Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!

இந்திய – சிறிலங்கா கூட்டுச் சதிக்கு முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் இழந்துவிட்டு, யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வதை முகாம்களுக்குள் வாழ்விழந்து போயுள்ள ஈழத் தமிழர்கள் மூன்று இலட்சம் பேர் சார்பாகவும் இந்த மடலை உங்களுக்கு எழுத நேர்ந்ததற்காக வேதனைப் படுகின்றேன்.

உலகம் முழுவதும் திரண்டு வந்தாலும் நீங்கள் உடன் இருக்கிறீர்கள் என்ற எங்களது கர்வம் இப்போது எங்களிடம் இல்லை. இப்போதெல்லாம் அந்த எண்ணத்தை எங்கள் மனதிலிருந்து முற்றாகத் துடைத்தெறிந்துவிட்டோம். நாங்கள் எங்களுக்கான பாதையை வகுப்பதில் உங்கள் குறித்த எங்கள் அதீத நம்பிக்கையே எங்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டது.

இந்தியாவில் தமிழகம் இருக்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு, தமிழகம் எங்களோடு இருக்கிறது என்று நாங்கள் உங்களை அளவுக்கு அதிகமாகவே நம்பிவிட்டோம். எங்கள் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழ்ந்தபின்னர் நாங்கள் உங்கள் மீதான உச்ச நம்பிக்கையுடன்தான் முள்ளிவாய்க்கால் வரை அத்தனை அவலங்களையும் தாங்கியவாறு ஓடிக்கொண்டிருந்தோம். உங்கள் திசையை நோக்கியே எங்கள் குரல்களை ஓங்கி எழுப்பினோம்.

முத்துக்குமாரன் மூட்டிய தீயும், பின்னவர்களின் தியாகங்களும் எங்கள் மனங்களை உருக்கியது. எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியது தமிழகம் எங்களுக்காகப் பெங்கி எழுமென்று உண்மையாகவே நாங்கள் நம்பிவிட்டோம். எங்களது தியாக வேள்விக்கு அடித்தளம் இட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழர்கள் ஆளும் உரிமை உள்ளவர்கள் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களது போர்ப் பறை இந்திய – சீன யுத்தத்துடன் முடிவுக்கு வந்தாலும் எங்கள் செவிகளில் இப்போதும் அது ஒலித்துக் கொண்டே உள்ளது.

ஆம்! ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று எங்கள் உணர்ச்சிக் கவிஞரும் அண்ணாவை நினைவு கூர்ந்தார். எங்கள் போதாத காலம் அண்ணா அவர்களது ஆயுள் அத்தனை குறைவாகப் போய்விட்டது. உங்களுக்குத் தெரியுமா… எங்கள் தலைவரின் ஆத்மார்த்த குரு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்பது? ஆம்! வெள்ளையர்களுக்கு காந்தியின் அகிம்சை புரிந்தது. இந்தியாவுக்கு அது புரியவில்லையே! இந்திய அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கைத்தீவை ஆக்கிரமிக்க வந்த இந்தியப் படை, இந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க கனவுகளை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியாவின் எதிரிகளுடன் உறவாடிய சிறிலங்காவைத் தாஜா செய்ய எங்களைப் பலிக்கடா ஆக்கியபோது எங்களது திலீபனும் காந்தியைத்தான் நம்பினார்.

அவரது காந்தியப் பாதை இந்தியாவுக்குப் புரியாமலே போய்விட்டது. காந்தியின் அகிம்சையை நம்பிய திலீபன் அந்த காந்திய தேசத்தால் படுகொலை செய்யப்பட்டான். காந்தி தோற்றுப்போய் காணாமல் போனதனால், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது பாதை மட்டுமே எங்களுக்கு மீதியாக இருந்தது. இப்போதெல்லாம் எங்களுக்குத் தத்துவம் போதிப்பவர்கள், அந்தக் காந்தியவாதி திலீபன் தோற்றபோது எங்கே போனார்கள்? விடுதலைப் புலிகள் விரும்பி ஆயுதம் ஏந்தவில்லை. காலம் அவர்கள் கைகளில் ஆயுதங்களைக் கையளித்தது. சிங்கள இனவாத சிந்தனைகளால் விரக்தியடைந்திருந்த எங்களது இளைஞர்கள் கைகளில் இந்தியா ஆயுதங்களைக் கைகளில்’ வழங்கியது.

இந்தியாவின் எதிரிகள் பக்கம் நின்ற சிறிலங்காவை நிர்ப்பந்தம் செய்வதற்காக சிங்கள – தமிழ் முரண்பாட்டை நன்றாகவே பயன்படுத்தியது உங்கள் இந்திய தேசம். எங்கள் கைகளில் ஆயுதங்களை வழங்கி சிங்களத்திற்கு எதிராக எங்களைப் போராட வைத்தது. இளைய வயதான எங்களுக்கு அறிவை விடவும் உணர்வே மேலோங்கி நின்றதனால் எங்களுக்கு இந்திய தேசத்தின் சதி எதுவுமே புரியவில்லை. அப்போதும் எமது தாய்த் தமிழகமே எங்களது அறிவுக் கண்களை மறைத்து நின்றது.

தமிழகத்தை எங்கள் தாயாக நினைத்தோம். நம்பினோம். பிள்ளையை அழ விடுவாளோ தாய்? எங்களை அழிய விடுமோ தமிழகம்? நாங்கள் நம்பியிருந்தோம் எங்களைக் காப்பாற்ற தமிழகம் புயலாக மாறும் என்று. எங்களைக் காப்பாற்ற தமிழகம் எதற்கும் தயாராகுமென்று. ஆனாலும் முத்துக்குமாரனாலும் தமிழகத்தை முழுமையாக எழுச்சி கொள்ள வைக்க முடியவில்லை. எங்களுக்காகப் போராடவும் நீங்கள் சார்ந்திருந்த கட்சியிடம் அனுமதி கோரினீர்கள். எங்களுக்காக அழுவதற்கும் உங்கள் சாதித் தலைமையிடம் உத்தரவு கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.

நாங்கள் அழியும்போது கண்ணீர் விட்ட நீங்கள் எங்களுக்காக உங்கள் அணிகளை விட்டு விலகிப் போராடத் தயாராகவில்லை. உங்கள் அணிகளின் தலைவர்கள் ஏற்கனவே சிங்களத்தால் விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் உங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. நாங்கள் அனாதரவாக்கப்பட்டு, கொலைக்களத்தில் நின்று கொண்டிருந்த வேளையிலும் உங்கள் தலைவர்கள் மனமிரங்க மறுத்துவிட்டார்கள். எங்கள் தேசம் எரிந்துகொண்டிருந்த வேளையில் உங்கள் மன்னர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் அழு குரல்களாலும், அபயக் குரல்களாலும் உங்கள் மனங்கள் புண்பட்டுப் போகாமல் உங்கள் தலைவர்கள் தங்களது தொலைக்காட்சி மூலமாக ‘மானாட, மயிலாட’ என்று மயக்கமுறும் காட்சிகளை வாரி வழங்கிப் பாரியையும் தோற்கடித்தார்கள். எங்களது இத்தனை இழப்புக்களுக்கும் யார் காரணம்? எங்களது இத்தனை அழிவுகளுக்கும் எது காரணம்? நாங்கள் உங்களை விட்டு விலக முடியாத கோழைத்தனத்தினால் எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். உங்கள் மீதான எங்கள் பிரியத்தினால் இந்திய தேசத்தை எடுத்தெறிய எங்களால் முடியவில்லை.

நீங்கள் எங்களது தொப்பிள்கொடி உறவு என்பதால் நாங்கள் இந்திய தேசத்தால் விலை கூறி விற்கப்பட்டோம். நீங்கள் இந்தியர்களாக இருக்கும்வரை எங்கள் மண்ணில் இரத்த ஆறு ஓடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் தமிழர்களாக உங்களை உணரும்வரை எங்களது அழிவுகளை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் வாழவேண்டும் என்ற ஆசை கூட உங்களது தேசபக்தியினால் சிதைக்கப்பட்டு விட்டது. எங்களை அழ்ப்பதற்காக சிங்கள தேசத்திற்கு அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய காங்கிரஸ் கட்சியை எத்தனை இடங்களில் தோற்கடித்தீர்கள்?

உங்கள் தேசத்தின் நலம் எங்கள் தேசியத்தைக் குலைக்குமானால் நாங்கள் உங்கள் நலனுக்காக எங்களை அழித்துக் கொள்ள இனியும் தயாராகப் போவதில்லை. நீங்கள் உங்கள் சுய சிந்தனையைத் தொலைத்து வெகு காலமாகிவிட்டது என்பதை நாங்களும் அறிவோம். இல்லையேல், அவலக் குரல்கள் எழுப்பியவாறு அபயங்கரம் நீட்டிவாறு உங்களிடம் வந்து சேர்ந்த ஈழ தேசத்தின் ஏதிலிகளை இப்படி அவல வாழ்க்கை வாழ அனுமதித்திருப்பீர்களா? சிங்கள தேசம் போலவே உங்களது அரசும் ஈழத் தமிழர்களை விசாரணைகள் எதுவும் இல்லாமல் ஈனத்தனமாக அடைத்து வைக்க அனுமதித்திருப்பீர்களா?

பாவம், ஈழத் தமிழர்களுக்கு இலங்கைத் தீவும் இந்தியத் தமிழகமும் ஒரே நீதியைத்தான் வழங்குகின்றது. வாழ அனுமதி மறுக்கபட்டுள்ள நாங்கள் இனியும் உங்கள் திசை நோக்கிக் கதறப் போவதில்லை. ஏனென்றால், நீங்கள் இந்தியர்களாக இருந்தே எங்களைத் தமிழர்களாக உணர்கின்றீர்கள். உங்கள் தேச பக்தியும் எங்கள் எதிர்காலமும் எப்போதும் ஒருமித்துப் பயணிக்கப் போவதில்லை. ஆதலால், நாங்கள் முடிவு செய்தே ஆகவேண்டும் உங்களுக்காக நாங்களா? அல்லது, எங்களுக்காக நாங்களா என்பதை.

ஆம்! உங்களுக்காக நாங்கள் இந்திய தேசத்தை நேசித்த காரணத்தால் எங்களுக்கெதிராக சீனாவும், பாக்கிஸ்தானும் சிங்கள தேசத்துடன் கூட்டுச் சேர்ந்தது. இந்திய தேசத்தின் வல்லாதிக்க கனவுக்கு நாங்கள் பலி கொள்ளப்பட்டோம். இந்திய தேசம் எங்களைப் பலிக்கடா ஆக்கிய கணத்தில் இந்தியா – பாக்கிஸ்தான் – சீனா என அத்தனை பகை நாடுகளும் ஒரே திசையில் அணிவகுக்கும் பெரும் பேற்றினைப் பெற்றுக் கொண்டன. பேரறிஞர் அண்ணா அவர்களது தமிழ்த் தேசியக் கனவு கலைஞர் கருணாநிதி அவர்களுக்குப் புரியவில்லையானாலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

திரையுலகிலும் நாயகனாகவே தன்னை நிலை நிறுத்திய அந்த மாமனிதர் நிகழ் வாழ்விலும் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்றே பெரு விருப்புற்றிருந்தார். எங்கள் துர்ப்பாக்கியம் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்ய அஞ்சாத அந்த வீரத் திருமகனும் எம்மை விட்டு வெகு சீக்கிரமாக மறைந்துவிட்டார். பாவம், உங்களை எல்லாம் ஆளும் பொறுப்பை நீங்கள் கோழைத் தமிழனான கருணாநிதியிடமல்லவா கொடுத்துவிட்டிர்கள். தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே நேசிக்கத் தெரிந்த கலைஞர் கருணாநிதியிடம் எங்கள் அவலங்கள் எடுபடுமா?

சங்கத் தமிழையும் விற்றே பழக்கப்பட்டவர் ஈழத் தமிழர்களுக்கும் விலை நிர்ணயம் செய்யமாட்டார் என்று எப்படி நம்பினீர்கள்? நாங்கள் விலைகூறி விற்கப்பட்டோம். இந்திய அரசாலும், தமிழக அரசாலும் நாங்கள் விலை கூறி விற்கப்பட்டோம் என்பதை நீங்கள் அறிவீகளா? நாங்கள் அழிந்து கொண்டிருந்த போதும் கலைஞர் அவர்கள் இரக்கம் காட்டவில்லையே. நாங்கள் இறந்து கொண்டிருந்த வேளையிலும் கலைஞர் அவர்கள் கடிதம்தானே எழுதிக்கொண்டிருந்தார்.

அதை மீறி, அரைநாள் உண்ணாவிரதம் தானே இருந்து சாதனை செய்து எங்கள் வேதனையிலும் அரசியல் ஆதாயம் தேடினார். ஈழத் தமிழர்களின் ஒற்றுமையின்மை பற்றி ஒப்பாரி வைக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிடர் முன்னேற்றக் கழகத்தை எத்தனை ஒற்றுமையுடன் கட்டிக் காத்தார்? அமரர் எம்.ஜி.ஆர். அவர்களை எப்படிப் பிரிந்து போக அனுமதித்தார்? தி.மு.க.வின் போர் வாளாக அறியப்பட்ட வை.கோ. அவர்களை எப்படி வெளியேற்றினார்?

பலதாரப் பிதாமகர் கருணாநிதி அவர்களுக்கும் அவரது அரசியல் எதிரியான செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் இடையே நிகழும் வார்த்தைப் போர் உலகப்பிரசித்தம் கொண்டது என்பதைக் கலைஞர் அறிவாரா? போதும் தமிழகமே! உனக்காக நாங்கள் இந்திய தேசத்தை நம்பியது போதும்! கிழக்கிலும், மேற்கிலும் எதிரிகள் பலம் பெற்ற போதும் தெற்கு வாசலில் உங்களுக்காக நாங்கள் தோத்தது போதும். உங்கள் எதிரி சீனா பாக்கிஸ்தானிலும் வங்காள தேசத்திலும், பூட்டனிலும், நேபாளத்திலும் நிலை கொண்ட போதும் இலங்கைத் தீவில் இன்றுவih எதிர்த் துருவமாக நின்றது நாங்கள் மட்டுமே.

சிங்கள தேசம் சீனாவுக்கு செங்கம்பளம் விரித்த போதும், எங்கள் இந்திய விசுவாசம் அதை எதிர்த்தே நின்றது. இந்தியாவுக்குப் பங்கம் வரக்கூடாது என்பதால்தான் எங்கள் தலைவன் சீனாவை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது, காலம் கடந்த ஞானம் பெற்றுவிட்டோம். எங்கள் தேசியத் தலைவர் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்ற சிங்கள தேசத்துடன் உடன்பாடு செய்ததைப் போலவே, எங்கள் தேசியத்தையும் எங்கள் தேசத்து மக்களையும் காப்பாற்ற நாங்கள் சீனாவுடனும் சமரசம் செய்ய முடிவு செய்துவிட்டோம்.

உங்களுக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கள் எங்களுக்கு அழிவை மட்டுமே தந்தது. இப்போது எங்களுக்காக நாங்கள் எடுக்கும் முடிவினால், உங்கள் தேசமும் தேசியமும் சிதைவுறுமானால், அதற்கும் நீங்கள் மட்டுமே காரணம். ஏனென்றால், ஈழத் தமிழர்கள் இதற்கு மேலும் இந்தியத் துரோகங்களைத் தாங்கிச் சகிக்கமாட்டார்கள். தொப்பிள்கொடி உறவு என்ற பேதமையை வைத்து இந்திய அரசால் இனியும் விபச்சாரப் பிழைப்பு நடாத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

- நன்றி்: ஈழநாடு

http://www.meenagam.org/?p=12650

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கடந்த அறிவு

யாரையும் இவன் எதிர்காலத்தில் கொலை செய்வான் என கூறி சிறையில் அடைக்க முடியாதல்லவா? கொலை செய்த பின்புதான் நீதுமன்றுக்கு கூட்டிசெல்லாம். காலங்களால்தான் பலரின் நிறங்களை வெளிகொணரமுடியும். ஒரு வேளை ஓயாதஅலைகள்-3 தாக்குதல் நேரத்தில் ஒரு செல் வீழ்ந்து கருணா இறந்திருப்பின் அந்த அயோக்கியன் ஒரு மாவீரனாகவே இருந்திருக்கலாம்............ ஆனால் காலம்தான் காலவதியாகமால் பர்த்துகொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!

....தமிழகத்தை எங்கள் தாயாக நினைத்தோம். நம்பினோம். பிள்ளையை அழ விடுவாளோ தாய்? எங்களை அழிய விடுமோ தமிழகம்? நாங்கள் நம்பியிருந்தோம் எங்களைக் காப்பாற்ற தமிழகம் புயலாக மாறும் என்று. எங்களைக் காப்பாற்ற தமிழகம் எதற்கும் தயாராகுமென்று. ஆனாலும் முத்துக்குமாரனாலும் தமிழகத்தை முழுமையாக எழுச்சி கொள்ள வைக்க முடியவில்லை. எங்களுக்காகப் போராடவும் நீங்கள் சார்ந்திருந்த கட்சியிடம் அனுமதி கோரினீர்கள். எங்களுக்காக அழுவதற்கும் உங்கள் சாதித் தலைமையிடம் உத்தரவு கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.

நாங்கள் அழியும்போது கண்ணீர் விட்ட நீங்கள் எங்களுக்காக உங்கள் அணிகளை விட்டு விலகிப் போராடத் தயாராகவில்லை. உங்கள் அணிகளின் தலைவர்கள் ஏற்கனவே சிங்களத்தால் விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் உங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. நாங்கள் அனாதரவாக்கப்பட்டு, கொலைக்களத்தில் நின்று கொண்டிருந்த வேளையிலும் உங்கள் தலைவர்கள் மனமிரங்க மறுத்துவிட்டார்கள். எங்கள் தேசம் எரிந்துகொண்டிருந்த வேளையில் உங்கள் மன்னர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் அழு குரல்களாலும், அபயக் குரல்களாலும் உங்கள் மனங்கள் புண்பட்டுப் போகாமல் உங்கள் தலைவர்கள் தங்களது தொலைக்காட்சி மூலமாக ‘மானாட, மயிலாட’ என்று மயக்கமுறும் காட்சிகளை வாரி வழங்கிப் பாரியையும் தோற்கடித்தார்கள். எங்களது இத்தனை இழப்புக்களுக்கும் யார் காரணம்? எங்களது இத்தனை அழிவுகளுக்கும் எது காரணம்? நாங்கள் உங்களை விட்டு விலக முடியாத கோழைத்தனத்தினால் எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். உங்கள் மீதான எங்கள் பிரியத்தினால் இந்திய தேசத்தை எடுத்தெறிய எங்களால் முடியவில்லை.

நீங்கள் எங்களது தொப்பிள்கொடி உறவு என்பதால் நாங்கள் இந்திய தேசத்தால் விலை கூறி விற்கப்பட்டோம். நீங்கள் இந்தியர்களாக இருக்கும்வரை எங்கள் மண்ணில் இரத்த ஆறு ஓடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் தமிழர்களாக உங்களை உணரும்வரை எங்களது அழிவுகளை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் வாழவேண்டும் என்ற ஆசை கூட உங்களது தேசபக்தியினால் சிதைக்கப்பட்டு விட்டது. எங்களை அழிப்பதற்காக சிங்கள தேசத்திற்கு அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய காங்கிரஸ் கட்சியை எத்தனை இடங்களில் தோற்கடித்தீர்கள்?

உங்கள் தேசத்தின் நலம் எங்கள் தேசியத்தைக் குலைக்குமானால் நாங்கள் உங்கள் நலனுக்காக எங்களை அழித்துக் கொள்ள இனியும் தயாராகப் போவதில்லை. நீங்கள் உங்கள் சுய சிந்தனையைத் தொலைத்து வெகு காலமாகிவிட்டது என்பதை நாங்களும் அறிவோம். இல்லையேல், அவலக் குரல்கள் எழுப்பியவாறு அபயங்கரம் நீட்டிவாறு உங்களிடம் வந்து சேர்ந்த ஈழ தேசத்தின் ஏதிலிகளை இப்படி அவல வாழ்க்கை வாழ அனுமதித்திருப்பீர்களா? சிங்கள தேசம் போலவே உங்களது அரசும் ஈழத் தமிழர்களை விசாரணைகள் எதுவும் இல்லாமல் ஈனத்தனமாக அடைத்து வைக்க அனுமதித்திருப்பீர்களா?

உண்மைதான்...

ஆனால் எம்மிடம் பதில்தான் இல்லை. தலைகுனிவதைத் தவிர.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தமிழ்நாடு" என்றொன்றிருந்தால் தமிழீழம் நிச்சயம்......

தொடக்கம்.

இலங்கைக் கடற்படையால் துன்புறும் எமது தோழர்களுக்கு இந்திய மாவோயிஸ்ட்களின் உதவி நிச்சயம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை !!!!!என் மனதில் இருந்த ஆத்திரம் முழுவதும் இந்தக் கட்டுரையாளரால் வடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தமிழன் இந்தியனாக இருக்கும் வரை என் சகோதரனாக இருக்க முடியாது. என்னைப்பொறுத்தவரை அவனும் இந்தியனே !!!இந்தியனாக இருப்பதில் நீ பெருமைப்பட்டுக்கொள், ஆனால் இந்தியனின் சகோதரனாக எனக்குக் கனவிலும் ஆசையில்லை. வாழ்ந்தால் ஈழத்துத் தமிழன். இறந்தால் நாடற்ற நாடோடி !!!!!!

....... . வாழ்ந்தால் ஈழத்துத் தமிழன். இறந்தால் நாடற்ற நாடோடி !!!!!!

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............

.. நாங்கள் வந்து விட்டோம்! அங்குள்ளவர்கள் மனிதர்களல்ல வேள்விக்கு வளர்த்த கடாக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை !!!!!என் மனதில் இருந்த ஆத்திரம் முழுவதும் இந்தக் கட்டுரையாளரால் வடிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தமிழன் இந்தியனாக இருக்கும் வரை என் சகோதரனாக இருக்க முடியாது. என்னைப்பொறுத்தவரை அவனும் இந்தியனே !!!இந்தியனாக இருப்பதில் நீ பெருமைப்பட்டுக்கொள், ஆனால் இந்தியனின் சகோதரனாக எனக்குக் கனவிலும் ஆசையில்லை. வாழ்ந்தால் ஈழத்துத் தமிழன். இறந்தால் நாடற்ற நாடோடி !!!!!!

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............

.. நாங்கள் வந்து விட்டோம்! அங்குள்ளவர்கள் மனிதர்களல்ல வேள்விக்கு வளர்த்த கடாக்கள்!

தாயகத்தமிழரின் முடிவுகளில் தலையிடாதே என்று கர்ச்சிக்கும் நீங்கள்தான் ரகுநாதனின் சொந்த முடிவிலும் தலையிடுகிறீர்கள்..! என்ன நியாயம் நெல்லையன்? :)

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............

.. நாங்கள் வந்து விட்டோம்! அங்குள்ளவர்கள் மனிதர்களல்ல வேள்விக்கு வளர்த்த கடாக்கள்!

அங்குள்ள மக்களை அடிமையாக வைத்திருக்க அடக்குமுறையை சிங்களம் பாவிக்கிறது... அதே போல சிங்களவன் ஆசைப்படுவது புலம்பெயர்ந்தவர்களும் அடங்கிவாழ வேண்டும் எண்று...

அதுக்குதான் உங்களை போண்ற நஞ்சுகளை வைத்து விசத்தை நக்கலாக விதைக்கிறீர்கள்...

சிங்களவன் தொடர்ந்தும் தமிழர்களை வதைத்து உலக அரங்கில் கெட்ட பெயரை கொள்ள கூட பயன் பட கூடாது எனும் நல்ல உள்ளம் இருக்கே .. புல் அரிக்க வைப்பது...

தமிழன் பிரபாகரன் தோண்ற முன்னம் இருந்தே சிங்களவனால் வதை படிகிறான் என்பதை நீர் எல்லாம் கேள்விப்பட்டு இருக்க இல்லை போல கிடக்கு...

என்ன செய்ய இதுதான் தமிழன்...

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............

.. நாங்கள் வந்து விட்டோம்! அங்குள்ளவர்கள் மனிதர்களல்ல வேள்விக்கு வளர்த்த கடாக்கள்!

அவர்களைத்தான் நீங்கள் பொறுப்போடு பராமரிக்கின்றீர்களே??? அதுபோதும் எமக்கு...........

  • கருத்துக்கள உறவுகள்

:) நெல்லைய்யன்,

கருத்துப் பஞ்சத்தில் ஓடியொளித்த நீங்கள் இங்கே வந்துவிட்டீர்களா?? ஆனாலும் உங்களுக்கு தமிழர் மேல் ரொம்பத்தான் அக்கறை போங்கள். அந்த அக்கறை சிங்களவனின் இனவழிப்பைக் கூட மறைத்து விடுமளவிற்குப் போய்விட்டதென்றால் பாருங்களேன்.

மக்களின் துயரம் என்கிற போர்வைக்குள் அரச பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நீங்கள் விபச்சாரிகளைவிடக் கேவலாமனவர்கள். ஏனென்றால் அவர்கள் கூட விருப்பமில்லமலேயே அந்தத் தொழிலைச் செய்கிறார்கள். ஆனால் நீங்கள்....சி...சீ

அமோக வருமானம்....நடத்துங்கள்...நடத்த

இந்தியாவில் தமிழகம் இருக்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு, தமிழகம் எங்களோடு இருக்கிறது என்று நாங்கள் உங்களை அளவுக்கு அதிகமாகவே நம்பிவிட்டோம். எங்கள் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழ்ந்தபின்னர் நாங்கள் உங்கள் மீதான உச்ச நம்பிக்கையுடன்தான் முள்ளிவாய்க்கால் வரை அத்தனை அவலங்களையும் தாங்கியவாறு ஓடிக்கொண்டிருந்தோம். உங்கள் திசையை நோக்கியே எங்கள் குரல்களை ஓங்கி எழுப்பினோம்.

முத்துக்குமாரன் மூட்டிய தீயும், பின்னவர்களின் தியாகங்களும் எங்கள் மனங்களை உருக்கியது. எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியது தமிழகம் எங்களுக்காகப் பெங்கி எழுமென்று உண்மையாகவே நாங்கள் நம்பிவிட்டோம்.

http://www.meenagam.org/?p=12650

ஆயிரம் பேர் உதவா ஆலோசனை சொல்லுவாங்க. எ.கா: தமிழருவி மணியன் - தமிழக அரசியல்வாதிகளை நம்பாதீர்கள் என்பது, உண்மைதான். இதில் தமிழக மக்கள் எம்மாத்திரம் இது இவருக்குத் தெரியாதா? இனமான தமிழன் ஈனத் தமிழனாகிவிட்டான் தமிழகத்தில்...மனம் கூசுகிறது ஒரு திரைப்பட கலைஞன் 50 ஆண்டு விழா எடுத்து பேருந்தில் தன் சாதனைகளை பட்டியலிட்டு ஊர் ஊராக அனுப்புகிறான், அதற்கு இந்த ஈனர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் சுற்றுகின்றனர், வேறு ஊரில் பூசனிக்காய் உடைக்கின்றனர். இந்த தொழில் நுட்ப உலகில் பிச்சைக்காரன் முதல் அனைவரும் வைத்திருப்பது செல்லிடைப் பேசி - இவர்கள் உயர்ந்துள்ள ஒரே விடயம் இதுதான். அறிவு சார்ந்து இனம் சார்ந்து எதுவும் இல்லை...இது வெட்கி குனியவேண்டிய செயல் இந்த மாயைகளிலிருந்து முதலில் வெளிவர தமிழகத்தில் பெரியவர்கள் என நினைக்கும் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.

Edited by Sniper

தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!

இந்தியாவில் தமிழகம் இருக்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு, தமிழகம் எங்களோடு இருக்கிறது என்று நாங்கள் உங்களை அளவுக்கு அதிகமாகவே நம்பிவிட்டோம்.

முத்துக்குமாரன் மூட்டிய தீயும், பின்னவர்களின் தியாகங்களும் எங்கள் மனங்களை உருக்கியது. எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியது தமிழகம் எங்களுக்காகப் பெங்கி எழுமென்று உண்மையாகவே நாங்கள் நம்பிவிட்டோம்.

ஆம்! ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?’

. காந்தியின் அகிம்சையை நம்பிய திலீபன் அந்த காந்திய தேசத்தால் படுகொலை செய்யப்பட்டான். ,

இப்போதெல்லாம் எங்களுக்குத் தத்துவம் போதிப்பவர்கள், அந்தக் காந்தியவாதி திலீபன் தோற்றபோது எங்கே போனார்கள்?

இந்தியாவின் எதிரிகள் பக்கம் நின்ற சிறிலங்காவை நிர்ப்பந்தம் செய்வதற்காக சிங்கள – தமிழ் முரண்பாட்டை நன்றாகவே பயன்படுத்தியது உங்கள் இந்திய தேசம்.

இளைய வயதான எங்களுக்கு அறிவை விடவும் உணர்வே மேலோங்கி நின்றதனால் எங்களுக்கு இந்திய தேசத்தின் சதி எதுவுமே புரியவில்லை.

தமிழகத்தை எங்கள் தாயாக நினைத்தோம். நம்பினோம். பிள்ளையை அழ விடுவாளோ தாய்? எங்களை அழிய விடுமோ தமிழகம்? நாங்கள் நம்பியிருந்தோம் எங்களைக் காப்பாற்ற தமிழகம் புயலாக மாறும் என்று. எங்களைக் காப்பாற்ற தமிழகம் எதற்கும் தயாராகுமென்று. ஆனாலும் முத்துக்குமாரனாலும் தமிழகத்தை முழுமையாக எழுச்சி கொள்ள வைக்க முடியவில்லை. எங்களுக்காகப் போராடவும் நீங்கள் சார்ந்திருந்த கட்சியிடம் அனுமதி கோரினீர்கள். எங்களுக்காக அழுவதற்கும் உங்கள் சாதித் தலைமையிடம் உத்தரவு கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.

நாங்கள் அழியும்போது கண்ணீர் விட்ட நீங்கள் எங்களுக்காக உங்கள் அணிகளை விட்டு விலகிப் போராடத் தயாராகவில்லை. உங்கள் அணிகளின் தலைவர்கள் ஏற்கனவே சிங்களத்தால் விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் உங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. நாங்கள் அனாதரவாக்கப்பட்டு, கொலைக்களத்தில் நின்று கொண்டிருந்த வேளையிலும் உங்கள் தலைவர்கள் மனமிரங்க மறுத்துவிட்டார்கள். எங்கள் தேசம் எரிந்துகொண்டிருந்த வேளையில் உங்கள் மன்னர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் அழு குரல்களாலும், அபயக் குரல்களாலும் உங்கள் மனங்கள் புண்பட்டுப் போகாமல் உங்கள் தலைவர்கள் தங்களது தொலைக்காட்சி மூலமாக ‘மானாட, மயிலாட’ என்று மயக்கமுறும் காட்சிகளை வாரி வழங்கிப் பாரியையும் தோற்கடித்தார்கள். எங்களது இத்தனை இழப்புக்களுக்கும் யார் காரணம்? எங்களது இத்தனை அழிவுகளுக்கும் எது காரணம்? நாங்கள் உங்களை விட்டு விலக முடியாத கோழைத்தனத்தினால் எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். உங்கள் மீதான எங்கள் பிரியத்தினால் இந்திய தேசத்தை எடுத்தெறிய எங்களால் முடியவில்லை.

நீங்கள் எங்களது தொப்பிள்கொடி உறவு என்பதால் நாங்கள் இந்திய தேசத்தால் விலை கூறி விற்கப்பட்டோம்.

எங்களை அழ்ப்பதற்காக சிங்கள தேசத்திற்கு அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய காங்கிரஸ் கட்சியை எத்தனை இடங்களில் தோற்கடித்தீர்கள்?

உங்கள் தேசத்தின் நலம் எங்கள் தேசியத்தைக் குலைக்குமானால் நாங்கள் உங்கள் நலனுக்காக எங்களை அழித்துக் கொள்ள இனியும் தயாராகப் போவதில்லை. .

அவலக் குரல்கள் எழுப்பியவாறு அபயங்கரம் நீட்டிவாறு உங்களிடம் வந்து சேர்ந்த ஈழ தேசத்தின் ஏதிலிகளை இப்படி அவல வாழ்க்கை வாழ அனுமதித்திருப்பீர்களா? சிங்கள தேசம் போலவே உங்களது அரசும் ஈழத் தமிழர்களை விசாரணைகள் எதுவும் இல்லாமல் ஈனத்தனமாக அடைத்து வைக்க அனுமதித்திருப்பீர்களா?

பாவம், ஈழத் தமிழர்களுக்கு இலங்கைத் தீவும் இந்தியத் தமிழகமும் ஒரே நீதியைத்தான் வழங்குகின்றது.

வாழ அனுமதி மறுக்கபட்டுள்ள நாங்கள் இனியும் உங்கள் திசை நோக்கிக் கதறப் போவதில்லை.

உங்கள் தேச பக்தியும் எங்கள் எதிர்காலமும் எப்போதும் ஒருமித்துப் பயணிக்கப் போவதில்லை.

ஆதலால், நாங்கள் முடிவு செய்தே ஆகவேண்டும் உங்களுக்காக நாங்களா? அல்லது, எங்களுக்காக நாங்களா என்பதை.

பேரறிஞர் அண்ணா அவர்களது தமிழ்த் தேசியக் கனவு கலைஞர் கருணாநிதி அவர்களுக்குப் புரியவில்லையானாலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

சங்கத் தமிழையும் விற்றே பழக்கப்பட்டவர் ஈழத் தமிழர்களுக்கும் விலை நிர்ணயம் செய்யமாட்டார் என்று எப்படி நம்பினீர்கள்? நாங்கள் விலைகூறி விற்கப்பட்டோம். இந்திய அரசாலும், தமிழக அரசாலும் நாங்கள் விலை கூறி விற்கப்பட்டோம் என்பதை நீங்கள் அறிவீகளா? நாங்கள் அழிந்து கொண்டிருந்த போதும் கலைஞர் அவர்கள் இரக்கம் காட்டவில்லையே. நாங்கள் இறந்து கொண்டிருந்த வேளையிலும் கலைஞர் அவர்கள் கடிதம்தானே எழுதிக்கொண்டிருந்தார்.

. இப்போது, காலம் கடந்த ஞானம் பெற்றுவிட்டோம். எங்கள் தேசியத் தலைவர் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்ற சிங்கள தேசத்துடன் உடன்பாடு செய்ததைப் போலவே, எங்கள் தேசியத்தையும் எங்கள் தேசத்து மக்களையும் காப்பாற்ற நாங்கள் சீனாவுடனும் சமரசம் செய்ய முடிவு செய்துவிட்டோம்.

உங்களுக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கள் எங்களுக்கு அழிவை மட்டுமே தந்தது. இப்போது எங்களுக்காக நாங்கள் எடுக்கும் முடிவினால், உங்கள் தேசமும் தேசியமும் சிதைவுறுமானால், அதற்கும் நீங்கள் மட்டுமே காரணம். ஏனென்றால், ஈழத் தமிழர்கள் இதற்கு மேலும் இந்தியத் துரோகங்களைத் தாங்கிச் சகிக்கமாட்டார்கள். தொப்பிள்கொடி உறவு என்ற பேதமையை வைத்து இந்திய அரசால் இனியும் விபச்சாரப் பிழைப்பு நடாத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

- நன்றி்: ஈழநாடு

http://www.meenagam.org/?p=12650

பொறி கக்கும் வார்த்தைகள்.

ஒவ்வொரு ஈழத் தமிழனும் தனது முதல் எதிரி இந்தியா என்பதை உணர வேண்டும்.

இந்தியாவுக்காக நாம் இழந்தது போதும்.இந்தியாவின் பலம் சிதைக்கப்படும் போது தமிழீழத்திற்கான கதவு தானாகவே திறந்து கொள்ளும்.

விபச்சாரி சோனியாவின் இந்தியாவும் சுயநல வாதி கருணாநிதியின் தமிழகமும் பலமிழந்து வெட்கித் தலை குனியும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

ஈழத் தமிழனின் பிணத்தின் மேல் நின்று அரசியல் வியாபாரம் செய்யும் இந்த வியாபாரிகள் ஈழத் தமிழனின் கண்ணீருக்கும் சென்னீருக்கும் விலை கொடுத்தே ஆக வேண்டும்.

நான் கடந்த பல ஆண்டுகளாக இந்தியன் என்று சொல்லிக்கொள்வதில்லை இந்தியன் என்ற வார்த்தை ஒரு அருவருப்பைத்தான் தருகிறது...... இந்திய ராணுவம் ஈழத்தில் நடத்திய கொடூரத்திற்கு ப்பின் இந்தியாவை ஈழ மக்கள் நம்பியிருக்கக்கூடாது...

இனியும் எப்போதும் இந்தியாவையோ , தமிழ்நாட்டையோ நம்பாதீர்கள்..... தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களனால் தாக்கப்பட்டது

குறித்து பலருடன் விவாதித்த போது பலர் சொன்னது .... இவன் ஏன் எல்லை தாண்டிப்போறான் என்பது தான்..

இப்படிப்பட்ட நாய்க்குணம் கொண்டோர் மிகுந்த தமிழ்நாட்டிடம் நீங்களும்,நானும் ஈழத்தமிழன் மீது பரிவு எதிர்பார்ப்பது .....

:lol:

அது மட்டுமல்ல. எவன் ஏறி மிதித்தாலும், வாங்கிக் கட்டிக்கொண்டு, இது நம்விதி என்ன செய்வது? என்று அக்கணமே துடைத்துப்போட்டுவிட்டு, மானாட-விற்கு போய் பல்லிளித்துக்கொண்டு நிற்பதும் தமிழனே. ஏனிப்படி இருக்கிறீர்களென்றால், தன் இயலாமையை மறைக்க ஆயிரத்தெட்டு நியாயங்கள் கற்பிக்க முயல்வான். அதிலொன்றுதான் இந்த எல்லை மீறி மீனவர்கள் ஏன் செல்கிறார்களென்ற வரட்டு வாதம்.

தன் உரிமையை நிலைநாட்ட,குறைந்தபட்ச எதிர்ப்பைக் காட்ட, கேவலம் புழுவிற்கு இருக்கும் சராசரி எதிர்ப்புணர்வு, அனிச்சைச்செயலாய் வரும்போது தமிழனுக்கு மட்டும் ஏனில்லை? மொத்தத்தில் தோல் தடித்து, மரத்துப்போனான் மற(ர)த்தமிழன்.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!

இப்போது, காலம் கடந்த ஞானம் பெற்றுவிட்டோம். எங்கள் தேசியத் தலைவர் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்ற சிங்கள தேசத்துடன் உடன்பாடு செய்ததைப் போலவே, எங்கள் தேசியத்தையும் எங்கள் தேசத்து மக்களையும் காப்பாற்ற நாங்கள் சீனாவுடனும் சமரசம் செய்ய முடிவு செய்துவிட்டோம்.

உங்களுக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கள் எங்களுக்கு அழிவை மட்டுமே தந்தது. இப்போது எங்களுக்காக நாங்கள் எடுக்கும் முடிவினால், உங்கள் தேசமும் தேசியமும் சிதைவுறுமானால், அதற்கும் நீங்கள் மட்டுமே காரணம். ஏனென்றால், ஈழத் தமிழர்கள் இதற்கு மேலும் இந்தியத் துரோகங்களைத் தாங்கிச் சகிக்கமாட்டார்கள். தொப்பிள்கொடி உறவு என்ற பேதமையை வைத்து இந்திய அரசால் இனியும் விபச்சாரப் பிழைப்பு நடாத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

- நன்றி்: ஈழநாடு

http://www.meenagam.org/?p=12650

ஈழ தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களுக்கு உண்மையிலேயே சூடு சொரணை, மானம்,அறிவு என்று எதாவது மிச்சம் மீதி இருக்குமானால், இனிமேலும் , "இந்திய தேசமே, தமிழக தொப்புள்கொடி உறவே" என்று ராப்பிச்சைகாரனை விட கேவலமாக கூவிக்கொண்டிருக்காமல், உங்கள் விடுதலையை எந்த சக்தி பெற்று தருமோ அந்த சக்திகளுடன், அவர்கள் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் எவ்வளவு மோசமான விரோதியாக இருந்தாலும் கூட, அவர்களுடன் சேர்ந்து உங்கள் சுதந்திரத்தை வெல்லுங்கள்.

இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் கூட்டு சேர மாட்டோம் என்ற கடைந்தெடுத்த முட்டாள்தனத்தை மறுபடி மறுபடி செய்யாதீர்கள். ஒரு பேச்சுக்கு, உங்களுக்கு சூடு, சொரணை,மானம்,அறிவு இவற்றில் எதாவது ஒன்று இருந்து நீங்கள் உங்கள் சுதந்திரத்தை வென்றெடுக்க இந்தியாவின் எதிரிகளுடன் ரகசிய உடன்பாடு செய்துகொண்டு சுதந்திரத்தை பெற்றுகொண்டீர்கள் என்றே வைத்துக்கொள்ளுவோம்; அதனால் இந்தியாவிற்கு என்ன பெரிதாக பாதிப்பு வந்துவிடப்போகிறது? இந்தியாவின் ஜென்ம விரோதிகளான சீனவாலும், பாகிஸ்தானாலும் வராத ஆபத்து, தமிழ் ஈழத்துக்கருகில் வரப்போகும் புதிய விரோதிகளால் ஒன்றும் வந்துவிடாது. என்ன, இந்தியாவால் முன்பு போல் ஒரு ரவுடியை போன்று செயல்பட முடியாது. வியாபார நலன்கள் சிறிது பாதிக்கப்படலாம். வேறு ஒன்றும் பெரிதாக வந்துவிடாது. இன்னும் சற்று அதிகமாக போனால், சில நூறு குண்டுகள் வெடிக்கலாம். ஆயிரகணக்கில் மக்கள் சாகலாம்.

ஒரு நாட்டை காக்க ஒரு கிராமத்தை இழப்பதில் தவறில்லை. ஒரு கிராமத்தை காக்க ஒரு குடும்பத்தை இழப்பதில் தவறில்லை. ஒரு குடும்பத்தை காக்க அதில் ஒருவனை இழப்பதில் தவறில்லை. அதே போன்று, தமிழ் ஈழம் வென்றெடுக்க இந்தியாவின் எதிரிகளுடன் சேர்வதால், சில ஆயிரம் தமிழக தமிழர்கள் கொல்லப்படுவதில் தவறில்லை.

உண்மையான தமிழன் என்று சொல்லிக்கொள்ளுபவன் எவனாவது தமிழகத்தில் இருந்தால், தமிழ் ஈழம் அமைந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவான். அதன் காரணமாக இந்தியாவிற்கு,தமிழகத்திற்கு பாதிப்பு வந்தாலும் கவலைப்பட மாட்டான், 'நாங்கள் துன்பம் அனுபவித்தாலும் கவலை இல்லை. இந்தியாவின் எதிரிகளை இலங்கையில் காலூன்ற விடமாட்டோம்' என்று நீங்கள் நினைத்தது போல், 'எங்களுக்கு பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. தமிழினம் விடுதலை பெற்றுவிட்டது. தமிழ் ஈழம் அமைந்துவிட்டது' என்று நெஞ்சு பூரிப்பான்.

ஏற்கனவே, சிங்களவன் நண்பன் போன்று இந்தியாவை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். அவன் நன்றாக் சுகமாக வாழ்கிறான். அவனை மோட்டு சிங்களவன் என்று கூறிக்கொண்டே நீங்கள் எல்லாவற்றையும் இழந்தீர்கள். இந்தியாவின் எதிரிகளுடன் சேருவோம் என்று நீங்கள் கூறுவதும் ஒரு புருடாதான். சும்மா மிரட்டிப்பார்க்க. இந்த மிரட்டல்களை எல்லாம் கண்டு உடனே புது டில்லியின் கொள்கை ஈழ தமிழனுக்கு சாதகமாக மாறும் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றீர்கள். உங்கள் முட்டாள்தனம் வாழ்க. வளர்க. அடுத்த ஆயிரம் ஆண்டுகளில், இந்தியாவின் விரோதிகளின் உதவி இல்லாமல், உங்கள் விடுதலை சாத்தியம் இல்லை. நீங்கள் இந்தியாவின் விரோதிகளுடன் சேருவதும் சாத்தியம் இல்லை. ஏனெனில், உங்கள் உடம்பில் தமிழ் ரத்தம் மறைந்து, அடிமை ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அது, சுதந்திரத்திற்கான சுலபமான வழிகள் அனைத்தையும் நிராகரித்து, மீண்டும் மீண்டும் இந்தியாவின் கால்களை நக்க தூண்டும். நீங்களும் நக்கிகொண்டிருப்பீர்கள்.

முதலில் உங்கள் இலையில் சோறு விழுகிறதா என்று பாருங்கள். பிறகு பக்கத்து இலைக்கு பாயசம் வந்ததா இல்லையா என்று பார்க்கலாம்.

உங்கள் முட்டாள்தனங்களையும், வாய் சவடால்களையும் பார்க்கும்போது, பழைய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனன் ஒருவரிடம் அடி வாங்கிக்கொண்டே கூறும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது: "உங்க அப்பன் மகனே, அடிப்பியா,சிங்கம்டா." அடியும் நின்றபாடில்லை. அவர் சவடாலும் நின்றபாடில்லை.

:lol: நெல்லைய்யன்,

கருத்துப் பஞ்சத்தில் ஓடியொளித்த நீங்கள் இங்கே வந்துவிட்டீர்களா?? ஆனாலும் உங்களுக்கு தமிழர் மேல் ரொம்பத்தான் அக்கறை போங்கள். அந்த அக்கறை சிங்களவனின் இனவழிப்பைக் கூட மறைத்து விடுமளவிற்குப் போய்விட்டதென்றால் பாருங்களேன்.

மக்களின் துயரம் என்கிற போர்வைக்குள் அரச பிரச்சாரத்தை முன்னெடுக்கும் நீங்கள் விபச்சாரிகளைவிடக் கேவலாமனவர்கள். ஏனென்றால் அவர்கள் கூட விருப்பமில்லமலேயே அந்தத் தொழிலைச் செய்கிறார்கள். ஆனால் நீங்கள்....சி...சீ

அமோக வருமானம்....நடத்துங்கள்...நடத்த

  • கருத்துக்கள உறவுகள்

:lol: என்னை ஒதுங்கச் சொல்வதற்கு உமக்கு எவர் அதிகாரம் தந்தது. உந்த விளையாட்டையெல்லாம் வாசுவோட வைத்துக்கொள்ளும்.

நான் ஒதுங்க, நீர் என்ன சிதைக்கப் போறீரோ??!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத் தமிழனின் பிணத்தின் மேல் நின்று அரசியல் வியாபாரம் செய்யும் இந்த வியாபாரிகள் ஈழத் தமிழனின் கண்ணீருக்கும் சென்னீருக்கும் விலை கொடுத்தே ஆக வேண்டும்.

இவ்வளவு நடந்த பின்னும் இன்னும் நாம் தமிழருவி மணியன்,தொல் திருமாவளவனை கூப்பிட்டு ஆலோசனை நடத்துற அளவு கீழ்நிலையில் தானே

இருக்கிறோம்.. இது அவங்க தப்பா? இல்லை எங்களுடைய தப்பா?

இவ்வளவு நடந்த பின்னும் இன்னும் நாம் தமிழருவி மணியன்,தொல் திருமாவளவனை கூப்பிட்டு ஆலோசனை நடத்துற அளவு கீழ்நிலையில் தானே

இருக்கிறோம்.. இது அவங்க தப்பா? இல்லை எங்களுடைய தப்பா?

திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார். தமிழருவி மணியன் ஈழப்பிரச்சனை காரணமாக காங்கிரஸில் இருந்து விலகியவர்.

திருமாவளவன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறார். தமிழருவி மணியன் ஈழப்பிரச்சனை காரணமாக காங்கிரஸில் இருந்து விலகியவர்.

தமிழக மக்களை முதலில் மறக்க முயலுங்கள்....

தமிழக திரைப்படங்களை , தொலைக்காட்சிகளை புறக்கணியுங்கள்..... மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது அதை காட்டமறந்த தொலைக்காட்சிகளையோ , அல்லது தமிழக திரைப்படங்களையோ குறைந்த பட்சம் புறக்கணிக்க இயலாத ஈழத்தமிழர்கள் என சொல்லிக்கொள்ளும் உங்கள் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கை கூட முட்டாள்த்தனமானது தானோ..

நீங்கள் தனி இனம் என எண்ணி செயல்பட்டால் மட்டுமே விடிவு கிட்டும்..

உங்கள் மீதான நம்பிக்கையும் போய்க்கொண்டே இருக்கிறது!

வேலவன்..

1987 இன் பின் இந்தியாவை நம்பாமல்தான் போராட்டம் நடந்தது..! ஆனால் 2004 இன் பின் இந்திய அரசு புலிகளை முழுமூச்சாக அழிக்க நினைத்தபோது இந்தியாவின் எதிரிகள் (சீனா, பாகிஸ்தான்) ஏற்கனவே சிங்களவனின் சட்டைப் பைக்குள்) அதனால் புலிகளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை தோன்றிவிட்டது.

இறுதி நேரத்தில் வேறு வழியில்லாமல்தான் தமிழகத்தின் உதவி கோரப்பட்டது..! ஆகையால் இந்தியாவை நம்பியது என்பதெல்லாம் ஒரு இறுதிக்கட்ட அரசியல் நகர்வுதான்.. ஆனால் என்ன.. எல்லாம் இப்போது அழிக்கப்பட்டு விட்டது.. அல்லது என்ன நடக்கிறதென்றே தெரியாத நிலை தோன்றிவிட்டது.. எதிர்காலத்தில் நிகழப்போகும் மாற்றங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை..!

முகாம்களில் உள்ள மக்களை உலகநாடுகள் ஒட்டுமொத்தமாக கைவிட்டது தான் ..... மிகவும் கேவலமான செயல் நாம் நாகரிக உலகில் தான் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் வலுவாக உள்ளது.

நமக்குள்ளேயே எவ்வளவு எதிரிகள்...... தான் தான் மிகப்பெரிய மேதை என்று பேசித்திரியும் புழுக்கள் எத்தனையோ பேர்...

இப்படி தமிழன் ஒற்றுமையில்லாதவன் என அனைவருக்கும் தெரிந்ததால் தான் அனைவரும் நம்மை கைவிட்டனரோ?

வேலவன்..

1987 இன் பின் இந்தியாவை நம்பாமல்தான் போராட்டம் நடந்தது..! ஆனால் 2004 இன் பின் இந்திய அரசு புலிகளை முழுமூச்சாக அழிக்க நினைத்தபோது இந்தியாவின் எதிரிகள் (சீனா, பாகிஸ்தான்) ஏற்கனவே சிங்களவனின் சட்டைப் பைக்குள்) அதனால் புலிகளால் ஒன்றும் செய்ய முடியாத நிலை தோன்றிவிட்டது.

டன்... "எதிரிக்கு எதிரி நண்பன்" ... இது உலக வழக்கு! ... சில தினங்களுக்கு முன் ஆப்கான் தொடர்பான நிகழ்ச்சி தொலைக்காட்சியில் .... அங்குள்ள தலபானுகளுக்கு சீனா ஆயுத உதவி அழிக்கிறதாம்!! ஏன்???? .... அதே!

எங்களைப் பாருங்கள்!!! சிங்களவனை விடுங்கள், இந்தியா எதிரி, பாகிஸ்தான் எதிரி, பங்களதேஸ், ..... பிரித்தானியா, அமெரிக்கா, ரஷ்யா .... ???????????

.... எங்கள் தலைமையின் அரசியல் வேலைப்படுகளின் வெளிப்பாடு!!!!

தலிபான் சீனாக்காரனோட அரசியல் பண்ணி ஆயுதம் வாங்கியிருப்பான் எண்டு நான் நம்பவில்லை..! தலிபானுக்கு சீனா தேவைப்பட்டதைவிட சீனாவுக்கு தலிபான் தேவைப்பட்டிருக்கும்..! அதான் சீனாக்காரனே போய்க் குடுத்திருப்பான்.. நம்மளையும் தேவைப்பட்டிருந்தால் அவன் வந்திருப்பான்..! ஆனால் சிங்களவன் முந்திக்கொண்டு முந்தியை விரிச்சிட்டான்..! எங்களிட்ட பலமான அரசியல் செய்யக்கூடிய அளவுக்கு வளங்களோ அதிகாரங்களோ இருக்கவில்லை என்பதுதான் சோகம்..!

ஆனால் நிலைமை இப்படியே இருக்கும் என்பதை நான் நம்பவில்லை..! சீனாவும், இந்தியாவும் ஒரே கோட்டில் நடக்க முடியாதவை..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.