Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதேசவாதத்தை களைந்தெறியும் "துரோக பட்டங்கள்"!!

Featured Replies

மே 18 இனோடு விடுதலை புலிகளின் தலைமைத்துவமே சிங்கள இராணுவத்தினால் துடைத்தழிக்கப்பட்டு, தமிழீழ கனவுகளுடன் தம் எதிர்காலம், வாழ்வு, உறவுகளை தூக்கி எறிந்து அர்பணித்த பல ஆயிரம் போராளிகள் இன்று சிங்கள கொலை முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உடபடுத்தப்பட்டும், கிரமமாக கொன்றொளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வட/கிழக்கு காடுகளில் ஓரிரு தளபதிகளுடன் சில நூறு போராளிகளே எஞ்சியுள்ளனர்.

normal212g.jpg

கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகளின் தளபதியாக இருந்த கருணாவின் செயற்பாடுகளை விடுதலை புலிகளின் தலைமை கண்டு கொள்ளாமல் விட்டதன் காரணமாக, இப்போராட்ட அழிவின் முதல் அங்கமாக கருணாவின் பிரிவு வழிவகுத்தது. புலிகளுக்கு போராளிகளை கிரமமாக வழங்கிய கிழக்கு பிரதேசம், ஏறக்குறைய விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட பிரதேசமாக மாறியது. அங்கு கருணாவின் பிரிவிற்கு பின்னர் தளபதி ராமின் வழிநடத்துதலின் சில நூறு போராளிகளே அம்பாறை காடுகளில் நிலை கொண்டிருந்தனர். கிழக்கில் எஞ்சிய ஏனைய சில தளபதிகள், போராளிகள் வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை தளபதி ராமுக்கு உதவியாக சில வடக்கு தளபதிகளும் சென்று அங்கு மாறி மாறி நிலை கொண்டிருந்தனர். இறுதியாக கிழக்கிற்கு சென்ற வட தளபதி நகுலனே.அங்கிருந்து தளபதி நகுலன் திரும்பும் முன், வன்னியில் எல்லாம் முடிந்து விட்டது. நகுலனும் கிழக்கிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை.

மே 18 இற்கு பின்னர், வடகிழக்கில் விடுதலை புலிகள் என்று கூறுமளவிற்கு எஞ்சியிருப்பவர்கள் தளபதிகள் ராம், நகுலன் உட்பட்ட சில போராளிகளே. ஆயுதங்கள் அற்று, மருத்துவ வசதிகள் அற்று, ஒருவேளை உணவிற்கே காட்டு இலை கொடிகளை நம்பியே இருக்கும், எமக்காக புறப்பட்ட இவர்கள் இன்று என்ன செய்வது என்று தெரியாமல் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர்.

அழித்தொழிக்கப்பட்ட விடுதலை புலிகளில் இன்று மூத்த உறுப்பினராக இருப்பவர் தளபதி ராமே. அதேவேளை இப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பும் இவர் கைகளிலேயே உள்ளது. இதற்கு உறு துணையாக இருக்க வேண்டியவர்கள் புலம் பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள். அங்குள்ள போராளிகளின் கைகளை பலப்படுத்த வேண்டியவர்களும் இவர்களே.

ஆனால் எல்லாம் தலை கீழாக நடைபெறுகிறது. இங்கு புலத்தில் விடுதலை புலிகளின் அசையா/அசையும் சொத்துக்கள் ஏறக்குறைய ஒரு பில்லியன் பவுன்கள் என சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ள நிலையில், அச்சொத்துக்கள் மூன்றாமவர் கைகளுக்கு சென்று விடாமல் பார்ப்பது எஞ்சியிருக்கும் விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர்களின் பொறுப்பு.

தளபதி ராம், நிதி நிலவரங்கள் தொடர்பாக சில கேள்விகளை தொடுத்ததை அடுத்து, விடுதலை புலிகளின் அனைத்துலக செயற்பாட்டாளர்கள், "தளபதி ராம் சிறிலங்கா அரசின் கைகளில் வீழ்ந்து விட்டார்" என புரளியை கிளப்பி விட்டனர். அதை விட தொடர்ச்சியாக "தளபதி ராம் கைது", "ராமை நம்ப முடியாது", "ராம், கருணாவின் கைக்கூலி" போன்ற பல வகையான வதந்திகளை, இவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படும் இணையத்தளங்கள், இவர்களுக்கு ஆதரவாக செயற்படும் பத்திரிகையாளர்கள் மூலம் கிளப்பியபடியுள்ளனர்.

nagulanin.jpg

இதையடுத்து தளபதி நகுலன், சில தொடர்புகளை, புலம்பெயர் விடுதலை புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் ஏற்படுத்த முற்பட்ட போது, தளபதி நகுலனும் தயவு தாட்சனியமன்றி துரோகி ஆக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் தளபதி ராமுக்கு துரோகி பட்டம் வழங்கப்பட்டபோது, ராமை கிழக்கு மாகாணத்தவன் என்ற படியினால்தான் துரோகி என்கிறார்கள் என்று கூறியோரின் முகத்தில் அடித்தால் போல் இன்று நகுலனுக்கும் துரோகி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சிறு குறிப்பு: ஏறக்குறைய ஒரு வருடத்து முன் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பத்திரிகைகள், படப்பிரதிகள் விற்கும் கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன். அக்கடையில் வேலை செய்யும் பொடியன் கண்கள் கலங்கியபடி நின்றிருந்தான். பக்கத்தில் நின்றவரிடம் ஏன் என்று கேட்டேன். அவர் கூறினார், "இவனுக்கு பேசி, இங்கு வருவதற்கு வவுனியா ஊடாக வந்த பிள்ளையை, ஈ.பி.டி.பியும்/ஆமியும் சேர்ந்து பிடித்து கொலை செய்து போட்டு, கிணறு ஒன்றுக்குள் போட்டு விட்டார்கள். நேற்று முந்தினம்தான் உடல் எடுத்து தகனம் செய்தார்களாம். இன்றுதான் இவனுக்கு தெரியும்" என்றார். பின் தான் கேள்விப்பட்டேன் அப்பிள்ளையை வவுனியாவில் இருந்து செயற்படும் ஈ.பி.டி.பியோடொ சேர்ந்து ஆமியும் பிடித்து கொண்டு சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் கொலை செய்தார்கள் என்று. இப்படி கொலை செய்யப்பட்ட பெண் வேறு யாருமல்ல, தளபதி நகுலனின் சொந்த சகோதரியே! அவள், நகுலனின் சகோதரி என்ற காரணத்துக்காகத்தான் பிடிக்கப்பட்டாள் பின் கொலை செய்யப்பட்டாள். சகோதரியின் இரத்தம் சிங்களவனின் கைகளில் இருந்து காயும் முன்னம் நகுலன் சிங்கள கூலியாகி விட்டாரா???

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

Mediarelease_bytheLTTENEW_22112009.jpg

ஊடகங்களில் வெளியிடச்சொல்லி தளபதி ராமினால் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம்.

  • தொடங்கியவர்

நன்றிகள் சாத்திரியார் இணைப்பிற்கு, ஏன் இக்கருத்தை இங்கு எழுதினேன், என்றால், அங்கு ஓரிரு தளபதிகளோடு, சில போராளிகள் சொல்லானா துன்பங்களுக்கு மத்தியில், இப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உறுதியில் இருக்க, இங்கு ஆடம்பர மாவீரர் தின நிகழ்வுகள். அங்குள்ள போராளிக்களுக்கான கொடுப்பனவுகள் ஏறக்குறைய நிறுத்தப்பட்ட நிலையில், இவ்வாடம்பரங்கள் புலத்தில்; தேவையா?????

இங்கு வந்து செயற்பட்ட ஒருவர், இன்று குடும்பத்தை தென் ஆபிரிக்காவிற்கு கூப்பிட்டு, அங்கு 500,000 பவுண்ஸ் பெறுமதியான வீடொன்றை வாங்கியதாக தகவல். கேட்தற்கு தலைவர் தன் செயற்பாடுகளுக்கு தனக்கு தந்த பணத்தில் என்கிறாராம்.

இங்குள்ளவர்களை முதலில் அடையாளம் காண வேண்டும், அவர் கைகளில் சுருண்டு கிடக்கும் எம்மக்களின் பணங்களை பாதுகாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவின் கைஆள் இந்த செய்தியை இணைத்து இருபதால் இதில் உண்மை இருக்கத்தான் செய்யும், அவருக்கு கொடுக்கபடும் 500 யூரோவிற்க்கான வேலையை அவர் செய்கிறார்.

"எப்பொருள் யார் வழி கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு"

இக்கருத்து இணைத்தவர் இது வரை எழுதியவற்றை வாசிப்பவருக்கு இவரின் உண்மைத்தன்மை புரியும். :)

எங்கள் கண்மணிகளின் நினைவு நாள் இவருக்கு ஆடம்பர நிகழ்வு. :D:D:D

கழுதைக்கு தெரியுமா கற்பூர வசனை. :D

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

இது முல்லைமண் தளத்தில் வந்த கட்டுரை இந்தத் தலைப்புடன் சம்பத்தப்பட்டது..இதனையும் படித்துப் பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showforum=3

  • தொடங்கியவர்

சித்தன்,

எமக்காக போராட புறப்பட்ட பன்னீராயிரம் போராளிகள் கொலைசித்திரவதை முகாங்களில்!! எஞ்சியிருக்கும் சில போராளிகள் காடுகளில் மிருக வாழ்கை!! எமக்காக எல்லாவற்றையும் துறந்த மக்கள் முட்கம்பி முகாங்களுள்!!! ......

உங்களுக்கு மட்டும்தான் மாவீரர்கள் சொந்தக்காரர்கள் என நினைத்து விடாதீர்கள்! எம் உறவினர்கள், நண்பர்களும் சிதக்கப்பட்ட கல்லறைக்களுக்குல் உறங்குகின்றனர்.

இங்கு மாவீரர் நினைவு அனுஸ்டிப்பதாயின், இன்றைய நிலையில் ஓர் பாரிய மைதானத்தில் நடத்துங்கள். தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழக உலகம் சுற்றும் வாலிபர்கள் எல்லாம் தேவையா???

இவர்கள் மாவீரர்களை கொச்சைப்படுத்துகிறார்களே ஒழிய அவர்களை நினைவு கூர முற்படவில்லை. மாவீரர்களை பணம் சம்பாதிக்கும் விலை பொருளாக்குகிறார்கள்.

"கருணாவுடன் ரான்" ....... கிழக்கு மாகாணத்தவன் ராம் என்பதால் கூசாமல் கதைக்குகிறீர்கள். அப்போ நகுலனும், கருணாவின் வீட்டிலா???

சித்தன்,

எமக்காக போராட புறப்பட்ட பன்னீராயிரம் போராளிகள் கொலைசித்திரவதை முகாங்களில்!! எஞ்சியிருக்கும் சில போராளிகள் காடுகளில் மிருக வாழ்கை!! எமக்காக எல்லாவற்றையும் துறந்த மக்கள் முட்கம்பி முகாங்களுள்!!! ....

அண்ணோய் கைது செய்யப்பட்டது 16 000 போராளிகளுக்கும் மேல்.... எனது உறவினர் பற்றி நான் விசாரித்த போது பிரித்தானிய செஞ்சிலுவை சங்கத்தில் சொல்லப்பட்டது.... 16 000 பேருக்கான கணக்கை செஞ்சிலுவை வைத்து இருக்கிறது... அதில் பல மூத்த அரசியல் தலைவர்கள் அடக்கம் இல்லை...

இப்ப அது சுருங்கி 12 000 மாக போய் இருக்கிறது இதுவே 7000 மாக சுருங்கினாலும் ஆச்சரியம் இல்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் தமிழர்கள் பலர் விடுதலையின் பேரால் செய்யும் செயல்கள் மக்களுக்கு தெரியாது என்று நினைக்க வேண்டாம்.

பொன்னம்பலம் தொடக்கம் அமிர்தலிங்கள் ஈறாக நடத்திய சிங்கள இனத்தை இக்கட்டிலிருந்து காப்பாற்றும் இழி தமிழர்களின் நிலை, கடந்த 30 வருடங்களாக மறைங்து இருந்தது

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினத்தை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது.அதுவும் புலத்தில் உள்ள இளைய தலை முறைக்கு இது போன்ற நிகழ்வுகளே விடுதலைப் போராட்டத்தின் தேவையையும் அதற்காக நமது உறவுகள் கொடுதத விலையையும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி விடுதலைத்தீயை அணையாமல் தொடர்ந்து முன்னெடுக்க இது தேவை.இதை ஆடம்பர நிகழ்வு என்று சொல்வதிலிருந்தே சொல்பவரின் உள் நோக்கம் விளங்கிறது.மாவீரர் நினைவு இல்லங்கள் சிறிலங்கா அரசால் அழிக்கப்படும் என்று தெரிந்தும் தலைவர் நினைவில்லங்களை அழகுற அமைத்தது காரணமில்லாமல் அல்ல.

புலம் பெயர் தமிழர்கள் பலர் விடுதலையின் பேரால் செய்யும் செயல்கள் மக்களுக்கு தெரியாது என்று நினைக்க வேண்டாம்.

பிரித்தானியாவில் இம்முறை மாவீரர் நிகழ்வை ஒட்டி £250,000 சேர்க்க வேண்டுமென்று, இங்குள்ள விடுதலை புலிகளின் செயற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளார்களாம். அதனை ஒட்டி பண வசூல் தொடங்கி விட்டதாம். ஏன் இந்த £250,000 பணம்?

1. ஆயுதம் வாங்கவா?

2. அங்கு மிஞ்சியிருக்கும் போராளிகளுக்கு அனுப்பவா?

3. இல்லை, வவுனியா சித்தரவதை முகாங்களில் வதைபடும் ஆயிரக்கணக்கான போராளிகளின் விடுதலைக்காகவா?

4. இல்லை, காலா காலமும் மக்களின் பணத்தில் வாழ்கையை, இவர்கள் ஓட்டவா?

  • கருத்துக்கள உறவுகள்

நாலாவது தானே தங்கள் விருப்பம்

எனக்குத்தெரியும் அதை எழுதாமல் முடிக்கமாட்டீர்கள் என்று....

நா.... என்ன நடந்தாலும் காலைத்தான் தூக்குமாம்....

  • கருத்துக்கள உறவுகள்

ராமும் நகுலனும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இல்லையா?

தென் தமிழீழக் காடுகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இல்லையா?

இல்லையென்றால், தற்போது ஏவல் செய்ய யாருமில்லை!

தமிழ்நெற் செய்தி (கிலேசத்துடன் எழுதப்பட்டுள்ளது).

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=30663

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 இனோடு விடுதலை புலிகளின் தலைமைத்துவமே சிங்கள இராணுவத்தினால் துடைத்தழிக்கப்பட்டு, தமிழீழ கனவுகளுடன் தம் எதிர்காலம், வாழ்வு, உறவுகளை தூக்கி எறிந்து அர்பணித்த பல ஆயிரம் போராளிகள் இன்று சிங்கள கொலை முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உடபடுத்தப்பட்டும், கிரமமாக கொன்றொளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், வட/கிழக்கு காடுகளில் ஓரிரு தளபதிகளுடன் சில நூறு போராளிகளே எஞ்சியுள்ளனர்.

normal212g.jpg

கிழக்கு மாகாணத்தில் விடுதலை புலிகளின் தளபதியாக இருந்த கருணாவின் செயற்பாடுகளை விடுதலை புலிகளின் தலைமை கண்டு கொள்ளாமல் விட்டதன் காரணமாக, இப்போராட்ட அழிவின் முதல் அங்கமாக கருணாவின் பிரிவு வழிவகுத்தது. புலிகளுக்கு போராளிகளை கிரமமாக வழங்கிய கிழக்கு பிரதேசம், ஏறக்குறைய விடுதலை புலிகள் தடை செய்யப்பட்ட பிரதேசமாக மாறியது. அங்கு கருணாவின் பிரிவிற்கு பின்னர் தளபதி ராமின் வழிநடத்துதலின் சில நூறு போராளிகளே அம்பாறை காடுகளில் நிலை கொண்டிருந்தனர். கிழக்கில் எஞ்சிய ஏனைய சில தளபதிகள், போராளிகள் வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை தளபதி ராமுக்கு உதவியாக சில வடக்கு தளபதிகளும் சென்று அங்கு மாறி மாறி நிலை கொண்டிருந்தனர். இறுதியாக கிழக்கிற்கு சென்ற வட தளபதி நகுலனே.அங்கிருந்து தளபதி நகுலன் திரும்பும் முன், வன்னியில் எல்லாம் முடிந்து விட்டது. நகுலனும் கிழக்கிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை.

மே 18 இற்கு பின்னர், வடகிழக்கில் விடுதலை புலிகள் என்று கூறுமளவிற்கு எஞ்சியிருப்பவர்கள் தளபதிகள் ராம், நகுலன் உட்பட்ட சில போராளிகளே. ஆயுதங்கள் அற்று, மருத்துவ வசதிகள் அற்று, ஒருவேளை உணவிற்கே காட்டு இலை கொடிகளை நம்பியே இருக்கும், எமக்காக புறப்பட்ட இவர்கள் இன்று என்ன செய்வது என்று தெரியாமல் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர்.

அழித்தொழிக்கப்பட்ட விடுதலை புலிகளில் இன்று மூத்த உறுப்பினராக இருப்பவர் தளபதி ராமே. அதேவேளை இப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பொறுப்பும் இவர் கைகளிலேயே உள்ளது. இதற்கு உறு துணையாக இருக்க வேண்டியவர்கள் புலம் பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள். அங்குள்ள போராளிகளின் கைகளை பலப்படுத்த வேண்டியவர்களும் இவர்களே.

ஆனால் எல்லாம் தலை கீழாக நடைபெறுகிறது. இங்கு புலத்தில் விடுதலை புலிகளின் அசையா/அசையும் சொத்துக்கள் ஏறக்குறைய ஒரு பில்லியன் பவுன்கள் என சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ள நிலையில், அச்சொத்துக்கள் மூன்றாமவர் கைகளுக்கு சென்று விடாமல் பார்ப்பது எஞ்சியிருக்கும் விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர்களின் பொறுப்பு.

தளபதி ராம், நிதி நிலவரங்கள் தொடர்பாக சில கேள்விகளை தொடுத்ததை அடுத்து, விடுதலை புலிகளின் அனைத்துலக செயற்பாட்டாளர்கள், "தளபதி ராம் சிறிலங்கா அரசின் கைகளில் வீழ்ந்து விட்டார்" என புரளியை கிளப்பி விட்டனர். அதை விட தொடர்ச்சியாக "தளபதி ராம் கைது", "ராமை நம்ப முடியாது", "ராம், கருணாவின் கைக்கூலி" போன்ற பல வகையான வதந்திகளை, இவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படும் இணையத்தளங்கள், இவர்களுக்கு ஆதரவாக செயற்படும் பத்திரிகையாளர்கள் மூலம் கிளப்பியபடியுள்ளனர்.

nagulanin.jpg

இதையடுத்து தளபதி நகுலன், சில தொடர்புகளை, புலம்பெயர் விடுதலை புலிகளின் செயற்பாட்டாளர்களுடன் ஏற்படுத்த முற்பட்ட போது, தளபதி நகுலனும் தயவு தாட்சனியமன்றி துரோகி ஆக்கப்பட்டார்.

ஆரம்பத்தில் தளபதி ராமுக்கு துரோகி பட்டம் வழங்கப்பட்டபோது, ராமை கிழக்கு மாகாணத்தவன் என்ற படியினால்தான் துரோகி என்கிறார்கள் என்று கூறியோரின் முகத்தில் அடித்தால் போல் இன்று நகுலனுக்கும் துரோகி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சிறு குறிப்பு: ஏறக்குறைய ஒரு வருடத்து முன் என் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு பத்திரிகைகள், படப்பிரதிகள் விற்கும் கடை ஒன்றுக்கு சென்றிருந்தேன். அக்கடையில் வேலை செய்யும் பொடியன் கண்கள் கலங்கியபடி நின்றிருந்தான். பக்கத்தில் நின்றவரிடம் ஏன் என்று கேட்டேன். அவர் கூறினார், "இவனுக்கு பேசி, இங்கு வருவதற்கு வவுனியா ஊடாக வந்த பிள்ளையை, ஈ.பி.டி.பியும்/ஆமியும் சேர்ந்து பிடித்து கொலை செய்து போட்டு, கிணறு ஒன்றுக்குள் போட்டு விட்டார்கள். நேற்று முந்தினம்தான் உடல் எடுத்து தகனம் செய்தார்களாம். இன்றுதான் இவனுக்கு தெரியும்" என்றார். பின் தான் கேள்விப்பட்டேன் அப்பிள்ளையை வவுனியாவில் இருந்து செயற்படும் ஈ.பி.டி.பியோடொ சேர்ந்து ஆமியும் பிடித்து கொண்டு சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் கொலை செய்தார்கள் என்று. இப்படி கொலை செய்யப்பட்ட பெண் வேறு யாருமல்ல, தளபதி நகுலனின் சொந்த சகோதரியே! அவள், நகுலனின் சகோதரி என்ற காரணத்துக்காகத்தான் பிடிக்கப்பட்டாள் பின் கொலை செய்யப்பட்டாள். சகோதரியின் இரத்தம் சிங்களவனின் கைகளில் இருந்து காயும் முன்னம் நகுலன் சிங்கள கூலியாகி விட்டாரா???

என்னத்தை எழுத?

உணவும் உடையுமில்லை காட்டுக்குள். உண்மைதான்!

பல ஆயிரம் ஆண்டுகள் மனிதன் காட்டிலேயே வாழ்ந்தான் அப்போது நாடுகளோ நகரங்களோ இருக்கவில்லை இருந்த ஒன்று காடுதான்.

ஆனாலும் கட்டுரையாளருக்கு தேவை ஏற்பட்ட உடன் இலை குழைகளை தின்றுகொண்டிருப்பவர்களுக்கு. சர்வதேச தொடர்பாடல்களுக்கான எதிரியால் ஒட்டுகேட்க முடியாத அதி நவீன உபகரணங்கள் மட்டும் கிடைத்துவிடுகின்றது?

என்னத்தை எழுதி கிழிக்கிறிங்களோ தெரியவில்லை. நாங்கள் பத்திரிகை ஏதும் நடத்தவில்லை....... கட்டுரைகளும் படிக்கவில்லை. கொஞ்சம் பணம் கஸ்டம் தருவீர்கள் என்றால் தொட்ர்புகொளுங்கள். புலிஎதிர்ப்பு கட்டுரைகளா....... புலம்பெயர் நடவடிக்கைகளை குழப்பும் கட்டுரைகளா..... மக்களை குழப்பி மகிந்தவே காவல்தெய்வம் என்று நம்ப வைக்கும் கட்டுரைகளா...

எதுவானாலும் குறித்த நேரத்தில்.......... அதிநவீன சொற்பிரயோகங்களுடன் எழுதிதர காத்திருக்கின்றோம்!

Edited by Maruthankerny

ஆனாலும் கட்டுரையாளருக்கு தேவை ஏற்பட்ட உடன் இலை குழைகளை தின்றுகொண்டிருப்பவர்களுக்கு. சர்வதேச தொடர்பாடல்களுக்கான எதிரியால் ஒட்டுகேட்க முடியாத அதி நவீன உபகரணங்கள் மட்டும் கிடைத்துவிடுகின்றது?

இராணுவ வேலியை உடைத்துக் கொண்டு சில போராளிகளுடன் நகுலன் வெளியேறியவுடனேயே வெளிநாட்டிலுள்ள தனது நண்பர்களுடன் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். அன்றே தனது நண்பர் ஒருவரிடம் வெளிநாட்டிலுள்ளவர்கள் தம்மைக் கைவிட்டு விட்டார்கள் என்பது போன்ற கருத்தைக் கூறியுள்ளார். அப்போது முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்திருக்கவில்லை. வெளிநாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

கிழக்கு மாகாணத்தில் ஓரிடத்தில் தங்கியிருந்தபோது இராணுவத்தின் தேடுதல் வேட்டையின்போது அவருடன் இருந்த 13 போராளிகள் கொல்லப்பட நகுலன் மயிரிழையில் தப்பினார். அன்றுமுதல் உணவின்றி பல இன்னல்களளை அனுபவித்ததை அறிவேன்.

அவர் வன்னியிலிருந்து வெளியேறியது முதல் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்புகளைப் பேணி வந்தார். புலிகளின் தளபதியாக இருந்த அவர் தொலைத் தொடர்பிற்கு எந்த உபகரணத்தைப் பாவித்தார் என்பது பற்றியெல்லாம் ஆய்வு செய்வததை விட எஞ்சியிருந்த போராளிகளை ஒன்றிணைத்து ஈழத்தில் புலிகளின் இருப்பையே எம்மால் பாதுகாக்க முடியாமல் போனது ஏன் என்பது பற்றி யோசித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த நிலையில் இன்னும் வெளிநாடுகளிலிருந்து ஆயுதப் போராட்டம் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கிறோம்.

நகுலன் இராணுவத்துடன் இணைந்தது உண்மையானால் அவர் துரோகி ஆக்கப்பட்டார் என்பதே உண்மையாக இருக்கும்.

ஆனாலும் கட்டுரையாளருக்கு தேவை ஏற்பட்ட உடன் இலை குழைகளை தின்றுகொண்டிருப்பவர்களுக்கு. சர்வதேச தொடர்பாடல்களுக்கான எதிரியால் ஒட்டுகேட்க முடியாத அதி நவீன உபகரணங்கள் மட்டும் கிடைத்துவிடுகின்றது?

போர் நடந்த பகுதியில் பாவிக்க பட்ட உபகரணங்களை போண்ற அதே தொழில் நுட்பங்களை கிழக்கிலும் பாவித்து இருக்க மாட்டார்கள் தலைவர் கொடுத்து இருக்க மாட்டார் எண்று நம்புகிறீர்களா....??? கடைசி நாளிலும் சூசை அண்ணா பேசினாரே... எப்படி பற்றரி சார்ச் பண்ணி இருப்பார், ஒருவேளை ஆமிக்காறன் தான் சார்ஜ் பண்ணி கொடுத்து பேசி இருப்பாரோ எண்று எப்பவாவது சிந்தித்து இருப்பார்களா யாராவது...

போர் நடந்து முடிந்த பின்னரும் தயாமோகன் அண்ணை பேசினாரே மட்டக்களப்பில் இருந்து... அதைப்போல அவர்களால் பேச முடியாதா...??

உங்களை கெஞ்சி கேக்கிறேன்... இங்கை இருப்பவர்கள் சொல்லும் அபாண்டங்களை கொஞ்சமும் நம்பாதீர்கள்...

தமிழர்கள் ஒற்றுமையாக ஒரு தலைமையின் கீழ் இனி ஒரு போதும் திரளக்கூடாது என்பதுதான் சிங்களவரின் நோக்கமே... ஈழத்தில் இருப்பவர்களை விட புலம்பெயர்ந்து நிக்கும் பலரே துரோகியாக இலங்கை அரசின் வேலைத்திட்டங்களை நகர்த்தும் சந்தர்ப்பங்கள் அதிகம்...

Edited by தயா

தயா அண்ணா எனக்கு இதை கொஞ்சம் விளங்கப்படுத்துவீர்களா?

[குறீப்பாக சூசை அண்ணா பற்றீ எழுதியதை] நன்றீ.

  • கருத்துக்கள உறவுகள்

போர் நடந்த பகுதியில் பாவிக்க பட்ட உபகரணங்களை போண்ற அதே தொழில் நுட்பங்களை கிழக்கிலும் பாவித்து இருக்க மாட்டார்கள் தலைவர் கொடுத்து இருக்க மாட்டார் எண்று நம்புகிறீர்களா....??? கடைசி நாளிலும் சூசை அண்ணா பேசினாரே... எப்படி பற்றரி சார்ச் பண்ணி இருப்பார், ஒருவேளை ஆமிக்காறன் தான் சார்ஜ் பண்ணி கொடுத்து பேசி இருப்பாரோ எண்று எப்பவாவது சிந்தித்து இருப்பார்களா யாராவது...

போர் நடந்து முடிந்த பின்னரும் தயாமோகன் அண்ணை பேசினாரே மட்டக்களப்பில் இருந்து... அதைப்போல அவர்களால் பேச முடியாதா...??

உங்களை கெஞ்சி கேக்கிறேன்... இங்கை இருப்பவர்கள் சொல்லும் அபாண்டங்களை கொஞ்சமும் நம்பாதீர்கள்...

தமிழர்கள் ஒற்றுமையாக ஒரு தலைமையின் கீழ் இனி ஒரு போதும் திரளக்கூடாது என்பதுதான் சிங்களவரின் நோக்கமே... ஈழத்தில் இருப்பவர்களை விட புலம்பெயர்ந்து நிக்கும் பலரே துரோகியாக இலங்கை அரசின் வேலைத்திட்டங்களை நகர்த்தும் சந்தர்ப்பங்கள் அதிகம்...

எனது கேள்வி தசறுதலாக உங்களால் புரியபட்டிருக்கின்றது? அல்லலு எனது கேள்வி தெளிவில்லாது உள்ளது?

கட்டுரையாளரின் அடைமொழிகளை சுட்டிகாட்டியே எனது கேள்வி உள்ளது. தவிர நகுலனை பற்றியது அல்ல...... அது எனக்கு எட்டாததாகவே நான் நினை;க்கின்றேன். உண்மைகளை புரிந்து கொண்டு யாதர்த்தங்களை உணரும் அறிவில் ஈழதமிழன் இல்லை. சும்மா கருத்தாடுவதால் எந்தபயனும் இல்லை என்பதால்தான் இப்போது எட்டிபார்ப்பதும் இல்லை.

தற்போதைய ஆப்கானிஸ்தான் பிரதமர் கார்ஸவ் 8 வருடங்களாக இறந்துவிட்டார் என்றே நம்மபட்டது. அவர் இநற்துவிட்டார் என்ற எதிரிகளின் பிரச்சாரம் அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட இறந்தே எட்டுவருடம் திரைமறவில் இருந்தார். இன்று ஆப்கான் பிரதமர்! அவர்களுடைய பாதை தவறா சரியா என்பது என்னுடைய வாதமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.