Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம்முறை உலக சமாதானத்துக்கான நோபள் பரிசை தட்டிச்சென்றார் அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இம்முறை உலக சமாதானத்துக்கான நோபள் பரிசை தட்டிச்சென்றார் அமெரிக்காவின் அதிபர் பராக் ஒபாமா

http://www.reuters.com/article/topNews/idUSTRE5981JK20091009

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்ட அந்த மக்களுக்கு இவ்விருது சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோபல் பரிசுக்கு அவமானம்.

எங்கள் விடயத்தை விட்டாலும் வேறு எங்கு தான் சமாதனத்தை கொண்டுவந்தார். BBC Have Your Say யில் எல்லோரும் கிழித்திருக்கிறார்கள்.

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20091009145450

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்திற்கான நோபல் பரிசு ஒபாமாவிற்கு என்று , நோபல் கமிட்டி அறிவித்த முதல் நிமிடத்தில் ....... ஒபாமாவே டைனமைற் மாதிரி அதிர்ந்திருப்பார்.

நோபல் பரிசுக்கே மரியாதையை இழக்க வைக்கும் செயல் இது. :)

நல்ல காலம் இந்தக் கூத்தை பார்க்க ......... நோபல் இன்னும் உயிரோடை இருந்திருந்தார் என்றால் ......

தான் கண்டு பிடிச்ச டைனமற்ரை .... இந்த நோபல் கமிட்டியின் மேல் தான் வீசியிருப்பார். :wub:

Edited by தமிழ் சிறி

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கோமாளித்தனம். இந்த விருதுக்கும் அர்த்தம் இல்லமல் போய்விட்டதுபோல் உள்ளது. வன்னியில் பணிபுரிந்த வைத்தியர்களுக்கு கொடுத்திருந்தால் இந்த விருதுக்கே விருது வழங்கியது போல இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா கப்பல் வருக்குது வன்னியை காக்க என்று சொன்னாலே போதும். உடனே நோபல் பரிசை தூக்கி கொடுத்துடுவாங்கள்.

ஒரு கருத்தை பாருங்கள். அது தான் என் கருத்தும்.

Love him. Voted for him. Would vote for him again. But what has he done to deserve the Nobel Prize? Let us be honest with ourselves. Nothing yet. Hopefully one day he will. But in the meantime, let him show some humility and turn it down.

Beth, Olympia, USA

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்று மணி நேரம் உண்ணாவிரதமிருந்து போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்த டாக்டர் கொலைஞர் அவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கழக கண்மணிகள் நோபல் பரிசு குழுவுக்கு பரிந்துரை செய்தாலும் செய்வார்கள்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடையமுன்னம்.. நாங்கள் எல்லாரும் எங்களுக்குள் கேட்டவேண்டிய கேள்வி... இவ்வளவு காலமும் வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசுகள் உண்மையில சரியானவர்களிற்கா வழங்கப்பட்டு இருக்கிது..? :wub:

அட பொறுங்கப்பா...விட்டால் பேசிக்கொண்டே போவீர்கள்..இதிலுள்ள சூத்திரத்தை அறிந்து மேலும் அவரை நாம் வற்புறுத்த ஒரு சந்தர்ப்பம் என்று கொள்வோம்....

சிறிலங்கா எங்கள் இனத்தை அழிக்கும் போதும் அழிவின் உச்சியிலும்

மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் மண்டியிட்டு காப்பாற்றுங்கள் ஒபாமாவே நீங்கள் மாத்திரம் எங்களுக்கு நம்பிக்கை என்று கதறியும் அழுதும் ஒரு வாய் திறக்கவில்லை ஓபாமா அவர்கள்.

இப்போது அவருக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு

உங்களுடன் நானும் (மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் மண்டியிட்டு காப்பாற்றுங்கள் என்றும் ) கதறி அழுதேன்....அதன் வலி மாறாது

இப்போது அவருக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு எனும் போது கொதிக்கிறது...இன்னமும் எம் உறவுகள் வெள்ளை மாளிகை முன் அழுகின்றனர்...360 யுனிவர்சிட்டி அவன்யு டொரோண்டொ -விலும் அழுகின்றனர்.

ஆனால் முன்னில்லாத கட்டாயம் ஓபாமாவுக்கு தற்போது எழுந்துள்ளது இல்லை எனில் எழவைப்போம்

”Dear Nobel Laureate Obama Support Tamils noble cause”

என்று மீண்டும் மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் நின்றும் ஒலிப்போம்.

email:

http://www.whitehouse.gov/contact/

surface mail:

The White House

1600 Pennsylvania Avenue NW

Washington, DC 20500

Phone Numbers

Comments: 202-456-1111

FAX: 202-456-2461

ஆப்கன் மீதான ஆக்கிரமிப்புக்கு இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்து மேலும் ஆப்கன் மக்களின் நெருக்கடிகளை அதிகரித்த செயலுக்கான சமாதான பரிசு இது

இந்த தேர்வு (Nomination) ஒபாமா பதவியேற்று இரு வாரங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது

ஒரு தமிழருக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது எனும் போது நோபல் பரிசின் மீது ஏற்பட்ட பெருமிதம் இன்று இறங்கிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

அட பொறுங்கப்பா...விட்டால் பேசிக்கொண்டே போவீர்கள்..இதிலுள்ள சூத்திரத்தை அறிந்து மேலும் அவரை நாம் வற்புறுத்த ஒரு சந்தர்ப்பம் என்று கொள்வோம்....

சிறிலங்கா எங்கள் இனத்தை அழிக்கும் போதும் அழிவின் உச்சியிலும்

மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் மண்டியிட்டு காப்பாற்றுங்கள் ஒபாமாவே நீங்கள் மாத்திரம் எங்களுக்கு நம்பிக்கை என்று கதறியும் அழுதும் ஒரு வாய் திறக்கவில்லை ஓபாமா அவர்கள்.

இப்போது அவருக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு

உங்களுடன் நானும் (மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் மண்டியிட்டு காப்பாற்றுங்கள் என்றும் ) கதறி அழுதேன்....அதன் வலி மாறாது

இப்போது அவருக்கு சமாதானத்திற்க்கான நோபல் பரிசு எனும் போது கொதிக்கிறது...

இன்னமும் எம் உறவுகள் வெள்ளை மாளிகை முன் அழுகின்றனர்...

360 யுனிவர்சிட்டி அவன்யு டொரோண்டொ -விலும் அழுகின்றனர்.

ஆனால் முன்னில்லாத கட்டாயம் ஓபாமாவுக்கு தற்போது எழுந்துள்ளது இல்லை எனில் எழவைப்போம்

”Dear Nobel Laureate Obama Support Tamils noble cause”

என்று மீண்டும் மின்னஞ்சல்களும் தொலைநகல்களும் குரல் பதிவுகளும் செய்தும் வெள்ளை மாளிகைமுன் நின்றும் ஒலிப்போம்.

email:

http://www.whitehouse.gov/contact/

surface mail:

The White House

1600 Pennsylvania Avenue NW

Washington, DC 20500

Phone Numbers

Comments: 202-456-1111

FAX: 202-456-2461

சினைப்பர் எதிர்மறையாக சிந்திக்கும் யோசனையும் நன்றாக உள்ளது .

சினைப்பர் எதிர்மறையாக சிந்திக்கும் யோசனையும் நன்றாக உள்ளது .

ஏதோ கொஞ்சம் ஒட்டிகிட்டு இருக்கு தமிழ்சிறி!

இந்த தேர்வு (Nomination) ஒபாமா பதவியேற்று இரு வாரங்களில் எடுக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது

எல்லாம் தீர்கதரிசனம்தான். எதிர்காலத்தில செய்யப்போறதுக்கு இப்பவே பாராட்டு தெரிவிக்கறாங்கள். நோபல் சமாதான பரிசு... எத்தனையோ பல அரசியல் கலந்தது. ஒபாமாவுக்கு பரிசு கொடுத்ததற்கான உள்நோக்கம் என்ன என்று ஆண்டவனுக்குத்தான் தெரியும். சிலது நோபல் பரிசு குடுத்து அண்ணையருக்கு கால்கட்டு போடப்பட்டு உள்ளதோ தெரியாது. :wub:

இவர் பற்றிய சில நல்ல comments

"The spectacle of Mr. Obama mounting the podium in Oslo to accept a prize that once went to Nelson Mandela, Aung San Suu Kyi and Mother Teresa would be all the more absurd if it follows a White House decision to send up to 40,000 more U.S. troops to Afghanistan. However just such a war may be deemed in Western eyes, Muslims would not be the only group to complain that peace is hardly compatible with an escalation in hostilities." -- Michael Binyon, Times Online

"Here are my theories as to how it might have come about:

1. Unlike in most of the rest of the world Øbama Køøl Aid ™ remains Oslo's most popular beverage.

2. The Norwegian prize committee's sense of irony is growing ever more sophisticated, as it hinted when it gave the prize in 2002 to comedy ex-president Jimmy Carter, and hinted more strongly when it gave the prize in 2007 to climate-fear-promoting comedy failed-president Al Gore.

3. The other candidates on the shortlist were Robert Mugabe; Osama Bin Laden; Ahmed Jibril; and the late Pol Pot." -- James Delingpole, Telegraph

Peter Beinart is senior political writer for The Daily Beast. Perhaps next they'll start giving Oscars not to the people who have made the best movies of last year, but to the people who have the best chance of making the best movies next year.

அவரின் உலகுக்கான அமைதியின் பேச்சுக்களை வைத்து... உலக அமைதிபரிசால் அவரையோ :wub: அல்லது அமெரிக்காவையோ :D அல்லது உலகை வழிக்கு கொண்டு வர அந்த தனிநாடான நோர்வே <_<:rolleyes: கொண்டுவந்துள்ள அமைதி உலகை நாமும் உலகமும் பொறுத்திருந்து பார்ப்போம். :)

............"இதிலுள்ள சூத்திரத்தை அறிந்து மேலும் அவரை நாம் வற்புறுத்த ஒரு சந்தர்ப்பம் என்று கொள்வோம்...."..........
:wub: :wub: :icon_idea:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில காலங்களுக்கு முன் பலஸ்தீனத்தில் சமாதனத்தை நிலைநாட்டியதற்காகவும் மூவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

இருந்தும்.............

பலஸ்தீனம் இன்னும் விடிவடையவில்லை.

மருத்துவங்களுக்கும்,மருத்து

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டிக்கான நோபல் பரிசு சிறிலங்காவில் சமாதானத்தை உருவாக்கிய மகிந்தாவுக்கு கொடுக்கும் படி எறிக்சொல்கைம் சிபார்சு செய்வார் ,அதை இந்தியா வரவேற்க்கும் ,இதன் மூலம் நோபல் பரிசுக்கு ஒரு மதிப்பு கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்துக்கு???? எதிரான போரில் ஒபாமா இன்னும் வெற்றியடைய வில்லை ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் வெற்றியீட்டிய (எத்தனையோ தமிழ் மக்களை அமைதியாக்கிய) ராஜபக்சவிற்கு இந்தப் பரிசை கொடுக்காததையிட்டு மாற்றுக் கருத்தாளர் சங்கத்தின் பேரில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தனக்கு நோபல் பரிசு கிடைத்ததை அறிந்த ஒபாமா அதிர்ந்து போனது என்னவோ உண்மைதான்.

ஆனாலும் அந்த பரிசை வேண்டாமென்று அவர் நிராகரிக்கவில்லை -

நோபல் பரிசை பெறுவதுற்கு நான் உலகசமாதானத்துக்கு அப்படி என்ன செய்துவிட்டேன் எனவே அந்தப்பரிசுக்கு ஏற்றவன் நானில்லை என்று கூறி அதைத் தட்டிக்கழித்து தன்னைச் சிறியவனாக்கிக் கொள்ளவுமில்லை..

பின்னர் அவர் தனது உரையில் வழமையாக உலகத்தலைவர்கள் பயன்படுத்தும் பரிபாசையில் பௌவியமாக இதுபற்றிக் குறிப்பிடுகையில்

"இதுவரை நோபல்பரிசை பெற்றுக்கொண்டுள்ள பெரிய பெரிய மனிதர்களுடன் நானும் இணைந்துகொள்ள எனக்கு என்ன அருகதையிருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை" என்றார்

நோபல் குழு ஒபாமாவை பரிசுக்குரியவராக தேர்ந்தெடுத்ததற்கு நோர்வேயில் பல மட்டங்களிலிருந்தும் இப்போது எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

அதற்கு நோபல்குழுவின் தலைவர் பதிலளிக்கையில் "நோபல் பரிசின் இஸ்தாபகரான அல்பிரட் நோபலின் இறுதி ஆசை அடங்கிய ஆவணத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ

அதைக் கடைப்பிடித்தே இந்த முடிவுக்கு வந்தோம். சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தவர்களின் பெயர்ப்பட்டியலில் அவர் மட்டுமே

பரிசுக்கான தராதரங்களை அதிகளவில் கொண்டிருந்தார். சமாதானத்துக்காக அவர் என்னென்ன செய்தார் அல்லது அவர் இனிமேல் என்ன செய்யப்போகிறார் என்பதை ஆராய்வது எங்கள்

நோக்கமாக இருக்கவில்லை. இந்த வருடத்துக்கான நோபல்பரிசை பெறுவதற்கு அவரைவிடவும் வேறு ஒரு சிறந்த நபரை உங்களால் காட்ட முடிந்தால் சொல்லுங்கள்" என்றார்

ஒபாமா போன்ற உலகதலைவர் ஒருவருக்கு அவர் பதவிக்காலத்தில் இருக்கும்போதே நோபல் பரிசு வழங்கப்பட்டமை அவரின் கடமையை வெகுவாகவே பாதிக்கும் என்ற பொதுப்படையான கருத்து நிலவுகிறது. அமெரிக்க நாட்டின் அதிபராக இருக்கும் ஒருவர் உலக நாடுகளுக்கு உசிதமானதும் உசிதமற்றதுமான பல இராஜதந்திர காய் நகர்த்தல்களைச் செய்வதன் மூலம் சர்வதேச பாதையில் அமெரிக்க நாட்டை வழிநடத்தி அதை நிர்வகிக்க முடியும். இப்போது நோபல் பரிசு ஒபாமாவுக்கு போடப்பட்ட ஒரு கைக்கட்டு என்றும் சொல்லுகிறார்கள். ஒபாமா அமெரிக்க அதிபராக இருப்பதை விரும்பாத உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்(இஸ்ரேல் உட்பட) ஒபாமாவுக்கு எதிராக இயங்கும் பெரிய சக்திகள் அவரை மண்கவ்வ வைக்கவேண்டுமென கங்கணங்கட்டி நிற்கின்றன.

எப்படியாயினும் டிசம்பர் 10-ஆம் திகதி பரிசைப் பெற்றுக்கொள்ள ஒபாமா ஒஸ்லோ நகருக்குச் செல்லும்போது அவர் இன்னும் 50000 இராணுவத்தினரை ஈராக்கிற்கோ ஆப்கானிஸ்தானுக்கோ அனுப்பிவிட்டிருக்கலாம். அமெரிக்கர்களின் குண்டு மழையில் சிக்கி ஆயிரமாயிரம் மக்கள் மடிந்திருக்கலாம். மூடப்பட வேண்டிய "குவாந்தனமோ" சித்தரவதைச் சிறைச்சாலையை இப்போதைக்கு மூடாவேண்டாமென அவர் உத்தரவிட்டிருக்கலாம்.

ஒபாமாவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசை நோய் வருமுன் கொடுக்கப்பட்ட ஒரு மருந்து என்றுதான் சொல்ல வேண்டும்.

Edited by vanangaamudi

ஒபாமாவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசை நோய் வருமுன் கொடுக்கப்பட்ட ஒரு மருந்து என்றுதான் சொல்ல வேண்டும்.

இருக்கலாம்...:icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய செய்திகளின்படி ஒபாமா மேலதிகமாக 13000 அமெரிக்க படைவீரர்களை ஆப்கானிஸ்த்தானுக்கு அனுப்பிவைக்க தீர்மானித்திருப்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் சமாதானத்தை நிலைநாட்டுவார்களா அல்லது போரை முன்னெடுப்பார்களா என்பது தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.