Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல ........ யாராலும் ....?????????

Featured Replies

sadbuttrue1.jpg

sadbuttrue2.jpg

இது வீரகேசரியில் வந்த ஓர் நினைவாஞ்சலி! தனி மடலில் நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

  • Replies 107
  • Views 8.3k
  • Created
  • Last Reply

இந்த சிறுவனின் மரணத்துக்கு காரணம் சிங்கள ராணுவமா இல்லை புலிகளா???

நிச்சயமா புலிகள் தான்...தன்ட எசமான் தான் காரணம் என்டா நெல்லையன் இத இணைச்சிருக்கவே மாட்டாரே!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் அரசு பள்ளிப்பருவத்தில் ஈராண்டுகள் கட்டாய ராணுவப் பயிற்சி வழங்கி எக்கணமும் ராணுவத்தில் இணைந்து போரிடும் வண்ணம் சட்டம் இயற்றி செயல்படுத்துவதுபோல, தமிழீழ அரசும் செயல்பட்டிருக்கு..! இவர் எதிரியுடனான மோதலில் வீரச்சாவு அடைந்திருக்கலாம்..! அப்படியான பட்சத்தில் இந்த இளம்வீரருக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துவது அவசியமாகிறது..!

நாங்கள் எங்கட பிள்ளைகள படிப்பித்து பட்டம் பெறவைத்து டொக்டர் அல்லது இஞ்சின்யர் ஆக்குவம் வேறு யாராவது பெற்றெடுத்த பிள்ளைகள் போய் எங்களுக்காக போராடுவார்கள் தானே என்று இறுதிவரையும் எந்தவொரு பங்களிப்பும் செய்யாமல் இருந்து போராளிகளின்ர குருதியில எல்லோரும் குளிர் காய்ந்துகொண்டிருந்த படியால் தான் தமிழனுக்கு இந்தநிலை வந்தது.16 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோருக்கும் பால் வேறுபாடின்றி கட்டாய பயிற்சி கொடுத்து களத்திலே நிக்கவைத்திருந்தால் இன்று பேனாவை மட்டும் எடுத்து வெற்றுக் கருத்துரைப்போர் இருந்திருக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லையன்... இந்தப் பெற்றோரை எவ்வாறு ஆறுதற்படுத்தலாம் என்று யாழ் கள உறுப்பினர்களின் கருத்தை கேட்கும் நல்லெண்ணத்தில் தானே இணைத்தீர்கள்?

உங்கள் தூய்மையான மனதைப் புரிந்துகொள்ளாமல் சிலர் ஏதேதோ சொல்கிறார்களே!.. வருத்தமாக இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் 50 ஆயிரம் இறந்த மக்களின் குடும்பத்தாருக்கு யார் ஆறுதல் கூறுவார்கள் நெல்லையன்? . சித்திரவதை முகாமில் நாளும் இறக்கும் மக்களுக்கு யார் ஆறுதல் கூறுவது நெல்லையன்? வெள்ளை வானில் தினமும் கடத்தப்படும் குடும்பங்களுக்கு யார் ஆறுதல் கூறுவது நெல்லையன்? இங்கு உண்மையிலேயா நீங்கள் சொல்ல வந்த செய்திதான் என்னங்கோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பெற்றோர் போல் எம் தாய் நாட்டில் எத்தனையோ பெறறோர் இருக்கிறார்கள் அவர்களுக்கு நாம் எதை செய்ய போறோம் எதை சொல்ல போறோம்.

ஓரு குழந்தைக்கு தந்தையான எனக்கு இந்தப் படமும் அஞ்சலியும் வலியை ஏறபடுத்துகின்றன. கட்டாய இராணுவப் பயிற்சியின் போது கொல்லப்பட்டு இருந்தால், அது மிக துயரமானதும் மிகக் கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

கட்டாய இராணுவ சேவை நடைமுறையில் இருக்கும் நாடுகளில் இந்த சிறுவனைப் போல பிள்ளைகள் போரில் கொல்லப்படும் போது அங்கும் பெற்றோருக்கு வலியும் எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும். கண்ணீருக்கும் இழப்புக்கும் நியாயங்கள் இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும், கட்டாயப் படுத்தி இனிப்புத் துண்டைக் கொடுப்பது கூட தவறான விடயம் தான்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

16 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோருக்கும் பால் வேறுபாடின்றி கட்டாய பயிற்சி கொடுத்து களத்திலே நிக்கவைத்திருந்தால் இன்று பேனாவை மட்டும் எடுத்து வெற்றுக் கருத்துரைப்போர் இருந்திருக்க மாட்டார்கள்.

உண்மை தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் இருந்தும் செத்ததற்குச் சமன். என்னால் இந்த உலகத்துக்கும் நன்மை இல்லை. எனக்கும் நன்மை இல்லை. ஏதொ ஒரு வாழ்க்கை என்று பிரயோசனமற்ற வாழ்க்கையை வாழ்ந்து பூமிக்கு பாராமாகத் தான் உள்ளேன். இப்படி வாழ்ந்து கடைசியில் நோயில் வெந்து மரணத்தை தழுவுதை விட ஒரு உயரிய நோக்கத்துக்காக உயிரை கொடுத்திருக்கலாம் என்று எண்ணுகின்றேன்.

இப்பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல ........ யாராலும் ....?????????

http://www.pathivu.com/news/3284/54/.aspx

செல்வன் ஆதித்தன் நிதர்ஷனுக்கு இதய அஞ்சலிகள். தாய், தந்தை, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசு செய்த அட்டூழியங்களும் கொடுமைகளும் கொலைகளும்தான் தமிழ்மக்களைப் புலிகள் மீது பற்றுக்கொள்ள வைத்தன. புலிகளுக்கு ஆதரவு அளிக்க வைத்தன. புலிகள் மீதான ஆதரவென்பது நேரடியாக தமிழீழம் மீதான ஆதரவு என உருவாகவில்லை. நாங்கள் முதலில் புலிகளைத்தான் நேசித்தோம். புலிகள் கட்டாயப்படுத்தி தமக்கான ஆதரவைப் பெறவில்லை. மக்கள் தம்மைக்கொல்லும் சிங்களத்திடமிருந்து காக்கின்ற தங்கள் பிள்ளைகளாக புலிகளைப்பார்த்தார்கள்.

இப்பிடியான நிலையில் புலிகளிடமிருந்து விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கையில்... அது அந்த மக்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருக்கும். அந்தக் கோபம் வெளிப்படவே செய்யும். தனது 16 வயது பிள்ளையை கட்டாயப்பயிற்சிக்கு பிடித்துச் சென்று அவன் சாவடைந்து விட்டால்.. தந்தையால் சிங்கப்பூரில் இதெல்லாம் சகஜம்தானே என யாழில் கருத்து எழுதமுடியாது.

30 ஆண்டுகாலத்தில் 2 லட்சம் தமிழர்களை சிங்கள அரசு கொலை செய்திருக்கிறது. அதனால்த்தான் அவன் எதிரி.. புலிகளால் 10 பேர் கொலைசெய்யப்பட்டார்கள் என்ற செய்தி 2 லட்சம் தமிழர்கள் சிங்களத்தால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைவிட அதிர்ச்சியாக இருப்பதற்கு புலிகள் மீதான நம்பிக்கைதான் காரணமே தவிர .. சோனியாவிற்கும் மகிந்தவிற்கும் பிறந்தவர்களாயிருபப்பதால் அல்ல..

சிலர்.. சிங்களவனும் கொல்கிறான்தானே.. புலிகள் மட்டும் தட்டினால் என்ன என்ற கணக்கில் சொல்வதைப்பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்து விட்டு பார் நானும்தான் கொன்றேன் என்று சொல்வதைப்போல இருக்கிறது.

வன்னி மக்களின் கோபத்தை அங்கீகரித்து அரவணைப்பதன் மூலயே இந்த வரலாற்றுக் காயம் ஆறும். அல்லது ஒவ்வொரு முறையும் அவற்றை நியாயப்படுத்தியும் அந்த மக்கள்மேல் குற்றம் சுமத்தியும்.. இதெல்லாம் சிஙீகபூரில சகஜம்தானே என்பதன் மூலமும் மேலும் மேலும் மக்களின் கோபத்தைக் கிளறி ஒரேயடியாக மக்களிடமிருந்து பிரிந்துபோகப்போகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையனின்.. முயற்சி திருவினையாக்கட்டும்.

இந்த சிறுவன்.. புலிகளால் தான் பறிக்கப்பட்டான்.. பின் இராணுவத்துடன் சண்டை இட்டுத்தான் மடிந்தான் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.

வேறு வேறு குடும்பப் பின்னணிகளில் சூழ்நிலைகளில் இவன் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கலாம்.. அவர்கள் எல்லாம் இவனைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டு வவுனியாவிற்கு ஓடி வந்திருக்கலாம்.. இது எல்லாம் புலிகளால் தான் என்று எப்படிச் சொல்வீர்கள்.

அல்லது இவர் நண்பர்களோடு இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குப் போய் சரணடைந்திருக்கலாம்... அல்லது பிடிப்பட்டிருக்கலாம். அப்போது சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம். நண்பர்கள் ஒருவாறு இப்போ முகாமை வந்தடைந்து இந்தச் செய்தியை பெற்றோருக்கு சொல்லி இருக்கலாம். இவரின் வளர்த்தியை வைத்து இராணுவம் புலி என்று சுட்டுக் கொண்டிருக்கலாம். இப்படிப் பல சாத்தியக் கூறுகள் உள்ளன.

உதாரணத்திற்கு இந்திய அமைதிப்படை யாழ் நகரை பிடிக்க வரும் போது நானும் எனது நண்பர்களுடன் தீவகம் பாதுகாப்பென்று சொல்ல அவர்களோடு இடம்பெயர்ந்தேன். ஆனால் எனது பெற்றோர் என்னை அன்றைய சூழலில் பிரிந்து பிரிந்து இருந்தால் யாராவது ஒருவராது பிழைக்கலாம் என்று அனுப்பி சொல்லி விட்டு அவர்கள் யாழ் நகரிலேயே தங்கிவிட்டனர். நண்பர்கள் தான் பெற்றோரிடம் கட்டாயமாச் சொல்லி கூட்டிக் கொண்டு போனது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலால் எனக்கும் என் பெற்றோருக்கும் தொடர்பே இருக்கவில்லை. அப்போது நான் மிகச் சிறியவன். இறுதியில் அதிஸ்டவசஸ்தான் நாம் எல்லோருமே ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து விடுபட்டு உயிர் தப்பினோம். அதிலும் பாதுகாப்பென்று போன இடத்தில் விமானத்தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பி இருந்தேன். அன்று நான் ஒருவேளை இறந்திருந்தால் என் பெற்றோரும் இப்படித்தான் அஞ்சலி எழுதி இருப்பர். அதற்காக புலிகளை போராளிகளை குற்றம் சுமத்த முடியாது.

ஒருவேளை இந்த சிறுவனுக்கு பாதுகாப்பான இடத்தில் ஒரு ஆபத்து என்றால் அதற்கும் புலிகளையா குறை சொல்வீர்கள்.

போர்க்களங்களில் இடர்களும் இழப்புக்களும் சாதாரணம். அதையெல்லாம் தாங்கித்தான் விடுதலை பெற முடியும். இரண்டு உலக யுத்தங்களை சந்தித்த ஐரோப்பா என்ன கண்ணீரா விட்டுக் கொண்டிருக்கிறது.

இவை துன்பங்கள்... இழப்புக்கள் அல்ல என்று சொல்லவரவில்லை.

ஒருவேளை புலிகள் தான் இவரை கூட்டிக் கொண்டு போயிருந்தாலும் கூட இவரா போனாரா.. இல்ல இழுத்துக் கொண்டு போனார்களா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்ல. பெற்றோரைப் பொறுத்தவரை அவர்களின் பிள்ளை அவர்களுக்குப் பெரிது. அவர்கள் அடுத்தவரில் தான் குறை சொல்வர்.

எதுஎப்படி இருப்பினும்.. ஒரு இழப்பில் நியாயம் கற்பிக்க முற்படாமல்.. புலிகளை இழுத்து வைத்து வசைபாடிக் கொண்டிராமல்.. இழப்புக்காய் வருந்துவதோடு.. இன்னும் இன்னும் இவ்வாறான இழப்புக்கள் ஏற்படாமல் இருக்க முயற்சிப்பதோடு.. இழப்புக்களை ஏற்படுத்திய எதிரியை எம் மண்ணை விட்டு அகற்ற வேண்டும். அவன் இருக்கும் வரை இவ்வாறான இழப்புக்கள் இன்னும் இன்னும் பல வடிவங்களில் தொடரவே செய்யும்..! அதையும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள். புலிகளை திட்டுவதை விட்டு.. சிந்தியுங்கள்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் 50 ஆயிரம் இறந்த மக்களின் குடும்பத்தாருக்கு யார் ஆறுதல் கூறுவார்கள் நெல்லையன்? . சித்திரவதை முகாமில் நாளும் இறக்கும் மக்களுக்கு யார் ஆறுதல் கூறுவது நெல்லையன்? வெள்ளை வானில் தினமும் கடத்தப்படும் குடும்பங்களுக்கு யார் ஆறுதல் கூறுவது நெல்லையன்? இங்கு உண்மையிலேயா நீங்கள் சொல்ல வந்த செய்திதான் என்னங்கோ?

சிறிலங்கா அரசு செய்த அட்டூழியங்களும் கொடுமைகளும் கொலைகளும்தான் தமிழ்மக்களைப் புலிகள் மீது பற்றுக்கொள்ள வைத்தன. புலிகளுக்கு ஆதரவு அளிக்க வைத்தன. புலிகள் மீதான ஆதரவென்பது நேரடியாக தமிழீழம் மீதான ஆதரவு என உருவாகவில்லை. நாங்கள் முதலில் புலிகளைத்தான் நேசித்தோம். புலிகள் கட்டாயப்படுத்தி தமக்கான ஆதரவைப் பெறவில்லை. மக்கள் தம்மைக்கொல்லும் சிங்களத்திடமிருந்து காக்கின்ற தங்கள் பிள்ளைகளாக புலிகளைப்பார்த்தார்கள்.

இத்துடன்

புலிகள் தங்களை முழுமையாக பரிபூரணமாக தமது கொள்கைகளுக்காக தம்மை அர்ப்பணித்தார்கள்

அதனால் நாம் அவர்களை ஆதரித்தோம் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்

தமிழன் ஏன் தோற்று இண்றும் அடிமையாக இருக்கிறான் எனபதுக்கு நெல்லையனும் அவரின் பதிவும் இந்த விளம்பரமும் நல்ல உதாரணம்...

சிங்களவரின் பிள்ளைகளும் பலர் இந்த போரில் இறந்து போய் இருக்கிறார்கள்.. அவர்கள் யாரும் பத்திரிகையில் படு பாவி மகிந்த என் பிள்ளையை கொண்டு போய் யம தூதுவரிடம் பலி இட்டு விட்டார்களே எண்று விளம்பரம் செய்வது இல்லை... காரணம் சிங்களவன் தனது இனமானத்தை உயிராக நினைக்கிறான்...

ஆனால் எங்கட நாயள் உன்னத இலச்சியத்துக்காக சாவடந்த வீரன் ஒருவனை வைத்து மலின அரசியல் நடத்தி பிளவு படுத்துதுகள்...

புலிகள் யாரையும் சிங்கள தேசத்தை சூறையாடுவதுக்காக படையில் சேர்க்கவில்லை... சூறையாட வரும் எதிரியை தடுத்து தற்காக்கவே என்பதை கூட நிறைய பேர் புரிந்தும் இருக்க இல்லை என்பது நெல்லையன் மூலம் தெளிவாகிறது...

இங்கையும் சிங்களவன் உயர்ந்துதான் நிக்கிறான்...

கேவலம் கெட்ட தமிழ் சாதி இன்னும் கீழ் நிலைக்கு போக வேணும் என்டு துடித்தால் யார் தான் தடுக்க முடியும்...??

Edited by தயா

  • தொடங்கியவர்

சிறிலங்கா அரசு செய்த அட்டூழியங்களும் கொடுமைகளும் கொலைகளும்தான் தமிழ்மக்களைப் புலிகள் மீது பற்றுக்கொள்ள வைத்தன. புலிகளுக்கு ஆதரவு அளிக்க வைத்தன. புலிகள் மீதான ஆதரவென்பது நேரடியாக தமிழீழம் மீதான ஆதரவு என உருவாகவில்லை. நாங்கள் முதலில் புலிகளைத்தான் நேசித்தோம். புலிகள் கட்டாயப்படுத்தி தமக்கான ஆதரவைப் பெறவில்லை. மக்கள் தம்மைக்கொல்லும் சிங்களத்திடமிருந்து காக்கின்ற தங்கள் பிள்ளைகளாக புலிகளைப்பார்த்தார்கள்.

இப்பிடியான நிலையில் புலிகளிடமிருந்து விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கையில்... அது அந்த மக்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருக்கும். அந்தக் கோபம் வெளிப்படவே செய்யும். தனது 16 வயது பிள்ளையை கட்டாயப்பயிற்சிக்கு பிடித்துச் சென்று அவன் சாவடைந்து விட்டால்.. தந்தையால் சிங்கப்பூரில் இதெல்லாம் சகஜம்தானே என யாழில் கருத்து எழுதமுடியாது.

30 ஆண்டுகாலத்தில் 2 லட்சம் தமிழர்களை சிங்கள அரசு கொலை செய்திருக்கிறது. அதனால்த்தான் அவன் எதிரி.. புலிகளால் 10 பேர் கொலைசெய்யப்பட்டார்கள் என்ற செய்தி 2 லட்சம் தமிழர்கள் சிங்களத்தால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தியைவிட அதிர்ச்சியாக இருப்பதற்கு புலிகள் மீதான நம்பிக்கைதான் காரணமே தவிர .. சோனியாவிற்கும் மகிந்தவிற்கும் பிறந்தவர்களாயிருபப்பதால் அல்ல..

சிலர்.. சிங்களவனும் கொல்கிறான்தானே.. புலிகள் மட்டும் தட்டினால் என்ன என்ற கணக்கில் சொல்வதைப்பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்கள் தங்கள் தங்கள் பிள்ளைகளின் கழுத்தை அறுத்துக் கொலைசெய்து விட்டு பார் நானும்தான் கொன்றேன் என்று சொல்வதைப்போல இருக்கிறது.

வன்னி மக்களின் கோபத்தை அங்கீகரித்து அரவணைப்பதன் மூலயே இந்த வரலாற்றுக் காயம் ஆறும். அல்லது ஒவ்வொரு முறையும் அவற்றை நியாயப்படுத்தியும் அந்த மக்கள்மேல் குற்றம் சுமத்தியும்.. இதெல்லாம் சிஙீகபூரில சகஜம்தானே என்பதன் மூலமும் மேலும் மேலும் மக்களின் கோபத்தைக் கிளறி ஒரேயடியாக மக்களிடமிருந்து பிரிந்துபோகப்போகிறீர்கள்.

:

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

கேவலம் கெட்ட தமிழ் சாதி இன்னும் கீழ் நிலைக்கு போக வேணும் என்டு துடித்தால் யார் தான் தடுக்க முடியும்...??

நன்றிகள் தயா!!

நீங்கள் சொவது நூற்றுக்கு நூறு வீதம் உண்மையானது!! அன்றிலிருந்து இன்றுவரை இருந்த எமது தலைவர்கள், பதவி, போட்டி, பணத்தாசை, அரசியல் சூனியம் போன்றவற்றுக்காக எம்மை அழித்தே விட்டார்கள்!!

நாமும் எமக்குள் ஒரு எண்ணம் ... யூதனுக்கு நிகரான மூளைசாலிகள் என்று ..... ஆனால் அரசியல் வங்குரோத்துத்தனமான தலைமைகளின் பின் எம் உடல், உணர்வு, பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து ... கண்டது அழிவையே!!!

Edited by Nellaiyan

இங்கே வந்து மிகவும் விசுவாசமாக விளாசித்துள்ளும் பெருந்தகைகளே முடிந்தால் வன்னியில் உள்ள முகாம்களில் இருந்து தற்போது உறவினர்களுடன் வெளியேறும் உறவுகளுடன் ஒரு தரம் கதைக்கவும். அவர்கள் இருதரப்பாலும் பட்ட அவஸ்தைகளை வெசிமடிக்கவும். காம்புக்குள் இருப்பவர்கள் சிலவேளை பொய் சொல்லலாம். ஆனால் வெளியில் வந்தவர்கள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது!

மக்களின் வேதனைகளில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள். அங்கு பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்ப்பட்டவர்கள் தான். அதை இங்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது. முடிந்தால் அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுங்கள் அல்லது அரசியல் பேசுவதை விட்டு சற்று ஒதுங்கியிருங்கள்.

அந்த மக்கள் முழுவதுமாக அந்த முகாம்களை விட்டு வெளியேறி சுமுகமான ஒரு நிலை வரும் நாம் புலம்பெயர் மண்ணில் அரசியல் கதைக்காது இருப்பதே சாலச்சிறந்தது.

இன்று காலை ஒரு பெரியவருடன் கதைத்தபோது அவர் தான் முகாமை விட்டு வந்து என்ன செய்வது என்று கேட்கிறார்? வீடு வாசல் எல்லாம் தரை மட்டம். இங்கை ஒரு நேர சாப்பாடும் ஒதுங்க நிழலும் கிடைக்கிறது. நாங்களா தமிழீழம் கேட்டோம்? எங்களுக்கு ஏன் இந்த தலைவிதி என்று புலம்புகிறார். எனது நண்பனின் தந்தையாரின் சகோதரான அந்த பெரியவர் வன்னியில் காலாகாலமாக விவசாயம் செய்த ஒருவர். இன்று ஒரு நேரச் சோற்றுக்கு கையேந்தும் நிலை. இது யாரின் தவறு?

இங்கு வந்து கருத்தெழுதும் அனைத்து அன்பரர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்!

இன்றைய தேவை அந்த மக்களின் மீழ் குடியேற்றம். நிம்மதியான வாழ்வு! சுபீட்சமான எதிர்காலம்.

இதற்கு இன்றைய சூழ்நிலையில் என்ன செய்ய முடியும் என சிந்திப்போம்.

இந்த படத்ததை இணைத்த அன்பருக்கு நன்றிகள். இந்த அஞ்சலி ஆயிரத்தில் ஒன்று! இதுபோல் ஆயிரம் ஆயிரம் வெளிவரும்! எம் கண்களில் அதற்கு நீர் இருக்குமா என்பதுதான் தெரியவில்லை!

நிச்சயமா மீள் குடியேற்றம் அவசியம்.. நிம்மதியான வாழ்வு அவசியம்.. சுபீட்சமான எதிர்காலம் அவசியம்.. இதற்கெல்லாம்.. முதல் அவசியம் சிங்களப் படைகளை சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு தாய் மண்ணில் இருந்து அகற்றுவதுதான். ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக இல்லாமல் செய்வதுதான்.

எமது மண்ணில் எமக்கான அரசியல் உரிமை தான் இவற்றை எமக்கு நிரந்தரமாகப் பெற்றுத்தரும். அதை சிங்களம் தானாகத் தரப்போவதில்லை. ஆயுத வழி தோல்வி என்றால் இன்னும் பல வழிகள் இருக்கின்றன. அவற்றைக் கையாளுங்கள். அதைவிடுத்து துரோகிகளுக்கு வாழ்வளிப்பதை நிறுத்துங்கள். போதும்.. தமிழர்கள் துரோகிகளால் அழிந்தது..! எனி துரோகிகள் என்ற வார்த்தையே தமிழர்களிடம் இருக்கக் கூடாது என்றால்.. அதற்கு எமக்கு விடிவு வேண்டும்..! துரோகிகளை சொந்த மண்ணை விட்டு ஓரங்கட்டியாக வேண்டும். அப்போதுதான் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்..! :lol:

ஏலவே நாங்களும் பல அகதி முகாம்களை.. இராணுவ முகாம்களை தாண்டி மரணத்தின் எல்லை வரை போய்த்தான் வந்திருக்கிறோம். ஆனால் போராட்டத்தை எமது சுயநலனைக் கருத்தில் கொண்டு தரக்குறைவாக விமர்சனம் செய்ததில்லை. ஏனெனில் அந்தப் போராட்டமே வாழ்வென்று வீழ்ந்த 25,000 மாவீரர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு எவர் அஞ்சலி செய்வது.. அவர்களின் பெற்றோருக்கு எவர் ஆறுதல் சொல்வது..???! நீங்கள் எல்லாம் அசைலம் அடிக்க அவர்கள் உயிர் கொடுத்தார்களே.. எங்கே உங்கள் அசைலத்தை தூக்கிகெறிந்துவிட்டு களத்தில் நின்று அவர்களுக்கு நிம்மதியான.. சுபீட்சமான எதிர்காலம் கிடைக்கவும்.. மீள் குடியேற்றம் செய்யவும் பாடுபடலாமே. இங்கு இருந்து குத்தி முறிஞ்சு கருணாவுக்கும் சங்கரிக்கும் டக்கிளசுக்கும் வாரிசாகுங்கள் என்று கீழ்தரப் பிரச்சாரம் செய்வதிலும்.. அது மேல்..! :o :o

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

தயா! நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்கள்!! சிங்கள மக்கள் தம் பிள்ளைக்காக அழவில்லையா??? ...."காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சே" .... ஏறக்குரைய 10 வருடங்களுக்கு முன்பே பிரபல சிங்கள நடிகர்கள் நடித்த ஓர் சிங்களத்திரைப்படம் வெளியாகி எம்மவர் ஊடகங்களீலும் வானவேடிக்கைகள் நடாத்துவதற்கு உதவியது!!!

என் முன்னால் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி கூறுவார் ... "முட்டை இட்ட கோழிக்கெ சூத்தெரித்தல் தெரியும்" ... என்று .......

உங்கள் ஆவேசாங்கள் ... வேலியே பயிரை மேய்ந்து விட்டு .... கொஞ்சப்பயிரைத்தானே மேய்ந்தது என்று சொல்லுமளவிற்கு உள்ளது!!!

எனது நண்பரின் சகோதரியின் மகன், வவுனியா முகாமிலிருந்து பல லட்சங்களை ஈபிடிபி/புளொட்/சிங்கள இராணுவத்துக்கு இறைத்து .... இன்று கடல் கடந்த நாட்டிற்கு ..... கதைத்தால் ... தம்மை பிடித்தவர்கள்/அரசியல் தலைவர்களே இன்று சிங்கள சித்திரவதை முகாங்களில் தலையை மறைக்காமலேயே தலையாட்டிகளாக, கொழும்பு பாஸ்போட் அலுவலகத்தில் இன்னும் சில தலைவர்கள், பாஸ்போட் எடுக்கப்போவோரை மணக்க!!! ...................

ஆரம்ப காலம் முதல் பலரை நாமே இரையாக்கினோம்!! தட்டிக் கேட்கவில்லை!! அதை விட நடைபெற்ற எல்லாவற்றையும் ... "தமிழ் தேசியத்தின் பெயரால்" ..... மறைத்தும், மறந்தும், நடப்பவையெல்லாம் சரியென்றுமே வாதிட்டு வந்தோம்!! இன்று ............??????????????? ............ "வெற்றிடமே" ....... மீதமாக உள்ளது!!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான நிலையில் புலிகளிடமிருந்து விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கையில்... அது அந்த மக்களுக்கு பேரதிர்ச்சியாகவே இருக்கும். அந்தக் கோபம் வெளிப்படவே செய்யும். தனது 16 வயது பிள்ளையை கட்டாயப்பயிற்சிக்கு பிடித்துச் சென்று அவன் சாவடைந்து விட்டால்.. தந்தையால் சிங்கப்பூரில் இதெல்லாம் சகஜம்தானே என யாழில் கருத்து எழுதமுடியாது.

புலிகள் சுட்டிருந்தால் தவறு என்பது ஒருபுறமிருக்கட்டும்..! நமது உள்வீட்டுச் சண்டையைப் புறம்தள்ளிவிட்டு நமது எதிரியைச் சந்திக்கும் பக்குவம் முதலில் இருக்க வேண்டும்..! உள்வீட்டுச் சண்டையை முதலில் தீர்ப்போம் என்று நின்றிருந்தால் எல்லோரும் உதிர்ந்து சிதைந்து போக வேண்டியது வரும். நமது அதிர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு இது தருணமல்ல..! புலிகள் செய்தார்கள் என்று கேள்விப்படும்போது மக்களுக்கு ஏற்படும் அதிர்வலைகள் நீங்கள் காணாததல்ல.

நேற்று இரண்டாம் உலக யுத்தத்தின் ஒரு சிறு பாகத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. ஹிட்லரின் யூத இன அழிப்பு முயற்சியிலிருந்து தப்பி கிட்டத்தட்ட 70,000 அகதிகள் ஜேர்மனி, போலந்து ஒஸ்திரியா முதலான நாடுகளிலிருந்து இங்கிலாந்தில் தஞ்சம் அடைகிறார்கள்..! சில நாட்களில் அவர்களில் பல இளைஞர்கள் நேச நாட்டுப் படைகளில் இணைந்து ஜேர்மனியுடன் போரிடும் முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் இவர்கள் ஹிட்லரின் உளவாளிகளாக இருப்பார்களோ என்கிற அச்சத்தில் அவர்களைப் பிடித்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள் பிரித்தானிய உளவுப்படையினர். ஆனால் தமது பொது எதிரி யார் என்பதில் குழப்பமற்று இருந்த யூதர்கள் சித்திரவதையிலும், இறப்புகளிலும் கலங்கிவிடவில்லை. காலப்போக்கில் பிரித்தானியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் ஒரு ராணுவ அணியாக உருவாக்கப்பட்டு எதிரியுடன் போரிடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்..! வெற்றி பெற்ற இனங்களின் வரிசையில் இடம்பிடிக்கிறார்கள்..!

இன்று நாம் செய்துகொண்டிருப்பது எமது பொது எதிரி யார் என்பதை மறந்துவிட்டு 30 வருடங்களாக எம்மைக் காத்தவர்களை அவர்கள் ஒரு மாதத்தில் செய்ததாகக் கூறப்படும் விடயங்களை வைத்து தூக்கி எறிகிறோம்..! அதுவும் காதுவழி கேள்விப்பட்ட செய்திகளை வைத்து..

இவர்களாவது பொது மக்கள்..! யாழிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியபோது இயக்கத்திலிருந்த தாயகத்துக்காக தங்களை அர்ப்பணித்துவிட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு என்ன நடந்தது? அப்போதெல்லாம் ஏன் கூக்குரல் எழுப்பவில்லை? மேலே பிரித்தானிய உளவுப்படை செய்தது சரியாயின் நாம் செய்ததும் சரிதான் என்கிற ஒரு புரிதல் இருந்ததனால்தான். ஆபத்து காலத்தில் எந்த வித விபரீதமான முடிவுகளையும் எடுக்க அரசுகளே தயங்குவதில்லை. போராட்ட இயக்கம் எம்மாத்திரம்? புலிகள் மக்களை குறுகிய கால நோக்கில் காக்கும் கடமையை மட்டும் கொண்டிருக்கவில்லை. தூரநோக்கில் தமிழீழம் எனும் இலக்கை அடைவதே அவர்களது குறிக்கோள்..! தூரநோக்கு இலக்கிற்காய் குறுந்தூர நோக்கங்களைக் சில சமயங்களில் கைவிடுதல் அசாதாரணமான ஒரு விடயமல்ல..!

இன்று காலை ஒரு பெரியவருடன் கதைத்தபோது அவர் தான் முகாமை விட்டு வந்து என்ன செய்வது என்று கேட்கிறார்? வீடு வாசல் எல்லாம் தரை மட்டம். இங்கை ஒரு நேர சாப்பாடும் ஒதுங்க நிழலும் கிடைக்கிறது. நாங்களா தமிழீழம் கேட்டோம்? எங்களுக்கு ஏன் இந்த தலைவிதி என்று புலம்புகிறார். எனது நண்பனின் தந்தையாரின் சகோதரான அந்த பெரியவர் வன்னியில் காலாகாலமாக விவசாயம் செய்த ஒருவர். இன்று ஒரு நேரச் சோற்றுக்கு கையேந்தும் நிலை. இது யாரின் தவறு?

எனக்கு அதிகம் வவுனியாவில் உள்ளே இருக்கும் உறவுகள் அதிகம்... அங்கை முன்பும் வழமையாக முட்டையில் மயிர் புடுங்கி கொண்டு இருந்தவர்கள் தவிர யாரும் புலிகளை விமர்சிக்கிறதாக நான் கேள்விபடவே இல்லை...

எனது நண்பரின் தந்தை வவுனியா முகமில் இருந்து தப்பி வந்து இங்கிலாந்து வரை வந்து இருக்கிறார் அவரிடம் ஒரு வரியில் உங்களுக்கான பதில் இருந்தது... அவங்கள் கேட்டவங்கள் ஆனால் சனம் தான் ஒத்துளைக்க இல்லை... மற்றவை போகட்டும் நாங்கள் தப்பினால் போதும் எண்டு எல்லாரும் பின்னுக்கு நிண்டு போட்டுதுகள்...

இதைவிட வேறை என்னத்தை எதிர்பார்க்க முடியும்...

இண்டைக்கும் நீங்கள் வரைக்கும் யார் பெத்த பிள்ளைகளாவது (புலிகள்) எதையாவது முன்னுக்கு நிண்டு செய்து தரட்டும் , நாங்கள் எங்கட குடும்பத்தை பார்ப்பம் எண்டுதானே இருந்தீர்கள்....???

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை முன்பும் வழமையாக முட்டையில் மயிர் புடுங்கி கொண்டு இருந்தவர்கள்

உறைக்கும் உண்மைகள்

எனது நண்பரின் தந்தை வவுனியா முகமில் இருந்து தப்பி வந்து இங்கிலாந்து வரை வந்து இருக்கிறார் அவரிடம் ஒரு வரியில் உங்களுக்கான பதில் இருந்தது... அவங்கள் கேட்டவங்கள் ஆனால் சனம் தான் ஒத்துளைக்க இல்லை... மற்றவை போகட்டும் நாங்கள் தப்பினால் போதும் எண்டு எல்லாரும் பின்னுக்கு நிண்டு போட்டுதுகள்...

சனம் ஓத்துளைக்காமை என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். பிறகு யாருக்காக போராடினோம்?

மக்களை அரசியல் மயப்படுத்தியிருந்தால் மக்கள் ஒத்துளைத்திந்திருப்பார்கள் வியட்நாம் போல்!

இப்ப மக்கள் தப்பி விட்டார்கள் அகப்பட்டு தவிப்பது மக்களுக்காக போராடியவர்கள்! சுமார் 10000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாம் முழுவதும் முன்னை நாள் போராளிகள். இன்று அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க நீங்கள் சொல்லும் அரசுதான் அவர்களை பராமரிக்கிறது.

ஒட்டுக்குழுவோ அல்லது அரச ஏஜன்டுகளே இப்போது காட்டிக்கொடுப்பது கிடையாது! புலிகளின் புலனாய்வு துறையும் அரசியல் துறையின் முக்கியமானவர்களும் தான் பாய்ந்து விழுந்து காட்டிக்கொடுக்கிறார்கள்!

கற்பனை உலகில் இருந்து வெளியில் வந்து யதார்த்தை பேசுங்கள்! அல்லது மாரி தவளை போல் கத்தியே சாவுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று நாம் செய்துகொண்டிருப்பது எமது பொது எதிரி யார் என்பதை மறந்துவிட்டு 30 வருடங்களாக எம்மைக் காத்தவர்களை அவர்கள் ஒரு மாதத்தில் செய்ததாகக் கூறப்படும் விடயங்களை வைத்து தூக்கி எறிகிறோம்..! அதுவும் காதுவழி கேள்விப்பட்ட செய்திகளை வைத்து..//

நான் செய்திகளை காது வழி கேட்டுவிட்டு பேசுகிற எம்மைப்பற்றியோ உங்களைப்பற்றியோ பேசவில்லை.

அவற்றை அனுபவித்தவர்களின் கோபங்களையே உள்வாங்குகிறேன். அதற்கு பதிலேதும் இன்றி அமைதியாயிருக்கிறேன். பதிலுக்கு உன்னிடம் என்ன ஆதாரம் இருக்கென கேட்டு அவர்களை மேலும் நோகடிக்க விரும்பவில்லை.

ஆதாரம் இல்லாத எந்த உண்மையும் உண்மையே கிடையாதா..? உங்கள் அம்மம்மாவோ மாமாவோ சித்தியோ மச்சாளோ உங்களுக்கு பொய் சொல்வார்களா.. ?

எனக்கு புலம்பெயர்ந்தவர்களின் மனநிலையை நினைத்தால் அச்சமாயிருக்கிறது. எங்கே முகாம்களில் இருப்பவர்கள் வெளியே வந்து தமது மனதுக்கு ஒவ்வாத நடந்தவைகளைக் கூறிவிடுவார்களோ என்ற கிலேசத்தில் அவர்கள் முகாம்களிலேயே கிடக்கட்டும் என்று விரும்ப கூடியவர்களாக இருக்கலாம். அதற்கும் சிங்கபூர் முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களில் உதாரணங்கள் கிடைக்கலாம்.

இதற்கிடையில் புலிகளை காயப்போடக் காத்திருந்தவர்களுக்கு அவர்கள் காட்டில் மழைதான். புளுகம் தாங்காமல் எடுத்து விளாசுகிறார்கள்.

என்னைப்பொறுத்து செத்தபாம்பை அடித்தென்ன செய்ய..? எல்லோராலும் கைவிடப்பட்ட மக்கள் பேசுகிறபோது இப்படியாப்போச்சே என அழுகிறார்கள். பதிலுக்கு இரண்டாம் உலக யுத்தத்திலும் இப்படித்தான் நடந்ததென்று நான் சொல்லுகிற அளவுக்கு பேப்பயல் கிடையாது. நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அல்லது அமைதியாயிருக்கிறேன்.

Edited by காவடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.