Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவன் பக்கம் தர்மம் இருந்தது.......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகான காலைநேரம், கடற்கரை ஓரமாக காலாற நடந்துவந்தேன். என்ன அழகு கண்ணுக்கு எட்டியதூரம்வரை நீலக்கடல் கரையும் தெரியவில்லை, ஆள்நடமாட்டமும் இல்லை.

இன்னும் சிறிதுதூரம் நடந்தேன் கொள்ளைஅழகு கண்ணுக்கு எட்டியதூரம்வரை பச்சைபசேல்என்று வயல்வெளிகள் அதைத்தொடர்ந்து சிறுபற்றைக்காடுகள்.

ஒருபுறம் நீலக்கடல் மறுபுறம் பச்சைஎன்று இவ்வழகை ரசித்தவாறு வந்த என்னை சிறுசலசலப்பு இவ்வுலகுக்கு கொண்டு வந்தது.

அருகில் சென்று பார்த்தேன். ஒரு வாட்டசாட்டமான ஆளை கட்டிவைத்து சிலர் அடித்தபடி இருந்தனர். பக்கத்தில் செல்ல முற்பட்டேன். ஆனால் சுத்தியிருப்பவர்கள் முகங்களில் பயத்தைக்கண்டேன். அதையும் மீறி முன்னேற முற்பட்டபோது அதிலிருந்தவர் ஏதோ கேட்க முற்பட்டார். அடித்துக்கொண்டிருந்தவர்களிலொருவர் கேட்டவரை கத்தியால் குத்தவந்தார். இவர் அலறியபடி ஓடத்தொடங்கினார். நிலமை புரிந்தது.

மற்றவர்களும் இதேநிலையில்தான் இருப்பது தெரிந்தது. எல்லோரது முகத்திலும் ஆத்திரம் இருந்தது. இங்கே நடப்பதை அவர்கள் ஏற்கவில்லை, ஆனால் பயத்தினால் பேசாமல் இருப்பது தெரிந்தது.

மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். புத்திசாலித்தனம் என்று எனக்கு நானே மெச்சிக்கொண்டேன்.

ஆனால் என் மனச்சாட்சி விடவில்லை என்ன என்று அறியும்ஆவல்.

என்ன இருந்தாலும் ஒருத்தரை பலர் அடிப்பதை என் மனம் ஏற்கவில்லை. வழியால் வந்த ஒருவரிடம் கதை போட்டேன்.

அவர் சொன்னது தூக்கிவாரிப்போட்டது எனக்கு..... இந்த ஊருக்கு நல்லது செய்ததால்….பிடிக்காதர்கள் மற்ற ஊரிலிருந்து ஆள்களைக்கொண்டு வந்து அடிக்கிறார்கள் என்றார்.

ஏன் நீங்கள் தட்டிக்கேட்ககூடாதா என்றேன். தட்டிக்கேட்டதால்தான் எல்லாவற்றையும் இழந்து தனிமரமாய் திரிகிறேன் என்றார்.

மேலும் எனக்கு ஏதாவது செய்யவேண்டும் அவனை காப்பாத்த வேண்டும் போல் இருந்தது. அடுத்த ஊரில் சென்று சொன்னேன்.

ஊரோடு ஒத்துப்போகத்தெரியவேணும், இதுக்கு நாம் என்ன செய்யமுடியும் என்றனர்.

இதுக்குமேல் நான் என்ன செய்யமுடியும். நான் என் வேலையை பார்த்துக்கொள்ள தொடங்கிவிட்டேன்.

ஆனால் இன்றும் என் உள்மனம் சொல்கிறது. அவன் காப்பாத்தப்பட்டிருப்பான் என்று. ஏனெனில் அவன் பக்கம் தர்மம் இருந்தது.......

சென்னைவாசியாக இருக்கத் தகுதியானவர்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் என் உள்மனம் சொல்கிறது. அவன் காப்பாத்தப்பட்டிருப்பான் என்று.

ஏனெனில் அவன் பக்கம் தர்மம் இருந்தது......

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடி வெல்லும்....

காப்பாற்றப் பட்டிருப்பான் .

தன்னை அறிஞ்சு தானம் செய்யவேணும்.. தனது வாழ்க்கையே ஆபத்தில இருக்கும்போது மற்றவனை ஆபத்தில இருந்து காப்பாற்றுகிறதுக்கு எல்லாராலும் முடியாது. நூற்றில ஒருவர் அப்பிடி இருக்கலாம். இதுதானே நடைமுறை உலகம் குகதாசன் அண்ணா. இல்லாட்டிக்கு தெருவுக்கு தெரு நடமாடும் உயிர்காப்பு படை அல்லோ இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நியாயம் ,தர்மத்துக்கு அப்பாற்பட்ட உலகில் வாழ்கிறோம்.இன்றைய உலகம் சில குழுமங்களாக்கப்பட்டுள்ளது.அவர்கள் சொல்வதும், செய்வதும் தான் சட்டமும், நியாமும் , தர்மமும்.

இக்குழுமங்களில் ஒன்றில் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ இணையவேண்டும் உங்களை பாதுகாக்க. இல்லாவிடில் அனல் மேலே பனித்துளிதான்.

  • தொடங்கியவர்

நன்றி தங்கள் கருத்துக்கு

உண்மையைச்சொன்னால் இதை நான் 1993 காலப்பகுதியில் எழுதினேன்

பாரிசிலுள்ள பத்திரிகைகளுக்கும்

இந்திய பத்திரிகைகளுக்கும் அனுப்பியிருந்தேன்

இந்திய பத்திரிகைகள் பிரசுரிக்கவிரும்பாத காரணம் தெரியும்

ஆனால் இலக்கண இலக்கிய கதைநடை சரியில்லை என்று இங்குள்ளவர்கள் எடுக்கவில்லை

ஆனால் கரு என்னுள் இருந்தது

பல பக்கங்களைக்கொண்ட அதை அன்று நேரம் கிடைத்ததால்5 நிமிடத்தில் சுருக்கி விடயத்தை மட்டும் எழுதினேன்

ஆனால் முடிவு இதுதான்

இன்றும் என் உள்மனம் சொல்கிறது. அவன் காப்பாத்தப்பட்டிருப்பான் என்று.

ஏனெனில் அவன் பக்கம் தர்மம் இருந்தது......

பாருங்கள் 1993 இலும் முடிவு பொருந்தியது

2009 இலும் பொருந்தியதுதெரிந்திருந்தும்காப்பாற்றாது நாமெல்லோம் தப்பித்தோம்

அல்லது

நாமே அனுமதித்தோம் என்பதுதான் உண்மை

ராஐவன்னியன் சொன்னதுபோல்

தமிழக மக்கள்போல் நாமும் தன் வேலையுண்டு என்று மறந்துவிட்டோம்

நியாயம் ,தர்மத்துக்கு அப்பாற்பட்ட உலகில் வாழ்கிறோம்.இன்றைய உலகம் சில குழுமங்களாக்கப்பட்டுள்ளது.அவர்கள் சொல்வதும், செய்வதும் தான் சட்டமும், நியாமும் , தர்மமும்.

இக்குழுமங்களில் ஒன்றில் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ இணையவேண்டும் உங்களை பாதுகாக்க. இல்லாவிடில் அனல் மேலே பனித்துளிதான்.

இதை நாம் செய்திருந்தால்

எதிரிகளோ

துரோகிகளோ

அல்லது

பகைவர்களோ

எமக்கு இல்லாது போயிருப்பர் என்பது தங்கள் கருத்தா?

தன்னை அறிஞ்சு தானம் செய்யவேணும்.. தனது வாழ்க்கையே ஆபத்தில இருக்கும்போது மற்றவனை ஆபத்தில இருந்து காப்பாற்றுகிறதுக்கு எல்லாராலும் முடியாது. நூற்றில ஒருவர் அப்பிடி இருக்கலாம். இதுதானே நடைமுறை உலகம் குகதாசன் அண்ணா. இல்லாட்டிக்கு தெருவுக்கு தெரு நடமாடும் உயிர்காப்பு படை அல்லோ இருக்கும்.

நன்றி தங்கள் கருத்துக்கு

அப்போ

இப்படி நிலை வந்தால்

களவெடுக்கலாம்

கொலை செய்யலாம்

விபச்சாரம் செய்யலாம்

அல்லது

இவற்றை செய்விக்கலாம் என்கிறீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கலைஞன்

நுணாவிலான்

பதில் தரவில்லை என் சந்தேகத்திற்கு

பதில் இல்லையா?

அல்லது

பதில் அளிக்க மனச்சாட்சி இடம் தரவில்லையா???

என்ன எழுதுறது என்று தெரிஞ்சு இருக்க இல்லை, அதான் பதில் எழுதவில்ல குகதாசன் அண்ணா. உங்கடை கேள்வியை பார்த்தால் கண்ணகி கையில சலங்கையோடபோய் பாண்டிய மன்னனிண்ட அரசசபையில உண்டோ இல்லையோ பார்க்கிறன் எண்டு நீதி கேட்டது மாதிரி இருக்கிது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான நிலையும் அதுதானே

இன்று எமக்கான நீதி தோற்றுப்போயுள்ளநிலையில்...

மதுரையை என்ன உலகத்தை எரிப்பதற்கு எமக்கு உரிமையுண்டு

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்களே!

தர்மம் மட்டுமல்ல புத்திசாலித்தனமும் தேவைப்படுகிறது. நாம் புத்தியை சரியாகப் பாவிக்காததன் விளைவே தர்மத்தை எமது பக்கம் ஈர்க்கடியவில்லை. கண்ணகி தர்மம் வெல்லுமென்று வாழாதிருக்கவில்லை. சபையேறி நீதி கேட்டாள். மதுரை எரிந்தது. நாம் எரிக்க வேண்டாம். தமிழினத்தை சிதைத்து அழித்தோரை நீதியின் முன்னாவது நிறுத்த வேண்டாமா? அரசாங்க எழுதுவினையர் சங்கத்தலைவரான திரு செ.கோடீஸ்வரன் கோமறைக்கழகத்திடம் (பிரிவிகவுன்சில்) வழக்குத் தாக்கல் செய்து தனிச் சிங்களச் சட்டத்ததை எதிர்த்து வென்றவர். தர்மம் புத்திசாலித்தினால் இந்திய - சிறிலங்கா - சீன கூட்டு நகர்வால் ஐ.நா மனித உரிமைச் சபையில் தோற்கடிக்கபட்டதே எடுத்துக்காட்டாகும். தர்மத்தை நிலைநாட்ட புத்திசாலித்தனமும் தேவைப்படுகிறது.

---------------- --------------------------- -----------------------------------------

சரத் பொன்சேகா ஆற்றிய உரை, அதாவது அவர் அரசியிலில் ஈடுபடுவார் என்பதை வெளிப்படுத்திய இனவாத உரைக்கு ஒரு கட்டுரையை எழுதி புலம்; இலங்கையென சில பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். வெளிவரவில்லை. அதனையும் இணைத்துள்ளேன்.

எழுதிய நாள் 03.10.2008

மேலாதிக்க மமதையின் வெளிப்பாடும் இனவாதத்தின் இன்னொரு முகமும்

---------------------------------------------------------------------------------

இலங்கைத் தீவினது, குறிப்பாக சிறீலங்கா தேசத்தின் அரசியல் இராணுவ குறிகாட்டியானது எப்போதும் தமிழ் மொழி பேசுவோரை, ஒரு தேசிய இனமாகவோ, ஏன் ஒரு மக்கள் குமுகமாகவோ கூடக் கருதியது கிடையாது என்பதற்கு, இலங்கைத் தீவை ஆட்சி செய்த அரசுத்தலைமைகளின் அனைத்து நடவடிக்கைகளும் சான்றாதாரமாக இருக்கின்றது. இவற்றை அறியாதது போல் நடிக்கின்ற நாடுகள் முதல் அரசியல்வாதிகள் வரை இல்லாமலும் இல்லை.தமிழ் அரசியல்வாதிகள் உட்பட என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

சிறீலங்காவின் தரைப்படைத் தளபதியான திரு சரத் பொன்சேகா அவர்கள் கனடியப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலே, இந்த நாடு சிங்களவருக்கே சொந்தம் என்றும் சிறுபான்மையினர் எம்முடன் சேர்ந்து வாழமுடியுமே தவிர, அவர்களுக்கு இந்த நாட்டிலே எந்த உரிமையும் கிடையாது என்ற கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார். இதே போன்றதோர் கருத்தை, அதாவது, நாங்கள் பெருவிருட்சம். ஏனைய சிறுபான்மையினர் எமைச் சுற்றிப் படரும் செடி கொடிகள் என்றவாறு சிறிது காலமே அரசுத் தலைவராகப் பதவி வகித்த டிங்கிரி பண்டா விஜயதுங்க அவர்களின் மறைவுக்காலத்தில், அரசியல்வாதிகளை விஞ்சிய நிலையிலே இவரது கருத்து வெளிப்பட்டு நிற்கின்றமையானது, எந்த ஒரு காலத்திலும் நாங்கள் திருந்த மாட்டோம் என்பதை அடித்துக் கூறுவதாகவே உள்ளது. இந்தச் செம்மையாளர்களோடு பேசித் தீர்க்க முன்வர வேண்டுமென அடிக்கடி சேடமிழுக்கும் அனைத்துலகு இவற்றை சற்று உற்று நோக்க வேண்டியது அவசியமானதாகும்.

சிங்கள அரசியல்வாதிகளைக் கடந்து இன்று, ஒட்டுமொத்த அதிகாரவர்க்கமும் தமிழினத்தை அழிப்பதை நோக்காக் கொண்டு செயற்பட்டவாறு, தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தத் தமிழினத்தோடு, தனது சொந்த அப்பாவிச் சிங்கள இளையோரையும் கொன்றொழித்து வருவதோடு, சிங்கள மக்களைப்; துன்பத்துள் தள்ளிவிட்டவாறு, கண்ணாடி மாளிகையும் குண்டுதுளைக்காத ஊர்திகளுமாக சுகபோக வாழ்க்கையை அனுபவித்தவாறு, அந்த வாழ்கையை தக்கவைத்து தமது பைகளை நிரப்பிக் கொள்ள இனவாதக் கருத்தியலைத் தொடர்ச்சியாக அரசியல்வாதிகளோடு படைத் துறையினரும் முன்னெடுப்பது தங்களைப் பாதுகாக்கவேயன்றி, நாட்டையோ மக்களையோ பாதுகாக்கவல்ல. இதற்குத் தொடர்ந்தும் சிங்கள மக்களும் பலியாவது வேடிக்கையாக இருக்கின்றது. பொருண்மிய ரீதியான தாக்கத்தினூடாக சிங்கள மக்களிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்களை அவ்வப்போ யுத்த வெற்றி என்ற வெறியையும் இனவாதமென்ற வெறியையும் ஊட்டித் தணித்தவாறு பிழைப்பு நடத்தும் அசிங்கமான நிலை சிறீலங்காவைத் தவிர உலகில் வேறெங்கும் இல்லையென்று துணிந்து கூறலாம். இதுபோன்ற தூண்டுதல்களால் உணர்சிவசப்பட்டுத் தமிழினம் மீது சிங்களவர் பரவவலாக ஒரு தாக்குதலை நடத்த வேண்டுமெனச் சிங்கள ஆட்சி மற்றும் அதிகார மையமும் இனவெறியூடாக உசுப்பேற்றுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனூடாக எழும் கொத்தளிப்பை பயன்படுத்திக் குளிர்காயவும், தம்மீது எதிர்காலத்தில் நிகழக்கூடிய இன அழிப்புக்கெதிரான அனைத்துல விசாரணைகளிலிருந்து தம்மைத் பாதுகாக்கவுமான திட்டங்களோடு ராசபக்ச சக சகோதரர்களோடு படைத் துறைத் தளபதிளும் பயணிப்பதையே இது போன்ற செவ்விகள் சுட்டுகின்றன. கிட்லரை விட மிக மோசமானதோர் இன அழிப்பில் ஈடுபட்டவாறு, வரலாற்றை நிராகரிப்பவர்களை வரலாறே புறந்தள்ளிவிடும் யதார்த்தத்தை இவ்வுலகு தொடர்ந்தும் கண்டே வருகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக, கிட்லர் முதல் மிலோசவிக் வரை வரலாறு தனது இருண்ட அத்தியாயங்களில் பதிந்து கொண்டுள்ளது. படைத்துறைப் பட்டறிவோடு வரலாற்றையும் மறுதலிக்கும் இவர் போன்றவர்களால் நீண்ட காலத்துக்கு உண்மையை மூடிமறைக்க முடியாதென்பதைக் காலம் நிச்சயமாகப் பதிவு செய்து கொள்ளும். படைத் துறையினரின் இதுபோன்ற கருத்துக்கள் தமிழர் தேசத்துக்கு மட்டுமன்றி சிங்கள தேசத்துக்கும் நன்மை பயக்கப் போவதில்லை.

தமிழினமானது எந்த ஒரு கட்டத்திலும் இலங்கைத்தீவை தனியே தமிழருக்கானது என்று கூறியது கிடையாது. இலங்கைத் தீவை தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் இனங்களின் வரலாற்றுத் தாயகமாகவே தமிழினம் எண்ணிவருகிறது. வரலாற்றுக் காலம் முதல் அண்மைய காலம் வரை சிங்கள இனத்தோடு சரிகளையும் பிழைகளையும் சமரசம் செய்து கொண்டு கடந்து வந்தவேளையில், ஆட்சியதிகாரத்துக்கு சிங்கள இனம் வந்தது முதல் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டபோது பிணக்குகள் வலுவடைந்தன. அப்போதும் தமிழ்த் தலைமைகள் மென்முறை, கூட்டாட்சி என்ற பல்வேறு படிமுறைகளை நாடித் தோல்வியுற்ற நிலையில், தமிழினம்மீது வன்முறை பிரயோகிக்கப்பட, அந்த வன்முறையிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்ள வேண்டி ஆயுதப் போரிலே தமிழினம் ஈடுபடவேண்டிய இன்றைய நிலைக்கும் இது போன்றவர்களே காரணமானார்கள். வன்முறைக்குள் தமிழ் இளையோரைத் தள்ளியதோடு, பெரும் உயிர் உடமை இழப்;புகள் தொடரவும் வழிவகுத்துள்ளமை கண்முன்னே காட்சிகளாய் விரிகின்ற வேளையிலும், கொழுக்கட்டை தேடிய குருடனைப் போன்ற சிந்தனை கொண்ட அறிவுக் குருடர்களால் அழிவுக்கான பாதையை நோக்கிக் நாட்டைக் கொண்டு செல்ல முடியுமேயன்றி வேறெங்கும் கொண்டு போக முடியாதென்பதை சிங்கள மக்களும் வெகு விரைவிலே புரிந்து கொள்வார்கள்.

பெரும்பான்மை சிறுபான்மையை அடக்கி ஆளலாம் என்ற தத்துவத்தைப் பின்பற்றும் இவர்களால் எந்த ஒரு காலத்திலும் இலங்கைத்தீவினைக் குணப்படுத்த முடியாதென்பதை இவர்களின் செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் சுட்டுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்களுக்கான பதிலைத் தனது தன்மானத்தின வேர்களில் நின்று சொல்கின்ற காலத்திலே தமிழினம் நின்று கொண்டிருக்கின்றது. தமிழினமானது தன்மீது திணிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து தேசியத்தலைமையின் கரங்களைப் பற்றிக் கொண்டு, உரிய காலத்தில், உயரிய ஈகத்தினால் தெளிவான பதிலை வழங்கும் போது மட்டுமே இவர்கள் புரிந்து கொள்வார்கள். அதுவரை இது போன்று எதையாவது உளற இவர்போக இன்னொருவர் வருவார். ஆனால் தமிழினம் அனைத்தையும் கடந்து தலை நிமிரும் அதேவேளை, சிங்கள மக்களுக்கானதோர் அமைதியான, ஊழலற்ற தெற்கின் உதயத்தையும் காட்டுவார்கள் என்பதே எதிர்வரும் காலத்தின் தரிசனமாகும்.

Edited by nochchi

ஒரு நாட்டில் உள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதென்பது இலகுவன ஒரு விடயம் அல்ல.எமது இனப்பிரச்சனை அரசியல்வாதிகளால் ஊதிபெருப்பித்த அளவுக்கு பெரிய பிரச்சனை அல்ல.தாம் தாம் பதவிக்கு வருவதற்காக சிங்கள அரசியல் தலைவர்கள் எடுத்த இனத்துவேச வேசமே எல்லாவற்றிற்கும் காரணம்.தேர்தலுக்கு மட்டும் பாவித்து வந்த இந்த ஆயுதம் எமது ஆயுத போராட்டம் ஆரம்பமான பின் அன்றாட அரசியலாகிவிட்டது.

2004 ஆம் ஆண்டு கொழும்பு,கண்டி,கதிர்காமம்,நுவரெலியா குடும்பத்துடன் சென்றுவந்தேன்.நான் அங்கு நிற்கும் போது தான் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார். முன் பின் தெரியாத சிங்கள சாரதியுடன் தான் இவ்வளவு இடமும் சென்று வந்தேன்.இப்போது நினைத்தால் சற்று பயமாக இருக்கின்றது.பெரும்பான்மை சிங்களவன் அன்றாடம் சாப்பாடிற்கே அல்லாடுகின்றான்.அரசியல் தலைமைகளுக்கு அது பற்றி அக்கறை இல்லை தான் பதவிக்கு வரவேண்டுமென்பதிலேயே குறி.அதனால் தான் தமிழனுக்கு ஒரு தீர்வுதர பயப்பிடுகின்றான் எங்கே அதனால் தான் தேர்தலில் தோற்றுப் போய் விடுவேனோ என்று.இனப்பிரச்சனை தொடர்வது நாட்டிற்கு நல்லதில்லை என்று அவனுக்கும் தெரியும்.

இன்றும் சரத்தின் 10 தீர்மானங்களில் இனப்பிரச்சனை தொடர்பாக எதுவும் இல்லை,சம்பந்தருக்கே சொல்லியிருப்பார்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு பற்றி எதுவும் சொல்ல போக அதுவே மகிந்தாவின் வெற்றிக்கு வழி வகுத்துவிடும்.பொப் ரே இலங்கை சென்று வந்து ரொரன்ரோ ஸ்ரார் இல் ஒரு கட்டுரை எழுதினார்.கதைக்கும் போது இரு பக்கமுமே தீர்வு பற்றி அக்கறையுடன் கதைக்கின்றார்கள் ஆனால் அதை நடைமுறையில் கொண்டுவர இருபக்க தலைமைகளுமே பயப்பிடுகின்றன ,காரணம் தாம் இனத்துரோகியகிவிடுவோமொ என்ற பயம்.

இவை அனைத்தையும் கடந்து சவுத் ஆபிரிக்காவில் கிளார்க் வந்தது போல் ஒரு தலைவர் வரவேண்டும் தமிழன் அப்போது ஒன்றாக நின்று தன் சுயநிர்ணய உரிமையை பெற்றுவிடவேண்டும். 5- 10 வருடங்களுக்குள் இது கட்டாயம் நடக்கும்.எமது பிரச்சனை இப்போ சர்வதேச அளவில் தலையிடியாகிவிட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவை அனைத்தையும் கடந்து சவுத் ஆபிரிக்காவில் கிளார்க் வந்தது போல் ஒரு தலைவர் வரவேண்டும் தமிழன் அப்போது ஒன்றாக நின்று தன் சுயநிர்ணய உரிமையை பெற்றுவிடவேண்டும். 5- 10 வருடங்களுக்குள் இது கட்டாயம் நடக்கும்.எமது பிரச்சனை இப்போ சர்வதேச அளவில் தலையிடியாகிவிட்டது

நன்றி தங்கள் கருத்துக்கு

நானும்2003 இல் சென்றபோது

இலங்கை பூராகவும் சுத்திவந்தேன்

என்னோடு கார் ஓட்டிவந்தவர் கிளிநொச்சியை சேர்ந்த ஒரு உறவினர்

அவர் இயக்கத்தால் சில காலம் தண்டிக்கப்பட்டவர்

வழி நொடுகிலும் இயக்கத்துக்கு எதிரான கதைதான்

நான் என்னால் முடிந்தளவு கதைத்துபார்த்தேன் திருந்தியபாடில்லை

கண்டியில் கண்டி வீதியால் சென்று கொண்டிருந்தபோது எமது வாகனத்துக்கு ஒரு சில்லுக்கு காற்று போய்விட்டது

கண்டிவீதியில் வைத்து மாத்துவது சரியல்ல என்பதால் அவர் வாகனத்தை சிறிய ஒழுங்கை ஒன்றில் விட்டுவிட்டு கழட்ட தொடங்கினார்

நாங்கள் 15 பேர் இருந்தோம் பெரியவர்கள் சிறியவர்கள் உட்பட...

இந்த வீதியால் வந்த ஒருவர் சாவகச்சேரியைச்சேர்ந்தவர் பேராதனையில் படிக்கும் இளைஞர் எமக்கு காதில் சொன்னார்

பிள்ளை குட்டிகளுடன் இதில் நின்று தமிழில் கதைக்காதீர்கள்

பார்த்தால் அடித்துக்கொன்று விடுவார்கள் கண்டி றோட்டில் வைத்து மாத்துங்கள் உடனே போங்கள் என்றுசொல்லி விட்டு அவசரமாக போய்விட்டார்

நாங்கள் உடனே இடம் மாறிவிட்டோம்

எல்லாம் முடிந்ததும் நான் அவரிடம் சொன்னேன் இனப்பிரச்சினை தீர நாம் இன்னும் கனதூரம் போகவேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள டிரைவரோடு பிரச்சனையில்லாமல் சென்றேன். ஆதலால் அங்கு இனப்பிரச்சனை என்பதே இல்லை. ஆகா என்ன ஒரு அருமையான உய்த்தறிதல்!

எல்லோரும் இப்படி தனக்கென்னணு மூடிகிட்டு போனதால தான் ஒரு நல்ல வழிகாட்டியஇ தலைவன நாம இழந்திட்டோம் நாசமத்த்து போறவனுகளா இனியாவது ஒற்றுமையா இருப்போம்.

அவர் தப்பிச்சாரஇ முகம் மறக்க முடியல நித்தம் ஒரு தடவையாவது என்னடா நீங்களும் இப்படி கை விட்டுடீங்கனு கேக்குற மாதிரியே மனசு குத்திகிட்டே இருக்கப்பா யாராவது ஒரு நல்ல சொல் சொல்லுங்க

அண்ணை காட்டாறு,

மேலுக்கும் கீழுக்கும் வாசிக்காமல் நடுவுக்க வாசித்து நல்ல பதில் எழுதுகின்றீர். இடைவேளையின் போது போய் படம் பார்த்து சரியில்லை, பிடிக்கவில்லை என்றது போலிருக்கு.

சாரதியல்ல பிரச்சனை,சந்தித்த சிங்கள மக்கள் பெரும்பான்மையானோர் முதல் கேட்ட கேள்வி,எந்த நாட்டில் இருந்து வந்திருக்கின்றீர்கள்? என்ன வேலை?எவ்வளவு சம்பளம்? இலங்கைக் காசு எவ்வளவு வரும்?.பின்னர் ஒரு பெரு மூச்சு.இது ஏர் போட்டில் வேலை செய்பவனில் இருந்து,முகமாலையில் சென்ரிக்கு நின்ற ஆமிக்காரன் வரை,சந்தித்த பல சிங்கள பொதுமக்கள் வரை தொடர்ந்தது.

பொருளாதார பிரச்சனை ஒரு நாட்டில் பெரிதளவு வந்துவிட்டால் மற்ற எந்த பிரச்சனையும் இரண்டாம் பட்சமாகிவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார பிரச்சனை ஒரு நாட்டில் பெரிதளவு வந்துவிட்டால் மற்ற எந்த பிரச்சனையும் இரண்டாம் பட்சமாகிவிடும்.

இது சரியானவாதமாக எனக்கு தெரியல.

பொருளாதாரப்பிரச்சினை வந்ததாலதான் சிங்களவன் தமிழனை 1983இல் அடித்தான்

எனவே அது கூட நாம் குட்டுப்படத்தான் உதவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொருளாதார பிரச்சனை ஒரு நாட்டில் பெரிதளவு வந்துவிட்டால் மற்ற எந்த பிரச்சனையும் இரண்டாம் பட்சமாகிவிடும்.

பொருளாதாரப் பிரச்சனை தான் சிங்களவனின் பெரிய பிரச்சனை என்றால் ஏன் ரணில் பொன்சேகாவை நிறுத்தினான்? பேசாமல் தானே நின்றிருக்கலாமே? குழந்தைக்கும் தெரியும் பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் சிறந்த தெரிவு ரணில் தான் என்று. ஏன் இப்போதும் கூட தமிழரை வெல்ல முக்கிய காரணம் நான நீயா என்பதிலேயே மகிந்த-பொன்சேகா போட்டி பெரிதும் தங்கியுள்ளது.

பொருளாதார பிரச்சனை ஒரு நாட்டில் பெரிதளவு வந்துவிட்டால் மற்ற எந்த பிரச்சனையும் இரண்டாம் பட்சமாகிவிடும்.

அர்ஜுன், நீங்கள் சுற்றுலா செல்லும் காலங்களில் தான் சிங்களவருடன் உலாவினீர்கள். நான் பிறந்து, வளர்ந்து படித்து வேலை செய்த காலத்தின் பெரும் பகுதி முழுதும் சிங்கள மக்களிடையே தான் கழிந்தது. சிங்கள மக்கள் ஒரு பாணுக்கு 1 ரூபா கொடுத்து வாங்க தயார் என்பர், அந்த ஒரு ரூபாயில் 80 சதம் தமிழர்களின் வாழ்வுரிமையை அழிக்கும் என்றால். அதுவே 100 ரூபா கொடுத்து வாங்கவும் தயார் என்பர் அந்த 100 ரூபாயில் 80 ரூபா அதே தமிழர்களின் வாழ்வுரிமையை அழிக்கும் என்றால். பொருளாதார பிரச்சனை பெரிதெனில், பொருளாதார அசம நிலையினை எதிர்க்க உருவாகி மாக்ஸிசத்தை தம் கொள்கையாக கடைப்பிடித்த / பிடிக்கும் ஜே.வி.பி போன்றன ஏன் மிக மோசமான இனவாத கட்சியாக இருக்கின்றன?

மற்றும் நீங்கள் சுற்றுலா சென்ற காலத்தில் கதிர்காமர் மட்டும் கொல்லப்படவில்லை. கெளசல்யன் உட்பட கிழக்கு மாகாணம் எங்கும் புலிகளின் பல அரசியல் பீட உயர் உறுப்பினர்களில் இருந்து சாதாரண உறுப்பினர்கள் வரை கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் கொல்லப்படும் போது எவ்வாறு உங்களுக்கு சிங்கள மக்கள் மீது கோபம் வரவில்லையோ அதே போல்தான் அந்த சிங்கள் சாரதிக்கும் உங்கள் மீது கோபம் வரவில்லை போலும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட்டில் உள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதென்பது இலகுவன ஒரு விடயம் அல்ல.எமது இனப்பிரச்சனை அரசியல்வாதிகளால் ஊதிபெருப்பித்த அளவுக்கு பெரிய பிரச்சனை அல்ல.தாம் தாம் பதவிக்கு வருவதற்காக சிங்கள அரசியல் தலைவர்கள் எடுத்த இனத்துவேச வேசமே எல்லாவற்றிற்கும் காரணம்.தேர்தலுக்கு மட்டும் பாவித்து வந்த இந்த ஆயுதம் எமது ஆயுத போராட்டம் ஆரம்பமான பின் அன்றாட அரசியலாகிவிட்டது.

2004 ஆம் ஆண்டு கொழும்பு,கண்டி,கதிர்காமம்,நுவரெலியா குடும்பத்துடன் சென்றுவந்தேன்.நான் அங்கு நிற்கும் போது தான் கதிர்காமர் கொலை செய்யப்பட்டார். முன் பின் தெரியாத சிங்கள சாரதியுடன் தான் இவ்வளவு இடமும் சென்று வந்தேன்.இப்போது நினைத்தால் சற்று பயமாக இருக்கின்றது.பெரும்பான்மை சிங்களவன் அன்றாடம் சாப்பாடிற்கே அல்லாடுகின்றான்.அரசியல் தலைமைகளுக்கு அது பற்றி அக்கறை இல்லை தான் பதவிக்கு வரவேண்டுமென்பதிலேயே குறி.அதனால் தான் தமிழனுக்கு ஒரு தீர்வுதர பயப்பிடுகின்றான் எங்கே அதனால் தான் தேர்தலில் தோற்றுப் போய் விடுவேனோ என்று.இனப்பிரச்சனை தொடர்வது நாட்டிற்கு நல்லதில்லை என்று அவனுக்கும் தெரியும்.

இன்றும் சரத்தின் 10 தீர்மானங்களில் இனப்பிரச்சனை தொடர்பாக எதுவும் இல்லை,சம்பந்தருக்கே சொல்லியிருப்பார்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு பற்றி எதுவும் சொல்ல போக அதுவே மகிந்தாவின் வெற்றிக்கு வழி வகுத்துவிடும்.பொப் ரே இலங்கை சென்று வந்து ரொரன்ரோ ஸ்ரார் இல் ஒரு கட்டுரை எழுதினார்.கதைக்கும் போது இரு பக்கமுமே தீர்வு பற்றி அக்கறையுடன் கதைக்கின்றார்கள் ஆனால் அதை நடைமுறையில் கொண்டுவர இருபக்க தலைமைகளுமே பயப்பிடுகின்றன ,காரணம் தாம் இனத்துரோகியகிவிடுவோமொ என்ற பயம்.

இவை அனைத்தையும் கடந்து சவுத் ஆபிரிக்காவில் கிளார்க் வந்தது போல் ஒரு தலைவர் வரவேண்டும் தமிழன் அப்போது ஒன்றாக நின்று தன் சுயநிர்ணய உரிமையை பெற்றுவிடவேண்டும். 5- 10 வருடங்களுக்குள் இது கட்டாயம் நடக்கும்.எமது பிரச்சனை இப்போ சர்வதேச அளவில் தலையிடியாகிவிட்டது

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கலைஞன்

நுணாவிலான்

பதில் தரவில்லை என் சந்தேகத்திற்கு

பதில் இல்லையா?

அல்லது

பதில் அளிக்க மனச்சாட்சி இடம் தரவில்லையா???

இதை நாம் செய்திருந்தால்

எதிரிகளோ

துரோகிகளோ

அல்லது

பகைவர்களோ

எமக்கு இல்லாது போயிருப்பர் என்பது தங்கள் கருத்தா?

நன்றி விசுகு ஓடி ஒழிவதாக இருந்தால் நான் வவுனியா முகாம் வரை சென்றிருக்க மாட்டேன்.

எனது கருத்தை நீங்கள் முழுமையாக விளங்கவில்லை என நினைக்கிறேன். தமிழில் ஒரு பழ மொழி உண்டு ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்று.அதாவது 2001 இல் உலக ஒழுங்கு மாறுகிறது என்று யாவரும் அறிந்து விட்டோம். ஆகவே நாமும் எம்மை அதற்கேற்ப தயாராகி இருக்க வேண்டும். நாம் மிக மிக சிறிய இனம் (சிறிலங்காவில்). உலகில் ஒரு கூட்டு உண்டு. அதாவது ஐரோப்பிய & அமெரிக்க கூட்டு சீன அல்லது இந்திய கூட்டு, விடுதலை யடைந்த நாடுகள் அல்லது உலகின் பல விடுதலை இயக்கங்கள் என்று பல இருந்தன. யாருடனும் நாம் கூட்டு வைக்கவில்லை. பாருங்கள் இவ்வளவு பலமுள்ள மகிந்த அரசு புலிகளை வெல்வது கடினமான போது பலரை தமது நண்பர்களாக நடித்து கூட தனது வேலையை முடித்து விட்டான்.நாம் என்ன செய்தோம்? ஆக கூடி புலம் பெயர்ந்த மக்கள் தான் புலிகளுக்கு பக்க பலமாக இருந்தார்கள்.

கடைசி நேரங்களில் வட கொரியாவுடன் நட்பு வைத்திருந்தால் கூட புலிகளிடம் இருந்த பணத்துக்கு ஆயுதமாக இறைத்து இருப்பான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது பற்றி கனக்க எழுதவேண்டும்

விவாதிக்கவேண்டும்

ஆனால் உண்மை என்ற ஒன்று எனக்கும் தங்களுக்கும் தெரியாதபோது...

இது நம்மை நாமே காட்டிக்கொடுப்பதாகிவிடும்

இன்றைய நிலையில் இதையாவது நாம் செய்யாதிருப்பது

அல்லது

தவிர்ப்பது முதலாவதாக நாம் செய்யவேண்டியது என்று நான் நினைக்கின்றேன்

தங்களது எழுத்துக்களை வாசிப்பவன் என்ற முறையில் இதுவே தங்களது கருத்தாக இருக்கும் என்று நினைக்கின்றேன்

ஆனால் ஒரு சிறு மன உளைச்சல் எனக்கு.....

2001 இல் உலக ஒழுங்கு மாறுகிறது என்று யாவரும் அறிந்து விட்டோம்.

இதனால்தானே ஒப்பந்தமே வந்தது

எத்தனை பேச்சுக்கள்

அத்தனை பேச்சுக்களிலும் ஏதாவது கிடைக்காதா என்று எப்படி எல்லாமோ முயன்றனரே

இடைக்கால அறிக்கை

சுனாமி அவல திட்டம்

ஏன் சுயாட்சி வரை இறங்கிவந்தனரே....

உலகம் எதையாவது வைத்ததா???

அல்லது

எப்பவாவது அல்லது

ஏதாவது வகையில் தமிழ் மக்களை நாம் பொறுப்பெடுக்கின்றோம் என்று ஏதாவது ஒரு வழி காட்டியதா???

கடைசி நேரங்களில் வட கொரியாவுடன் நட்பு வைத்திருந்தால் கூட புலிகளிடம் இருந்த பணத்துக்கு ஆயுதமாக இறைத்து இருப்பான்.

எம்மையும் வட கொரியாவையும்...

சுத்திவர ஓநாய்கள் காவல் நிற்க....

வட கொரியாவிலிருந்து இறைச்சி கொண்டுவந்திருக்கலாம் என்ற தங்கள் கூற்று சற்று சங்கடமாக இருக்கிறது....

அதைவிட அவர்கள் ஏற்கனவே பயங்கரவாதிகள் நாமம் அதற்குள் போயிருக்கவேண்டும் என்பதும்.....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.