒரு வரிதான். இந்த வேசம் தான் ஏன் என்கிறோம்..??! :icon_idea::icon_mrgreen:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப பிரச்சனை என்ன.நான் நினைக்கிறேன் இப்படியான வரிகளை ரசப்பது தவறல்ல ஆனால் அதை ரசிப்பதில்லை என்று நடிப்பதுதான் தவறு என்று சொன்னால் அதுக்கு காரனம் எமது சமூகம் ஒழுங்கமைக்கப்பட்ட விதம்தான்.தான் செய்தவற்றை மறைத்துக்கொன்டு அதையே மற்றவன் செய்யும் போது பழிப்பது அல்லது கண்டிப்பது.சில விடையங்களில் நாகரீகத்தின் உச்சத்தை தொட்டவனும்,நாகரீகமே இல்லாதவனும்தான் பல விசயங்களை முழுசாக அனுபவிக்கிறான்.இடைப்பட்டதுக

  • கருத்துக்கள உறவுகள்

.சில விடையங்களில் நாகரீகத்தின் உச்சத்தை தொட்டவனும்,நாகரீகமே இல்லாதவனும்தான் பல விசயங்களை முழுசாக அனுபவிக்கிறான்.

மேட்டுக்குடிமகனாக இருக்க வேண்டும் இல்லாவிடில் சேரிகுடிமகனாக இருக்கவேண்டும் என்று சொல்லுறியள்

நிறைய இதைப்பத்தி பள்ளிக்கூடத்திலும் கலாசாலையிலும் கதைச்சாச்சு... இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு..

சிகப்புரோசா படத்தில் கமல்பாடிய நினைவோ ஒரு கவிதை பாடலை விட்டுவிட்டீங்கள் எண்டு நினைக்கிறன்..

மாங்கனிகள் என்று கவிஞர் வர்ணிப்பது வயது வந்தோருக்குப் புரியும், சிறாருக்கு புரியாது என்பதால் தான். அதை பச்சையாக சொல்லமுடியாது. அப்படிச்சொன்னால் யார்தான் கேட்கமுடியும். கவிதையில் உள்ள நயமே அதுதான். ஒரு அழகான பெண்ணை நிலாபோல் அழகானவள் என்று சொல்லும் போது ஏற்றுக்கொள்கிறீர்கள், அதையே கொஞ்சம் காமம் கலந்து உவமையோடு தரும்போது ஏன் ஒப்புக்கொள்ளமுடியவில்லை? காமம் தவறு என்று யாரும் சொல்லவில்லை. ஆபாசம் தான் தவறு என்று சொல்வார்கள். ஆபாசம் என்பது பச்சையாக சொல்வது.

ஆட்டிறைச்சியை அப்படியே சாப்பிடமாட்டோம். நல்ல கறியாக சமைத்து சாப்பிடுவோம். அது போலத்தான் இதுவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ண இந்த ஆக்கத்தின் நோக்கம்.. உங்களை கற்பனை பண்ணி ரசிக்க வேண்டாம் என்பதல்ல. ரசிக்கிறதை ஏன் வெளிப்படையாக செய்கிறார்கள் இல்லை எம்மவர்கள். இவர்கள் மறைமுகமாக ரசிப்பதை மற்றவர்கள் வெளிப்படையாக ரசிக்கும் போது.. சீ.. இதென்ன.. என்ற நடிப்பு ஏன்.. அதாவது கள்ளமாக ரசிக்கிற இந்த நடிப்பு ஏன் என்பதுதான் இந்த ஆக்கத்தின் தொனிப் பொருள் என்று நினைக்கிறேன்.

அதுமட்டுமன்றி ஆபாசத்தை அதிகம் கற்பனை கலந்து யதார்த்ததிற்கு புறம்பாக விதைப்பதும் ஒரு வகையில் மனிதர்களிடையே பாலியல் வக்கிரத்தனக்கள் பெருக வழிவகுப்பனவாக அமையலாம். அவற்றைத் தவிர்க்க செய்ய வேண்டியவை பற்றிய ஒரு நோக்கிற்காகவும் தான் இந்தச் சினிமாப்பாடல்களை மையமாக வைத்து இந்தக் கருத்தாடல் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அது இறுதியில்.. பலர் இப்படியான பாடல்களை ரசிக்கினம் என்று இனங்காட்டச் செய்துள்ள போதும்.. . அதைக் கள்ளமா ரசிப்பதைத்தான் இன்னும் விரும்புகிறார்கள் என்று காட்டிச் சென்றிருக்கிறது.

சிலர் இந்தத் தலைப்பை விமர்சிக்கீறார்கள். ஆனால் இந்தப் பாட்டுகளை வீட்டில் கேட்டு மகிழ்கிறார்கள்..! தலைப்பே பாட்டில் உள்ள ஒரு வரிதான். இந்த வேசம் தான் ஏன் என்கிறோம்..??! :unsure::mellow:

நெடுக்ஸ் பாடல்களிலும்,கவிதைகளிலும் சிலவற்றை சிலேடையாக இன்னொன்றுடன் உவமித்து எழுதும் போது தான் அது அழகாகவும், படிப்பதற்கோ,கேட்பதற்கோ ஒரு ஆவலைத்தரும்.

அதை விடுத்து மார்புகள் இரண்டும் தொட்டிலில் தூங்குது என்றால் யதார்த்தமாக இருந்தாலும் கேட்க,படிக்க நல்லாவா இருக்கும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்ஸ் அண்ணை,

இன்றுதான் இதைப்படிக்க நேரிட்டது அர்த்தம் புரியாத போது அதில் ஆபாசம் இல்லைத்தான் ஏனெனில் "இந்தப்பாடலை பல தடவைகள் இரவின் மடியில் நிகழ்ச்சியின் போது அந்த இசைக்காக வானலையில் ஒலிபரப்பி இருக்கின்றேன்.

'அபிராமி அந்தாதி" படித்துப்பாருங்கள்.

'நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை"

இதுதான் இது என்று சொல்லிக்கொடுக்கும் போதுதான் இன்னும் அதிகமாக அதையே உற்றுநோக்கும் ஆர்வம் மேலிடும்.

ஏதென்றே தெரியாத போது அது மனதை அதிகம் பாதிப்பதில்லை. என்பதே என் கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.