Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கொத்துரொட்டிக் கடையில் நாய் இறைச்சி! வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீக்கிரை.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் கொத்துரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

இன்று யாழ்;ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து யாழ் நகர்ப் பகுதியில் திரண்ட நூறு வரையான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழிற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லீம் களின் இந்த பயங்கரவாத செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் களின் இந்த பயங்கரவாத செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

இன்னொரு மட்டக்களப்பாகவும், இந்தியாவினது தென்முனைக் காஸ்மீராகவும் யாழ்க்குடா மாறினாலும் ஆச்சரியப்பட முடியாதென்பதையே இச்சம்பவங்கள் அல்லது அடாவடிகள் புலப்படுத்துகின்றது.தமிழன் பலமுடன் இருக்கும்வரைதான் யாழிலே சிலரால் வீணை கூட வாசிக்க முடிந்தது. இனி விசில் கூட அடிக்க முடியாதென்பதை உணரத்தலைப்படுவார்களாயின் தமிழினம் சிறிதாவது நிம்மதியடையும். சிந்திப்பார்களா? அல்லது இனி வெற்றிலையைப் போட்டவாறு தலையில் குல்லாவையும் மாட்டிக்கொள்வார்களா?

உண்மைகளைச் சுட்டினால் உடனே ருத்திரத் தாண்டவம் ஆடும் மாற்றுக் கருத்து மாணிக்கங்களே இவற்றையும் விமர்சனம் செய்வீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீகளின் இந்த குணம்(ஒற்றுமை) மட்டும் தமிழனுக்கு இருந்தால் எப்பவோ தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால் எம்மவர் செய்தவரை நல்லதோ கெட்டதோ காட்டிக் கொடுப்பதில் திறமைசாலிகள். அவர்கள் எவ்வளவு திறமையாக செய்து விட்டு நியாயம் கற்பிக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் அமைந்திருக்கும் கொத்துரொட்டிக் கடை ஒன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட வலம்புரி நாளேடு முஸ்லிம்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

இன்று யாழ்;ப்பாணத்தில் வெளிவந்த வலம்புரி நாளேட்டில், ஐந்து சந்தியில் இயங்கி வரும் முஸ்லிம் கொத்துரொட்டிக் கடையொன்றில் நாய் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டதாக பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து யாழ் நகர்ப் பகுதியில் திரண்ட நூறு வரையான முஸ்லிம் வணிகர்கள், வலம்புரி நாளிதழிற்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு அதன் இதழ்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக முகமதியா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகளால் இன்று அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு, அவர்களது சமய நம்பிக்கையின் படி, நாய் தீண்டத்தகாத மிருகம். எப்படி மாட்டிறைச்சி இந்துக்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட முடியாததோ அப்படியே முஸ்லிம்களுக்கு நாய் இறைச்சியும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

வலம்புரியின் இந்த செய்தி, யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கிடையே தேர்தலுக்கு முன்னான கலவரத்தை தூண்டும் வகையில் வெளியிடப்பட்டதாகவே தெரிகிறது. இது பற்றி யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் சமுக சேவைகள் அமைச்சர் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு உடனடியாக அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். மாநகர சபை இது பற்றிய விசாரணைகளுக்கு முன்நின்று உதவ வேண்டும்.

நாய் இறைச்சி சீனா, கொரியா, தாய்வான், வியட்நாம், பிலிப்பீன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளில் பிரபலமான உணவு. விலை கூடிய உணவும் கூட. வணிகம் சம்பந்தமாக ஒரு தொழிலதிபரை சீனாவில் சந்தித்த போது அவர் நாயிறைச்சி உண்ண வருமாறு அழைத்தார். நான் மறுத்துவிட அவரது மனைவியும் மகளும் கவலைப்பட்டார்கள். காரணம், அவர்கள் விருந்தினரை காரணம் காட்டி வணிக செலவில் நாயிறைச்சி உண்ணும் சந்தர்ப்பம் தவறிவிட்டது என்பதாகும். பின்னர் கொரிய உணவகம் ஒன்றில் உணவருந்திய போது நாயிறைச்சியே அங்கு அதிகூடிய விலையுள்ள உணவாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.

யாழ்ப்பாண மக்கள் வெள்ளைக்காரன் காலத்தில் மாட்டிறைச்சி உண்ண பழகியது போல, இன்று சீன கட்டுமான காலத்தில் நாயிறைச்சியை உண்ண ஆரம்பித்தால், கொரியர்கள், சீனர்கள் போல முன்னேறும் ஆர்வம் வர சாத்தியம் உள்ளது. அதைவிட்டு வழக்கம் போல வடையும், வாழைப்பழமும் என்றிருந்தால், தமிழ்நாட்டுகாரர் மாதிரி ரஜினிக்கு விசில் அடித்து கொண்டிருக்க வேண்டியதுதான்.

korea-dog-meat.jpg

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

-----

வலம்புரியின் இந்த செய்தி, யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கிடையே தேர்தலுக்கு முன்னான கலவரத்தை தூண்டும் வகையில் வெளியிடப்பட்டதாகவே தெரிகிறது. இது பற்றி யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயர் சமுக சேவைகள் அமைச்சர் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு உடனடியாக அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். மாநகர சபை இது பற்றிய விசாரணைகளுக்கு முன்நின்று உதவ வேண்டும்.

------

சரியாகச் சொன்னீர்கள் ஜுட்.

இனிமேல்..... தமிழர்களிடையே ஆங்காங்கு பிரிவினைகளை தோற்றுவிக்க பலரும் முயல்வார்கள்.

இதுவரை சுமூகமாக இருந்த கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் பிரச்சினை வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

பலருக்கு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்றால் வெகு விருப்பம்.

இதனால் எதிர் காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்புக்களை பற்றி கவலைப்படமாட்டார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முஸ்லிம்களின் தாயகமும் வடக்கே ஆகும். சிங்களவர்களுடன் அல்லது சிங்கள இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து வலம்புரிக்கு எதிராக இயங்காமல், தாமே முன்னின்று ஆர்ப்பாட்டம் செய்தமை எத்தகைய விதத்தில் தவறாகும்? சிங்கள அரசப் படைகளுடன் ஒட்டுறவாகித் திரியும் ஈபிடிபி போன்றன தம் பத்திரிகைகளை கட்டாயப்படுத்தி விற்கும் யாழ்ப்பாண சூழலில், தம் எதிர்ப்பை பத்திரிகைகள வாங்கி எரித்த முஸ்லிம்களின் செயல் மேலானது

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் முன்னெச்சரிக்கையாக நடந்துள்ளார்கள் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைத்தன்மை தெரியவில்லையாயினும்

இது பிரபாகரனுக்கு பின்.....

அதற்கு முன் எந்தப்பகுதியுமே இவ்வாறு செய்யாது....

  • கருத்துக்கள உறவுகள்

.

என்னவோ...... யாழ்ப்பாணம் ஆரியகுளச் சந்தியிலிருக்கிற நாகவிகாரைக்கு முன்னாலை உள்ள கடைகளில் சாமான் வாங்கி விட்டு .....

சாமானை போட பை இருக்கா? எண்டு மட்டும் கேட்டுப் போடாதேங்கோ ........ பனங்கொட்டை தமிழர்களே.

.

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா முகாமில இருந்து ஊருக்கு போயிருந்த ஒராளிட்ட விசாரிச்சன், என்னமாதிரி மாத்தளன் போய் வந்திருக்கிறீங்கள் இங்க போராட்டம் திரும்ப துடங்குமெண்டு கதை அடிபடுது எண்டவுடன நாயள் வந்தா தும்புக்கட்டையாலதான் அடிப்பன் எண்டு சொன்னார். எப்பவும் நாயள பற்றி நினைச்சுக்கொண்டிருக்கிறாதல உவைக்கும் நாயிறைச்சி மாதிரி தெரிஞ்சிதோ? :)

"உதுறு வசந்தவின்" ஒரு பாகமோ தெரியவில்லை.:lol: :lol:

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்கு, அவர்களது சமய நம்பிக்கையின் படி, நாய் தீண்டத்தகாத மிருகம். எப்படி மாட்டிறைச்சி இந்துக்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட முடியாததோ அப்படியே முஸ்லிம்களுக்கு நாய் இறைச்சியும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

முஸ்லிம்களுக்குஇ அவர்களது சமய நம்பிக்கையின் பன்றிதான் தீண்டத்தகாத மிருகம்.[/u]

இப்படித்தான் நான் அறிந்தவரையில்....

யாராவது விளங்கப்படுத்தமுடியுமா?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ...... யாழ்ப்பாணம் ஆரியகுளச் சந்தியிலிருக்கிற நாகவிகாரைக்கு முன்னாலை உள்ள கடைகளில் சாமான் வாங்கி விட்டு .....

சாமானை போட பை இருக்கா? எண்டு மட்டும் கேட்டுப் போடாதேங்கோ ........ பனங்கொட்டை தமிழர்களே.

சிறி உங்களுக்கு பகிடி கொஞ்சம் கூடத்தான் போலை கிடக்குது.

சிங்களமும் உங்களுக்கு கொஞ்சம் தெரியும் போலை. அதுதான் சாமானைப் போட பையக் கேக்கிறியள். சிங்களவனிட்ட அது இருந்திச்சு என்டா ஏன் இந்தியாக்காரனின்ட கால நக்கிறான். இல்லாதத கேட்டால் அவனுக்கு கோவம் வருந்தானே?

Edited by காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்குஇ அவர்களது சமய நம்பிக்கையின் பன்றிதான் தீண்டத்தகாத மிருகம்.

இப்படித்தான் நான் அறிந்தவரையில்....

யாராவது விளங்கப்படுத்தமுடியுமா?

பன்றி மட்டுமல்ல, நாயும் தீண்டத்தகாத மிருகம். பெரும்பான்மையான சுன்னி, ஷியா முஸ்லிம்கள் நாய்கள் சுத்தமற்ற மிருகங்கள் என்று கருதுகிறார்கள். ஆனால் சுன்னி(மாலிகி) முஸ்லிம்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. முஸ்லிம்களின் பொதுவான வற்றவா விதிமுறைகள் நாய்களை கருணையுடன் நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

முகம்மது நபி அவர்கள் நாய்களை வீட்டுமிருகங்களாக வளர்ப்பதை அனுமதிக்கவில்லை. ஆனால் வீட்டுகாவல், வேட்டை தேவைகளுக்காக வேலைக்கு வைத்திருப்பதை அனுமதித்திருக்கிறார். நாய்கள் உள்ள வீட்டில் இறைவனின் தூதர்கள் நுழையமாட்டார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

பின்வரும் இணைப்புகளை பாருங்கள். ஆங்கிலத்தில் இருக்கிறது.

http://en.wikipedia.org/wiki/Islam_and_animals#Dogs

http://www.peacemuslims.org/Jaffna_Muslims_up_in_arms_against_false_news-20-1397.html

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி JUDE

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நக்குற நாக்குக்கு

நாயென்ன?

பூனையென்ன?

அடியே!

உப்பையும்

தூளையும்

போட்டு பிரட்டி

வறட்டல் கறியாய் வையடி என்ரை செல்லம் :)

தவறணைப்பக்கம் ஒருக்கால்

போட்டுவாறன் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நக்குற நாக்குக்கு

நாயென்ன?

பூனையென்ன?

அடியே!

உப்பையும்

தூளையும்

போட்டு பிரட்டி

வறட்டல் கறியாய் வையடி என்ரை செல்லம் :)

தவறணைப்பக்கம் ஒருக்கால்

போட்டுவாறன் :lol:

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.