Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மாயையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுபடவேண்டும்! - 'ஈழநாடு' பத்திரிகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

06/09/2009, 16:49

இந்திய மாயையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுபடவேண்டும்! - 'ஈழநாடு' பத்திரிகை

ஈழத் தமிழர்கள் பன்றிக் காய்ச்சல் வைரசுக்குப் பயப்பிடுகிறார்களோ இல்லையோ 'இந்தியா' என்ற வார்த்தையை அச்சத்துடனேயே நோக்குகிறார்கள்.

சமூக, கலாச்சார, அரசியல் பின்னணியில் இந்தியாவை ஆழமாக நேசித்த தமிழினம் இந்தியாவால் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காந்தி, நேரு, இந்திரா காந்தி என்று பல இந்தியத் தலைவர்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்துப் பெருமைப்பட்ட ஈழத் தமிழர்களை தற்போது காந்தியின் படம் கூட அச்சமூட்டுகின்றது.

இந்தியா என்ற தேசத்தில் ஈழத் தமிழர்கள் வைத்திருந்த பெரும் மதிப்பும், நம்பிக்கையும், நேசமும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டு விட்டது. தற்போது ஈழத் தமிழர்களிடம் எஞ்சியிருப்பது இந்தியா குறித்த அச்சம் மட்டுமே.

தற்போதும், இந்தியாவைத் தவிர்த்துவிட்டு ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் நிரந்தரமான தீர்வு எதனையும் காண முடியாது என்று சிலர் கூறுவதும், நம்புவதும் கூட இந்த அச்சத்தினால் மட்டுமே.

பார்ப்பனிய சிந்தனையையும், வடக்கின் மேலாதிக்க மனப் பான்மையையும் எதிர்த்து உருவான திராவிடர் கட்சிகள் அண்ணாவின் காலத்திற்குப் பின்னால் பெரும் கொள்ளைக் கூட்டங்களாகவே மாறிவிட்டது. ஊழல் அரசியலில் தமது சுயத்தைத் தொலைத்துவிட்ட தமிழக அரசியல் வாதிகள் டெல்லியின் பிடியில் தம்மை அடமானம் வைத்துவிட்டு, அவர்களின் விருப்பங்களை மட்டுமே பிரதி பலிப்பவர்களாக மாற்றம் பெற்று விட்டனர்.

பேரறிஞர் அண்ணாவால் கட்டி எழுப்பப் பட்ட இனமான உணர்வு ஆட்சி அதிகாரத் திற்கான சமரசப் பொருளாக மாற்றம் பெற்றுவிட்டது. தமிழக மக்களின் உணர்வு களும் விருப்பங்களும் தமிழக அரசியல்வாதிகளால் விலைக்கு வாங்கப்படும் அளவுக்கு மலிவானதாக மாற்றம் பெற்றுவிட்டது. அதனால், ஈழத் தமிழர்களின் அவலங்கள் எவையும் தமிழகத்தில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. அப்படி ஏற்படும் நிலையிலும், டெல்லியால் அது கண்டு கொள்ளப்படப் போவதும் இல்லை.

முள்ளி வாய்க்கால் பேரவலத்தின் பின்பும் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்று நம்பினால் அதைவிடவும் ஒரு முட்டாள்த்தனம் இருக்கப் போவதில்லை.

டெல்லி அரசியலில் பலம் வாய்ந்த பாகமாக அங்கம் வகிக்கும் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஈழத் தமிழர்களுக்காகத் தமது வசதி வாய்ப்புக் களை இழக்கத் துணியப் போவதில்லை. டெல்லிப் பிரம்மாக்களும் ஈழத் தமிழர்களுக்கான எந்த நல்லதையும் இதுவரை செய்யவும் இல்லை. இனிமேலும் செய்யப் போவதும் இல்லை.

எம்மில் பலர் இந்தியாவின் ஈழத் தமிழர்கள் மீதான முன்னைய அக்கறைகளைக் 'கருணை' என்ற கண்ணோhட் டத்தில் இப்போதும் நினைவு கூருகிறார்கள்.

அமெரிக்கா - ரஷ்யா என்ற இரு துருவப் பனிப் போர் காலத்தில், சிங்கள அரசு அமெரிக்கா பக்கம் சாய்வதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே எண்பதுகளின் காலப் பகுதியில் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியா ஈழத் தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குவது போல, தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் அள்ளி வழங்கியது. அன்றைய காலத்தில், திட்டமிட்டு, ஈழத் தமிழ் இளைஞர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி, பல பிரிவுகளாக்கிய பெருமையும் இந்தியாவைச் சேர்ந் திருந்தது. ஈழத் தமிழர்களை ஒன்று படுத்தி வென்றெடுக்க வேண்டிய விடுதலைப் போராட்டத்தை தனது நோக்கத்திற் காகப் பல்வேறு ஆயுதக் குழுக்களை உருவாக்கியதன் மூலம் தமிழீழ இளைஞர்களின் நோக்கத்தையே இந்தியா சிதைத்தது. அதற்குப் பின்னரும் கூட, இந்த ஆயுதக் குழுக்கள் ஒன்றிணைந்து விடக் கூடாது என்பதில் இந்திய அரசு மிகக் கவனமாகவே நடந்து கொண்டது. தமது கட்டுக்குள் அடங்க மறுத்த விடுதலைப் புலிகளை ஏனைய ஆயுதக் குழுக்கள் மூலம் நிர்மூலமாக்கும் திட்டத்தையும் அரங்கேற்றியது.

ஆக மொத்தத்தில், ஈழத் தமிழ் இளைஞர்களின் சிங்கள எதிர்ப்புணர்வை இந்தியா தனக்குச் சாதகமாக நன்றாகவே பயன்படுத்திக் கொண்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தனது பிராந்திய வல்லாதிக்க விரிவாக்கத்திற்காக மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொண்டது. இனவாத அமைப்பாக மாற்றம் பெற்றிருந்தாலும் ஜே.வி.பி. இந்தியா குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்து நூறு வீதம் சரியானதே.

'இலங்கையில் நடைபெற்று முடிந்த அத்தனை அழிவுகளுக்கும் இந்தியாவே காரணம்' என்று ஜே.வி.பி. கூறிய கருத்தை யாராலும் நிராகரித்துவிட முடியாது.

'ஈழத் தமிழர்கள் பிளவுபடாத இலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக வாழவேண்டும்' என்ற இந்திய சிந்தனை உண்மையாக இருந்திருந்தால் இலங்கைத் தீவில் இந்த அளவுக்கு இரத்த ஆறு ஓட வேண்டி இருந்திருக்காது. இலங்கையில் இரண்டு இனங்களுக்கிடையே பிணக்குகள் உருவாகவும், அவை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக விரிவடைந்ததற்கும் இந்தியப் பின்னணியே காரணமாக இருந்ததை மறுத்துவிட முடியாது.

இந்தியப் பின்னணியுடன் இணைத்து ஈழத் தமிழர்களை அச்சத்துடன் நோக்கிய சிங்கள இனம், தமது சுய பாதுகாப்புடனான துவேசத்தை வளர்த்துக் கொண்டது. அந்த இந்தியப் பின்னணி குறித்த அச்சம் சிங்கள வர்கள் மத்தியில் எழுவதற்கு ஈழத் தமிழர்களின் இந்தியா சார்ந்த நம்பிக்கையே காரணமாக அமைந்தது.

இதனைப் பயன்படுத்தியே இந்தியா தனது காய்களை நகர்த்தியது. காலத்திற்குக் காலம் தமிழர்களைப் பலி கொடுத்துத் தனது காரியங்களை நிறைவு செய்தது.

விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கி, ஈழத் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்குத் தேவையான அத்தனை வளங் களையும் சிறிலங்காவிற்கு அள்ளி வழங்கிய இந்தியா, இறுதிப் போர் நடந்த காலப் பகுதியில், அவலத்தை எதிர் கொண்ட அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முயன்ற நாடுகளையும் தடுத்து நிறுத்தியது. அதற்கும் அப்பால், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை மிகக் கொடூரமாக அதி பயங்கர கனரக ஆயுதங்களால் கொன்று, போர்க் குற்றம் புரிந்த சிங்கள அரசை மேற்குலகின் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றிய ஈனச் செயலையும் புரிந்து தமிழீழ மக்களின் இறுதி நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்தது.

இத்தனை கொடூரங்களுக்கும், இத்தனை துரோகங் களுக்கும் பின்னரும் இந்தியா தன் நிலையை மாற்றிக் கொள்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

முள்ளிவாய்க்கால் முதல், வவுனியா முள்வேலி முகாம் வரை ஈழத் தமிழர்களின் அவலங்கள் தொடர்பாக மேற்குலகு கொண்டுள்ள அக்கறையில் ஒரு துளி அளவாவது இந்தியா கொள்ளவில்லை.

இந்த உண்மைகளிலிருந்து நாம் தெளிவு பெற வேண்டும். இந்தியா தொடர்ந்தும் ஈழத் தமிழர்களது துயரங்களைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமானால், ஈழத் தமிழர்கள் தமது இந்தியா சார்ந்த நினைவுகளிலிருந்து விடுபட வேண்டும். பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது கூர்மையடைந்து வரும் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியை சிங்கள அரசு தனக்குச் சார்பானதாக மாற்றியது போலவே, ஈழத் தமிழர்களும் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சார்பானதாக்கிக் கொள்ளவேண்டும்.

:பாரிசிலிருந்து வெளிவரும் 'ஈழநாடு' பத்திரிகையின் 04-09-09 பதிப்பில் வெளிவந்த 'நமது நோக்கு' என்ற ஆசிரியர் தலையங்கம்.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

06/09/2009, 16:49

...விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்கி, ஈழத் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்குத் தேவையான அத்தனை வளங் களையும் சிறிலங்காவிற்கு அள்ளி வழங்கிய இந்தியா, இறுதிப் போர் நடந்த காலப் பகுதியில், அவலத்தை எதிர் கொண்ட அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முயன்ற நாடுகளையும் தடுத்து நிறுத்தியது. அதற்கும் அப்பால், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை மிகக் கொடூரமாக அதி பயங்கர கனரக ஆயுதங்களால் கொன்று, போர்க் குற்றம் புரிந்த சிங்கள அரசை மேற்குலகின் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றிய ஈனச் செயலையும் புரிந்து தமிழீழ மக்களின் இறுதி நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்தது.

இந்த உண்மைகளிலிருந்து நாம் தெளிவு பெற வேண்டும். இந்தியா தொடர்ந்தும் ஈழத் தமிழர்களது துயரங்களைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமானால், ஈழத் தமிழர்கள் தமது இந்தியா சார்ந்த நினைவுகளிலிருந்து விடுபட வேண்டும். பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது கூர்மையடைந்து வரும் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியை சிங்கள அரசு தனக்குச் சார்பானதாக மாற்றியது போலவே, ஈழத் தமிழர்களும் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சார்பானதாக்கிக் கொள்ளவேண்டும்.

:பாரிசிலிருந்து வெளிவரும் 'ஈழநாடு' பத்திரிகையின் 04-09-09 பதிப்பில் வெளிவந்த 'நமது நோக்கு' என்ற ஆசிரியர் தலையங்கம்.

இந்த உண்மையை இன்னமும் சிலர் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பொந்தியாவிற்கு இன்னமும் வால் பிடிக்கின்றனர்.தமிழகத் தமிழர்கள்தான் 'தத்தி'களென்றால் ஈழத்தமிழர்கள் சுத்தம். இருப்பதே நாலுபேர் இதில் ஒருத்த்னுக்கொருத்தன் ஆயிரத்தெட்டு காரணங்களைக் காட்டி வெட்டுக் குத்து. இதிலும் ஒருத்தர் மீட்பதற்கு வந்தும் திருந்தியபாடில்லை. விளங்கிவிடுவோமப்பா!

:unsure:
இந்தியா தொடர்ந்தும் ஈழத் தமிழர்களது துயரங்களைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துமானால், ஈழத் தமிழர்கள் தமது இந்தியா சார்ந்த நினைவுகளிலிருந்து விடுபட வேண்டும். பிராந்திய வல்லாதிக்கப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது கூர்மையடைந்து வரும் பிராந்திய வல்லாதிக்கப் போட்டியை சிங்கள அரசு தனக்குச் சார்பானதாக மாற்றியது போலவே, ஈழத் தமிழர்களும் சந்தர்ப்பங்களைத் தமக்குச் சார்பானதாக்கிக் கொள்ளவேண்டும்.
:unsure:

சிங்களவன் எமக்கு எதிரி

இந்தியா எமக்கு எதிரி

பாகிஸ்தான் எமக்கு எதிரி

பங்களாதேஸ் ..

சீனா ...

..... .....

..... .......

ரஷ்யா எமக்கு எதிரி

அமெரிக்கா எதிரி!!

எல்லோரும் எம்மை சேர்ந்து அழித்தார்கள்!!! உண்மை!!

எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள்!!!

அப்போ, எமக்கு எல்லோரும் எதிரியாக, யார் மேல் குற்றம்???????

இதில் எமக்கு உள்ள நண்பர்களை சொல்லுங்கள், இந்தியாவிற்கு எதிராக சேர்ந்து ........!!!!!!!!!!

கட்டுரையாளன் நல்ல நகைச்சுவையாளன்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்றகிழமை ஒரு பூப்புனீத நீராட்டு விழாவுக்கு சென்றிருந்தேன்.(உண்மை)

அங்கிருந்த பெண்களின் கண்கவர் உடைகள் , பிளாஸ்ரிக்காப்புகள்(லேட்டஸ்) ........

மற்றும் மச்சிமாரின் வட இந்திய ஆடைகள் அதற்கேற்ற பாதணிகள்.............

மண்டப அலங்காரம்( இந்தியாவிலையிருந்துபுதிசாய

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை நாம் முற்றாக பகைத்தமையால்தான் எமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் அழித்திருக்கின்றனர். இந்த உண்மை தெரியாது, ஈழநாடு, ஈழமுரசு மற்றும் இதயச்சந்திரன் போன்றோர்கள் இந்திய எதிர்ப்பு வாதத்தை முன்வைத்து கட்டுரை எழுதுகின்றனர்.

இந்தியாவை நாம் தவிர்த்து எதனையும் செய்ய முடியாது என்கின்ற உண்மை மேற்குறிப்பிட்ட ஊடகங்களுக்கும் கட்டுரையாளருக்கும் நன்கு தெரியும்.

இவர்களை எல்லாம் சரியாக கவனித்தீர்களேயானால் யாராவது இந்தியா சார்பாக ஒரு பேட்டி கொடுத்தாலோ அல்லது கட்டுரை எழுதினாலோ அல்லது விடுதலைப் புலிகளைப் பற்றி எதிராக எழுதினாலோ உடனே அதற்கு எதிர்வினை ஆற்றுவதுதான் இவர்கள் பணி. சுருக்கமாக சொல்வதனால் இவர்கள்தான் யாராவது எதிராக கருத்துச் சொன்னால் பதிலடி கொடுப்பவர்கள். (இவர்களை யார் அங்கீகரித்தார்களோ தெரியாது)

இதில் இன்னொரு விடயத்தினை குறிப்பிட்டேயாக வேண்டும். மாற்றுக்குழுக்களில் எழுதும் கட்டுரை மற்றும் கருத்துக்களுக்கு இவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். ஏனெனில் இவர்களின் வண்டவாளங்களை மாற்றுக்குழுக்கள் போட்டு தள்ளிவிடும். அவ்ளோ பயம் அவர்கள் மீது இவர்களுக்கு.

இந்தியா எமது போராட்டத்துக்கு எதிராக நின்றது உண்மைதான், எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்தது உண்மைதான். அப்படியெனில் கடந்த மாவீரர் நாள் உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏன் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டினார்? அன்று அவர் நீட்டிய நேசக்கரம், எமது தூரதிர்ஸ்டவம் - அங்கே இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் திசை திருப்பப்பட்டுவிட்டது.

ஊடகங்களும் கட்டுரையாளர்களும் யாழ். கள படிப்பாளர்களும் சரி ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவை நோக்கி இறுதிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான பாலகுமாரன், நடேசன், யோகி உள்ளிட்டோர் ஆதரவுக்கரம் கேட்டு அறிக்கைகளும் பேட்டிகளும் வழங்கியிருந்தனர் என்பதனை மறக்கக்கூடாது.

உண்மையாகவே இந்தியா தமிழர்கள் மீது வன்மம் கொண்டிருந்தால் இன்று மன்னார் ஊடாக தப்பிச்செல்கின்ற எத்தனையோ பேரை பிடித்து சிறிலங்காப் படையினரிடம் கொடுத்திருக்கலாம். இப்போதும் அடைக்கலம் கோருவோரை திருப்பி அனுப்பலாம். கடற்பரப்பு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.

சிலர் இந்தியாவை தவிரத்துவிட்டு சீனாவிடம் போகலாம் என்கிறார்கள். சீனாவுக்கு எமது பிரச்சினை பற்றி என்ன தெரியும்? அவர்களுக்கு அரிவரியில் இருந்து புரிய வைத்தாலே அங்கே தடுப்பு முகாமில் வாழ்கின்ற மூன்று லட்சம் மக்கள் வாழ்நாளில் வெளியே வரமுடியாத நிலைதான் ஏற்படும்.

இந்தியாவை எதிர்க்கின்ற புண்ணியவான்களின் குடும்பங்களைப் பாருங்கள். அவர்கள் ஒன்றில் இந்தியாவில் இருப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு வழியில் தொடர்புகளைப் பேணி வருகின்றனர்.

உண்மையாக - மனதார - இந்தியாவை இவர்கள் எதிர்ப்பவர்களாக இருந்தால் தமது குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதோடு, இந்திய சேலைகள் உட்பட அதன் தயாரிப்புக்களை புறக்கணிப்பார்களா? திரைப்படங்களை புறக்கணிக்கத் தயாரா? கேட்டால் அது அரசியல் இது வியாபாரம் என்பார்கள்.

இன்று திரைப்படங்களை பல நாடுகளில் வெளியிடுபவர்களில் சிலரே இயக்கத்தின் ஆதரவாளர்கள்தான்.

உண்மையில் ஒரு எதிர்ப்பு நிலையை எடுத்தால் ஒருகுரலில் ஆதரிக்கின்ற சமூகம் அல்ல எமது தமிழ்ச் சமூகம். இன்று சில ஊடகவியலாளர்களுக்கு எழுதுவதற்கு எதுவுமே இல்லை. ஆதலால் அவர்கள் யாராவது எழுதுவதற்கு பதிலடி கொடுக்கிறோம் என்று தமது அறிவிலித்தனத்தை காட்டுகின்றனர்.

அந்தவகையில்தான் 'ஈழநாடு' பாலச்சந்திரன், இதயச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

இந்தியாவை எதிர்க்கின்றவர்கள் அதற்கான மாற்றுவழிகள் வைத்திருக்கின்றனரா என்றால் அதுவும் இல்லை. மேற்குலகம் எமக்கு எதிராக நிற்கிறார்கள் என்றார்கள். உண்மையில் எமக்காக மேற்குலகம் ஆதரவாக நின்றது, இப்போதும் அதன் ஊடகங்களும் சேர்ந்து நிற்கிறது.

ஆனால், நாம் அதனை அறுவடை செய்தோமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். எம்மிடையேதான் ஒற்றுமை இல்லையே!.

அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் போராட்டங்களில் கலந்துகொள்கின்ற மக்கள் தொகையினைப் பாருங்கள். இதற்கு எல்லாம் காரணம் யார்? விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவினர் என்று தம்மைக் கூறிக்கொண்டு செயற்பட்டவர்கள்தான் இதற்கு காரணம். அவர்கள் ஒருமித்த குரலில் பத்மநாதனோடு செயற்படவில்லை. இன்று என்ன செய்வது என்று கையறு நிலையில் நிற்கிறார்கள். வீரம் பேசியவர்கள் எல்லாம் இன்று எங்கே? எங்கே? எங்கே?

சரி - பிழைகளுக்கு அப்பால் இந்தியாவை நோக்கித்தான் நாம் ஆதரவுக்கரத்தினை நீட்டி - தடுப்பு முகாம்களுக்கு வாடும் எமது மக்களை மீட்டு - எமக்கு சிறிலங்கா அரசிடம் இருந்து பெறக்கூடிய தீர்வைத்தன்னும் பெற முயற்சிக்க வேண்டும்.

மே மாதம் 18 ஆம் நாள் வரை எமக்கு படைத்துறையான பலம் இருந்தது இன்று அது இல்லை. ஆகவே நாம் இந்தியா ஊடாக எமது காய்களை நகர்த்தி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தி அதன் ஊடாக எமது உரிமைகளை படிப்படியாக பெற முயற்சிக்க வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன், இந்தியா தவிர்த்து நாம் ஏதும் செய்ய முயற்சித்தால் மீண்டும் ஈழத் தமிழர்கள் புதைகுழிகளில்தான் விழவேண்டும்.

எனது கருத்துக்களை விமர்சிக்க மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், ஒருகணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்துவிட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்துங்கள். உண்மையைச் சொன்னால் 87 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் எமது உறவினர்கள் மூவரை இழந்தவன். வீடு - வாசல் இழந்து நடைப்பிணமாக மூன்று மாதம் வாழ்ந்து எல்லாவித வலிகளையும் அனுபவித்தவன் என்பதனையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் சொல்கிறேன், இந்தியா தவிர்த்து நாம் ஏதும் செய்ய முயற்சித்தால் மீண்டும் ஈழத் தமிழர்கள் புதைகுழிகளில்தான் விழவேண்டும்.

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக.............

காலில் விழுந்தாச்சு?

மன்றாடியாச்சு?

அழுது புரண்டாச்சு?

விரதம் இருந்தாச்சு?

கட்டிப்புடிச்சு அழுதாச்சு?

இனி யாரின் குண்டியை நக்கவேண்டும்?

இந்தியா என்றுமே ஈழத்தில் தமிழர்களின் விடுதலையை ஆதரிக்கப்போவதில்லை, குறைந்த பட்சம் பெடரல் கூட்டமைப்புக்கு கூட அது ஆதரவு தராது .... தமிழர்கள் இரண்டாம் தர குடிகளாக இலங்கையில் வாழ வேண்டும் ... அதை ப்பார்த்து தமிழக மாக்கள் நம் நிலை இந்தியாவில் எவ்வளவோ மேல் என்று வாழ வேண்டும் ... இது தான் இந்தியா என்ற பேயின் நிலையாக இருக்கும்..

இன்னும் நீங்கள் இந்தியாவை நம்பினால் ....... அவ்வளவுதான்.

மாறாக இந்தியாவை நம்புவது போல் நடிக்கலாம் ..... அதற்கு வேறு வழிகளில் குடைச்சல் கொடுக்கலாம், ஆனால் இந்தியா ஈழத்தமிழனின் உரிமைப்போராட்டத்திற்கு என்றாவது ஒரு நாள் ஆதரவு நல்கும் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள்...

மீண்டும் சொல்கிறேன்இ இந்தியா தவிர்த்து நாம் ஏதும் செய்ய முயற்சித்தால் மீண்டும் ஈழத் தமிழர்கள் புதைகுழிகளில்தான் விழவேண்டும்

சவக்குளிக்குள் தள்ளியாகி விட்டது இனி என்ன மீண்டும் ஒரு புதைகுழி?

இந்திய தவிர்த்து நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பது எம்மை விட இந்திய அதிகாரவர்க்கத்துக்கே நன்கு தெரிந்த விடயம். எமது அனைத்து வாழ்வியல் முறைகளும் இந்தியத்துள் பிணைபட்டுக்கிடக்கின்றது. மத ரீதியாக இந்துக்கள் அதை துறந்து சைவமாக மாற முடியுமா? இந்திய சினிமா கலாச்சாரம் மற்றும் இரத விடயங்களில் இருந்து தனித்து இயங்க முடியுமா? இந்தியாவில் உள்ள தமிழன் இந்தியன் என்பதை இரண்டாவதாக்கி தமிழன் என்பதை முன்நிறுத்த முடியுமா?

இந்தியா என்றொரு மாயையில் இருந்து விடுபடுவது என்பது சாதாரணமான விடயம் இல்லை ஏனெனில் அது தமிழனாகிய அனைவரினதும் ஒரு அங்கமாகி வாழ்வியலுடன் பிணைந்துள்ள ஒன்று. ஆனால் உடைத்தெறியாமல் தமிழ்ச்சாதிக்கு விமோசனம் இல்லை. ஈழத்தமிழனாகிலும் இந்தியத் தமிழன் ஆகிலும் அவன் இந்திய அதிகார வர்க்கத்தின் அடிமைகள் என்பதே யதார்த்தம். இந்திய மாயையில் இருந்து தமிழன் விடுபடுகையில் இந்தியா சிதறுண்டு போகும். தமிழன் என்றொரு இனம் உலகில் தொடரவேண்டுமாகில் அந்த இலக்கை நோக்கி பயணிப்பதை தவிர வேறு வழியில்லை.

அம்மா தாயே இந்தியாவே!

நாம் செய்த பாவங்களுக்கு பட்டது போதும். உலக அரசியல் அறிவில்லாமல், தூர சிந்தனையில்லாமல் உன்னை பகைத்து விட்டோம். சில பாவங்களையும் செய்து விட்டோம். அதற்கு நீ எடுத்த பலி அளவுக்கதிகம்.

உனை விட்டால் எமக்கு துணை இல்லை. இங்குள்ள கோமாளிகளின் தட்டச்சு வீரப்பிரதாபங்களுக்கும், வெற்று வேட்டுக்களையும் பார்த்து விட்டு எம்மை தொடர்ந்து கை விடாதே.

இப்படி கெஞ்சும் 70 % வீதம் ஈழத்தில் இருப்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும், எப்படி தான் அடித்தாலும் தன் காலுக்குள் தான் தமிழன் வந்து நிற்பான் எண்று... அதனால் தான் தனது வசதிக்காக இப்போது மட்டும் இல்லை எப்போதும் உதைத்து கொண்டே இருப்பான் இந்தியன்.. அதில் மாற்றம் இருக்காது... அதை வசதியாக சிங்களவனும் பாவித்து கொள்வான்...

தமிழனின் இண்றைய நிலைக்கு வேற யாருமே காரணம் இல்லை... உங்களை போண்ற பெரும்பாண்மையானவரின் அடிமைத்தனமான எலும்புக்கு ஏங்கும் நிலைதான்...

இந்தியா என்றுமே ஈழத்தில் தமிழர்களின் விடுதலையை ஆதரிக்கப்போவதில்லை, குறைந்த பட்சம் பெடரல் கூட்டமைப்புக்கு கூட அது ஆதரவு தராது .... தமிழர்கள் இரண்டாம் தர குடிகளாக இலங்கையில் வாழ வேண்டும் ... அதை ப்பார்த்து தமிழக மாக்கள் நம் நிலை இந்தியாவில் எவ்வளவோ மேல் என்று வாழ வேண்டும் ... இது தான் இந்தியா என்ற பேயின் நிலையாக இருக்கும்..

இன்னும் நீங்கள் இந்தியாவை நம்பினால் ....... அவ்வளவுதான்.

மாறாக இந்தியாவை நம்புவது போல் நடிக்கலாம் ..... அதற்கு வேறு வழிகளில் குடைச்சல் கொடுக்கலாம், ஆனால் இந்தியா ஈழத்தமிழனின் உரிமைப்போராட்டத்திற்கு என்றாவது ஒரு நாள் ஆதரவு நல்கும் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள்...

இதுதான் உண்மை நண்பரே...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா தாயே இந்தியாவே!

நாம் செய்த பாவங்களுக்கு பட்டது போதும். உலக அரசியல் அறிவில்லாமல், தூர சிந்தனையில்லாமல் உன்னை பகைத்து விட்டோம். சில பாவங்களையும் செய்து விட்டோம். அதற்கு நீ எடுத்த பலி அளவுக்கதிகம்.

உனை விட்டால் எமக்கு துணை இல்லை. இங்குள்ள கோமாளிகளின் தட்டச்சு வீரப்பிரதாபங்களுக்கும், வெற்று வேட்டுக்களையும் பார்த்து விட்டு எம்மை தொடர்ந்து கை விடாதே.

"ச்சீ..சீ, வர வர இந்த 'ரா'ப்பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. தே, பொத்திண்டு மூலைல குந்து, ஏதோ ஒன்னோ ரெண்டோ போடுறம்" - இதை பொந்தியாவின் துர்சிந்தனையிலிருந்து வெளியே சொல்லி, நீங்களும் வாலாட்டவேண்டுமென விரும்பினால் அந்த விதியை மாற்ற முடியுமா?

இது 'நெல்'ஸின் உங்கள் சாய்ஸ்! :unsure::unsure:

இந்தியாவை நாம் முற்றாக பகைத்தமையால்தான் எமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் அழித்திருக்கின்றனர். இந்த உண்மை தெரியாது, ஈழநாடு, ஈழமுரசு மற்றும் இதயச்சந்திரன் போன்றோர்கள் இந்திய எதிர்ப்பு வாதத்தை முன்வைத்து கட்டுரை எழுதுகின்றனர்.

இந்தியாவை நாம் தவிர்த்து எதனையும் செய்ய முடியாது என்கின்ற உண்மை மேற்குறிப்பிட்ட ஊடகங்களுக்கும் கட்டுரையாளருக்கும் நன்கு தெரியும்.

இவர்களை எல்லாம் சரியாக கவனித்தீர்களேயானால் யாராவது இந்தியா சார்பாக ஒரு பேட்டி கொடுத்தாலோ அல்லது கட்டுரை எழுதினாலோ அல்லது விடுதலைப் புலிகளைப் பற்றி எதிராக எழுதினாலோ உடனே அதற்கு எதிர்வினை ஆற்றுவதுதான் இவர்கள் பணி. சுருக்கமாக சொல்வதனால் இவர்கள்தான் யாராவது எதிராக கருத்துச் சொன்னால் பதிலடி கொடுப்பவர்கள். (இவர்களை யார் அங்கீகரித்தார்களோ தெரியாது)

இதில் இன்னொரு விடயத்தினை குறிப்பிட்டேயாக வேண்டும். மாற்றுக்குழுக்களில் எழுதும் கட்டுரை மற்றும் கருத்துக்களுக்கு இவர்கள் பதிலளிக்க மாட்டார்கள். ஏனெனில் இவர்களின் வண்டவாளங்களை மாற்றுக்குழுக்கள் போட்டு தள்ளிவிடும். அவ்ளோ பயம் அவர்கள் மீது இவர்களுக்கு.

இந்தியா எமது போராட்டத்துக்கு எதிராக நின்றது உண்மைதான், எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்தது உண்மைதான். அப்படியெனில் கடந்த மாவீரர் நாள் உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏன் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டினார்? அன்று அவர் நீட்டிய நேசக்கரம், எமது தூரதிர்ஸ்டவம் - அங்கே இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் திசை திருப்பப்பட்டுவிட்டது.

ஊடகங்களும் கட்டுரையாளர்களும் யாழ். கள படிப்பாளர்களும் சரி ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தியாவை நோக்கி இறுதிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான பாலகுமாரன், நடேசன், யோகி உள்ளிட்டோர் ஆதரவுக்கரம் கேட்டு அறிக்கைகளும் பேட்டிகளும் வழங்கியிருந்தனர் என்பதனை மறக்கக்கூடாது.

உண்மையாகவே இந்தியா தமிழர்கள் மீது வன்மம் கொண்டிருந்தால் இன்று மன்னார் ஊடாக தப்பிச்செல்கின்ற எத்தனையோ பேரை பிடித்து சிறிலங்காப் படையினரிடம் கொடுத்திருக்கலாம். இப்போதும் அடைக்கலம் கோருவோரை திருப்பி அனுப்பலாம். கடற்பரப்பு மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் உங்களுக்குத் தெரியும்.

சிலர் இந்தியாவை தவிரத்துவிட்டு சீனாவிடம் போகலாம் என்கிறார்கள். சீனாவுக்கு எமது பிரச்சினை பற்றி என்ன தெரியும்? அவர்களுக்கு அரிவரியில் இருந்து புரிய வைத்தாலே அங்கே தடுப்பு முகாமில் வாழ்கின்ற மூன்று லட்சம் மக்கள் வாழ்நாளில் வெளியே வரமுடியாத நிலைதான் ஏற்படும்.

இந்தியாவை எதிர்க்கின்ற புண்ணியவான்களின் குடும்பங்களைப் பாருங்கள். அவர்கள் ஒன்றில் இந்தியாவில் இருப்பார்கள் அல்லது ஏதாவது ஒரு வழியில் தொடர்புகளைப் பேணி வருகின்றனர்.

உண்மையாக - மனதார - இந்தியாவை இவர்கள் எதிர்ப்பவர்களாக இருந்தால் தமது குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுவதோடு, இந்திய சேலைகள் உட்பட அதன் தயாரிப்புக்களை புறக்கணிப்பார்களா? திரைப்படங்களை புறக்கணிக்கத் தயாரா? கேட்டால் அது அரசியல் இது வியாபாரம் என்பார்கள்.

இன்று திரைப்படங்களை பல நாடுகளில் வெளியிடுபவர்களில் சிலரே இயக்கத்தின் ஆதரவாளர்கள்தான்.

உண்மையில் ஒரு எதிர்ப்பு நிலையை எடுத்தால் ஒருகுரலில் ஆதரிக்கின்ற சமூகம் அல்ல எமது தமிழ்ச் சமூகம். இன்று சில ஊடகவியலாளர்களுக்கு எழுதுவதற்கு எதுவுமே இல்லை. ஆதலால் அவர்கள் யாராவது எழுதுவதற்கு பதிலடி கொடுக்கிறோம் என்று தமது அறிவிலித்தனத்தை காட்டுகின்றனர்.

அந்தவகையில்தான் 'ஈழநாடு' பாலச்சந்திரன், இதயச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்குகின்றனர்.

இந்தியாவை எதிர்க்கின்றவர்கள் அதற்கான மாற்றுவழிகள் வைத்திருக்கின்றனரா என்றால் அதுவும் இல்லை. மேற்குலகம் எமக்கு எதிராக நிற்கிறார்கள் என்றார்கள். உண்மையில் எமக்காக மேற்குலகம் ஆதரவாக நின்றது, இப்போதும் அதன் ஊடகங்களும் சேர்ந்து நிற்கிறது.

ஆனால், நாம் அதனை அறுவடை செய்தோமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். எம்மிடையேதான் ஒற்றுமை இல்லையே!.

அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் போராட்டங்களில் கலந்துகொள்கின்ற மக்கள் தொகையினைப் பாருங்கள். இதற்கு எல்லாம் காரணம் யார்? விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவினர் என்று தம்மைக் கூறிக்கொண்டு செயற்பட்டவர்கள்தான் இதற்கு காரணம். அவர்கள் ஒருமித்த குரலில் பத்மநாதனோடு செயற்படவில்லை. இன்று என்ன செய்வது என்று கையறு நிலையில் நிற்கிறார்கள். வீரம் பேசியவர்கள் எல்லாம் இன்று எங்கே? எங்கே? எங்கே?

சரி - பிழைகளுக்கு அப்பால் இந்தியாவை நோக்கித்தான் நாம் ஆதரவுக்கரத்தினை நீட்டி - தடுப்பு முகாம்களுக்கு வாடும் எமது மக்களை மீட்டு - எமக்கு சிறிலங்கா அரசிடம் இருந்து பெறக்கூடிய தீர்வைத்தன்னும் பெற முயற்சிக்க வேண்டும்.

மே மாதம் 18 ஆம் நாள் வரை எமக்கு படைத்துறையான பலம் இருந்தது இன்று அது இல்லை. ஆகவே நாம் இந்தியா ஊடாக எமது காய்களை நகர்த்தி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தி அதன் ஊடாக எமது உரிமைகளை படிப்படியாக பெற முயற்சிக்க வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன், இந்தியா தவிர்த்து நாம் ஏதும் செய்ய முயற்சித்தால் மீண்டும் ஈழத் தமிழர்கள் புதைகுழிகளில்தான் விழவேண்டும்.

எனது கருத்துக்களை விமர்சிக்க மற்றவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், ஒருகணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்துவிட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்துங்கள். உண்மையைச் சொன்னால் 87 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் எமது உறவினர்கள் மூவரை இழந்தவன். வீடு - வாசல் இழந்து நடைப்பிணமாக மூன்று மாதம் வாழ்ந்து எல்லாவித வலிகளையும் அனுபவித்தவன் என்பதனையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

'ஈழநாடு' பாலச்சந்திரன், இதயச்சந்திரன்,புலி,எலி,பழநெட

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா இதுவரை செய்த கொடுமைக்கு மேலாக தமிழினம் இன்னும் என்ன கொடுமை அனுபவி;க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.இந்தியாவை உளமார நேசித்த தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த வேலைகள் தமிழ்மக்களால் மறக்க முடியாது.தமிழ் மக்களை இந்தியாவாலும் மறக்க முடியாது.இனி எந்தக் காலத்திலும் இந்தியாவை நம்பிப் பிரயோசனம் இல்லை. இந்தியாவிற்கு எதிரான சக்திகளிடம் கூட்டுச் சேர்வோம் இப்பொழுது இதரவாக இருப்பவர்களைச் சகுனி வெலை பார்த்தாவது பிரிப்போம். குறிப்பாக அமெரிக்காவின் தேவையறிந்து அமெரிக்காவின் உதவியை நாடுவதே சிறந்தது. ஆனானப்பட்ட சோவியத் யூனியனே துண்டு துண்டாக உடைந்தது. இந்தியா எம்மாத்திரம் . இந்தியாவும் உடையும் தமிழக மக்கள் பரிபூரண எழுச்சிகொள்ள வேண்டும். அப்பொழுது ஈழம் தானாகவே பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி எந்தக் காலத்திலும் இந்தியாவை நம்பிப் பிரயோசனம் இல்லை. இந்தியாவிற்கு எதிரான சக்திகளிடம் கூட்டுச் சேர்வோம் இப்பொழுது இதரவாக இருப்பவர்களைச் சகுனி வெலை பார்த்தாவது பிரிப்போம். குறிப்பாக அமெரிக்காவின் தேவையறிந்து அமெரிக்காவின் உதவியை நாடுவதே சிறந்தது. ஆனானப்பட்ட சோவியத் யூனியனே துண்டு துண்டாக உடைந்தது. இந்தியா எம்மாத்திரம் . இந்தியாவும் உடையும் தமிழக மக்கள் பரிபூரண எழுச்சிகொள்ள வேண்டும். அப்பொழுது ஈழம் தானாகவே பிறக்கும்.

பொந்தியா ஒடைஞ்சு, தமிழகத்தானுக்கு ரோஷம் வந்து( :wub: ), பின் தனி ஈழம் வருமென்பதெல்லாம் இலவு காத்த கிளி கதையாயிடும் புலவரே. அதைவுட்டுப் போட்டு வேறவழியை ஆராய்வதுதான் உசிதம்.

இந்தியாவை நாம் முற்றாக பகைத்தமையால்தான் எமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் அழித்திருக்கின்றனர்.

இந்தியா எமது போராட்டத்துக்கு எதிராக நின்றது உண்மைதான், எல்லாவற்றையும் காட்டிக்கொடுத்தது உண்மைதான்.

....

அப்படியெனில் கடந்த மாவீரர் நாள் உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏன் இந்தியாவை நோக்கி நேசக்கரம் நீட்டினார்?

இந்தியாவை நோக்கி இறுதிக்காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான பாலகுமாரன், நடேசன், யோகி உள்ளிட்டோர் ஆதரவுக்கரம் கேட்டு அறிக்கைகளும் பேட்டிகளும் வழங்கியிருந்தனர் என்பதனை மறக்கக்கூடாது.

....

சரி - பிழைகளுக்கு அப்பால் இந்தியாவை நோக்கித்தான் நாம் ஆதரவுக்கரத்தினை நீட்டி - தடுப்பு முகாம்களுக்கு வாடும் எமது மக்களை மீட்டு - எமக்கு சிறிலங்கா அரசிடம் இருந்து பெறக்கூடிய தீர்வைத்தன்னும் பெற முயற்சிக்க வேண்டும்.

மே மாதம் 18 ஆம் நாள் வரை எமக்கு படைத்துறையான பலம் இருந்தது இன்று அது இல்லை. ஆகவே நாம் இந்தியா ஊடாக எமது காய்களை நகர்த்தி - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தி அதன் ஊடாக எமது உரிமைகளை படிப்படியாக பெற முயற்சிக்க வேண்டும்.

மீண்டும் சொல்கிறேன், இந்தியா தவிர்த்து நாம் ஏதும் செய்ய முயற்சித்தால் மீண்டும் ஈழத் தமிழர்கள் புதைகுழிகளில்தான் விழவேண்டும்.

இந்தியா எமக்கு உதவும் என்று எதிர்பார்பதற்கு,

கடந்த முப்பது வருடங்களில் இந்தியா தமிழருக்குச் செய்த நன்மை என்ன ?

எது அதிக‌ம்..

இந்தியா எம‌க்குச் செய்த‌ ந‌ன்மையா , இல்லை இந்தியாவால் எம‌க்கு ஏற்ப‌ட்ட‌ அழிவா ?

எமது இரத்தத்தில் இந்தியா தனது நலனை விரிவுபடுத்தி யுள்ளது.

இனப்படுகொலைக்கு சிங்களவனுக்கு தோள் கொடுத்து, ஐ.நா உட்பட வெளி உலக தலையீடு எதுவும் இல்லாமல் ஆயிரக்கணக்கில் கொலை செய்வதற்கு வசதியும் செய்து கொடுத்த இந்தியாவிடமே போய் உதவி கேட்போம் என்றால் எம்மைப் போல் வடி கட்டிய முட்டாள்கள் இருக்க மாட்டார்கள்.

முப்பது வருடமாக நாம் விடிவில்லாமல் இருப்பது கூட நமது இந்திய சார்புத் தன்மை காரணமாக மேற்குலகம் எம்மீது கரிசணை காட்டாமல் இருப்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக.............

காலில் விழுந்தாச்சு?

மன்றாடியாச்சு?

அழுது புரண்டாச்சு?

விரதம் இருந்தாச்சு?

கட்டிப்புடிச்சு அழுதாச்சு?

இனி யாரின் குண்டியை நக்கவேண்டும்?

இதுதான் என் கருத்தும்

எல்லாம் பிரபாகரன் செய்தபிழை என்றீர்கள்

இப்போ அவர் இல்லை என்கின்றீர்கள்

அப்படியாயின்

தற்போதும் எமது தார்மீக போராட்டங்களுக்கு தடைபோடுவதேன்?

சிங்ளத்துக்கு வக்காலத்து வாங்குவதேன்?

சர்வதேச அனுசரனைகளுக்கு குறுக்கே நிற்பதேன்?

தமிழனுக்கு ஒரு தீர்வை வரையாதது ஏன்?

ஆகக்குறைந்தது

முகாமிலிருப்பவர்களைக்கூட விடுவிக்காதது ஏன்?

அதைவிட

அண்மையில் கூட

5000 இந்திய ராணுவத்தினர் வன்னிக்கு எதற்கு???

அம்மா தாயே இந்தியாவே!

நாம் செய்த பாவங்களுக்கு பட்டது போதும். உலக அரசியல் அறிவில்லாமல், தூர சிந்தனையில்லாமல் உன்னை பகைத்து விட்டோம். சில பாவங்களையும் செய்து விட்டோம். அதற்கு நீ எடுத்த பலி அளவுக்கதிகம்.

உனை விட்டால் எமக்கு துணை இல்லை. இங்குள்ள கோமாளிகளின் தட்டச்சு வீரப்பிரதாபங்களுக்கும், வெற்று வேட்டுக்களையும் பார்த்து விட்டு எம்மை தொடர்ந்து கை விடாதே.

ஒரு தமிழக உறவின் பதில் தங்களுக்கு.

இப்படி கெஞ்சும் 70 % வீதம் ஈழத்தில் இருப்பது இந்தியாவுக்கு நன்கு தெரியும், எப்படி தான் அடித்தாலும் தன் காலுக்குள் தான் தமிழன் வந்து நிற்பான் எண்று... அதனால் தான் தனது வசதிக்காக இப்போது மட்டும் இல்லை எப்போதும் உதைத்து கொண்டே இருப்பான் இந்தியன்.. அதில் மாற்றம் இருக்காது... அதை வசதியாக சிங்களவனும் பாவித்து கொள்வான்...

தமிழனின் இண்றைய நிலைக்கு வேற யாருமே காரணம் இல்லை... உங்களை போண்ற பெரும்பாண்மையானவரின் அடிமைத்தனமான எலும்புக்கு ஏங்கும் நிலைதான்...

இதுதான் உண்மை நண்பரே...

திருந்தாதா என் இனம்

அதை என் வாழ்வில் பார்ப்பேனா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக்கொண்டதற்கே அவர்கள் தமிழர்கள் என்ற ஓரே காரணத்துக்காக நடவடிக்கையேதும் எடுக்காத இந்தியாவா இலங்கைத் தமிழருக்கு விடிவைப் பெற்றுத்தரப் போகிறது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா தாயே இந்தியாவே!

நாம் செய்த பாவங்களுக்கு பட்டது போதும். உலக அரசியல் அறிவில்லாமல், தூர சிந்தனையில்லாமல் உன்னை பகைத்து விட்டோம். சில பாவங்களையும் செய்து விட்டோம். அதற்கு நீ எடுத்த பலி அளவுக்கதிகம்.

உனை விட்டால் எமக்கு துணை இல்லை. இங்குள்ள கோமாளிகளின் தட்டச்சு வீரப்பிரதாபங்களுக்கும், வெற்று வேட்டுக்களையும் பார்த்து விட்டு எம்மை தொடர்ந்து கை விடாதே.

ஐயா நெல்லையனே! நீங்கள் காலில் விழுந்து அழுவதாலோ கெஞ்சுவதாலோ இந்தியாவுக்கு என்ன நன்மை? அழுகையும் கெஞ்சலுமா இந்தியாவின் வெளியுறவு கொள்கைகளை மாற்றியமைக்கப் போகின்றன?

இந்தியா ஏதவது செய்வதாக இருந்தால் அவர்களிடம் தான் வரதராசப் பெருமாள்...வரதராசப் பெருமாள் என்று ஒருவர் இருக்கின்றாரே. அவரை வைத்து ஏதேனும் செய்யமுடியாதா?

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழர்கள் உண்டபின் தூக்கியெறியப்பட்ட கருவேப்பிலை. பனிபோர் காலத்தில் அந்த கருவேப்பிலை தேவைப்பட்டது. இப்போ சிங்களவன் தான் அதற்கு கருவேப்பிலை.

அதனை விட நெல்லையன்.. இப்போது எங்களிடம் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு இல்லை. எதற்கும் விட்டுக் கொடுக்காத தலைவன் பிரபாகரன் இல்லை. அதாவது இப்போ நாங்கள் இருக்கும் நிலை... வேலியும் இல்லை... படலையும் இல்லை.. கூரையும் இல்லை.. எதுவுமே இல்லை என்ற நிலை. எனவே இந்தியா மீண்டும் எம்மை கருவேப்பிலைகளாகப் பாவிக்க எதுவித தடைகளுமில்லை. அதற்கு எமது கெஞ்சுதலோ அழுகைகளோ தேவையில்லை. இந்தியா நினைத்த மாத்திரத்தில் எம்மை கருவேப்பிலையாகப் பாவிக்கும்.

Edited by காட்டாறு

முதலில் இந்த கட்டுரைகளை வாசித்து இந்தியா எவ்வாறு தமிழ் மொழியை ஒடுக்கியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பின்பு இந்தியாவின் தமிழர் எதிர்ப்பு நிலைப்பாடு விளங்கும்.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=12916

http://tamil.berkeley.edu/Tamil%20Chair/Ta...icalLgeLtr.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.