Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவரின் பிறந்ததினம் என்ற பெயரில் ரொறன்ரோவில் அரங்கேறிய கொண்டாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் மக்கள் அல்லல்படும் இந்தத்தருணத்தில் பளபள விழாக்கள் தேவையில்லைத்தான்.

ஆனால் தேசியதலைவரின் பிறந்ததினம் என்பது ஒரு தேசியநாள்.

அதில் பங்குபற்றுபவர்கள் இனிமேல்தன்னும் ஆடம்பரங்களை குறைத்து எழுச்சியை அதிகரித்து பங்குகொள்வதுதான் முறை.

அதுசரி...சுவிஸில் போராடாமல் செத்தவனுகளுக்கு PLOTE நடாத்திய வீர(?) மக்கள் தினம் ஒரு கேளிக்கைநாள்போலவே நடாத்தப்பட்டது.

அதைப்பற்றி எந்த ஒருவரும் எழுதாதது கொஞ்சம் இடிக்குது.

அது ஜனநாயக நீரோடத்தில் நீச்சலடித்து நீராடும் வரை உங்களுக்கு புரியாது. அப்ப ஏன் எழுதுவான் என்றுதான்...............

கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி புலிகளை பென்ட் எடுக்கின்றோம்.

  • Replies 113
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலியின் கதையை அங்கு முடித்தாலும் இங்கு இருமடங்காக எழுச்சிபெற்று நிற்குதே மக்களை குழப்ப எடுத்த எந்த முயற்சியும் பயனளிக்கவில்லையே என்ற கொதிப்பில் இங்கே பலர் காரசரமாக கொக்கரிக்கின்றார்கள். என்ன செய்ய.................. இனமானத்தை விற்றும் பிழைப்பு நடத்தலாம் என்று உங்களைபோல் எல்லோராலும் கூலிக்கு மாரடிக்க முடியவில்லை.

அதற்காக இங்கே கொக்கரித்து என்ன ஆகப்போகின்றது?

ஒம் ஒம் கூலி தேவை என்றால் கிடைத்த இட்தில குப்பையை கொட்டுறதுதானே? உங்களின் நிலமை எனக்கு புரியுது..... சிலருக்கு புரியுதில்லை அதுதான் கருத்து நீளுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானே நானே என்று தான் எழுதினேன் எனேனில் உங்கள் போல் வெளிநாட்டில் இருந்து அனைத்து சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு எங்கேயோ ஒரு நாள் கொடியை தூக்கிகொண்டு றோட்டில் நிற்கும் நீங்கள் உங்களையும் போராளிகள் என்ற நினைப்பில் இணயத்தில் எழுதும் போது அப்படித்தான் தோன்றுகின்றது.என் மனதில் எப்பவும் எழுவது யோகியின் எண்ணமே.பொன்னம்மானின் அண்ணராக லண்டணில் இருந்து இயக்கத்திற்கு போய் பின் பெரிய பொறுப்புகள் எல்லாம் வகித்து பின் மாத்தயாவின் பிரச்சனையில் படாத சித்திரவதையெல்லாம் பட்டு திருமப வெளிவந்து புத்தியிர்ப்பு பெற்று இப்ப மீண்டும் சிங்களவனின் முகாமில். அதைவிட்டு கொடிபிடித்த நான், பிறந்தநாளுக்கு பட்டுப்புடவை,அடுத்தநாள் மஞ்சள் புடவை கட்டிய நான் எல்லாம் போராளி கணக்கில் கதைக்க பொறுக்கமுடியாமல் இருக்கின்றது.ஒரு அற்ப சந்தோசம் அதைக் கெடுப்பானேன்.

ஒப்பீட்டு கணக்கை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையில் நாம் எப்போது போராளிகள் போன்று கருத்து எழுதினோம் என்பதை சற்று விளக்கினால் நன்று. நாங்கள் போராளிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தான் கொடுத்தோம் உங்களை போன்ற சிலர் கொடுத்த விசத்தில் தான் இன்று அவர்களை நாம் சிறைகளில் தேட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

நீங்கள் கனபோரில் வரலாறு தெரிந்தவராக இருக்கின்றீர்கள். எப்பிடியோ, உங்களால் முடியாதவற்றை மற்றவர்கள் செய்தால் உங்களுக்கென்ன அது எனக்கும் பிடிக்காது தனே ஏன் என்றால் இன்னும் தமிழர்களுக்குள் அந்த பெறாமை அற்றுப்போகவில்லை!

பட்டுப்புடவை கட்டியவர்கள் பற்றியும் மஞ்சல் புடவை கட்டியவர்கள் பற்றியும் கதைக்கும் நீங்கள் எல்லாம் என்ன உடுப்பு போடமலோ நிகழ்வுகளுக்கு போறனீங்கள்?

அதையும் விடுவம் புதுசு புதுசா திரைப்படங்கள்... சன் கலைஞர் என்று தொலைக்காட்சி தொடர்கள் இன்னும் இன்னும் நாளாந்தம் ஒரு சாதாரண மக்கள் செய்யலாம் எனில் மகளீர் அமைப்பில் இருப்பவர்களோ, அது சார் அமைப்புக்களில் இருப்பவர்களோ ஒரு சாதாரண மக்களாக அவர்களது விருப்பங்களை செய்வது தவறு என நீங்கள் சொன்னால் உங்கள் ஆர்வக்கோளாறு காரணமாக உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது நீங்கள் திணப்பதாகவே கொள்ள முடிகின்றது. அற்ப சொற்ப மகிழ்வுக்காய் யாரும் கருத்தெழுதுவதில்லை. அதில் உங்களுக்கு மகிழ்விருக்கலாம் ஆனால் அது நம் வேலையல்ல.!

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றிரவு, தலைவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழா ஒரு கொண்டாட்ட நிகழ்வாக அமைந்ததேயன்றி ஒரு எழுச்சிநிகழ்வாக அமையவில்லை. முதலாவதாக, மகளிர் அமைப்பினரின் உடைகளைப் பற்றிக் குறிப்பிட்டேயாகவேண்டும். கிட்டத்தட்ட ஒரு கல்யாண வீட்டிற்குச் செல்வது போன்றே உடைகளை (சாறிகளை) அணிந்திருந்தார்கள். அவர்களின் உடைகள், மேக்கப்புகள் வெளிச்சத்தில் கண்கூசுமளவிற்கு இருந்தது. அவர்களின் அந்தத் தோற்றத்தைப் பார்த்தபோது, மே மாதம் நடந்த சோகநிகழ்வை நாம் கஸ்டப்பட்டுத்தான் எம் நினைவுக்குக் கொண்டுவரவேண்டியிருந்தது. அடுத்ததாக, அவர்களின் நிகழ்ச்சிகளும் போன வருடங்கள் நடத்தப்பட்டவை போலவே தலைவரின் பிறந்ததினத்தை சந்தோஸமாகக் கொண்டாடுவது போலவே இருந்தது. அங்கு நடந்தவற்றைப் பார்த்தபோது, என்னால் அங்கிருக்க முடியாமல் இடையிலேயே எழுந்து வந்துவிட்டேன். அது 9:30 இருக்கும். ஆனால், அதற்குப் பின்னரும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதானிருந்தது. இவ்வளவு செலவு செய்து எமக்கு இப்படியொரு நிகழ்ச்சி தேவைதானா? இந்தப் பணத்தில் அரைவாசியையேனும், இவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைப்பார்களா? அங்கு மக்கள் பட்டினி கிடக்க இவர்கள் விழா எடுக்கிறார்களாம். தமிழன் என்றுமே திருந்த மாட்டான் என்பதற்கு நேற்று இவர்கள் நடத்திய நிகழ்வே உறுதிப்படுத்துகிறது.

ஹாசினியின் ஆதங்கத்தில் நியாயம் இருப்பதை நானும் கண்ணுற்றேன். (கனடாவில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் அகதியாக வாழும் வளர்ந்த நாடுகளில் தான் இந்தப் பிரச்சனை எம்மவரிடம் குடிகொண்டிருக்கிறது..! நான் தாயகத்தில் மாவீரர் நாள் பிரகடனப்படுத்தியத்தில் இருந்து மாவீரர் தினத்தை அனுஸ்டித்து வருகிறேன். கார்த்திகை விளக்கீட்டிற்கு வீடு முழுக்க தீபம் ஏற்றுபவர்கள் மாவீரர் தினத்தை பிரகடனம் செய்த போது ஒரு சில வீடுகளைத் தவிர பல வீடுகள் இருளில் கிடந்தன. ஆமி வருமோ.. பொம்பர் வருமோ.. கொழும்புக்கு போகேலுமோ.. என்று பயந்து சுயநலத்தை முன்னிறுத்தி வாழ்ந்த தமிழர்களைப் பற்றி நான் நன்கு அறிந்திருக்கிறேன்..! இப்போது கூட எம்மவர்களில் அநேகருக்கு மாவீரர் தினம்.. தேசிய தலைவரின் பிறந்த தினங்களின் உண்மைத் தார்ப்பரியம் புரியவில்லை. வேண்டி வைத்திருக்கும் நகைக்கும் புடவைக்கும் சுடிதாருக்கும் வேலை கொடுக்கும் நாளாக இவற்றைக் கொண்டாட நினைக்கின்றனர். அதற்கான காரணத்தை எனியும் வளர்க்க அனுமதிப்பது அழகான விடயமல்ல..!)

தலைவரின் பிறந்த நாளை விடுவம்.. மாவீரர் தினக் கொண்டாடங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அடிக்கடி தாங்கள் 'போரைச் சாட்டு வைத்து புலம்பெயர்ந்த பொருளாதார அகதிகள்' என்று அண்மையில் சிறீலங்காச் சிங்கள அரசு உலகிற்குச் சொன்னது போல நடந்து காட்டுகிறார்கள்.

மாவீரர்களான தங்கள் பிள்ளைகளை இழந்து பெற்றோரும்.. உறவுகளும் வாடும் அந்த வேளையில் எம்மவரில் ஒரு கூட்டம் புத்தாடை.. பட்டாடை.. தங்க நகை அள்ளி அணிந்து ஏதோ தீபாவளிப் பண்டிகை போல் இதைக் கொண்டாடலாம் என்ற எண்ணத்தை வளர்த்து வருகின்றனர். இது மாவீரர் நாளின் நோக்கத்தையே சிதறடிப்பது போல் எனக்குத் தென்படுகிறது.

எதிர்காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கும் மக்கள் மாவீரர் நாள் தொண்டர்கள் போல சிவப்பு மஞ்சள் உடையணிந்து எளிமையாக மாவீரர்களின் நினைவுரைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்க வேண்டும்.

பள்ளிக்கு போகும் பிள்ளைகளிடம் சீருடை அறிமுகப்படுத்தியது ஏற்றத்தாழ்வுகளைக் களையவே. மாவீரர்களின் இலட்சியமும் வெறும் தேச விடுதலை அல்ல. எமது தமிழ் சமூகத்துக்குள் இருக்கும் சமூக பொருளியல் ஏற்றத்தாழ்வுகளை களைவதுமே. மாவீரர்கள் என்ற பதமே அதைக் களைந்துதான் நிற்கிறது. ஆனால்.. மக்களோ.. அதை வளர்க்கும் வகையில்.. ஆடம்பர சூழலை உருவகித்துக் கொள்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல..! அது வெளி உலகிற்கு தவறான ஒரு செய்தியையே கொண்டு செல்லும்..!

Edited by nedukkalapoovan

பொதுவாக கருத்தெழுதும் பல கள நண்பர்களே இந்த புலத்துப் புலூடாக்களை ஒத்துக் கொள்கின்றார்கள்.

ஆனால் முன்பு நான் எழுதியது போல் புலிகளையும் மக்களையும் சாட்டி சுருட்டி வாழந்தவர்கள் தான், தமது சுரண்டல்களுக்கு பாதிப்பு வரப் போகின்றதென்ற பயத்தில் உண்மைகளை எழுதுவோரை, இனமானத்தை விற்பதாகவும் கூலிக்கு மாரடிப்பதாகவும் கதை விட முனைகின்றனர். சக தமிழனின் உழைப்பை உறிஞ்சி வாழும் இந்தக் கூட்டங்களுக்கு உண்மைகள் உறைக்கத் தான் செய்யும். :):(

தாயகத்தில் அவர்களுக்கு உதவுகின்றோம் இவர்களுக்கு உதவுகின்றோம் என்று சுருட்ட, இன்னொரு கூட்டம் வாங்கிய பணத்தில் மூன்றில் ஒன்றை மட்டும் வழங்கி மிகுதியை ஏப்பம் விட்ட கதை களத்திலும் பார்த்தோமே. இனியும் ஏப்பம் விட கதையளக்கின்றார்கள்...... :lol::)

Edited by Vasampu

ஒப்பீட்டு கணக்கை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையில் நாம் எப்போது போராளிகள் போன்று கருத்து எழுதினோம் என்பதை சற்று விளக்கினால் நன்று. நாங்கள் போராளிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தான் கொடுத்தோம் உங்களை போன்ற சிலர் கொடுத்த விசத்தில் தான் இன்று அவர்களை நாம் சிறைகளில் தேட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.

நீங்கள் கனபோரில் வரலாறு தெரிந்தவராக இருக்கின்றீர்கள். எப்பிடியோ, உங்களால் முடியாதவற்றை மற்றவர்கள் செய்தால் உங்களுக்கென்ன அது எனக்கும் பிடிக்காது தனே ஏன் என்றால் இன்னும் தமிழர்களுக்குள் அந்த பெறாமை அற்றுப்போகவில்லை!

பட்டுப்புடவை கட்டியவர்கள் பற்றியும் மஞ்சல் புடவை கட்டியவர்கள் பற்றியும் கதைக்கும் நீங்கள் எல்லாம் என்ன உடுப்பு போடமலோ நிகழ்வுகளுக்கு போறனீங்கள்?

அதையும் விடுவம் புதுசு புதுசா திரைப்படங்கள்... சன் கலைஞர் என்று தொலைக்காட்சி தொடர்கள் இன்னும் இன்னும் நாளாந்தம் ஒரு சாதாரண மக்கள் செய்யலாம் எனில் மகளீர் அமைப்பில் இருப்பவர்களோ, அது சார் அமைப்புக்களில் இருப்பவர்களோ ஒரு சாதாரண மக்களாக அவர்களது விருப்பங்களை செய்வது தவறு என நீங்கள் சொன்னால் உங்கள் ஆர்வக்கோளாறு காரணமாக உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது நீங்கள் திணப்பதாகவே கொள்ள முடிகின்றது. அற்ப சொற்ப மகிழ்வுக்காய் யாரும் கருத்தெழுதுவதில்லை. அதில் உங்களுக்கு மகிழ்விருக்கலாம் ஆனால் அது நம் வேலையல்ல.!

வழமைபோல் உங்கள் தவறுகளை அடுத்தவன் மேல் போட்டு தப்பிக்கப் பார்க்கின்றீரகள். இவ்வளவு அழிவுகளுக்கும் காரணம் கூட இருந்து உங்களைப் போன்றவர்கள் பறித்த குழிகளே. புலத்திலிருந்து தப்பான தகவல்களை வன்னிக்கு வழங்கி நம்பிக்கையூட்டி அங்கிருந்தவர்களை புதைகுளிக்குள் அனுப்பி வைத்தவர்கள் யாரென்று எல்லோருக்கும் தெரியும். புலத்தில் இணையத்தயங்களினாலும் வானொலி, தொலைக்காட்சிகள் மூலமும் புலூடாக்களை அவிழ்த்து விட்டு கத்தை கத்தையாக பணம் சுருட்ட உங்களை போன்றவர்கள் ஆடிய நாடகமும் சுருட்டிய பணங்கள் அப்படியே பலரின் பைகளை நிரப்பியதும் தெரியும்.

இந்த நிகழ்வுகளுக்கு வந்த மக்கள் சாதாரணமான உடையில் வரும்போது நிகழ்ச்சியை நடாத்தியவர்களின் ஆடம்பரங்களைத் தான் காசினி குறிப்பிட்டார். அவர்களின் அந்த ஆடம்பரங்களை தனிப்பட்டவர்களின் பிறந்த நாள் விழாவிலோ அல்லது திருமண வீட்டிலோ அல்லது சாமத்தியச் சடங்குகளிலோ காட்டட்டுமே. அதை எவரும் குறை கூற மாட்டார்கள். உறவுகளை இழந்து உருக்குலைத்திருக்கும் மக்கள் முன்னே இவர்களின் ஆடம்பரங்கள் யாருக்காக??

அட பாவிங்களா.....................உந்த புடவையால எங்க போனாலும் ஓரே சிக்கலாய் தான் இருக்குது!!!!!!!!

எங்கட நெடுக்கர் சொன்னது போல சீருடையில எல்லாரும் போனால் எல்லாம் நலமே!!!!!!

நெடுக்கர் உம்முடைய கருத்து எல்லோராலும் உள் வாங்கப்பட வேண்டியது!!!!!!

சம்பந்தப்பட்டவர்கள் இதில் முக்கிய கவனம் எடுக்க வேண்டும் எனப்தே என்னுடைய ஆழமான கருத்தும் கூட

நடந்து முடிந்த மாவீரர் நிகழ்வு நிகழ்ச்சி ஒன்றுக்கு போய் வந்த எம் உறவு ஒருவர் சொன்னார்

வருகிற வருடம் சனி கிழமையாம் மாவீரர் தினம் இன்னும் குசியாக கொண்டாடுவாங்கள் அந்த மாதிரி தான் என்றார்!!!!!!

இதில் இருந்து தெளிவாக ஒன்றை மட்டும் புரிய கூடியதாக உள்ளது.................

அதாவது தங்கள் குருதியை தாய் மண்ணில் கலக்க வைத்து வீர மரணம் அடைந்த அந்த மறவர்களின் நினைவு கூறல்

நிகழ்வு எம்மவர்களின் பொழுது போக்கு நிகழ்வாகவும் தங்களின் பண வசதியை காட்ட பயன் படுத்தும் ஒரு பொது இடமாகவும்

அமைந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்!!!!!!!!

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருந்தால் என்றகருத்தில் தான் காசினி எழுதியிருந்தார்கள்.விமர்சனங்களை என்றுமே ஏற்றுக்கொள்ளாதவர்களால் 3 பக்கதிற்கு நீண்டு விட்டது திரி.வாழ்க ஜனநாயகம்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் காசினி இங்கு பதிந்திருக்கும் கருத்து முற்று முழுதாக தனிப்பட்ட பிரச்சினையே! தலைவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யார் என்ன உடை அணிந்திருக்கின்றனர் என்று பார்த்தது முதல் அதுகொண்டாட்டமா என்பது வரை அது தனிப்பட்ட பிரச்சினையே! பல்லாயிரம் தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் காசினி ஒன்ற தனி மனிதருக்கு நிகழ்வு பிடிக்கவி்லலை என்றால் அது தனிப்பட்ட பிரச்சினையே!

முதலில் தலைவரின் பிறந்த நாளையோ, மாவீரர்நாளையோ மகளீர் அமைப்பினர் அனுஸ்டிக்கவில்லை. தலைவரின் பிறந்த தினத்தை ஈழமுரசு பத்திரிகை "குழு" வும், மாவீரர் தினத்தை கனேடிய தமிழர் சமூகமும் இணைந்து நடாத்தியது. அப்படியிருக்க இந்நிகழ்வுக்குள் காசினி மகளீர் அமைப்பை இழுத்தது மகளீர் அமைப்புக்கும் காசினிக்கும் இடையே உள்ள தனிப்பட்ட முறுகல்நிலை என்று எண்ணத்தோன்றுகின்றது.

அதை அடிப்படையாக கொண்டு நீங்கள் (வசம்பு) எழுதிய கருத்துக்கள் ஆக்க பூர்வமானதாக இருந்திருக்கவில்லை. மாறாக குழம்பிய குட்டையில் எதையோ பிடிக்கவே நீங்கள் விளைகின்றீர்கள்.

அல்லது நடைபெற்று முடிந்த சில விடயங்களை பாரிய தவறுகளாக்க முற்ப்படுகின்றீர்கள். காசினிக்கு கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் நேரடியாக நிகழ்வுக்குழுவுடன் பேசியிருக்க முடியும். அதையே நான் செய்வேன். மாவீர் தின ஏற்பாட்டில் இருந்த சில முரண்பாடுகள் பற்றி அதையே சொன்னேன். அதற்காய் கூட்டம் போட்டு நான் கத்த போவதில்லை. கருத்துக்களை ஏற்றுக்கொள்ள கூடிய கட்டமைப்புக்கள் எமக்குள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்த தெரியாத காரணத்தால் தான் இன்று தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே இடைவெளி ஒன்று இருப்பதாக உங்களை போன்ற சிலர் கதையளந்து திரிய காசினி போன்றவர்கள் சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.

நன்றி நிதர்சன் நிகழ்வுகளை மகளிர் அமைப்பினர் நடாத்தவில்லை என்பதை தெரியப்படுத்தியதற்கு.

மேதகு தலைவர் அவர்களின் பிறந்தநாளை ஈழமுரசு பத்திரிகையினரே வருடாவருடம் முன்னெடுப்பதைப் போன்று முன்னெடுத்திருந்தார்கள். இதில் ஹாசினிக்கு மட்டும் மகளிர் அமைப்பைச் சார்ந்தவர்கள் உடுத்திய ஆடை கண்ணில் உறுத்தியது ஏன் என்று விளங்கவில்லை. அந்த நிகழ்வுக்கு நானும் சென்றிருந்தேன். அந்த நிகழ்வு தமிழினத்தின் தலைவன் பிறந்த பொன்நாளாக தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருநாள். அதை ஏற்றுக் கொண்டுதான் ஹாசினியும் அங்கு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். கட்டமைப்பு ரீதியாக நடாத்தப்படும் நிகழ்விற்கு கட்டமைப்பு சார்ந்தவர்கள் சீருடை அணியாமல் ஆடம்பரமாக அவ்வுடைகளைத் தவிர்த்து வேறு உடைகளை அணிந்திருப்பின், அதைக் காசினி சுட்டிக்காட்டி இங்கு எழுதியிருப்பின் அது தவறு அல்ல தப்பே என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அமைப்பு ரீதியாக இல்லாமல் மக்களாக தலைவரின் பிறந்த நாளுக்குச் சென்றவர்கள் அதை உடுத்தக்கூடாது இதை உடுத்தக்கூடாது என்று மற்றவர்களுக்கு முன்னதாரணமாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மட்டுப்படுத்த நினைப்பது அவர்கள் மேல் உங்கள் எண்ணங்களைத் திணிக்க முற்படும் செயல். இத்தகைய ஒரு நிலைப்பாடு என்பது இன்னும் நீங்கள் உங்களிடம் உள்ள பொறுப்பை உணராது வெளியில் நின்று விமர்சிக்கும் பாங்கையே குறிக்கிறது. அதாவது குறித்த அவர்களே அனைத்தையும் ஒருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு. ஒரு வேளை உங்கள் தரப்புக் கருத்துச் செம்மையானது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் அதை நீங்கள் அவர்களிடம் நேரடியாகத் தெரிவித்து அதற்கு அவர்கள் உங்களுக்கு தெளிவான பதிலையோ விளக்கத்தையோ தரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அமைப்பிடம் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும். அந்த அமைப்பும் அதற்கான தெளிவுபடுத்தலை உங்களுக்கு வழங்கவில்லை என்றால் இப்படியான கருத்துக்களங்களில் எழுதலாம். ஒவ்வொரு தனி மனிதனுடைய அபிலாசைகளிலும் மற்றவர் குறுக்கிடுதல் அழகன்று. அடுத்து நீண்ட கால விடுதலை நீரோட்டத்தில் உள்ளவர்கள் என்று உங்கள் குடும்பத்தை பீற்றிக் கொள்ளும் உங்கள் கருத்தைப் பார்க்கும்போது அந்த விடுதலைப் போராட்டத்தின் மேடு பள்ளங்களை எப்படிக் கடந்து வந்திருப்பீர்கள் என்பதை நினைக்கும்போது எங்கோ இடிக்கிறது. அடுத்து நீண்ட காலமாக இருக்கும் ஒருவருக்கு அதீத விடுதலை உணர்வு என்றும் குறுகிய காலத்தில் பணியாற்றும் ஒருவருக்குக் குறைந்த விடுதலை உணர்வு என்றும் விடுதலையின் மேல் உள்ள வேணவாவை அளவிட முடியாது. நீண்ட காலமாக இருந்து நேரற்றுப் போனவர்களும் உண்டு, குறுகிய காலமாய் இருந்து நிலை தவறாதவர்களும் உண்டு. அடுத்து அனைத்துலகப் பொறுப்பாளருக்கு மகளிர் என்றாலே அலர்ஜு என்று நீங்கள் எழுதித்தான் நான் அறிகிறேன். உங்கள் எழுத்தை வாசித்த பல மகளிர் இப்போது உங்கள் அறியாமையை நினைத்துச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

வெருண்டுகொண்டு திரிஞ்சா................. இருண்டதெல்லாம் பேய் மாதிரித்தான் தெரியும்.

நாட்டுக்கு நாலு நல்லது செய்தவனின் குடும்பம்................ நடு றோட்டில் நிற்கவேண்டும். அவர்கள் மட்டும் பூசி மெழுகி மிடுக்காக இருந்து கொண்டு அந்த நடுறோட்டில் நிற்பவர்களிலும் குறைகாணவேண்டும் இதுகள்தான் இந்த கோமாளிகளின் எதிர்பார்ப்பு.

ஏன் இந்த காசினி என்பவர் என்ன காவோலை கட்டிகொண்டோ வந்தவா?

மேலே புலம்பிகொண்டிருப்பவர் முன்பு ஒரு முறை சீமானை பற்றி முழங்கி தள்ளினார்.............. ஏன் அண்ணை முளங்கிறீங்கள் என்று நானும் கேட்டன். சீமானின் குடும்பம் வன்னி வதைமுகாமில் இல்லையாம்......... அதுதான் அவரது ஆதங்கம். தமிழருக்காக தமிழுக்காக ஏதோ நாலு நியாயமான கேள்விகளை அநீயாயம் தலைவிரித்தாடும் ஒரு நாட்டில் இருந்து தனது வாழ்வை பணயம் வைத்து அவன் கேட்கிறான். ஆனால் இவர்களுக்கு அது உறுத்துது எங்கே சீமான் வளர்ந்து பெரிய புள்ளியரிவடுவானோ என்பதுதான் இவர்களது கவலை. சீமானின் குடும்பத்தை வன்னி முகமிற்கு அவன் அனுப்பிவிட்டுத்தான் பின்பு குரல் கொடுக்க வேண்டும் என்பதே இவர்களது எதிர்பார்ப்பு. எப்படிபட்ட எதிர்ப்ர்ப்பு என்று பார்தீர்களா?

அவர்கள் மட்டும் இந்த யாழ்களத்தில் வந்து நாலுதட்டு தட்டுபோட்டு இருப்பினம். இவையள் என்ன செய்து கிழிச்சவ?

இலங்கையிலயே நாலு ஆமிய சுடதெரியாது மூஞ்சூறு விளக்குமாத்தையும் காவிய கதைமாதிரி போய் மாலதீவில கொடிகட்டி பல்ரி அடிச்சத தவிர. முடியாட்டி பொத்திகொண்டு இருக்க வேண்டியதுதானே....................... தன்னாலே முடிஞ்சத அவன் அவன் செய்யிறான் பார்த்துகொண்டு இருங்கோ. கூலி போதவில்லை என்றால் போய் எஜாமானர்களிடம் ஒப்பாரி வையுங்கள்................ நாம் கூலிகளுக்கு எதையும் போடுவதற்கு இல்லை.

நாலு காசை யாரோ சுத்தினாங்கள் என்பதை யார் மறுக்கின்றார்கள். பச்சதுரோகி கருணாவை தோள்மீது இதுவரையில் நாங்களும்தான் சுமந்தோம். கூலிகளை போன்று நல்லவர் வேடமிட்டு துரோகிகளும் கூடிநிற்கின்றானர் அதுற்கு என்ன செய்ய? நல்லவர்களை தரம்பிரிக்கும் கருவி இன்னும் பூமியில் இல்லையே? யாரோ சுத்தினான் என்பதற்காக எல்லாவற்றையுமு; அப்படியே விட வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பு என்றால்? நீங்கள் யார் என்பதை நெத்தியிலேயே பச்சை குத்தி வைத்திருக்கின்றீர்களே......? பின்பு ஏன் புலுடா விடுறீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி மற்றும் வல்வை அக்கா.. இதில் ஹாசினி.. கையாண்ட உதாரணம் உங்களைப் பொறுத்தவரை தவறானதாக இருக்கலாம்.

நான் வேறு நாடுகளிலும் பார்த்திருக்கிறேன்.. மாவீரர் நாளை ஏதோ கோவில் திருவிழா போன்று ஆடம்பர அலங்காரங்கள் தரித்து எம்மவர்கள் கொண்டாடி வருவதை. அதேவேளை இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த மேற்குலக வீரர்களுக்கு அஞ்சலி செய்ய வெள்ளைகளும் போகிறார்கள். அவர்கள் எளிமையாக அதில் கலந்து கொள்வதை காணக்கூடியதாக இருக்கிறது.

என்னுடைய வினவல்.. ஹாசினி காட்டிய உதாரணம் தவறாக இருக்கட்டும் பறுவாயில்லை. ஆனால் அவர் சுட்டிக்காட்டிய விடயம் தவறானதல்ல.

நீங்கள் இருவரும் மாவீரர் தினத்தை தேசிய தலைவரின் பிறந்த நாளை ஆடம்பர உடையணிந்து நகை அணிந்து கடா வெட்டி கொத்துரொட்டி சாப்பிட்டுக் கொண்டு சம்பைன் அடித்து கொண்டாடலாம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா..??! அப்படி எங்கு எப்போது தாயகத்தில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது..???!

மாவீரர் தினத்தை புலம்பெயர்ந்தவர்களில் ஒரு சாரார் கடைப்பிடிக்கும் முறை அதன் அடிப்படை கோட்பாட்டுக்கே முரணாக இருக்கிறது. அந்த முரண்பாட்டை ஒரு மகளிர் அமைப்பு குற்றம்சாட்டப்பட்டு விட்டது என்பதற்காக ஏற்றுக் கொள்வீர்களா..???! :lol::)

நெடுக்கால போவான் உங்களுடைய கருத்தைத் "தலைவரின் பிறந்ததினம் என்ற பெயரில் ரொறன்ரோவில் அரங்கேறிய கொண்டாட்டம்" என்ற திரிக்குள் வைக்காமல் மாவீரர் தினத்தில் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள் என்ற ஒரு திரியைத் திறந்தால் சிறப்பாக இருக்கும். தலைவரின் பிறந்த தினத்தையும் மாவீரர் தினத்தையும் ஒரே இடத்தில் போட்டு நாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத்திற்குள்ளாக்கி மாற்று கருத்தாளர்களின் தூற்றல்களை மாவீரர்களின் புனிதத் தன்மையின் மீதும், தன்னலமற்ற தலைமையின் மீதும் அள்ளி வீசுவதைத் தவிர்க்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்துக் ஒரு கட்டமைப்பை நோக்கிக் குற்றஞ் சாட்டும்போது அக்குற்றச்சாட்டு எத்தகைய அளவுக்கு உண்மை என்பதையும் அதற்கான ஆதாரத் தன்மைகளையும் முன் வைத்தல் முக்கியமானது. ஹாசினி இந்த இடத்தில் குற்றஞ்சாட்டியுள்ள அந்த மகளிர் அமைப்புடன் எனக்கும் நெருங்கிய பரிச்சயம் உள்ளதனாலேயே இங்கு நின்று விவாதிக்கிறேன். அந்த மகளிர் அமைப்பில் உள்ளவர்கள் சந்தித்திருக்கும் இழப்புகளும், சட்டச்சிக்கல்களும் அறியாமல் எழுந்தமானத்தில் ஹாசினி போன்றோர் முன் வைக்கும் கருத்துகள் அவர்களையும், அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் இந்த இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் பயணிக்க முடியாமல் முடக்கிப் போடவே வழி வகுக்கும் என்பது அவருக்குத் தெரியும்.

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்

நாலாறு மாதங்களாகவே குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி

அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

ஒன்றை ஆக்குதல் கடினம் அழித்தல் இலகு

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவான் உங்களுடைய கருத்தைத் "தலைவரின் பிறந்ததினம் என்ற பெயரில் ரொறன்ரோவில் அரங்கேறிய கொண்டாட்டம்" என்ற திரிக்குள் வைக்காமல் மாவீரர் தினத்தில் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படைக் கோட்பாடுகள் என்ற ஒரு திரியைத் திறந்தால் சிறப்பாக இருக்கும். தலைவரின் பிறந்த தினத்தையும் மாவீரர் தினத்தையும் ஒரே இடத்தில் போட்டு நாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பத்திற்குள்ளாக்கி மாற்று கருத்தாளர்களின் தூற்றல்களை மாவீரர்களின் புனிதத் தன்மையின் மீதும், தன்னலமற்ற தலைமையின் மீதும் அள்ளி வீசுவதைத் தவிர்க்கலாமே.

தலைவரின் பிறந்த தினத்தை அவரே மாவீரன் சங்கரின் நினைவாக கொண்டாடுவதில்லை என்று கூறி இருக்கிறார். அவருடைய பிறந்த தினத்தை ஒட்டித்தான் சங்கரின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டிருக்கின்றன. அப்படியான ஒரு நாளாகவே தலைவர் தனது பிறந்த நாளை நினைவு கூர்ந்து வந்திருக்கிறார். சங்கரின் இறப்பின் நாள் மாவீரர் நாளானது. அந்தளவுக்கு சங்கரின் மரணம் தலைவரைப் பாதித்திருக்கிறது.

அப்படியான ஒரு நாளை அதுவும் மாவீரர் நாளுக்கு முந்திய இரவை படு ஆடம்பரமாகக் கொண்டாடிவிட்டு அடுத்த நாள் மாவீரருக்கு அஞ்சலி செய்கிறோம் என்பது சுத்தப் பித்தலாட்டத்தனமாக மட்டுமன்றி மாவீரர்களின் தலைவரின் எண்ணங்களை அவமதிப்பது போன்றுள்ளது.

எனவே இது தொடர்பாக இத்தலைப்பில் விவாதிப்பது தவறில்லை. தலைவரின் பிறந்த நாள் மாவீரன் சங்கரின் இழப்போடு அவன் சார்ந்த ஒரு நினைவு நாளாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கிறது தேசிய தலைவரால். அவரே தனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாடத போது.. ஏன் அதுவும் ஈழத்தில் வலியுணர்ந்த மக்கள் அதை புறக்கணிக்கச் செய்கின்றனர்..???! இதற்கு உங்கள் பதில் என்ன...?????!

உண்மையில் இந்த மக்களிடம் போராட்டம் பற்றிய பற்றுணர்வு இருக்கா.. அல்லது வெளிநாடுகளில் தொலைந்து கொண்டிருக்கும் தங்கள் அடையாளத்தை ஆடம்ப்ரமாக நிலைநிறுத்த இப்படியான கொண்டாட்டங்களைக் கொண்டாடுகிறார்களா.. என்ற ஐயம் இப்போ ஏற்பட்டுள்ளது..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Red-designer-saree.JPG

இப்பிடியான சாறிதானுங்கோ அவர் உடுத்திருந்தவர். வேறுயாராவது முடிந்தால், அறிவிப்பாளரின் முகத்தை மறைத்துவிட்டு, அந்த போட்டோவை இதிலை இணைத்துவிடுங்கோ. பிறகு பேசலாம்.

நடந்ததோ பிறந்தநாள் என்று சொல்லுறீங்கள். பிறகு ஆக்கள் ரவிக்கை போடாத புடவை கட்டி இருந்திச்சீனம், முகத்துக்கு பூச்சுக்கள் அடிச்சு இருந்திச்சீனம் எண்டு சொல்லுறீங்கள் அக்கா. நல்லாய்த்தான் கவனிச்சு இருக்கிறீங்கள். சரி.. ஆம்பளைகள் என்ன உடுப்பு போட்டு இருந்தவையள் எண்டும் சொல்லுங்கோ. தலையுக்கு ஜெல் அடிச்சு இருந்திச்சீனமோ? கோர்டு சூட்டு போட்டுக்கொண்டு வந்திச்சீனமோ? பேர்பியூம் அடிச்சு இருந்திச்சீனமோ? பிறந்தநாள் என்று கொண்டாடினால்.. பிறகு அங்கை செத்தவீட்டுக்கு போறமாதிரியோ போறது? :)

நெடுக்காலபோவான்.. உது என்னங்கோ புதுக்கதை... வன்னியிலயே தலைவரின் பிறந்ததினம் கொண்டாடப்பட்டு இருப்பதை... கேக்கு வெட்டப்பட்டு இருப்பதை நாங்கள் செய்திகளில பார்த்து இருக்கிறம், வன்னியில் மக்கள் இனிப்புக்கள் கொடுத்து தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி இருப்பதை அறிஞ்சு இருக்கிறம். ஏதோ உலகத்தில நடக்காதவிசயம் டொரோண்டோவில நடந்தமாதிரி பலர் முறுகிக்கொண்டு இருக்கிறீனம்.

ஆகமொத்தத்தில தாயக விசயம்பற்றி அக்கறை உள்ள ஆக்கள்.. பஞ்சப்பரதேசிகள் மாதிரி, லூசுகள் மாதிரி.. முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு பிறந்த்நாளுக்கு வர இல்லை எண்டுறதுதான் பலருக்கு கவலையாய் இருக்கிது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் இத் தலைப்பை ஹாசினி எழுதியதிலிருந்து வாசித்து வருகிறேன் முதலில் இத் தலைப்பில் கருத்துப் பதிய நான் தயங்கினேன் காரணம் நான் கனடாவில் வசிக்கவில்லை.ஆனால் இது வரைக்கும் ஹாசினிக்கு எதிராக கருத்துப் பதிந்தவர்கள ஒருவ்ரும் அவரது குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.மகளீர் அமைப்பினர் அவ்வாறூ ஆடம்பரமாக உடையணீந்து சென்றார்களா? இல்லையாயின் அவர்கள் தரப்பு தங்கள் நியாயத்தை எழுதலாம் ஆனால் ஹாசினி சொன்ன மாதிரி தான் இவர்கள் உடையணீந்து சென்றீருந்தால் அவர்கள் செய்தது பிழை என்பது என் கருத்து.மகளீர் அமைப்பினர் மற்றவர்களூக்கு முன் மாதிரியாக இருந்தால் தான் சாதரண மக்கள் அவர்களை பின் தொடர்வார்கள் இவ்ர்களே ஆடம்பரமாக உடை உடுத்தால் சாரண மக்கள் எப்படி உடுப்பார்கள்.அவர்களது தனிப்பட்ட விழாவுக்கு அவர்கள் எப்படி உடுப்பு உடுத்தாலும் ஒருவ்ரும் கணக்கெடுக்க மாட்டார்கள் இது தலைவரது பிற்ந்த நாள் விழா என்பதால் தான் எல்லோரும் விமர்சிக்கிறார்கள்.முதலாவதாக இந்த விழா இந்த வ்ருடம் கொண்டாடியிருக்க தேவையில்லை அமைதியாக எதாவது செய்திருக்கலாம் தலைவ்ரும் அதைத் தான் விரும்புவார்.ஆனால் எப்படித் தான் முதல் நாள் விழாக் கொண்டாடி விட்டு அடுத்த நாள் அழுவார்களோ தெரியாது.

கனடா மகளீர் அமைப்பினர் தான் அதிகளவு ஆர்ப்பாட்டங்கள்,ஊர்வலம் செய்கிறார்கள் ஆனால் இந்த விடயத்தில் அவர்கள் செய்தது பிழை என்பது என் கருத்தாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

Red-designer-saree.JPG

இப்பிடியான சாறிதானுங்கோ அவர் உடுத்திருந்தவர். வேறுயாராவது முடிந்தால், அறிவிப்பாளரின் முகத்தை மறைத்துவிட்டு, அந்த போட்டோவை இதிலை இணைத்துவிடுங்கோ. பிறகு பேசலாம்.

ஹாசினி முற்று முழுதான உங்களின் தனிமனிதத் தாக்குதலை வெளிப்படையாக ஒத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி.

மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருந்தால் என்றகருத்தில் தான் காசினி எழுதியிருந்தார்கள்.விமர்சனங்களை என்றுமே ஏற்றுக்கொள்ளாதவர்களால் 3 பக்கதிற்கு நீண்டு விட்டது திரி. வாழ்க ஜனநாயகம்.

காசினி அக்காவிண்ட மிகுதி வாக்குமூலத்தையும் வாசிச்சு பாருமப்பு. பருப்பு எப்பிடி வேகி இருக்கிது எண்டு தெரியும். :D

நிகழ்ச்சி ஒழுங்கு செய்தவர்களோடு எங்கள் குடும்பத்திற்கு 20 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பு இருக்கிறது. அங்கு இருப்பவர்களுள் எத்தனை பேர் 5 வருடங்களுக்க மேல் அந்த அமைப்பில் இருக்கிறார்கள். ஓருசிலபேர் மட்டுமே அப்படி இருக்கிறார்கள். இதிலிருந்தே அந்த அமைப்பைப் பற்றி தெரியவேண்டும். விவாததிற்காக வைப்பவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டிய தேவை எனக்கு இல்லை.

ஆக மொத்தத்தில அக்கா மகளிர் அமைப்போட தனக்கு இருக்கிற வயித்து எரிச்சலை கொட்டி தீர்க்கிறதுக்கு தலைவரின் பிறந்தநாளை ஜனநாயக முறையில அணுகி இருக்கிறா. :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""""""""""""""""நாலு காசை யாரோ சுத்தினாங்கள் என்பதை யார் மறுக்கின்றார்கள். பச்சதுரோகி கருணாவை தோள்மீது இதுவரையில் நாங்களும்தான் சுமந்தோம். கூலிகளை போன்று நல்லவர் வேடமிட்டு துரோகிகளும் கூடிநிற்கின்றானர் அதுற்கு என்ன செய்ய? நல்லவர்களை தரம்பிரிக்கும் கருவி இன்னும் பூமியில் இல்லையே? யாரோ சுத்தினான் என்பதற்காக எல்லாவற்றையுமு; அப்படியே விட வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பு என்றால்? நீங்கள் யார் என்பதை நெத்தியிலேயே பச்சை குத்தி வைத்திருக்கின்றீர்களே......? """"""""""""""""""""""'

இதில் இரண்டு கருத்து உள்ளது

ஒன்று புலத்தில் உள்ள வயிறு வளர்க்கும் கூட்டம் , மற்றையவர்கள் தாமாகவே செய்பவர்கள்..நான் பார்த்திருக்கிறேன் இரண்டாவது வகை மற்றையவர்களினதும் கருத்துகளை ஆகக்குறைந்தது கேட்கும், எங்களை போல மற்றையவர்களும் விருப்பங்களும் கருத்துக்களும் வைத்திருக்கிறார்கள் என்றுஏற்றுக்கொள்ளும் ...கள்ள கூட்டம் தான் விழுந்தடித்து துரோகிபட்டம் குடுக்கிறதும் மற்ற வேலைகள் செய்கிறதும்..புலியை பிழை சொல்லுற எல்லாரும் அரசாங்க உளவாளி என்கிறதும், மற்ற கதைகளும்...

விழாவிற்கு என்ன உடுப்பு போடுவது தனிபட்ட உரிமை/ விருப்பு என்றாலும், தாயாக நிலைமைகளுக்கு ஏற்ப அணிவது நல்லது..ஒருவர் சொன்னது போல ஆங்குள்ளவர்களினது, தியாகம், இழப்பு , என்பவற்றுடன் இங்குள்ள நிலைமைகளை ஒப்பிட வேண்டாம்.. தலைவரின் தந்தை தாயே அரச சிறைகளில், தலைவரை பற்றி தகவல் இல்லை, இந்த நிலையில் அது ஒரு வழமையான பிறந்த நாள் அதை வழமை போலதான் செய்ய வேண்டும் என்றால் ...........

எத்தனை ஆயிரம் குடும்பங்கள் வாழ்விழந்து நிற்கிறார்கள்...

குறை பிடிப்பது என்று நினைக்கவேண்டாம், இங்கே கனடாவில் தேசவிடுதலை ஒரு கப் டிம்ஹோடன் இணையாகத்தான் பேசப்பட்டது /ஊட்டப்பட்டது... ஒரு நாள் கோப்பி காசை தங்கோ உங்களுக்கு ஈழம் போர்றுத்தரப்படும் என்று, அதுவே பின்னர் சில ஆயிரம் ஆக.... அங்கே தாயகத்தில் எல்லோரும் வீட்டுக்கொருவர் போராடவேண்டும் என்றபோது ஒரு சலசலப்பையும் உண்டுபண்ணவில்லை..அவர்களின் வலி எங்களுக்கு தெரியவில்லை ...இப்பவும் அவர்ககள் படும் பாடு " போராட்டம் என்றால் இழப்பு வரும்" என்ற ரீதியில் மறைக்கப்பட்டு வருகிறது..

இனியாவது எங்களின் பாதை தாயகத்தோடு இணைந்ததாக இருக்கட்டும்.

மகளிர் அமைப்பினர் அவ்வாறு ஆடம்பரமாக உடையணீந்து சென்றார்களா? இல்லையாயின் அவர்கள் தரப்பு தங்கள் நியாயத்தை எழுதலாம் ஆனால் ஹாசினி சொன்ன மாதிரி தான் இவர்கள் உடையணீந்து சென்றீருந்தால் அவர்கள் செய்தது பிழை என்பது என் கருத்து. கனடா மகளீர் அமைப்பினர் தான் அதிகளவு ஆர்ப்பாட்டங்கள்,ஊர்வலம் செய்கிறார்கள் ஆனால் இந்த விடயத்தில் அவர்கள் செய்தது பிழை என்பது என் கருத்தாகும்.

அதாவது மகளிர் அமைப்பில இருக்கிற ஆக்களுக்கு நல்லாய் நடிக்கத்தெரியவேணும் எண்டு சொல்லுறீங்கள்? ஆர்ப்பாட்டம், ஊர்வலத்தில கலந்துகொள்ளுற ஆக்களுக்கு வாழ்க்கை இல்லையோ? ஏதோ காசு கீசு குடுத்து வேலை வாங்கிறமாதிரி மகளிர் அமைப்பினர் அப்பிடி இருக்கவேணும் இப்பிடி இருக்கவேணும் எண்டு ஆளாளுக்கு சொல்லிக்கொண்டு போறீங்கள். யாரோ ஒண்டு ரெண்டு தாயகத்தில அக்கறை உள்ள சனங்கள் ஏதோ வேலைத்திட்டங்கள் செய்யப்பார்க்கிதுகள். பலருக்கு அவையளுண்ட நன்னடத்தை சம்மந்தமாய் சட்டச்சரத்துக்கள் இயற்றுறதுதான் விருப்பமாய் இருக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இத் தலைப்பை ஹாசினி எழுதியதிலிருந்து வாசித்து வருகிறேன் முதலில் இத் தலைப்பில் கருத்துப் பதிய நான் தயங்கினேன் காரணம் நான் கனடாவில் வசிக்கவில்லை.ஆனால் இது வரைக்கும் ஹாசினிக்கு எதிராக கருத்துப் பதிந்தவர்கள ஒருவ்ரும் அவரது குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.மகளீர் அமைப்பினர் அவ்வாறூ ஆடம்பரமாக உடையணீந்து சென்றார்களா? இல்லையாயின் அவர்கள் தரப்பு தங்கள் நியாயத்தை எழுதலாம் ஆனால் ஹாசினி சொன்ன மாதிரி தான் இவர்கள் உடையணீந்து சென்றீருந்தால் அவர்கள் செய்தது பிழை என்பது என் கருத்து.மகளீர் அமைப்பினர் மற்றவர்களூக்கு முன் மாதிரியாக இருந்தால் தான் சாதரண மக்கள் அவர்களை பின் தொடர்வார்கள் இவ்ர்களே ஆடம்பரமாக உடை உடுத்தால் சாரண மக்கள் எப்படி உடுப்பார்கள்.அவர்களது தனிப்பட்ட விழாவுக்கு அவர்கள் எப்படி உடுப்பு உடுத்தாலும் ஒருவ்ரும் கணக்கெடுக்க மாட்டார்கள் இது தலைவரது பிற்ந்த நாள் விழா என்பதால் தான் எல்லோரும் விமர்சிக்கிறார்கள்.முதலாவதாக இந்த விழா இந்த வ்ருடம் கொண்டாடியிருக்க தேவையில்லை அமைதியாக எதாவது செய்திருக்கலாம் தலைவ்ரும் அதைத் தான் விரும்புவார்.ஆனால் எப்படித் தான் முதல் நாள் விழாக் கொண்டாடி விட்டு அடுத்த நாள் அழுவார்களோ தெரியாது.

கனடா மகளீர் அமைப்பினர் தான் அதிகளவு ஆர்ப்பாட்டங்கள்,ஊர்வலம் செய்கிறார்கள் ஆனால் இந்த விடயத்தில் அவர்கள் செய்தது பிழை என்பது என் கருத்தாகும்.

ரதி ஹாசினியின் ஆரம்ப எழுத்திலிந்தே ஹாசினியின் நோக்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது ஆதலாலேயே அதற்குப் பதில் அளித்து அவரின் தனி மனிதத் தாக்குதலுக்கு வழி வகுத்துக் கொடுக்கக்கூடாது என்ற நோக்கில் அமைதியாக இருந்தேன். அவரின் மறு பதிவை பார்த்தபின் அவரின் நோக்கம் ஒரு தனி மனிதரை நோக்கி எழுந்த ஒரு வித உணர்வின் பால் ஒரு அமைப்பை முன்னிலைப்படுத்திச் சாடுவதாக அமைந்திருந்தது. ஒரு அமைப்பு ரீதியாகச் சம்பந்தப்படாத ஒரு விழாவில் தனி மனிதர்களாக, குடும்பங்களாக, உறவினர்களாக, நண்பர்களாக நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்வில் ஹாசினி தனக்குள் கிரகித்தவிடயத்தை பொதுவான பிரச்சனையாக வெளிப்படுத்தி இருக்கவேண்டும். ஆனால் ஹாசினி அவ்விடயத்தை அந்நிகழ்வோடு சம்பந்தமே இல்லாத நிலையில் இருந்த மகளிர் அமைப்பை அதற்குள் இழுத்து முடிந்ததன் மூலம் தவறான ஒரு வெளிப்பாடை உருவாக்கி அதனை விரும்பத்தகாத திசையில் தனிமனிதத் தாக்குதலுக்கு அமைப்பு என்ற வாசகத்தின் ஊடாக களம் அமைத்திருக்கிறார். அவரின் தாக்குதல் எத்தகையது என்பதை மற்றவர்கள் உணர முடியாவிட்டாலும் என்னால் உணர முடிகிறது. கனடாவில் வாழும் குறிப்பாக ஒன்றாரியோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த மகளிர் அமைப்பின் உறுதியும், திறமையும் தெரியும். இன்றுவரை தளம்பாமல் சிதறாமல் நேர்த்தியாக தாயகத்தில் மெளனம் காக்கப்படும் இத்தருணத்தில் தங்கள் கடமையை பின்நிற்காது வழங்கி வருகின்றவர்கள் மீது சேறடிக்கும் ஒரு செயற்பாட்டையே ஹாசினி மேற்கொண்டுள்ளார் என்பதே உண்மை.

ரதி தனிமனிதத் தாக்கதலுக்கு அவர் அமைப்பை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்றுவரை அதே மகளிர் அமைப்பிற்குள் 10 வருடங்களுக்கு முன் மாவீரர் தினத்தில் தங்க வளையல்களை கழற்றி கொடுத்து விட்டு தாயகத்தில் போய்த்தான் வளையல்களே அணிவதாக உறுதி எடுத்தவர்களும் உண்டு. சகோதரர்களை வதைமுகாம்களுக்குள் வதைபடக் கொடுத்து விட்டு வலியோடு இருப்பவர்களும் உண்டு, அந்நியப்படைகளுக்குள் சிக்கி அவலப்பட்டவர்களும் உண்டு. எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்ட முடியாது. ஹாசினி தனிமனிததாக்குதலை அமைப்பின் மீதான குற்றச்சாட்டாக வைத்ததை ஏற்றுக் கொள்ளமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் உடை என்பது உடம்பை மறைக்கத்

தான். மிக ஆடம்பரமாக உடுத்தால் தான் எங்களை மற்றவர்கள் ம‌திப்பார்கள் என சொல்ல முடியாது அத்தோடு இந்த வருட‌ம் மிகக் கொடுர‌மான வருட‌ம் இந்த வருட‌ம் இவ் விழாவை கொண்டாடியிருக்க தேவையில்லை.

அத்தோடு அவர்களூம் ஆடம்பரமாக உடையணீய தேவையில்லை.இங்கு ஒருவரும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை பொது சேவை செய்ய சொல்லி அவர்கள் விரும்பித் தான் செய்கிறார்கள் அதை நான் மதிக்கிறேன் ஆனால் பொது சேவை செய்பவர்கலை மக்கள் விமர்சிப்பார்கள் அதை தடுக்க முடியாது அவர்களீல் பிழை என்றால் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் விமர்சனம் செய்கிறோம்.எங்களீல் அநேகமானவருக்கு விமர்சனங்களை தாங்கும் சக்தி இல்லை.

அந்த நிகழ்வை நடாத்தியவர்கள் அதில் அறிவிப்பாளராகப் பணியாற்றியவர் தோற்றப் பொலிவாக இருந்ததைத் தவறு என்று சொல்கிறீர்களா? ஏனெனில் ஹாசினி குற்றஞ் சாட்டியதே அங்கு அறிவிப்பாளராக நின்றவரை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.