Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு இந்தியாவும், சரத்திற்கு அமெரிக்காவும் ஆதரவு: தென்பகுதியில் தேர்தல் பயம் கூடும் என இராஜதந்திரிகள் கருத்து

Featured Replies

ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில் இந்தியாவும், ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதில் அமெரிக்காவும் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தமது பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை நிறுத்தியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகவலை வெளியிடாமல் அமைதிகாத்த ஜெனரல் சரத்பொன்சேகா தற்போது தேர்தலில் தான் போட்டியிடுவதை பகிரங்கமாக அறிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடும் கள நிலைமை தென்பகுதியில் ஒருபோதும் இல்லாத தேர்தல் பயத்தை உண்டு பண்ணும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் வன்னி யுத்த வெற்றியுடன் சம்பந்தப்பட்ட இரு பெரும் முக்கியஸ்தர்கள் போட்டியிடுவதால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய தேர்தல் களேபரத்திற்கு அப்பால் இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான மறைமுகப் போட்டியில் எதிர் ஒலிப்புக்களும் ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் என அரசியல் இராஜதந்திரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றியடைய வேண்டும் என இந்தியா விரும்புகின்றது. அதேநேரம் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைக்கூட இந்திய மத்திய அரசு விரும்பவில்லை என கூறப்படுகின்றது. ஆனால் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடும். ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெறுவதை அமெரிக்கா விரும்புவதாகவும் இதற்கான ஆலோசனைகள் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் சென்ற போது வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு வலம்புரி நாளிதழ் தனது இன்றைய பதிப்பில் தெரிவித்துள்ளது.

http://tamilseithekal.blogspot.com/

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமை போல விருப்பமில்லதவர்கள் தவிர்த்து கொள்ளலாம், திட்டுபவர்கள் திட்டலாம்- நாய் / பேய்/ துரோகி/ மறைகளண்டது ....

So,

நாங்கள் என்ன செய்யபோகிறோம்?

இது சிங்கள ஜனாதிபதியை தெரிவு செய்வதால் எமக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று விலகியிருக்க போகிறோமா?

அவர்கள் இருவருமே எங்களை அழித்தவர்கள் என்பதால் விலகியிருக்க போகிறோமா?

இவர்களுடன் இணைவதால் " ஏதேனும் " முன்னேற்றம் கிடைக்கலாம் என அதைபற்றி சிந்திக்க போகிறோமா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு - கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கு இனி இடமேயில்லை: தமிழர்களுக்காகவே முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுகிறது

- ஜனாதிபதி

"வடக்குகிழக்கு இணைப்பு என்ற விவகாரம் காலாவதியான விடயம். அது குறித்துப் பேசுவதற்கே இனி இடமில்லை.'' இப்படித்திட்டவட்டமாகக் கூறிவிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

நேற்றுக் காலை அலரி மாளிகையில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் ஆசிரியர்கள், வெளியீட்டாளர்கள் ஆகியோரைச் சந்தித்த பின்னர், "உதயன்", "சுடர்ஒளி' நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடன் உரையாடிய போதே அவர் இவ்விடயத்தைத் தெளிவுபடக் கூறினார். வடக்கு கிழக்குத் தமிழர்கள் தங்களது ஜனாதிபதியைத் தாங்களும் சேர்ந்து தெரிவுசெய்வதற்கான வாய்ப்பை அளிப்பதற்காகவே தாம் ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டி நடத்துகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"உதயன்", "சுடர் ஒளி" பத்திரிகைகளின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியருடனான உரையாடலின் போது ஜனாதிபதி கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நான் பேச்சு நடத்தவேண்டும் என்பதை ஏற்கிறேன். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். அவர்களோடு பூர்வாங்கத் தொடர்பாடல்களை நான் ஆரம்பித்துள்ளேன். குறைந்த பட்சம் வடக்கு கிழக்கு இணைப்புக்கான உறுதி மொழியையாவது வழங்கும்படியான உங்களின் கருத்து ஏற்கமுடியாதது.

நன்றி தேனீ,

நான் இது எடுத்தது தேனீ இணைய தளத்தில், செய்தி புனையப்பட்டது இல்லை என நம்புவோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன முடிவு எடுக்கிறதோ தெரியாது. அவர்கள் சில நாட்களில் எடுப்பத்தாக சேனாதிராஜா சொல்லி இருக்கிறார்..

எனது கருத்து இருவரினதும் தமிழர் /இனப்பிரச்சனை தொடர்பான கருத்துகளை ஆராய்வது நல்லது. பொதுவாக, ஒரு மற்றம் வருமென்றால் இந்திய- மகிந்த கூட்டை உடைத்தல் நல்லம். ஆனால் அதன் விளைவுகளை ஆராய்ந்து எடுப்பது நல்லம்.

சரத் பொன்சேகா என்ன செய்வர் சொல்லவில்லை , அவருடனும் யாரும் பேசி அவர் கருத்தை தமிழர் தொடர்பான கருத்தை அறிதல் வேண்டும் . சுவிஸ்சில் கூடியது போல் மேலும் கூடவேண்டும். சுவிஸ்சில் எல்லோரும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது, அந்தநிலை மாற வேண்டும்.. ஜனவரி 26 , விரைவாக வந்து விடும். மேலுள்ள செய்தியில் உள்ளபடி மகிந்தவை இந்தியாவும் பொன்சேகாவை USA யும் Back பண்ணினால் இங்குள்ள தமிழர்கள் அந்த நாடுகளுடன் நேரடியாகவோ மறைமுகம்மாகவோ தொடர்புகொள்ள வேண்டும். அவர்களுடைய (அந்த நாடுகளுடைய ) நோக்கம் என்ன என அறியவேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் USA, இதில் ஈடுபடுவதாயின் அதன் பக்கம் போவது நல்லம். இந்தியாவை நம்புவதால் ஏதும் மற்றம் வரும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை..

கேள்விப்பட்டதிலிருந்து ....

... சிறிலங்காவில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில், சிங்கள மக்களின் ஒரே ஒரு கீரோவாக இருந்த மகிந்தவுக்கு, கீரைக்கடைக்கு எதிர்க்கடை மாதிரி பொன்சேகா களமிறங்கியிருக்கிறார். அத்தோடு ஏறக்குறைய அனைத்து சிங்கள எதிர்கட்சிகளும் பொன்சேகாவிற்கு ஆதரவளிப்பதால், சிங்களவர்களின் வாக்குகள் பொன்சேகாவிற்கே பெருமளவு போகக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆதலினால் சிறுபான்மையினரின் வாக்கே இத்தேர்தலின் முடிபை தீர்மானிக்கும் சக்தியாக வரலாமாம். இந்நிலையில் இரு தரப்பும் தமிழர்களின் வாக்கை வேட்டையாட களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு வாக்குகளை மகிந்த தரப்பு, பிள்ளையான்/கருணா/கிஸ்புல்லா/.. போன்றவர்கள் மூலம் வளைக்கலாம் என கணிப்பிட்டு இருப்பதாகவும். ஆனால் யாழில் டக்லஸை மட்டும் வைத்து வாக்குகளை பெற முடியாது என கவலையடைந்துள்ளதாம். ஏனெனில் யுத்த நிறுத்த காலத்தில் யாழில் நடைபெற்ற கொலைகளுக்கு டக்லஸே பொறுப்பென்று பெரும்பான்மை யாழ்வாசிகள் நினைக்கிறார்களாம். மற்றும் டக்லஸுக்கு யாழில் அமைப்பு ரீதியில் கல்விமான்களின் ஆதரவும் இல்லை. அத்தோடு இன்றும் யாழில் தமிழ் தேசியத்துக்கு ஆதரவானோனே அதிகம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளதாம், மகிந்த அரசு.

இதனால் புலி ஆதரவு கட்சிகளை வளைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாம். முதற்கட்டமாக புலி ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து செயற்பட்ட ரெலோ பிரிவை முற்றாக(இவர்களுக்கு எதிராக இருந்த பல யுத்த குற்றச்சாட்டுகளை இல்லாதொழித்து, புலத்தில் வலம் வந்த இவ்வமைப்பின் உறுப்பினர்களை மீண்டும்) சிறிலங்காவிற்கு வரவழைத்துள்ளது. விரைவில் இவர்கள் மகிந்தவிற்கு ஆதரவான பிரச்சாரங்களை தொடங்குவார்களாம்.

இவ்வாறே கடந்த காலத்தில் புலிகளின் பிரச்சார பீரங்கியாக உலகில் வலம் வந்த கஜேந்திரனும் வளைக்கப்ப்டுள்ளாராம். குதிரை கஜேந்திரனுடன், பசில் ராஜபக்ஸ நேரடியாக தொடர்பு கொண்டு டீல் முடிக்கப்பட்டதாம்.இதனால் தான் குதிரை சிறிலாங்காவில் பிரட்சனைகள் அற்று தரை இறங்கியுள்ளதாம். இக்குதிரை யாழ் நகரில் சிலவேளை மீண்டும் புலி வேடமிட்டு பொன்சேகாவே தமிழர்களின் அழிவிற்கு காரணம் எனவும் பிரசாரம் செய்யவும் கூடும்.

மகிந்தவோ, பொன்சேகாவோ ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவ்விருவரையும் தவிர்த்து எமது எதிர்ப்பு வாக்காக விக்கிரமபாகு கருணாரட்னவிற்கு வாக்களிப்பதன் மூலம், உலகிற்கு தமிழர்களின் எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் எம் தலைகளின் மிளகாய் அரைத்த அரசியல் வாதிகள் அதைச் செய்ய ஒருபோதும் இணங்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் சொல்லுறது மாதிரி ஒரு எதிரியை அழிக்க இன்னொரு எதிரியோட கூட்டு சேரவேண்டியதுதான்...

one by one :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவோ, பொன்சேகாவோ ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவ்விருவரையும் தவிர்த்து எமது எதிர்ப்பு வாக்காக விக்கிரமபாகு கருணாரட்னவிற்கு வாக்களிப்பதன் மூலம், உலகிற்கு தமிழர்களின் எதிர்ப்பை தெரிவிக்கலாம். ஆனால் எம் தலைகளின் மிளகாய் அரைத்த அரசியல் வாதிகள் அதைச் செய்ய ஒருபோதும் இணங்க மாட்டார்கள்.

உருப்படியான கருத்து. மகிந்தவோ அல்லது பொன்சேக்காவோ தமிழர் மீது இரக்கம் கொண்டவர்கள் அல்ல. நடந்து முடிந்த ரத்தக்களரியில் சிங்களப் பயங்கரவாதத்தை தலமையேற்று நடத்திய கொலை காரர்கள்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நீண்டகாலமாகவே தமிழர் சார்பாகப் பேசி வருபவர். சுய நிர்ணய உரிமை ஒன்றுதான் தீர்வு என்று வாதாடி வருபவர். அவருக்கு வாக்களிப்பதுதான் நாம் செய்ய வேண்டியது. ஆனால் தமிழர் பலருக்கு இவரைத் தெரியாததாலும், வெல்லும் குதிரையில் மட்டுமே தமிழர் பணம் கட்டிப் பழகியதாலும் இவருக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்தான்.அதேவேளை தமிழர் குழுக்கள் மகிந்தவுக்கோ அல்லது பொன்சேக்காவுக்கோ காவடி எடுப்பது என்று முடிவெடுத்து விட்டால் பெரும்பாலான தமிழர்கள் அவர்களைப் பின்பற்றவும் வாய்ப்புண்டு.

எனக்கு ஒன்று புரியவில்லை!

எதற்காக மகிந்த இந்த தேர்தலை நடத்த ஆசைப்படுகிறார்? இது சிலவேளைகளில் அரசியல் தற்கொலையாகவே முடியலாம்.

இன்னும் இரண்டு வருடங்கள் ஆட்சியிலும் இருந்திருக்கலாம். இந்த இரண்டு இரத்த காட்டேரிகளில் நல்லது கெட்டதென்று பிரிச்சுப்பார்ப்பது கடினம்.

யாரோ சாத்திரி சொன்னதுக்காவா இந்த தேர்தல்? அப்படியானால் கருத்துக்கணிப்புஎதுக்கு பிரச்சாரம் எதுக்கு? இன்னும் சொல்லப்போனால் தேர்தல் தான் எதுக்கு சாத்திரி சொல்லும் ஒருவரை சனாதிபதியாக நியமிக்கலாமே?

இதில் தமிழர்கள் யாருக்குவேண்டுமானாலும் வாக்களிக்கலாம் விளையு ஒன்றாகத்தான் இருக்கும்.

இவர்களளுடன் அரசியல் பேரம் பேசுவதென்பது எவ்வளவுதுரம் சரிவரும் என்பது ஒரு கேள்வி?

செல்வா களத்தில் இருந்து கடைசி ஒப்பந்தம் வரை இருந்த எல்லாத்தையும் கிழிச்சு எறிஞ்ச சிங்களவனுடன்

பேரம்பேசி ஏதாவது சாதிக்கமுடியுமா?

எங்களைவிடுங்கள் இதுக்கு முன்னம் சிங்கள கட்சிகளுடன் பேசப்பட்ட விடயங்களையே நிறைவேற்றாத நிலையில்

புதிதாக நாம் என்ன எதிபார்க்க முடியும்? எல்லாம் முடிந்த பின் எங்களுக்கு நாமதான் மிச்சம்.

தேர்தலில் விக்கிரம பாகு கருனரத்தினவை தெரியு செய்யலாம் தான் ஆனாலும் நிச்சயமாக அவர் சனாதிபதியாக வரப்போவதில்லை

இருந்தாலும் தமிழர்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட வேரதிரிவு இதில் இல்லை. வாக்களிக்காவிட்டால் மகிந்தவே வெல்வான்.

இது அவனுக்கு வாழவா சாவா போராட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

சரத்துக்கும், மகிந்தவுக்கும் கடும் போட்டி நிலவும் என வைத்துக்கொள்வோம்.தமிழர்கள் டாக்டர் விக்கிரமபாகு கருணாரட்ன அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள் என வைத்து கொள்வோம்.வாக்கு சீட்டில் இரண்டாவது தெரிவு எனும் தெரிவு உண்டு. கடும் போட்டி நிலையில் அதாவது 50%திலும் குறைவான வாக்குகளை மகிந்தவோ, சரத்தோ பெறும் போது இரண்டாவது தெரிவு வாக்குகள் எண்ணப்படும்.இவ்வகையில் நாம் மறைமுகமாக மேற்படி ஒருவரை தெரிவு செய்ய வாய்ப்புள்ளது.

இன்னுமொருவர் தமிழர் பகுதியில் இருந்து வேட்பாளராக வரும் போது தமிழ் பேசும் மக்கள் முதலாவது தெரிவை தமிழ் வேட்பாளருக்கும், இரண்டாவது தெரிவை கலாநிதி விக்கிரமபாகுவுக்கும் வழங்கலாம்.

இந்தியாவும் சீனாவும் அல்லது சீனாவும் அமரிக்காவும் ஒவ்வொருவரை ஆதரித்தால் அதில் சற்று வித்தியாசம் இருக்கும் இந்தியாவும் அமரிக்காவும் இலங்கைக்கு வரப்போகும் தலமைகளை ஆதரிப்பதென்பது சிங்களத்துக்கு ஆரோக்கியமானதே. தமிழனை பூண்டோடு வேரறுக்கும் சக்திகளே சிங்களத்தின் தலமைப்பீடமாக அமரமுடியும் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது. தமிழர்களுக்கு இலங்கையில் இடமில்லை என்று கூறிய பொன்சேகா போட்டியிடுகின்றார். நாளை தமிழர்களை நாடுகடத்துவோம் என்ற கோரிக்கையோடு வருபவனுக்கும் பென்சேகவுக்குமிடையில் போட்டி நிலவும். சிங்கள அரசியல்த் தலமை என்பது எந்தவகையிலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையாது என்பதே உண்மை. ஆனால் தமிழர்கள் இதைப்பற்றி அதிகம் அக்கறை காட்டுவார்கள்.

எமது முரண்பாடுகளை சரியாகப் இந்தியாவும் சிங்களமும் பயன்படுத்தி விரிசல்களை ஏற்படுத்தி எம்மை நிர்கதியாக்கினார்கள். இவர்கள் எடுத்த ஆயுதங்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் கையில் எடுப்பது அவசியமானதாகின்றது. கணனி முன்னிருந்து சரத்துக்கு வக்காளிக்கலாமா மகிந்தனுக்கு வாக்களிக்கலாமா என்று விவாதித்து எழுதுவோமாக இருந்தால் எம்மைப்போல் முட்டாள்கள் எவருமில்லை. சிங்கள முகமூடியுடன் சரத்துக்கும் மகிந்தனுக்கும் இடையில் மேலும் எங்கே முரண்பாடுகள் இருக்கின்றதோ அங்கே எல்லாம் அதை வளர்க்க முற்பட வேண்டும். அதே போல் இந்தியாவின் பல்வேறு இனம் சார்ந்தும் முரண்பாடுகளை வளர்க்கவேண்டும். அது காணொளிகளானாலும் சரி கட்டுரைகளுக்கான கருத்தானாலும் சரி. விதைகளை தூவிக்கொண்டே இருந்தால் அது ஒரு நாள் விருட்சமாகி ஆயுதங்கள் செய்யாத பெரும் வேலையை செய்யும். ஆயுதப்போராட்டம் முடிந்த பின்னர் இனி என்ன என்று அமைதியாக செய்ய ஒன்றும் இல்லை என்றும் தோன்றும் அதே நேரம் நாம் செயற்படுவதற்கான களங்கள் பரந்து விரிந்து இலகுவான முறையிலும் இருக்கும். ஒருவகையில் எங்களிடம் இருக்கும் கணனிகள் பெரிய ஆயுதங்களுக்கும் படைபலத்துக்கும் நிகரானதாக அமைகின்றது. அவற்றை பயன்படுத்துவதில் தான் எல்லாம் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில இருக்கிற தமிழ்ச்சனத்தை அடிச்சுக்கலைச்சாலும் இனிமேல் போகாதுகள். காணியள் பூமியள் பிளட்டுகள் வீடுகள் எண்டு கோடிக்கணக்கில வேண்டி விட்டிருக்கிறம். அதுகள் ரெண்டத்தில ஒராளுக்குத்தான் போடப்போகுதுகள். இங்க உள்ளவை பா பா எண்டு கத்தினாலும் பேப்பே காட்டிப்போட்டு யாழ்ப்பாணத்தாரும் வோட்டு போடத்தான்போகினம். வன்னிச்சனமே மகிந்தவுக்கு போட்டாலும் ஆச்சரியப்படமாட்டன். அங்கயிருந்துவாற கதையள் அப்பிடித்தான் போகிது. பட்டாசு கொழுத்திறவை கைவெட்டுறவையிண்ட காலம் மலையேறீட்டுது. இப்பவே கள்ளவோட்டுக்கதை இங்க துடங்கீட்டினம். கள்ளவோட்டெண்டு மூடி மறைக்கவேண்டிய தேவை வருமெண்டு இப்பவே கொக்கிய போட்டு வச்சிருக்கத்தானவேணும். இல்லாட்டில் ஏகபோக உரிமை பறிபோயிடுமல்லோ! :lol:

கொழும்பில உள்ள சனம் எங்க போறது?

நீங்கள் தான் ஒரேநாடு எண்டு தொடங்கிநிங்கள்இ இப்ப என் சனம் அங்க போகவேண்டும்?

யாரும் யாருக்கும் வாக்களிக்கலாம்... இதுதான் சனநாயம்.

அது கிடக்கட்டும் நீங்கள் யாருக்கு வாக்களிக்கபோரிங்கள்?

எனது வாக்கு கருனரட்டினத்தாருக்குத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பில உள்ள சனம் எங்க போறது?

நீங்கள் தான் ஒரேநாடு எண்டு தொடங்கிநிங்கள்இ இப்ப என் சனம் அங்க போகவேண்டும்?

யாரும் யாருக்கும் வாக்களிக்கலாம்... இதுதான் சனநாயம்.

அது கிடக்கட்டும் நீங்கள் யாருக்கு வாக்களிக்கபோரிங்கள்?

எனது வாக்கு கருனரட்டினத்தாருக்குத்தான்.

எங்கை போறதோ! அடிச்சாலும் போகாதெண்டுதானே சொல்லுறன்.....

நீங்கள் நல்லதொடு விசியத்த தொட்டிருக்கிறயள். உந்த சனநாயகத்த நிலைநாட்டத்தான் மகிந்தவுக்கு இத்தின நாடுகளும் சப்போட் பண்ணினது. 25 வருச போருக்குப்பிறகு ஓவநைட்டில சனநாயகம் வருமெண்டு நீங்கள் எதிர்பாத்தா உங்களைப்போல முட்டாள் யாரும் இருக்கமுடியாது. முந்தியும் சிங்களப்பகுதியளில சனநாயக தேர்தலுகள் நடந்தது. எங்கட பகுதியளில நடக்கேல்ல அதுக்கு காரணம் பட்டாசு கொழுத்திறவையும் கைவெட்டிறவையும்தான், சிங்களவரில்ல. இப்ப சொல்லுங்கோ யார் சனநாயகவாதியெண்டு.

நான் யாருக்கு வாக்களிக்கிறதெண்டு கேக்கிறியள்....ஆதரவு யாருக்கெண்டு கேட்டிருந்தா சொல்லலாம், ஆனா அங்கை நடக்கிற லெக்சனுக்கு இங்க வோட்டு போடுறதெண்டது பொல்லாத கஸ்டம். வெல்லுற குதிரைக்கு ஆதரவு எண்டு வச்சுக்கொள்ளுங்கோவன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா மண் கவ்வ வேணுமென்றால் மகிந்தாவை வீழ்த்த வேணும், வாறது ஏதாவது ஒரு நாய்தான் வரபோகுது, அது எந்த நாய் என்று முடிவு பண்ணவேண்டும், மகிந்த வீழ்ந்தால் அவன் மீது இருக்கும் கோவத்தில் மேற்குலகம் மனித உரிமை விசாரனை என்று விசாரிக்க சந்தர்ப்பம் இருகிறது, இந்தியாவுக்கும் ஒரு பாடமாய் இருக்கும், மகிந்துவில் ஒட்டிகொண்டு இருக்கும் ஒட்டுண்ணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் அதுகள் வேறு எங்காவது ஒட்டுவதற்க்குள் அதுகளை விசாரிக்க வாய்ப்பு இருகிறது. பொன்சேக்கா தோத்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எண்டு அமெரிக்காவுக்கு பெட்டி கட்டி கொண்டு வெளிக்கிட்டுடுவான்.சரத் வெண்டால் குடுத்த ஆயுதத்துக்கு பலன் காணாது சீனாவும்,இந்தியாவும்,பாகிஸ்தானும் சும்மா இருக்குமா??????

எங்கை போறதோ! அடிச்சாலும் போகாதெண்டுதானே சொல்லுறன்.....

நீங்கள் நல்லதொடு விசியத்த தொட்டிருக்கிறயள். உந்த சனநாயகத்த நிலைநாட்டத்தான் மகிந்தவுக்கு இத்தின நாடுகளும் சப்போட் பண்ணினது. 25 வருச போருக்குப்பிறகு ஓவநைட்டில சனநாயகம் வருமெண்டு நீங்கள் எதிர்பாத்தா உங்களைப்போல முட்டாள் யாரும் இருக்கமுடியாது. முந்தியும் சிங்களப்பகுதியளில சனநாயக தேர்தலுகள் நடந்தது. எங்கட பகுதியளில நடக்கேல்ல அதுக்கு காரணம் பட்டாசு கொழுத்திறவையும் கைவெட்டிறவையும்தான், சிங்களவரில்ல. இப்ப சொல்லுங்கோ யார் சனநாயகவாதியெண்டு.

நான் யாருக்கு வாக்களிக்கிறதெண்டு கேக்கிறியள்....ஆதரவு யாருக்கெண்டு கேட்டிருந்தா சொல்லலாம், ஆனா அங்கை நடக்கிற லெக்சனுக்கு இங்க வோட்டு போடுறதெண்டது பொல்லாத கஸ்டம். வெல்லுற குதிரைக்கு ஆதரவு எண்டு வச்சுக்கொள்ளுங்கோவன். :lol:

ஓ நீங்கள் வெளிநாட்டு குடிமகனா?

நாங்கள் இன்னும் இலங்கை குடிமக்கள் தான்இ நாங்கள் போவோமில்ல

போறது மாத்திரம் இல்லை ஓட்டும் போடுவமில்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ நீங்கள் வெளிநாட்டு குடிமகனா?

நாங்கள் இன்னும் இலங்கை குடிமக்கள் தான்இ நாங்கள் போவோமில்ல

போறது மாத்திரம் இல்லை ஓட்டும் போடுவமில்ல.

அண்ணை இலங்கை குடிமகன், நான் ஸ்ரீலங்கா குடிமகன்.

நீங்கள் கலெக்சன் பாட்டியோ? பில்லியனராயும் இருப்பியள், உங்களுக்கு வசதியிருக்கும் போவியள்........ என்னதான் வசதியிருந்தாலும் ஒரு வோட்டுக்காக போறது டைம் வேஸ்டண்ண. யோசிக்காமல் செய்யுங்கோ.! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழா!

தயவு செய்து ஒருகணம் சிந்தித்து பார். எமது சக்தியை ஒருமுகப்படுத்தி ஒன்றிணைய வேண்டிய நேரமிது.

30 வருட அகிம்சை வழி போராட்டம்

30 வருட ஆயுத வழி போராட்டம்

30, 000 மாவீரர் உயிர்கள் இழப்புக்கள்

100, 000 தமிழர் உயிர்கள் இழப்புக்கள்

350, 000 தமிழர் முள்வேலிக்குள் சிக்குண்டு வேதனையோடு இருகின்றார்கள்

இவற்றோடு,

கோடிக்கணக்கான தமிழர் பொருளாதார, வியாபார இழப்புக்கள்

லட்சக்கணக்கான தமிழர் இடம் பெயர்ந்து தம் உறவுகளை, தாம் பிறந்த நிலத்தை இழந்து இன்று அகதிகளாக நிம்மதியை துறந்து அலைந்து கொண்டிருக்கின்றோம்

இந்த இழப்புகளுக்கு பின்னர் ஒரு சாதகமான காலம் கனிந்து வந்துள்ளது.

உலகம் விழி திறந்துள்ளது.

அரசியல் மாற்றங்கள் எமக்கு மிகவும் சாதகமாக இருக்கின்றது.

நாம் தமிழர் இன்றே விழித்து, ஒன்றிணைந்து,

இவற்றை எமக்கு சாதகமாக பயன்படுத்தாது விட்டால் எம்மையும் எமது சந்ததியையும் அந்த இறைவனால் கூட காப்பாற்ற முடியாது.

இந்த சந்தர்ப்பம் நீண்ட காலத்துக்கு இருக்கபோவதில்லை.

நாம் எமது குறிக்கோளை அடைய சரியான சந்தர்ப்பம் வந்துள்ளது.

நாம் தவற விட கூடாது.

விரைவாக செயல்பட்டால் வெற்றி எமக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் யாருக்கு வாக்கு போட்டாலும்................ தமிழர்தரப்பு நியாயமாக ஏதும் நடக்கபோவதில்லை. யாரோ ஒருவர் ஏதோ ஒரு மந்திரவார்த்தை கூறி தமிழரின் வாக்குகளை சூறையாட போகிறார்கள் என்பதே உண்மை. இதில் இந்தியாவின் கைகூலிகள் வேண்டிய கூலிக்கு பால்கொடுத்து வளர்த்த தாயையும் கூட்டிகொடுக்கும் அளவிற்கு கூலி போதைஏறிய கூட்டம் ஏதாவது வசைபாடி இதுவே தமிழரருக்கு சிறந்தது என்றொரு பாட்டை வாறமாதம் தொடக்கம் பாட தொடங்குங்கள். அப்பப்போ மதிவறண்டனாங்'கள்" என்று தம்மை தாமே கூறும் கூட்டம் அதற்கு தாளம் போடும்.

ஆனால் தமிழருக்கு ஏதும் ஆகபோவதில்லை. இருவருமே தமிழரை எப்படி இலங்கையில் அழிப்பது என்பது பற்றி உட்கார்ந்து இருந்து யோசிப்பவர்கள்.

வாக்குகளை போடாது புறக்கணித்தால்............ஸ்ரீலங்கா தேர்தல் என்பது எமக்கு தேவையில்லாத விடயம் என்பதை இன்னொருமுறை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைவதோடு. இனிவரும் தேர்தலில் தமிழர்கள் வாக்குகளை போடமாட்டார்கள் என்ற நிச்சயபாடு தோன்றிவிட்டால் போட்டி என்பது எல்லை மீறி அவர்களுக்குள் பிரிவினை வர வாய்புண்டு. இப்போது தமிழரின் வாக்குகளை வளைப்பது எப்படியென'றே அவர்கள் சிந்திக்கின்றார்கள். அது இல்லாது இடத்து எதிரணியின் வாக்குகளை சூறையாடுவது எப்படி என்Nறு சிந்திப்பார்கள் முடிவு வித்தியாசமானதா இருக்கும். காரணம் பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் இருவரும்.

ஆனாலும் சுயநலத்தின் துண்களாக விளங்கும் தமிழனால் சமூதாய தேவை பற்றியும் இனமானம் விடுதலை பற்றி பேசியுமு; என்ன பலன். வாக்குசாவடியில் நாய்களைபோல் போய் கூடத்தான் போகிறான் தனது தங்கைகளை படைகொண்டு புணர்ந்த இரண்டில் ஒருவனை கைகூப்பி வணங்கி தனது பிச்சையை போட்டால் வாக்கு........ என்று ஜனவரி 26 மறுபடியும் ஒருமுறை எஞ்சிய மானத்தையும் விற்கத்தான் போகிறான்.

எங்கை போறதோ! அடிச்சாலும் போகாதெண்டுதானே சொல்லுறன்.....

நீங்கள் நல்லதொடு விசியத்த தொட்டிருக்கிறயள். உந்த சனநாயகத்த நிலைநாட்டத்தான் மகிந்தவுக்கு இத்தின நாடுகளும் சப்போட் பண்ணினது. 25 வருச போருக்குப்பிறகு ஓவநைட்டில சனநாயகம் வருமெண்டு நீங்கள் எதிர்பாத்தா உங்களைப்போல முட்டாள் யாரும் இருக்கமுடியாது. முந்தியும் சிங்களப்பகுதியளில சனநாயக தேர்தலுகள் நடந்தது. எங்கட பகுதியளில நடக்கேல்ல அதுக்கு காரணம் பட்டாசு கொழுத்திறவையும் கைவெட்டிறவையும்தான், சிங்களவரில்ல. இப்ப சொல்லுங்கோ யார் சனநாயகவாதியெண்டு.

நான் யாருக்கு வாக்களிக்கிறதெண்டு கேக்கிறியள்....ஆதரவு யாருக்கெண்டு கேட்டிருந்தா சொல்லலாம், ஆனா அங்கை நடக்கிற லெக்சனுக்கு இங்க வோட்டு போடுறதெண்டது பொல்லாத கஸ்டம். வெல்லுற குதிரைக்கு ஆதரவு எண்டு வச்சுக்கொள்ளுங்கோவன். :lol:

அட... இரணிலை உமக்கு தலைவராக்க நாங்கள் வோட்டு போட இல்லை எண்டு அண்டைக்கு குத்தி முறிய வெளிக்கிட்டீர் நாலு வருசமாச்சு இன்னும் அதை விட இல்லையே...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.