Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகத்தார் வீடு

Featured Replies

சாத்திரி : முகத்தான் உன்ரை தொழில் விசயம் கேக்கப்பிடாதுதான் இருந்தாலும் இந்த பெம்பிளை போய் பாக்கிறது எல்லாம் இந்தக்காலத்துக்கு சரியோ?

..

சாத்திரி : இல்லையடா கண்காட்சி மாதிரி வீட்டிலை போய் பெண்ணு பாக்கிறது எனக்கெண்டா சரியாப் படேலை நாலு பகுதி இப்பிடி வந்து பாத்திட்டு வேண்டாம் எண்டு போனால் அந்தப் பிள்ளைக்குத்தானே ஊருக்கை அவமானம்

..

சாத்திரி : ... பெம்பிளைப் பிள்ளைக்கு ஏற்படுகிற மனத்தாக்கத்தை

முகத்தான் : சாத்திரி இது சரிதான் அனேகமா படத்தைக்காட்டி ஒரளவுக்கு ஒத்து வந்தா பிறகுதான் வீட்டை கூட்டிட்டுப் போறது இனி வீட்டுக்குப் போணா வீடு வாசல்களை பாத்தமாதிரியும் கிடக்கும்தானே

சின்னப்பு : பின்னை சீதனம் வேண்டுற சனங்கள் அதுகளைப் பாக்கிறதிலைதான் குறியா இருப்பினம் கண்டியோ?

....

முகத்தான் : அது உண்மைதான் இதுக்கு பெடியளைப் பெத்த சனம் யோசிச்சு திருந்தினால் தான் இதை நிப்பாட்ட ஏலும் நாங்கள் தொழிக்காண்டி கண்டுக்காமல் இருந்திடுவம்

சாத்திரி : அந்தக் காலத்திலை பெம்பிளையள் வெளிக்கிட்டுத் திரியிறேலை அதாலை இப்பிடியொரு சமாச்சாரத்தை உருவாக்ககிச்சினம் இப்பதானே வேலை எண்டு பெண்கள் வெளியிலை வந்திட்டாங்கள் ஆனபடியா இது தேவையில்லாத ஒண்டு;

.........

சாத்திரி : இல்லை சின்னப்பு என்ரை வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு பெம்பிளை 5 6 பகுதி வந்து பாத்திட்டுப் போய் ஒரு முடீவும் சொல்லேலை பிள்ளையை பாக்கப் பாவமாக் கிடக்கு அதுதான் ஞாபகம் வர கதையைத் தொடக்கினனான்

...

முகத்தார் நன்றாக எழுதுகிறீர்கள், வாழைப்பழத்தில ஊசி ஏற்றுவது போல் என்று சொல்வார்கள் அதைப்போல் நகைச்சுவையுடன் சமூகத்தில் ஏற்படவேண்டிய மாற்றங்களை உங்களின் தொடர்களில் எழுதி வருகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

சமூகம் தானா அறிந்து திருந்தினாலே ஒழிய இதைத்திருத்தமுடியாது.

  • Replies 428
  • Views 38.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் இது அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற சம்பவம்...பையன் வீட்டார் பொண்ணு பாக்க ஒரு குழுவாக போய் இருக்கினம்..போய் எல்லாம் அங்க இருந்து கொண்டுவந்து வைச்சத எல்லாம் நல்லா வழிச்சு துடைச்சு சாப்பிட்டிட்டு பொண்ண பிடிக்கல என்டு நேரவே சாப்பிட்டதுகு;கு அப்புறம் சொல்லிட்டு போய்ட்டினமாம்....அவாகள் போய் நாள்ள கடிதம் வந்திச்சாம் அவர்கள் சாப்பிட்டதுக்கு எல்லாம் பில் போட்டு. பொண்ண பிடிக்கல என்டா முதல்ல சொல்லி இருக்க வேண்டியது தானே அதென்ன சாப்பிட்டா பிறகு சொல்றது என்டிட்டு அவர்கள் அப்பிடி செய்வது கடைசியாக இருக்க வேண்டும் என்னடதுக்காக பில் அணுப்பினார்களாம்...

பொண்ண பிடிக்கலான்ன நேரசொல்லி அந்த பொண்ண hurt பன்னாம ஊருக்கு போய் கடிதம் போடுகின்றோம் என்று சொல்லிவிட்டு போடமால் இருந்து இருந்தால் தங்களுக்கு புரிந்து இருக்குமே என்று பொண்ணு வீ;ட்டு காரங்களோட வாதம்!. இன்றும் அந்திய கிராம புறங்களில் இப்படியான சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றது என்பது யாரலும் மறுக்க முடியாத நிதர்சனம். முகத்தார் அங்கிள் நல்ல message வாழத்துக்கள்... :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

:roll: :roll: :roll: மன்னிக்கவும் அதிகமாக பதிவாகி விட்டது மட்டுறுத்தினர் அண்ணா அக்கா 1 மட்டும் வட்டிட்டு மி;ச்சத்த தூக்கிங்க.. sorry agin

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார்,,, மீண்டும் போட்டுத்தாக்கிட்டீங்க,,, அதைவிட முகத்தார்,, இடக்கிடை சின்னப்புவுக்கு தண்ணியை குடுத்து ஏமாத்திட்டு உண்மையான தண்ணியை (நெற்போலியனை) நான் சுட்டுடுவன்,,,

ஓய் சுண்டல் என்ன லொள்ளா? எமோசன் ஆகிறதுக்கு ஒரு அளவு வேனாம்? :evil: :evil:

தண்ணியடிச்சது அவங்க. வெறிச்சது சுண்டலுக்கோ

பார்த்தீங்களா முகத்தார் நீங்கள் மூவரும் உங்கு போட இங்கே சுண்டலுக்கு ஏறுது. பொதுவாய் போட்டிட்டு பார்த்தால் ஒன்று இரண்டாய்த் தெரியுமென்பார்கள். ஆனால் இங்கே சுண்டலுக்கு ஆறு ஒன்றாய்த் தெரியுது. :roll: :roll: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

1 தான் அனுப்பினான் 6 வந்திடிச்சு.. :cry:

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தார்,,, மீண்டும் போட்டுத்தாக்கிட்டீங்க,,, அதைவிட முகத்தார்,, இடக்கிடை சின்னப்புவுக்கு தண்ணியை குடுத்து ஏமாத்திட்டு உண்மையான தண்ணியை (நெற்போலியனை) நான் சுட்டுடுவன்,,,

ஓய் சுண்டல் என்ன லொள்ளா? எமோசன் ஆகிறதுக்கு ஒரு அளவு வேனாம்? :evil: :evil:

:lol::lol::lol: :oops:

முகத்தார் உங்கள் வீடு 15 சுப்பர். ஆனா ஒரு டவுட்டு.. இப்பை யார் இந்தியா போல பொண்ணு பாக்கிற நாடகம் நடத்தினம். பையன் பாக்கிறான் நடக்குது ஊர் உலகத்தில...! வெளிநாடு மாப்பிள்ளை..! :P :lol: :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாயிருக்குது தாத்தா

பாராட்டுக்கள் :lol::lol:

தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் நல்லாய் எழுதியிருக்கிறியள்.. ஆனா ஒன்று தான் புரியல சின்னாச்சியையும் பொன்னம்மாக்காவையும் கிண்டல் பண்ணிறதிலையே குறியாய் நிக்கிறியள். (இதுக்கா நான் ஒரு தொடர் எழுதவேண்டிவரப்போது.) கவனம் சொல்லீட்டன். :evil: :wink: :P

சின்னப்பு: மச்சான் உலகம் சுத்துறது எண்டு கண்டு பிடிச்சவர் தண்ணி அடிச்சுட்டு கண்டுபிடிச்சவர் போல?

சாத்திரி: ஏன் அப்படி சொல்லுற?

சின்னப்பு: பார் இப்ப உலகம் எப்படி பாஸ்டா சுலருது எண்டு

சாத்திரி: (மனசுக்க) கிளாஸ் கழுவின தண்ணியை குடிச்சுட்டு

இது ரொம்ப ஒவர்

முகத்தார் நல்லாய் எழுதியிருக்கிறியள்.. ஆனா ஒன்று தான் புரியல சின்னாச்சியையும் பொன்னம்மாக்காவையும் கிண்டல் பண்ணிறதிலையே குறியாய் நிக்கிறியள். (இதுக்கா நான் ஒரு தொடர் எழுதவேண்டிவரப்போது.) கவனம் சொல்லீட்டன். :evil: :wink: :P

சபாஸ் சரியான போட்டி... பொறுத்தது போதும்.. பொன்னம்மாக்கா சின்னாச்சி சார்பில் தாத்தாக்களிட கூத்துகளை..எழுதுங்கோ தமிழினி..! :wink: :lol:

முகத்தார் நல்லாய் எழுதியிருக்கிறியள்.. ஆனா ஒன்று தான் புரியல சின்னாச்சியையும் பொன்னம்மாக்காவையும் கிண்டல் பண்ணிறதிலையே குறியாய் நிக்கிறியள். (இதுக்கா நான் ஒரு தொடர் எழுதவேண்டிவரப்போது.) கவனம் சொல்லீட்டன். :evil: :wink: :P

அதுதானே தமிழினி அக்கா விடகூடாது ஒரு போடு போடனும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஅகா ஆகா முட்டி மோத வைக்கிறதுக்கென்றே.. சொல்றியளா இருவரும்.. முகம்ஸ் முடிவைக்காணல பாப்பம். :wink: :P

  • தொடங்கியவர்

ஆஅகா ஆகா முட்டி மோத வைக்கிறதுக்கென்றே.. சொல்றியளா இருவரும்.. முகம்ஸ் முடிவைக்காணல பாப்பம். :wink: :P

வாங்கோ பிள்ளை உங்களை வரவேற்கிறதிலை பெருமையா இருக்கு.notworthy.gif.notworthy.gif.......தொடங்குங்கோ பாப்பம்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

முகத்தார் வீடு 16

(முகத்தார் வெளியில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருந்தார் ஏதோ சத்தம் கேட்டு வெளியிலை வருகிறா பொண்ணம்மக்கா)

பொண்ணம்மா : ஜயோ. . . ஏனப்பா பெடியனைப் போட்டு இப்பிடி அடிக்கிறீயள் போசன்ரை மனிசி இப்ப சண்டைக்கு வரப்போறாள்

முகத்தார் : பின்னை என்னடி இவன்ரை கேள்வியைக் கேட்டா அடிக்காம என்ன செய்யிறது?

பொண்ணம்மா : அப்படி என்ன பெரிய கேள்வி கேட்டுப் போட்டான்?

முகத்தார் : காந்திஜெயந்தி அக்டோபர் 2ம் திகதி வரும் எண்டு சொல்லிக் குடுக்கிறன் அதுக்கு இவன் கேக்கிறான் எனக்கு காந்தியைத் தெரியும் அது ஆர் ஜெயந்தி எண்டு . .

பொண்ணம்மா : சரி உங்களுக்கும் தெரியாட்டி புத்தகங்களிலை தேடி சொல்லிக் குடுக்கிறதை விட்டுட்டு பெடியனை போட்டு அடிக்கிறீயள்

முகத்தார் : அம்மா . . தாயே . .எங்கையோ போக வெளிக்கிட்டுட்டீர் போல கிடக்கு முதலிலை அந்த அலுவலைப் பாரும்

பொண்ணம்மா : பொங்கலுக்கு சாமான் வாங்க எண்டு கடைக்கு வெளிக்கிட்டனான் வாறன் போட்டு. . . .

(பொண்ணம்மா போய் கொஞ்ச நேரத்திலை சாத்திரியார் வந்து சேருகிறார்)

சாத்திரி : என்ன முகத்தான் பொங்கலும் நெருங்குது வீட்டிலை அமளியைக் காணேலை. . .

முகத்தார் : அட. .சாத்திரியே. . வா. . .அமளி இப்பதான் சா. . . மனுசி இப்பதான் பொங்கல் சாமான்கள் வாங்கவெண்டு கடைக்குப் போயிருக்கிறாள்

சாத்திரி : அப்ப இந்தமுறை தைப் பொங்கல் மாட்டுப்பொங்கல் எல்லாம் வலு விசேஷம் எண்டு சொல்லு. . .

முகத்தார் : நீ . . வேறை வீட்டிலை மாடே இல்லை பிறகு என்ன மாட்டுப் பொங்கல்

சாத்திரி : உந்த வெளிநாட்டிலை எங்கடை சனங்கள் மாடை வைச்சுக் கொண்டே பொங்கல் செய்யினம் புூட்டின வீட்டுக்கை அடுப்பிலை பொங்கலை செய்து போட்டு மனுசிக்கு. . . சா. . .குடும்பத்தோடை எல்லோ சாப்பிடுகினம்

முகத்தார் : வாய்க்கு ருசியா சாப்பிட வேணுமெண்டால் எந்த நாளும் பொங்கலை கொண்டாடலாம் கண்டியோ. . . .

(வெளியிலை போண பொண்ணம்மாக்கா படலையை கோபத்திலை அடிச்சு சாத்திக் கொண்டு வாறது தெரியுது)

சாத்திரி : முகத்தான் பொண்ணம்மா வாற வரத்து பிழையாக்கிடக்கு நான் வரட்டே

முகத்தான் : உன்ரை கெட்டகுணமே இதுதான் பொறுத்த நேரத்திலை விட்டுட்டு மாறியிடுவாய் கொஞ்ச நேரம் இரு எனக்கும் தெம்பாக் கிடக்கும்.

சாத்திரி : அதுக்கு இப்ப என்னத்துக்கு நீ கண்ணாடி எடுத்துப் போடுறாய்?

முகத்தார் : எனக்கு டாக்குத்தர் சொல்லியிருக்கிறார் தலைவலி வந்தா கண்ணாடியைப் போடச் சொல்லி.

சாத்திரி : என்ன முகத்தான் உள்ளுக்கை போண பொண்ணம்மாவின்ரை சத்தத்தை காணேலை ஒருக்கா குடிக்க தண்ணி கேக்கிற மாதிரி கூப்பிட்டு பாக்கட்டே?

(சாத்திரியார் குடிக்க தண்ணி கேக்க கொண்டு வந்து குடுக்கிறா பொண்ணம்மா ஆனால் முகம் அழுது சிவந்திருப்பது தெரியுது)

சாத்திரி : என்ன பிள்ளை முகமெல்லாம் வீங்கிக் கிடக்கு முகத்தானோடை எதாவது பிரச்சனையோ?

பொண்ணம்மா : அதுதான் எந்த நாளும் நடக்குதே பிறகென்ன புதிசா. . இது வேறை.

முகத்தார் : என்னப்பா போகேக்கை நல்லாத்தானே போனனீர் திடீரெண்டு வழியிலை எதாவது நடந்திச்சோ. .

பொண்ணம்மா : ஆ. . .எல்லாம் உங்கடை அருமைப்பிள்ளையும் மருமகளும் தான்

முகத்தார் : அவங்கள் எங்கையப்பா வெளியிலை எல்லோ இருக்குதுகள் இப்ப என்னத்துக்கு இதுக்கிலை அதுகளை இழுக்கிறீர்

பொண்ணம்மா : ம். .ம். . எனக்கு வேண்டுதல் பாருங்கோ. . அதுதான் இழுக்கிறன் கடைக்குப் போகேக்கை தம்பியனோடை ஒருக்கா கதைப்பம் எண்டுட்டு சீலன்ரை டெலிபோன் புூத்திலை போய் ஒரு கோல் எடுத்தன். . .

முகத்தார் : எங்கை லண்டனுக்கோ?

பொண்ணம்மா : வேறை எங்கை. . உங்கடை மருமகள்காரி சொல்லுறாள் அவர் நல்ல நித்திரையாக்கிடக்கிறார் டிஸ்ரெப் பண்ணாமல் பிறகு எடுங்கோ எண்டு. . .

முகத்தார் : அதிலை என்ன பிழையம்மா. . தம்பியன் வேலையாலை வந்து கழச்சுப் போய் படுத்திருப்பன் ஏன் குழப்புவான் எண்டு பிள்ளை நினைச்சிருக்கும்

பொண்ணம்மா : நல்லா பிள்ளை நினைப்பாள் என்ரை குரலைக் கேட்டவுடனையே அவளுக்கு மூளை வேலை செய்திருக்கும் எப்பிடி கட் பண்ணுறதெண்டு தம்பியன் முழிச்சிருந்தாலும் நித்திரை எண்டுதான் சொல்லுவாள் இது எனக்கு தெரியும்

சாத்திரி : பிள்ளை உங்கடை குடும்ப விசயம் இருந்தாலும் கேக்கிறன் ஏன் இப்பிடி வீட்டு;க்கு வந்த மருமகளோடை பிரச்சனை பண்ணுறீயள் இது படங்களிலை வாற மாதிரிஎல்லோ கிடக்கு. . .

பொண்ணம்மா : சாத்திரியண்ணை இஞ்சை இருக்கும் மட்டும் மாமி. . மாமி . . எண்டு உருகினவள்தான் எப்ப லண்டனுக்கு போனாளோ அதுக்குப்பிறகு துப்பரவா மாறியிட்டாள் இப்ப என்னையும் என்ரை பிள்ளையையும் பிரிக்கப் பாக்கிறாள்

முகத்தார் : இஞ்சரப்பா சும்மா அந்தப்பிள்ளேலை பழியைப் போடாதையும் ஏதோ நான் பாத்த குறிப்புகள் சரியில்லை எண்டு நீhதானே தேடிப் பிடிச்சனீர் பிறகு எதுக்கு துள்ளிக் குதிக்கிறீர்

பொண்ணம்மா : ஆருக்குத் தெரியும் இப்பிடி நசுவல் கள்ளியா இருப்பாள் எண்டு .இப்ப என்ன நான் அவையோடை போய் இருக்கப் போற தெண்டு கேட்டனானே. . .?

முகத்தார் : அட.. .இந்த ஜடியா வேறை இருக்குதோ. . .இஞ்சை பாரும் நீர் கலியாணம் கட்டி வந்து என்ரை அம்மாவோடை எப்பிடி இருந்தனீர் எண்டதை நினைவிலை வைச்சுக் கதையும். .

பொண்ணம்மா : ஜயோ. . அது வேறையப்பா உங்கடையம்மா ஆக்களுக்கை என்ன கதைக்கிறதெண்டு தெரியாம கதைச்சு என்ரை மானத்தை வாங்கிறபடியாலைதான் பேசுறனான் உங்களையும் அம்மாவையும் எப்பவாவது பிரிச்சிருப்பனா. . .?

முகத்தார் : சரியப்பா நீர் நல்ல மனுசிதான் 25வருஷம் பெடியனை வளர்த்து ஆளாக்கிப் போட்டீர் இனி அந்தப் பொறுப்புகளை அந்த பிள்ளேட்டை விட்டுட்டு நிம்மதியா இருமன்

பொண்ணம்மா : இது நல்ல கதையாக்கிடக்கு 25 வருஷமும் அவனை வளக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பன் இந்த இயக்கங்களுக்கையும் ஆமிக்கையும் பாதுகாத்து வெளிநாட்டுக்கு அனுப்பி விட இடையிலை வந்த அவ தட்டிக் கொண்டு போகப் பாக்கிறா. . . .விடுவனா. . .

சாத்திரி : பிள்ளை நீ மட்டுமில்லை பெடியனை பெத்த கன தாய்மார் வீட்டுக்கு வாற மருமகளை ஒரு வித்தியாசமாத்தான் பாக்கினம் ஏன்தான் தங்கடை வீட்டு மகள் மாதிரி பாக்கினமில்லையோ தெரியலை. .

முகத்தார் : இதுகளுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்குதில்லை தாய் தேப்பனை விட்டுட்டு புருஷன்தான் எல்லாம் எண்டு வாற பிள்ளை பெடியனிலை கொஞ்சம் உரிமை எடுத்துக்கிறதிலை பிழையில்லைதானே. . .

சாத்திரி : இனி எங்களுக்கும் வயசு போட்டுது வாழுற பிள்ளைகள் எண்டு இந்த தாய்மார் ஒதுங்கினாத்தான் என்ன எண்டு கேக்கிறன். .

பொண்ணம்மா : இஞ்சை எனக்கு அவளோடை போட்டியுமில்லை பொறாமையுமில்லை என்ரை பிள்ளையை முந்தினமாதிரி கதைக்ககூட விடுகிறாள் இல்லையே அதுதான் கவலையாக்கிடக்கு. . .

சாத்திரி : பிள்ளை இஞ்சத்தைய மாதிரியில்லை வெளிநாட்டு வாழ்க்கை 2 3 வேலைக்கு போறது வீட்டுக்கு வந்தால் அலுப்பு இனி கலியாணம் முடிஞ்சபடியாலை மனுசியை வேறை வெளியிலை எங்கையன் கூட்டிட்டு போக வேணும் எங்கை பெடியனுக்கு கோல் எடுக்க நேரம். . . .

முகத்தார் : அம்மா. . ராசாத்தி டெலிபோனிலை எப்ப அவன் கதைச்சாலும் உன்ரை ஒப்பாரியைத்தான் சொல்லுறனீர்; இதுக்கை காசு அனுப்பாட்டிக்கு கிழிஞ்சுது ஏன் கோல் எடுத்து திட்டு வேண்டுவான் எண்டுட்டு தம்பியன் எடுக்காம இருக்கலாம்

பொண்ணம்மா : என்னவோ உங்களுக்கு மருமகளை குறைச்சு கதைச்சா பிடிக்காதே ஏதோ தலையிலை தூக்கி வைச்சு ஆடுங்கோ. . எனக்கு வேலையிருக்கு போறன். .

சாத்திரி : முகத்தான் பொண்ணம்மா நல்லாத்தான் கவலைப்படுது நீயாவது மகனோடை கதைக்கேக்கை சொல்லலாம்தானே மாதத்திலை 2தரமெண்டாலும் கோல் எடுத்து கொம்மாவோடை கதைக்கச் சொல்லி வீணா அந்த பிள்ளைக்கெல்லோ கெட்டபேர் வருகுது. . . .

முகத்தார் : இவளிலை பிழையில்லையடா. . .பின்னேரமானா பக்கத்திகூட்டங்கள் கொஞ்சம் கதைக்கவெண்டு வாறது வந்து இவளை உசுப்பேத்தி விட்டுட்டுப் போறது அதை நிப்பாட்டினா சரி . . வரட்டும் இண்டைக்கு நாயை அவிட்டு விடுறன் அப்ப தெரியும். . .

அங்கிள் அருமை அருமை அருமை... மாமிமாருக்கு மருமகளை பிடிக்கமால் போவதற்கு யாரோ சாபம் கொடுத்திருக்கிறார்கள் போலை. மகன் காசு அனுப்ப வில்லையென்றால் உடனே மருமகள் தானாம் காரணம். ஏன் அந்த மகனுக்கு எங்கை அறிவு போனது தனது அம்மாவிற்கு காசு அனுப்ப வேணும் என்று.? :evil: :evil: .......

முகத்தார் ஒரு டவுட்டு...ஏன் முகத்தார் மாமா - மருமகன் சண்டை சச்சரவு என்று வாறேல்ல..! :lol:

அதுசரி.. எப்பவும் பொண்ணம்மாக்காவுக்கு சப்போட் பண்ணாத நீங்கள் அதென்ன திடீர் என்று மருமகளுக்கு சப்போட் பண்ணுறீங்கள்..விளங்குது விளங்குது..எதிரிக்கு எதிரி நண்பன் கணக்குத்தானே...ம்ம்.. பழிவாங்குறீங்கள்..பாவம் பொண்ணம்மாக்கா.. கூட இருந்து குழிபறிக்கிற உங்களோட.....ம்ம் :wink: :lol:

அங்க மகன் படுறபாடு தெரியாது போல..! நீங்க பொண்ணம்மாக்கா ஓல்ட் வேல்ட் ஓட காலம் தள்ளவே அல்லாடுறியள்...அவர் பொண்ணம்மாக்கா நியு வேல்டோட என்ன பாடுபடுறாரோ...! :wink: :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பரப்பு..................................................

ஆகா... சூப்பர் முகத்தார்... :P :P :P

முகத்தார்

அவித்து விடுறதுதான் விடூறீங்கள் டண்ணீன்ர புலநாயை அவித்து விடுங்கோ.... அதால எங்கட சின்னப்புதான் கஸ்ரப்படுறார்... போய் துலையட்டும்

( சின்னப்பூவைச் சொலேல்ல)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ பிள்ளை உங்களை வரவேற்கிறதிலை பெருமையா இருக்கு.notworthy.gif.notworthy.gif.......தொடங்குங்கோ பாப்பம்

முகம்ஸ் நமக்கு உதுகள் சரிவராது.. சும்மா பகிடி யார் கண்டா பொன்ஸை நீங்க படுத்திற பாடு தாங்காட்டா வரும். நன்றி முகம்ஸ். இந்த தொடரும் நன்றாய் இருக்கு பிள்ளையளுக்கும் சுயபுத்தியிருக்கவேணும் என்று சிந்திச்சா மருமகள் மாரில குறை சொலலமாட்டினம் . தொடருங்கோ.. :P

பொண்ணம்மா

நசுவல் கள்ளியா

அப்படியென்றா என்ன? :roll: :roll:

நசுவுவது என்பதை இந்தியப் படங்களில் பம்முவது என்பார்கள். என்னடா பம்முறாய் என்று கவுண்டமணி கேட்பாரே. .

  • தொடங்கியவர்

நசுவல் கள்ளி வசி கேட்டிருக்கிறார் பாவம் பெண்களைப் பற்றி இன்னும் அவருக்கு நிறைய அறியவேண்டிக்கிடக்கு... சுருக்கமாக விளக்கம் சொல்லுவதெண்டால் வெளிப்பார்வைக்கு சாதுவான பெண்ணாக காட்சியளிப்பார்கள் ஆனால் உள்ளுக்குள் அவ்வளவும் கிரிமினல் மயிக்ட். . .அனேகமாக இதில் மாட்டுப்பட்டுவது கணவன்மார்தான்......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.