Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திக்காரனை விட சீனாக்காரன் மேல்....

Featured Replies

இந்திய இறையாண்மைக்காக இந்திய அரசு தம் குடிமக்களாகிய தமிழர்களை பலி கொடுக்க எப்போதும் தயங்கியதில்லை. இதுதான் ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கைக்கு தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி, சித்ரவதை செய்யவும், சுட்டுக் கொல்லவும் தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழக தலைநகரான சென்னையில் தமிழில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ததற்காக இளம்பெண் ஒருவரை பீகாரை சேர்ந்த

ரயில்வே காவலர்கள் தாக்கியுள்ளனர். தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் வட இந்தியர்கள் வைத்துள்ள வெறுப்பையே இந்த சம்பவம் காட்டுகிறது. வட இந்தியர்கள் ஒரு போதும் தமிழர்களின் நலனில் அக்கறை செலுத்தப் போவதில்லை. அதற்கு தமிழ் துரோகிகளும் விடப் போவதுமில்லை.

சிங்களன் சீனாவுடன் வலுவாக கூட்டு சேர்ந்து கொண்டு இந்தியாவையும், மேற்குலக நாடுகளையும் மதிக்காமல் மிரட்டுகிறான். ராஜபக்சே சகோதரர்கள் சீனாவின் பெயரை பயன்படுத்தி இந்தியாவை எப்படி வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவை முன்னிறுத்தி மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை சமாளித்து ஐ.நாவில் போர்க்குற்ற தீர்மானத்தை தகர்த்தார்கள், உலக வங்கி கடனைப் பெற்றார்கள், போர்க்குற்றங்களிலிருந்து விடுபட்டார்கள். இலங்கையின் நட்பு "கூடா நட்பு" என்று இந்தியாவுக்கு இப்போதைக்கு புரிய வாய்ப்பில்லை.image

"எந்த ஒரு நாடும் தர்மத்தின் அச்சில் சுழலுவதில்லை. கேந்திர நலங்களை வைத்து தான் முடிவுகளை எடுக்கின்றன" என்று ஆண்டன் பாலசிங்கம் மிகத் தெளிவாக உணர்ந்து சொன்னார்.

தமிழர்களுக்கு (ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழக தமிழர்களுக்கும்தான்) இப்போது எது சிறந்த வழியாக இருக்கும் என்று பார்த்தால் :

1. அமெரிக்கா, மேற்குலக நாடுகள் பக்கம் சாய்வது

இந்தியா 110 கோடி மக்கள்தொகை கொண்ட உலகின் மிகப்பெரிய சந்தை. அமெரிக்கா இப்போதுதான் அணு ஆயுத ஒப்பந்தத்தை இந்தியாவுடன் மேற்கொண்டுள்ளது. 33 லட்சம் ஈழத்தமிழர்களுக்காக இந்தியாவை மேற்குலக நாடுகள் ஒரு போதும் பகைத்துக் கொள்ளப் போவதில்லை.

- பேச்சுவார்த்தை என்று சொல்லி நயவஞ்சகமாக கொலைக்களத்திற்கு புலிகளை அழைத்து வந்தார்கள்.

- பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி பல நாடுகளிலும் இயக்கத்தை தடை செய்தார்கள்.

- மனித உரிமை என்று வாயில் மட்டும் பேசி நூறாயிரம் மக்கள் சாகும் போது வேடிக்கை மட்டும் பார்த்தார்கள்.

- அமெரிக்கா தனது செய்மதிகள் மூலம் எடுத்த போர்க்குற்ற ஆதாரங்களை வெளியிடாமல் அதை ராஜபக்சேவை மிரட்ட மட்டும் பயன்படுத்துகிறார்கள். கோதபாயாவின் சமீபத்திய அமெரிக்க விஜயத்தின் நோக்கம் இதுதான்.

- உலக வங்கி கடனை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கா ஹிலாரியின் இந்திய விஜயத்திற்கு பிறகு கடனை அதிகரித்து வழங்கினார்கள்.

இந்தியாவை எதிர்த்து இவர்கள் ஒரு போதும் எதுவும் செய்யப் போவதில்லை என்பது மட்டும் உண்மை.

2. மீண்டும் இந்தியா பக்கம் சாய்வது

பல புத்தி ஜீவிகள் அகிம்சை போராட்டம்தான் சிறந்தது, இந்தியாவின் உதவி இல்லாமல் ஈழம் அமைக்க முடியாது என்று தினமும் கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.

- அகிம்சை போராட்டம் வெள்ளைக்காரர்களிடம்தான் எடுபடும். சிங்களன் போன்ற காட்டுமிராண்டிகளிடம் அகிம்சைப் போராட்டம் ஒரு பயனையும் தராது. "ஒரு பெண் தன் மானத்தை காத்துக் கொள்ள கொலை செய்தாலும் தகும்" என்று மகாத்மா சொன்னார். மகாத்மா பிறந்த நாடான இந்தியாவே திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை அங்கீகரிக்கவில்லை. அகிம்சை போராட்டத்தின் முடிவில்தான் ஆயுதப் போராட்டம்

கையில் எடுக்கப்பட்டது.

- தனி ஈழக்கோரிக்கையில் தமிழ் நாட்டு தமிழர்களும் சேர்ந்து கொள்வார்கள், இலங்கையின் சீன உறவு, அமைதிப்படையின் தோல்வியால் ஏற்பட்ட கசப்புணர்வு, ஈழத்தின் பிரிவு காஷ்மீரின் பிரிவுக்கு அடிகோலி விடும் போன்றவற்றால் இந்தியா ஒருபோதும் தனி ஈழம் அமைய விடப் போவதில்லை. ஒன்றிணைந்தத இலங்கையிலும் அமைதி திரும்புவதை இந்தியா சகித்துக் கொள்ளாது. இந்தியாவுக்கு எப்போதும்

சிங்களர்களும், தமிழர்களும் அடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் குறிக்கோள். இந்தியாவை நம்பி மோசம் போனது போதும்.

3. சீனாவின் பக்கம் போவது

ஜே.ஆர் ஜெயவர்த்தனா தனது குள்ள நரித்தனத்தால் ஒன்றாக இருந்த இந்தியாவையும், புலிகளையும் மிகத் தந்திரமாக மோத விட்டு வேடிக்கை பார்த்தான். அதை எதிர்த்த சிங்களர்களிடம் அவன் சொன்னான் "இந்தியர்களும், தமிழர்களும் அடித்துக் கொண்டு சாகட்டும். நாம் வேடிக்கை மட்டும் பார்ப்போம்" என்று. அமைதிப்படை அனுப்பப்படாவிட்டால் ஈழம் அப்போதே அமைந்திருக்கும்.

- ஒரு பெரிய நாட்டின் உதவி இல்லாமல் போராட்ட இயக்கம் ஒன்று வெற்றி பெறுவது கடினம் என்ற சூழ்நிலையில் இந்தியாவும், அமெரிக்காவும் அந்த உதவியை செய்யாத போது மிச்சமிருக்கும் ஒரே வழி சீனாதான்.

- சீனாவுடனான இலங்கையின் நட்பு திரிகோணமலை துறைமுகத்தைமையமாக வைத்துதான் உள்ளது. ஈழம் அமைந்தால பூகோள ரீதியாக தென்னிலங்கையை விட ஈழம்தான் சீன அரசுக்கு சாதகமாக இருக்கும். ஆக தமிழர்களின் நட்பு சீனாவுக்கு சாதகமாக இருக்கும்.

- இந்தியாவின் பலவீனத்தை எப்படி சிங்களர்கள் தமக்கு பலமாக பயன்படுத்துகிறார்களோ அதே போல் தமிழர்களாகிய நாமும் சீனாவுடன் நட்பை பேண வேண்டும் (தமிழர்களின் இந்த புதிய திருப்பம் சீனாவுக்கு வயிற்றில் பாலையும், இலங்கை, இந்திய, மேற்குலக நாடுகளுக்கு புளியையும் கரைக்கும்).

- இந்தியாவின் ஒரே பயம் சீனாதான். இந்தியாவின் இறையாண்மை எப்படி ஈழத்தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் பாதகமாக இருந்ததோ அதே இந்தியாவின் இறையாண்மையை, பாதுகாப்பை சீனாவிடம் அடகு வைப்பதன் மூலம்தான் நமக்கு அமைதி கிடைக்கும், ஈழம் கிடைக்கும்.

- தமிழர்கள் சீனா பக்கம் போகப் போகிறார்கள் என்றால் இந்திய அரசு பதறியடித்துக் கொண்டு ஓடி வரும் (எங்கே ஈழமும், அதை தொடர்ந்து தமிழ்நாடும் சீனா பக்கம் போய் விடப் போகிறதோ என்று).

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ராஜீவ் காலத்தில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இந்தியா மத்தியஸ்தம் செய்தது (குழப்பியது). இப்போது அந்த வேலையை சீனாவிடம் கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம். சீனா இரட்டை வேடம் போட்டாலும் அல்லது தமிழர்களுக்கு உதவிகள் செய்தாலும் எப்படி பார்த்தாலும் இந்தியாவை ஒரு வழிக்கு கொண்டு வரவும், போராட்டம் தீவிரமடையவும் கண்டிப்பாக

உதவும்.

முட்டள் வட இந்தியனை விட, ஜே.ஆரிடம் ஏமாந்த முட்டாள் ராஜீவை விட, பாரில் டான்ஸ் ஆடிய சோனியாவை விட, நாராயணன்களை விட, கருநாக கருணாவை விட, நதிகளை இணைக்க வேண்டாம் என்று சொல்லிய ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள் ராகுலை விட சீனாக்காரன் எவ்வளவோ மேல்.

- தமிழகத்திலிருந்து அதிபதி

நன்றி: நாம் தமிழர் பேரியக்கம்.

:mellow:இயலாமையால் பிதற்றுவதை இயல்பாக வெளிப்படுத்தும் கட்டுரை..... :mellow:

இல்லை அந்த கட்டுரை உண்மை தான் .. இந்தியா. இலங்கை தமிழன் பலமாக இருந்தால் ஆபத்து எண்டு தான் விடுதலை புலிகளை அழித்தான்....

சுயாட்சி எண்டு சொன்னதும்.. தமிழ்நாட்டில் இருக்கிற மாகாண அதிகாரம் போல் .. ஈழதமிழர்களுக்கு அதிகாரம் கொடுக்காமல் அதை விட குறைவான அதிகாரம் தான் கொடுக்க வேண்டும் எண்டு நோர்வேக்கு சொன்னது நினைவு இல்லையா.. ?

தமிழர்க்கு விடிவு. இந்தியாவை எதிர்க்கும்.. ஒரு பெரிய நாடு. பாகிஸ்தான் எண்டாலும்.. அவனுடன் தமிழன் ஒண்டு சேர்ந்தால். விடிவு. இல்லாவிட்டால்..

அகதிமுகாமை. கொஞசம் விரிவாக்கி.. நிரந்தரமாகிடுவார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

பூனைக்கு மணி கட்டுவது யார்? :mellow:

பூனைக்கு மணி கட்டுவது யார்? :mellow:

பூனைக்கு மட்டுமல்ல, எலிக்குக் கூட ஒருவரும் மணி கட்ட முடியாது. காரணம் இந்தியாவிற்கு எதிரிகள் என்றால், நமக்கு அவர்கள் நண்பர்கள் என்று இங்கு சிலர் கனவு காணுகின்றார்கள். அப்படி எவரை நாம் நண்பர்களாக்கினோம் இதுவரை ?? இன்று உலகிலுள்ள பல நாடுகள் சிங்கள அரசை நம்புவதில், சிறு துளி நம்பிக்கையைக் கூட இலங்கைத் தமிழ் மக்களில் வைக்கத் தயாரில்லை என்பதே வேதனையான உண்மை. இன்னமும் போலித்தனமாக கதையளந்து, மிகுதியிருக்கும் அந்த மக்களின் வாழ்வுகளையும் சீரழிக்காமல், என்று உண்மையாக சிந்திக்கத் தொடங்குகின்றோமோ, அன்று தான் நாமும் மற்றையவர்களின் நம்பிக்கையையும் பெற்று எம்மக்களுக்கும் விடிவு கிடைக்கும்.

Edited by Vasampu

இந்தியாவிற்கு எதிரிகள் என்றால், நமக்கு அவர்கள் நண்பர்கள் என்று இங்கு சிலர் கனவு காணுகின்றார்கள். அப்படி எவரை நாம் நண்பர்களாக்கினோம் இதுவரை ?? இன்று உலகிலுள்ள பல நாடுகள் சிங்கள அரசை நம்புவதில், சிறு துளி நம்பிக்கையைக் கூட இலங்கைத் தமிழ் மக்களில் வைக்கத் தயாரில்லை என்பதே வேதனையான உண்மை.

மிகவும் உண்மை...

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள் ஒன்றில் மிகத் தெளிவாக உள்ளன. சிங்களவனை நம்பினால் ஏதாவது குடுப்பான். உதாரணமாக, சீனாவுக்கு அபிவிருத்தி எண்ட பேரில ஒரு இடம். இந்தியாவுக்கு மருத்துவம், கண்ணிவெடி அகற்றல். அமெரிக்காவுக்கு ஒலிபரப்பு போன்றவை. இன்னும் வெளியில தெரியாதது எத்தனையோ?

ஆனால் தமிழனால் இந்த நாடுகளுக்கு என்ன நன்மை? ஒன்றுமில்லை. காரணம் எங்களிடம் ஆட்சி அதிகாரம் இல்லை.

இந்தத் தமிழ்நாட்டுத் தமிழனாவது தன்னுடைய செல்வாக்கைப்(?) பயன்படுத்துவான் என்று பார்த்தால் அங்கேயும் பூச்சியம்.

நாம் என்னதான் கத்திக் குழறினாலும், சீனா, இந்தியா இந்த இரண்டில் ஏதாவது ஒன்று பாதை மாறாத வரையில், சிங்களவன் சொல்வது மட்டுமே வேத மந்திரம்.

உலக நாடுகள் ஒன்றில் மிகத் தெளிவாக உள்ளன. சிங்களவனை நம்பினால் ஏதாவது குடுப்பான். உதாரணமாக, சீனாவுக்கு அபிவிருத்தி எண்ட பேரில ஒரு இடம். இந்தியாவுக்கு மருத்துவம், கண்ணிவெடி அகற்றல். அமெரிக்காவுக்கு ஒலிபரப்பு போன்றவை. இன்னும் வெளியில தெரியாதது எத்தனையோ?

ஆனால் தமிழனால் இந்த நாடுகளுக்கு என்ன நன்மை? ஒன்றுமில்லை. காரணம் எங்களிடம் ஆட்சி அதிகாரம் இல்லை.

நம்மை நாமே தேற்றிக் கொள்வது போல் சமாளிப்புப் பதில் தந்துள்ளீர்கள். இன்று பாலஸ்தீனம் உட்பட போராடி வருபவர்களெல்லாம் எதைக் கொடுத்து ஆதரவைப் பெறுகின்றனர். இன்றுவரை நாம் எவரையும் உறுதியாக நம்பியதுமில்லை, மற்றவர்களுக்கு நம்பிக்கையுடயவர்களாக நாங்கள் நடந்து கொண்டதுமில்லை. எமது தவறுகளை நாம் திருத்தாதவரை கானல்நீர் போல வெறும் ஏட்டுச்சுரக்காய் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் எழுதி அப்பப்போ புளங்காகிதம் அடைந்து கொள்ள வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மை நாமே தேற்றிக் கொள்வது போல் சமாளிப்புப் பதில் தந்துள்ளீர்கள். இன்று பாலஸ்தீனம் உட்பட போராடி வருபவர்களெல்லாம் எதைக் கொடுத்து ஆதரவைப் பெறுகின்றனர். இன்றுவரை நாம் எவரையும் உறுதியாக நம்பியதுமில்லை, மற்றவர்களுக்கு நம்பிக்கையுடயவர்களாக நாங்கள் நடந்து கொண்டதுமில்லை. எமது தவறுகளை நாம் திருத்தாதவரை கானல்நீர் போல வெறும் ஏட்டுச்சுரக்காய் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் எழுதி அப்பப்போ புளங்காகிதம் அடைந்து கொள்ள வேண்டியது தான்.

நான் சமாளிக்கவில்லை வசம்பு. இப்போதைய நிலையைத்தான் எடுத்துச் சொன்னேன். பலஸ்தீனர்களுக்கு என்று ஒரு அரசியல் இருக்கிறது என்றால் அரபு / இஸ்லாம் இணைந்த ஆழமான அரசியலைச் சொல்லலாம். தமிழன் இந்து என்று சொல்லி இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது. வட இந்தியன் தமிழ்நாட்டவர்களையே இந்துவாக மதித்து மரியாதை கொடுப்பதில்லை.

காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் நாம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தும் ஆயுதப்போராட்டம் தொடங்கும் வரையிலும்கூட பலமற்ற நிலையிலேயே இருந்தோம் என்பது கண்கூடு.

காரணங்கள் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் நாம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தும் ஆயுதப்போராட்டம் தொடங்கும் வரையிலும்கூட பலமற்ற நிலையிலேயே இருந்தோம் என்பது கண்கூடு.

அன்று தொடங்கிய சுயநல அரசியலைத் தான் நாம் இன்றும் செய்கின்றோமென்பதே உண்மை. எமக்காக எல்லாரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நாம் எவருக்காகவும் குரல் கொடுக்கத் தயாரில்லை. எவர் எக்கேடுகெட்டாலும் பறுவாயில்லை, எமது வாழ்வு மட்டும் தான் எமக்கு முக்கியம். எம்மை அடுத்தவர்கள் நேசிக்க வேண்டுமெனில், முதலில் அவர்களை நாம் நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

Edited by Vasampu

ம்ம்ம். எல்லா உலக நாடுகளூமே.. சுயநலமாக தான் உள்ளன...தமிழன் மட்டும் விதிவிலக்கா என்ன..? . மற்ற நாடுகளில்.. உள்ள மக்கள்.. தாய் நாடு எண்டு வரும் போது எல்லோரும் ஒற்றுமையாக உளார்கள்..

தமிழன் ஜாதி. மதம். மொழி.. இனம்.. மாகாணம். மாவட்டம்.. மேற்கு. வடக்கு. கிழக்கு. தெற்கு.. கடைசியில்.. என்னோட தெரு.. உன்னோட தெரு எண்டு பிரியாமல் இருக்க கடவுள் அருள் புரிவாராக....

பூனைக்கு மணி. கட்டுறதுக்கு முன்னாடி.. மேல சொன்ன எல்லாதையும் மாலையாக முதலில் கோர்க்க வேண்டும்..

அப்படி ஒரணியில் எல்லோரும் சேரும் போது எல்லாம் தானாகவே நடக்கும்..

இத்தலைப்புகளே, எமது அரசியல் வெறுமையை காட்டுகிறது. வேறொன்றுமில்லை.

நாங்கள் எங்களுக்குள் முதலில் ஒரு தெளிவான முடிவிற்கு வர வேண்டும்.இலங்கையில் தமிழனுக்கு என்ன தீர்வு சரியானதும்,சாத்தியமானதும் என்று.பின்னர் அதை எப்படி அடையவேண்டும் என்று ஒரு வேலைத்திட்டத்தை த‌யாரித்து, பெரும்பான்மை தமிழனின் ஆதரவைப் பெற்று அதை முடிந்தமட்டும் நடைமுறைப்படுத்த சர்வதேசத்தின் ஆதர‌‌வைப் பெறவேண்டும்.நியாயமானதும்,ஏற்கக்கூடிய‌துமாக இருந்தால் முடிந்த வரை இந்தியா உட்பட பல நாடுகளின் ஆதரவை கட்டாயம் பெறலாம்.நான் ஏதோ கதை சொல்வது போல் பலருக்கு இருக்கலாம்.ஏனெனில் இதுவரை உண்மையில் நடந்தது பலருக்கு தெரியாது.எங்களை ஒருவன் கோவிக்கின்றான் என்றால் சும்மா கோவிக்க மாட்டான்.நாங்கள் சிங்களவனை பழி வாங்க வெளிக்கிட்டமேயே ஒழிய, ஒரு நாடு அல்லது தீர்வு கிடைக்க வேண்டியதற்கான போராட்டம் நடாத்தவில்லை.30 வருடம் கனவில் கடந்து விட்டது.கண் முழிக்க முத‌லேயெ அடுத்த கனவு தொடங்கிவிட்டது.தமிழன் எப்போது தன் நிலை உணர்கின்றானோ அன்றுதான் விடுதலை.

அப்படி ஒரு நிலை வரும் என்பதில் கூட‌ எனக்கு ஒரு பயம் இப்போது ரொம்ப ஏற்பட்டு விட்டது.காரண‌ம் தன்னைத் தானே ஏமாற்றுவதிலேயும் அவன் இப்போது வாழப் பழகிக்கொண்டான்.(குறிப்பாக புலம் பெயர் தமிழன்.) பலர் கோவிக்கக் கூடும்.ஆனால் நாங்கள் இங்கிருந்து செய்த பல செயல்கள் தான் இவ்வளவு அழிவிற்கும் காரணம்.பொய்,புரட்டு,சுயந‌லம் உள்ளவர்களை அடையாளம் காணாமல் விட்டதும்,பணம் தருகின்றார்கள் என்று சமூக விரோதிகளை முன்னிலைப்படுத்தியதும் பெரும் காரணம்.

அதை விடுத்து இந்தியாவா,சீனாவா,பாகிஸ்தானா,அமெரிக்காவா எம் நண்பர்கள் என்று ஆராய்வதை விட நாம் மாறாத வரை அனைவரும் எமது எதிரிதான் என்பதை மறந்துவிடாதீர்க்கள்

இன்னும் ஆயிரம் வருசம் போனாலும் நாம கொரங்குகள் தானுங்கோ....... :mellow:

நாங்கள் எங்களுக்குள் முதலில் ஒரு தெளிவான முடிவிற்கு வர வேண்டும்.................................

இந்தா தொடங்கிட்டாங்கள் பிளேடு போட.....

இன்னும் ஆயிரம் வருசம் போனாலும் நாம கொரங்குகள் தானுங்கோ....... :mellow:

நீங்கள் தென்னிந்தியர் எண்றால் அதை வான்மீகி காலத்திலேயே கண்டு பிடிச்சிட்டாங்கள்.... இலங்கையன் எண்டால் பயங்கரமானவன் எண்டும் எல்லே சொல்லி இருக்கினம்...

நீங்க அளிஞ்சா தீபாவளி...

அது சரி நீங்கள் இராவணன் வம்சமா.?? இல்லை சுக்கிரீவன் (காட்டி கொடுத்த அடிமை குரங்குகலின் தலைவன் வளி) இல்லை வாலி குரங்கா...??

நீங்கள் தென்னிந்தியர் எண்றால் அதை வான்மீகி காலத்திலேயே கண்டு பிடிச்சிட்டாங்கள்.... இலங்கையன் எண்டால் பயங்கரமானவன் எண்டும் எல்லே சொல்லி இருக்கினம்...

நீங்க அளிஞ்சா தீபாவளி...

அது சரி நீங்கள் இராவணன் வம்சமா.?? இல்லை சுக்கிரீவன் (காட்டி கொடுத்த அடிமை குரங்குகலின் தலைவன் வளி) இல்லை வாலி குரங்கா...??

நாம பயங்கரமான குரங்காக்கும்...... :mellow:

  • தொடங்கியவர்

இத்தலைப்புகளே, எமது அரசியல் வெறுமையை காட்டுகிறது. வேறொன்றுமில்லை.

உங்கள் அரசியலை சொல்லுங்கள் ஐயா!!!

இந்தியாக்காரரை இன்னுமா நம்புவது..நாமும் நண்பர்களை அதிகரிக்க வேண்டும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் ஜாதி.. மதம்.. மொழி.. இனம்.. மாகாணம்.. மாவட்டம்.. மேற்கு.. வடக்கு.. கிழக்கு.. தெற்கு.. கடைசியில்.. என்னோட தெரு.. உன்னோட தெரு எண்டு பிரியாமல் இருக்க கடவுள் அருள் புரிவாராக....

ஒரு தெருவில எத்தினை வீடு இருக்கும்.... அதை விட்டுட்டியளே.... :lol:

"

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது"

இந்த வாய்க்கியம் மிகவும் உண்மை. ஆனால் " இருக்கிற நண்பர்கள்" யார் ? என்பதுதான் தெளிவின்மையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எப்போலும் ஒரே அச்சில் சுழல்வதில்லை மாறியும் சுழரும்.

இந்தியாக்காரரை இன்னுமா நம்புவது..நாமும் நண்பர்களை அதிகரிக்க வேண்டும்...

உண்மையாகவே நண்பர்களைச் சேர்க்க நினைத்திருந்தால் என்றோ அது நடந்திருக்கும். ஆனால் உங்களைப் போன்றவர்கள் நினைப்பது சந்தர்ப்பத்திற்கேற்றவாறு காரிய நட்பை. சந்தர்ப்பவாத நட்புகள் என்றும் காலை வாரும் நட்புகளாகத்தான் இருக்கும். :lol::blink:

"புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது"

இந்த வாய்க்கியம் மிகவும் உண்மை. ஆனால் " இருக்கிற நண்பர்கள்" யார் ? என்பதுதான் தெளிவின்மையாக இருக்கிறது.

நண்பர்களுக்கு நாம் நம்பிக்கையானவர்களாக இருந்தால், "இருக்கின்ற நண்பர்கள் யார்" என்பதும் எமக்குத் தெளிவாகத் தெரியும்.

குரங்குகளுடன் நன்பர்களக இருக்க யார் விரும்புவார்கள்..

நாம் முதலில் மாற வேண்டும்.. அதற்க்கு பரிணம வளர்ச்சி அடையவேண்டும்... அதற்க்கு மில்லியன் கணக்கான வருசம் பிடிக்கும்...

மண்ணாங்கட்டி! நீங்களும் உங்கட வியாக்கியானங்களும்....

குரங்குகளுடன் நன்பர்களக இருக்க யார் விரும்புவார்கள்..

நாம் முதலில் மாற வேண்டும்.. அதற்க்கு பரிணம வளர்ச்சி அடையவேண்டும்... அதற்க்கு மில்லியன் கணக்கான வருசம் பிடிக்கும்...

:lol:இப்படி சிந்திக்க ஆரம்பித்திருப்பதே பரிணாம வளர்ச்சி தானே........ :blink:

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக நண்பர்களை சேர்ப்பதைவிட இருக்கின்ற நண்பர்களை எதிரிகளாக்காமல் பார்த்துக் கொள்வதே மேலானது

இதெல்லாம் எழுத்தில் எழுதமட்டும்தான்

உலக ஒழுங்கில் இன்று நிரந்தர நண்பனுமில்லை

எதிரியுமில்லை

எவன் எவன்

எதற்காக

எந்த நேரத்தில்

எவருக்காக

என்ன வடிவில் எதிரியாக மாறுகின்றான் மாறுவான் என்று இன்று கணிப்பேன் என்று எவராவது சொல்லமுடியுமா?

அப்படி சொல்பவர் அடி முட்டாளாகத்தான் இருக்கமுடியும்

இல்லையென்றால்

எல்லாரிடமும் அடிவாங்கும் அடி மாடாகத்தான் இருக்கமுடியுமே தவிர....

தமக்கென்று கொள்கையுள்ளவராகவோ

தமக்கென்று ஏதாவது ஒன்றை சொந்தம் கொண்டாடுபவராகவோ இருக்க வாய்ப்பில்லை

இது நாடாக இருக்கலாம்

வீடாக இருக்கலாம்

மனைவியாக இருக்கலாம்

ஏன் பிள்ளையாக கூட இருக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.