Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மாவா , அப்பாவா .....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவா , அப்பாவா .....

ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பது தெய்வத்திற்கு சமன் .

தந்தை இரண்டாம் பட்சமே , என்றும் சொல்லும் உலகத்தில் .......

நான் எனது தந்தையை நேசிப்பதை விட தாயை அதிக நேசித்தேன் .

அதற்காக தந்தை மீது வெறுப்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடாது .

உங்கள் மனதில் யாரின் மீது அதிக அன்பை செலுத்தினீர்கள் .

உது கொஞ்சம் பொதுவான விடயம் போலதான் இருக்கு. நான் இருவரையுமே சமமாக நேசிக்கிறேன் ஆனால் ஏதாவது கிண்டு படுகிறதெண்டால் அம்மா பாவம் எண்டு அப்பாவேட தான் கிண்டு படுகிறது. அதைவிட கதைக்கிறது விடயம் பிடிக்காட்டி அம்மா அமைதியக இருப்பா... அப்பா திரும்ப கதைப்பார் அதனால அவரோட கிண்டுபடுறது என்யோய்மென்ற் ஆக இருக்கும். அதே நேரத்தில் உந்த விளையாட்டை என் பையனிலும் பாத்து இருக்கிறேன். தொற்று வியாதி போல.... :icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவா , அப்பாவா .....

ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பது தெய்வத்திற்கு சமன் .

தந்தை இரண்டாம் பட்சமே , என்றும் சொல்லும் உலகத்தில் .......

நான் எனது தந்தையை நேசிப்பதை விட தாயை அதிக நேசித்தேன் .

அதற்காக தந்தை மீது வெறுப்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடாது .

உங்கள் மனதில் யாரின் மீது அதிக அன்பை செலுத்தினீர்கள் .

உங்களை போல உண்மையை சொன்னால் அம்மா மேலதான் அதிக பாசம் இருந்தது.அதற்கு காரணம் என்ன என்று சொல்ல தெரியல,

  • கருத்துக்கள உறவுகள்

இது கொஞ்சம் சிக்கலானது . இரண்டு கண்ணில் எது சிறந்தது என்பதை போல ஆனாலும் தாய் ,

இருவரின் (தந்தையின் ) பங்கையும் சேர்த்து நிரப்பி விடுவார் அப்பா ஊரில் இல்லாத போது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கொஞ்சம் சிக்கலானது . இரண்டு கண்ணில் எது சிறந்தது என்பதை போல ஆனாலும்

அப்பாவைத்தான் நிஜமா எனக்கு ரொம்ப பிடிக்கும். எத்தனை தடவை அடி வாங்கினாலும் அம்மா விலக்கு பிடிப்பா அதாலை அம்மாக்கும்

சேர்த்து அடிவிழும் ஆனால் அப்பா பிறகு எனக்கு தலைக்கும் அடிச்ச இடத்துக்கும் எண்ணை தடவி விட்டு குளிக்கவாத்து நல்ல நல்ல சாப்பாடு கடையிலை கட்டிட்டு வந்து தருவார்.

எனக்கு யாரும்(பே) ஏசுவது பிடிக்காது அடிச்சால் அந்த நோவு போயிடும் நான் குழப்படி செய்தால் அம்மா அடிக்கமாட்டா ஏசுவா? அப்பா பேசமாட்டார் அடிப்பார்.

நான் என்ன செய்தாலும் அப்பா ஓம் தான் சொல்லுவார். அம்மா அப்பாவை பற்றி சொன்னால் நாள் முழுக்க சொல்லலாம்.

ஆனால் அப்பாவை ரொம்ப பிடிக்கும்

தமிழ்சிறி அண்ணா நிறையநாளுக்கு பின் அம்மா,அப்பாவை நினைத்து அழவச்சிட்டிங்க :rolleyes::unsure::lol:

அம்மாவா , அப்பாவா .....

ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பது தெய்வத்திற்கு சமன் .

தந்தை இரண்டாம் பட்சமே , என்றும் சொல்லும் உலகத்தில் .......

நான் எனது தந்தையை நேசிப்பதை விட தாயை அதிக நேசித்தேன் .

அதற்காக தந்தை மீது வெறுப்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடாது .

உங்கள் மனதில் யாரின் மீது அதிக அன்பை செலுத்தினீர்கள் .

என்ன தமிழ் சிறி அண்ணா எல்லாருக்கும் அம்மாவை பிடிக்கும் என்பதால் தான் உங்களுக்கும் பிடிக்குமோ? :icon_mrgreen:

உங்களுக்கு புத்தி தெரிந்து சுயமா சிந்திக்கும் போது எல்லாரும் அம்மாவை பிடிக்கும் என்பதால் உங்களுக்கும் பிடிக்குமாக்கும். :icon_idea:

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கொஞ்சம் சிக்கலானது . இரண்டு கண்ணில் எது சிறந்தது என்பதை போல ஆனாலும்

அப்பாவைத்தான் நிஜமா எனக்கு ரொம்ப பிடிக்கும். எத்தனை தடவை அடி வாங்கினாலும் அம்மா விலக்கு பிடிப்பா அதாலை அம்மாக்கும்

சேர்த்து அடிவிழும் ஆனால் அப்பா பிறகு எனக்கு தலைக்கும் அடிச்ச இடத்துக்கும் எண்ணை தடவி விட்டு குளிக்கவாத்து நல்ல நல்ல சாப்பாடு கடையிலை கட்டிட்டு வந்து தருவார்.எனக்கு யாரும்(பே) ஏசுவது பிடிக்காது அடிச்சால் அந்த நோவு போயிடும் நான் குழப்படி செய்தால் அம்மா அடிக்கமாட்டா ஏசுவா? அப்பா பேசமாட்டார் அடிப்பார்.

நான் என்ன செய்தாலும் அப்பா ஓம் தான் சொல்லுவார். அம்மா அப்பாவை பற்றி சொன்னால் நாள் முழுக்க சொல்லலாம்.

ஆனால் அப்பாவை ரொம்ப பிடிக்கும்

என்ன ஜீவா ஒராமாண்டு பிள்ளையால் மாதிரி அப்பா சொக்கா வாங்கி தாறவர் அதால பிடிக்கும் என்று சொல்லுறிங்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவா , அப்பாவா .....

ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பது தெய்வத்திற்கு சமன் .

தந்தை இரண்டாம் பட்சமே , என்றும் சொல்லும் உலகத்தில் .......

நான் எனது தந்தையை நேசிப்பதை விட தாயை அதிக நேசித்தேன் .

அதற்காக தந்தை மீது வெறுப்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடாது .

உங்கள் மனதில் யாரின் மீது அதிக அன்பை செலுத்தினீர்கள் .

:unsure: நல்ல தலைப்பு - இதை ஏன் பேசா பொருளாகிட்டியள் சிறி அண்ணா?

பிள்ளை பெத்தவர்களுக்கு நேரடியாகவே தெரிந்து இருக்கும் - ஆனால் நான் பிள்ளையாக இருக்கும் போதினான எனது அனுபவத்தையும் படித்ததையும் வைத்து தான் இந்த கருத்துகளை சொல்கிறேன் - பெற்றோர்களாய் இருப்பவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள். அறிய ஆவலாய் தான் உள்ளது.

பிள்ளைகள் குழந்தை பருவத்தில் இருக்கும் போதும், சிறுவர்களாக இருக்கும் போதும், பின்பு வளர்ந்த பின்பும் - இந்த அம்மாவா/ அப்பாவா கேள்விக்கு ஒவ்வொரு மாதிரி பதில் இருக்கும்.

ஆகலும் மழலை குழந்தையாக இருக்கும் போது - பிள்ளைக்கு தேவையான பால், அரவணைப்பு, கரிசனை எல்லாம் இயல்பாக தாயிடம் உள்ளதால் ஆண்/ பெண் இரு குழந்தைகளுமே தாயுடன் தான் அதிகம் பிடிப்பாய் இருப்பார்கள்.

பின் எழும்பி நடந்து திரியும் வயதில் அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் தேவை படும், ஒரு பாதுகாப்பான கவனிப்பும் தேவை படும் - அப்போது அவர்கள் தகப்பனை இனம் கண்டு கொண்டு கூடுதலாய் சேர்கிறார்கள்.

பிறகு ஒரு மூன்று வயது வரும் போது - குழந்தைக்கு தன்னை தான் இனம் காண கூடிய வளர்ச்சி வரும் போது - அது தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ உணரும். அப்பொழுது ஒருக்கால் கட்சி மாற்றம் நடக்கும் நிச்சயம் - ஆண் குழந்தை தனது நடை உடை பாவனைகள் தகப்பனை போன்றதாய் இருக்கும் படி முயல - அதே போல் மற்ற முகாமில் பெண் குழந்தை தாயை போல இருக்க தெண்டிப்பார்கள்.

அப்படி தன்னை தான் ஆண்/ பெண் என்று இனம் கண்ட பின் ஒரு வித பொறாமை குணமும் கூடவே வளர ஆரம்பிக்கும். அபொழுது தாயின் இடத்தில் தன்னை வைத்து பார்க்கும் மகள் - தகப்பனுடன் தாய் நெருக்கமாய் இருப்பதை விரும்ப மாட்டா. தான் மட்டும் தான் தகப்பனுக்கு பக்கத்தில் இருக்க வேண்டும் - ஏன் என்றால் தானும் பெண் என்ற ஒரு மன நிலைப்பாடு வந்து பற்றும்.

அது மாதிரி பொடி பிள்ளையளும் தாய் மாருக்கு முன்னுக்கு பின்னுக்கு செக்யூரிட்டி போட்டு கொண்டு திரிவினம். தகப்பன் மாதிரி மட்டும் அல்ல - இப்ப தான் தான் தகப்பன் என்ற எண்ணத்தில் திரிந்து அடியும் வாங்குவினம்.

இதெல்லாம் ஒரு அஞ்சு வயதுக்குள்ள நடந்து முடிந்து விடும்.

பிறகு தாங்கள் தங்கட அலுவல் என்றது தான் ஒரு இருபத்தி ஐந்து வயது வரை முக்கியத்துவம் வாய்க்கும்..... அம்மா செல்லம் குடுத்தால் அம்மா நல்லம். அப்பா காசு குடுத்தால் அப்பா நல்லம். என்று மாறுபடும்.

இதுக்குள்ள அம்மா அப்பாகுள்ளே சண்டை சச்சரவு என்று வந்து போனால் அதுக்கேற்ற மாதிரியும் பிள்ளையள்ர மனநிலை பாதிக்க படும். அந்த பிரச்சனையள்ள அம்மால நியாயம் இருக்கு என்று பிள்ளைக்கு பட்டால் அம்மாட கட்சி - இல்லையென்றா அப்பாட கட்சி. இதில பிள்ளைக்கு முன்னால தங்கட செயற்பாட்டை கவனித்து நடக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு தான் உண்டு.

இதுக்கு மேல ஒரு டீன் ஏஜ் வயது வர - ஆண் பிள்ளைகள் தகப்பன் மாரில் இருந்து கொஞ்சம் விலத்தி வளர பார்ப்பினம் - ஏன் என்றால் தங்கட களவுகள்/ வளர்ச்சிகள் தகப்பன் மாருக்கு தெரிய கூடாது என்று. அந்த நேரங்களில பொடியளுக்கு தங்கட வளர்ச்சிக்கு வயித்து பசி முக்கியமாய் படும் - அதனால அம்மாவை பிடிக்கும் அப்ப - அதோட பொடியளுக்கு அம்மாவை சமாளிக்கிறதும் இப்ப சுலபமாய் இருக்கும். வளர்ந்து வார பொடியை பார்க்க அம்மாக்கு பெருமையாய் (அதுவும் தமிழ் அம்மா என்றால் இப்ப தான் ஆம்பிளை என்று ஆயிட்டானே இவட பொடியன், அவ தலையில தான் தூக்கி வச்சு இருப்பா மனதளவில!). :icon_mrgreen:

பெண் பிள்ளையை பெற்ற அம்மா அந்த பிள்ளை வயதுக்கு வர தான் கட்டுபாடுகளை இன்னும் கூட்டுவா.. இதனால அம்மாக்கும் பெண்பிள்ளைக்கும் இந்த டீன் ஏஜ் வயதில வாக்கு வாதம்/ கோபங்கள் எல்லாம் கூடுதலாய் இருக்கும். இதனால பெண் பிள்ளை அப்பாவோட கொஞ்சம் கூட பாசமாய் இருக்கும். அவருக்கும் தன்ர மகள் மனுசி மாதிரி வளர்ந்து - புறுபுறுக்காம ஒரு தேத்தண்ணி போட்டு தந்தால் அதை போல பெரிய சந்தோசம் இருக்காது! இங்க தகப்பன்-மகள் கரிசனை பாசம் எல்லாம் பெரிய பேச்சளவில் இல்லாமல் அமையதியாக வளர்ந்து கொண்டு வரும்.

பிறகு கல்யாண வயது வந்ததும் தன்னால உழைச்சு உருப்படியாக ஏதும் செய்ய முடியும் என்ற நிலை மகனுக்கு வரேக்க அவன் மீண்டும் தகப்பனுடனான உறவை இன்னொரு பரிமாணத்திற்கு எடுத்து செல்கிறான். தகப்பன் என்ற முழு மனுஷனுக்கு தானும் சமம் என்ற நிலைப்பாடு மகனிடம் இருக்கும். நட்பும் மதிப்பும் இந்த வயதில் நிறையவே இருக்கும் இருவரிடத்திலும்.

அதே போல மகளும் வளர்ந்து கல்யாணம் ஆகி தாயாகும் போது - தனது தாயின் கண்டிப்பு அக்கறை மனபயம் எல்லாத்தையும் ஒரு தாயாக இருந்து உணர்ந்து, தாயுடன் சக தோழியாகி பழகி, இவர்கள் உறவும் நல்ல மாதிரியான ஒரு நிலையை அடையும்...

----

பெற்றோர் ஆகாதவர்களுக்கும் ஒரு வேளை இது பிரயோசனப்படும் என்று வழக்கம் போல அதிகமாகவே எழுதி விட்டேன் - இதெல்லாம் பலர் பெற்றோராய் இருந்து உணர்ந்து இருப்பார்கள்..... ஆனால் பிள்ளையாய் இருக்கும் போது இப்படி இப்படி தான் நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்திராமல் - பின்பு வளர்ந்த பிறகு படித்து அறியும் போது - அட இது இது தான் காரணமா என்று இருந்துது.... :icon_idea:

இனி ஒரு காலத்தில எனக்கும் பிள்ளை ஒன்று இருந்தால் - அது நேரத்துக்கு நேரம் கட்சி மாறி நடப்பு காட்டேக்க நான் சொல்லுவன் - "எங்களுக்கு நீங்கள்?!!!!!" என்று!! :rolleyes:

எனக்கு அம்மாவின் அரவணைப்பும் அன்பும் பிடித்திருந்தது..இன்னமும் பிடித்து இருக்கு... ஆனால் அம்மாவால் இயலாதது- உண்மையில் சொல்ல போனால் அந்த அறியாத வயதில் வேற யாராலும் ஏலாதது- எல்லாம் எங்கட அப்பாவால ஏலும் என்ற ஒரு எண்ணம் மனதில படிந்த படியால் அவரை மாதிரி தான் நானும் இருப்பன் என்ற இயல்பான எண்ணமும் - அப்பாவின் முதன்மை ரசிகனாய் என்னை ஆக்கி இருந்தது.

அப்பாவின் அறிவு பூர்வமான சிந்தனையும், யாரையும் சிரிக்க வைக்கும் நக்கல் கதைகளும், நிதானமும், என்னை கவர்ந்து அவரின் கட்சியில் வைத்திருந்தது. அம்மாவுடன் காரணம் இல்லாத அன்பும் கோவமும் மாறி மாறி இருக்கும்..(நான் தனக ஒராள் வேணும் தானே!)... அப்பாவின் நிதானம் எனக்கு வரோணும் என்றால் என்னை சுட்டு போட்டாலும் வராது போல இருக்கு. :lol: எனக்கு பிடுங்கு பட ஒராள் வேணும் என்று அப்பா அம்மாவை எனக்காக விட்டுட்டு தான் மேல போய் சேர்ந்திட்டார்!

நல்ல தலைப்பு தமிழ் சிறி அண்ணா... நான் பிறக்க முதலே என் அப்பா மறைந்து விட்டதால் என் அப்பாவின் முகம் கூட பார்க்க குடுத்து வைக்கவில்லை :icon_mrgreen: .....அப்பாவும் அம்மாவும் இருவருமே முக்கியம் பிள்ளைக்கு... அப்பா இல்லாத குறையை நான் பல தடவை உணர்ந்து இருக்கிறேன் சின்ன வயதில் தெரியவில்லை... நான் வளர வளர என் அப்பா இல்லையே என்று எடுத்ததுக்கு எல்லாம் அழுது இருக்கிறேன் இப்ப கூட நான் எத்தினையோ இரவுகள் என் அம்மாவின் மடியில் இருந்து அழுது இருக்கிறேன்.... புத்தி சொல்ல தைரியம் சொல்ல எங்களை வளி நடத்தி செல்ல இதுக்கு எல்லாம் என் அப்பா வேண்டும் என்று நினைக்கிறேன்... அதுக்காக அம்மா சொல்லவில்லை என்று இல்லை இருவரும் சேர்ந்து இருந்து அவர்களின் அன்பில் வளர வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்...அப்பாவின் பாசம் கிடைக்க குடுத்துவைக்கவில்லை அதனால் என் அம்மாவிடம்தான் பாசம்...என் அப்பா இருந்து இருந்தால் இருவரிலும் சமமான பாசமாகதான் இருப்பன்

Edited by சுஜி

எனக்கு 4 வயது இருக்கும் வரை அப்பாவுடன் இருந்தேன் அப்புறம் போர்ச்சூழல் காரணமாக அப்பாவுடன் 10 வருடங்கள் தொடர்பு இல்லாமல் போயிட்டுதுஅப்பா திரும்பி வந்து சேரும் போது 1 வருடங்களில் அப்பா கடவுளிட்ட போயிட்டார் அந்த வகையில் அப்பாட பாசம் கிடைக்க குடுத்து வைக்கவில்லை ,அப்பாவில பாசம் கூடத்தான் அதவிட அம்மாவில அதிக பாசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

4 வயதில் - எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்.

6 வயதில் - எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும்.

10 வயதில் - அப்பா நல்லவர்; ஆனால் சிடுமூஞ்சி.

14 வயதில் - எப்பவும் எதிலும் குறைகண்டுபிடிக்கும் ஆசாமி.

16 வயதில் - கால நடப்பைப் புரிந்து கொள்ளாதவர்.

18 வயதில் - சரியான எடக்கு மடக்குப் பேர்வழி.

20 வயதில் - இவரோட பெரும் தொல்லை; எங்கம்மா எப்படி இந்த ஆளோட குப்பை கொட்றாங்க?

30 வயதில் - என் பையனைக் கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசில எங்கப்பான்னா எனக்குப் பயம்.

40 வயதில் - எங்கப்பா எங்களைக் கட்டுபாடா வளர்த்தார். நானும் அப்படிதான் என் பிள்ளைகளை வளர்க்கப் போறேன்.

50 வயதில் - அப்பா எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்? எனக்கோ என் ஒரு பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியலை.

55 வயதில் - எங்கப்பா எவ்வளவு திட்டமிட்டு எங்களுக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார். அவரை மாதிரி ஒருத்தர் இருக்க முடியாது.

60 வயதில் - எங்கப்பா ரொம்ப பெரிய ஆள்.

நன்றி தினமணி!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அம்மாவை தான் அதிகம் பிடிக்கும்...

சின்ன பெடியனா இருக்கேக்க அம்மாவோட தான் கூட கதைப்பேன்.. அம்மாக்குத் தான் எல்லாம் சொல்லுவேன்

இப்பவோ எப்பவோ நான் என்டைக்கும் அம்மா பாசம் தான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

அதே நேரத்தில் உந்த விளையாட்டை என் பையனிலும் பாத்து இருக்கிறேன். தொற்று வியாதி போல.... :rolleyes::o

உண்மை தான் சபேஷ் இது பரம்பரை தொற்று வியாதி போல தான் இருக்கின்றது . :)

உங்களை போல உண்மையை சொன்னால் அம்மா மேலதான் அதிக பாசம் இருந்தது.அதற்கு காரணம் என்ன என்று சொல்ல தெரியல,

சுப்பண்ணை , பொதுவாக ஆண்பிள்ளைகள் தாயிலும் , பெண்பிளைகள் தந்தையிலும் பாசமாக உள்ளதை அவதானித்துள்ளேன் .

இது கொஞ்சம் சிக்கலானது . இரண்டு கண்ணில் எது சிறந்தது என்பதை போல ஆனாலும் தாய் ,

இருவரின் (தந்தையின் ) பங்கையும் சேர்த்து நிரப்பி விடுவார் அப்பா ஊரில் இல்லாத போது .

சரியாகச் சொன்னீர்கள் நிலாமதி , அந்த தைரியம் அல்லது அந்த மனோபலத்தை தாய்க்கு இயற்கை கொடுத்த கொடை என நினைக்கின்றேன் .

-----

எனக்கு யாரும்(பே) ஏசுவது பிடிக்காது அடிச்சால் அந்த நோவு போயிடும் நான் குழப்படி செய்தால் அம்மா அடிக்கமாட்டா ஏசுவா? அப்பா பேசமாட்டார் அடிப்பார்.

நான் என்ன செய்தாலும் அப்பா ஓம் தான் சொல்லுவார். அம்மா அப்பாவை பற்றி சொன்னால் நாள் முழுக்க சொல்லலாம்.

ஆனால் அப்பாவை ரொம்ப பிடிக்கும்

தமிழ்சிறி அண்ணா நிறையநாளுக்கு பின் அம்மா,அப்பாவை நினைத்து அழவச்சிட்டிங்க :( :( :(

நாம் ஊரில் இருக்கும் போது தாய் , தந்தையருக்கு எவ்வளவோ நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பி இருப்போம் ..... ஜீவா,

அப்போது அதற்குரிய வயதும் , வசதியும் இருந்திருக்காது . பின்பு இங்கு வந்து அந்த ஆசைகளை நிறைவேற்ற நினைத்தால் நாட்டின் நிலைமை இடம் கொடுத்திராது

அல்லது அவர்கள் எம்மை விட்டு பிரிந்திருப்பார்கள் . இப்படியான நிலைமைகளில் எமக்கு பெரிய வேதனையும் , அழுகையும் தான் மிஞ்சும் .

என்ன தமிழ் சிறி அண்ணா எல்லாருக்கும் அம்மாவை பிடிக்கும் என்பதால் தான் உங்களுக்கும் பிடிக்குமோ? :rolleyes:

உங்களுக்கு புத்தி தெரிந்து சுயமா சிந்திக்கும் போது எல்லாரும் அம்மாவை பிடிக்கும் என்பதால் உங்களுக்கும் பிடிக்குமாக்கும். :lol:

ஜீவா , நீங்களாவது எனக்கு புத்தி இருக்குது என்று ஒப்புக் கொண்டமைக்கு ....... ரொம்ப நன்றிங்கோ . :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயிடமிருந்து கிடைப்பது பாசம்.

தந்தையிடமிருந்து கிடைப்பது அன்பு.

தாய் நாளாவட்டத்தில் பாசத்தை பிள்ளைகளிடத்தில் பங்கு போட்டுவிடுவார்.

தந்தையின் அன்பு பிரிக்கமுடியாதது. பங்கிடமுடியாதது.

ஆகமொத்தத்தில் தாய் - தந்தை இருவரின் ஆசிர்வதம் பெற்ற பிள்ளைகள உண்மையிய பேறுபெற்றவர்கள். வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்;

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:o நல்ல தலைப்பு - இதை ஏன் பேசா பொருளாகிட்டியள் சிறி அண்ணா?

பிள்ளை பெத்தவர்களுக்கு நேரடியாகவே தெரிந்து இருக்கும் - ஆனால் நான் பிள்ளையாக இருக்கும் போதினான எனது அனுபவத்தையும் படித்ததையும் வைத்து தான் இந்த கருத்துகளை சொல்கிறேன் - பெற்றோர்களாய் இருப்பவர்கள் தயவு செய்து உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள். அறிய ஆவலாய் தான் உள்ளது.

பிள்ளைகள் குழந்தை பருவத்தில் இருக்கும் போதும், சிறுவர்களாக இருக்கும் போதும், பின்பு வளர்ந்த பின்பும் - இந்த அம்மாவா/ அப்பாவா கேள்விக்கு ஒவ்வொரு மாதிரி பதில் இருக்கும்.

ஆகலும் மழலை குழந்தையாக இருக்கும் போது - பிள்ளைக்கு தேவையான பால், அரவணைப்பு, கரிசனை எல்லாம் இயல்பாக தாயிடம் உள்ளதால் ஆண்/ பெண் இரு குழந்தைகளுமே தாயுடன் தான் அதிகம் பிடிப்பாய் இருப்பார்கள்.

பின் எழும்பி நடந்து திரியும் வயதில் அவர்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் தேவை படும், ஒரு பாதுகாப்பான கவனிப்பும் தேவை படும் - அப்போது அவர்கள் தகப்பனை இனம் கண்டு கொண்டு கூடுதலாய் சேர்கிறார்கள்.

பிறகு ஒரு மூன்று வயது வரும் போது - குழந்தைக்கு தன்னை தான் இனம் காண கூடிய வளர்ச்சி வரும் போது - அது தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ உணரும். அப்பொழுது ஒருக்கால் கட்சி மாற்றம் நடக்கும் நிச்சயம் - ஆண் குழந்தை தனது நடை உடை பாவனைகள் தகப்பனை போன்றதாய் இருக்கும் படி முயல - அதே போல் மற்ற முகாமில் பெண் குழந்தை தாயை போல இருக்க தெண்டிப்பார்கள்.

அப்படி தன்னை தான் ஆண்/ பெண் என்று இனம் கண்ட பின் ஒரு வித பொறாமை குணமும் கூடவே வளர ஆரம்பிக்கும். அபொழுது தாயின் இடத்தில் தன்னை வைத்து பார்க்கும் மகள் - தகப்பனுடன் தாய் நெருக்கமாய் இருப்பதை விரும்ப மாட்டா. தான் மட்டும் தான் தகப்பனுக்கு பக்கத்தில் இருக்க வேண்டும் - ஏன் என்றால் தானும் பெண் என்ற ஒரு மன நிலைப்பாடு வந்து பற்றும்.

அது மாதிரி பொடி பிள்ளையளும் தாய் மாருக்கு முன்னுக்கு பின்னுக்கு செக்யூரிட்டி போட்டு கொண்டு திரிவினம். தகப்பன் மாதிரி மட்டும் அல்ல - இப்ப தான் தான் தகப்பன் என்ற எண்ணத்தில் திரிந்து அடியும் வாங்குவினம்.

இதெல்லாம் ஒரு அஞ்சு வயதுக்குள்ள நடந்து முடிந்து விடும்.

பிறகு தாங்கள் தங்கட அலுவல் என்றது தான் ஒரு இருபத்தி ஐந்து வயது வரை முக்கியத்துவம் வாய்க்கும்..... அம்மா செல்லம் குடுத்தால் அம்மா நல்லம். அப்பா காசு குடுத்தால் அப்பா நல்லம். என்று மாறுபடும்.

இதுக்குள்ள அம்மா அப்பாகுள்ளே சண்டை சச்சரவு என்று வந்து போனால் அதுக்கேற்ற மாதிரியும் பிள்ளையள்ர மனநிலை பாதிக்க படும். அந்த பிரச்சனையள்ள அம்மால நியாயம் இருக்கு என்று பிள்ளைக்கு பட்டால் அம்மாட கட்சி - இல்லையென்றா அப்பாட கட்சி. இதில பிள்ளைக்கு முன்னால தங்கட செயற்பாட்டை கவனித்து நடக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு தான் உண்டு.

இதுக்கு மேல ஒரு டீன் ஏஜ் வயது வர - ஆண் பிள்ளைகள் தகப்பன் மாரில் இருந்து கொஞ்சம் விலத்தி வளர பார்ப்பினம் - ஏன் என்றால் தங்கட களவுகள்/ வளர்ச்சிகள் தகப்பன் மாருக்கு தெரிய கூடாது என்று. அந்த நேரங்களில பொடியளுக்கு தங்கட வளர்ச்சிக்கு வயித்து பசி முக்கியமாய் படும் - அதனால அம்மாவை பிடிக்கும் அப்ப - அதோட பொடியளுக்கு அம்மாவை சமாளிக்கிறதும் இப்ப சுலபமாய் இருக்கும். வளர்ந்து வார பொடியை பார்க்க அம்மாக்கு பெருமையாய் (அதுவும் தமிழ் அம்மா என்றால் இப்ப தான் ஆம்பிளை என்று ஆயிட்டானே இவட பொடியன், அவ தலையில தான் தூக்கி வச்சு இருப்பா மனதளவில!). :rolleyes:

பெண் பிள்ளையை பெற்ற அம்மா அந்த பிள்ளை வயதுக்கு வர தான் கட்டுபாடுகளை இன்னும் கூட்டுவா.. இதனால அம்மாக்கும் பெண்பிள்ளைக்கும் இந்த டீன் ஏஜ் வயதில வாக்கு வாதம்/ கோபங்கள் எல்லாம் கூடுதலாய் இருக்கும். இதனால பெண் பிள்ளை அப்பாவோட கொஞ்சம் கூட பாசமாய் இருக்கும். அவருக்கும் தன்ர மகள் மனுசி மாதிரி வளர்ந்து - புறுபுறுக்காம ஒரு தேத்தண்ணி போட்டு தந்தால் அதை போல பெரிய சந்தோசம் இருக்காது! இங்க தகப்பன்-மகள் கரிசனை பாசம் எல்லாம் பெரிய பேச்சளவில் இல்லாமல் அமையதியாக வளர்ந்து கொண்டு வரும்.

பிறகு கல்யாண வயது வந்ததும் தன்னால உழைச்சு உருப்படியாக ஏதும் செய்ய முடியும் என்ற நிலை மகனுக்கு வரேக்க அவன் மீண்டும் தகப்பனுடனான உறவை இன்னொரு பரிமாணத்திற்கு எடுத்து செல்கிறான். தகப்பன் என்ற முழு மனுஷனுக்கு தானும் சமம் என்ற நிலைப்பாடு மகனிடம் இருக்கும். நட்பும் மதிப்பும் இந்த வயதில் நிறையவே இருக்கும் இருவரிடத்திலும்.

அதே போல மகளும் வளர்ந்து கல்யாணம் ஆகி தாயாகும் போது - தனது தாயின் கண்டிப்பு அக்கறை மனபயம் எல்லாத்தையும் ஒரு தாயாக இருந்து உணர்ந்து, தாயுடன் சக தோழியாகி பழகி, இவர்கள் உறவும் நல்ல மாதிரியான ஒரு நிலையை அடையும்...

----

பெற்றோர் ஆகாதவர்களுக்கும் ஒரு வேளை இது பிரயோசனப்படும் என்று வழக்கம் போல அதிகமாகவே எழுதி விட்டேன் - இதெல்லாம் பலர் பெற்றோராய் இருந்து உணர்ந்து இருப்பார்கள்..... ஆனால் பிள்ளையாய் இருக்கும் போது இப்படி இப்படி தான் நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்திராமல் - பின்பு வளர்ந்த பிறகு படித்து அறியும் போது - அட இது இது தான் காரணமா என்று இருந்துது.... :rolleyes:

இனி ஒரு காலத்தில எனக்கும் பிள்ளை ஒன்று இருந்தால் - அது நேரத்துக்கு நேரம் கட்சி மாறி நடப்பு காட்டேக்க நான் சொல்லுவன் - "எங்களுக்கு நீங்கள்?!!!!!" என்று!! :lol:

எனக்கு அம்மாவின் அரவணைப்பும் அன்பும் பிடித்திருந்தது..இன்னமும் பிடித்து இருக்கு... ஆனால் அம்மாவால் இயலாதது- உண்மையில் சொல்ல போனால் அந்த அறியாத வயதில் வேற யாராலும் ஏலாதது- எல்லாம் எங்கட அப்பாவால ஏலும் என்ற ஒரு எண்ணம் மனதில படிந்த படியால் அவரை மாதிரி தான் நானும் இருப்பன் என்ற இயல்பான எண்ணமும் - அப்பாவின் முதன்மை ரசிகனாய் என்னை ஆக்கி இருந்தது.

அப்பாவின் அறிவு பூர்வமான சிந்தனையும், யாரையும் சிரிக்க வைக்கும் நக்கல் கதைகளும், நிதானமும், என்னை கவர்ந்து அவரின் கட்சியில் வைத்திருந்தது. அம்மாவுடன் காரணம் இல்லாத அன்பும் கோவமும் மாறி மாறி இருக்கும்..(நான் தனக ஒராள் வேணும் தானே!)... அப்பாவின் நிதானம் எனக்கு வரோணும் என்றால் என்னை சுட்டு போட்டாலும் வராது போல இருக்கு. :( எனக்கு பிடுங்கு பட ஒராள் வேணும் என்று அப்பா அம்மாவை எனக்காக விட்டுட்டு தான் மேல போய் சேர்ந்திட்டார்!

இளையபிள்ளை , இதனை எங்கு பதிவது என்று எனக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டதால் பேசாப்பொருளில் பதிந்து விட்டேன் .

தற்போது , சமூகச் சாளரத்தில் மாற்றிப்பதியும்படி நிர்வாகத்தினருக்கு தனி மடல் அனுப்பியுள்ளேன் .

நீங்கள் படித்தவற்றையும் இங்கு விரிவாக பதிந்தமைக்கு மிக்க நன்றி .

ஆக ஒரு குழந்தையின் மூன்று , நான்கு வயதிற்குள்ளேயே அம்மா கட்சியா ? அப்பா கட்சியா என்று சிந்திக்க தொடங்குவது ஆச்சரியமாக உள்ளது .

நல்ல தலைப்பு தமிழ் சிறி அண்ணா... நான் பிறக்க முதலே என் அப்பா மறைந்து விட்டதால் என் அப்பாவின் முகம் கூட பார்க்க குடுத்து வைக்கவில்லை :( .....அப்பாவும் அம்மாவும் இருவருமே முக்கியம் பிள்ளைக்கு... அப்பா இல்லாத குறையை நான் பல தடவை உணர்ந்து இருக்கிறேன் சின்ன வயதில் தெரியவில்லை... நான் வளர வளர என் அப்பா இல்லையே என்று எடுத்ததுக்கு எல்லாம் அழுது இருக்கிறேன் இப்ப கூட நான் எத்தினையோ இரவுகள் என் அம்மாவின் மடியில் இருந்து அழுது இருக்கிறேன்.... புத்தி சொல்ல தைரியம் சொல்ல எங்களை வளி நடத்தி செல்ல இதுக்கு எல்லாம் என் அப்பா வேண்டும் என்று நினைக்கிறேன்... அதுக்காக அம்மா சொல்லவில்லை என்று இல்லை இருவரும் சேர்ந்து இருந்து அவர்களின் அன்பில் வளர வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்...

சுஜி , ஒரு குழந்தை பிறக்க முன்பே ...... தாயையோ , தந்தையையோ இழப்பது என்பது எவ்வளவு கொடுமை என்பதி என்னுடன் படித்த பாடசாலை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்டேன் .

அவர்களின் முகத்தில் எப்போதும் ..... இனம்புரியாத ஏக்கம் ஒன்று குடிகொண்டிருப்பதை அவதானித்துள்ளேன் . அப்படியானவர்களிடம் நான் அதிக அன்பு செலுத்துவேன் .

எனக்கு 4 வயது இருக்கும் வரை அப்பாவுடன் இருந்தேன் அப்புறம் போர்ச்சூழல் காரணமாக அப்பாவுடன் 10 வருடங்கள் தொடர்பு இல்லாமல் போயிட்டுதுஅப்பா திரும்பி வந்து சேரும் போது 1 வருடங்களில் அப்பா கடவுளிட்ட போயிட்டார் அந்த வகையில் அப்பாட பாசம் கிடைக்க குடுத்து வைக்கவில்லை ,அப்பாவில பாசம் கூடத்தான் அதவிட அம்மாவில அதிக பாசம்

செவ்வந்தி உங்களுக்கு பதினான்கு வயது வரை அப்பா இருந்தும் , போர்ச்சூழல் காரணமாக சேர்ந்து வாழமுடியவில்லை என்னும் போது கவலையாக உள்ளது .

அதுகும் நீங்கள் அப்பாவுடன் சேர்ந்து வாழத்தொடங்கி ஒரு வருடத்தில் அவர் உங்களை விட்டுப் பிரிந்த கொடுமையை என்னவென்று சொல்வது .

பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

----

40 வயதில் - எங்கப்பா எங்களைக் கட்டுபாடா வளர்த்தார். நானும் அப்படிதான் என் பிள்ளைகளை வளர்க்கப் போறேன்.

50 வயதில் - அப்பா எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்? எனக்கோ என் ஒரு பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியலை.

-----

நன்றி தினமணி!

குமாரசாமி அண்ணை, நீங்கள் இப்ப இந்த இரண்டில் .... எந்த வயதில் நிற்கிறீர்கள் . :lol:

எனக்கு அம்மாவை தான் அதிகம் பிடிக்கும்...

சின்ன பெடியனா இருக்கேக்க அம்மாவோட தான் கூட கதைப்பேன்.. அம்மாக்குத் தான் எல்லாம் சொல்லுவேன்

இப்பவோ எப்பவோ நான் என்டைக்கும் அம்மா பாசம் தான்..

குட்டிபையன் அம்மா செல்லம் என்று ஒரேயடியாய் சொல்லிப் போட்டான் . :)

தாயிடமிருந்து கிடைப்பது பாசம்.

தந்தையிடமிருந்து கிடைப்பது அன்பு.

தாய் நாளாவட்டத்தில் பாசத்தை பிள்ளைகளிடத்தில் பங்கு போட்டுவிடுவார்.

தந்தையின் அன்பு பிரிக்கமுடியாதது. பங்கிடமுடியாதது.

ஆகமொத்தத்தில் தாய் - தந்தை இருவரின் ஆசிர்வதம் பெற்ற பிள்ளைகள உண்மையிய பேறுபெற்றவர்கள். வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வர்;

பென்மன் , தாய் தந்தையரின் அன்பும் அரவணைப்பும் ஒரு பிள்ளைக்கு சமச்சீராக கிடைப்பது உலகில் எங்கோ அரிதாக தான் கிடைக்கும் .

இது எமது மனம் ஏற்றுக் கொள்ள விரும்பாத உண்மை என்றே நான் கருதுகின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் ஊரில் இருக்கும் போது தாய் , தந்தையருக்கு எவ்வளவோ நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பி இருப்போம் ..... ஜீவா,

அப்போது அதற்குரிய வயதும் , வசதியும் இருந்திருக்காது . பின்பு இங்கு வந்து அந்த ஆசைகளை நிறைவேற்ற நினைத்தால் நாட்டின் நிலைமை இடம் கொடுத்திராது

அல்லது அவர்கள் எம்மை விட்டு பிரிந்திருப்பார்கள் . இப்படியான நிலைமைகளில் எமக்கு பெரிய வேதனையும் , அழுகையும் தான் மிஞ்சும் .

:rolleyes: உண்மை தான் சிறி அண்ணா. நாட்டு நிலைமையால எங்கட தமிழ் குடும்பங்கள் எத்தினையோ எவ்வளவு தூரத்துக்கு குடும்ப கட்டமைப்பை இழந்து - பிள்ளைகள் பெற்றோர் என்று எல்லா வயதினருக்கும் மனதளவில் உண்டான பாதிப்புக்கள் சொல்லியும் விளங்க படுத்த ஏலாது. தீர்க்கவும் ஏலாது. மீட்கவும் ஏலாது. வாழ்றது ஒருக்கால் தான். ஆனால் வேற்றினத்தார் பலருக்கு இல்லாத எத்தினை பிரச்சனைகள் எங்களுக்கு?!

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன்.. நான் இந்த உலகிற்கு வந்த பின் சந்தித்த முதல் கேள்வி இது என்று.

நீ அம்மா பிள்ளையா.. அப்பா பிள்ளையா..??!

சின்ன வயதில்..

அம்மா கையில் தடி இருக்கும் போது.. நான் அப்பா பிள்ளை.

அப்பா கையில் புத்தகம் இருக்கும் போது நான் அம்மா பிள்ளை..!

உண்மையைச் சொன்னால் நான் அம்மா பிள்ளையாக இருந்ததே அதிகம்..! ஏன்னா அப்பா தான் படிபடி என்று சொல்லுவார். இப்ப நான் தனிப்பிள்ளை..! என்னைச் சுற்றி அம்மாவும் இல்ல.. அப்பாவும் இல்ல.. எவரும் இல்ல..! அறிந்திராத மனிதர்கள் மட்டுமே.. இருக்கிறார்கள்..!

சுருங்கச் சொன்னால் டாடி மம்மி வீட்டில் இல்ல..! :rolleyes: :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாடி மம்மி வீட்டில் இல்ல..! :lol::rolleyes:

விளையாடுவோமா பிள்ளை :rolleyes: ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ணை , பொதுவாக ஆண்பிள்ளைகள் தாயிலும் , பெண்பிளைகள் தந்தையிலும் பாசமாக உள்ளதை அவதானித்துள்ளேன் .

ஓம் மச்சான் அது பால் கவர்ச்சி,என்ட மகளும் தாயை விட என்னில தான் பாசம்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவா , அப்பாவா .....

நிச்சயமாய் அம்மாதான்.

அம்மாவைப்பற்றித்தானே பாடல்களும் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அம்மாவிலும் பார்க்க அப்பாவிடம் தான் அதிக விருப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாகப்பார்க்கப்போனால் எல்லோருக்குமே முதலில் அம்மாவைத்தான் பிடிக்கும் சில பென்களுக்கு அப்பாவைப்பிடிக்கும் பல ஆன்களுக்கு நிச்சயமாய் அம்மாவைத்தான் பிடிக்கும் நேக்கும் அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா பாட்டு

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொம்புளைப்பிள்ளையளுக்கு அப்பாவை பிடிக்கும்.

ஆம்பிளைப்பிள்ளையளுக்கு அம்மாவை பிடிக்கும்.

இதுதான் உலக நியதி :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: உண்மை தான் சிறி அண்ணா. நாட்டு நிலைமையால எங்கட தமிழ் குடும்பங்கள் எத்தினையோ எவ்வளவு தூரத்துக்கு குடும்ப கட்டமைப்பை இழந்து - பிள்ளைகள் பெற்றோர் என்று எல்லா வயதினருக்கும் மனதளவில் உண்டான பாதிப்புக்கள் சொல்லியும் விளங்க படுத்த ஏலாது. தீர்க்கவும் ஏலாது. மீட்கவும் ஏலாது. வாழ்றது ஒருக்கால் தான். ஆனால் வேற்றினத்தார் பலருக்கு இல்லாத எத்தினை பிரச்சனைகள் எங்களுக்கு?!

இளையபிள்ளை கடந்த 30 வருடமாக இழப்புக்களை சந்திக்காத தமிழ் குடும்பங்களே இல்லை என்னும் அளவில் எல்லோரிடமும் ஒவ்வொரு சோகக் கதை தான் மிச்சம் .

நான் நினைக்கிறேன்.. நான் இந்த உலகிற்கு வந்த பின் சந்தித்த முதல் கேள்வி இது என்று.

நீ அம்மா பிள்ளையா.. அப்பா பிள்ளையா..??!

சின்ன வயதில்..

அம்மா கையில் தடி இருக்கும் போது.. நான் அப்பா பிள்ளை.

அப்பா கையில் புத்தகம் இருக்கும் போது நான் அம்மா பிள்ளை..!

உண்மையைச் சொன்னால் நான் அம்மா பிள்ளையாக இருந்ததே அதிகம்..! ஏன்னா அப்பா தான் படிபடி என்று சொல்லுவார். இப்ப நான் தனிப்பிள்ளை..! என்னைச் சுற்றி அம்மாவும் இல்ல.. அப்பாவும் இல்ல.. எவரும் இல்ல..! அறிந்திராத மனிதர்கள் மட்டுமே.. இருக்கிறார்கள்..!

சுருங்கச் சொன்னால் டாடி மம்மி வீட்டில் இல்ல..! :o:rolleyes:

நெடுக்ஸ் அப்பா பிள்ளையாக இருந்திருப்பார் என நினைத்தேன் .

நல்ல காலம் , உலகில் ஒரு பெண்ணாவது அவருக்கு பிடித்திருந்ததை இட்டு சந்தோசம் . :):rolleyes:

நிச்சயமாய் அம்மாதான்.

அம்மாவைப்பற்றித்தானே பாடல்களும் அதிகம்.

உண்மை தான் கறுப்பி அந்தப் பாடல்களை இயற்றியதே அப்பாக்கள் தானே ....

எனக்கு அம்மாவிலும் பார்க்க அப்பாவிடம் தான் அதிக விருப்பம்.

ரதி , உங்களுக்கு அம்மாவை விட அப்பாவை அதிகம் பிடிப்பதால் ....... அதற்கு ஏதாவது விசேட காரணங்கள் உண்டா ?

பொதுவாகப்பார்க்கப்போனால் எல்லோருக்குமே முதலில் அம்மாவைத்தான் பிடிக்கும் சில பென்களுக்கு அப்பாவைப்பிடிக்கும் பல ஆன்களுக்கு நிச்சயமாய் அம்மாவைத்தான் பிடிக்கும் நேக்கும் அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும்

உண்மைதான் சேகுவாரா , பொதுவாக எல்லோருக்குமே முதலில் அம்மாவை தான் பிடிக்கும் .

அம்மா பாட்டு

குட்டிப்பையன் அருமையான அம்மா பாடல்களை இணைத்துள்ளீர்கள் நன்றி .

நான் ஒரு அப்பா பாடலை தேடுகின்றேன் .... சரியாக படத்தின் பெயரும் , பாடலின் ஆரம்ப வரிகளும் ஞாபகம் வரவில்லை .

ராஜ்கிரண் நடித்த படம் . அவருக்கு மகனாக சேரனும் , இன்னுமொருவரும் வருவார்கள் .

அவர்களை படிக்க வைக்க தந்தை படும் கஷ்டங்களை பற்றிய படம் .

அதில் ஒரு பாடல் இளவயதில் .... குடும்பத்தினருடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது பாடிய பாடல் கிடைத்தால் இணைத்து விடுவீர்களா ?

பொம்புளைப்பிள்ளையளுக்கு அப்பாவை பிடிக்கும்.

ஆம்பிளைப்பிள்ளையளுக்கு அம்மாவை பிடிக்கும்.

இதுதான் உலக நியதி :lol:

ஓம் மச்சான் அது பால் கவர்ச்சி,என்ட மகளும் தாயை விட என்னில தான் பாசம்

குமாரசாமி அண்ணை , இதனைத்தான் சுப்பண்ணை பாலின கவர்ச்சியினால் ஏற்படும் ஈர்ப்பு என்று குறிப்பிடுகின்றார் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இருவரையும் பிடிக்கும்.ஆனாலும் இன்றைய போட்டி,பொறாமை மற்றும் பணம் தான் மனிதனின் முதன்மை நிலையை தீர்மானிக்கும் என்றதொரு நிலை இருக்கும் உலகில் நான் எந்தவித பாதிப்புகளும் இன்றி நானும் சிரித்து இயன்றவரை மற்றவர்களையும் சிரிக்க வைத்து,காசில்லாமலே என்னைச்சுற்றி எப்பவும் ஒரு சிறு கூட்டம் இருக்ககூடியதாக இருக்குது என்றால் அதுக்கு காரனம் எனது அப்பாதான்.இப்ப இருவரும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.