Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்கள் வோட்டு யாருக்கு

உங்கள் வோட்டு யாருக்கு 40 members have voted

  1. 1. ஐதேக ஜேவிபி என்பவற்றின் ஆதரவை பெற்று மகிந்தவிடம் இருந்து விலகி வந்து , மகிந்தவின் போர் குற்றத்தை விசாரிப்பேன் எண்று அதிபர் தேர்தலில் நிக்கும் டக்ளசுக்கே எங்கள் தமிழ் கூட்டமைப்பின் ஆதரவும்... நீங்கள் டக்கிளசை ஆதரிக்கிறீர்களா..???

    • ஆம்
    • இல்லை
    • புறக்கணிக்கிறேன்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கடந்த 5 வருடங்களாக 3 மாதம் முன் வரைக்கும். இந்த டக்கிளசையும் அவன் துணைப்படையையும் சேர்த்து தலைமை தாங்கி தமிழனத்தை அழிக்க முன்னிண்று உழைத்த சரத் பொன்சேகா வந்தால் வந்தால் தமிழர்கள் மீது செல்லுக்கு பதில் பூக்களை வாரி இறைப்பான் கொலைகள் ஏதும் செய்ய மாட்டான் எண்று சொல்கிறார்களே இதை நீங்கள் கற்பனையிலாவது நம்புகிறீர்களா...??

இல்லை என்று நீண்ட நாட்களாக சொல்கிறேன். சிவாஜிலிங்கம் முதலாவது தெரிவு. விக்கிரமதுங்க இரண்டாவது தெரிவு.

அல்லது மாறி போட்டாலும் பறவாயில்லை.

ஒருசெய்தி தமிழ் மக்களை கொன்றவவர்கள் 50% வாக்கு பெற கூடாது என்பது.

இரண்டு எமது எதிர்ப்பை தெரிவிப்பது.

மேலும் நாம் இனவாதிகள் இல்லை தமிழ் மக்களின் உரிமைக்களுக்காக குரல் கொடுக்கும் சிங்களவருக்கு வாக்களித்த்துள்ளோம் என்ற செய்தியும் உள்ளது.

மேலும் நாம் வாழும் ஜன நாயக உலகில் எமது வாக்களிப்பை பயன்படுத்தி இந்த கொலைகாரர்களை ஜனாதிபதியாக விடாமல் (ஒருமுறையாவது)தடுத்துள்ளோம் என்பதை ஒரு கட்டத்திலாவது உலகறிய செய்வது.

இதற்கு பிறகு தமிழர்களை பழி வாங்குவார்கள் என்றால் பழி வாங்க இனி என்ன உள்ளது.?

  • Replies 80
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயா! என்னைப் போன்றவர்களுக்கு உணர்த்திய பெருமை உங்களை சாரட்டும்.

நன்றி வணக்கம் :D

Edited by குமாரசாமி

சரத் , மகிந்த இருவருமே பிணந்திண்ணி கழுகுகளும் பச்சை இனவாதிகள், இவர்களுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அழிவுக்கு துணை போனவர்கள் டக்லசும், கருணாவும் இவர்கள் யாருக்கும் வாக்கு போடாமல் புறக்கணிப்பதே எனது முடிவு

அண்ணே டக்ளசை ஆதரிகிரதில பிரச்சனை இல்லை இவரை ஆதரிப்பதால் தனி தமிழீழம் கிடைக்கும் என்றால்?.... எமது விடுதலை வீரர்கள் செய்த தியாகம், தமிழீழ கனவு நினைவாக்கும் என்றால். இதெல்லாம் நடக்கிற காரியமா? புலி பசித்தாலும் புல்லை தின்னாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டிக்கடைமுதலாளி அண்ணைவசம்பும் கனகாலத்துக்குப்பிறகு தடக்குப்படுறார் கவனம்

  • கருத்துக்கள உறவுகள்

நாம்ம அதைப்பாவிக்க வேண்டுமெங்கோ!!!

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டிக்கடைமுதலாளி அண்ணைவசம்பும் கனகாலத்துக்குப்பிறகு தடக்குப்படுறார் கவனம்

:D:wub:

  • கருத்துக்கள உறவுகள்

நடக்க முடியாத ஒன்றை கேள்வியாக மாற்றினால் எப்படி? முதலில் இப்ப நடந்து கொண்டிருக்கிற விடயததைக் கேள்வியாக மாற்றினால் தமிழ் மக்களின் நிலையை நாடி பிடித்துப் பார்க்கலாம். இது ஏற்கனவே குழம்பி நிற்கும் தமிழரை மேலும் குழப்ப உதவும். தமிழருக்கு பிறசர் ஏத்திறது என்றே முடிவு பண்ணிவிடீர்கள் போலிருக்கிறது.

... இங்கு சிலர் குழம்பிப் போயுள்ளார்கள்!! ... அதன் எதிரொழிப்பே இத்தலைப்பு!!!

.... ஒன்றைப்புரியுங்கள் கூட்டமைப்போ, இல்லை ஏனைய தமிழர்களின் அமைப்போ சரத் பொன்சேகாவை ஆதரிப்பது என்பது ... சரத் பொன்சேகா தமிழ் மக்களுக்கு ஒரு அநியாயங்களையும் செய்யவில்லை என்றோ??? இல்லை அவர் தமிழ் மக்களின் பிரட்சனைகளை தீர்த்து விடுவார் என்றோ??? .... ஒருவரும் கருதியல்ல!!!!

சரத்தும் , மகிந்தவும் தமிழர்களை போட்டி போட்டு அழித்தவர்கள்/அழிப்பார்கள் உண்மை!!! .... சரி இருவருக்கும் வாக்கு வேண்டாம் என்றால்/புறக்கணிப்போம் என்றால் .....

.. இன்று வடகிழக்கில் இருக்கும் டக்லஸ்/கருணா கும்பல்கள் விடுவார்களா??? அங்குள்ள வாக்குகள் பல கள்ளவாக்குகளாக யாராவது ஒருவருக்கு விழுந்தே தீரும்!!! மற்றும் கடந்த காலங்களில் புறக்கணிப்பை செய்தோம் தேர்தல்களில், .... விளைவு ஒட்டு/ஒட்டில்லா கும்பல்களுக்கு சந்தர்ப்பம் அழித்தோம் மற்றும் எமது புறக்கணிப்பை சர்வதேசம் அல்ல யாரும் கணக்கில் எடுத்தார்களா????? இப்புறக்கணிப்புகளால் ஏதாவது பலன் கிடைத்ததா?????

அதனை விட கடந்த காலங்களில் நாம் ... வாக்களிக்கவில்லையா???? .... சந்திரிக்காவுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வாக்களித்தோம் ... மற்றும் பாராளுமன்ற தேர்தலில் ஒருதரம் ஈரோஸுக்கு வாக்களித்தோம் ... கூட்டமைப்புக்கு வாக்களித்தோம்!!!!

இத்தேர்த்தலை இலங்கையில் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போக பாவிப்போம்!!! .... இத்தேர்தலுடன் சிங்கள பகுதிகளின் அரசியல் ஓயப்போவதில்லை!!! ..... அதன் பிந்தான் பழிக்கு பழி வாங்கல்கள் ஆரம்பிக்கும்!! ...... அதில் எமக்கு என்ன நடைபெறப்போகிறது?????? ... அங்கு நடைபெறத்தொடங்கியிருக்கும் பிடுங்குப்பாடுகள் ... சிலசம்யம் பல உண்மைகளை வெளிக்கொணரும் என நம்புவோம்!!! .....

மாறாக மகிந்த தேர்வு செய்யப்பட்டால் .... எம்மாற்றங்களும் நடைபெற சாத்தியமில்லை!!!!

Edited by Nellaiyan

டக்கிளசுக்கும் சரத்துக்கும் வித்தியாசம் ஒண்று மட்டுமே அவன் சிங்களவன் இவன் தமிழன்...

... தயா, உங்கள் பாஷையில் சொல்வதானால் .... ஒன்று எதிரி, மற்றது துரோகி!!! ....... மிகப்பெரிய வித்தியாசம் இது!!!

Edited by Nellaiyan

தயா அண்ண,உங்களுக்கு எனது நன்றி,குழம்பியிருந்த மனதில் என்னை அறியாமலே ஒருவித நிம்மதி பெருமூச்சு வெளிவரும் போதுள்ள சுகம்.நீண்ட நாளைக்குக் பின் என்னையே சுய மதிப்பீடு செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் போல.நான் பேராதனை பொறியியல் பீடத்தில் பயிலும் போது,பரீட்சைக்கு முன் "குப்பி" எடுப்பார்கள்(மிகவும் குழம்பி முளுவதையும் தயார்படுத்த நேரமில்லத போது,இந்த குப்பி தான் குழப்பதில் இருந்து விடுபட சிரஞ்சீவி மருந்து)....

விடயம் என்னவெனில் தேர்தல் என்றாலே எதிர்பார்ப்பு,சலுகை,இலவசம் போன்ற தொற்று வியாதிகள்,நீங்கி யதார்த்தத்தை உணரும் ஒரு மேடையாக,எங்கள் கருத்தின் பிரதிபலிப்பை காட்டும் முடிவாக மாறாத வரைக்கும் குழப்பங்கள் தொடரத்தான் செய்யும்.

என்னைப் பொறுத்தவரயில் முள்ளிவாய்க்கால் சோகத்தை மூடி மறைக்க முயலாத ஒருத்தனுக்கே என் வாக்கு.அப்படி பார்த்தால் சிவாஜி-விக்கிரமபாகு கூட்டுக்குத்தான் வாக்களிப்பேன்.

மேலும்,என்பார்வையில்,தோற்ற இனத்தில் ஒருவன் என்ற வகையில் என் உளவியல் பாங்கு எல்லோரையும் துரோகி,விரோதி என்று பட்டியலிட்டு குதறத்தான் துடிக்கிது...

  • தொடங்கியவர்

அதனை விட கடந்த காலங்களில் நாம் ... வாக்களிக்கவில்லையா???? .... சந்திரிக்காவுக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வாக்களித்தோம் ... மற்றும் பாராளுமன்ற தேர்தலில் ஒருதரம் ஈரோஸுக்கு வாக்களித்தோம் ... கூட்டமைப்புக்கு வாக்களித்தோம்!!!!

அண்ணை ஏன் பொய்யளை அவிட்டு விடுகிறீர்கள்....???

1994ல் சந்திரிக்காவுக்கு வன்னியில் வாக்களர்கள் 178 000 ல் இருந்து விழுந்த வோட்டுகள் 33548 பேர்... யாழ்ப்பாணத்தில் வாக்களர்கள் 596 366 பேர் அதில் சந்திரிக்காவுக்கு வாக்களித்தவர்கள் 16 936 பேர்...

இதிலை சிங்கள முஸ்லீம் ஊர்கள் அடங்கிய மட்டக்களப்பில் இருந்து 144 லட்ச்சம் வாக்குக்களை சந்திரிக்கா வாங்கி இருந்தார் அது 270000 வாக்களர்களில் இருந்து...

தமிழர்கள் தெளிவாகத்தான் இருந்தவை அண்ணை...

http://www.slelections.gov.lk/pdf/1994%20Presidential.pdf

தயா அண்ண,உங்களுக்கு எனது நன்றி,குழம்பியிருந்த மனதில் என்னை அறியாமலே ஒருவித நிம்மதி பெருமூச்சு வெளிவரும் போதுள்ள சுகம்.நீண்ட நாளைக்குக் பின் என்னையே சுய மதிப்பீடு செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் போல.நான் பேராதனை பொறியியல் பீடத்தில் பயிலும் போது,பரீட்சைக்கு முன் "குப்பி" எடுப்பார்கள்(மிகவும் குழம்பி முளுவதையும் தயார்படுத்த நேரமில்லத போது,இந்த குப்பி தான் குழப்பதில் இருந்து விடுபட சிரஞ்சீவி மருந்து)....

விடயம் என்னவெனில் தேர்தல் என்றாலே எதிர்பார்ப்பு,சலுகை,இலவசம் போன்ற தொற்று வியாதிகள்,நீங்கி யதார்த்தத்தை உணரும் ஒரு மேடையாக,எங்கள் கருத்தின் பிரதிபலிப்பை காட்டும் முடிவாக மாறாத வரைக்கும் குழப்பங்கள் தொடரத்தான் செய்யும்.

என்னைப் பொறுத்தவரயில் முள்ளிவாய்க்கால் சோகத்தை மூடி மறைக்க முயலாத ஒருத்தனுக்கே என் வாக்கு.அப்படி பார்த்தால் சிவாஜி-விக்கிரமபாகு கூட்டுக்குத்தான் வாக்களிப்பேன்.

மேலும்,என்பார்வையில்,தோற்ற இனத்தில் ஒருவன் என்ற வகையில் என் உளவியல் பாங்கு எல்லோரையும் துரோகி,விரோதி என்று பட்டியலிட்டு குதறத்தான் துடிக்கிது...

:D

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை ஏன் பொய்யளை அவிட்டு விடுகிறீர்கள்....???

1994ல் சந்திரிக்காவுக்கு வன்னியில் வாக்களர்கள் 178 000 ல் இருந்து விழுந்த வோட்டுகள் 33548 பேர்... யாழ்ப்பாணத்தில் வாக்களர்கள் 596 366 பேர் அதில் சந்திரிக்காவுக்கு வாக்களித்தவர்கள் 16 936 பேர்...

இதிலை சிங்கள முஸ்லீம் ஊர்கள் அடங்கிய மட்டக்களப்பில் இருந்து 144 லட்ச்சம் வாக்குக்களை சந்திரிக்கா வாங்கி இருந்தார் அது 270000 வாக்களர்களில் இருந்து...

தமிழர்கள் தெளிவாகத்தான் இருந்தவை அண்ணை...

http://www.slelections.gov.lk/pdf/1994%20Presidential.pdf

யாழ்ப்பாணத்தில 2.97% வாக்குபதிவு நடந்திருக்கு அதில 96.35% சந்திரிக்காவுக்கு போட்டிருக்கு, வன்னியில 22.41% வாக்குபதிவு நடந்திருக்கு அதில 85.3% சந்திரிக்காவுக்கு போட்டிருக்கு, மட்டக்களப்பில 64.32% வாக்குபதிவு நடந்திருக்கு அதில 87.3% சந்திரிக்காவுக்கு போட்டிருக்கு, அம்பாறையில 75.7% வாக்குபதிவு நடந்திருக்கு அதில 72.36% சந்திரிக்காவுக்கு போட்டிருக்கு. இந்த கணக்குப்படி 2005 ல போட விட்டிருந்தா ரணிலுக்கு 60% கிடைச்சிருக்கும்…

ம்....தமிழர்கள் தெளிவாத்தான் இருந்திருக்கினம். :)

Edited by Mathivathanang

என்ன தண்ணியோ...??? 2005 ல் புலி எல்லாரையும் இழுத்தே பிடிச்சது...??? விரும்பினவர்கள் தாராளமாக போட்டு இருக்கலாமே...?? ஏன் போடவில்லை...?? "புலி சொல்லை தட்டாதே" படம் முதல்நாள் பார்த்தவையே...??

நாய்க்கு எங்கை அடிச்சாலும் காலைத்தான் தூக்கி கொண்டு மூண்டு காலிலை ஓடித்திரியும்... குணம் அப்பிடியே இருக்கு...

யாழ்ப்பாணத்தில் 2.97% விழுந்தது முழுத்தமிழர்கள் இருக்கும் இடம்... EPDP சந்திரிக்காவுன் PA யில் ஒரு கட்ச்சி... அவர்களின் ஆதரவு 2.97 %

வன்னி மாவட்டத்தில் மணலாறு(பதவியா) முழுவதும், வவுனியாவில் குறிப்பிட்ட பகுதிகள் போண்றவை முழுச்சிங்கள் பிரதேசம்... மன்னாரில் இஸ்லாமியர்கள்.. அதனால் 22 % வாக்கு பதிவாகி இருந்து இருக்கிறது...

மட்டக்களப்பு மூவினங்களின் கலப்பு பிரதேசம்...

இங்கை வேறை என்னத்தை எதிர்பார்க்க போறியள்...??

ம்....தள்ளிக்கொண்டு போனது 1995 ல அதுவரைக்கும் ..... "புலி சொல்லை தட்டாதே" படம்தான் ஓடினது மறந்துபோச்சோ? :)

  • தொடங்கியவர்

ம்....தள்ளிக்கொண்டு போனது 1995 ல அதுவரைக்கும் ..... "புலி சொல்லை தட்டாதே" படம்தான் ஓடினது மறந்துபோச்சோ? :)

சனம் மண்ணெண்ணைக்கே வளியில்லாமல் லீட்டர் 100 - 200 எண்டு குடுத்து வாங்கினது உங்களுக்கு படம் ஓடித்தான் இருக்கும்...

அது சரி எனக்கு தெரியை அல்லைபிட்டியிலை இருந்து அராலி, காரைநகர் எண்டு குறிகட்டுவான் வரைக்கும் உள்ள தீவகங்களில் இருந்து மக்கள் எல்லாம் இடம் பெயர்ந்து யாழ்ப்பானத்துக்கை இருந்ததுகள்.... எப்படி 17 000 தீவகத்திலை மட்டும் போட்டதுகள்... ??? நெடுந்தீவிலை இருந்து மட்டும் வாக்கு போட்டதுகள் எண்டு புழுகாமல் விட்டால் சந்தோசம்... தபால் வாக்குகள் எண்டு ஒரு இரண்டாயிரத்துக்கு கணக்கு காட்டலாம்... மிச்சம்...?

உந்த அதிசயத்தை நடத்தி காட்டின தாடி மாமாவுக்கு உங்கட வாக்கா இல்லையா.... நீங்கள் போடாட்டாலும் மாமா உங்கள் வோட்டை தானாக தனக்கு போட்டு கொள்வார்....

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை என்று வாக்களித்து உள்ளேன், சிங்களவன் தனது இனத்துக்காக தமிழினத்தை அழிப்பதையும், தமிழன் தனது சுகபோக அதிகார வாழ்வுக்காக தமிழினத்தை அழிப்பதையும் ஒன்றாக கருத முடியாது, முதலாமவன் எதிரி, இரண்டாமவன் துரோகி, எதிரியுடன் போராடி என்றாவது வெல்லலாம், துரோகியுடன் என்றும் வெல்லமுடியாது. ஏனெனில் துரோகி மிக மிக ஆபத்தானவன் புலிகள் விட்ட தவறு கருணா என்னும் துரோகியை விட்டு வைத்தது, அது எவ்வளவு பெரிய இழப்பில் வந்து முடிந்து இருகிறது. துரோகிகள் அழிக்கப்படவேண்டியவர்கள், எதிரிகள் வெல்லபட வேண்டியவர்கள்.

அதாவது எதிரியை நம்பலாம் துரோகியை நம்பக்கூடாது எண்று.... தமிழர்கூட்டணியின் ஆதரவு பெற்ற சரத்தை நம்பலாம்...

பொன்னன் எப்போதும் பொன்னையன் இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறான்... இண்றய திகதியில் மகிந்தவை விடவும் ஒரு கொலைகாறன், இனவாதி இலங்கயில் இருக்கிறான் எண்றால் அது நீங்கள் எல்லாரும் வாக்களித்து அடுத்த இலங்கையின் ஜனாதிபதிகாக்க விரும்பும் சரத் பொன்சேகாவே...

அப்படி அவன் ஒருவனுக்கு நீங்கள் வாக்களிக்க முடியும் எண்றால் ஒண்று பட்ட இலங்கை எனும் பதத்துக்குள் இருந்து கொண்டு ஆரம்பம் முதல் செயற்படும் டக்கிளசும் துரோகி இல்லை.... அவனுக்கும் கொள்கை இருக்கிறது... அதனை அவன் எப்போதும் கருணா போண்றோ கூட்டமைப்பு போண்றோ அடிக்கடி மாற்றியது இல்லை... சரத் எனும் சிங்களவனை விட டக்கிளஸ் எனும் தமிழன் தகுதியானவர்தான்....

ஒருவேளை தமிழர்கள் யாரும் தமிழனுக்கு தலைவனாக இருக்க தகுதி இல்லை சிங்களவன் பறவாய் இல்லை என்பது போல உள்ளது உங்கள் வியாக்கியானம்...

நேற்று கூட்டமைப்புக்கு தமிழர் ஒரு தேசிய இனம்... தனியாட்ச்சிக்கு தேவையான தகுதிகளை கொண்டு இருந்தது... ஆனால் இண்று கூட்டாட்ச்சியும் இல்லை ஒற்றையாட்ச்சியின் கீழ் தீர்வு எண்று கொள்கை மாற்றம்... இதை வாக்களித்து நாடாளுமண்றத்துக்கு அனுப்பி வைத்த மக்களுக்கு சொல்கிறார்கள்... மக்களை அரசியல் குருடர்களாக நினைத்து இருக்கிறார்களாக்கும்...

Edited by தயா

இப்படி யாருக்கும் வேண்டப்படாமல்..ஏன் எமக்கே வேண்டப்படாமல்.. அனாதயா நிக்கிறோம்.. :)

சிங்களவன் தனது சோற்றை திண்றுவிட்டு தனது இனத்துக்காக தமிழனை கொல்பவனும், தமிழன் தமிழனது சோற்றை திண்டுவிட்டு தமிழனை கொல்பவனும் எப்படி ஒன்றாக முடியும்?

எதிரி இருக்கும் இடம் தெரிகறது, ஆனால் துரோகி இருக்கும் இடம் தெரிவதில்லை, அவன் எமக்குள்ளும் இருகிறான், எமது சோற்றை திண்டுவிட்டு எமக்கு எதிராகவே இயங்குகிறான், இன்று அவன் அமைச்சு பதவியில் இருகிறான் ஆரம்பத்தில் அவனுக்கு சோறு போட்டது யார்?

அந்த மக்களிடமே கொள்ளை அடித்து கற்பழித்து, கொலைசெய்பவன் எப்படி உங்களுக்கு நல்லவன் ஆனவன்.

இதைதானே கருணாவும் செய்தவன், மத்தையாவும் செய்தவன், இவர்களைவிட அவன் எப்படி உங்களுக்கு மேலானவனாக விளங்குகிறான்.

கூட்டமைப்பு ஒரு போதும் அமிதலிங்கத்தின் பாதையில் நடக்க முன்வராது, அமிர்தலிங்கம் தமிழர்களது வாக்கைதான் மோசம் செய்தான், கூட்டமைப்பு ஒருலட்சம் மக்களினதும் முப்பதாயிரம் போராளிகனது உயிர்களை மோசம் செய்தே அந்த வழிக்கு செல்ல முடியும் இது மிகவும் ஆபத்தான பாதை என்பது அனைவருக்கும் தெரியும்.

பகிடிவிடாதீங்கோ தயா

மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாஆட்சி என்றதும்

இணக்க அரசியல்(அடிமை அரசியல்) என்பதும் எந்த கொள்கையின் உறுதி பாட்டில்?

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீண்ட விவாதம்.........

சொல்லவாறது என்னவே நாங்கள் "இப்பவும்" தியாகி, துரோகி, மாமனிதர், மாவீரர்,எதிரி வட்டத்துக்குள்ளும்........ முடிவாக ஏமாளி சனமும் !!!!!!

டக்லஸ் எதிரி/ துரோகி என்று சொல்லுகிறவை தங்களையும் கொஞ்சம் திருப்பி பார்த்தால் நல்லம்,... 1990 களில் "எங்கள் நாட்டின் இளைஞர் கூட்டம் வேற்று நாட்டினில் அலைகளிலே, சொந்த மண்ணின் ...............................புதைந்த வீரர் கதைசொல்லும்" (வரியை மறந்துவிட்டேன் ) இன்று அதே அலைந்த கூட்டத்திடம் தான் தமிழீழ தாயக விடுதலைக்குரிய முழுப்பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது....அமிர்தலிங்கம் சுடப்பட்டபோது கூட இருந்து காயமடைந்து தப்பிய சிவசிதம்பரம் பின்னாளில் மாமனிதர்....யாரும் தேர்தலில் நிற்க கூடாது என்றபோது தேர்தலில் நின்ற யோகேஸ்வரி யோகேஸ்வரன், சிவபாலன் துரோகி ஆனால் அவர்களில் மறைவின் பின் தேர்தல் இல்லாமல் மேயர் ஆக வந்த ரவிராஜ் மாமனிதர்.....இவ்வளவு காலமும் தமிழர் மூத்த தலைவராய் இருந்த சம்பந்தர் இப்ப துரோகி.....

இதற்குள் எங்கு டக்ளசை போடப்போகிறீர்கள்....??? டக்லஸ் 8 வோட் 10 வோட் இல் வந்தவர் என்று சொல்லுபவர்கள் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும், டக்லஸ் அன்று அப்படி வராவிட்டால், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பே இல்லை....தனித்து போட்டியிட்ட கூட்டணியால் யாழ் மாநகர சபைஐ தவிர எல்லா இடத்திலும் தோல்வி, அதற்கு பிறகுதான்..இந்த கூட்டமைப்பு வந்தது...இன்னுமொன்று..முதல் பாராளுமன்ற தேர்தலில் வேற்ரியிட்டின மகேஸ்வரன் யாழ்பாணத்தில் போட்டியிடக்கூடாது என அவரை கொழும்பில் போட்டியிட வைத்தபின்தான் இந்த கூட்டமைப்பு 10 இடங்களை யாழில் வென்றது.....ஆக டக்லஸ் அந்த நேரத்தில் உயிருக்கு பயப்பட்டாமல் (கூட்டணி மாதிரி) முதலில் போட்டியிட்டபடியால் தான் இப்ப நாங்கள் தேர்தலை பற்றி கதைக்கிற அளவுக்கு வந்திருக்கிறோம், இல்லாட்டி நடேசன் சொன்னமாதிரி..post LTEE period ஒன்று இல்லை எண்டுதான் போயிருக்கும்....இப்பவும் சனம் இருக்குது, மக்களும், மாக்களும் தேர்தலை பற்றி கதைக்குது என்றால் அது டக்லஸ் அந்த நேரத்தில் துணிந்து தேர்தல்களில் நிண்டதாலேயே என்பதை மறக்காமல் இருந்தால் சரி...இப்ப கூட புலி இருக்கேக்க மகிந்தவோட கதைபேச்சில்லாமல் இருந்த கூட்டமைப்பு டக்லஸ் உடன் ஒன்றாக இருந்து பேச தலைப்பட்டது, ஒன்றும் மக்கள் கரிசனியில் இல்லை, இப்படி போனால் வரதேர்தல் இல் எல்லாரும் வீட்டை போகவேண்டும் என்றபயத்தில்தான்.

இந்த துரோகி..மாமனிதர் பட்டங்கள் முற்றுமுழுதாக அந்த அந்த காலத்துக்குரியவை...அவற்றினது வலுவும் காலவேட்டத்தில் இல்லாமல்போகும்.. அதைவளங்கியவர்களே துரோகியாய், எதிரியாய் உள்ளபோது அதை இன்னும் சொல்லிக்கொண்டு திரிவது இன்னும் கேவலம் , பச்சோந்தித்தனம் ........

என்னைபொறுத்தவரையில், டக்லஸ் ஒரு யனாதிபதியாய் வந்து மக்களுக்கு இப்ப உள்ள பிரச்சனைகளை தீர்க்கமுடியும் அல்லது குறைக்க முடியும் என்றால் எனது வோட்டு டக்ளச்சுக்கே.....

பிரகாஸ்ராஜ் இன் ஒரு படம் "தயா" அதில் ஒரு பாட்டு "தயா தயா ...நீயும் நானும் தயா தயா..திரும்பிப் பார்த்தால் தயா தயா ......................" குர்றமிளைத்தவர்களுக்கு தயா என்று பேர் வைத்தால் எல்லாரும் தயாவே....

நான் இதுகளை எழுதுவதானால், டக்லஸ் செய்கிற எல்லாவற்றையும் சரி சொல்லுபவனும் அல்ல, டக்லஸ் சார்ந்திருக்கும் மிகிந்தா விற்கு வோட் போட என்று சொல்லவும் இல்லை......டக்லஸ் இனி என்ன செய்ய போகிறார்? முந்தி புலி பினாமிகள் இருந்த மாதிரி தானும் ஒரு பேட்டை பிஸ்தாவா இருக்க போகிறாரா? யாழ்பாணத்தில மூத்திரம் பெய்யிறது எண்டாலும் அவரிட்டை சொல்லிப்போட்டு போகவேணும்...தனிய தனிய எழுதினால் இது முடியாது...எங்களுக்கு ஒரு மாற்றம் வேணும்...இவ்வளவு காலமும் ஆயுதம் வைத்திருந்தநீங்கள் புலி தாக்கும் எண்டு ...இனியேன்....நீங்கள் யாரும் சொல்லிப் அதுகளை கீழே போடப்போகிறது இல்லை.... பார்ப்பம் சரத் வந்தால் நடக்குதோ என்று... நீங்களே சொன்னபடி மாநகர தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றி குறைவு எண்டு....அதோட நீங்களும் கொஞ்சம் உங்கடை போக்குகளை மாத்தியிருப்பீங்கள்...சித்தார்த்தன் சொன்னபடி (வவுனியா நகரசபை தோல்விக்கு பிறகு) ... "மக்களுக்கு / வர்த்தகர்களுக்கு நாங்கள் செய்கிற செயற்திட்டம் பிடிக்கவில்லை போல...கடையில காசு / சாமான் வாங்கி சனத்துக்கு கொடுகிறது"...உங்கட மொழியில் செயற்திட்டம...ஆனால் நடைமுறையில் கப்பம்/ வரி.........அதுமாதிரி இந்த தேர்தல் முடிவுகள்உங்களுக்கும், பிளையானுக்கும், கருணாவிற்கும் ஒரு திருப்பினையை கொண்டுவரவேண்டும்....

இங்கே கனடாவில ஒன்று சொல்லுகிறவை... " U turn " என்று, போனபாதையில் இருந்து திரும்பி வந்த பாதையால போவதை, கூட்டமைப்பும் ஏனையோரும் நடுரோட்டில circus அடிக்கேக்க , உங்களுக்கு அது கஸ்ரமாய் இருக்காது....இருக்காட்டி சனம் இருக்க வைக்கும்...வாக்கு வங்கி குறையக்குறைய உங்களுக்கு அது விளங்கும்...:)

முடிவாக, எங்களுக்கு மாற்றம் வேணும், அது நிரந்தமானதோ, தற்காலிகமனதோ..இருக்கிற ஒரு தெரிவு சரத்...அதை பிழை என்று சொல்ல தலை சுத்தி சுத்தி மூக்கை தொடுவது போல் விளக்கங்கள் நீங்கள் உங்களையே திருப்திப்படுத்துவது மட்டுமே.....

2002 கூட்டமைப்பை உருவாக்க முயற்சிகள் நடந்துகொண்டிருந்த போது உள்ளே டக்ளசும் இழுக்கப்பட்டிருந்தால்

அண்ணரும் இன்று தமிழ்த்தேசியவாதிதான்.

----------

30 வருச போர் வரலாற்றில நான் கண்ட ஒரேயொரு மிச்சம்

முடிந்த முடிபெண்டு ஒண்டும் இல்லை. சுழிச்சும் நெளிச்சும் வளைச்சும் ஓடினாத்தான் உண்டு.

மேற் காணப்படும் கருத்துக்கு வந்த ஒரு மின்னஞ்சலை இங்கு இணைக்கிறேன்:

டக்ளசும், சித்தார்த்தனும் எக்காரணம் கொண்டும் இணைக்கப்பட்டிருக்க மாட்டார்கள். த.தே.கூ இன் உருவாக்கத்திற்கும் கருத்துருவாக்கம் செய்து முன்னின்று உழைத்த டி.சிவராம், நடேசன் அண்ணா போன்றவர்களுக்கு புலிகளின் தரப்பில் கொடுக்கப்பட்ட முக்கிய நிபந்தனையாக இவை இருந்தன.

மேற்படி கருத்துக்கள் யாழ் கருத்துக்களத்தில் எழுதப்பட்டிருப்பதை பார்த்தேன். யாழ் இணைய கருத்துக்களத்தில் நான் அங்கத்தவராக இல்லாத காரணத்தால் இதை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன்.

இக்கால பகுதியில் நாட்டில் ஊடகவியலாளராகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தவன் என்ற வகையிலும் சில குறிப்புக்களை தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட எமக்கு ( சிவராம் நடேசன் உட்பட) விடுதலைப்புலிகள் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.

புளொட் அமைப்பையையும் இதில் இணைத்துக்கொள்வதற்காக நான்கு தடவைகள் புளொட் தலைவர் சித்தார்த்தன் உட்பட புளொட் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

அவர்களை இணைத்துக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் கூட்டமைப்பை உருவாக்கத்திற்காக முன்னின்று உழைத்த தமிழர் மறுமலர்ச்சிக்கழகம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய வற்றிடம் சில நிபந்தனைகளை விதித்திருந்தன.

1. தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்க கூடாது.

2. அவர்களிடம் இருக்கும் ஆயுதக்குழுவை கலைக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளுக்கு ஒரு கட்டத்தில் சித்தார்த்தன் இணங்கி வந்து தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து கொள்வதற்கு சம்மதித்த போதிலும் புளொட்டில் இருந்த சிலர் அதற்கு சம்மதிக்காததுடன் இராணுவத்தினருடன் தாம் தொடர்ந்து சேர்ந்து இயங்கப்போவதாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே புளொட் அமைப்பை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளும் முயற்சி கைவிடப்பட்டது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சி நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரையும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் சந்தித்திருந்தது. ஆனால் அந்த சந்திப்புக்களில் ஒரு போதும் விடுதலைப்புலிகள் நிபந்தனைகளை விதிக்கவில்லை. இந்த முயற்சியில் ஈடுபட்ட சிவராம் நடேசன் ஆகியோருக்கு விடுதலைப்புலிகள் நிபந்தனை விதித்திருந்தார்கள் என்பது முற்றிலும் தவறானதாகும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஒன்றிணைக்கும் முயற்சி சொற்ப காலத்தில் நடந்த விடயம் அல்ல. 1997ஆம் ஆண்டு தொடக்கம் 2002ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.

அது ஒரு நீண்டவரலாறு. ஏனைய கட்சிகளை விட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி முரண்டு பிடித்து நிபந்தனைகளை விதித்த சம்பவங்கள் பல உண்டு.

தேவை ஏற்படின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தோற்றம் பற்றி பின்னர் விரிவாக எழுதுவேன்.

இதில் இப்போது மிகப்பெரிய கவலை என்னவெனில் காலத்தின் தேவை கருதி மிகப்பெரும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைப்பதற்கும் இப்பொழுது நாட்டில் இருக்கும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய ஒரேஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்கும் வகையிலும் யாழ் இணையம் உட்பட சில இணையத்தளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வருவதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு இனம் உறுதியான அரசியல் தலைமையை கொண்டிருக்க வேண்டும். இப்போது தளத்தில் விடுதலைப்புலிகள் இல்லை. அங்கு இப்போது தமிழ் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தரக்கூடிய ஒரே அரசியல் தலைமை தமிழ் தேசியக்கூட்டமைப்புத்தான். அவர்களையும் துரோகிகள் என்று கூறி சிதைத்து விட்டால் அந்த மக்களுடைய அரசியல் தலைமையாக யார் செயற்பட போகிறார்கள்.

டக்ளசையும் கருணாவையும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக கொண்டுவருவதற்காகவா தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்க முற்படுகிறார்கள் என்ற கேள்வியே என்னிடம் எழுகிறது.

இன்று வடக்கு கிழக்கில் இருக்கும் மக்களின் எண்ண ஓட்டங்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் மேற்குலக நாடுகளில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரித்து வருவதையே அவதானிக்க முடியகிறது. இது ஆரோக்கியமானதல்ல.

வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் நிலைமைகளை யதார்த்தங்களை கருத்தில் கொண்டு மேற்குலக நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் செயற்படுவதே தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவக்கூடியதாக இருக்கும்.

தயவு செய்து தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்கின்ற வகையில் கருத்துக்களை உருவாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இரா.துரைரத்தினம்

ஊடகவியலாளர்

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு அரசியல் தலைமையான தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்கின்ற வகையில் கருத்துக்களை உருவாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இளைஞன்

தங்கள் கருத்துக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்பதற்காக மீண்டும் எழுதுகின்றேன்

என் ஆதங்கமும் இதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இரா.துரைரத்தினம் , இளைஞன்...

நான் சொல்லவந்ததும் இதைதான், சிலவேளைகளில் நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை பிழையாக சொல்லுவதாக யாரும் கருதத்தேவையில்லை என்பதற்காகவே இதை எழுதுகிறேன்... இன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு மிகச்சரியானதே..:) சொல்லிய முறை கரடுமுரடான பாதையை நினைவு படுத்தியிருக்கலாம் ஆனால் எங்களுக்குள்ள தெரிவு கூட்டமைப்பின் பின்செல்வதே....

ஒரு திருத்தம் மறைந்த யாழ் மேயரின் பெயர் சரோஜினி யோகேஸ்வரன்...தவறுக்கு வருந்துகிறேன்... அது தொடர்பான செய்தி.. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=1509

இன்னுமொன்று... இரா.துரைரத்தினம் ஊடகவியலாளருக்கு....

எனக்கு என்னவோ 1997 - 2002 சரியாய் இருக்குமோ தெரியவில்லை...மேலுள்ள செய்தி இணைத்தற்கான காரணமும் அதுவே...அது நடந்தது 1998 இல் அந்தநேரத்தில் / அதற்கு முன்னரே புலிகளும் இப்படி ஒரு கூட்டமைப்பு உருவாக உதவினார்கள் என்பது எனக்கு சரியோ என எனக்கு தெரியவில்லை...... ஏனெனில் இப்பவெல்லாம் ஊகித்து கதை சொல்லுவது பெருகிப் போனதால் கேட்கவேண்டியுள்ளது.

மற்றபடி..எல்லாம் சொல்லுகிற நீங்கள்..ஏன் இதையும் சொல்லுகிறீர்கள்

"" டக்ளசையும் கருணாவையும் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளாக கொண்டுவருவதற்காகவா தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைக்க முற்படுகிறார்கள் என்ற கேள்வியே என்னிடம் எழுகிறது."""

இது எங்களின் அடிப்படை ஒருமையில்லாத தன்மை, சித்தார்த்தன் சேரலாம்...மற்றைய எல்லாரும் சேரலாம் என்றால் ஏன் டக்ளசும் கருணாவும் சேரமுடியாது? சேரமுடியாட்டி ஏன் பொறுப்பான எதிர்கட்சியாக இருக்க முடியாது? அவர்களும் தமிழர்களே...அதற்கு மேல் அவர்களுடன் நாங்கள் சண்டைக்கு/ விரோதத்திற்கு போனால் அழிவு /விளைவு அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்குமே..இந்த பன்முக தன்மை வரும்வரை நாங்களும் எங்களின் துரோகிகளைப்பற்றிய (உருவக) கதைகளும் இருந்துகொண்டே இருக்கும்...

மற்றும்படி உங்களுடைய பெரும்பாலான எல்லா கருத்துகளும் எனக்கும் ஏற்புடையதே...நன்றி....

  • தொடங்கியவர்

சிங்களவன் தனது சோற்றை திண்றுவிட்டு தனது இனத்துக்காக தமிழனை கொல்பவனும், தமிழன் தமிழனது சோற்றை திண்டுவிட்டு தமிழனை கொல்பவனும் எப்படி ஒன்றாக முடியும்?

தமிழன் வேறு சோறும் சிங்களவன் வேறு சோறும் சாப்பிடுகிறார்களா...??? என்ன சொல்ல வாறிர்கள்...??? இலங்கையில் உற்பத்தியாகும் அரிசி சிங்களவனுக்கு எண்டும் தமிழனுக்கும் எண்டும் உற்பத்தியாகிறது இல்லை...

முதலிலை துரோகி எண்றால் என்ன வரைவிலக்கணம் எண்டதை சொல்லுங்கோ... பிறகு யார் துரோகி எண்டு பாக்கலாம்...

எதிரி இருக்கும் இடம் தெரிகறது, ஆனால் துரோகி இருக்கும் இடம் தெரிவதில்லை, அவன் எமக்குள்ளும் இருகிறான், எமது சோற்றை திண்டுவிட்டு எமக்கு எதிராகவே இயங்குகிறான், இன்று அவன் அமைச்சு பதவியில் இருகிறான் ஆரம்பத்தில் அவனுக்கு சோறு போட்டது யார்?

அவனுக்கு ஆரம்பம் முதல்.. EPDP யின் ஆரம்பம் என்பது பிரேமதாசாகாலத்தில் அப்போதுதான் டக்கிளஸ் எண்றால் யார் எண்று தமிழர்களுக்கு தெரிய வந்தது... அப்போதில் இருந்து ஒருமித்த இலங்கை என்பதுதான் டக்கிளசின் வாதம்...

டக்கிளஸ் எப்போதும் தமிழ் மக்களுக்கு தனிநாடு வாங்கி தருவேன் எண்று கூட்டணியை போலவோ, கூட்டமைப்பினர் போலவோ காதிலை பூ சுற்றியது கிடையாது... அவன் எப்போது ஒரு கருத்தில் இருப்பவன்... அவன் தனி நாட்டுக்காக பாடுபடும் யாரையும் ஆதரிக்க வில்லை பலவிதமான இன்னல்களை கொடுக்கிறான்... கொலைகள் வரை செய்கிறான்... இதையேதான் சரத் பொன்சேகாவும் செய்கிறான்...

டக்கிளசை போலவே யாழ் தீவகமே சரத் பொன்சேகாவின் முதலாவது களமும்...

அந்த மக்களிடமே கொள்ளை அடித்து கற்பழித்து, கொலைசெய்பவன் எப்படி உங்களுக்கு நல்லவன் ஆனவன்.

இதைதானே கருணாவும் செய்தவன், மத்தையாவும் செய்தவன், இவர்களைவிட அவன் எப்படி உங்களுக்கு மேலானவனாக விளங்குகிறான்.

கூட்டமைப்பு ஒரு போதும் அமிதலிங்கத்தின் பாதையில் நடக்க முன்வராது, அமிர்தலிங்கம் தமிழர்களது வாக்கைதான் மோசம் செய்தான், கூட்டமைப்பு ஒருலட்சம் மக்களினதும் முப்பதாயிரம் போராளிகனது உயிர்களை மோசம் செய்தே அந்த வழிக்கு செல்ல முடியும் இது மிகவும் ஆபத்தான பாதை என்பது அனைவருக்கும் தெரியும்.

மாத்தையா, கொள்ளை கற்பளிப்பா...?? தலை சுத்துது...

பொண்களை வல்லுறவுக்கு டக்கிளசின் குழுக்கள் ஈடுபட்டது உண்மை... அதேபோல கடந்த ஐந்து வருடங்களில் சரத் பொன்சேகாவின் படைகளும் அவனது ஆதரவுடனே தமிழர் பெண்கள் வல்லுறவு நடை பெற்றது...! ஆக சரத் பொன்சேகாவை இப்ப மன்னிக்க முடியும்.. எண்டால் டக்க்கிளசை மன்னிப்பதில் என்ன பிரச்சினை...??

கருணாவும் மாத்தையாவுக்கும் டக்கிளசுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிண்றது... தமிழ் மக்களுக்கு ஒருவிதமான நம்பிக்கையை கொடுத்து ஏமாற்றுவதை செய்தமையால் கருணாவும் மாத்தையாவும் துரோகிகள் ஆக இருக்க முடியும்... ஆனால் டக்கிளஸ் எப்போது என்ன நம்பிக்கையை கொடுத்தான்...???

பகிடிவிடாதீங்கோ தயா

மத்தியில் கூட்டாட்சி மானிலத்தில் சுயாஆட்சி என்றதும்

இணக்க அரசியல்(அடிமை அரசியல்) என்பதும் எந்த கொள்கையின் உறுதி பாட்டில்?

இதைத்தானே இண்று கூட்டமைப்பு செய்ய விளைந்து இருக்கிறது... இல்லை எண்று மறுக்க போகிறீர்களா...?? இல்லை கூட்டமைப்பு செய்வது இராச தந்திரம் எண்டு சொல்வீர்களா...?? அப்படியானால் டக்கிளஸ் செய்ததுக்கும் பேர் இராச தந்திரமாம் எண்டு தான் அவனது ஆதரவாளர்கள் சொல்லுகினம்...

இதில் இருந்து டக்கிளஸ் எப்போதும் வழுவியது இல்லை... ஒருவேளை இப்படியான ஒண்றில் சரத் பொன்சேகா வழுக்கி மூண்று மாதம் முதல்

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.