Jump to content

தெளிவு பிறந்தது ...........


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவு பிறந்தது .................

அன்றைய பொழுது ராகவனுக்கு எதோ கசந்து போய் இருந்தது ,காலையில் ...........அலுவலகம் வந்தான். எல்லாமே எதோ வழமைக்கு மாறானது போல ஒரு உணர்வு ........அலுவலக டைபிஸ்ட் , வந்து வழமை போல அன்றைய கடிதங்களுக்கு குறிப்பு எடுத்து சென்று விடாள். ஒரு சிகரட் பற்ற வைப்பதற்காக வெளியில் வந்தான். இரவு நிம்மதியான நித்திரை இல்லை. கடைக் குட்டி மாதுளனும் காய்ச்சலுடன் , முனகி கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவின் அணைப்பு வேணுமாம். எனக்கு மட்டும் என்னவாம். அவனது பத்து வருட திருமண வாழ்வில் , கண் மணியான் இரு பையன்கள் ஒன்பது வயதிலும் நான்கு வயதிலும் . கடைக்குட்டி மாதுளன் அம்மா செல்லம். மனோஜனும் மாதுளனும் தனியே படுக்க பழகி இருந்தார்கள். ஆனால் நேற்று இரவு காய்ச்சலின் கடுமையால் தாயின் அருகாமையயை விட்டு விலகவே இல்லை . பள்ளி விடுமுறை வேறு . எங்காவது கூடி போங்கள் என்று சாருமதி கேட்டு இருந்தாள். மாதக் கடைசி விடுப்பு எடுக்க முடியாது அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தான்.

அலுவலகத்தில் டைபிஸ்டு இந்திரா , சற்று ஒரு மாதிரியானவள் என்று கேள்வி பட்டு இருந்தான் . ஆனால் அவனுடன் எந்த விதமான் , செயல்களுக்கும் இடம் கொடுபவளாக் காட்டிக் கொடுக்க வில்லை. . ராகவன் தன் தேநீர் இடைவேளை முடிந்து , மீண்டும் தன் இருக்கையை அடைந்தான். எதோ சந்தேகம் கேட்க வந்தவள் , சார் இன்று , ஏதும் சுகவீனமா ? ஏதும் பிரசினியா ? வீடுக்கு போகும் போது நம்ம வீடு பக்கம் வந்து போங்க சார் என்று ........சூசகமாக சொன்னாள்.

ராகவன் மனம் கிடந்து அல்லாடியது. இரவு மனைவியின் அணைப்பு கிடைக்க வில்லை எதோ ஒன்றுக்காக மனம் ஏங்கியது. அவனது வாழ்வில் என்றுமே அப்படியான இடங்களுக்கு போனதில்லை. வாலிபத்திலும் சரி இப்போதும் சரி , "அப்படியான " கதைகளை நண்பர்களுடன் பேசி கொள்ளவதுடன் சரி . அந்த இடத்திலே அந்த நினைப்பை விட்டு விடுவான். இன்று ஏனோ ஒரு தடுமாற்றம். கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும் என்று ..... என்று மனம், அமைதி அடைய வில்லை.

எதோ ஒரு தவிப்பு ........ஒரு தடவை போய் தான் பார்ப்போமே....என்று மனம் ஏங்க , வேலை முடிந்ததும் தன் வாகனத்தை ,அவள் வீடு நோக்கி ஓட்டினான். வீட்டை அண்மித்தும் சற்று தூரத்தில் நிறுத்தினான். கை கால் எல்லாம் ஒரு வெட வெடப்பு . மனதுள் தைரியத்தை வரவழைத்தான். களவு மாங்காய் ருசிக்கும் என்பார்கள். அவள் வீட்டை அண்மித்தான் சுற்றும் முற்றும் பார்த்தான். அழைப்ப்பு மணியை , அழுத்த கையை உயர்த்தியவன் , வாயிலில் இருக்கும் ஆண்களின் காலணிகளை பார்த்தும் திடுக்கிட்டான். யாரோ உள்ளிருக்கிறார்கள். சம்மட்டியால் தலையில் அடித்தது போன்ற உணர்வு . விறு விறு என்று , தன் காரை நோக்கி நடந்தான். வேகமாக் வீடு நோக்கி சென்றான். வீட்டை அடைந்ததும் , சாருமதி , ஏனுங்க இவ்வளவு லேட்டு , மாதுளனை டாக்டரிடம் அழைத்து போனேன் , மாத்திரைகள் தந்தார், நன்றாக் வேர்த்து காய்ச்சல் , குறைந்து விட்டது. சமர்த்தாக் தூங்குகிறான் என்றாள்.

குளித்து இரவு உணவை முடித்தவன் .........சற்று நேர தொலைக்காட்சி பார்த்தவன், நித்திரைக்கு சென்றான். சமையலறை வேலை முடித்து வந்தவள் , மாதுளனுக்கு இரவு மருந்தை புகட்டி விட்டு , நன்றாக் போர்வையை இழுத்தி போர்த்து விட்டு , படுக்க சென்றாள். ராகவன சலனமற்று காத்திருந்தான். என்னங்க தூங்கிடீங்க்களா? நேற்று மாதுளனுக்கு ,முடியலைங்க , அது தான் அவனுடன் படுக்க வேண்டியதாயிற்று என்றாள். . அடியே என் ராசாத்தி கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டு போய் விடும். ஒரு சின்ன் அஜச்த்மேண்டு (adjustment )...இது கூடவா முடியாது ? என்று அவளை இறுக அணைத்தான். விடிந்ததும் நல்ல பொழுதாக் விடிந்தது , . வேலைக்கு போகும் வழியில் அட சீ .....இப்படி ஒரு , சபலமா ? அநியாயமாக் ஒரு சாக்கடையில் விழ இருந்தேன். ஜென்மம் முழுது ம ஒரு கறையை தேட இருந்தேன். அப்படி போய் இருந்தால் மனம் அமைதியடையுமா? சாருவுடன் , இணயும் போது குற்ற உணர்வால் அல்லவா கூனி குறுகி இருப்பேன். என் சாருவுக்கு துரோகம் செய்ய இருந்தேனே. கடவுளே என்னை மன்னித்து விடு ...........இனி மேலும் தடுமாற விடாதே என்று மனதுள் கும்பிடான். அலுவலகம் சென்றவன், அமைதியாக தன் வேலையில் ஈடு படான். டைபிச்டுவை கூபிட்டு ..........தான் ஒரு வாரம் குடும்பத்துடன் விடுமுறை செல்வதாகவும் அந்த வாரதுக்கான் வேலையை குறிபெடுக்க் வரச் சொல்ல அழைப்புமணியை யை அழுத்தினான்.

மறு நாள் ராகவன் சாரு , குழந்தைகள் மாதுளன் , மனோஜனுடன் விடுமுறை விடுதி ..........நோக்கி பயணமாயினர்.

குறிப்பு .....நான் இப்படி யான கதை எழுவது இது தான் முதல் தடவை .

குறை நிறை சொல்லுங்க.

அப்படியே என் தளத்துக்கும் ஒரு விசிட் mathinilaa.blogspot.com ..........வாங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி அக்கா....நீங்கள் எழுதும் கதைகள் அணைத்தையும் விரும்பி வாசிப்பேன். சிறிதாகவும், சுவாரசியத்துக்காக உப்பு, புளி சேர்க்காமல் யதார்த்தமாக நீங்கள் எழுதும் கதைகள் அணைத்தும் அழகு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷ் என்னிடம் உப்பு புளி பற்றாக்குறை.........கொஞ்சம் அனுப்பவும்.(சும்மா )உங்க வரவுக்கும்பதிவுக்கும் நன்றி

104 .......பேர் வாசித்து இருக்கிறார்கள் நீங்களாவது கருத்து சொனீர்கள். நன்றி. .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேஷ் என்னிடம் உப்பு புளி பற்றாக்குறை.........கொஞ்சம் அனுப்பவும்.(சும்மா )உங்க வரவுக்கும்பதிவுக்கும் நன்றி

104 .......பேர் வாசித்து இருக்கிறார்கள் நீங்களாவது கருத்து சொனீர்கள். நன்றி. .

அக்கா கருத்து எழுதுவம். எழுதிற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை.

எங்க உறவுகளை சிங்கள காடையன்கள் கொல்லுற காட்சியை பார்த்திட்டு.......... :icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

அக்கா கருத்து எழுதுவம். எழுதிற மனநிலையிலை ஒருத்தரும் இல்லை.

எங்க உறவுகளை சிங்கள காடையன்கள் கொல்லுற காட்சியை பார்த்திட்டு.......... :icon_mrgreen::icon_idea:

:D

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் நிலாமதி.. எழுதுவதற்கு இதுதான் எல்லையென்றில்லை..எல்லாவற்றைய

ும் தொட்டுச்செல்லாம் .. தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை நிலாக்கா...தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது தொடர்ந்து நல்ல கதைகளை எழுதி மேலும் மெருகேற வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் குறிப்பிட்ட உறுப்பினர்களின் கதைகளைத்தான் இதுவரை வாசித்து வந்தேன். முதன் முறையாக உங்களின் கதை ஒன்றை இன்று தான் வாசித்தேன். வாசிப்பவர்களைக் கவரும்படி சுவரஸ்யமாக எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். மற்றைய உங்களது ஆக்கங்களையும் நேரம் கிடைக்கும் போது வாசித்து எனது கருத்துக்களை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

நிலாமதி,

சற்று நேரத்தில் வாசித்துவிடக்கூடிய வகையில் எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள்.

கதையின் வேகம் கதையோடு வாசகஒட்டுத்தன்மையில் இக்கதையில் புதுப்பித்துள்ளீர்கள் அதுவே உங்களின் இதுவரையான கதைகளிலிருந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

உங்கள் கதையின் நாயகிகள் ஒன்றில் ஆணுடனான ஒட்டி வாழ்தல் அதைத்தாண்டினால் இக்கதையில் ரைப்பிஸ்ட் போன்ற உருவகிப்பு இவற்றை சற்று மாற்றினால் கதையின் உயிரோட்டம் துணிச்சல் மிக்க பரப்பிற்கு சென்றடையும்.

எங்கள் பெரும்பாலான வளர்ந்த அல்லது முதிர்ந்த எழுத்தாளர்களின் பெண் என்றால் இப்படித்தான் ஆண் என்றால் இப்படித்தான் என்ற வரையறைக்குள் உங்கள் நாயகிகளையும் சரி நாயகன்களையும் சரி கட்டி வைத்துவிடாமல் இன்றைய உலகோட்டத்தில் ஒளிப்புகளை தாண்டிய ஆண் பெண் வளர்ச்சிகளையும் தொட்டு எழுதலாம்.

ஒருநாள் மனைவி பக்கத்தில் இல்லையென்றதும் மறுநாள் இன்னொருத்தியைத் தேடும் கணவன் என்ற விபரிப்பு அவனது முழுமையான பலவீனத்தைத்தான் காட்டுகிறது. ரமணிச்சந்திரன் சுஜாதா லக்ஸ்மி போன்ற தமிழக எழுத்தாளர்களின் ஒருபாலினரை குற்றமும் மறுபாலினரை சமூகத்தின் உயர்ச்சிப்பீடத்தின் கடவுள் தன்மையை மாற்றிய தனித்துவ வெளிப்பாடுகள் உங்களால் எழுதப்பட வேண்டும்.

உங்களால் முடியும். எழுதுங்கள். இதை எழுதவா இதை எழுதக்கூடாதா என்ற பயத்தை விட்டு எழுதுங்கள். நிச்சயம் உங்களுக்குள் உள்ள புதிய மனிசி புறப்படுவாள்.

(கருத்துக்களை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அத்தியடி தில்லையர் ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப எங்கை வந்து நிக்கிறார் பாருங்கோ....😂 உங்கள் எழுத்துகளுக்கு வரவேற்புகள் ஆயிரமாயிரம்👍. தொடருங்கள். நேற்றைய தினம் தமிழ்சிறியருடன் தொலைபேசியில் உறவாடிய போது உங்கள் எழுத்து திறமையை பற்றி அதிகம் கதைத்தோம். @தமிழ் சிறி
    • இந்த இந்திய வடக்கு தேர்தலில் மோடி கூட்டம் தேர்தல் திகதி க்கு முன் நிறுவினால் நடக்கும் அதன் பின் என்ன நடக்கும்  என்பது யாழ் வாசகர்களுக்கு தெரியும்தானே ?
    • வ‌ங்கிளாதேஸ்சும் சொந்த‌ ம‌ண்ணில் தான் தூக்கி தூக்கி அடிச்சு வான‌ வேடிக்கை காட்டுவின‌ம்  அமெரிக்காவே ஒரு கிழ‌மைக்கு முத‌ல் தொட‌ர‌ 2-1 வென்ற‌து   வ‌ங்கிளாதேஸ் இப்ப‌டி தோக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம்....................20வ‌ருட‌த்துக்கு முத‌ல் என்றால் க‌ண்ண‌ மூடி கொண்டு சொல்ல‌லாம் இந்த‌ இந்த‌ அணிக‌ள் தான் வெல்லும் என்று    இப்ப‌ கால‌ம் மாறி போச்சு சின்ன‌ அணியா இருந்த‌ அப்கானிஸ்தான் பெரிய‌ அணிக‌ளை மிர‌ட்டும் அள‌வுக்கு வ‌ள‌ந்து விட்ட‌து   ஓமான் இந்த‌ அணியும் இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌மான‌ அணியா வ‌ந்து விடும்   ஓமான் ப‌ண‌க்கார‌ நாடு அந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் கிரிக்கேட்டை அங்கீகரித்து விட்ட‌து  அது தான் உள்ளூர் கில‌ப் விளையாட்டை ப‌ண‌ம் கொட்டி பெரிசா ந‌ட‌த்தின‌ம் 10 ஓவ‌ர் கிரிக்கேட் 20ஓவ‌ர் கிரிக்கேட் 50 ஓவ‌ர் கிரிக்கேட் 5நாள் விளையாட்டை ஓமான் விளையாடுவ‌தில்லை😂😁🤣................................................  
    • குத்தியருக்கு வடையும் பூந்திலட்டும் கிடைக்கேல்லை எண்ட வெக்கை வேகார் ஜேர்மனி வெள்ளத்திலை வந்து நிக்குது 😎
    • அப்ப  இந்த மணி அடிக்கிற அடியில் சுத்தி வர இருக்கும் சிங்கள கடைகள் தெறித்து ஓடுமோ ? காண்டா மணிகள் இந்தியாவில் இல்லை இங்கிலாந்தில் தான் இன்னமும் செய்து கொண்டு இருக்கிறார்கள் .
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.