Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம்

Featured Replies

குழந்தை பெறுதல் செய்முறை விளக்கம்

- யேர்மன் மொழி மூலம்: http://www.planetdan.net/pics/babies/index.htm

- தமிழ் மொழி பெயர்ப்பு: http://www.4th-tamil.com/blog/?p=284

baby01.jpg

இது ஒரு குழந்தை.

இது எப்படி வந்தது?

baby02.jpg

ஒரு அப்பா.

ஒரு அம்மா.

இவர்கள் சேர்ந்து,

பிறந்தது இந்தக் குழந்தை.

baby03.jpg

இங்கு -

அப்பாவிலும் ஆடை இல்லை.

அம்மாவிலும் ஆடை இல்லை.

அம்மாவில் -

மேலே தெரிவது மார்பு.

கீழே தெரிவது ஒரு வெடிப்பு.

அதை பெண்குறி என்போம்.

அப்பாவில் -

கீழே தெரிவது தண்டு.

அதை ஆண்குறி என்போம்.

அதனோடு சேர்ந்து -

கால்களுக்கு இடையே

தொங்குவது விதைகள்.

baby04.jpg

அப்பாவுக்கு அம்மா மீது நேசம்.

அம்மாவுக்கு அப்பா மீது நேசம்.

அணைக்கிறார்கள்.

முத்தமிடுகிறார்கள்.

அப்பாவின் தண்டு நீள்கிறது.

அதில் விறைப்பு ஏறுகிறது.

அம்மாவின் வெடிப்புக்குள்

அப்பாவின் தண்டு நுழைவதை

இருவரும் விரும்புகிறார்கள்.

அந்த நுழைவு இனிமை தரும்.

baby05.jpg

அம்மாவும் அப்பாவும்

படுக்கையில் கூடுகிறார்கள்.

வெடிப்புக்குள் தண்டு செலுத்தப்படுகிறது.

அந்த நிலையில் -

அவர்கள் மேலும் கீழுமாக ஆடுகிறார்கள்.

இதுவே கலவி எனப்படும்.

இது சுகமானதாக இருக்கும்.

இப்படியாக -

அம்மாவும் அப்பாவும் விரும்பும் போது,

அவர்கள் குழந்தையை உருவாக்கலாம்.

baby06.jpg

அம்மாவுக்கு அப்பாவில் விருப்பம்.

அப்பாவுக்கு அம்மாவில் விருப்பம்.

இருவரும் கூடி

குழந்தை பெற விரும்புகிறார்கள்.

அப்பாவின் விதையினுள்

விந்து அணுக்கள் உள்ளன.

கலவியின் போது

தண்டு வழியாக

விந்து அணுக்கள் வெளியேறும்.

விந்து அணுக்கள்

அம்மாவின் பெண் உறுப்பினுள்

நீந்திச் செல்கின்றன.

அவை வயிற்றினுள் இருக்கும்

ஒரு பையைச் சென்றடைகின்றன.

அதுவே கருப்பை ஆகும்.

இந்தப் பையில் காலத்துக்கு காலம்

ஒருவகை முட்டை உருவாகும்.

இந்த முட்டையுடன் விந்து இணைய

அவை குழந்தையாக உருவாகிறது.

baby07.jpg

நாளொரு மேனியும்

பொழுதொரு வண்ணமும்

கருப்பையில் குழந்தை வளர்கிறது.

ஒன்பது மாத நிறைவில்

குழந்தை வெளியே வரத் தயாராகி விட்டது.

Edited by இளைஞன்

  • தொடங்கியவர்

baby08.jpg

அம்மாவின் வயிறு

பெரிதாகி விட்டது.

ஆடைகள்

இறுக்கமாகி விட்டன.

குழந்தை நகர்வதை

அம்மா உணர்கிறாள்.

அப்பாவிடம் கூறுகிறாள்.

குழந்தை பிறக்கும் நாள்

நெருங்கி விட்டது.

baby09.jpg

அப்பா அம்மாவை

மகப்பேறு மனைக்கு

அழைத்துச் செல்கிறார்.

baby10.jpg

அங்கே அம்மாவை

படுக்கையில் கிடத்துகிறார்கள்.

மருத்துவர் வருகிறார்.

அம்மா அப்பாவுடன் பேசுகிறார்.

குழந்தை பிறக்கும் போது

மருத்துவர் உதவி புரிவார்.

baby11.jpg

பிரசவம் தொடங்குகிறது.

அம்மாவின் பெண் உறுப்பின் ஊடாக

முதலில் குழந்தையின் தலை

வெளியே வருகிறது.

baby12.jpg

அதன்பின் கைகள்.

baby13.jpg

குழந்தை முழுமையாக

வெளியே வந்துவிட்டது.

மருத்துவர் தொப்புள்கொடியை

வெட்டிவிட்டார்.

அதனோடு சேர்ந்து

நஞ்சுக்கொடியும் (கருக்குடை) வெளியேறிவிட்டது.

baby14.jpg

அம்மாவும் பிள்ளையும்

சில நாட்களுக்கு

ஓய்வெடுக்கிறார்கள்.

பின்னர் வீட்டுக்கு வருகிறார்கள்.

குழந்தைக்கு பசித்தால்

அம்மா பாலூட்டுவாள்.

பிள்ளை -

அம்மாவின் முலையிலிருந்து

பாலை உறிஞ்சிக் குடிக்கும்.

முற்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் யாரவது சின்னப் பிள்ளையள் இருக்குறார்களா?

செயன்முறை விளக்கத்துக்கு மிக்க நன்றி இளைஞன். ஒரு காலத்தில திருமணம் செய்தால் நீங்கள் தந்த தகவலின் அடிப்படையில் நாங்களும் முயற்சி செய்துபார்க்கின்றோம். ஆண் குழந்தை பிறந்தால் அதுக்கு இளைஞன் என்றே பெயரும் வைக்கின்றோம். :lol:

baby12.jpg

நான் பிறக்கும்போது கால்கள் முதலிலும் தலை கைகள் பின்னரும் வந்ததாய் அம்மா சொன்னா.

Edited by மாப்பிள்ளை

கருத்துக்களத்தில் யாரவது சின்னப் பிள்ளையள் இருக்குறார்களா?
:):lol:

அப்ப ரதி, குட்டி நீங்கள் சின்னப்புள்ளைகள் இல்லையா? :lol: யாழில profileஇல பலரிண்ட வயசுகள் 1,2,3,4 எண்டுதானே போடப்பட்டு இருக்கிது?

சரி பரவாயில்லை.. பெரிய ஆக்களுக்கு பெரிய ஆக்களிண்ட விசயம் ஏன் பிடிக்காமல் இருக்கிது? கன்னியாஸ்திரி, மதகுரு, சாமியாராய் போகிறா ஏதேனும் திட்டமோ? :)

இல்லாட்டிக்கு இந்தவிசயங்கள் உங்களுக்கு அத்துப்படியாய் தெரியும் எண்டபடியால இஞ்ச அதுபற்றி கதைக்கிறது தேவையில்லை எண்டு நினைக்கிறீங்களோ? :unsure:

சிலது நெடுக்காலபோவான் ஆரம்பிச்சமாதிரி... எங்கள் மாங்கனிகளிற்கு பின்னால் உறங்கும் உண்மைகள் என்று இளைஞன் ஏதாவது தலைப்பை போட்டு இருந்தால் அதிக வரவேற்பு கிடைச்சு இருக்குமோ? :huh:

நெடுக்காலபோவான் இஞ்சாலயும்வந்து ஒருக்கால் பிரசன்னமாகிப்புட்டு போறது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை நான் இதை ஆபாசம் என சொல்லவில்லை ஆனால் சின்னப் பிள்ளையளுக்கு சொல்லுற மாதிரி இவ்வளவு விளக்கம் தேவையா எனத் தான் கேட்டேன்.

அருமையான எளிமையான விளக்கம். பிள்ளைகளுக்கு சில விடயங்களை எப்படி விளக்குவது என்று புரியாமல் தடுமாறும் போது இத்தகைய எளிமையான வடிவில் விளக்குவது அவர்களுக்கு இலகுவில் புரிந்து விடும். குருவி வந்து போட்டுட்டு போனது என்றோ அல்லது அப்புச்சாமி வந்து தந்தவர் என்றோ தவறான தகவலை வழங்காமல் இவ்வாறு விளக்கம் கொடுப்பது ஆண் பெண் உறவின் அடிப்படையை குழந்தைகளுக்கு புகட்டும்

இதை இணைத்தமைக்கு நன்றி இளைஞன்

Edited by நிழலி

ஏற்கனவே நான் சொன்னது மாதிரி கல்யாணத்திற்கு தயாராகிட்டிருக்கேன்(பொண்ணு பார்க்கிறாங்களங்கோ..).....இந்த நேரத்தில்.....இதெல்லாம்..... I feel shy you know...... :lol:

நன்றி இளைஞன் உங்களால் குழந்தையை எப்படி பெறுவது என்று தெரிந்துகொண்டேன். படங்களுடனான உங்கள் விளக்கத்துக்கு நன்றிகள்.

ஒரு சந்தேகம் இதை யாராவது வீடியோவாக இணைத்தால் நன்றாக இருக்கும். சிலவேளை அதை ஆபாசம் என்று சொல்வார்கள். அது ஆபாசம் என்றால் இதுவும்......................................................... :huh::wub::o:lol::):unsure:

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை எப்படி உருவாகிறது.. பிறக்கிறது.. என்பதற்கான அடிப்படை விளக்கம் நன்று. இதை இப்போ பிரித்தானிய கல்வித்திட்டத்தின் கீழ் 10 வயதுப் பிள்ளைக்கே கற்றுக் கொடுக்க செய்கிறார்கள். எனவே இங்கு சிறுவர்கள் இருக்கிறார்களோ என்று பயப்பிட வேண்டிய அவசியம் இல்லை..!

இதனோடு இணைந்து இன்னொன்றைச் சொல்ல வேண்டும். குழந்தைக்கு அம்மாவிடம் இருந்து அரைவாசி பரம்பரை அலகுகளும் அப்பாவிடமிருந்து அரைவாசி பரம்பரை அலகுகளும் கொண்டு செல்லப்படுகின்றன. அதனாலேயே குழந்தை அப்பா போலவோ அம்மா போலவோ முழுமையாக அன்றி பகுதியாக தோற்றமளிக்கிறது. அதுமட்டுமன்றி அம்மாவும் அப்பாவும் சேர்க்கும் பரம்பரை அலகுகளே குழந்தை ஆணா பெண்ணா என்பதையும் தீர்மானிக்கின்றன.

அதுமட்டுமன்றி அம்மாவிற்கு ஏற்படும் மாதவிடாய் ஏற்படுவதும்.. மாதவிடாயின் பின் 14 ம் நாள் அம்மா முட்டையிடுவாள் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன்போது அப்பா அம்மாவோடு மேற்படி நடந்து கொண்டால் பிள்ளை உருவாக அதிகம் வாய்ப்பிருக்கிறது என்பதையும் சொல்லுங்கள்..!

ஏனெனில் பல குழந்தைகளின் கேள்வி.. ஏன் நான் அப்பா போல இல்ல. அம்மா போல இல்ல. அல்லது இருக்கிறன் என்பதாக இருக்கிறது. ஏன் நான் பொம்பிளைப் பிள்ளையா பிறந்தன்.. தம்பி எப்படி ஆம்பிளப்பிள்ளையாப் பிறந்தான் இவற்றுக்கும் பிள்ளைகள் விளக்கம் தேட முனைகின்றன. அதுமட்டுமன்றி.. பிள்ளைகளுக்கு கரு உருவாவதற்கான சந்தர்ப்பம் விளக்கப்பட வேண்டும்..!

பெற்றோர் பிள்ளைகளுக்கு இவற்றை மறைப்பதிலும்.. பக்குவமாக எடுத்து விளக்குவது நன்று பின்னாளில் இதே பிள்ளைகளின் மனதில் பதிய.. அவர்கள் தவறு செய்ய முதல் சிந்திக்கத் தலைப்பட இது அவர்களுக்கு உதவும். தவறு செய்ய அனுமதித்துவிட்டு விளங்குவதிலும்.. செய்ய முதலே விளங்குதல் நன்று. தெரிந்து கொண்டு தவறு செய்வது அவர்களின் சொந்தப் பிரச்சனை. அதற்கு சமூகம் அல்லது பெற்றோர் பொறுப்பாக முடியாது..! :lol:

--------------------

சோழன் இது ஆபாசம் அல்ல. இது மனித உயிரியலில் ஒரு பகுதி.

அதைவிட்டிட்டு.. மாங்கனி.. பலாச்சுளை என்று கொண்டு திரிவதுதான்.. தவறான அர்த்தப்படுத்தல்களை குழந்தைகளுக்கு வழங்க அதுகள் மாங்கனியையும்.. பலாச்சுளைகளையும் தேடி ருசிக்க வெளிக்கிடுதுகள். இவைதான் தவறான திசைக்கு பிள்ளைகளை வழிகாட்டுகின்றன...!

இந்தியா இலங்கையில் சனத்தொகை அப்படி பெருகிக் கிடக்க இதுவும் ஒரு காரணம். கற்பனை மிகுதி.. பாலியல் வேட்கையை இயற்கையின் அளவை விட அதிகரிக்கச் செய்கிறது. அதன் விளைவு வேண்டாத குழந்தைகள் உருவாக்கம். இந்த அடிப்படை அறிவைப் புகட்டும் மேற்குநாடுகளில் பிறப்பு வீதம் ஒரு சதவீதத்திலும் வெகு குறைவாக இருக்க வழி செய்கிறது. அபோசனை விடுங்கோ. அதுவும் மேற்கோடு ஒப்பிடும் போது இந்தியாவில் அதிகம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களுடன் கூடிய செய்முறை விளக்கத்திற்கு நன்றிகள்.

என்ரை சிவனே!

இனி இஞ்சை என்னென்ன கூத்தெல்லாம் அரங்கேறப்போகுதோ??????????????????

எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம்

படங்களுடன் கூடிய செய்முறை விளக்கத்திற்கு நன்றிகள்.

என்ரை சிவனே!

இனி இஞ்சை என்னென்ன கூத்தெல்லாம் அரங்கேறப்போகுதோ??????????????????

எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம்

இனி குழந்தை வயசுக்கு வரும். மீண்டும் கலவி தொடரும். வேறென்ன நடக்கப்போகிது? ரொம்பத்தான் பயப்படுறீங்கள் போல இருக்கிது. ஆனாலும் ஒரு விசயம்.. மேலுள்ள தகவல்கள் ஜேர்மன்காரனிடம் இருந்து பெறப்பட்டு இருக்கிது. உதன்படி போய் கடைசியில இரால் மாதிரி வெள்ளையாய் ஜேர்மன் குழந்தை மாதிரி ஒண்டு பிறக்கக்கூடாது என்று சிவனை வேண்டிக்கொள்ளுங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்தில் யாரவது சின்னப் பிள்ளையள் இருக்குறார்களா?

இது எல்லாம் இங்க உள்ள சின்னப்பிள்ளைகளுக்கு தெரியும்.பேரப்பிள்ளை கானும் வயதில் உள்ளதுகளுக்குதான் தெளிவான விளக்கம் இல்லை.இது முதியோர் கல்விக்கும் உதவியாக இருக்கும்.இணைப்புக்கு நன்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மாப்பு!

இஞ்சை அஞ்சாம் வகுப்பிலையே எங்கடை இளைஞன் காட்டினமாதிரி வரைபடத்தோடை வைச்சு குஞ்சுகுருமனுக்கு படிப்பிக்கிறாங்கள்.

எல்லாத்தையும் விட கொடுமை என்னவெண்டால்..............

என்ரை மூத்ததுக்கு படிப்பிச்ச ரீச்சர் (அஞ்சாம் வகுப்பிலை) செக்ஸ் பாடத்தை மூண்டுகிழமையாய் வைச்சு இழுத்ததுதான் மகா கொடுமையாய்ப்போச்சு

மூத்தபெடி பள்ளிக்கூடத்திலை படிச்சதை வீட்டிலை சொல்ல .... சொல்ல ...... சொல்ல....

இப்ப வீட்டிலை அடுத்தது தவழ வெளிக்கிட்டுட்டுது :mellow:

மூத்தபெடி பள்ளிக்கூடத்திலை படிச்சதை வீட்டிலை சொல்ல .... சொல்ல ...... சொல்ல....

இப்ப வீட்டிலை அடுத்தது தவழ வெளிக்கிட்டுட்டுது :mellow:

முருகன் சிவபெருமானுக்கு வேதம் படிப்பிச்சவர் என்று கேள்விப்பட்டிருக்கின்றன்... இப்ப கு.சா வுக்கும் அதே மாதிரி நடந்திருக்குது

  • 7 months later...

நல்ல வேளை இந்தப்பதிவை கலியாணம் முடிக்கக்கு முன்னம் பார்த்து விட்டேன்.. :wub:

அல்லது நானும் கடவுள் தருவார் தருவார் எண்டு காத்திருக்க கள்ளக்கடவுள் வந்த்து தந்துவிட்டு போயிருப்பார் நல்ல வேளை தப்பித்து விட்டேன் .... :wub: :wub: :lol:

பதிவுக்காக இளைஞன் அண்ணாவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் என் சார்பில்.. :wub: :wub:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற பதிவுகள் எமது பெண் பார்வையாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக அறிகிறேன்

கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

இதுபோன்ற பதிவுகள் எமது பெண் பார்வையாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதாக அறிகிறேன்

கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்

பெண்கள் எந்த விதத்தில் அதிருப்திக்குள்ளாகின்றனர் என்பதை உங்களால் விளக்கமுடியுமா?

  • 3 weeks later...

இளைஞன் அண்ணா! நல்ல முயற்சி! சில குறைகள் இருப்பதாக நினைக்கிறேன்.

ஒரு முழுமையான பாலியல் கல்வியாக இது அமையவில்லை. பாலியல் கல்வி வழங்க விரும்பினால், பருவம் எய்துதல் பற்றிய குறிப்புகளும் அவசியம். திருமணம், யாருடன் உடலுறவு கொள்ளலாம், உடலுறவு கொள்ள தகுந்த வயது, பிள்ளை பெற தகுந்த வயது போன்றனவும் அவசியம். இவற்றை தாமாக தெரிந்து கொள்வார்கள் என்று விவாதிக்க வேண்டாம்.

எந்த வயது முதலான குழந்தைகள் இதனை விளங்கிக்கொள்வார்கள் என நீங்கள் நினைகிறீர்கள் அண்ணா?

இளம் வயதினர் எதையும் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வம் உடையவர்கள். அவர்கள் இதையும் பரீட்சித்துப் பார்க்க முற்பட்டால்.?

அது சரி அப்பா, அம்மா என்ற இருவர் சேர்ந்தால் மட்டும் தான் குழந்தை வருமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.