Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்--உதயன் நாளிதழ்

Featured Replies

குழம்பித் தெளிந்த கூட்டமைப்பும் சம்பந்தரின் ஆளுமையும்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதுதொடர்பில் நீண்ட வாதப்பிரதிவாதங்கள், குழப்பங்கள், தன்னிச்சையான முடிவுகள், இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தனித்த முடிவு, அதனூடான அழுத்தங்கள், பல்வகைப்பட்ட விமர்சனங்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்று விட்டன.

நீண்ட குழப்பத்தின் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்மக்களின் ஏகோபித்த ஆட்சிமாற்றத் திற்கான முடிவை எட்டியது மட்டுமல்லாமல், இந்த தாமதத்தினூடாக சில அரசியல் அடைவுகளையும் நிகழ்த்தக்கூடிய தீர்மானத்தை அடைந்தமையானது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தியது போன்றே கருத வேண்டியுள்ளது. அத்துடன் திரு. இரா.சம்பந்தர் அவர்கள் தனது அரசியல் சாணக்கியத்தையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியதனூடாக தனது தலைமைத்துவ ஆளுமையை வெளிக்காட்டியமையானது தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விடயமே.

எனினும் இத்தீர்மானத்தை எடுக்கும் செயற்பாட்டின்போது அரசியலில் அவருக்குப் பூட்டப்பிள்ளைகளாகவும் கொப்பாட்டப் பிள்ளைகளாகவும் இருக்கும் சிலரின் ஆக்ரோசமான கருத்துக்களையும் எதிர்கொள்ளாமல் தீர்மானம் எட்டப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதில் நகைச்சுவையான விடயம் என்னவெனில், இந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷவை ஆட்சிக்கு வர இடமளிக்காமல் செய்வதாயின் தமிழ்மக்கள் தமது வாக்குகளை சரத்பொன்சேகாவிற்கு அளித்தேயாக வேண்டும் என்பதில் மறுகருத்தில்லை. ராஜபக்ஷ அவர்களை ஆட்சியில் அமர இடமளிக்கக்கூடாது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இரண்டாவது தீர்மானமாக, இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களையும் ஆதரிக்கக்கூடாது என்று சில உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டதானது, ராஜபக்ஷ அவர்களைப் பதவிக்கு கொண்டுவரும் முயற்சிக்கான ஒருவகை அணுகுமுறையாகும் என்பது வெளிப்படையானது. ராஜபக்ஷ அவர்களை பதவிக்கு கொண்டு வர நேரடியாகவும் பின்னாலிருந்தும் உசுப்பேற்றிவிட்டு ஒன்றும் தெரியாது போன்று பாசாங்கு செய்யும் சில தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தமிழ்மக்கள் அடையாளம் காணவேண்டும். சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு தெரிவிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தில் சரத் பொன்சேகாவை நல்லவர் என்றோ, தமிழ்மக்களுக்கு உரிமைகளைத் தந்துவிடுவார் என்றோ, அப்படிப்பட்ட கோரிக்கைக்கு உடன்படுவார் என்றோ, எதிர்பார்க்க முடியாது.

அதேவேளை சரத் பொன்சேகா அவர்களிற்கு வாக்களிக்க கோருவதனூடாக அவர் தமிழினத்திற்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கள், செய்த அநீதிகளை ஏற்று, அவர் செய்ததை மன்னிப்பது போன்று விளக்கம் கொடுக்கவும் கூடாது. அவலத்தையும் அழிவையும் தந்த முதல் எதிரியான ராஜபக்ஷ அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கு மட்டுமான தெரிவே சரத் பொன்சேகா என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.எது எப்படியோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழம்பித் தெளிந்துள்ளதானது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கத் தெளிவான, உறுதியான அரசியல் ஆளுமையுள்ளவர்களையும், அரசியல் ஆளுமை இல்லாதவர்களையும் அடையாளம் காட்டியுள்ளது. இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாகவே அமையும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடந்தகால சில அரசியல் முடிவுகளின் போதும் சரி, உலக அரசியல் வரலாறுகளிலேயேயும் சரி, தேவைக்கேற்ப சிறுபான்மைக் கட்சிகள் தங்களது கொள்கையில் மாறுபடாது தீர்மானங்களை எடுப்பதனூடாக ஆட்சி மாற்றங்கள் தங்களுக்குச் சாதகமாக வருமாயின் அதற்காக புரிந்துணர்வுடன் கூடிய உறவை வைத்துக்கொள்வது அரசியல் சாணக்கியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இந்திய இராணுவத்தை வெளியேற்ற அப்போது ஜனாதிபதியாக இருந்த பிரேமதாஸா அவர்களுடன் உறவை வைத்து ஆயுதங்களையும் பெற்று, இந்திய இராணுவத்தை வெளியேற்றிவிட்டு, பின் அதே ஆயுதங்களைக் கொண்டு பிரேமதாஸா அவர்களின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகள் விடு தலைப்போரில் ஈடுபடவில்லையா?1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா அவர்கள் ஆட்சிக்குவர ஆதரவளிக்க வில்லையா? பின்னர் 2001 இல் சந்திரிகா பண்டாரா நாயக்காவை ஆட்சியிலிருந்து அகற்றி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க வெல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவில்லையா? பின்னர் 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் அவர்கள் சர்வதேச வலைப் பின்னலுக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு சென்று சிதைத்துவிடுவார் என்று கூறி, ரணிலை ஆட்சிக்கு வராமல் செய்ய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெறுவதற்கு சூழல் அமைத்துக்கொடுக்க வில்லையா? இந்த அனைத்து தீர்மானங்களும் தமிழீழ விடுலைப்புலிகள் ஆயுதபோராட்ட பலம் இருந்த போது ஒரு விடுதலை இயக்கம் நடைமுறை அரசை நிறுவி நிர்வகித்துக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அப்போதைய அரசியல் சூழல்களில் விடுதலைப்புலிகள் தமது ஆயுதப்போராட்ட வலுவை அடிப்படையாகக் கொண்டு தங்களுக்குப் பொருத்தமான எதிரியை தெரிவுசெய்வதற்காக வாக்குகளைப் பயன்படுத்தினார்கள்.

தற்போது உள்ள சூழலில் தமிழ்மக்களின் வாக்குகள் மட்டுமே அவர்களின் பலம் என்றிருக்கும் போது, தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்குவது தொடர்பில் அக்கறையில்லாமல் அவர்களை அழித்துக் கொடுமைப்படுத்திவிட்டு,தமிழ்த்தேசியத்தைத் தகர்க்கவும் பதவிக்கதிரைகளைக் காட்டி விலைபேசவும் முயன்ற ராஜபக்ஷ அவர்களை வெளியேற்ற, குறிப்பாக தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்திற்கு வழிசமைப்பதற்காக சரத்பொன்சேகாவிற்கு சார்பாக என் வாக்குகளைப் பிரயோகிக்கக் கூடாது?தற்போதையஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நீடிப்பற்கான கோரிக்கையை நிராகரித்துத் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்ற முடிவை எட்டுவதற்காக, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பது என ஏகமனதான தீர்மானத்தை நோக்கி நகர்த்தியமையானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தலைவரின் மதிநுட்பமான அனுபவ அரசியலின் வெளிப்பாடாகும். அத்துடன் சரத் பொன்சேகா அவர்களை ஆதரிக்கும் முடிவை தமிழ்த்தேசி யத்தை விட்டு விலகிப்போவதாக கருதுகோடல் கொள்ளக் கூடாது. எஞ்சியுள்ள கோவணம் பறிபோவதை தடுப்பதைப்பற்றி சிந்திக்காமல், கோட், சூட் போடுவதைப் பற்றிச் சிந்திப்பது காலத்திற்குப்பொருத்தமானதல்ல. எனவே தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி தீர்மானிக்க தற்போதைய யதார்த்த அக, புறநிலையை புரிந்து வெற்று வாய்சவடால்களைத் தவிர்க்க வேண்டும். மற்றும் சரியான மதிப்பீடும் ஆய்வும் தேவை.அதில் தமிழ்மக்களின் பலம், பலவீனம், இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள்,அதிலுள்ள நெருக்கடிகள் போன்றவற்றின் அடிப்படையில் சமகாலத்தில் செய்யப்படவேண்டிய அரசியல் நகர்வுகளைச் செய்யவேண்டும். இச்செயற்பாட்டினூடாக போடப்படும் அடித்தளங்களே எதிர்காலத்தல் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை நிலைநாட்டுவதற்கான அடிப்படை. எனவே இதற்கு புரிதலும், தெளிதலும், வெளிப்படைத்தன்மையும், ஏற்றுக்கொள்ளும் மனநிலையுமேமுக்கியம்.

அத்துடன் நகர்வுப்பாதையைத் தீர்மானித்து அதற்கான சரியான அணுகுமுறையைக் கையாண்டு உறுதியாக நகர்தலே தமிழினத்தின் அரசியல் இறுதி அடைவிற்கு அவசியமானது.

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=755

  • Replies 84
  • Views 5.4k
  • Created
  • Last Reply

இந்த அரசியல் நிலைப்பாட்டை சரியாக எல்லோரும் விளங்கிகொள்வார்களாக இருந்தால் எதிர்காலத்தில் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

Edited by Sooravali

சிங்களத்தின் பலவீனம் சரத் பொன்சேகாவா? என்ன கருத்து இது? ராஜபக்ஷ சென்ற தேர்தலில் வெற்றி பெறாது ரணில் வந்திருந்தால் தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட்டிருக்கும் என்பதுபோல் அல்லவா இங்கு கருத்த தெரிவிக்கப்படுகிறது. நடந்து முடிந்த அழிவுகளுக்கு ராஜபக்ஷதான் முழுக்காரணம் அவரை அகற்றிவிட்டால் எல்லாவிடயங்களும் வெளியில் வரும் என்று எதிர்பார்ப்பது எவ்வாறு?

சரத்பொன்சேகா ஜனாதிபதியானால் ராஜபக்ஷவிற்குத் தண்டனையுண்டு என்ற நிலைப்பாடு பொருந்தாத காரணம். இரண்டும் விசர்பிடித்த நாய்கள் அதில் எதனை அவிழ்த்துவிடுவது என்பதுதான் இப்போதைக்குரிய கவலை.

பிரேமதாஸவுடன் கூட்டுச்சேர்ந்து இந்தியப்படையை விரட்டியதும் பின்னர் அதே ஆயுதத்தால் பிரேமதாஸவை புலிகள் தாக்கியதும் உண்மை. சரத்தை திருப்பித்தாக்குவதற்கு சம்பந்தரிடம் என்ன இருக்கிறது. யுத்தவெற்றியைக் கொண்டு ராஜபக்ஷ தேர்தலில் வெல்வார் என்றால் அதே யுத்த வெற்றிதான் சரத்தையும் வெற்றிபெறச் செய்யப்போகிறது. உண்மையிலேயே இங்கு என்ன நடக்கப்போகிறது? ரணிலை ஜனாதியாகாமல் தடுக்கும் செயற்பாடுகளே இவைகள். உதயன் எழுதிய ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதைத்தானோ?

  • கருத்துக்கள உறவுகள்

சரத்தை வெல்லவைத்தபின்னர் என்ன என்பதற்கு எவரிடமும் பதிலில்லை. மகிந்தவை வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு எதுவும் நடக்கப்போவதில்லை. சரத் வந்து என்ன செய்யப்போகிறான். முதல் வேலையாக தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வைத் தரப்போகிறானா?? இறுதியாக உதயனும் பக்கம் சார்ந்து எழுதுகிறது. வித்தியாதரனுக்கு ஏற்பட்டது அநியாயம்தான், அதற்காக மகிந்தவைப் பழிவாங்கினால் மட்டும் எல்லாம் நடந்துவிடுமா??வித்தியாதரனுக்கும் உதயனுக்கும் நடந்த அழிவுகளின்போது மகிந்தவுடன் சரத்தும் கூட இருந்தானே, அது எப்படி இலகுவாக மறந்து விட்டது ? ஆக, மகிந்த செய்த் இனக்கொலையில் சரத்துக்குச் சம்பந்தமில்லை என்கிறீர்கள்.

முக்கி முக்கி சரத்தை வரப்பண்ணிப்போட்டு அவன் பழையபடி இனக்கொலையை புது வடிவில் ஆரம்பித்தால் அப்போது என்ன செய்வீர்கள்.

மகிந்தவைப் பழிவாங்குவதுதான் ஒரே நோக்கம் என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக சரத்தை நல்லவன் என்று கட்டவோ அல்லது தமிழருக்குத் தீர்வைத் தரப்போகிறான் என்றோ கதையளக்க வேண்டாம்.

கட்டுரையில் சரத்தான் தீர்வு என்று சொல்லவில்லையே... அல்லது சரத்தான் தீர்வைத்தருவான் என்றும் சொல்லவில்லையே.

மகிந்தவை வீட்டுக்கு அனுப்பவேண்டும்... அதுக்குத்தான் சரத்.

சரி சரத்தை ஆதரிக்கவில்லை என்றே வைத்துகொள்வோம்... மகிந்த வெல்வான் அப்போது ஏதாவது தீர்வு இருக்குமா? அல்லது மகிந்தவை திரும்ப வீட்டு அனுப்ப ஏதாவது வழி இருக்குமா?

இவ்வளவுகாலமும் மகிந்த என்ன செய்தானோ அதே அவன் வேண்டபிறக்கும் செய்வான்..

சரி சரதத் வென்றால் ஏதும் புதுமை நடைபெறாது... குறைந்த பட்சம் ஒட்டு குழுக்களின் பல்லாவது புடுங்குவிக்கலாம். அதற்குபிரகாவது கூட்டமைப்பு குறைந்த பட்ச அரசியலில் இடுபடலாம்.

சனங்கலாவது கொஞ்சம் மூச்சுவிடலாம்....

எங்கள் விடுதலைக்கு என்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது... அதுக்கு எதிரிகளை குறைப்பதே இலக்கை தெளிவாக்கும்.

இம்முறை மகிந்த வென்றால் அடுத்தமுறை ஒட்டு குழுக்களே தமிழரின் பிரதி நிதிகளாக நாடுளுமன்றம் போகும் அப்போது எதை வைத்து போராடுவது?

நிதர்சனமான உண்மை.

மகிந்தவை விட சரத் பலமான சர்வதேச ஆதரவு பின்னணி கொண்டவன்... இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை எண்றால் நீங்கள் இதுக்கும் மேலை படிக்க வேண்டாம்...

மகிந்தவை வெளியேற்ற வேண்டும்... இதுதான் இந்தியா முதல் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா எண்று பல நாடுகளின் நிகழ்ச்சி நிரல்.... காரணம் என்ன தமிழர்களுக்கு நல்ல வாழ்வை அமைத்து கொடுக்க வேண்டும் எனும் ஆசையா...?? அவர்கள் தங்களின் நலன்களுக்கு ஏற்றவாறு காய்களை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள்... போரில் இலங்கை வெல்வதுக்கு நீண்டது அதுகதுமான முதலீட்டை செய்த நாடுகளில் பல சரத் பொன்சேகாவின் பின் நிற்பது சரத் ஆட்ச்சிக்கு வந்த பின் தமிழர்களுக்கு விடிவை எடுத்து கொடுக்க த்தான் எண்று நினைப்பவரில் நீங்கள் ஒருவர் எண்றால் இதுக்கும் மேலை வாசிக்காதீர்கள்...

மகிந்தவுக்கு தண்டனை கொடுத்த பின் சர்வதேசத்தை பொறுத்தவரை தமிழர்களுக்கு வேறு பிரச்சினை இருப்பதாக சொல்ல போவதும் இல்லை ... தமிழர்களின் பிரச்சினை மகிந்த இராஜபக்ஸ மட்டும் தான் வேறு பிரச்சினைகளே இல்லை எண்றால், நீங்கள் சொல்வதை நான் கூட ஏற்றுக்கொள்ள முடியும்... ஆனால் தீர்க்க படாமல் இருக்கும் பிரச்சினைகள் தீர்க்க முடியாதவைகளாக போய்விடும் நிலை அப்போ வந்து நிக்கும்...

ஒருவேளை சரத் ஆட்ச்சிக்கு வந்துவிட்டால் என்ன நடக்கும்... சர்வதேச நாடுகள் எல்லாம் இணைந்து ஆட்ச்சிக்கு கொண்டுவந்த சரத்தை கொண்டு மகிந்த குடும்பந்த்தை பழிவாங்கும்... அதன் பிறகு என்ன... தமிழர்களுக்கு தீர்வா...?? என்ன வகையான தீர்வு...? வழமை போல வடக்கில் ஒரு முதல் அமைச்சர்... கிழக்கில் ஒரு முதல் அமைச்சர்... அவர்களி இருவருக்கும் மேல் இரு ஆளுணர்கள்... அதுக்கும் மேலை ஜனாதிபதி... அவ்வளவுதான்...

சரி சரத் ஆட்ச்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு இணையில்லா துயரைக்கொடுத்த துணைப்படை குழுக்களாவது கலைக்கப்படும் டக்கிளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், குழுக்கள் ஓரங்கட்ட ப்படுமா...??? அதுவும் நடப்பதுக்கு சந்தர்ப்பமே கிடையாது... காரணம் சுலபமானது... தனக்கு வாலாட்டும் அதிகமான குழுக்கள் இருந்தால்த்தான் விசுவாசி யார் எனும் போட்டியில் யாரும் துரோகம் செய்ய மாட்டார்கள்...

ஆக நாளை சரத் ஆட்ச்சிக்கு வந்தால் பிள்ளையான், கருணா, டக்கிளாஸ் வரைக்கும் வந்து சரத்தோடு ஒட்டிக்கொண்டு சிங்களவரோடு சேர்ந்து வாழ வேண்டியாவசியம் பற்றி பேசப்போகிறார்கள்.... அதில் இப்போ கூட்டமைப்பினரும் இனைந்து நிக்கிறார்கள்...

நாளைக்கு ஒருவேளை நீங்களும் சொல்லாம் நாங்கள் சிங்களவரோடு இணைந்து வாழ்வதுதான் நல்லது எண்று...

ஒருவேளை சரத் ஆட்ச்சிக்கு வந்துவிட்டால் என்ன நடக்கும்... சர்வதேச நாடுகள் எல்லாம் இணைந்து ஆட்ச்சிக்கு கொண்டுவந்த சரத்தை கொண்டு மகிந்த குடும்பந்த்தை பழிவாங்கும்... அதன் பிறகு என்ன... தமிழர்களுக்கு தீர்வா...?? என்ன வகையான தீர்வு...? வழமை போல வடக்கில் ஒரு முதல் அமைச்சர்... கிழக்கில் ஒரு முதல் அமைச்சர்... அவர்களி இருவருக்கும் மேல் இரு ஆளுணர்கள்... அதுக்கும் மேலை ஜனாதிபதி... அவ்வளவுதான்...

சரி சரத் ஆட்ச்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு இணையில்லா துயரைக்கொடுத்த துணைப்படை குழுக்களாவது கலைக்கப்படும் டக்கிளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான், குழுக்கள் ஓரங்கட்ட ப்படுமா...??? அதுவும் நடப்பதுக்கு சந்தர்ப்பமே கிடையாது... காரணம் சுலபமானது... தனக்கு வாலாட்டும் அதிகமான குழுக்கள் இருந்தால்த்தான் விசுவாசி யார் எனும் போட்டியில் யாரும் துரோகம் செய்ய மாட்டார்கள்...

சரத் வெல்வதாக இருந்தால் அது அநேகமாக தமிழர்களின் வாக்குகள் அவருக்கு பெரும்பான்மையாக கிடைத்தாலே சாத்தியம். அப்படி வந்தவர், ஒற்றையாட்சி முறைமையையும் , பெளத்த மதத்தை அரசமதமாகவும் கொண்ட சிறீலங்கா தேசத்தின் அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர், எனவே ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்றே நிச்சயம் கூறுவார். சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இதுவே இன்றைக்கு தேவையாக இருக்கின்றது

சரத்துக்கு பிரதான ஆதரவினைக் கொடுக்கும் ஜே.வி.பி தான் வடக்கு கிழக்கு பிரிப்பிற்காக நீதிமன்றம் சென்றது. எனவே சரத் எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயக பூமி என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரிப்பதற்கு கருணாவும் பிள்ளையானும் அவசியம். அதே போல் புலிகளின் எஞ்சிய போராளிகளை காட்டிக் கொடுக்க டக்ளசும், சித்தார்த்தனும் சரத்துக்கு இராணுவ ரீதியில் மிக அவசியம். எனவே ஒட்டுக்க் குழுக்கள் கலைக்கப்படும் என்ற பேச்சிற்கே இடமில்லை

இன்று தமிழ் மக்களுக்கு எஞ்சி உள்ள ஒரே ஒரு தெரிவு. தமக்கு சகல விதங்களிலும் பேரழிவு கொடுத்த தற்போதைய ஒற்றையாட்சிக்குரிய அரசியலமைப்பையும் சனாதிபதி முறையையும் வெறுத்து ஒதுக்கி தேர்தல்களை புறக்கணிப்பதே.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ மகிந்த வருவதை அனுமதிக்கலாம் என்கின்றீர்களா?

வெள்ளைவான்களும்

குடும்ப அரசியலும்

இன்றுபோல் அரசியல் நாடகங்களும் தொடரவேண்டுமா?

சரத் வந்தால் இவை இல்லாமல் போய்விடும் என்பதல்ல வாதம்

இப்போது இருப்பதை பறித்து மக்களை நிம்மதி பெருமூச்சுவிட வழி செய்யமுடியுமா? என்பதே முயற்சி.

அவ்வளவுதான் பெரிதாக எதுவும் செய்யமுடியாது என்பது எல்லோருக்கும்தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் சரத்தான் தீர்வு என்று சொல்லவில்லையே... அல்லது சரத்தான் தீர்வைத்தருவான் என்றும் சொல்லவில்லையே.

மகிந்தவை வீட்டுக்கு அனுப்பவேண்டும்... அதுக்குத்தான் சரத்.

சரி சரத்தை ஆதரிக்கவில்லை என்றே வைத்துகொள்வோம்... மகிந்த வெல்வான் அப்போது ஏதாவது தீர்வு இருக்குமா? அல்லது மகிந்தவை திரும்ப வீட்டு அனுப்ப ஏதாவது வழி இருக்குமா?

இவ்வளவுகாலமும் மகிந்த என்ன செய்தானோ அதே அவன் வேண்டபிறக்கும் செய்வான்..

சரி சரதத் வென்றால் ஏதும் புதுமை நடைபெறாது... குறைந்த பட்சம் ஒட்டு குழுக்களின் பல்லாவது புடுங்குவிக்கலாம். அதற்குபிரகாவது கூட்டமைப்பு குறைந்த பட்ச அரசியலில் இடுபடலாம்.

சனங்கலாவது கொஞ்சம் மூச்சுவிடலாம்....

எங்கள் விடுதலைக்கு என்னும் நீண்ட தூரம் போகவேண்டியுள்ளது... அதுக்கு எதிரிகளை குறைப்பதே இலக்கை தெளிவாக்கும்.

இம்முறை மகிந்த வென்றால் அடுத்தமுறை ஒட்டு குழுக்களே தமிழரின் பிரதி நிதிகளாக நாடுளுமன்றம் போகும் அப்போது எதை வைத்து போராடுவது?

உங்களுடைய நிலைபாடு தெளிவானதாக தெரிவதற்கான காரணம். தேர்வு என்பது ஏற்கனெவே எடுக்கபட்டுள்ளதால் தேர்வை எப்படி நியாயப்படுத்துவது என்பதன் தேடல்களுக்கு கிடைத்த விடையாகவே உள்ளது.

உங்களின் நிலைபாடு பொய்யானது என்பது என்னுடைய குற்றசாட்டல்ல....... மாறக மகிந்த உங்களுடைய தேர்வாக இருப்பின் என்ன காரணங்களை கூறலாம்? என்ற கேள்விகளும் அதற்கான விடைகளும் இல்லாது போகின்றன என்பதே எனது சுட்டிகாட்டு.

சரத்வந்தால் எதிரணியாக உள்ள ஒட்டுகுழுக்களை பழிவாங்கலாம் என்பது எம்முடைய எதிர்பாhப்பே தவிர. அது எப்படி சாத்தியபடும் என்பதை யாராலும் எதிர்கூவமுடியாது. சரத் ஒரு இனவாதி என்பதை நீங்களும் மறைமுகமாகவேனும் ஏற்றுகொள்கின்றீர்கள் இப்போ தமிழரை தாமாகவே கூட்டி கொடுக்கும் கூலிகளை ஏன் சரத் விரட்ட போகிறான். அவனது சுத்துமாத்து அரசியலுக்கு ஒட்டுகுழுவும் நிற்சயமாக தேவைபடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

சரத்தால் மனமுவந்து எந்த தீர்வையும் தழருக்கு கொடுக்க முடியாது என்பது நான் சொல்லி நீங்கள் தெரியவேண்டிய ஒன்றல்ல....

மாறாக மகிந்த வந்தால்.................. தற்போதைய நிலைமையே தொடரும். ஆகவே இனி இந்த நடுநிலமை நாட்டாமைகளும் மேற்குலகும் என்ன நியாயத்தை கற்பிக்க போகின்றன என்பதை பார்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்கும். தவிர மகிந்தவின் அரசு சீனாவை சார்ந்தது அகவே அமெரிக்காவின் எதிர்ப்பும் அதையொட்டடிய ஐரோப்பாவின் எதிர்ப்பும் நிற்சயம் இருக்கும். இனிதான் பிரேதேச அரசியல் சூடுபிடிக்கும் புலியெதிர்ப்பில் எதையாவது செய்யலாம் என்ற தொனிப்பில் இருந்த இந்தியாவிற்கு ஸ்ரீலங்காவுடனான உறவு பற்றிய உண்மையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் வருகின்றது.

(அமெரிக்கா சென்று வந்த பின்பே தான் ஜனாதிபதி தேர்தலில் நிற்கபோவதாக சரத் அறிவித்து உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்) ஆக அவர் அமெரிக்கா சார்ந்து இருக்க போகிறார் என்பதும் தனது ஆதிக்கத்திற்கு சரத்தை அமெரிக்கா பயன்படுத்த போகின்றது என்பதும் தெளிவானது. இப்போ இனப்படுகொலைக்கு மௌனமாக இருந்து பச்சைகொடி காட்டிய மேற்குலகிற்கும் ஐநாவிற்கும் மாயஜாலம் காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கத்துவிடும்.

ஆனால் சரத் இந்த தேர்தலில் தோற்றுபோவர் என்று ததேகூ நினைத்து அவருடன் கூட்டுசேர்ந்திருக்குமானால் அது ஒரு அரசியல் நகர்வாகவே எனக்கும் படுகின்றது. சரத்துடன் கூடிநின்று மறைமுகமாக சரத்தை தோற்க்கடிக்க வேண்டும். இதனால் ததேகூ மேற்குலகுடன் ஒரு உறவை பேணுவதற்கு வழிசமைக்கலாம். அது கூடாவிட்டாலும் தமது இருப்பிற்கு ஒரு வழிசமைக்கலாம் தொடர்ந்து வரும் பாரளுமன்ற தேர்தலில் அதிக கதிரைகளை ததேகூ பெற்றால்? அவர்களது இருப்பை மேலும் உறுதி செய்து பேரம் பேசும் நிலைமைக்கு போகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார்வந்தாலும் வெற்றி கூட்டமைப்புக்கெண்டு தீனி போட்டிருக்கிறா அக்கா,

கொட்டிக்கிடக்கிற திண்டிட்டு சுத்திவாருங்கோ... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

யார்வந்தாலும் வெற்றி கூட்டமைப்புக்கெண்டு தீனி போட்டிருக்கிறா அக்கா,

கொட்டிக்கிடக்கிற திண்டிட்டு சுத்திவாருங்கோ... :D:D

தோல்வியில் வெற்றியை காணும் சாதூரியம் இது!

தமிழர் தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை என்று ஐ நா அறிக்கை கூறுவதாக இதே தளத்தில் செய்தியொன்று பதியப்பட்டிருந்தது. தாயகத்தில் நிலை அதுபோல்தான் உள்ளது. தமிழருக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய தேர்தலல்ல இது. உண்மையில் ரணிலை , ஐ தே க வை ஓரம்கட்டும் நிகழ்ச்சி நிரலில் ஒன்று.

அப்போ மகிந்த வருவதை அனுமதிக்கலாம் என்கின்றீர்களா?

வெள்ளைவான்களும்

குடும்ப அரசியலும்

இன்றுபோல் அரசியல் நாடகங்களும் தொடரவேண்டுமா?

சரத் வந்தால் இவை இல்லாமல் போய்விடும் என்பதல்ல வாதம்

இப்போது இருப்பதை பறித்து மக்களை நிம்மதி பெருமூச்சுவிட வழி செய்யமுடியுமா? என்பதே முயற்சி.

அவ்வளவுதான் பெரிதாக எதுவும் செய்யமுடியாது என்பது எல்லோருக்கும்தெரியும்

சரத் வந்தால் இவை இல்லாமல் போய்விடும் என்பதை நீங்களே நம்பவில்லை, அப்படி இருக்க எப்படி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட வழி செய்வது என்று முயலப்போகின்றீகள்?

தயாஃ மருதங்கேணிஃ நிழலி

சரத்துக்கா அல்லது ராஜபக்சவுக்கா ஆதரவு என்பதல்ல எனது கருத்து...

முதலாவது ஒரு நடைமுறை யதார்த்தத்தை நாம் பார்க்கவேண்டும்.. புலிகள் நிழல் அரசு நடத்தும்போது எங்களுக்கு எந்த அரசியல் கட்சிப்றியோ தேர்தல் பற்றியோ முக்கியமாக இருக்கவில்லை. கூட்டமைப்புக்கூட சில அரசியல் காய்னகர்விற்காகவே அமைக்கப்பட்டது. அதாவது கூட்டமைப்பின் ஊடாகத்தான் விடுதலை என்ற ஒரு நிலை அன்றில்லை. ஆனால் இன்று நிலைமை அவ்வாறில்லை.. இன்னும் சொல்லப்போனால் முன்னரைவிட நிலைமை பாரதூரமான ஒரு நிலையில் தான் உள்ளது (மக்களின் அவலத்தையும் சேர்த்துத்தான்)

இப்போது கூட்டமைப்பு அரசியல் மாத்திரம்தான் எமக்குள்ள தெரிவு. இதுக்கு கூட்டமைப்புத்தான் தெரிவேன்று நான் சொல்லவரவில்லை.. அவர்களை விட ஒரு அமைப்பு? இருந்தாலும் சரிதான்.

இப்போ யாருக்கு வாக்களிக்கலாம்? வாக்களிக்காமல் விடமுடியும் அதன் பலாபலன் என்னவாக முடியும்? சரி தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்... அதை விட வேறென்ன இருக்கு? தேர்தலை புறக்கணித்தாலும் வாக்களித்தாலும் இரண்டில் ஒருத்தன் வரத்தான் போறான்... எததையும் தரவும் மாட்டான்.

ஒன்றை புரிந்து கொள்ளவேடும்... அதாவது எங்களின் உரிமைகளை பெற இன்னும் நீண்டதூரம் போகவேண்டியுள்ளது.

சூறாவளி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இலங்கை சிங்களவர்களை அல்ல... இலங்கை சம்பந்தமான சர்வதேச அரசியலை...

முள்ளிவாய்க்கால் வரைக்கும் பல நூறு மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் எல்லாம் நடந்தன.. அதை அமெரிக்காவோ , ஐநாவோ வாய் திறந்து மறந்தும் கண்டிக்கவில்ல. கண்டு கொள்ள இல்லை... ஆனால் நேற்றயதினமும் நேற்றய முந்தினமும் நடந்த மகிந்த தரப்பால் நடந்த தேர்தல் வன்முறைகளையும் கண்டிக்கிறார்கள்... மிகவும் காட்டமாக மகிந்தவை சாடும் அளவுக்கு இந்த தேர்தல் வன்முறை அமைந்து இருக்கிறது ஐநாவுக்கும், அமெரிக்காவுக்கும்...

நான் கேக்கிறேன் பல ஆயிரம் உயிர்கள் போன போது அதை கணக்கில் எடுக்காத அமெரிக்கா , ஐநா போண்ரவை ஏன் தேர்தல் வன்முறையை தூக்கிப்பிடிக்கிறார்கள்... காரணம் சுலபம்... அவர்கள் சரத் ஆட்ச்சிக்கு வர வேண்டும் அதில் எந்த இடையூறும் வரக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறார்கள்...

இப்போ வன்முறைகளை பிரயோகிக்காமலோ பிரயோகித்தோ சிங்களமக்கள் மகிந்தவை அமோகமாக வெற்றி பெறவைக்கிறார்கள் எண்றூ வைத்து கொள்ளுங்கள்... அமெரிக்கா , ஐநா போண்றவை என்ன செய்யும் எண்று எதிர்பார்க்கிறீர்கள்...

அவர்கள் எதைச்செய்தாலும் தமிழர்களுக்கு ஓரளவேனும் சாத்தியம் கிட்டாதா....???

சரத் ஆட்ச்சிக்கு வந்தால் கிடைக்கும் எண்று எதுவும் இல்லை... அமெரிக்கா , ஐநா போண்ரவைகளின் அழுத்தங்கள் கூட சரத்துக்கு இருக்க போவதில்லை என்பதுதான் உண்மை... கரணம் அவர்களின் செல்லப்பிள்ளை சரத்...

யார்வந்தாலும் வெற்றி கூட்டமைப்புக்கெண்டு தீனி போட்டிருக்கிறா அக்கா,

கொட்டிக்கிடக்கிற திண்டிட்டு சுத்திவாருங்கோ... :D:D

உமக்கு போட்டியாய் இப்ப சம்பந்தன் குழுவும் வந்திட்டுது ஓய்..:D

Edited by தயா

சூறாவளி,

தேர்தல் என்பது அரசியல் செயன்முறை. வாக்களிப்பது போன்றுதான் புறக்கணிப்பது என்பதும் ஒரு அரசியல் செயன்முறைதான். கடந்த சனாதிபதித் தேர்தலில் புலிகள் தேர்தலைப் புறக்கணிக்க சொன்ன காரணத்தின் சாரம்சம் தற்போதைய சிறிலங்கா அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கு முற்றிலும் விரோதமானது என்பதனாலே. எமக்கு முற்றிலும் விரோதமான ஒரு அரசியலமைப்புக்கு ஒரு (சிங்கள) தலைவரை தேர்ந்தெடுப்பதனால் உடனடியாகவோ அல்லது நீண்ட கால நோக்கிலோ எமக்கு பயன் தரக்கூடிய எந்த ஒரு அரசியல் / இராணுவ நலனும் இல்லை என்பதாலேயே. அன்று அவர்கள் சொன்னதன் காரணங்கள் அன்றை விட இன்று விசுவரூபம் எடுத்து நிற்கும் போது, இந்த அரசியலமைப்பை ஏற்று தமிழ் மக்கள் வாக்களிப்பது சரியா?

அன்று புலிகள் சொன்ன சரியான ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களை சிங்களம் பயங்கரவாதம் என்ற போது, நாம் அது பயங்கரவாதம் அல்ல என்று புலிகளின் கோரிக்கையை ஏற்று தேர்தலை புறக்கணித்தோம். இன்று புலிகள் இயங்கு வடிவில் இல்லாத நிலையில் அரசியலமைப்பிலும் சரி, தமிழ் மக்களை நடாத்தும் வித்ததிலும் மிக மோசமான நிலையில் இருக்கும் போது நாம் இலங்கை அரசியலமைப்பை ஏற்று வாக்களித்தால் அல்லது தமிழ் மக்களை வாக்களிக்க கோரினால், நாமே புலிகள் பயங்கரவாதிகள் தான் என்று ஏற்றுக்கொள்வது போலாகாதா (அதைத் தான் இன்று த.தே.கூ செய்கின்றது)?

மகிந்தவினால் 2009 இல் நாம் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டோம், 2010 இல் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்கச் சொல்லி அரசியல் ரீதியிலும் தோற்கடிக்கப்பட போகின்றோம்

சரத் வெல்வதாக இருந்தால் அது அநேகமாக தமிழர்களின் வாக்குகள் அவருக்கு பெரும்பான்மையாக கிடைத்தாலே சாத்தியம். அப்படி வந்தவர், ஒற்றையாட்சி முறைமையையும் , பெளத்த மதத்தை அரசமதமாகவும் கொண்ட சிறீலங்கா தேசத்தின் அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர், எனவே ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்றே நிச்சயம் கூறுவார். சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இதுவே இன்றைக்கு தேவையாக இருக்கின்றது

சரத்துக்கு பிரதான ஆதரவினைக் கொடுக்கும் ஜே.வி.பி தான் வடக்கு கிழக்கு பிரிப்பிற்காக நீதிமன்றம் சென்றது. எனவே சரத் எக்காரணம் கொண்டும் வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் தாயக பூமி என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார். வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரிப்பதற்கு கருணாவும் பிள்ளையானும் அவசியம். அதே போல் புலிகளின் எஞ்சிய போராளிகளை காட்டிக் கொடுக்க டக்ளசும், சித்தார்த்தனும் சரத்துக்கு இராணுவ ரீதியில் மிக அவசியம். எனவே ஒட்டுக்க் குழுக்கள் கலைக்கப்படும் என்ற பேச்சிற்கே இடமில்லை

இன்று தமிழ் மக்களுக்கு எஞ்சி உள்ள ஒரே ஒரு தெரிவு. தமக்கு சகல விதங்களிலும் பேரழிவு கொடுத்த தற்போதைய ஒற்றையாட்சிக்குரிய அரசியலமைப்பையும் சனாதிபதி முறையையும் வெறுத்து ஒதுக்கி தேர்தல்களை புறக்கணிப்பதே.

இதை எல்லாம் புரிந்து கொள்ள முடியுமானால் நாங்கள் எப்போதோ தமிழ் ஈழத்துக்கு அங்கீகாரம் பெற்று கொடுத்து இருப்போம்...

சரி கூட்டமைப்பு எடுத்தமுடிவைப்பற்ரித்தான் நாங்கள் பேசுகின்றோம்... ஆனால் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது ஏன் கூட்டமைப்புக்கும் தெரியாது..

இப்ப நடந்த தேர்தலில்கூட கூட்டமைப்பு சறுக்கித்தான் போனது... வெறும் இப்பது வீதமானவேர்களே வாக்களித்தாலும்... முடிவுகள் முழுக்க கூட்டமைப்புக்கு போனதாக இல்லை..

இனிவரும் தேர்தலில் மக்களின் முடிவு என்னவா இருக்குமோ யாருக்குத்தெரியும்.

கூட்டமைப்பும் சிலதுகளை கற்கவேண்டி வரலாம்... அல்லது இராஜபக்சவே திரும்பவும் தெரிவாகலாம்... எது என்னவோ இந்த தேர்தலின் பின் நாம் என்ன செய்யப்போறோம்?

தாயக மக்கள் பெரும் எடுப்பில் வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்களாயின் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து குத்திமுறிவதில் எந்தப்பயனும் இல்லை... அவர்கள் தங்களின் தலைவிதியை தீர்மானித்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள் எண்று அர்த்தம்... பேசாமல் நாங்கள் வேறு ஏதாவது பொழுது போக்கில் மட்டும் கவன் செலுத்துறது நல்லது... நாடுகடந்த அரசு கூட கேலிக்கூத்தாக மட்டுமே அமையும்...

இது எனது முடிவும் கூட...

சரி கூட்டமைப்பு எடுத்தமுடிவைப்பற்ரித்தான் நாங்கள் பேசுகின்றோம்... ஆனால் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது ஏன் கூட்டமைப்புக்கும் தெரியாது..

இப்ப நடந்த தேர்தலில்கூட கூட்டமைப்பு சறுக்கித்தான் போனது... வெறும் இப்பது வீதமானவேர்களே வாக்களித்தாலும்... முடிவுகள் முழுக்க கூட்டமைப்புக்கு போனதாக இல்லை..

இனிவரும் தேர்தலில் மக்களின் முடிவு என்னவா இருக்குமோ யாருக்குத்தெரியும்.

கூட்டமைப்பும் சிலதுகளை கற்கவேண்டி வரலாம்... அல்லது இராஜபக்சவே திரும்பவும் தெரிவாகலாம்... எது என்னவோ இந்த தேர்தலின் பின் நாம் என்ன செய்யப்போறோம்?

பெரும் அவலமும், அவலத்துடனான வாழ்வையும் எதிர் கொண்ட/ கொள்ளும் தாயக மக்களின் எந்த ஒரு முடிவுக்கும் தலை வணங்கி, அவர்கள் முடிவை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு எதனையும் எம்மால் செய்யமுடியாது.

தயா, நிழலி

இதுவே எனது இறுதியான நிலைப்பாடும்... அவர்கள் எந்த முடிவு எடுக்கிறார்களோ அதைதான் நாம் இறுதியாக ஏற்கவேண்டும்.

எம்மால் முடிந்தளவுக்கு அவர்களுக்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்யலாம்... அவர்களுக்கு தேவையானதை செய்யலாம்.

ராசபக்ச - டக்கிலசா கருணாவா?

சரத் - கூட்டமைப்பா ?

தமிழ் - சிவாஜிளிங்கமா?

இடதுசாரிகளா - விக்கிரமபாகுவா?

அல்லது புறக்கணிப்பா?

இதில் நாம் யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ இப்போது ஏன் வாதப்பிரதி வாதங்களை ஊக்குவிப்பான்?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

மேலே பதியப்பட்டுள்ள அந்த ஆக்கத்திற்கு எல்லோராலும் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களின் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகின்றது, அதாவது 2009ம் ஆண்டில் இடம்பெற்ற அந்த அவலத்தின் மூலம் சிங்களவன் தமிழர்களின் மன்னிக்கவும் ஈழத்தமிழர்களின் ஒரு நிரந்திர எதிரியாகி விட்டான் என்பது மட்டும். அதில் யாருக்கும் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க சந்தர்ப்பம் இல்லை.

இருப்பினும் இந்த ஆக்கத்தின் மையக்கருத்தை நாங்கள் சரியாக விளங்கிக்கொள்ளாது தமிழ்க்கூட்டமைப்பின் மீதோ, அல்லது உதயன் பத்திரிகையின் மீதோ ஆத்திரம் கொள்வது அவ்வளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமாகத் தெரியவில்லை.

சரத் பொன்சேகா அவர்களிற்கு வாக்களிக்க கோருவதனூடாக அவர் தமிழினத்திற்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கள், செய்த அநீதிகளை ஏற்று, அவர் செய்ததை மன்னிப்பது போன்று விளக்கம் கொடுக்கவும் கூடாது. அவலத்தையும் அழிவையும் தந்த முதல் எதிரியான ராஜபக்ஷ அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்கு மட்டுமான தெரிவே சரத் பொன்சேகா என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இதுதான் அந்தக்கட்டுரையின் மையக்கருத்து.

அதாவது தமிழர்களின் இன்றைய தேவை ஆட்சிமாற்றம், அதற்காக புதிய அரசு ஏதோ சாதிக்கப்போகின்றதல்ல கருத்து. ராஜபக்சவின் ஆட்சிதான் இப்போது இருக்கின்றது, அவருக்கு தண்டனை கொடுக்கவேண்டிய சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது, அதை ஏன் பயன்படுத்தக்கூடாது??? முதலில் அவரை கவனிப்போம், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவோம், அதற்கப்புறம் சரத்தைப்பற்றி சிந்திப்போம்.

ஒரு விடயத்தில் மட்டும் நாங்கள் எல்லோரும் அசைக்கமுடியாத நம்பிக்கையில் இருக்கின்றோம் அதாவது ஆயுத பலத்துடன் நாங்கள் இருந்தபோது எங்களுக்கிருந்த சுதந்திரமோ, அல்லது கெளரவமோ வேறெந்த வழியிலும் கிடைக்காது என்பது.

ஆகவே மீண்டும் நாங்கள் என்ன செய்யவேண்டும்??????

Edited by Valvai Mainthan

ஆகவே மீண்டும் நாங்கள் என்ன செய்யவேண்டும்??????

இனி என்ன செய்யவேண்டும்?

வேண்டாம் இனி ஒரு அவலம்... இனி குடுக்க ஒன்றும் இல்லை...

இதுக்கும் மேல் குடுத்தால் இருக்கிறதுக்கு ஒண்டும் தேவையும் இல்லை.

இப்போது நமக்கு இருக்கும் ஒரே தீர்வு மகிந்தாவை வீட்டுக்கு அனுப்புவதுதான்.பல விதத்திலும் இதனால் நன்மைகள்கிடைக்கும்.

1.மகிந்தா வந்தால் இப்போ நடப்பது போல் அநியாயம் இரு மடங்கு நடக்கும்.சரத் மெல்ல அரசியலை விட்டே மாறிவிடுவார்.

2.மகிந்தா குடும்பத்தின் குப்பைகள் கிளறப்படும்.ஒண்டிரண்டு கட்சி மாறி கன விசயத்தை போட்டுக் கொடுக்கும்.

3.புலிகளை அழிப்பதற்கு துணைபோன உலகம் மகிந்தாவில் பழி போட்டு மாட்டப்பார்க்கும்.(அதுதான் உலக அரசியல்).

4.அரசியலுக்கு புதிதான சரத் யூ.என்.பீ பின்புலமும் இல்லாததால் நல்லா திக்குமுக்காடுவார்.

5.ஜனாதிபதி ஒழிப்பு முறை கொண்டுவர வெளிக்கிட பல பிரச்சனைகள் வரும்.

6.நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒட்டுக்குழுக்கள் அழிப்பு நடக்காது. ஏனெனில் இன்று டீ.என்.ஏ சரத்திற்கு ஆதரவு கொடுத்தாலும் அவர்கள்தான் இரு சிங்களகட்சிகளினதும் எதிரி. ஒட்டுக்குழுக்களை வைத்துத்தான் தமிழனும் எங்களுடன் இருக்கின்றான் என்று உலகத்திற்கு படம் காட்ட முடியும்.டீ,என்.ஏ யிற்கும் அலுப்பு கொடுக்க முடியும்.

இதற்காக சரத் வந்து தீர்வுதருவார் என்று சொல்லவில்லை.

இதைவிட சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் யூ.என்.பீ வந்தால் உதயன் அதிபருக்கு மந்திரிப்பதவி அதனால் தான் இப்படி எழுதுகின்றார்கள் என்று வேறு சொல்லி வருகின்றார்.உதயன் அதிபர்? தான். வித்தியாதரன் பல வருடங்களாக எமக்காக உயிரையும் வெறுத்து பாடுபடுபவர்.ஒரு போதும் அப்படி நடக்க மாட்டார்.(எனது நண்பரும்,இடைக்கிடை கதைப்பதினாலும் சொல்லுகின்றேன்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.