Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூரிச்சில் தமிழ் பேசும் தலைவர்கள் மாநாடு; புதுக் கதையாக எழுமா?... பழைய பல்லவி தானா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிற்சர்லாந்தில் மாநாடு தொடர்கிறது

வீரகேசரி இணையம் 11/21/2009 2:07:12 PM - சுவிற்சர்லாந்தில் நடைபெற்றுவரும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுக்கு இடையிலான மாநாடு மிகவும் இரகசியமாக நடைபெற்று வருவதாகவும் ஊடகவியலாளர்களோ வெளிநபர்களோ அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிறவுன்பீல்ட் மாநிலத்தில் பிரசித்திபெற்ற நதிகளில் ஒன்றான றைன் நதிக்கரையில் அமைந்துள்ள விடுதியொன்றில் இச்சந்திப்பு மூன்றாவது நாளாகவும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருப்பதாக சுவிஸ் நாட்டிலுள்ள எமது இணையத்தளத்தின் வாசகர் ஒருவர் தெரிவித்தார். E-mail to a friend

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

.

யாருக்கும் தெரியுமோ , மேலதிக விபரங்கள்?

மதிவதனங் , நெல்லையன் , பாண்டு போன்றவர்களுக்கு தெரியும் .

ஆனால் ..... இந்த விஷயத்திலை தெரியாத மாதிரி ...... அமுசடக்கமாக இருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழ் சிறி ,

தெரிந்தவர்கள் சொல்லலாம் ...கதைப்பதே கூடாது என்பவர்கள் விலகி இருக்கலாம் ..

என்னுடை விருப்பம் ஆர் குத்தியாவது கொஞ்சமாவது அரிசி வந்தால் சரி ..அதை மோதிர கை போட்டவைதான் குத்த வேண்டும் என்றில்லை..அதுவும் அவர்கள் அங்கே இலங்கையில் இருப்பவர்கள்..

அனால் அவை தங்கட பதவி பங்கிடுக்குத்தான் என்றால் எனக்கும் உடன் பாடில்லை.

எனக்கு தமிழ்நெட் இன் கருத்து சரியாகபடவில்லை. இவ்வளவு காலமும் அன்ன நடை நடக்க வெளிக்கிடடி தன்ர நடை மட்டுமில்லை காலே முறிந்தது போதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாருக்கும் தெரியுமோ, மேலதிக விபரங்கள்?
ஒட்டுக்குழுக்களுக்கும் ஓனான் குழுக்களுக்கும் மாத்திரமே விபரங்கள் தெரியும். :)
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன அப்படி மறைமுகமா செய்யினம்?

என்ன அப்படி மறைமுகமா செய்யினம்?

காட்டி கொடுக்கிறதை வெளிப்படையாக செய்யலாம்... ஆனா இது தமிழ் மக்களை கூட்டிக்குடுக்கிற விசயம்... அதாலதான் ஒளிச்சு செய்யினம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மரை கழன்ற் மாணிக்கங்களும், ஏக பிரதிநிதித்துவத்தில் பங்கு கேட்பவர்களுக்கும் உள்ள அறிவே அறிவு. இலாவிட்டால், துணை ராணுவக் குழுக்களை தமிழரின் அரசியல் தலைவர்கள் என்று சொல்லுமளவிற்கு துணிவு வந்திருக்காது.

சரி, இனி விடயத்துக்கு வருவோம். அரிசி குத்தப்படுகிறதாம்.....யார் குத்துகிறார்கள் என்று பார்க்கலாம்.

முதலாவது, சிங்கள ராணுவத்தின் சம்பளப் பட்டியலில் மாதாந்த வருமானத்தைப் பெற்று வரும் துணை ராணுவக் குழுவான டக்கிளஸ் தேவானத்தாவின் ஆயுதக் கும்பலான ஈ.பீ.டி.பீ. இவர்கள் எப்போது தமிழரின் அரசியல் தலைவரானார்கள்? ஒவ்வொரு சிங்கள அரசும் பதவியேற்கும்போதும் அவற்றுடன் தொங்கிக்கொண்டு தமிழர் மீதான இனவழிப்பிற்கு ராணுவத்தைப்போலாவே அல்லது அதற்கும் கூடுதலாக தமிழர் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கைகளை அரங்கேற்றி தனது விசுவாசத்தைக் காட்டும் நாய்ப்படை தமிழரின் தலைவனா?? 1990 இலிருந்து இன்றுவரை தீவகத்திலும், வட மாகாணத்திலும் இந்த அரக்கன் ஆடிவரும் கொலைப்பாதகங்கள் இந்த மரை கழன்ற மாணிக்கங்களுக்குத் தெரியாமல்ப் போய்விட்டது. மண்டைதீவுப்படுகொலைகள் முதல், நிமலராஜன், மற்றும் உதயன் மீதான தாக்குதல்கள், தனிநபர் படுகொலைகள் என்று பட்டியலிட்டுச் சிங்கள பயங்கரவாதத்துக்கு சேவகம் செய்யும் நாயெல்லாம் தமிழரின் தலைவன் என்கிற அந்தஸ்த்கை பெற்றுக்கொண்டது எப்போது??சரிதான், இந்தக் கேவலத்தில் இவர்கள் குத்துகிறார்களாம், இங்க ஒருத்தர் பார்த்துக்கொண்டிருக்கிறாராம். அதில பகிடி என்னவென்றால், ஏக பிரதிஎஇதித்துவத்தில பங்கு வேற வேணுமாம். யார் யாரிட்டப் பங்கு கேட்கிறது. நக்கித் திண்ணிகள் என்ன சொல்லவேண்டுமென்பதோ அல்லது என்னத்தைச் செய்ய வேண்டுமென்பதோ சிங்கள எஜமானர்களாளேயே தீர்மானிக்கப்படுகிறபோது அர்சி குத்தி முடியுமட்டும் ஒரு மரை கழன்றது பார்த்துக்கொடிருக்கிறதாம். இருக்கட்டும்.

ரெண்டாவது, ஆனந்த சங்கரி எனப்படும் ஒரு மரை கழன்ற சிங்கள விசுவாசி. இவனுக்கு மகிந்தவிற்கு காதல் கடிதம் எழுதி தனது எசமான விசுவாசத்தைக் காட்டுவதை விட வேறு தொழில் தெரியுமா? எத்தனை முறை, மகிந்த கடவுளிற்கு நிஅகரானவன் எனு எZஉதியிருப்பான். எத்தனை முறை தமிழருக்கு இஅலங்கையில் தனியதிகாரம் தேவையில்லை என்று சொல்லியிருப்பான்? சிங்கள அரச ஊதியத்திலும், அரச ராணுவத்தின் பாதுகாப்பிலும் தனது வாழ்நாளைப் போக்கிவரும் இந்தக் கழுதை எப்போது தமிழரின் அரசியைத் தலமையானது? தமது கட்சிக்கு "தமிழர்" என்று சொல்லுடம் பெயர் வைத்துவிட்டால் எல்லோரும் தமிழரின் தலைவர்கள் ஆகிவிடுவார்களோ??

  • கருத்துக்கள உறவுகள்

முறாவதி இதார்த்தன்,

இவன் இவ்வளவுகாலமும் என்ன செய்துகொண்டுவருகிறான் என்று யாருக்காவது தெரியுமா? இதுவரையிலும், இவனும் இவனது துணை ராணுவக்குழுவான புளோட்டும் தமிழரின் அரசியல் அபிலாஷைகளைப்பற்றி என்ன கதித்திருக்கிறார்கள் என்றாவது மரை கழன்ற மாணிக்கங்கள் சொல்ல முடியுமா? வவுனியாவில் அராஜகம் செய்து கப்பம் அறவிடுவதிலும், மக்கள் விரோதச் செயல்களில் நாளாந்தம் ஈடுபடுவதிலும் பார்க்க இவர்களுக்கு வேறு எந்த அரசியல் வேலையாவது தெரியுமா? மாலைதீவிற்கு துணைப்படை அனுப்பி அடிவாங்கியதை விட இந்த நாய்களுக்குத் தெரிந்த அரசியல் அறிவொன்றைச் ஒல்ல முடியுமா இந்த ஏக பிரதிநிதித்துவத்தில் பங்கு கேட்கும் மரை கழன்ற மண்டைகளுக்கு ? அரிசி குத்துகிறார்களா, முடிந்த பிறகு அதை அந்த மரமண்டையே புழுங்கிச் சாப்பிடட்டும்.

நாலாவது, பிள்ளையான் என்கிற அரசியல் சூணியமான துணை ராணுவக்குழுவின் தலைவன். இவன் எப்போது தமிழரின் அரசியல் தலைவானான்? கிழக்கு மாகாண முதலமைச்சர் என்கிற பதை கிடைத்தன் மூலமா?? அட, அறிவு கெட்ட் மர மண்டைகளே...இவன் முதமைச்சரானது மக்கள் விருப்பத்தாலா??? அரசு இவனை ஆக்கியிருக்கிறது என்கிற சின்ன யோசனைதான் இல்லையா உங்களுக்கு ? இவன் கிழக்கில் செய்துவரும் அநியாயங்களைத் தெரியாதவ்ரக்ளா நீங்கல்? தெரியாவிட்டால் இவன் பிரதிநித்துவம் செய்வதாகக் காட்டிக்கொள்ளும் அந்த மக்களைப் போய்க் கேட்டுப்பாருங்கள். சிங்கள ராணுவத்தின் கைப்பொம்மையாக இருந்து ஆள்கடத்தலிலும், கப்பம் அறவிடுவதிலும் கொழும்பிலும், கிழக்கிலும் செயல்ப்பட்டு வந் இந்த கூலிப்படைக் கொலைகாரன் உனக்கு எப்போது தமிழரின் அரசியல் தலைவனாக தெரிய ஆரம்பித்தான்?

பணத்துக்காகவும், இச்சைக்காகவும் இவனும் கருணாவும் சேர்ந்து செய்த படுகொலைகள் எத்தனை??செய்த பாலியல் வல்லுறவுகள் எத்தனை?? இவன் உனக்கு தமிழரின் அரசியல் தலைவனா?? இந்த லட்சணத்தில் இவர்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தில் பங்கு கேட்கிறாயா?? அர்சி குத்தி முடியுமாட்டும் பார்த்துக்கொண்டிரு!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தவது வரதர் அணி சிறிதரன்,

இவனை யாருக்குத் தெரியும்? இதுவரை தமிழர்க்காக என்ன செய்திருக்கிறான்? அல்லது என்ன பேசியிருக்கிறான்?? சந்திரிக்காவினால் மீண்டும் இங்கு கொண்டுவரப்படும்வரை இந்தியா ஒரிசாவில் ஒளித்திருந்த கூலிப்படை தானே? இந்திய அக்கிரமிப்பில், இந்தியனுக்கு நிகராக இவனும் இவனது குழுவும் செய்த அக்கிரமங்கள் எத்தனை எத்தனை? இதையெல்லாம் எப்படி மறந்தாய் மரை கழன்ற மாணிக்கமே?? இன்றுவரை, இதை எழுதும் தறுவாயிலும் ராணுவத்தின் துணை ஆயுதக்குழுவாகச் செயல்ப்பட்டு வரும் இந்த கூலிப்படை நாயெல்லாம் எப்போதிருந்து உனக்குத் தமிழரின் தலைவனாகத் தெரிந்தான்?? இவனூகும் எக பிரதிநிதித்துவத்தில் பங்கு வேன்டுமா?? தேவைதான்!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆறாவது தமிழர் கூட்டமைப்பு,

இவர்கள் ஒரு காலத்தில் தமிழரின் தலைவர்களாக இருந்தவர்கள் தான்.இப்போது, " புலி முடிந்துவிட்டது, இனி நாங்களனைவரும் நிம்மதியாக வாழலாம்", " ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழப் பழகிக்கொள்ளுங்கள்"," தனிநாடு தமிழர்க்குச் சரிப்பட்டு வராது " என்று கதைக்கத் தொடங்கியிருப்பவர்கள். சிலர் ஒருபடி மேலேயும் போய், மகிந்தவிற்கு பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லி பொன்னாடை போற்றி கட்டித்தழுவி மகிழ்பவர்கள். சிலர் கோத்தபாயவின் இனவழிப்பிற்கு நியாயம் தேட தமது அப்புக்காத்து திறனைப் பாவிப்பவர்கள். இவர்களா தமிழரின் தலை விதியைத் தீர்மானிக்கப்போவது?? இவர்களுக்கா வேண்டும் ஏக பிரதிநிதித்துவத்தில் சரி பங்கு. தேவைதான்.

எல்லாருமாச் சேர்ந்து அரிசி குத்தித் தருவினம். நீரும் உமது மரை கழன்ற மாணிக்கங்களும் அதைப் புக்கைப் பொங்கிச் சாப்பிடுங்கோ. மகிந்த பாயாசம் தருவான், வேண்டி நக்கிவிட்டு எழும்பி வாங்கோ !!!!!

நல்ல பிறவிகள் தான் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அரசியல் செய்துவரும் சகல தமிழ் முஸ்லிம் கட்சித்தலைவர்களும் சூரிச்சிற்கு வந்துள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகளின் அனுசரணையுடன் இந்த மாநாடு நடாத்தப்பட்டதாகவும் (இன்று முடிந்திருக்கும்) தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. மாநாட்டில் விவாதித்த விடயங்கள் மலிஞ்சால் சந்தைக்கு வரும்தானே.

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30642

இந்த மானாட்டின் பின்னணியில் இருப்பது மேற்கத்தைய அரசுகளும் இந்திய அரசுமே.போரின் பின்னரான அவர்களின் நிகழ்ச்சி நிரல் இது.எல்லா மா நாடுகளும் வழக்கத்தைப் போல ஒரு அறிக்கையுடனும் சலசலப்புடனும் முடிந்து விடும்.சிற்லங்கவில் நிரந்திரமக இருக்கும் சிங்களப் பேரினவாதாம் எனும் கருதியல் இந்தச் சலசப்புக்களை அழித்துவிடும்.பொறுமையாக இருப்போம்.எல்லாரும் கூடிக் கூடிக் கதைக்கட்டும் கடைசியில் எங்கு வந்து நிற்பார்கள் என்பதை நாம் காலம் காலமாக அறிந்து இருக்கிறோம்.மீண்டும் கற்பார்கள், அப்போது நாம் சொல்வோம் வரலாறு சிறந்த ஒரு ஆசான் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

ஏக பிரதிநிதித்துவத்தில் பங்கு கேட்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களிடம் சிறு கேள்வி,

நீங்கள் என்ன, ஏக பிரதிநிதித்துவம் என்பது ஏதோ கடலுக்கடியிலிருந்து புலிகளால் தோண்டி எடுக்கப்பட்டு தமக்கு மட்டும்தான் உரிமையென்று ஒளித்து வைத்திருக்கும் புதையல் என்று நினைக்கிறீர்களா?? அல்லது யார் வேண்டுமானாலும், எப்போது வேன்டுமானாலும் உரிமை கோரக்கூடிய பொருள் என்று நினைத்துக்கோனிருக்கிறீர்களா? அதை உங்களுக்கும் பங்கு கேற்பதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ? பங்கு கேட்குமளவிற்கு இதுவரை தமிழர்க்காக என்ன செய்திருக்கிறீர்கள்?? சிங்களவனுனுக்குக் கூட்டிகுடுத்து மாமா வேலை பார்த்தைதைத் தவிர நீங்கள் செய்துவருகிற " தமிழர் நலன் சார்ந்த அரசியல் நடவ்டிக்கைகளில்" ஒன்றையாவது இங்கு கூற முடியுமா?? பிறகு என்னத்துக்கடா உங்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தில் பங்கு ?? எந்த முகத்தை வைத்துக்கொண்டு வந்து இங்கே ஏக பிரதிநிதித்துவம் கேட்டுப் பிச்சை எடுப்பீர்கள்??!!!!!

ஏக பிரதிநிதித்துவம் என்பது தமிழீழ மக்களால் எகோபித்த ஆதரவோடு புலிகளுக்கு அவர்களது மனங்களில் வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரம். இந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கு புலிகள் செய்த தியாகங்கள் அளப்பரியவை, நினைக்கும் போது மனதை நெகிழவைப்பவை. அவர்கள் இறுதிவரை மக்களோடு இருந்தார்கள், மக்களுக்காகவே இறந்தும் போனார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்ததுதான் ஏக பிரநிதித்துவம் என்னும் கைம்மாறு, மரியாதை...எல்லாமே!!!!இதில் பங்கு கேற்பதற்கு எந்த தெருப்போறுக்கி நாய்க்கும் உரிமையில்லை.

மக்களின் ஆதரவு உங்களில் எவருக்காவது இருக்கிறதா?? தேர்தலில் சிங்களவனால் வெல்ல வைக்கப்பட்ட மாமாக்கள் எல்லாம் எங்களின் ஏக பிரதிநிதிகள் ஆகிவிடமுடியுமா?? எந்த அழுத்தங்களும் இல்லாமல் ஒரு நூறு மக்களையாவது உங்களின் மாமாக்களால் கூட்ட முடியுமா?? முடிந்தால் வாருங்கள் , ஏக பிரதிநித்துவம் பற்றிப் பேசிப் பார்க்கலாம். அதுவரையிலும் உங்கள் ஏக பிரதிநிதுத்துவத்தின் கனவை எல்லாம் மூட்டை கட்டி வைய்யுங்கள் !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏக பிரதிநிதித்துவம்

ம்......இப்பதான் இதின்ர உண்மையான பிரச்சனை என்ன எண்டு பிடிபட்டிருக்கு...... :)

  • கருத்துக்கள உறவுகள்

No one can justify discrediting any unity of the political parties of the affected people in the island. But whether the aim of the sponsors who forge Tamil politics from the 'above' is bringing in unity for the cause or unity for the surrender of the cause that has not been surrendered in the crushed militant struggle, is the question.

மரை கழன்ற மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கு இதனர்த்தம் புரிகிறதா??!!புரிந்தால்ச்சரி !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

No one can justify discrediting any unity of the political parties of the affected people in the island. But whether the aim of the sponsors who forge Tamil politics from the 'above' is bringing in unity for the cause or unity for the surrender of the cause that has not been surrendered in the crushed militant struggle, is the question.

மரை கழன்ற மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கு இதனர்த்தம் புரிகிறதா??!!புரிந்தால்ச்சரி !!!!!

என்னண்ணை புரியாத பாசையில கனக்க எழுதியிருக்கிறியள். அதில இது மாத்திரம்தான் புரிஞ்சிது... :)

  • கருத்துக்கள உறவுகள்

வரப்போற தேர்தலில யாருக்குச் சப்போட் குடுத்து ஏதாவது பதவியைப் பெற்றுக் கொண்டு இவ்வளவு காலமும் இழந்து போனவையள ஒருமாதிரிச் சரிக்கட்டுறது எண்டிறதைப் பற்றித்தான் பேசினம். மற்றும்படி நாடுகள் உவையள எதுக்காககப் பேசத் தூண்டவேணும். உவையளென்ன அடிபட்டவையளே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதனுக்கு,

பந்தி பந்தியாய் எழுதி இருக்கிறிர்கள் ஒரு பதிலும் எழுதாட்டி கோவிப்பியலோ தெரியாது எண்டபடியால் எழுதுகிறேன்

1. அரசியல்வாதிகள் ...அது வீரகேசரி செய்தி ..நான் ஒரு திருத்தமும் செய்யவில்லை..உங்கட நிலைப்பாட்டை பார்த்தல் இலங்கையில எப்பையாவது கால் மிதிச்சாள் மாதிரி தெரியவில்லை.. அண்ணைமார் தாற கயிறு எல்லாம் விழுங்கி விழுங்கி மூச்சு எடுக்கேலம இருக்கிறீர்கள்.. கூல் டவுன் ....

2 . உண்மையை சொல்லுங்கோ உங்களுக்கும் வடிவேலுக்கும் என்ன உறவு?

3 . இப்ப கடவுள் வந்து தமிழருக்கு தமிழிழம் தராது என்னடா ஆர் அதுக்கு பொருப்பெடுக்கிறது?

4 . நான் சொன்னது எதாவது ஒரு தீர்வு முதலில் வரட்டும், வந்தால் நல்லம் ..வரட்டி ஒண்டும் குடி( குடில் /வீடு) முழுக்க போவதில்லை .. அங்கே உள்ளவர்களுக்கு அது ஒன்றும் இல்லை என்று உங்களுக்கு நினைவிருந்தால் சரி.

5 . அங்கே பேசப்போனவை சுத்தமான சுசைப்பிள்ளைகள் என்று சொல்லவும் இல்லை சொல்லப்போவதும் இல்லை..ஆன இதுதான் எங்கட விதி ..

சுட்ட பிணம் கூட எழுந்து நடக்கலாம், ஏழு கடல் நீரும் வற்றிப்போகலாம், நீ சொல்வது எப்படி உண்மையாகலாம் என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உண்டு. இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்று கூடுகிறார்கள் என்ற பத்திரிகைச் செய்தியைப் பார்த்தவுடன் மேலே உள்ள பாடல் வரிகள் தான் எனக்கு ஞாபகம் வந்தன. கலண்டர் திகதியையும் பத்திரிகைத் திகதியையும் ஒப்பிட்டுப் பார்த்தேன், ஏப்ரல் முதலாம் திகதியோ என்று பத்திரிகைத் திகதியும் கலண்டர் திகதியும் ஒன்றாகவே இருந்தன. ஓ! அப்படியானால் சரி,நவம்பர் 19.

கடந்த காலங்களில் பல தடவைகள் தமிழ்த் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் தமிழ்த் தலைவர்களிடம் காணப்பட்ட சுயநல நோக்கம் காரணமாக இவர்களது கூட்டுகள் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. இப்பொழுது ஒரு லட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதன் பின்னர் (சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கணிப்பீட்டின் பிரகாரம்) இப்போதைய தமிழ்த் தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு உயிர் வாழும் சுதந்திரம், உணவு அருந்தும் சுதந்திரம், உறங்கும் சுதந்திரம், விசில் அடித்தவுடன் "சடின் பிறேக்'' போட்டு நிற்பாட்டும் சுதந்திரம், முகாமில் வாழ்ந்தாலும் தேசியக் கொடியை ஏற்றும் சுதந்திரம், வாக்களிக்கும் உரிமை போன்ற பல்வேறு உரிமைகளையும் (சுதந்திரத்தையும்) பெற்றுக்கொடுத்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் வெளிநாட்டிலாவது ஒன்று கூடுகிறார்கள் எனறால் அது ஏதோ ஒரு வகையிலாவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விடயமே.

இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கை சுதந்திரமடைந்த போதே, தமிழர்களின் உரிமைகளையும் பிரித்தானியரிடமிருந்தே பெற்றிருக்கலாம். இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களைத் தமது கைகளுக்குள் போட்டுக்கொண்டு, தமிழ்த் தலைமைகளை ஏமாற்றித் தமது காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றத் தொடங்கி விட்டனர்.

ஏமாந்த சோணகிரித்தனமாக தமிழ்த் தலைவர்கள் தமது கதிரைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பிழைப்பு அரசியலில் ஈடுபட்டனர். தமிழ்த் தலைவர்களில் ஒரு சாரார் கண்ணை மூடிக் கொண்டு சிங்களத் தலைமைகள் சொல்வதை நம்பி ஏமாந்தனர். இன்னொரு சாரார் கண்ணை மூடிக் கொண்டு சிங்களத்தலைமைகள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆயினும் ஆரம்பத்தில் எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்னாளில் இணக்க அரசியலில் ஈடுபட்டதையும், இணக்க அரசியலில் ஈடுபட்டவர்கள் பின்னாளில் (பட்டுத் தெளிந்தபின்) தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தியதையுமே கடந்தகால இலங்கை வரலாறு காட்டுகிறது.

இதற்கு நல்ல உதாரணமாக ஜி.ஜி. பொன்னம்பலம், அடங்காத் தமிழன் என அழைக்கப்பட்ட கணிதப்பேராசிரியர் சுந்தரலிங்கம், வி.பி.என அழைக்கப்பட்ட வ.பொன்னம்பலம் ஆகிய மூவரையும் குறிப்பிடலாம். ஜி.ஜி.பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சம பிரதிநிதித்துவக் கோரிக்கையை முன்வைத்தபோது அதனை டி.எஸ்.சேனநாயக்க அவர்கள், நடேசபிள்ளை, மகாதேவா போன்றோரின் துணையுடன் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை முறியடித்தார். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிய சோல்பரிப் பிரபுவின் நண்பரான பேராசிரியர் சுந்தரலிங்கத்தைத் தனது அமைச்சரவையில் இணைத்துக்கொண்டு தான் சிறுபான்மையினர் மீது எந்தவித பாகுபாடும் காட்டமாட்டேன் என பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உறுதியளித்தார் டி.எஸ்.

டி.எஸ்.சேனநாயக்கா பிரதமராகப் பதவியேற்றதும் தனது செயலாளரிடம், "பாரும் இப்பொழுது பொன்னம்பலம் (ஜி.ஜி) வந்து சேர் என்று சொல்லி கை குலுக்கி விட்டுப் போவார்" என்று சொன்னார். டி.எஸ்.சேனநாயக்கா கூறியது போல் பொன்னம்பலமும் போய் பவ்வியமாக "சேர்" என்று கைகுலுக்கி விட்டுச் சென்றாராம்.

இலங்கை சுதந்திரமடைந்தவுடன் அமைச்சரவையில் இணைந்துகொண்டு ஜி.ஜி. கைத்தொழில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். டி.எஸ்.சேனநாயக்காவின் அரசியல் ஆலோசகராக விளங்கிய சுந்தரலிங்கம், டி.எஸ்ஸின் அழுத்தம் காரணமாக (சூடு கண்டபின்) தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தமிழ் ஈழக்கோரிக்கையை முன் வைத்தார். இதே போலவே 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை குடியரசின் அரசியல் யாப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்ட போது செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட வ.பொன்னம்பலம் ஓரிரு வருடங்களுக்குள்ளாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இவற்றை விட தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவும் தேர்தல் காலங்களில் மாறிமாறி ஐக்கிய தேசியக் கட்சியுடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் கூட்டுச் சேர்ந்து ஏமாந்தது தான் கடந்தகால இலங்கைத் தமிழர் வரலாற்றின் அத்தியாயங்கள்.

சிங்களத் தலைமைகள் திட்டமிட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றன என்ற காரணத்தாலேயேதான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது, ஒரு லட்சம் உயிர்களைப்பலியெடுத்த பின் புலிகளை அழித்து விட்டதாக தென்னிலங்கை மார் தட்டுகிறது. இப்போது வெள்ளம் கழுத்து வரை வந்து விட்டது. சேடம் இழுக்கும் சுதந்திரம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கழுத்து வரை வந்த வெள்ளத்தை இடுப்பளவுக் கேனும் குறைக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டிய நிலையே இப்போது....! நிச்சயமாகக் குறைக்க முடியும். தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றுபட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நாம் நிச்சயமாக எமது உரிமைகளை வென்றெடுக்கலாம். அதற்கான புறச்சூழல் இப்போது உருவாகியுள்ளது. தமிழ்த் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் ஒன்று கூடியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தலைமைகளுடன் முஸ்லிம் தலைமைகளும் சேர்ந்தால் கழுத்து வரை வந்த வெள்ளத்திலிருந்து நீந்திப் புதிய அரசியல் வாழ்க்கையை ஆரம்பிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல. காரணம் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வெளி அழுத் தங்கள் அதிகரித்துள்ளன. அத்துடன் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலிலும் சிறுபான்மையினரின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தேவை. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை தமிழ் முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பயன்படுத்துவார்களா?

நன்றி http://www.uthayan.com/Welcome/afull.php?id=188&L=T&1258866196

தமிழ் பேசும் தலைவர்களின் சூரிச் மாநாட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என்று டக்ளஸ் தெரிவிப்பு

சுவிற்ஸர்லாந்தின் தலைநகர் சூரிச்சில் நடைபெற்று வரும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களின் கூட்ட முடிவுகள் தொடர்பான கூட்டறிக்கை..

இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொது இணக்கப்பாட்டை எட்டும் முயற்சியில் சிறுபான்மைக் கட்சிகளுக் கிடையில் நடைபெற்றுவரும் கூட்டத்தின் இறுதி முடிவுகள் இன்று ஞாயிற்றுக் கிழமை அறிவிக்கப்படும் என்று ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கிறார்.

பொது இணக்கப்பாடு குறித்த தீர்மானங்களை தற்போது தம்மால் வெளியிட முடியாது எனவும் அவர் தமிழோசைக்குத் தெரிவித்தார். பொதுவாக சுமுகமான முறையில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்ற போதிலும் சில விடயங்கள் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திர காந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூஃப் ஹக்கிம் மற்றும் மலையக அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் பேசும் தலைவர்களின் சூரிச் மாநாட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என்று டக்ளஸ் தெரிவிப்பு

பொதுவாக சுமுகமான முறையில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்ற போதிலும் சில விடயங்கள் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்ப ஜனநாயகம் மலருது என்று சொல்லுங்கோ.சிறிலங்காவில மலராத ஜனநாயகம் சுவிஸில

மலருது போல கிடக்குது.

எங்கன்ட வசம்பண்ணைக்கு எதாவது செய்தி தெரிந்து இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் பிணத்தை விற்று பிழைக்கும் பிணம் தின்னிக் கழுகுகள் கூட்டம்தான் இது.

இதில் விரைவில் த. தே கூ இணையும்

இதற்கேன் இவ்வளவு கடிபாடுகள். அன்று மேற்கத்தய நாடுகள் கூட்டாக இணைந்து தமிழினத்தைப் பலவீனப்படுத்துவதற்குக் கருணாவைப் பிரித்ததுபோல், இன்று பொன்சேகாவை மகிந்தவிடமிருந்து பிரித்து, பொன்சேகாவிற்குப் பலம் சேர்ப்பதற்காகத்தான் இந்த மகாநாடு என்று எனக்குப் புலப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதன்,

தமிழரின் தலவைர் என்று சொல்லும் உரிமை யாருக்கு இருக்கிறது என்று நீங்களோ நானோ முடிவு செய்து விட முடியாது.

டக்ளஸ் மற்றும் பிள்ளையான் இருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் வேறு ஒரு வேட்பாளருக்கு போட்டிருக்கலாம். அப்படி செய்யவில்லை.

நான் அவர்கள் ஆதரவாளன் இல்லை. அவர்கள் எப்போது தமிழரின் அரசியல் தலைவர் ஆனார்கள் என்ற உங்களின் கேள்விக்குத்தான் பதில் சொல்கிறேன். எனவே அவர்களை திட்டும் போது வாக்களித்த மக்களையும் சேர்த்துத்தான் திட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை நம்பி மோசம் போவதைவிட சிங்களக்கட்சியான ஜேவிபியின் பின்னால் செல்லலாம் (அதாவது சோமவன்ஸ அமரசிங்க தலைமையிலான ஜேவிபி) அவர்கள் சிலவேளை நாடு இரண்டாகப் போய்விடக்கூடாது என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்திருக்கிறார்கள தான், ஆனால் தமிழர்கட்கு எதிராக இனவாதக்கருத்துக்களைப் பதிவுசெய்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. மற்றும் தனது சொந்த இனத்தின் விடுதலைப்போராட்டத்தையே காட்டிக்கொடுக்கும். தமிழர்களை இனவழிப்புச்செய்தவனையே கட்டிப்பிடிக்கும் தமிழர்தலைவர்கள் எனக்கூறிக்கொள்ளும், தமிழர்களைவிட இவர்கள் நல்லவர்கள். காரணம் வேறு இனமாக இருந்தாலும் தமிழர்கள்மீது அனுதாபம் உள்ளவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.