Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தலைவிதியைத் தீர்மானித்த தலைமைச் சக்திக்கு எதிராய் சுவிசில் சதி? உலகத் தமிழினமே விழித்து எழு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர் கொடுத்துப் போராடிய உத்தமரை கலந்தாலோசிக்காத எந்த முடிவும் தமிழருக்கு தீர்வாகாது

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படுவதாகத் தெரிவிக்கும் செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன.

இதில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலிருந்து தமிழ்த் தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் பெருங்கூட்டமாக சூரிச்சுக்குப் படை எடுத்திருக்கின்றார்கள்.

இந்தக் கூட்டம் அல்லது இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படும் விதமும், அது தொடர்பான ஏற்பாடுகளும் இலங்கையிலும் புலம் பெயர்ந்த தேசங்களிலும் ஊடக வியலாளர்கள், ஆய்வாளர்கள், அவதானிகள் மட்டத்தில் பலத்த சலசலப்பையும், சந்தேகங்களையும் எழுப்பி நிற்பது உண்மை.

இத்துணை தரப்புகளை சத்தம் சந்தடியின்றி ஓரிடத்தில் கூடவைக்கும் ஏற்பாட்டாளர்கள், இதுபற்றி ஊடகங்களுக்கு மூச்சுக்கூட விடாமல், அமானுஷ்ய அதீத மௌனம் காப்பது ஏன் என்ற வினா இயல்பாகவே எழுகின்றது.

முரண்பட்ட திசைகளிலே முட்டுப்பட்டு, மோதிக் கிடக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்களை, ஆரவாரமே காட்டாமல் ஒரு மூடிய அறைக்குள் கொண்டுவந்து சேர்க்கும் ஓர் அமைப்பின் முயற்சியும் அதில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய தரப்புகளின் பலமும் குறைத்து மதிப்பிடக்கூடியவையல்ல.

ஆனால் இந்தக் கலந்துரையாடல், அதற்கான ஏற்பாடுகள், முன்நடவடிக்கைகள் குறித்தெல்லாம் அளவுக்கு அதிகமான மௌனம் காக்கப்படுவது ஏன்?

இப்படி தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அதுவும் இன்றைய மிக நெருக்கடியான வேளையில் ஒன்றுகூடி, தமக்குள் கலந்துரையாடி ஓர் இலக்கை எட்டுவது என்பது உலகத் தமிழினமே கூர்ந்து உற்று நோக்கி கவனிக்க வேண்டிய விடயம்.

ஆனால், ஊடகவியலாளர்களையே நெருங்க விடாமல் இத்தகைய கலந்துரையாடலை, மிக இறுக்கமான சுவர்களுக்குப் பின்னால் மூடிய வேலிக்குள் நடத்துவது ஏன்?

இவை யெல்லாம் இயல்பாகவே சந்தேகத்தைக் கிளப்புகின்றன.

உண்மையில், நெருக்கடி மிக்க இலங்கை அரசியலில் தமிழ், முஸ்லிம் மக்கள் தரப்பில் ஒன்றிணைந்த அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே அவர்களுக்கு ஏதேனும் மீட்சியை ஈட்டிக் கொடுக்கமுடியும் என்ற நன்நோக்கத்திற்காக இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்குமானால் ஏற்பாடுகள் நடந்திருக்குமானால் இத்தகைய அதீத,அளவுக்கு மீறிய கட்டுக்கோப்பு வேலி அத்தியாவசியமற்றதாகும்.

அது மாத்திரமல்ல, தமிழர்கள் தமக்குள்ளும், அதே சமயம் முஸ்லிம்களுடன் சேர்ந்தும் ஒன்றுபட்டு அரசியல் சவால்களை சந்திப்பதற்கான தளத்தை உருவாக்கும் நோக்கோடுதான் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுமானால், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இன்னொரு பிரதான தரப்பு ஏன் புறந்தள்ளப்பட்டது என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

நடப்பதை நடந்தவாறே உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்தித் தெரியப்படுத்துவது மட்டும்தான் ஊடகங்களின் பணி என்ற நிலைமையைத் தாண்டியதாக இன்று தமிழ் ஊடகவியல் தரப்பின் எல்லை விரிந்து, பரந்து கிடக்கின்றது.

தமிழர் அரசியலில் கருத்துருவாக்கிகளாக பிரதான கருத்துருவாக்கிகளாக இன்று ஊடகங்களும், ஊடகவியலாளர்களுமே முன்னிலை வகிக்கும் நிலைமை உள்ளது. இதன் காரணமாகவே தமிழின அடக்குமுறை நடவடிக்கைகளின் பிரதான அங்கமாக ஊடக அடக்குமுறையும் இலங்கைத்தீவில் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் காரணமாகவே அரசியல்வாதிகளுக்கு நிகராக இப்போது வரை ஊடகவியலாளர்களும் இழப்புகளை பாதிப்புகளை இங்கு சந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

ஊடகவியலாளர்களையும், ஊடகத்துறையையும் புறந்தள்ளி விட்டு, அரசியல்வாதிகள் மட்டத்தில் ஒத்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பது நான்கு சக்கர வாகனத்தை மூன்று சக்கரத்தில் நகர்த்தும் எத்தனமாகவே படுகின்றது.

இன்றைய களநிலைமையில் ஊடகங்களைப் புறம்தள்ளி வைத்துவிட்டு, அரசியல் தலைமைகளிடையே ஒத்த கருத்தை உருவாக்க முடியும் என்பது இந்தக் கலந்துரையாடலின் ஏற்பாட்டாளர்களின் நப்பாசையாக இருந்தால் அது புத்திசாதுரியமற்றதாகவே அமையும் என்பதை சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

இந்தக் கலந்துரையாடலுக்கு, பெரும் பணச் செலவில் அழைக்கப்பட்ட சில அரசியல்வாதிகளை விடவும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் செல்வாக்கும், ஆதரவும், வரவேற்பும், வழிகாட்டும் தகைமையும் பெற்ற ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் இருக்கின்றமையை மறைத்து விடமுடியாது.

இதேவேளை, 1985 இல் பல்வேறு தமிழ் போராட்ட இயக்கங்களும், கட்சிகளும் திம்புவுக்குக் கூட்டிச் செல்லப் பட்டமை போன்ற தோற்றத்தை இப்போது சூரிச் கலந்துரையாடல் முன்நகர்வும் காட்டி நிற்கின்றது திம்பு ஏற்பாட்டுக்கு இந்திய அதிகார வர்க்கம் பின்புலத்தில் இருந்தது. இப்போது சூரிச் ஏற்பாட்டுக்கு வெளியே தெரியாமல் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய சர்வதேச சக்தி எது?

ஊடகத் தரப்பினைப் புறக்கணித்து உதாசீனம் செய்து ஓரங்கட்டி இந்தக் கலந்துரையாடலை வெற்றிகரமாக நடத்தி விட்டால், பின்புலத்தில் உள்ள அரூபக் கரங்களை மறைத்து விடலாம் என சம்பந்தப்பட்டோர் எண்ணுவார்களேயானால் அது வேடிக்கையன்றி வேறில்லை. எல்லா விடயங்களையும் எல்லாக் காலத்திலும் மூடி மறைத்து விடமுடியாது என்பதுதான் உண்மை.

பின்னிணைப்பு

விடுதலையை விலைபேசி விற்று விட்டு மகிந்தாவின் கோவணத்துக்காக தமிழர் தலைவிதியை வியாபாரமாக்கத் துணிந்து செயற்பட சூரிச்சில் ஒன்றுகூடும் கனவான்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி,

ஈ.பி.டி.பியின் டக்ளஸ் தேவானந்தா,

"புளொட்" தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,

ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) தலைவர் ஸ்ரீதரன் (சுகு).

சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்),

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., செயலாளர் நாயகம் ஹஸனலி எம்.பி.,

அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், அதாவுல்லா

இவர்களுடன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன்

தமிழீழ விடுதலைப்போராட்டம் ஆரம்பமான நாள் முதல் இன்றுவரை தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு பின்புலத் தளமாக இருந்து செயற்பட்டு வரும் லண்டன் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் "தமிழர் தகவல் மையம்" என்ற தமிழ் விரோத அமைப்பே இந்தக் கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருக்கின்றது.

தொடர்புபட்ட செய்தி

கையாலாகாத்தனங்களுக்கும் வரலாறு தான் தீர்ப்பெழுதும்........

இன்று ஊடகங்கள் ஆனாலும் சரி சில தமிழர்களானாலும் சரி பத்தி பகுத்தறிவு இராணுவப்புலனாய்வு ஆய்வாளர்களானாலும் சரி விடுதலைப்புலிகளின் தலைமையை “யார் இந்த புலித்தலைமை” என்று விழிப்பதை அவதானிக்க முடிகின்றது. எனவே எந்த இலட்சியமோ கொள்கையோ இல்லா ஊடகங்குக்கும் அதன் மேதிலிகளுக்கும் “நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்” என்று அடம்பிடிக்கும் தமிழர்களுக்கும் ஒரு விளக்கம்? ஒன்றே ஒன்று தான்

தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தமிழர்தாயக,தேசிய,சுயநிர்ணய உரிமையை தீர்மானிக்கும் தகமையுள்ள ஓரே தலைமை ஒட்டுமொத்த தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழத் தேசியத்தலைமைதான் மேற்சொன்ன கேள்விக்கான பதிலாகும்!

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியான பின்னடைவை அல்லது இழப்பை சந்தித்துள்ளார்கள் என்பதற்காக,போர்க்களத்தின் இறுதிக்கால ஒருசில துன்பியல் சம்பவங்களை மேற்கோள்களாகக் கொண்டு 37 வருடகால விடுதலைப்புலிகளின் தியாகத்தை அர்பணிப்புக்களை உன்னதமான உயிர் தியாகங்களை நம்பிக்கையுடன் நடந்துவந்த இலட்சியப் பயணத்தில் உழைத்தவர்களை கொச்சைப்படுத்துவதற்கும் விமர்சிப்பதற்கும் கேலி செய்வதற்கும் எவருக்கும் உரிமை இல்லை என்பதை மேற்சொன்னவர்கள் அறிதலும் புரிதலும் அவசியமாகின்றது அத்துடன் இராணுவ பலம் சிதைக்கப்பட்டது என்பதற்காக புலிகள் அரசியல் இராஜதந்திர பலம் இல்லாதவர்கள் என்கின்ற முடிவும் தவறானதாகும்

தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும் உண்மைகளை ஆதார பூர்வமாக எடுத்து சொல்வதற்கும் எல்லோருக்கும் உரிமையுண்டு என்பதை கொள்கையாக ஏற்றுக்கொண்டவர்கள் புலிகள் என்பதையும் இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் . காரணம் தமிழீழ தேசியத்தின் தலைமை மீது எம் மக்களுக்கு இன்றும் இருக்கும் அசையாத நம்பிக்கையின் அடிப்படையில் பயணித்தலே மிகமுக்கியமானதாகும்.

அதாவது வரலாற்றின் நல்ல பக்கங்கள் அனைத்தையும் கழுவித்துடைத்து விட்டு வரலாற்றில் எங்கெல்லாம் வடு இருக்கின்றதோ,வரலாற்றில் எங்கெல்லாம் சில தவறுகள் இடம் பெற்றுள்ளதோ அவற்றை மட்டும் தம் மடியில் கட்டிக்கொண்டு அலைகின்றது சில “முற்போக்கு சிந்தினையாளர்கள் வட்டம்”

இதுஈழத்தமிழருக்கு மட்டுமல்லஅவர்களுக்கும்அரோக்கியமானதல்லஎன்பதை உணர்ச்சிவசப்படும் அவர்களால் உணரமுடியாது. நாளும் பொழுதும் இந்த இனத்தின் விடுதலைக்காய் போராடி வீழ்ந்த 35000க்கு மேற்ப்பட்ட போராளிகளின் கல்லறைகள் மீது இவர்கள் கறைபூசாத குறை!

அந்த போராளிகள் எந்த தலைமை நேசித்தார்களோ,அவர்கள் எந்த தலைமையால் வளர்க்கப்பட்டார்களோ அவர்களை புறந்தள்ளும் இந்த வட்டத்தினால் அதிகபட்சம் சாதிக்கக்கூடியது புலிகளை இன்றும் விமர்ச்சிப்பது என்ற பெயரில் தங்களை தாங்களே விமர்சிப்பது. தங்களுக்கான இருப்பை நிலைநிறுத்துவது.

புலிகளின் தலைமையை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் நான் மாற்றுக்கருத்து என்ற வட்டத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை,இவர்களின் மாற்றமில்லா கருத்துக்களை ஏற்க்கொள்ள முடியாத படி அவர்களின் செயல்கள் இருப்பதை உணர்கின்றேன் .

இன்றும் தலைமைச் சண்டைக்கு இவர்கள் தயார்?எனினும் தடை முகாம்களில் இருக்கும் மக்களை பற்றிய கரிசனை அரிதாகவே இவர்கள் மனதில் படமாகின்றது. முகாம்களில் குடிநீரே இல்லாத போதும் அங்கு ஒழுங்காக உணவு கிடைக்கின்றது,அது கிடைக்கின்றது இது கிடைக்கின்றது என்று தமது வாய்க்கு வந்த படி பேசக் கூடியவர்களாக இவர்கள் வந்து விட்டார்கள். ஒரு தலைமையின் கீழ் ஒன்று பட முடியாதவர்கள் மாற்றுக்கருத்து என்ற பெயரில் எம் மானத்தையும் தமது தன்மானத்தை இழிவுபடுத்தும் செயல் வருந்தத்தக்கது.

கால ஓட்டத்தில் இன்று அனைவரும் புலித்தலைமை என்று விழிக்கும் நிலைக்கு வந்திருப்பதும் அதனிலும் வருத்த தக்கது. புலித்தலைமை என்று இவர்கள் கூறும் போது “இது எங்கோ கேட்ட குரல் என்று புரிகின்றது” அதே குரல்கள் இன்று புலத்தில் ஒலிப்பது ஆரோக்கியமானதல்ல. தமிழீழத்தேசியத்தலைமை ஒன்றை தவிர புலித்தலைமை என்ற ஒன்றை நாம் அறியவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் மூண்டதமிழின அழிப்பு தமிழ்த்தேசியம் மீதான கறையாகவே பலரும் கருதுகின்றனர்

முட்டாள் தனமான சிந்தனைகள்,முடிவெடுக்கமுடியாது புலம் தேடி ஓடி வந்தவர்களின் இயலாமை எல்லாம் புலிகள் என்ற தமிழீழத்தேசியதலைமை மீதான கோபமாக மாறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவை ஆதரிக்கும் இவர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இந்தியாவில் காலில் விழ்ந்து மடிப்பிச்சை கேட்க வேண்டும்? என்று கோருகின்றனரே தவிர தமிழீழ விடுதலைப்போரில் நாம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒன்றுபட்ட தமிழினமாய் கைகோர்த்து செயலாற்ற இவர்கள் எப்போதுமே தயாராய் இருந்ததில்லை.

ஒரு நெருக்கடியான பின்னடைவை ஈழப்போர் சந்தித்த பின்னரும்,ஒரு தற்காலிகத் தோல்வியை ஏற்று மக்களைக் காப்பாற்ற ஈழத்தமிழினத்துக்கு யோசனை கூறுவதை, அதற்கான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் அளிப்பதை உணர்வுகளை கட்டுப்படுத்தி கொம்புசீவி விட எத்தணிப்பதையும் நாம் மறந்துவிட முடியாது?

புலிகளின் வீரவரலாறு,புலிகளின் போராட்டவரலாறு இவையிரண்டுக்கும் இடையேதான் தமிழரின் உண்மையான வரலாறு இருக்க முடியும். ஆயிரக்கணக்கான கருவறைகளைச் சுமக்கும் அந்த மாவீரர் கல்லறைகளில் துயிலும் தியாகிகள் அனைவரையும் ‘துரோகிகள்’ என யாராலும் அடையாளப்படுத்திவிட முடியாது.

ஒரு விடுதலை இயக்கத்தின் போர்க்கள தவறுகள் ஒரு போராட்டத்தின் நியாயத்தை முடக்கிவிட முடியாது. பயங்கரமான ஒரு யுத்தத்தில் நிற்கவேண்டி வந்த படையணிகளை,மனித பேரவலம் என்கின்ற மதிப்பீடுகளின் இறுகிய பிடிக்குள் அடக்கி தாயக விடுதலை என்ற இலட்சிய பயணத்துக்காய் போர்முனை சென்ற சூரியப் புதல்வர்களை வெறும் ‘பயங்கரவாதிகள்’ எனப் புறந்தள்ளிவிட முடியாது.

பிராந்திய நலன்,நாடுகளுக்கிடையிலான இராணுவ பொருளாதார உறவுகள் என கட்டமைக்கப்பட்டிருக்கும் இவ்வுலகைப் புரட்டிப்போடும் பெருங்கனவொன்றுக்கான நியாயங்கள் உள்ளவரை சுயநலமற்றவர்களாய்ப் புரட்சிகர இயக்கங்களில் அணி சேரும் இளைஞர்களின் தியாகங்களுக்கான தேவைகளும் நியாயங்களும் தொடர்ந்து இருந்துவரும்,அதே நேரத்தில் எந்தவொரு நியாயத்தின் பெயராலும் ஒரு சர்வாதிகாரத்தைக் கட்டமைக்க,ஒடுக்கு முறையைக் கட்டவிழ்த்துவிட யாருக்கும் உரிமையில்லை.

காணாமல் போனவர்களின் நிலையைக் கண்டறிவதில் சட்டப்படியும் நியாயப்படியும்,அக்கறை காட்டாத சிங்களப் பேரினவாத அரசின் சட்டங்களும் நீதிமன்றங்களும் இன்றைய வன்னி முகாங்களில் சிறைபட்டும் வதைபட்டும் கிடக்கும் எம் மக்களை போன்றவர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் சொல்லப்போவதில்லை. சிறைச்சுவர்களின் பின்னால் நீளும் அந்த இருள்வெளியில் நிகழக்கூடிய அபாயங்கள் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் உள்ள சிங்கள இன வெறியர்களுக்கான கொண்டாட்டங்களாக மாறியிருப்பது நிலைமையை மிகப் பயங்கரமானதாக்கியிருக்கிறது.

மாற்றுக்கருத்துடையவர்கள் என்போரின்,மற்றும் உண்மையான மாற்றம் மிக்க தமிழீழத்தலைமைத்துவத்தை ஏற்க முடியாத அவர்களது,விட்டுக்கொடுத்து இனத்தின் வாழ்வு தொடர்பாக சிந்திக்க முடியாத மனது! விபரீதமானதுதான் இப்போதும் இவர்கள் தம்மினத்தை விட தமிழீழத்தேசிய தலைமை மீதான தமது வசைபாடல்களை தொடர்ந்து செய்வதால் இவர்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள் என்பது திண்ணம். தேசியப் போராட்டத்தை முன்னெடுத்து மக்களுக்கான விடிவை ஏற்ப்படுத்த வேண்டியவர்கள், தாம் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல் மற்றவர்களை கேள்வி கேட்பது மடமை!

37 வருடம் இந்த ஆயுதப்போராட்டம் இலக்கை அடையாமல் தொடர்ந்தது என்றால் அதற்கு ஒற்றுமைப்படாத எமது இனம் காரணமே அன்றி விடுதலைப்புலிகளோ,அல்லது தேசியத்தலைவரோ அல்ல!

இருந்தாலும்,மீண்டும் இவர்களுக்கான சந்தர்ப்பம் வந்திருக்கின்றது,முயன்று பார்க்கட்டும் சிங்களவன் காலில் வீழ்ந்து கிடக்கட்டும்,இந்தியாவின் செருப்பாகட்டும்,மேடைபேச்சில் மயங்கி,போலித்தனம் பண்ணும் தமிழகத்தலைவர்களை நம்பியே காலத்தை ஓட்டட்டும்.

ஆனால் தமிழகளுக்கான தாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்கின்ற தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இவர்களால் பெற்றுத்தர முடியுமெனில்…

இந்தியாவிற்காக வக்காலத்து வாங்கும் இவர்களால் அவர்கள் காலடியில் தான் நாம் கிடக்க வேண்டும்,என விரும்பும் இவர்களால்,தமிழீழ விடுதலைப்போராட்டம் முன்னோக்கி நகரும் எனில்……

இது இவர்களுக்கான காலம்…? என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்

ஆனால் ஒடுக்குமுறைகள் உள்ளவரை போராட்டம் இருக்கும். நம்முடைய தவறுகளுக்கும் கையாலாகாத்தனங்களுக்கும் வரலாறு தான் தீர்ப்பெழுதும்.......

http://www.infotamil.ch/ta/view.php?22SoCcc3oS34dAYl302EOS4d3YgM0aHdA2e2EMC3a26Aee

எட பாரடா சுவிசல வந்து கூடுகிற அளவுக்கு காலம் வந்திட்டுது.

காலத்துக்கு தேவையான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

காலத்துக்கு தேவையான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்......தீபத்திலயும் சொல்லிச்சு, சுவிசிலயிருந்து பிபிசிக்கு வீணைக்கட்சிக்காரன் செவ்வியும் குடுத்தாராம் எண்டு சொல்லிச்சு உண்மையே?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு போர் என்பது ஒன்றும் புதிதல்ல...............

போரும் தமிழினமும் காலங்களை நோக்கி பின் நகர்ந்தால்....... தமிழ் இங்கே தொடங்கிற்று என்று ஒரு ஆண்டை நிறுவுவோமாக இருந்தால் அதே அண்டிலேயே போரும் இருக்கின்றது. கடந்தகால வரலாறுகளை புரட்டும்போது தெற்காசிய பகுதியை ( அழிந்துபோன தமிழர்வாழ்ந்த தமிழ்தோன்றிய கண்டத்தை விட்டு) கடந்தகாலங்களில் தமிழர்களே ஆண்டுவந்துள்ளார்கள் இவர்களுக்கு அவர்களுக்குள் தமிழ்ரல்லாத எதிரிகளுடன் சண்டைகள் என்பது இஸ்லாமியர்கள் கி.மு 1200 படையெடுக்கு முன்பு இருக்கவில்லை. எல்லா போர்களும் ஏதாவது ஒரு பிரிவை பிளவை கொண்டு பொறிக்கபட்ட அடையாளங்களுடன் மொழி தமிழாக இருந்ததே தவிர வேறுபட்ட பிரிவுகளாக இருந்து ஒன்றுடன் ஒன்று போர்செய்தார்கள். பின்பு படையெடுத்து வந்தவர்கள் ஆட்சிசெய்த காலங்களில் அந்தந்த பகுதிகளில் தமது மொழிகளையும் கலந்து வௌ;வேறு மொழி;களாக பேச்சு வழக்கு ஆரம்பித்து பல மொழி;கள் உருவாயின.

(இந்தியாவைவிட்டு வேளியேற வேண்டியதுதானே இந்திய அரசியலமைப்பு பிடிக்காவிட்டால் என்று இந்திய பாரளுமன்றில் வங்கதேச மந்;திரியை பார்த்து வந்தபோது......... அவரது பதில். அப்படி இந்தியாவை விட்டு வெளியேறுவது என்றால் தமிழர்களை தவிர அனைவரும் வெளியேறவேண்டியதுதான் என்று கூறினார்) உண்மையும் அதுதான்! இமயம்வரை தமிழரின் கொடி பறந்த காலங்கள் என்பது ...... கி.பி உள்ள அண்மை காலங்கள். போர் என்பது தமிழருடன் தொடர்ந்த ஒன்று. இது தமிழர்களுக்கு ஒரு புதிய விடயமில்லை.

ஆனாலும்! இங்கே கவனிக்க பட வேண்டிய விடயம் ஒன்று யாராலும் அதிகம் அலசபடாது இருப்பதாக நான் இப்போது நினைக்கின்றேன். அது உண்மையானதா அல்லது தவறானதா என்பதை அது சார்ந்து தெரிந்தவர்கள் அறிந்தவர்களுடன் கலந்துரையாடி எனது அறிவையும் கொஞ்சம் வளர்கலாமே எ? என்று நினைக்கின்றேன் . விடயம் இதுதான். போர்.... போர்.... இந்த போரை ஒரு இனத்தினுள் இருந்து முன்னின்று செய்தவர்கள் யார்? சிநதிக்க இதில் என்ன இருக்கின்றது? போராளிகள்தான் போரை செய்தார்கள். போராளிகள் யார்? இனபற்றும் மானமே பெரிதென எண்ணி வாழந்தோரும் ஆவார்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. உங்களிடமும் அது இருக்காது என்று நான் நினைக்கின்றேன். இப்போது தமிழர்கள் என்ற பெரு வட்டத்தைவிட்டு கொஞ்சம் சுருங்குவோம்..... அதாவது இலங்கை என்ற வட்டதிற்க்குள் வருவோம் அதிலும் எந்தகாலங்களை திருப்பினாலும் போர். ஆகவே தனது தந்தையை கொன்றவர்கள் எமை சொந்த இடத்தில் இருந்து துரத்தியவர்கள் எமது இடத்தை ஆழ்வதா? என்ற வெறியுடன் சிறுவயதிலேயே திரிந்த எல்லாளன் இளவயதில் படைதிரட்டி யாழ் ப+ம்புகார் என்ற பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பலபிரிவுகளாக தனது படைகளை வழிநடத்தி அனுராதபுத்தில் மீண்டும் தமிழர்களின் ஆட்சியை நிறுவுகிறான்............. பின்பு போர்துகிசருடன் இறுதிவரை தனது படைகளுடன் நின்று போராடி சங்கிலியன் தனது உயிரை விட்டபோது யாழின் இறுதி தமிழ் மன்னன் அவனே என்று பிரபாகரன் காலம் வரை வாழ்கிறான். அதன்பின்பும் ஆங்கிலேயரிடம் பணியேன் என இறுமாப்புடன் வாழ்ந்து போரிட்டு சாகிறான் பண்டாரவன்னியன். இவர்களுடைய பெயர்கள் எம்மோடும் வரலாற்றுடனும் இப்போது நிற்கின்றன. ஆனால் படையணிகள் படையணிக்ள் எனும்போது ஒரு போராளி கூட்டம் ஒன்று இவர்களின் பின்னால் வருகின்றது யார் இவர்கள்?

விழ விழ எழுவோம் ஒன்றல்ல.......... ஒர் ஆயிரமாய்!

தொன்று தொட்டு போர் என்ற அழிவுகளுடன் தொடர்ந்த தமிழ் இனம் இன்று இந்தியாவின் தென்கொடி கரையின் ஒரு பகுதியிலும் இலங்கைஎன்ற நாட்டின் மேற்ககுதியிலும் எஞ்சியுள்ளது. இத்தனை போரிலும் மாளாது எஞ்சிய இந்த கூட்டம் யார்? சோழமன்னனை நோக்கி இஸ்hலமமிய படைகள் வந்தபோது போருக்கு போகாது தப்பி ஒடி ஒரு கரையில் ஒதுங்கி இஸ்லாமியலுக்கு அடிமைகளாக வாழ முடிவுசெய்த ஒரு கூட்டம் தமிழகத்திலும். சங்கிலி மன்னன் தமிழன் ஒருவன் ஆழவில்லையெனில் வாழ்வதில் என்ன சுகம் உண்டு என்று அறை கூவியபோது போருக்கு போகாது போர்த்துகீசருக்கு கூலிகளாக துணிந்த ஒரு கூட்டம் இலங்கையின் ஈழபகுதியிலும் எஞ்சியுள்ளது. இதன் பின்பு பல தலைமுறைகள் வந்து போயாச்சு. சந்தேகமே இல்லை அடிமைகளுக்கும் அடிமைகளாகி அதில் ஒரு சிறிய இன்பத்தை காண துடித்த ஒரு கூட்டமே இன்று தமிழர் என்று பறைசாற்றி உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவரும். ஆனாலும் சிறைபடுத்தபட்ட போராளிகளுக்கு வந்த வாரிசுகள் சில தகவல்களை உரிய இடத்திற்கு எடுத்து சென்றபோது களமுனைகளில் நடந்த மாறுதல்களால் காலம் தாழ்த்தி வந்து தொடந்த பரம்பரை என்று ஒரு சிறிய. இன உணர்வும் மானம் ஒன்றே வாழ்வென்றும் எண்ணும் ஒரு கூட்டம் தப்பி பிழைத்து தனது வாழ்வை தொடர்வதால் அவர்களுக்கே உரிய அந்த போரும் 05-19-2009 வரை முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது. இதற்குள்ளாலும் ஒரு பெரிய கூட்டம் தப்பி பிழைத்து முகாம்களில் அடைபட்டு இப்போது விடுதலையாகிகொண்டு இருக்கின்றது. அகவே சுயநலத்தின் உச்சங்களும் அடிமைகளாவதில் சுகம்காணும் ஒரு கூட்டமுமே இப்போது தமிழர் எனப்படுவோர் என்பதே எனது வாதம். இதில் உங்களிடம் ஏதும் வேறு கருத்து உண்டா?

காற்றாகி வருவோம்................ தமிழ் மூச்சாகி வருவோம்!

கடந்தகால தமிழ் மன்னர்களின் வீழ்சியும் கடைசி மன்னன் பிரபாகரனுடைய வீழ்ச்சியும் வேறுபட்டதாக உள்ளது. என்ன வேறுபாடு? கடந்தகால தமிழ் மன்னர்கள் வீழ்தபோது தமிழ்ர்களை மன்னர்களை வென்றவர்கள் ஆட்சி செய்தார்கள். அதை தவிர வேறு எந்த தெரிவும் இருக்கவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல.............. சுயநலவாதிகளாக இருந்தவர்கள்.... எதிரியுடன் கூடி தகவல்கொடுப்பாளர்கள் என்று ஆனார்கள்...... இது பாண்டிய மன்னனின் காலத்திலேயே தொடங்கிற்று......... பின்பு எதிரியின் கூலியில் சுகம்காண தொடங்கியவர்கள் காட்டி கொடுப்பாளர்கள் ஆனார்கள் இது பண்டராவன்னியனின் மரணத்திற்கு காரணமாயிற்று. பின்பு கூலியில் திழதை;த கூட்டம் எதிரியின் புகழ்பாடி........ தமிழை விற்றே பிழைப்பை தேடியது இது கொஞசம் வித்தியாசமானது பிரபாகரனின் காலத்தில் நடந்தது. அதாவது புலியெதிர்ப்பு வாழ்வு...... எதிரியின் கூலியில் சொந்த இனத்து மன்னனை எதிர்த்து எதிரிக்கு பின்னால் நின்று வாழ்தலை ஒரு போராட்டம் என்றும் பறைசாற்றுவது....... இது நிற்சயமாக தமிழர் வரலாற்றில் புதிதானது. ஆனால் இவர்கள் எதிர்த்து போராடிய அந்த போராளிகளை அதாவது புலிகளை தன்னோடு சேர்த்து பிரபாகரன் அழைத்து சென்றுவிட்டான். இப்போது புலிகள் இல்லை............. அகவே புலிகளை எதிர்க்க எந்த ஒரு தேவையுமில்லை............. அப்போ இந்த புலியெதிர்ப்பு போர் வித்தகர்கள் என்ன செய்ய போகிறார்கள்?

இப்போது அடிமைகள் மட்டுமே நாட்டில் உள்ளார்கள்............... தனது அடிமைகளை பெறுவதற்கு இந்து காடடேரிகளுக்கு கூலி கொடுக்க வேண்டிய எந்த கட்டாயமும் எதிரிக்கு இல்லை. கூலிவாழ்வில் கிடைத்ததை வைத்து வாழதொடங்கியவர்களுக்கு இனி கூலி இல்லை என்று எஜமானி சொல்லிவிட்டான்.

ஒரு மாதிரி சுற்றி வழைத்து பார்ததால் கஸ்டகாலத்திலும் ஒரு நல்ல காலம் எனக்கு தெரிகின்றது? உங்களுக்கும் அது தெரிகின்றதா? தெரிந்தால் உரையாட வாருங்கள்.

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

"காலத்துக்கு தேவையான நடவடிக்கை" ...இப்படிச் சொல்லும் புல்லுருவிகளிடம் ஒரு கேள்வி?

மகிந்தவின்...இல தொங்கிக்கொண்டிருக்கும் நாயெல்லாம் எந்த அதிகாரத்தில தமிழருக்கான தீர்வைப் பற்றி மகிந்தவிட்டையோ அல்லது எந்தவொரு சிங்கள பயங்கரவாதியிடமோ கேட்க முடியும்? இந்த நக்கித் திண்ணிகள் இருப்பதே மகிந்தவின் தயவில்தான் என்கிறபோது, இந்த பெருச்சாளிகளின் கூட்டமும் தீர்மானக் கூத்துக்களும் என்ன வித்தியாசத்தைக் கொண்டுவரப்போகிறது. மகிந்தவுக்கெதிராகவோ அல்லது தமிழர் மீதான மனித உரிமை மீறல்களுக்கெதிராகவோ குரால் எழுப்பியோ அல்லது தீர்மானம் நிறைவேற்றி விட்டோ கொழும்புக்குத் திரும்ப இயலுமா இந்த நக்கித் திண்ணிகளால்?

ஆக , நடக்கப்போவது என்னவென்றால், புலம்பெயர் தேசங்களிலேயும் வந்து தாம் வழமையாகச் செய்துவரும் புலியெதிர்ப்புப் புராணத்தைத் தொடங்குவதுதான். இதைவிட இந்த நக்கித்திண்ணிகளால் வேறு எதுவுமே புடுங்க ஏலாது.அதுசரி, அந்த நக்கித்திண்ணிகள் இங்க வாரது இங்குள்ள இன்னொரு நக்கித்திண்ணிக்கு சந்தோசமாகப் போட்டுது. சந்தோசத்தில தலை கால் தெரியாம இங்க வந்து கக்குது !!!!!

எல்லாம், சேர்ந்து ஊளையிட இன்னொரு நாய் கிடைக்கப்போகிற சந்தோசம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கூட்டத்தை இப்படி இரகசியமாக நடத்துவதும் அதுவும் புலம் பெயர்ந்த நாடொன்றில் நடத்துவதும் மாவீரர் நாள் நெருங்கி வரும் வேளையில் நடத்துவதும் இதன் பின்னால் இந்தியாவின் றோ போன்ற ஒரு சக்தி இதனை வழிநடத்துகின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.இன்றைய தமிழர்களின் நிலையில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு உணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பங்களிப்பை வழங்கக் கூடியவர்கள் புலத்தில் வாழும் தமிழர்களே.அவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தான் இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருக்கிறார்கள் என்ற தோற்றப் பாட்டை தாயக மக்களுக்கு இது வழங்கும் இதன் மூலம் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று புலம் பெயர் தமிழர்கள் சொல்வதாக தாயக மக்களுக்கு படம் காட்ட விழைகிறார்கள்.வருகின்ற சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் ஒட்டு மொத்த தமிழர்களும் வாக்களித்தால் தங்களுக்குச் சார்பான ஒரு ஆட்சியை சிறிலங்காவில் நிறுவதும் உப்புச் சப்பில்லாத ஒரு அரசியல் தீர்வை(13வது திருத்தச் சட்டம் போன்ற) தமிழ் மக்கள் மீது திணிக்க முற்படுவதும் தெளிவாகத் தெரிகிறது.தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த மாவீரர் நாள் அறிக்கையில் புலிகள் நேரடியாகவோ மறை முகமாகவோ சுட்டிக் காட்டுவார்கள் என்றே எண்ணுகிறோம்.வருகின்ற மாவீர் நாளை உணர்வெழிச்சியுடன் நினைவு கூர்வோம். நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவி அதன் செயற்பாட்டை வீரியப் படுத்துவோம். எது எப்படி இருப்பினும் துரோகிகளின் இந்தக் கூட்டு இன்னுமொரு ஆயுதப் போராட்ட எழுச்சி தவிர்க்க முடியாத நிகழ்வாக அமையவே வழிவகுக்கப் போகின்றது.

தமிழர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.

துரோகிகள்... துரோகிகள்... துரோகிகள்... துரோகிகள்...

எங்களைத்தவிர மிச்ச எல்லாரும் துரோகிகள்...

மிச்ச எல்லாருக்கும் முன்பாக நாங்கள் துரோகிகள்...

இதில யார்தான் யோக்கியன்? மரணித்த அயயஎசையசமயடுயiவாவாயஎசைய?

இதில் பேசியவர்கள் எல்லாம் இணைந்து எத்தினை வீதமான தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்று எடுத்துவிட முடியும்...?? இவர்கள் இணைந்து கொண்டாலும் இவர்கள் பின்னால் தமிழ் மக்கள் இணைவார்களா...???

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பேசியவர்கள் எல்லாம் இணைந்து எத்தினை வீதமான தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்று எடுத்துவிட முடியும்...?? இவர்கள் இணைந்து கொண்டாலும் இவர்கள் பின்னால் தமிழ் மக்கள் இணைவார்களா...???

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் இணையமாட்டார்கள்.. ஆனால் தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கு வேறு போக்கிடம் இல்லையே.

தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு (ஏற்கனவே கைவிட்டவர்கள்தான் கூடியுள்ளனர்) வேறு ஏதாவது தீர்வுத்திட்டத்தை முன்மொழியக் கேட்கப்பட்டிருக்கலாம். ஒரு கூட்டறிக்கை வராவிட்டால், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு வீண்செலவு. வந்தவர்களுக்கு விடுமுறைக் கொண்டாட்டம்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் இணையமாட்டார்கள்.. ஆனால் தாயகத்தில் உள்ள தமிழர்களுக்கு வேறு போக்கிடம் இல்லையே.

தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு (ஏற்கனவே கைவிட்டவர்கள்தான் கூடியுள்ளனர்) வேறு ஏதாவது தீர்வுத்திட்டத்தை முன்மொழியக் கேட்கப்பட்டிருக்கலாம். ஒரு கூட்டறிக்கை வராவிட்டால், கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு வீண்செலவு. வந்தவர்களுக்கு விடுமுறைக் கொண்டாட்டம்.

அதுதான் யாழ்ப்பாண தேர்தலில் கூட்டமைப்புக்கும் சேர்த்து 20% வாக்குதான் பதிவானதா...??? வேற வளி இல்லை எண்டதுக்கும் நம்பிக்கை எண்டதுக்கும் இடை வெளி நீண்டது...

யாழ்ப்பாணம் விட்டு வந்தால் போல இது போல தான் நிறையப்பேர் சொன்னவை சனத்தை அவங்கள் நல்லமாதிரி வச்சு இருக்கிறாங்கள் சனம் போராட்ட பக்கம் தலை வச்சும் படுக்காது... அதே யாழ்ப்பாணத்தில் சனத்தை அடகுவதுக்காக சமாதான காலத்தில் இதே சனத்தை ஆயிரக்கணக்கில் கொலை செய்தான் சிங்களவன்... எல்லாரும் சொன்னார்கள் EPDP யின் கோட்டை நெடுந்தீவு எண்று.. அங்கும் அடக்குவதுக்காக படு கொலைகள்...

ஆயுதத்தாலை அடக்கலாம் ஆனால் எவ்வளவு காலம் எண்டதுதான் கேள்வி...

Edited by தயா

எல்லாம் புலம் பெயர் நாடுகளில் சிங்களவனுக்கு எதிராக இருக்கும் கோபத்தை குறைக்க சிங்களத்தின் எடுபிடிகளை இந்தியன் பிடித்து அனுப்பி கூட்டம் வைத்து

ஒரே தலமைஎன்று சொல்லி கொண்டிருந்த புலம் பெயர் தமிழரை பிரிக்கும் சதி தான்.

இ.பி.டி யும் வெளிநாட்டில அலுவலகம் கெதியா திறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவை பிடிச்ச ஆ(ட்)களும் வந்தபடியால் யோசிக்க வேண்டிய விடயம் தான்.திம்புவிலே என்ன நடந்ததோ அதுவே நடக்கும். மக்களுக்கு மறைக்கும் போதே இவர்களின் சுயமுகம் தெரிந்து விட்டது.மகிந்தவின் தேர்த்தல் வரை ஏதாவது இப்படி ஒரு நாடகமாட வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்தது தமிழ் கட்சிகளோ அல்லது அமைப்புக்களோ அல்ல பிரித்தானிய அரசும்..சுவிஸ் அரசும் இணைந்தே இலங்கையின் அடுத்த அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்காக இதனை ஒழுங்கு செய்திருந்தனர்..மற்றும்படி இங்கு பலர் தாங்கள் விரும்பியபடி திட்டினாலும் சரி கத்தினாலும் சரி உலக நாடுகளின் தீர்மானத்தின்படிதான் இலங்கையின் தலைவிதி அமையப்போகின்றது..சரத் பொன்சேகாவை இணைத்து ரணிலின் அரசை கொண்டுவர மேற்குலகமும் மகிந்தாவை காப்பாற்ற இந்தியா சீனாவும் பொறுத்திருந்துதான் பார்க்வேண்டும்..மற்றபடி நாங்கள் வழைமை போல மனசந்தோசத்திற்கு யாரையாவது திட்டுவோம்.. :lol: :lol:

"காலத்துக்கு தேவையான நடவடிக்கை" ...இப்படிச் சொல்லும் புல்லுருவிகளிடம் ஒரு கேள்வி?

மகிந்தவின்...இல தொங்கிக்கொண்டிருக்கும் நாயெல்லாம் எந்த அதிகாரத்தில தமிழருக்கான தீர்வைப் பற்றி மகிந்தவிட்டையோ அல்லது எந்தவொரு சிங்கள பயங்கரவாதியிடமோ கேட்க முடியும்? இந்த நக்கித் திண்ணிகள் இருப்பதே மகிந்தவின் தயவில்தான் என்கிறபோது, இந்த பெருச்சாளிகளின் கூட்டமும் தீர்மானக் கூத்துக்களும் என்ன வித்தியாசத்தைக் கொண்டுவரப்போகிறது. மகிந்தவுக்கெதிராகவோ அல்லது தமிழர் மீதான மனித உரிமை மீறல்களுக்கெதிராகவோ குரால் எழுப்பியோ அல்லது தீர்மானம் நிறைவேற்றி விட்டோ கொழும்புக்குத் திரும்ப இயலுமா இந்த நக்கித் திண்ணிகளால்?

ஆக , நடக்கப்போவது என்னவென்றால், புலம்பெயர் தேசங்களிலேயும் வந்து தாம் வழமையாகச் செய்துவரும் புலியெதிர்ப்புப் புராணத்தைத் தொடங்குவதுதான். இதைவிட இந்த நக்கித்திண்ணிகளால் வேறு எதுவுமே புடுங்க ஏலாது.அதுசரி, அந்த நக்கித்திண்ணிகள் இங்க வாரது இங்குள்ள இன்னொரு நக்கித்திண்ணிக்கு சந்தோசமாகப் போட்டுது. சந்தோசத்தில தலை கால் தெரியாம இங்க வந்து கக்குது !!!!!

எல்லாம், சேர்ந்து ஊளையிட இன்னொரு நாய் கிடைக்கப்போகிற சந்தோசம் தான்.

இரகுநாதா, இதில் கலந்து கொண்ட பலர் நக்குத்தின்னிகள் மட்டுமல்ல கேவலம் கெட்டவர்கள், மாற்றுக்கருத்து தேவையில்லை. கொலையே கொள்கையாகிய டக்கிலஸும், தமிழர்களை சிறிலங்கா இனவழிப்பிற்கு உட்படித்தவில்லை என்கிற ஆனந்தகங்கரிகளை ஒருதரும் மறக்கவில்லை.

ஆனால் ....

யார் மிஞ்சினார்கள் அரசியல் நடத்த கூறுங்கள். இன்று சர்வதேசமோ, இந்தியா ஒன்றை திணிக்கும் போது யார் இருக்கிறார்கள் நீங்கள் கூறும் நக்குத்தின்னி இல்லாதவர்கள் சென்று கதைப்பதற்கு?????? இன்று புலத்தில் நடத்தும் அரசியல் ஒன்று, அங்குள்ள மக்களின் அரசியல் வேறொன்று. தொடர்பில்லாத பயணங்கள்!

நடந்தது நடந்து முடிந்ததாக இருக்கட்டும், இனியாவது இவர்கள் எம்மக்களின்(நாம் இங்கிருந்து என்னத்தையும் சொல்லலாம், அனுபவிப்பது அவர்களே)விடிவிற்காக ஒரு பொதுக்கொள்கையில் வருவார்கள் என்ற அவாதான்!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்தது தமிழ் கட்சிகளோ அல்லது அமைப்புக்களோ அல்ல பிரித்தானிய அரசும்..சுவிஸ் அரசும் இணைந்தே இலங்கையின் அடுத்த அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்காக இதனை ஒழுங்கு செய்திருந்தனர்..மற்றும்படி இங்கு பலர் தாங்கள் விரும்பியபடி திட்டினாலும் சரி கத்தினாலும் சரி உலக நாடுகளின் தீர்மானத்தின்படிதான் இலங்கையின் தலைவிதி அமையப்போகின்றது..சரத் பொன்சேகாவை இணைத்து ரணிலின் அரசை கொண்டுவர மேற்குலகமும் மகிந்தாவை காப்பாற்ற இந்தியா சீனாவும் பொறுத்திருந்துதான் பார்க்வேண்டும்..மற்றபடி நாங்கள் வழைமை போல மனசந்தோசத்திற்கு யாரையாவது திட்டுவோம்.. :lol: :lol:

என்னண்ணை பாகிஸ்தான இந்தியா விழுங்கப்போகுது இந்தியாவ சீனா விழுங்கப்போகுது எண்டு த்ரில்லிங்கா போய்க்கொண்டிருக்கு இப்பிடி வந்து குழப்புறீங்கள்....... :)

Edited by Mathivathanang

இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்தது தமிழ் கட்சிகளோ அல்லது அமைப்புக்களோ அல்ல பிரித்தானிய அரசும்..சுவிஸ் அரசும் இணைந்தே இலங்கையின் அடுத்த அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதற்காக இதனை ஒழுங்கு செய்திருந்தனர்..மற்றும்படி இங்கு பலர் தாங்கள் விரும்பியபடி திட்டினாலும் சரி கத்தினாலும் சரி உலக நாடுகளின் தீர்மானத்தின்படிதான் இலங்கையின் தலைவிதி அமையப்போகின்றது..சரத் பொன்சேகாவை இணைத்து ரணிலின் அரசை கொண்டுவர மேற்குலகமும் மகிந்தாவை காப்பாற்ற இந்தியா சீனாவும் பொறுத்திருந்துதான் பார்க்வேண்டும்..மற்றபடி நாங்கள் வழைமை போல மனசந்தோசத்திற்கு யாரையாவது திட்டுவோம்.. :lol: :lol:

மகிந்தாவின் கனவு நிறைவு பெறாத சூரீச் மாநாடு!

November 23,2009

Swizi-22-1.jpg

சுவிற்சர்லாந்தின் வர்த்தகத் தலைநகரான சூரிச்சின் ஒதுக்குப் புறமான ஓர் இடத்தில் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்றைத் தோற்றுவிப்பதற்கான கூட்டம் நிகழ்ச்சிநிரலில் சேர்க்கப்பட்டிருந்த முக்கியவிடயங்கள் குறித்து முடிவுகள் இன்றி முடிவுற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த மாநாட்டை இந்தியாதான் ஏற்பாடு செய்துள்ளது என்று கொழும்பிலுள்ள சில அரசுக்குப் பயந்த ஊடகங்கள் தெரிவித்தாலும் உண்மை அதுவல்ல. இந்த மநாடு முழுக்க முழுக்க இலங்கை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதுதான். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவுக்கு எதிரான ஒரு நடவடிக்கையே இலங்கை அரசால் சுவீசில நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் முக்கிய முடிவாக தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தபின் தமிழர் கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பதுதான் இந்த மநாட்டின் முடிவு. அதாவது இந்த மாநாடு முடிந்த பின் தமிழர் கட்சிகள் அனைவரும் மகிந்த ராஜபக்சேவுக்கே எங்கள் ஆதரவு என்று அறிவிப்பை ஏற்படுத்தத்தான் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் சில கட்சிகள் உடன்படாததால் இந்த மாநாடு தோல்வியுற்றது.

இந்த மாநாட்டின் முக்கிய சூத்திரக்காரர் இலங்கை அரசின் புலனாய்வுத் துறையின் தலைவர் கெந்தவிதாரணதான் என்பது உண்மை. கெந்தவிதாரணவின் ஏற்பாட்டில்தான் சுவீசின் வெள்ளைத்தோல் நபரான பீட்டர் பெக்கரர் (Peeter Pacher) என்பவரால் இந்த மாநாடு திறந்து வைக்கப்பட்டது. இந்த மாநாட்டின் செலவுக்கான காசை இலங்கை அரசாங்கமே கெந்தவிதாரணவின் மூலம் அளித்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சிறிலங்காவின் புலனாய்வுத் துறை தலைவர் கெந்தவிதாரணவின் கைக்கூலி கிருஸ்ணன் என்று அழைக்கப்படுகின்ற கிருஸ்ணப்பிள்ளை இந்த மாநாட்டின் முக்கியமானவராக கருதப்படுவதால் இந்த மாநாடு அரசு ஆதரவில் கெந்தவிதாரண ஏற்பாட்டில் நடந்ததாகும்.

கிருஸ்ணப்பிள்ளை (கிருஸ்ணன்) யைப்பற்றி தீப்பொறி பல சந்தர்ப்பங்களில் கெந்தவிதாரணையின் கைக்கூலி என்பதை தெரியப்படுத்தி வந்துள்ளது. மேலும் இவர் இலங்கை அரசின் கைக்கூலி என்பது புலம்பெயர்ந்த தமிழர்கள் அறிந்த ஒன்றே. என்றாலும் அந்த கிருஸ்ணன் யாரென்று இதுவரை தெரியமல் இருந்தது. அந்த ஆவலை கிருஸ்ணன் இந்த மாநாட்டில் எடுத்த புகைப்படத்துடன் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்த மாநாட்டின் மற்றொரு முக்கியமான நபர் எஸ்.வரதகுமார் என்பவராகும். இவர் கடந்த ஐந்து வருடங்களிற்கு முன்னாள் தீவிர விடுதலைப் புலிகளின் ஆதரவாளர். அவரையும் கெந்தவிதாரணையின் ஏற்பாட்டில் கிருஸ்ணன் அரச சார்பாரளரகாக இணையவைத்தார்.

இவர்கள் இருவரோடும் இணைந்த மற்றொரு நபர் மனோகர் இவர்கள் எவரிடத்திலும் இந்த மாநாட்டை நடத்தக்கூடிய அளவுக்கு பொருளாதார வசதிகள் கிடையாது. இவர்கள் ஒரு விடயத்தில் இறங்குகிறார்கள் என்றால் அந்த நிகழ்ச்சியால் தங்களுக்கு ஆதாயம் இல்லாமல் இறங்கமாட்டார்கள். இவாகள் சாதாரணமாக ஒரு நிகழ்ச்சியை நடத்தி அதில் தேனீர் வழங்கப்பட்டாலும் அதற்கான காசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் வசூல் செய்யாமல் விட மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் பல இலட்சம் டொலர்கள் செலவு செய்து இந்த மாநாட்டை நடத்துவதற்கான பொருளாதாரத்தை எப்படிப் பெற்றார்கள் என்பதே இன்று புலன்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள சந்தேகம்.

கிருஸ்ணப்பிள்ளை (கிருஸ்ணன்) தனது புகைப்படத்தை எந்த சந்தர்ப்பத்திலும் வெளியிட்டதில்லை. மற்றும் தனக்கு நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தனது வீட்டை காண்பிப்பதில்லை. என்றாலும் இந்த மாநாட்டின் மூலம் பல சலுகைகள் கிடைக்கும் என்பதற்காக மாநாட்டில் கலந்துகொண்டவர்களோடு தனது புகைப்படத்தையும் பதிய வைத்துள்ளார்.

கிருஸ்ணன் ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத் தனத்தை தீப்பொறி பிரிதொரு சந்தர்ப்பத்தில் ஆதாரப்பூர்வமாக வெளியிடும். இந்த கிருஸ்ணனே இந்த மாநாட்டை நடத்துவதற்காக கெந்தவிதாரணவினால் ஏற்படுத்தப்பட்ட சூத்திரத்தாரி. அவரே தனது நன்மைக்காக தமிழர் தகவல் மையத்தை தேர்ந்தெடுத்து அவர்களையும் தன்னுடன் இணைத்துள்ளார் என்பதே தீப்பொறியின் கருத்து.

எப்படியாயினும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களை எப்படியாவது தமது பக்கம் இழுத்துவிட வேண்டும் என்ற கணக்கு கொஞ்சம் பொய்த்துவிட்டது என்பதே உண்மை.

theepori

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.