Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடிய சாத்தியம்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஓருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தீர்மானம் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர் தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் ஒரு சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்மானத்தை அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=17911&cat=1

இது உண்மையானால் நிச்சயம் ஒரு விவேகமான முடிவு தான். ஒரு பக்கம் தமிழனை கொல்ல சொன்ன ராஜபக்க்ஷ‌ மற்ற பக்கம் கொன்ற சரத் பொன்சேகா. இதில் யாருக்கும் தமிழ் மக்கள் வாக்களித்து தங்கள் இருப்பை கேள்விக்குறியாக்கமாட்டார்கள் என்று நினைக்கிறன். அதேசமயம் தமிழரின்ர அரசியல் அபிலாசைகள் இன்னும் மரணிக்கவில்லை எண்டு உலகத்துக்கு சொல்லுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக கருதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

சம்பந்தன் ஐயா ஜனாதிபதியாக போட்டியிட்டால் ...... இந்தியாவின் ஆதரவு சம்பந்தன் ஐயாவுக்கு தான்.....

சம்பந்தன் ஐயா ஜனாதிபதியாக போட்டியிட்டால் ...... இந்தியாவின் ஆதரவு சம்பந்தன் ஐயாவுக்கு தான்.....

ஆசைதான் உங்களுக்கு.....

மயிரைக்குடுத்தாங்கள் சம்பந்தருக்கு ஆதரவு....

அவங்கட ஆதரவெல்லாம் அண்ணன் ராசபக்சவுக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

.

ஆசைதான் உங்களுக்கு.....

மயிரைக்குடுத்தாங்கள் சம்பந்தருக்கு ஆதரவு....

அவங்கட ஆதரவெல்லாம் அண்ணன் ராசபக்சவுக்குத்தான்.

இந்த விஷயத்திலை தமிழினக் காவலர் கலைஞர்,

சோனியாஜீக்கு தந்தி அடித்து மத்திய அரசில் பெரிய மன மாற்றத்தை கொண்டு வருவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் சனாதிபதி வேட்பாளராக திருமலை மாவட்ட பாராளுமன்ற் உறுப்பினர் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தமிழ் வேட்பாளர் ஒருவரை தேர்தலில் களம் இறக்க தீர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், திரு சம்பந்தன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது தமிழ்மக்களின் சார்பில் போட்டியிடக்கூடிய திறமை தகுதி அவருக்கு உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் இந்த தீர்மானம் அடுத்த சில தினங்களில் கூடி ஆராய்ந்து எடுக்கப்படும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். வன்னி போர் அழிவுக்கு உத்தரவிட்டவரும் போரை முன்னின்று வழிநடத்தியவரும் சனாதிபதி தேர்தலில் எதிரும் புதிருமாக உள்ள நிலையில் தமிழ் தரப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Edited by snegi

அவ்வாறு சம்பந்தன் போட்டியிட்டால், வரவேற்கத்தக்கது.

இன்று தமிழர்கள் உட்பட்ட சிறுபான்மையினரின் வாக்கு வங்கியிலேயே சிறிலங்கான் அரச தலைவர் யாரென்பது தீர்மானிக்கபட உள்ளதாக உள்ளமையால், மகிந்தவோ, பொன்சேகாவோ ஒரே இனவாத சாக்கடையில் வளந்த தலைவர்கள்.

இத்தேர்தலில் நாம் இவ்விருவரில் யாருக்கு போட்டாலும், அதை சிங்களம் வரும் காலத்தில் எம் மக்கள் ஜனநாயக இலங்கையில் ஒற்றுமையுடன் வாழ இதை பயன்படுத்தி இருப்பதாக சர்வதேசத்துக்கு பிரச்சாரம் செய்யும்.

ஆதலினால் எம் எதிர்ப்பை காட்ட இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம்.

தயவுசெய்து எம் புலத்து ததேயின் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஒரு முறைக்கு நூறு முறை சிந்தியுங்கள், துரோகி பட்டம் கொடுப்பதற்கு முன்னுக்கு!!! அதே உணர்ச்சி அரசியலில் சிங்களத்துக்கு மறைமுகமாக உதவ முற்படாதீர்கள்!!!

Edited by Nellaiyan

இது மகிந்தவிற்கு ஆதரவாக இந்தியா மேற்கொண்டிருக்கும் ஒரு நகர்வு. சரத்பென்சகவோவிற்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் சரத் ரணிலை பிரதமராக முன்னிறுத்தி தமிழர்களின் வாக்கினை பெற முனைகிறார். தமிழர்களின் வாக்கு வெற்றியை தீர்மானிக்கக் கூடிய ஒரு நிலையில் அந்த வாக்குகள் சம்பந்தரிற்கு விழச் செய்து மகிந்தவை வெல்ல வைக்கும் ஒரு திட்டம் இது.

இந்தியாவின் சொல்லைக் கேட்கக் கூடிய சம்பந்தர் ஜனாதிபதித் தேர்தலில் நின்றால் இதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

அவ்வாறு சம்பந்தன் போட்டியிட்டால், வரவேற்கத்தக்கது.

இன்று தமிழர்கள் உட்பட்ட சிறுபான்மையினரின் வாக்கு வங்கியிலேயே சிறிலங்கான் அரச தலைவர் யாரென்பது தீர்மானிக்கபட உள்ளதாக உள்ளமையால், மகிந்தவோ, பொன்சேகாவோ ஒரே இனவாத சாக்கடையில் வளந்த தலைவர்கள்.

இத்தேர்தலில் நாம் இவ்விருவரில் யாருக்கு போட்டாலும், அதை சிங்களம் வரும் காலத்தில் எம் மக்கள் ஜனநாயக இலங்கையில் ஒற்றுமையுடன் வாழ இதை பயன்படுத்தி இருப்பதாக சர்வதேசத்துக்கு பிரச்சாரம் செய்யும்.

ஆதலினால் எம் எதிர்ப்பை காட்ட இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம்.

நிச்சயமாக... :lol:

இது மகிந்தவிற்கு ஆதரவாக இந்தியா மேற்கொண்டிருக்கும் ஒரு நகர்வு. சரத்பென்சகவோவிற்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் சரத் ரணிலை பிரதமராக முன்னிறுத்தி தமிழர்களின் வாக்கினை பெற முனைகிறார். தமிழர்களின் வாக்கு வெற்றியை தீர்மானிக்கக் கூடிய ஒரு நிலையில் அந்த வாக்குகள் சம்பந்தரிற்கு விழச் செய்து மகிந்தவை வெல்ல வைக்கும் ஒரு திட்டம் இது.

இந்தியாவின் சொல்லைக் கேட்கக் கூடிய சம்பந்தர் ஜனாதிபதித் தேர்தலில் நின்றால் இதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

மகிந்தவிற்கா அல்லது சரத்திற்கா வாக்கு போட சொல்லுறியள்!!!!

இது மகிந்தவிற்கு ஆதரவாக இந்தியா மேற்கொண்டிருக்கும் ஒரு நகர்வு. சரத்பென்சகவோவிற்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் சரத் ரணிலை பிரதமராக முன்னிறுத்தி தமிழர்களின் வாக்கினை பெற முனைகிறார். தமிழர்களின் வாக்கு வெற்றியை தீர்மானிக்கக் கூடிய ஒரு நிலையில் அந்த வாக்குகள் சம்பந்தரிற்கு விழச் செய்து மகிந்தவை வெல்ல வைக்கும் ஒரு திட்டம் இது.

இந்தியாவின் சொல்லைக் கேட்கக் கூடிய சம்பந்தர் ஜனாதிபதித் தேர்தலில் நின்றால் இதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

ரணிலை முன்னிறுத்தி சரத் வாக்குக் கேட்டால் உடனே நம்பிப் போடும் அளவிற்காக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்? தம் அரசியல் அபிலாசைகள் இன்னும் நீர்த்துப் போகவில்லை என்பதைத் தானே கடந்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ் மக்கள் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும் காட்டினார்கள்

சம்பந்தன் அல்லது யாரேனும் தமிழர் ஒருவர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை வலியுறுத்தி சனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக நிற்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம். இன்று புலிகள் அழித்தொழிக்கப்பட்டு விட்டார்கள், அவர்களின் அழிவுடன் வடக்கு கிழக்கு இணைந்த சுயாட்சி என்ற எம் அரசியல் அடிப்படை உரிமைக்கான குரலும் அழிந்து விட்டது என்று சிங்கள பெளத்த பேரினவாதம் நிறுவ முற்படும் வேளையில், தமிழ் மக்கள் மீண்டும் அதனை உரத்துச் சொல்ல ஒரு சந்தர்ப்பமாக தமிழ் தரப்புகள் இதனை பயன்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும், வாக்களிக்காமல் போனாலும் வெல்லப் போவது சரத் அல்லது மகிந்த ஆகிய தமிழ் மக்களை அழிவுக்குள்ளாக்கிய இருவரில் ஒருவர் தான். அப்படி இருக்கும் போது, இந்த சந்தர்ப்பத்தை எமக்கான உரிமைக்கான குரலை உரத்து சொல்ல பயன்படுத்தும் சந்தர்ப்பமாக ஏன் பயன்படுத்தக் கூடாது?

Edited by நிழலி

தயவுசெய்து எம் புலத்து ததேயின் ஊடகங்களும்இ ஊடகவியலாளர்களும் ஒரு முறைக்கு நூறு முறை சிந்தியுங்கள்இ துரோகி பட்டம் கொடுப்பதற்கு முன்னுக்கு!!! அதே உணர்ச்சி அரசியலில் சிங்களத்துக்கு மறைமுகமாக உதவ முற்படாதீர்கள்!!!

தமிழ்த்தேசிய ஊடகம் இருக்கா?

தமிழ்த்தேசியத்தைச் சிகைக்கும் ஊடகங்கள் தான் இருக்கின்றது.

Edited by kalaivani

தலைமை இன்றித் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தலைமை வேண்டும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பெரிய திட்டங்கள் இருக்கும்போது அதில் தமிழர்கள் சிறிய திட்டமொன்றை சாதகமாக்கிக் கொள்ளலாம். ஒட்டுக் குமுக்களின் 'ஜனநாயக அரசியலை' ஓரங்கட்டுவதற்காகவாவது சம்பந்தன் அவர்கள் தேர்தலில் நிற்க வேண்டும். அப்படி அவர் தேர்தலில் நின்றால் வெளிநாடுகளிலுள்ள அனைத்து தமிழர் அமைப்புகளும் ஆதரவு தர முன்வர வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தமிழ் வேட்பாளர் ஒருவரை தேர்தலில் களம் இறக்க தீர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், திரு சம்பந்தன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது தமிழ்மக்களின் சார்பில் போட்டியிடக்கூடிய திறமை தகுதி அவருக்கு உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

சம்பந்தர் ஐயா, தமிழீழ நாடு கடந்த அரசு, இராசதந்திரிகளிடம் ஆலோசனை பொறுவது நல்லது.

Edited by kalaivani

.

சம்பந்தன் ஐயா ஜனாதிபதியாக போட்டியிட்டால் ...... இந்தியாவின் ஆதரவு சம்பந்தன் ஐயாவுக்கு தான்.....

:lol: யோக் அடிக்காதேங்கோ தமிழ்சிறி அண்ணா!

தலைமை இன்றித் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஒரு தலைமை வேண்டும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பெரிய திட்டங்கள் இருக்கும்போது அதில் தமிழர்கள் சிறிய திட்டமொன்றை சாதகமாக்கிக் கொள்ளலாம். ஒட்டுக் குமுக்களின் 'ஜனநாயக அரசியலை' ஓரங்கட்டுவதற்காகவாவது சம்பந்தன் அவர்கள் தேர்தலில் நிற்க வேண்டும். அப்படி அவர் தேர்தலில் நின்றால் வெளிநாடுகளிலுள்ள அனைத்து தமிழர் அமைப்புகளும் ஆதரவு தர முன்வர வேண்டும்.

ஓம் கட்டாயம் தேர்தலில் நிற்கத்தான் வேண்டும் நின்றால் 75 வீதம் தமிழர்களாவது வாக்களிப்பார்கள் அதில் மாற்றுக்கருத்தில்லை தேர்தல் முடிந்தபின் இவர்களின் ஆதரவு மகிந்தவிற்கா? அல்லது சரத் பொன்சேகாவுக்கா? அதை இவர்கள் தேர்தலின் முன்பே சொன்னால் நல்லது!

எல்லாத் தேர்தல்களிலும் சம்பந்தரைப் போல வெற்றி பற்றி கற்பனைகூட செய்யமுடியாத வேட்பாளர்கள் போட்டியிடுவதுண்டு.

தேர்தல்நாளுக்கு முன்பாக போட்டியிலிருந்து விலகுவதாகவும் தமக்கான வாக்குகளை இந்தியா கைகாட்டும் ஒருவருக்கு போடும்படியும்

சிலவேளை சொல்வார்.ஏனெனில் இவரின் கடந்தகாலம் அப்படியானது.

சம்பந்தர் வேட்பாளரானால் சில உறுதிகளை மக்களுக்கு எழுத்துவடிவில் கொடுக்கவேண்டும்.(அதையும் மீறுவதுதான் அவர்களின் அரசியல்)

ஆனாலும் இப்போதைக்கு ஒரு தமிழ்வேட்பாளர் என்றமுறையில் சம்பந்தர். உள்ளதில் பரவாயில்லை.

தமிழ் மக்களின் பிரதிபதிப்பை சம்பந்தர் முஉளம் காட்டலாம்.

நாடுகடந்த அரசு புலத்தல் உள்ள மக்களை ஒன்றிணைக்க உதவலாம்

இருந்தாலும் தாயகத்தில் உள்ள மாக்களுக்கு ஒரு திடமான ஒரு தலைமை தேவை. இதுக்கு சம்பந்தர் பொருத்தமானவர்தான்.

இதை சிதைப்பதுக்கு ராஜபக்ச டாங்கியையும் களத்தில் இறக்கலாம்.

மக்கள் ஒரு தெளிவான செய்தியை சர்வதேசத்துக்கு எயடுயபெமயஎநனேரஅ.

நிச்சயமாக வரவேற்க்க தக்க விடையம் இதற்கு தமிழ் மக்களின் 95 வீதமான ஆதரவு கிடைக்கும் எனநம்புகிண்றேன்...

ஒருசில வீதமான சிங்களவரின் ஆதரவும் நிச்சயம் இருக்கும் .. இதன் மூலம் சர்வதேசத்துக்கு ஒரு தெளிவான் செய்தியை அடித்துக் கூறலாம்..

இருப்பினும் இலங்கை அரசியல் யாப்பில் தமிழ் ஜனாதிபதி வேட்பாழருக்கு இடம் இருக்கிறதா??

ஒரு ஜனாதிபதி வேட்பாளன் சிங்களத்தை தாய் மொழியாக கொண்டிருக்க வேண்டும்..

அல்லது பௌத்தனாக இருக்க வேண்டும் என்றல்லவா பேரினவாத சாசனம் இருக்கிறது???..............

மறைந்த குமார் பொன்னம்பலம் ஒரு தடவை போட்டியிட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த குமார் பொன்னம்பலம் ஒரு தடவை போட்டியிட்டவர்.

1982ல் போட்டியிட்டு 4வதாக வந்தவர். அத்தேர்தலில் சில தமிழர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களித்தார்கள். கேட்டதற்கு தோட்டக்காரர்களுக்கு உதவி புரிவார் என்றும் வாக்களித்தார்கள். ஆனால் கொழும்புத்தமிழ்ர்கள் பலர் ஜ.தே.கவுக்கு அப்பொழுது வாக்களித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்தவிற்கு ஆதரவாக இந்தியா மேற்கொண்டிருக்கும் ஒரு நகர்வு. சரத்பென்சகவோவிற்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் சரத் ரணிலை பிரதமராக முன்னிறுத்தி தமிழர்களின் வாக்கினை பெற முனைகிறார். தமிழர்களின் வாக்கு வெற்றியை தீர்மானிக்கக் கூடிய ஒரு நிலையில் அந்த வாக்குகள் சம்பந்தரிற்கு விழச் செய்து மகிந்தவை வெல்ல வைக்கும் ஒரு திட்டம் இது.

இந்தியாவின் சொல்லைக் கேட்கக் கூடிய சம்பந்தர் ஜனாதிபதித் தேர்தலில் நின்றால் இதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

சிறிலங்கா தேர்தலில் ஒருவர் 50 வீகிதத்துக்கு அதிகமாக வாக்குகள் பெற்றால் தான் அதிபராகலாம். 50 வீகிதத்துக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத சந்தர்ப்பத்தில் 2ம் , 3ம் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சனாதிபதி தெரியப்படுவார்.

ரணிலைப் பிரதமாராக விரும்பும் தமிழர்கள் சம்பந்தருக்கு முதல் வாக்காகவும், 2 வது வாக்கை ரணிலின் உள்ள பொன்சேகாவுக்கும் வாக்களிக்கலாம். அதாவது மகிந்தா அல்லது பொன்சேகா ஆகியோரில் ஒருவரும் முதல் வாக்குகளின் படி 50 வீதத்துக்குக் குறைய வாக்குகள் பெற்றிருந்தால் 2வது ,3 வது விருப்பு வாக்குகளின் அடிப்படையில் மகிந்தா அல்லது பொன்சேகா தெரிவு செய்யப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழமைபோல திட்டுபவர்கள் திட்டட்டும்/ வசை படுபவர்கள் வசைபாடட்டும்

ஆனால் என்னுடைய கருத்து,

தமிழர்களின் வெற்று வெறுவாய் சப்பி அரசியல் அறிவு என்பது இதுதான்.. நாங்கள் சிங்களவருக்கு எதிர்ப்பு காட்டினது போதும். சம்பத்தர் அங்கே போட்டி போடுவதற்கும் இங்கே உள்ளவர்களினது நாடு கடந்த அரசிற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. விசில் அடித்தது எழு தலைமுறைக்கு காணும். உருப்படியா யோசிக்கிற வழியை பாருங்கோ. சம்பந்தர் போட்டியிடுவதால் தமிழரின் வாக்குக்குரிய தேவை சிங்களவருக்கு இல்லாமல் போகும்..அவர்கள் அதை பற்றி சிறிதும் யோசிக்காமல் தங்கட பாட்டிற்கு எல்லாம் செய்வார்கள். கெட்டித்தனமாய் இப்ப என்ன வெட்டி விழுத்துகிரர்கள் என்று கேட்க வேண்டாம்..

இப்பவும் தமிழ் சனம் இலங்கையில் இருக்குது, அவர்கள் சிங்களவனில் தான் பெரும்பாலான விடயங்களுக்கு தங்கியுள்ளார்கள் என்பதை மறக்க வேண்டாம். நான் சொல்லவில்லை இருவரில் யார் least leathal என்று இருவருமே எங்கள் உயிர் குடித்தவர்கள், ஆனால் இம்முறை யோசித்து செய்தால் நல்லம்.

ரெண்டுமே கத்திதான்.. குத்துறவந்தான் வேறு.

சரத் பொன்சேகா வெண்டால்.. கூத்து களைகட்டும்.

அமெரிக்கா தாங்கிய மேற்கு இந்திய நலனுக்கு ஊக்கம் கொடுத்து சைனாவை ஓரங்கட்டபாக்கும்

ரெண்டு காலையும் மகிந்த மூலமாய் பலமாக ஊண்டியுள்ள சைனா என்ன செய்யும்?

அண்ணே இது சிங்கள பௌத்த ஜனாதிபதிய தேர்வுசெய்யிற தேர்தல், இதில தலையிட்டியளென்டா பிரச்சனை குடுப்பாங்க, நானும் அதுக்குத்தான் இந்த சிங்கள பௌத்த ஜனாதிபதி தேர்தலில இருந்து ஒதுங்கி இருக்கிறன். :):lol:

ரெண்டுமே கத்திதான்.. குத்துறவந்தான் வேறு.

சரத் பொன்சேகா வெண்டால்.. கூத்து களைகட்டும்.

அமெரிக்கா தாங்கிய மேற்கு இந்திய நலனுக்கு ஊக்கம் கொடுத்து சைனாவை ஓரங்கட்டபாக்கும்

ரெண்டு காலையும் மகிந்த மூலமாய் பலமாக ஊண்டியுள்ள சைனா என்ன செய்யும்?

:( இங்க லெக்சன் வச்சா சரத்துக்குத்தான் வெற்றி.

பேசாமல் வாக்கை யாருக்கும் போடாமல் புறக்கணியுங்கோ.... இல்லை முடிய வில்லையா வாக்கை மகிந்தவுக்கு போடுங்கோ...

இங்க லெக்சன் வச்சா சரத்துக்குத்தான் வெற்றி.

தற்கொலை செய்வது எண்டு முடிவெடுத்தாச்சு...

சும்மா என்னத்துக்கு பிளீச்ச குடிச்சு வாந்தியும் பேதியுமா பிறாணனை உடுவான்?? பெரிய பாலமாய் பார்த்து தலகீழா பாய்ஞ்சால் இன்ட்றஸ்டின்ங்கா இருக்குமே.....

பேசாமல் வாக்கை யாருக்கும் போடாமல் புறக்கணியுங்கோ.... இல்லை முடிய வில்லையா வாக்கை மகிந்தவுக்கு போடுங்கோ...

பொய்ன்ட் இருக்கிறது... அட்லீஸ்ட் சிரீ லன்கா நாசமாய் போகும்.

Edited by Panangkai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.