Jump to content

கே.எஸ்.ராஜா - Ceylon Radio announcer - Anjali Nigalchi


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1980 களில் கே.எஸ். ராஜவின் குரல் இலங்கை வானொலியில் மிகப் பிரபலமானது.

வானொலி அறிவிப்பில் பல புதுமைகளை கையாண்டு, பல ரசிகர்களின் பார்வையை வானொலிப் பெட்டியின் அருகே வர வைத்தவர்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE

Link to comment
Share on other sites

ராஜீவ் காந்தியின் கொலைக்கு மட்டும் அடுத்ததாக தென் தமிழ் நாட்டின் சாதாரண மக்களை பாத்திதது கே.எஸ்.ராஜாவின் படுகொலைதான். அடிக்கடி இப்பவும் தென் தமிழகத்தில் கே.எஸ்.ராஜாவை விசாரிக்கிறார்கள். அவரது படுகொலை பற்றி ஆழ்ந்த விசனம் தெரிவிக்கிறார்கள். சென்றமாதம் பண்டுருட்டி சென்றபோது ஒரு தீவிர தமிழ் உணர்வாழரான பிரபல தமிழ் இயக்குனரின் அண்ணர் (அவரும் தமிழ் உணர்வாளர்) தங்களோடு கே.எஸ்.ராஜா இருந்த காலத்தையும் அவரது கொலையில் அதிர்ந்ததையும் நினைவுபடுத்தினார். இதுவரை எங்களை ஆதரிக்கும் தமிழ் உணர்வாளர்கள் பல தவறுகளைச் சகித்துக்கொண்டே எங்களை ஆதரிக்கிறார்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. எமது கடந்த காலத்தில் படிந்துள்ள இரத்தக் கறைகளில் பேச்சுக் கலைஞன் கே.எஸ்.ராஜாவின் இரத்தமும் இருக்கிறது. ”எம்மோடு இல்லாவிட்டால் எதிரியோடு” என்கிற போக்கை இனியேனும் இனம் கண்டு களையாவிடின் நாம் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

”எம்மோடு இல்லாவிட்டால் எதிரியோடு” என்கிற போக்கை .........

பொயற் புதுக்கதை விடாதேயுங்கோ. 90களின் ஆரம்ப காலங்களில் இலங்கை வானொலியில் ஈபிடிபியினரால் மாலை 5:00 மணிக்கு ஒலிபரப்பாகிற "மக்கள் குரல்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் இந்த கே. சிறீஸ்கந்தராஜா. அதிலும் "அதர்மனின் சபையில்" என்ற நிகழ்ச்சியில் தலைவர் பிரபாகரனை "பங்கர் திருமகனே" என விளித்தவர். கொள்கை அடிப்படையில் அல்ல சாதிய அடிப்படையில் மட்டுமே டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்தவர் (இங்கு எந்த சாதியையும் உயர்வு தாழ்வு என்று சொல்வது எனது நேக்கமல்ல).

ஆனால் அதற்காக ஒரு சிறந்த கலைஞனை சுட்டுக்கொன்றது ஏற்புடையதல்ல. இங்கு பொயற் ராஜா புலிகளுடன் இல்லமல் இருந்ததால் தான் எதிரியாக கணிக்கப்பட்டார் என்று கூறுவது சுத்த பம்மாத்து. ராஜா புலிகளை நேரடியாக எதிர்த்தவர்.

கே. எஸ். ராஜா அவர்கள் பி. எச். அப்துல் கமீட் என்பவரை விட சிறந்த அறிவிப்பாளர். கமீட் எப்போதும் ராஜாவுக்கு அடுத்த நிலையிலேயே இருந்தார். தவறான கூட்டத்துடன் சேர்ந்ததால் ஒரு சிறந்த கலைஞனை யாழ்ப்பாணம் இழந்தது. இன்னும் ராஜா அவர்கள் தொகுத்தளித்த "ஆம்-இல்லை-ஒரு சொல்லில் பதிலளிக்க கூடாது" நிகழ்ச்சி ஒன்றின் ஒலிப்பதிவு எனது மாமாவிடம் உள்ளது. என்ன வேகம், தெளிவு, உச்சரிப்பு? அவருக்கு நிகர் அவர்தான். ராஜா என்ற கலைஞன் கொல்லப்பட்டது தவறு என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் அந்தக் காலங்களில் அவர் எடுத்த முடிவு அவருடைய இறுதி முடிவுக்கு காரணமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அதற்காக ஒரு சிறந்த கலைஞனை சுட்டுக்கொன்றது ஏற்புடையதல்ல. இங்கு பொயற் ராஜா புலிகளுடன் இல்லமல் இருந்ததால் தான் எதிரியாக கணிக்கப்பட்டார் என்று கூறுவது சுத்த பம்மாத்து. ராஜா புலிகளை நேரடியாக எதிர்த்தவர்.

கே.எஸ்.ராஜா சுட்டுக்கொல்லப்படவில்லை. கோல்பேஸ் கடற்கரையில் அவரது செத்த உடல் கண்டெடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனையின் போது நஞ்சு அல்லது அதிகம் மது அருந்தியதால் வந்த மரணம் என்று கூறப்பட்டு இருந்தது. இறுதிக் காலங்களில் ஈபிடிபி யினருடன் பலதடவை முரண்பட்டு, அவர்களுடனான வர்த்தக உறவுகளை துண்டித்து இருந்தார். இவரின் மரணத்தில் ஈபிடிபி கைகள் தான் அதிகம் உள்ளன என்று ஊடக வட்டாரங்களில் அன்று கதை அடிபட்டது (நஞ்சூட்டுக் கொல்லப்பட்டார் என்று)

பொயட் டும் ஏதோ புலிகள் தான் செய்தனர் என்ற சந்தேகம் வருவதைப் போன்றுதான் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பிழம்பு உங்கள் தகவலுக்கு. ஆம் நீங்கள் சொல்வது சரி, சுட்டுக் கொல்லப்பட்டவர் வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை என நினைக்கிறேன். புலிகளின் பெயரைப் பயன்படுத்தி ஈபிடிபி செய்த கொலையாக இது இருக்கலாம். ஆனால் ராஜாவின் முடிவுக்கு அவரே காரணம். தவறுதலாக புலிகளின் பெயரை பயன்படுத்தவேண்டி ஏற்பட்டுவிட்டது. காரணம் பொயற் மறைமுகமாக புலிகளைச் சாடி இருந்தார். தவறுக்கு மன்னிப்பு கோருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது கடந்த காலத்தில் படிந்துள்ள இரத்தக் கறைகளில் பேச்சுக் கலைஞன் கே.எஸ்.ராஜாவின் இரத்தமும் இருக்கிறது. ”எம்மோடு இல்லாவிட்டால் எதிரியோடு” என்கிற போக்கை இனியேனும் இனம் கண்டு களையாவிடின் நாம் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை.

தெரியாத விடயங்களை தெரிந்ததாக நீங்கள் பரப்பிவடும் விசனங்களை கைவிட்டாலே ஒற்றுமை என்பது சாத்தியபடலாம்.

காகமிருக்க விழுந்த பனங்காயையும் புலிகளின் தலையில் கட்டிவிட துடிக்கும் உங்களை போன்றவர்கள் இருப்பதால்தான் பிரச்சார விடயங்களில் பின்தள்ளி போகிறது எமது இனம். கூடி நின்று கொன்றவர்போல் எழுதும் நீங்கள் யாருக்கு தத்துவம் வார்க்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை? மற்றையபடி எல்லாம் புரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பெயரைக்கேட்டதும்

திரைவிருந்து என்னும் கம்பீரக்குரல்தான் காதில் ஒலிக்கிறது

Link to comment
Share on other sites

அன்புக்குரிய காவாலி, கோபிக்கவேண்டாம். நான் பம்மாத்துவிட எந்த அவசியமும் இல்லை. உயிர்மீதான அச்சமோ வளங்கள் பதவிகள் மீதான ஆசையோ இல்லை. எம்மோடு இல்லாவிட்டால் எதிரியோடு” என்கிற போக்கை இனியேனும் இனம் கண்டு களையாவிடின் நாம் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை என எதிர்காலம்கருதி பொதுக்கருத்தாகவே சொல்லியிருக்கிறேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன். யாழ்ப்பாணத்தில் ஒரு இயக்க்த்தினரால் வேறொரு இயக்க முகாமில் இருந்த திருகோணமலை சிறுவர்கள் பெற்றோல் ஊத்திக் கொழுத்தப் பட்டபோது மேற்படி இயக்க்த்தவரை உயிருக்கு அஞ்சாமல் தேடிச் சென்று நிறுத்துங்கள் குரல் கொடுத்தவன் நான். சம்பவங்கள் ஆரம்பித்த அன்று அதி காலை நான் வன்னேரியில் இருந்து யாழ் வந்துகொண்டிருந்தேன் உயிருக்கஞ்சாமல் வரும் வழியில் வன்னேரி யிலும் சாவகச்சேரியிலும் பின்னர் கோப்பாயிலும் பல்கலைக் களகத்திலும் மேற்படி சம்பவங்கலுக்கு என் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தேன். சாவகச்சேரி கோட்டடியிலும் நாவற்குளியிலும் கோபத்தோடு என்னை தடுத்தவர்களுக்கு யாரோ இயக்கத் தலைவர் ஒருவர் வாக்கி ரோக்கியில் என் பயணத்தைத் தொடர அனுமதிக்கும்படி கட்டளையிட்டார்கள். உயிருக்கு அஞ்சாமல் போராளிகளின் தவறுகளை விமர்சிக்கவோ அதே சமயம் உயிரைப் பணயம் வைத்து போராளிகளுக்கு உதவவோ நான் என்றும் தயங்கியதில்லை. இத்தகைய வாழ்க்கை முறையில் 20 தடவைகளுக்குமேல் இராணுவம் உட்பட பல தரப்புகளின் கொலை முயற்ச்சிகளில் தப்பியிருக்கிறேன். சாட்ச்சிகள் இப்பவும் வாழ்கிறார்கள். இன்றும் அதே மன நிலைதான் எனக்கு. இன்றும் உயிர்ப்பயமோ அதிகார ஆசையோ இல்லை.

மதிப்புக்குரிய காவாலி தவறென்றால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.பம்மாத்து என்று சொல்லாதீர்கள். ஏனேனில் நான் பம்மாத்து விடுவதில்லை. கருத்தைக் கருத்துமூலம் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ளவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே எஸ் ராஜா சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து வஞ்சத்தால் வீழ்ந்தவர், அதை எப்படி புலியுடன் கோத்து விடுகிறார்கள் பார்த்தீகளா? அத்துடன் ராஜீவை கொண்டு வந்து இடையில் செருகி, அத்துடன் டெலோவால் ஆரம்பிக்கபட்ட உட்படுகொலையின் நீட்சியையும் மாத்தி மாத்தி கோத்து, தமிழர்களை ஒற்றுமை படுத்திறார்களாம், உருப்பட்ட மாதிரிதான். அஞ்சலி செய்ய வெளிக்கிட்டால் அதை மட்டும் செய்யுங்கள்,

கோத்து விடுற வேலை வேண்டாம், அதே சமகாலதில் வாழ்தவர்கள்தான் இங்கு பெரும்பாலும் இருக்கும் கள உறவுகள். :huh:

Link to comment
Share on other sites

கே. எஸ். ராஜாவின் இழப்பு தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு.

அவர், உமாமகேஸ்வரன் போன்றவர்கள் இறந்த சூழ்நிலை மிக மர்மமானது.

கே. எஸ். ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் இந்திய தூதரகம், தாஜ் நட்சதிரவிடுதி, இராணுவத்தளங்கள் சூழ்ந்த உயர் பாதுகாப்பு பகுதி. இதிலிருந்து மரணத்தின் பின்னணியை ஊகிக்க முடியும்.

இலங்கையில் இடம்பெற்ற மொத்த படுகொலைகளில் சிங்கள, இந்திய பயங்கரவாதிகள் மற்றும் வழி தவறி அந்தப் பயங்கரவாதிகளுக்கு வால் பிடித்து திரிந்த தமிழ், முஸ்லிம் குழுக்களால் செய்யப்பட்டவை 99 % க்கு மேற்பட்டவை. இதுதான் உண்மை.

யார் என்ன சொன்னாலும், தமக்கு அவசியம் இல்லை எனக் கருதி மௌனமாக இருப்பதில் அலாதி பிரியமுடையவர்களாக புலிகள் இருந்தது, மேற்கூறிய பயங்கரவாதிகள் தாம் செய்த சகல கொலைகளையும் புலிகள் மேல் போட வசதியாக போய்விட்டது.

அண்மையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்களை கொன்று குவித்தது புலிகள் தான் என சிங்கள பயங்கரவாதிகளின் வாய்கூசாது விட்ட அறிக்கைகளும், அவர்கள் சார்பு ஊடகங்கள் அவற்றுக்கு கொடுத்த முக்கியத்துவங்களும் இதற்கு நல்ல உதாரணங்கள் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்புக்குரிய காவாலி தவறென்றால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன்.பம்மாத்து என்று சொல்லாதீர்கள். ஏனேனில் நான் பம்மாத்து விடுவதில்லை. கருத்தைக் கருத்துமூலம் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ளவேணும்.

திரு பொயற் அவர்களிடம் "பம்மாத்து" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கின்றேன். மேலும் திரு பொயற் அவர்களே "எம்மோடு இல்லாவிட்டால் எதிரியோடு" என்ற வார்த்தைப் பிரயோகம் இந்தத் திரியில் தேவையற்றது. இது மறைமுகமாக யாரையோ சாடுவதாக இருக்கிறது. உண்மை நிலையை ஆராயாமல் எதற்கும் ஒரு குறிப்பிட்ட தரப்பை மட்டும் இலக்கு வைத்து தாக்குவது நல்லதல்ல. அந்தத் தரப்பின் பெயரைப் பயன்படுத்தி தமது எதிரிகளையும் தம்முடன் முரண்பட்டவர்களையும் துணை ஆயுதக் குழுக்களும் அரசபயங்கரவாதிகளும் பழிவாங்கினர். பல அனுபவங்களை கொண்டதாகக் கூறும் நீங்கள் இந்தக் குறிப்பிட்ட விடயத்தை அறிந்திருக்கவில்லையா?. திரு ராஜா அவர்கள் எதிரியுடனேயே இருந்தார். "அதர்ம மகாராஜா வாழ்க! பங்கர்த் திருமகனே வாழ்க! வாழ்க உன் கொட்டம் வளர்க உன் ஆட்டம்" என்று ராஜா சொன்னதையும் நையான்டியாக நேர்முக வர்னணை செய்ததையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா?

Link to comment
Share on other sites

யார் எதிரி என்றுதான் பலருக்கு தெரியாத விடயம்.நாங்கள் மற்றவனை எவ்வளவும் தூற்றலாம் மற்றவன் திருப்பி ஒன்று எங்களப் பற்றி சொன்னால் பொத்துக்கொண்டு வந்த்துவிடும்.

போரட்டத்தில் நடந்த சம்பவங்கள் 90% வீதமானவை இந்த உலகத்திற்கே தெரியும்.எங்கள் நாலு பேருக்குத்தான் தின்னவேலியில் உட்சண்டையாகவும்,முள்ளிவாய்க்காலில் ரோ மாறுவேடத்தில் மக்களைசுட்டதாகவும் தெரியுது.

இப்படியே எங்களை நாம் ஏமாத்தலாம் உலகத்தை ஏமாத்த முடியாது. இடைத்தான் பொயட் சொன்னார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் எதிரி என்றுதான் பலருக்கு தெரியாத விடயம்.நாங்கள் மற்றவனை எவ்வளவும் தூற்றலாம் மற்றவன் திருப்பி ஒன்று எங்களப் பற்றி சொன்னால் பொத்துக்கொண்டு வந்த்துவிடும்.

போரட்டத்தில் நடந்த சம்பவங்கள் 90% வீதமானவை இந்த உலகத்திற்கே தெரியும்.எங்கள் நாலு பேருக்குத்தான் தின்னவேலியில் உட்சண்டையாகவும்,முள்ளிவாய்க்காலில் ரோ மாறுவேடத்தில் மக்களைசுட்டதாகவும் தெரியுது.

இப்படியே எங்களை நாம் ஏமாத்தலாம் உலகத்தை ஏமாத்த முடியாது. இடைத்தான் பொயட் சொன்னார்

உலக நாடுகளுக்கு தெரியும் போர் நடக்கையில் யார் யார் என்ன என்ன செய்தார்கள் என ஆனால் அவர்களுக்கு எங்களுக்கு உதவ விருப்பம் இல்லை ஏனென்றால் எங்களினால் அவர்களுக்கு லாபம் இல்லை...அடுத்தது உங்களைப் போல படித்த மாற்றுக் கருத்துக் கொண்டோர் எதற்கெடுத்தாலும் உங்கள் சுய லாபத்திற்காக அரசுடன் சேர்ந்து நிண்டு கொண்டு புலியை குற்றம் சொல்வதனால் தான் இந்த நிலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் / அர்ஜுன் போன்றோருக்கு சுகிர்தராஜா என்ற ஒரு பத்திரிகை நிருபரின் பெயரையாவது தெரியுமா? அந்த நிருபர் திரிகோணமலையில் நடந்த பல இராணுவ/ஒட்டுக்குழு தொடர்பான விடயங்களை வெளிக்கொண்டு வந்தமையால் நடுத்தெருவில் நாயைச் சுட்டுக் கொல்வது போன்று கொல்லப்பட்டார்... ஆகக்குறைந்தது பொயட்டுக்கு அவரின் முற்காலத்து நண்பரான டி.சிவராமின் பெயராவது இப்போது நினைவில் இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

மதிப்புக்குரிய காவாலிக்கு நன்றி, நான் எழுதிய “நம்மோடு இல்லாவிட்டால் எதிரியோடு” என்ற வசனம் பிழைபட அர்தம் கொள்ளப்படக்கூடும் என்ற உங்கள் கவலையை ஏற்று வாபஸ் பெறுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: தன்னை ஒரு பெரிய அறிவாளி, இலக்கியவாதி என்று கூறிக்கொள்பவர் இன்றுவரை இங்கு எழுதிவருபவை அறிவுரைகள் என்கிற பெயரில் புலியெதிர்ப்புப் புராணம் தான். அதற்கு நல்ல உதாரணம் இந்த முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் கைங்கரியம். கே. எச். ராஜா எப்படி மரணமடைந்தார் என்பது இவரைத் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று இவர் நினைத்ததுதான் இவர் விட்ட பிழை. கே.எஸ்.ஆர் கொல்லப்பட்ட போது நானும் கொழும்பில்த்தான் இருந்தேன். அவரும் அவரது மக்கள் குரலும் சிங்களப் பேரினவாதத்துக்குச் செய்துவந்த அளப்பரிய அடிமைச் சேவகத்தை அன்றாடம் மாலையில் கேட்கும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. போதை மருந்தோ அல்லது விஷ மாத்திரையோ அருந்திவிட்டு காலி முகத்திடலில் அநாதையாகச் செத்துப்போன இந்த டக்கிளஸ் கும்பலின் பிரச்சாரப் பீரங்கிக்குத் தமிழகத்திலும் அபிமானிகள், அதுவும் இன உணர்வுள்ள அபிமாணிகல் இருந்தது வியப்புத்தான். சிலவேளை இந்த பிரச்சாரப் பீரங்கியின் மக்களின் குரல் தமிழ்நாட்டை எட்டியிருக்காதோ என்னவோ??!! அது எட்டியிருந்தால் இவர் பற்றி இனிமையான நினைவுகளை அவர்கள் மீட்ட வாய்ப்பில்லை.

என்றாலும், புலிகள் மேல் இன்னொரு பழியைப்போட எடுத்துக்கொண்ட சிலரது முயற்சி உண்மையை அறிந்தவர்களால் முறியடிக்கப்பட்டு விட்டது. கொஞ்சம் பழைய காலத்துச் சம்பவம்(புலிகள் உருவாகும் முன்னர்)ஏதாச்சும் இருந்தால் முயன்று பார்க்கலாமே??!!!!!

Link to comment
Share on other sites

ரகுநந்தன் அவர்களுக்க [தன்னை ஒரு பெரிய அறிவாளி, இலக்கியவாதி என்று கூறிக்கொள்பவர்] இது என்ன புதிய கற்பனை ரகு. நான் எப்ப அப்படிச் சொன்னேன்? [ன்றுவரை இங்கு எழுதிவருபவை அறிவுரைகள் என்கிற பெயரில் புலியெதிர்ப்புப் புராணம் தான்] புலி எதிர்ப்புவேறு விமர்சனங்கள்வேறு. நான் உயிரைப் பணயம் வைத்து போராட்டத்தை ஆதரித்திருக்கிறேன் ரகு. நீண்டகால அடிப்படையில் என்னுடைய விமர்சனங்கள் புலிஎதிர்ப்பில்லாமல் பயன்படுகிறவையாக இருந்ததால்தான் வன்னியிலும் மட்டக்களப்பிலும் சில முக்கியமான தலைவர்களுடன் முரண்பட்டபோதும் இயக்கத்தலைமை என்சார்பாக தலையிட்டது. வடகிழக்கு மாகாணத்தில் மக்கள்தொகை முகவும் வீழ்ச்சி அடைந்து எங்கள் அடையாளங்களை இழந்துபோவோமோ என்கிற ஆபத்து உருவாகி உள்ள இந்த நாட்க்களில் உரிய விமர்சனங்களினூடாக நாம் விட்ட தவறுகளை திருத்தாவிட்டால் எமக்கு எதிர்காலம் இல்லை.களத்தில் வாழும் மக்கள் எல்லாவற்றுக்கும் சாட்ச்சியாக உள்ளனர். அவர்களுக்கு எங்களைவிட அதிகம் தெரியும். அவர்கள் கண்ட கேட்ட அனுபவித துயரங்களை விமர்சனங்களை அதிற்ச்சிகளை செவிமடுக்காமல் எங்கள் செயல்களுக்கு எந்த அர்த்தமும் பயனும் இல்லை. அவர்கள் விமர்சனமும் சுய விமர்சனமும் கடுமையாக உள்ளது. நாங்கள் எங்கள் யூட்டோப்பியாக்களில் இருந்து இறங்கிவந்து அவர்கலை அனுசரிக்காவிட்டால் அவர்களுக்கு எதிரிகளிடம் புகல் தேடுவதைத்ததவிர அவர்களுக்கு வேறு வழி இருக்காது. தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

"அடுத்தது உங்களைப் போல படித்த மாற்றுக் கருத்துக் கொண்டோர் எதற்கெடுத்தாலும் உங்கள் சுய லாபத்திற்காக அரசுடன் சேர்ந்து நிண்டு கொண்டு புலியை குற்றம் சொல்வதனால் தான் இந்த நிலை." ரதி.

இதிலென்ன சுயலாபம் நான் கண்டேன்,அரசுடன் சேருவதானால் இயக்கத்தை விட்டு ஓடிவரும் தேவையே வந்திருக்காது. எனக்கு சரியானது எதுவெனப்படுகின்றதோ அதைத்தான் தொடர்ந்து எழுதுகின்றேன். கொலை என்பதை என்னால் ஏற்க முடியாததொன்று.டக்கிளசுடன் சேர்ந்து ரேடியோவில் கும்மியடித்தற்கு மரணதண்டனை தான் தீர்வென்ற மனப்பான்மையில் இனியும் நாங்கள் இருப்போமாயின் முள்ளிவாய்க்காலில் தான் மீண்டும் எமது முடிவு எழுதப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு மிகப் பெரிய எதிரி புலியை விட்டு வெளியேறியவர்கள் தான்[சில உண்மையானவர்கள் என்னை மன்னித்து விடுங்கள்]புலியும் சில பிழை விட்டு இருக்குது நான் இல்லை என சொல்லவில்லை அதற்காக எல்லாத்தையும் புலியின் மீது போடாதீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.