Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினேகிதிகளும் சில சில்லெடுப்புக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images.jpg

அண்மையில் நண்பி ஒருவர் மானுஸ்ய புத்திரனின் சினேகிதிகளின் கணவர்களுடனான சினேகிதங்கள் என்றொரு கவிதையொன்றினை அனுப்பிவைத்து இப்படியான சம்பவங்கள் உங்களிற்கும் ஏற்பட்டிருக்கா என்று கேட்டிருந்தார்..எனக்குத்தான் சினேகிதிகள் அதிகமாயிருக்கே அவர்களிற்கு திருமணமான பின்னர் அவர்களினுடனானதும் அவர்களின் கணவர்களினுடனானதுமான என்னுடைய உறவில் நான் நெளிந்த.வழிந்த சம்பவங்கள் பல... எங்கள் சிறுவயது அல்லது பாடசாலை சினேகிதிகள் வயது வந்து திருமணமாகிப் போன பின்னர்..அவர்களுடன் எங்கள் உறவு முற்றாக அறுந்து போய்விடுகின்றது..அல்லது பெரும்பாலும் குறைந்து போய்விடுகின்றது.ஆனாலும் திருமணமான பின்னர் தொடர்பில் இருக்கின்ற சினேகிதிகளுடனான எங்கள் உறவு என்பது உண்மையிலேயே ஒரு கம்பியில் நடக்கிற வித்தை மாதிரி..

நீ.. நான்..வாடி போடி என்கிற ஒருமைகள் அற்றுப்போய்..நீங்கள் நாங்கள் என்கிற ஒரு அன்னியத் தன்மையில்..அழைக்கவேண்டியிருக

்கும்.எனக்கும் ஜரோப்பாவில் சிறுவயது தோழி ஒருத்தி இருக்கிறாள்..நிச்சயிக்கப்பட்

ட திருமணம் மூலம் வெளிநாடு வந்தவள்..அவளது கணவன் நல்லவர்தான் ஆனால் ஊரில் வாழ்கின்ற ஒரு சராசரி குடும்பத் தலைவனைப்போன்ற கொஞ்சம் கண்டிப்பு கொஞ்சம் சந்தேகம்..வருடத்தில் ஒருதடைவைதான் அவர்களது வீட்டிற்கு போவேன்.. மற்றும்படி தொலைபேசியில் கதைப்பேன்..அவள் கணவர் இல்லாத நேரங்களில் தொலைபேசியடித்து பல விடயங்களையும் மனம்விட்டு பேசுவாள்.

சில நேரங்களில் அவள் கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது கணவன் வேலையால் வந்துவிட்டால்..உனையே ""அவர் வேலையாலை வந்திட்டார் அவரோடை கதையுங்கோ என்று தொலைபேசியை அவரிடம் திணித்து விட்டு போய்விடுவாள்..அதுவரை கலகலவென பல விடயங்களையும் கதைத்துக்கொண்டிருந்த எனக்கு அவரிடம் என்னகதைப்பது என்று தெரியாமல் திக்கித் திணறி " என்ன வேலையோ.?? இப்பதான் முடிஞ்சதோ??எப்ப லீவு??என்று உப்புச்சப்பில்லாத சில கேள்விகளுடன் சும்மாதான் சுகங்கள் விசாரிக்க போனடிச்சனான்.என்று ஒருமாதிரி கதைத்து போனை வைத்துவிட்டு பெருமூச்சு விட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்..

அவளதும் பிள்ளைகளினதும் மற்றும் .கணவரது பிறந்தநாளிற்கு தவறாது வாழ்த்து மடல் அனுப்புவேன்..அதே நேரம் அவளிற்கான வாழ்த்து மடலில் மட்டும் இதயம்..அல்லது சிவப்பு றோசாப்பூ..இல்லையில்லை றோசாப்பூ படமே இல்லாத வாழ்த்து மட்டைதான் தெரிவு செய்து அனுப்புவேன்..மற்றும்படி அவளது வீட்டிற்கு போகும் பொழுது அவளது கணவரிற்கு ஒரு வைன் போத்தல். பிள்ளைகளிற்கு விழையாட்டுப்பொருள் என்று வாங்கிவிட்டு அவளிற்கும் ஏதாவது வாங்கலாமென்று யோசிப்பேன்..அவளிற்கு என்னநிற உடைபிடிக்கும்.என்னென்ன பொருட்கள் பிடிக்கும் என்கிறதெல்லாம் எனக்கு அத்துபடியாய் தெரிந்தாலும் அவளிற்கு பிடித்தமானவற்றை யெல்லாம் எடுத்து பலதடைவை புரட்டிப் புரட்டிப் பார்த்து விட்டு கடைசியில் எதுவுமே வாங்காமல் போவதுதான் வழைமையாகிவிட்டது..அவளிடம் ஏதாவது பொருளை கொடுக்கும் போதும்சரி வாங்கும் போதும் சரி தப்பித்தவறியாவது என் கைகள் அவள் மீது பட்டுவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்வேன்..

சாதாரணமாக கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது சில சமயங்களில் நான் என்னை மறந்து போடி என்று சொல்லி விட்டாலும் ..நாக்கைக்கடித்து மன்னிப்பு கேட்டு அவளது கணவனைப்பார்த்து வழியவேண்டியிருக்கும்.

அவர்களுடன் உரையாடும் பொழுதும்.. எங்கள் ஊர் பற்றியதும்..எங்கள் சிறுவயது சமாச்சாரங்கள் உறவுகள் பற்றிய விடயங்களை பெரும்பாலும் தவிர்த்து ..அவர்களது பிள்ளைகள் பற்றியும்..அவளது கணவன் பற்றியுமே அதிகம் பேசுவோம்..ஆனாலும் அவள் கணவன் விடாக்கண்டன்.நான் கொண்டு போன வைன் போத்தலை உடைத்து கிளாசில் ஊற்றியபடி தொடங்கும் உரையாடலில் ""இவள் படிக்கேக்கை ஒருத்தரையும் காதலிக்கேல்லையோ""என்று கதையோடு கதையாய் சிரித்தபடி அடிக்கடி கேட்பார்..""சேச்சே அவள் நல்லபிள்ளை குனிஞ்சதலை நிமிரமாட்டாள்..ஒரு பெடியளோடையும் கதைக்க மாட்டாள்.நான் பக்கத்து வீடு அதோடை சின்னவயதிலையே பழக்கம் எண்டதாலை என்னோடை மட்டும்தான் கதைப்பாள்""..என்றொரு நற்சான்றிதழ் பத்திரத்தை கொடுத்த கையோடையே அடுத்த கேள்வி வந்து விழும்..இவள் காதலிக்காட்டிலும் இவளின்ரை கலருக்கும் வடிவுக்கும் பெடியள் யாராவது காதல் கடிதம் குடுத்திருப்பாங்கள்தானே??அப்பிடியும் நடக்கேல்லையோ ""என்று அவளைப் பார்த்து சிரித்தபடிகேட்பார்..இது கொஞ்சம் சிக்கலான கேள்விதான்..ஒருத்தருமே கொடுக்கவில்லையென்று பொய்யும் சொல்லமுடியாது..யாரும் நம்ப மாட்டார்கள்.

ஏனென்றால் பாடசாலை நாட்களில் அது நிச்சயமாக அனைவருக்குமே நடந்திருக்கக்கூடிய விடயம்..அதே நேரம் கடிதம் கொடுத்து..அல்லது அவள் படிக்கின்ற காலங்களில் ஒருத்தனை காதலித்து அவளிற்காக நானே கடிதம் பரிமாறியதை நிச்சயமாக இப்பொழுது அவள் கணவனிடம் சொல்லமுடியாது.. அப்படியான சந்தர்ப்பத்தில் சமாளிப்பதற்காக முன்னாலிருந்த வைனை எடுத்து ஒரே மடக்கில் குடித்துவிட்டு அவரது கேள்விக்கணைகளில் இருந்து தப்புவதற்காக ""படிக்கிற காலத்திலை நீங்கள் பல பெட்டையளிற்கு கடிதம் குடுத்து அடிவாங்கி அனுபவம் போலை "" என்று ஒரு ஏவுகணையை அவர்மீது ஏவி விட்டு அது உலகமகா படிகிடிபோல நான் வில்லங்கத்திற்கு விழுந்து விழுந்து சிரிக்க..அவரும் பதில் சொல்லாமல் அசடுவழிந்தபடி அடுத்த விடயத்திற்கு மாறிவிடுவார்..அதே நேரம் நான் குடித்த போதை எந்த அளவில் நிற்கிறது என்பதையும் அளந்து பார்ப்பதற்காக அடிக்கடி கழிவறைக்கு போவது போல எழுந்து நின்று நிதானித்து நடந்து சுய பரிசோதனை செய்து பார்ப்பேன்.. நடக்கும் போது சாதுவாய் தலை கிறு கிறுத்து நடை தடுமாறுவது போலவோ.. அல்லது சொன்ன ஒரு விடயத்தை திரும்ப சொல்வது போலவோ தோன்றினால் அதற்கு மேல் அங்கிருந்தால் ஏதாவது உளறிவிவேன் என்கிற பயத்தில்.உடைனேயே ..சந்தித்தது மகிழ்ச்சி என்று நன்றி வணக்கங்கள் சொல்லிவிட்டு விடைபெற்று விடுவேன்.. நண்பர்களே உங்களிற்கும் இப்படியான சில்லெடுப்பு அனுபவங்கள் நடந்திருக்கிறதா??நடந்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே..எனவே நன்றி வணக்கம்..

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சினேகிதிகளின் கணவர்களிடம் நீங்கள் அடிவாங்குவது திண்ணம். :)

எத்தனை புரிதல்கள் உள்ளவர்களும் நீங்கள் எழுதிய விடயத்தில் சற்று நிதானித்துத்தான் நிற்க வேண்டும். கதை சுவாரசியத்தில் கதையை அவிழ்த்துக் கடைசியில் விவாகரத்துவரையும் போன சினேகிதிகளின் அனுபவங்கள் நிறையவே நம்மிடையே. ஒரு சில கணவர்கள் இந்த விதண்டாவாதக் கணவர்களிலிருந்து வேறுபட்டு நிற்பது உண்மையே. ஆனால் அனைவரையும் ஒருதராசில் நிறுத்தி சினேகிதிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்தல் ஆபத்தில்தான் கொண்டு சேர்க்கும் என்பது நிசம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீ.... எனக்கு தான் இப்பிடி ஒரு சினேகிதிகளும் இல்லாமல் போய்ட்டுது :)

சாத்து சிநேகிதிகளின் கணவர்களுடன் சிநேகிதம் என்றவுடன் நானும் ஏதோ சாத்து ஒரு gayஆகிட்டாரோ என்று முதலில் பயந்து போனன்...

ம்ம்ம்ம்...படிக்கின்ற காலத்திலேயே ஊரில் குட்டி ரவுடி நான் என்பதால், எந்த ஒரு பெண்ணும் இலேசில் என்னுடன் கதைக்க மாட்டர்கள். எனவே அப்படி ஒருத்தியும் எனக்கு இருந்ததில்லை. சினேகிதத்தை மீறிய சில பெண் உறவுகள் இடையில் வந்து போனாலும், அவர்கள் இன்று என்கிருக்கின்றார்கள் என்பதும் தெரியவில்லை... சாத்துவின் அனுபவ பரிமாறல் அவர்கள் பற்றிய நினைவுகளை மீண்டும் கிளப்பி விட்டுட்டு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீ.... எனக்கு தான் இப்பிடி ஒரு சினேகிதிகளும் இல்லாமல் போய்ட்டுது :)

சரி நான் நம்புறன் :lol::huh:

  • கருத்துக்கள உறவுகள்

சீ.... எனக்கு தான் இப்பிடி ஒரு சினேகிதிகளும் இல்லாமல் போய்ட்டுது :icon_mrgreen:

கற்கரைப்பிள்ளையார் கோவிலடி கண்ணா ரீச்சர் வளவுகளை ஒருக்கா ஞாபகப்படுத்திப் பார்த்தா சினேகிதிகள் கனபேர் நினைவுக்குள் நினைக்க வருவினம் சபேஷ். :icon_idea:

வீட்டில் திருவிழா நடந்தா நான் பொறுப்பில்லை :D துயர் மட்டும் பகிர்வோம். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்து சிநேகிதிகளின் கணவர்களுடன் சிநேகிதம் என்றவுடன் நானும் ஏதோ சாத்து ஒரு gayஆகிட்டாரோ என்று முதலில் பயந்து போனன்...

ம்ம்ம்ம்...படிக்கின்ற காலத்திலேயே ஊரில் குட்டி ரவுடி நான் என்பதால், எந்த ஒரு பெண்ணும் இலேசில் என்னுடன் கதைக்க மாட்டர்கள். எனவே அப்படி ஒருத்தியும் எனக்கு இருந்ததில்லை. சினேகிதத்தை மீறிய சில பெண் உறவுகள் இடையில் வந்து போனாலும், அவர்கள் இன்று என்கிருக்கின்றார்கள் என்பதும் தெரியவில்லை... சாத்துவின் அனுபவ பரிமாறல் அவர்கள் பற்றிய நினைவுகளை மீண்டும் கிளப்பி விட்டுட்டு

ஒய்..உர்ர்ர்ர்ர்.....கர்ர்ர்ர்ர

  • கருத்துக்கள உறவுகள்

கற்கரைப்பிள்ளையார் கோவிலடி கண்ணா ரீச்சர் வளவுகளை ஒருக்கா ஞாபகப்படுத்திப் பார்த்தா சினேகிதிகள் கனபேர் நினைவுக்குள் நினைக்க வருவினம் சபேஷ். :icon_idea:

வருகினம்தான். ஆனாலும் சாத்திரி சொல்லுற அளவுக்கு இல்லை..... :D

வீட்டில் திருவிழா நடந்தா நான் பொறுப்பில்லை :( துயர் மட்டும் பகிர்வோம். :D

ஆகா.... திருவிழா பாக்கிறதிலதான் குறியா இருக்கிறிங்கள் போல இருக்கு. :(:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தைரியமா யாழில உங்கட அனுபவங்களை எழுதிப்போட்டீர்கள். ஆராவது கருணா, டக்லஸ் போல உங்கட நண்பியின் கணவருக்கு இதை போட்டுக் குடுத்தால் ............

சீ.... எனக்கு தான் இப்பிடி ஒரு சினேகிதிகளும் இல்லாமல் போய்ட்டுது :icon_mrgreen:

எதுக்கும் ஒருக்கா வைத்திரியரைப் போய்ப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

images.jpg

மற்றும்படி தொலைபேசியில் கதைப்பேன்..அவள் கணவர் இல்லாத நேரங்களில் தொலைபேசியடித்து பல விடயங்களையும் மனம்விட்டு பேசுவாள்.

சில நேரங்களில் அவள் கதைத்துக்கொண்டிருக்கும் பொழுது கணவன் வேலையால் வந்துவிட்டால்..உனையே ""அவர் வேலையாலை வந்திட்டார் அவரோடை கதையுங்கோ என்று தொலைபேசியை அவரிடம் திணித்து விட்டு போய்விடுவாள்..

அவளதும் பிள்ளைகளினதும் மற்றும் .கணவரது பிறந்தநாளிற்கு தவறாது வாழ்த்து மடல் அனுப்புவேன்..அதே நேரம் அவளிற்கான வாழ்த்து மடலில் மட்டும் இதயம்..அல்லது சிவப்பு றோசாப்பூ..இல்லையில்லை றோசாப்பூ படமே இல்லாத வாழ்த்து மட்டைதான் தெரிவு செய்து அனுப்புவேன்..

நீங்கள் கதையிலும் எதையோ சொல்ல வந்து விழுங்கியும் விழுங்காமலும் நிற்பது போன்று உள்ளது.... இந்த கதையே அந்த சினேகிதி படிக்க வேண்டும் என்பதற்காக யாழில் வந்ததோ?

றோசாப்பூ விடயம் தவறுதலாக எழுதியிருப்பின் அழித்திருக்கலாம்.....

ஆனால் கொடுக்காத பூ கதையில் வருவகின்றது என்றால்? கொடுக்க விரும்பிய பூ என்பதுதானே பொருள். உண்மையான நட்புகளை புரிதலுடன் தொடர்ந்தால்...... எப்போதும் தொடரலாம் என்பதே எனது தனிபட்ட கருத்து.

சினேகிதியின் வாழ்க்கை துணையையும் சோத்து புரிய வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ஒருக்கா வைத்திரியரைப் போய்ப் பாருங்கள்.

என்ன கந்தப்பு....சாத்திரியோட சும்மா லொள்ளு விட்டால் நீங்கள் கடுப்பாகிறிங்கள்? :icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கந்தப்பு....சாத்திரியோட சும்மா லொள்ளு விட்டால் நீங்கள் கடுப்பாகிறிங்கள்? :icon_mrgreen::icon_idea:

சும்மா பகிடிக்கு தம்பி.

ஊரில பள்ளிக்கூடங்களிலை சில பெடியங்கள் தாங்களும் மாணவிகளோட கதைக்க மாட்டார்கள். மற்றவர்கள் கதைக்க விரும்பினாலும் விட மாட்டங்கள். வைக்கோல் பட்டறை நாய்கள் போல.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பகிடிக்கு தம்பி.

ஊரில பள்ளிக்கூடங்களிலை சில பெடியங்கள் தாங்களும் மாணவிகளோட கதைக்க மாட்டார்கள். மற்றவர்கள் கதைக்க விரும்பினாலும் விட மாட்டங்கள். வைக்கோல் பட்டறை நாய்கள் போல.

என்னத்தை செய்யிறது..... டிவிசன் பிரிக்கிற பெயரில தனியப் பெடியங்களை ஒரு டிவிசனில போட்டுட்டாங்கள். அடுத்த வருடம் மாத்துவாங்கள்.... அடுத்த வருடம் மாத்துவாங்கள் எண்டு காலங்கள் போனது தான் மிச்சம். :icon_mrgreen::icon_idea:

நான் நினைக்கிறேன் நீங்கள் ஆண், பெண் பாடிக்கும் பாடசாலைகளில் படித்திருக்கிறீர்கள் என்று. நல்லாய் படித்திருந்தால் உங்களை A வகுப்பில் விட்டு விடுவார்கள். அதில் ஆண்களும் ,பெண்களும் ஒரே வகுப்பில் படிக்கலாம். நீங்கள் படிப்பில கவனமில்லை போலக்கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா பகிடிக்கு தம்பி.

ஊரில பள்ளிக்கூடங்களிலை சில பெடியங்கள் தாங்களும் மாணவிகளோட கதைக்க மாட்டார்கள். மற்றவர்கள் கதைக்க விரும்பினாலும் விட மாட்டங்கள். வைக்கோல் பட்டறை நாய்கள் போல.

கதைக்கவிடாத அந்த மாணவர்கள் இப்ப குடியும் குடித்தனமுமாகத்தானே இருக்கிறார்கள் :icon_mrgreen: அப்பு அந்த நேரம் குனிஞ்சதலை நிமிராமல் நடந்ததாலை ஒருதரும் அப்புவை நினைக்கேல்லப்போல.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கவிடாத அந்த மாணவர்கள் இப்ப குடியும் குடித்தனமுமாகத்தானே இருக்கிறார்கள் :icon_mrgreen: அப்பு அந்த நேரம் குனிஞ்சதலை நிமிராமல் நடந்ததாலை ஒருதரும் அப்புவை நினைக்கேல்லப்போல.

ஊரில குனிஞ்ச தலை நிமிராமல் நடந்தால் நல்லபிள்ளை. வெளினாடுகளில நிமிர்ந்த நடையுடன் நடந்தால் தான் மரியாதை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தப்படத்தில நடுவில போறது சாத்திரியா.. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கதையிலும் எதையோ சொல்ல வந்து விழுங்கியும் விழுங்காமலும் நிற்பது போன்று உள்ளது.... இந்த கதையே அந்த சினேகிதி படிக்க வேண்டும் என்பதற்காக யாழில் வந்ததோ?

றோசாப்பூ விடயம் தவறுதலாக எழுதியிருப்பின் அழித்திருக்கலாம்.....

ஆனால் கொடுக்காத பூ கதையில் வருவகின்றது என்றால்? கொடுக்க விரும்பிய பூ என்பதுதானே பொருள். உண்மையான நட்புகளை புரிதலுடன் தொடர்ந்தால்...... எப்போதும் தொடரலாம் என்பதே எனது தனிபட்ட கருத்து.

சினேகிதியின் வாழ்க்கை துணையையும் சோத்து புரிய வேண்டும்!

இதயம் கீறிய வாழ்த்து மடல் றோசாப்பூஎன்பவை காமத்தை அடிப்படையாகக்கொண்டு காதலிக்கும்..இருவரிற்கிடையில

ானதொரு குறியீடவே பார்க்கப்படுவது எம்மவர்களின் பொதுப்புத்தியாகியிருக்கின

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.தோழிஎன்கிற உரிமையில் தோழில் கைபோட்டபடி நானும்..கைபிடித்த கணவன் கையை பின்னால் பிடித்தபடி ஒன்றாக நடந்து போகலாம் என்று //

எனக்கு இப்ப வேற மாதிரி தோணுது.. நடுவில போறதுதான் கணவன் :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.தோழிஎன்கிற உரிமையில் தோழில் கைபோட்டபடி நானும்..கைபிடித்த கணவன் கையை பின்னால் பிடித்தபடி ஒன்றாக நடந்து போகலாம் என்று //

எனக்கு இப்ப வேற மாதிரி தோணுது.. நடுவில போறதுதான் கணவன் :rolleyes:

ஒய் உமக்கு மாறி மாறி தோன்றும்..அதுக்கு நானும் மாறி மாறி எழுதிக்கொண்டிருக்கேலாது.. :unsure:

ஐயோ சாத்து பாவம் யாரிட்டையோ வழமா மாட்டுப் பட்டுட்டீங்கள் போல

சரி சரி பறவாயில்லை கவலைப்படாதீங்கோ சீக்கிரம் செருப்படி வாங்க வாழ்த்துக்கள் ;)

சும்மா பகிடிக்கு கோவிக்காதீங்கோ. உண்மையா இப்படி நிறைய சிக்கல்கள் நிறைய

குடும்பத்துல இருக்கு. ஏன் பெண்களின் கணவன்மாரால மட்டும் இல்லை. சிநேகிதர்களின்

மனைவிமார்களால் கூட அவையோட கதைக்க ( மனம் விட்டுக் கதைக்க) ஏலாத சந்தர்ப்பங்களும் உண்டு என்பதே யதார்த்தம்.

அட யாரது??? ரசிகையா..எங்கம்மா போயிருந்தீங்க இவ்வளவு காலமும்..நான் நினைச்சன் அப்பிடியே அலஸ்கா பக்கமாய் போய் குடியேறிட்டீங்களாக்கும் எண்டு நினைச்சன்..நீங்களும் யாரோ சினேதனோடை கதைக்கேலாமல் சிக்கல்பட்டிருக்கிறீங்கள் என்றுபுரியிது.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

. ஏன் பெண்களின் கணவன்மாரால மட்டும் இல்லை. சிநேகிதர்களின்

மனைவிமார்களால் கூட அவையோட கதைக்க ( மனம் விட்டுக் கதைக்க) ஏலாத சந்தர்ப்பங்களும் உண்டு என்பதே யதார்த்தம்.

மணிவாசகனுக்கு தெரிஞ்ச சங்கு தான்

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகனுக்கு தெரிஞ்ச சங்கு தான்

குடும்பத்தில குழப்பம் வர வைக்கிறதெண்டே முடிவெடுத்திட்டியள் :unsure:

சாத்து உங்கட கதை அட அது இல்லை உங்கட கணிப்பு

கொஞ்சம் பிழையாய் போட்டுதே!!!!!!

இப்ப மாறி எல்லோ நடக்குதாம் அதாவது மனைவியின் முன்னய அல்லது

கணவனின் முன்னய தொடர்பு எண்டு அறிஞ்சால் வீட்டுக்கு தந்திரமாக

அழைத்து தங்கட குடும்ப செலவு மற்றும் வங்கி கடன் அட்டையில இருந்து பணம்

எடுத்து தரச் சொல்லி கேட்டு எல்லாத்தையும் வறிகிப் போட்டு பேந்து

ஏதாவது பழியை சுமத்தி வெளியால தள்ளி விடுகினமாம்!!!!!

அதால சாத்து நீங்களும் ஒண்டுக்கு பதிலா 2 போத்தல் அதோட தொட்டுக்க

சாப்பிட எண்டு கொண்டு போங்கோ..............அவாவுக்கு குழந்தைகள் இருந்தால்

ஒரு 10 பவுணில சங்கிலி ஒண்டும் கொண்டு போங்கோ...................

பேந்து பாருங்கோ நீங்கள் நினைச்ச மாதிரி புகுந்து விளையாடலாம்.............

எதுக்கும் தர்ம அடியும் கத்தி குத்தும் வாங்காமல் பார்த்துக் கொள்ளுங்கோ!!!!!

உப்புடிதான் என் நண்பன் ஒருவன் தன் முன்னாள் சினேகிதியிடம் கணவண் இல்லாத

நேரங்களில் போனில் கதைக்க ஆரம்பித்து பின்அவா கணவனிடம் தன்ர பள்ளி

நண்பன் எண்டு அறிமுகம் செய்து வைக்க அவர் அடிக்கடி அங்க போய் வர

அவா தன்ர கட்டில் சமாச்சாரம் எல்லாம் புட்டு; வைக்க போந்து அவேன்ர

உறவு திசை மாறி போக ஒரு நாள் தடீரென கணவன் வீடுவந்த போது இருவரையும்

படுக்கறை அறையில் காண........அவளோ இவன் தன்னை கற்பழிக்க முயன்றான் எனச் சொல்ல

என் நண்பனை நைய புடைச்சு அவமானப்படுத்தி தலை குனிய வைத்துவிட்டார்கள்

அவரோ தற்போது தன் மனைவியுடனும் வாழ முடியாமல் திண்தாடுகிறார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.