Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவளை கால் பொரியல்

Featured Replies

99e1ddf8937e9d61186b6f5e5e76233a.jpg

அலுவலகத்தில் வேலை நேரம் தவிர நண்பர்களுடன் அரட்டை அடிப்பதையும் மதிய உணவு நேரத்தில அவர்களுடன் வெளிய போய் சாப்பிடுறதையும் பொழுதுபோக்காக கோண்டவன்தான் இந்த மனிதன். என்னோட கூட்டாலிகளாக கொரியன், சைனீஸ், தாய்வானிஸ், வியற்நாமிஸ், பிலிப்பினிஸ், மொங்கோலியன், ரஸியன், ஜேமனியன், ஈரானியன், துருக்கியன், ஜப்பானியன், அமெரிக்கன், மெக்ஸிகன் எல்லாரும் இருக்காங்க. இப்படி எல்லா நண்பர்களோடயும் சுத்தித்திரிந்து எல்லா நாட்டு சாப்பாடுகளையும் ருஷி பாத்தனான். இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா சாப்பிடுவம்னு யோசித்தபடியே வியற்நாம் நண்பனை கேட்டன் எனக்கு இன்னைக்கு முற்றுமுழுதாக வியற்நாம் முறையில் செய்த உணவு கிடைக்குமிடம் ஒன்றுக்கு கூட்டி செல்லும்படி. சிரித்தபடியே நண்பன் சொன்ணான் நல்ல இடத்துக்கு கொண்டுபோறன் ஆனால் முகத்தை தொங்கபோடாமல் சாப்பிடனும்னு சலஞ் பண்ணினான். நானும் அதுக்கென்ன என பதிலுக்கு சலஞ் பண்ணினன். இப்ப புரிஞ்சிருக்கும் உங்களுக்கு ஏன் இந்த மனிதன் தவளை கால் பொரியல் பற்றி சொல்லுறான் என்டு.

உணவகத்துக்க போணதும் நண்பன் அவங்கட மொழியில கதைத்து உணவு ஓடர்பண்ணிப்புட்டான் முதல்ல வந்தது அப்பிரைசர் சுத்ததமிழ்ல சொல்லனும்னா பசியூட்டினு சொல்லுவன். முதல்முதல் பாத்தப்ப யோசிச்சன் பொரிச்ச கலமாரியொனு (கணவாய் பொரியல்). வாயில வைக்கேக்க யோசிச்சன் விறாத்துக் கோழி பொரியலா இருக்கலாம்னு. விறாத்துக் கோழின நினைப்பில சாப்பிட்ட படியே நண்பனிட்ட பெருமையா சொன்னன் உதெல்லாம் நம்ம ஊரில சாதாரனமா சூப்புக்க முழுசாப் போட்டு சாப்பிடுவம்னு நண்பனுக்கோ ஆச்சரியம் அடுத்த முறை நம்ம நாட்டுக்கடைக்கு போகேக்க தவளை சூப்பு கட்டாயம் ஓடர் பண்ணுன்னு சொல்லேக்க தான் எனக்கு தெரிஞ்சுது நான் சாப்பிடுறது தவளை பொரியல்னு. உந்த மனிதன் லேசுப்பட்ட ஆள்ளில்லை கரார சொன்னதை பின்வாங்கிறதுக்கு, நான் பிடித்த முயலுக்கு மூனு கால்னு அடிச்சு சொல்லுற ரைப்பு. உண்மையிலேயே உள்ளுக்க அசடு வழிஞ்சாலும் காட்டிக்கொள்ளாமல் அடுத்த முறை தவளை சூப்பு வாங்கித்தருவன்னு சொண்ண படியே தவளைக்காலை கடிச்சு சாப்பிட்டன். அப்பிரைசரே தவளைனா சாப்பாடு எப்படியிருந்திருக்கும்னு நீங்க பயப்படுறது வாஸ்தவம்தான். அதையெல்லாம் எழுதினா உந்த தலைப்பும் தவலைக்காலும் உங்க எல்லாருக்கும் சின்ன விசயமா படும் அதனால அதெல்லாத்தையும் அப்புறமா இன்னொரு திரியில தருவன்.

சும்மா சொல்லக்கூடாது நான் விதம் விதமா கோழிக்கால்( chicken leg) கோழிச்செட்டை(chicken wing) எல்லாம் சாப்பிட்டிருக்கன் ஆனா அதெல்லாம் இந்த தவளைக்கால் பொரியலுக்கு ஈடாகாது. உங்க யாருக்காவது தவளைக்கால் பொரியல் சாப்பிடக்கூடிய வசதி இருந்தா ஒரு தடவை வாயில வச்சுப்பாருங்க அப்புறம் உங்க அனுபவங்களை இங்க சொல்லுங்க. நிச்சயமா யாழ் களத்தில யாராவது ஒருவராவது தவளைக்கால் பொரியல் சாப்பிட்டிருப்பினம்னு நம்புறன், சாப்பிடவங்க இருந்தா இதை வழிமொழிஞ்சு நாம பெற்ற இன்பத்தை மற்றவங்களும் அனுபவிக்க வழிசமையுங்கோ.

கடைல சாப்பிடமாட்டன் வீட்லதான் சாப்புடுவன்னு அடம்பிடிக்கிறவங்களுக்காக நண்பனிட்ட இருந்து உந்த செய்முறையை பெற்று இங்க தாறன். உதில இருக்கிற தவளைகாலுக்காக வீட்டுத்தவளைகளை கொல்லாதையுங்கோ. நீங்க இருக்கிற நாடுகளில சைனீஸ் அல்லது வியற்நாம் கடைகள் இருந்தா கேட்டுப்பாருங்கோ பா(f)மில இதுக்கெண்டு பிரத்தியேகமாக வளத்த தவளைகால் வைச்சிருப்பாங்க. கிடைச்சால் கட்டாயம் எல்லாரும் செய்து பாருங்கோ. செய்து நன்னா வந்தா சாப்பிட்டுபாருங்.கோ சாப்பிட்டுப் பிடிச்சிருந்த உதை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பனுக்கு நன்றி சொல்லுங்கோ.

தேவையான பொருட்கள்

1 உடைச்ச கோழிமுட்டை

அரை கரண்டி உப்புத்தூள்

1 கிலோ சுத்தமான தவளைக்கால்

அரைச்சுண்டு சோழமா

அரைக்கால் கரண்டி மிளகுதூள்

கால் போத்தல் தூய மரக்கறி எண்ணை (பொரிப்பதற்கு)

செய்முறை

முட்டை உப்புத்தூள் சோழமா மிளகுதூள் எல்லாத்தையும் போட்டு நன்றாக கலக்கி வைத்திருக்கவும் (batter). எண்ணையை பொரியல் பாத்திரத்தில் இட்டு கொதிக்க வையுங்க எண்ணை நன்றாக கொதித்ததும் தவளைக்காலை நீங்கள் கலக்கிய சோழமாவில் தோய்த்து எடுத்து மெதுவாக கொதிக்கும் எண்ணை பாத்திரத்தில் இட்டு கருக முன்னம் வெளியே எடுக்கவும் சாதாரணமாக 25 நிமிடங்களுக்குள் பொரிந்திடும்

நண்பனின் கூற்றுப்படி இந்த அளவு ஜவருக்கு போதுமானது ( Serving size - 5)

Edited by மனிதன்

  • கருத்துக்கள உறவுகள்

தருநெல் வேலிக்கே அலவாவா :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவலை என தெரியாமல் சாப்பிட்டு பாருங்கள் , கோழிப்பொரியல் என்றுதான் சொல்வீர்கள், கோழி என்றால் போட்டு கட்ட வேண்டியதுதானே, தவலை உடம்புக்கு நல்லம் அப்பு......

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ................இதை மனிதன் சாப்பிடுவானா?

ஐயோ................இதை மனிதன் சாப்பிடுவானா?

குப்பையை கிளறி கண்டதைச் சாபிடும் ஊர்க்கோழியையே அடிச்சு குழம்பு வைத்து ஒரு வெட்டு வெட்டுற எங்களுக்கு தவளை எல்லாம் ஜுஜுபி :D (கிடாய் ஆடு செய்ற Naughty பழக்கத்தையும் பார்த்திருப்பீர்கள் என்றும் நம்புறன் :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ என்ன அக்கிரமம் எல்லாம் சமையல் பகுதியில் நடக்கு.. :D:lol:

எனது அக்கா பல்கலைக்கழகத்தில படிச்ச காலத்தில அவவிண்ட ஆய்வுகூட தேவைக்கு நான்தான் தவளை + தேரை பிடிச்சுக் கொடுக்கிறது. வீட்டில வளவுக்கை எங்கையாவது ஈரமான இடத்தில கல்லுகளுக்கு கீழ இருக்கும். ஒரு தவளை பிடிச்சுக் கொடுத்தால் ஒரு ரூவா சொச்சம் காசு தருவா. இது மாதிரி தோட்டத்துக்கு போய் வண்ணத்துப்பூச்சி, இதர பூச்சிகளை பிடிச்சு குடுக்கிறது.

தவளைக்கு குளோரோபோம் போட்டு மயக்கிப்போட்டு அக்கா அதை ஒரு தண்ணீர் நிறைச்ச பாத்திரத்தில போட்டு அடுப்பில வச்சு கொதிக்க வைக்கிறது. தண்ணீர் நன்றாய் கொதிச்சு தவளை செத்தாப்பிறகு, அதை வெளியில எடுத்து, ஆய்வுகூடத்து பரிசோதனை நடக்கும், அதன் உறுப்புக்களை அப்படியே வெளிப்பக்கத்தால வச்சு விரிச்சுப்போட்டு - உடலை திறந்துபோட்டு - பிறகு அதுக்கு நாற்றம் வீசாமல் இருக்கிற மருந்தை அடிச்சுப்போட்டு அப்பிடியே பல்கலைக்கழகத்துக்கு கொண்டு போவா.

நானும் உயிரியல்தான் படிச்சது. ஆனால் தவளை எல்லாம் வெட்டிப்பார்க்க இல்லை. மற்ற ஆக்கள் வெட்டும்போது பக்கத்தில புதினம் பார்த்தது மாத்திரம்தான்.

மேற்கண்ட அனுபவங்களால என்னால தவளையை பொரிச்சோ குளம்பாகவோ சாப்பிட ஏலாது. தவளையை விட தேரை அளவில பெருசாய் இருக்கும். தவளையை விட தேரை பார்க்கிறதுக்கு அகோரம் குறைவாய் இருக்கும்.

தவளையை விட தேரை அளவில பெருசாய் இருக்கும். தவளையை விட தேரை பார்க்கிறதுக்கு அகோரம் குறைவாய் இருக்கும்.

தேரை தானே அளவில் சின்னன்? ஊரில் வீட்டிற்குள்ளெல்லாம் வந்து மூலைக்குள் சின்ன உருவத்துடன் பதுங்கி இருக்கும்.. கிட்டப்போனால் குபீர் என்று பாயும் (சின்னப்புள்ளைகளில் தேரை பாய்ந்தால் கூடாது என்று சாத்திரம் பார்ப்பார்கள்)..

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது என்ன பாம்புப் பொரியலா... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தேரை தானே அளவில் சின்னன்? ஊரில் வீட்டிற்குள்ளெல்லாம் வந்து மூலைக்குள் சின்ன உருவத்துடன் பதுங்கி இருக்கும்.. கிட்டப்போனால் குபீர் என்று பாயும் (சின்னப்புள்ளைகளில் தேரை பாய்ந்தால் கூடாது என்று சாத்திரம் பார்ப்பார்கள்)..

பிள்ளைத்தாச்சி (கற்பினி தாய்மாரின்)வயிற்றில் தேரை பாய்நதால் தான் கூடாதாம் :lol:

இங்கு எனது தொழில் சமயல்.நித்தம் நான் தவளை கால் பொரியல் செய்கிறேன்.(சமைக்கிறேன்)எனக்கு இந்த திரியும் சாதாரனமே.அது தான் எனது இந்த திரிக்கான முதல் பதிலுக்கான காரனம்.

பிள்ளைத்தாச்சி (கற்பினி தாய்மாரின்)வயிற்றில் தேரை பாய்நதால் தான் கூடாதாம் :lol:

இங்கு எனது தொழில் சமயல்.நித்தம் நான் தவளை கால் பொரியல் செய்கிறேன்.(சமைக்கிறேன்)எனக்கு இந்த திரியும் சாதாரனமே.அது தான் எனது இந்த திரிக்கான முதல் பதிலுக்கான காரனம்.

சுவிஸ் வந்தால் உங்கள் வீட்டில் தான் நான் தங்குவன் என்று இப்பவே முடிவெடுத்துட்டன்...

  • கருத்துக்கள உறவுகள்

quote name='நிழலி' date='05 February 2010 - 05:12 PM' timestamp='1265407925' post='565471']

சுவிஸ் வந்தால் உங்கள் வீட்டில் தான் நான் தங்குவன் என்று இப்பவே முடிவெடுத்துட்டன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ................இதை மனிதன் சாப்பிடுவானா?

?!--------வரால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் மனிதனுக்காக படைக்கப்பட்டவை.

  • தொடங்கியவர்

தருநெல் வேலிக்கே அலவாவா :D

நீங்களும் நம்ம இனம் போல :lol:

தவலை என தெரியாமல் சாப்பிட்டு பாருங்கள் , கோழிப்பொரியல் என்றுதான் சொல்வீர்கள், கோழி என்றால் போட்டு கட்ட வேண்டியதுதானே, தவலை உடம்புக்கு நல்லம் அப்பு......

அப்படி சொல்லுங்கோ சித்தன் ... நான் ஊருக்கு போய் ஒரு தவளைப்பண்ணை போட்டு நம்ம ஈழத்தில ஒரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கிற ஜடியாவில இருக்கிறன்

ஐயோ................இதை மனிதன் சாப்பிடுவானா?

சாப்பிட்டனானே..... கறுப்பியும் சாப்பிட்டாப்போச்சு... :lol:

  • தொடங்கியவர்

குப்பையை கிளறி கண்டதைச் சாபிடும் ஊர்க்கோழியையே அடிச்சு குழம்பு வைத்து ஒரு வெட்டு வெட்டுற எங்களுக்கு தவளை எல்லாம் ஜுஜுபி ^_^

அதானே நிழலி அப்படி கேளுங்கோ.....நீங்க நம்ம ஈழத்து தவளைக்கால் சாப்பிடுவோர் சங்கத்தில நாலாவது மெம்பர் :D

கிடாய் ஆடு செய்ற Naughty பழக்கத்தையும் பார்த்திருப்பீர்கள் என்றும் நம்புறன் :lol:

ஜயோ ஜயோ.. உதை வெட்டுறதுக்கு ஒரு மட்டறுத்தினரும் இல்லையா? :lol:

  • தொடங்கியவர்

அய்யோ என்ன அக்கிரமம் எல்லாம் சமையல் பகுதியில் நடக்கு.. :lol::lol:

மனிசன் சமைச்சா சமையல் இல்லை அக்கிரமமோ.. உங்களுக்கு நிணைப்பு தங்களுக்குதான் சமையல் தெரியும் என்டு... என்ர மனிசியின்ட சமையல் அலுத்துதான் மதிய நேரங்களில ஆபீஸ்காரங்க/காரிங்களோட சாப்பிட போறன் :D

  • தொடங்கியவர்

நானும் உயிரியல்தான் படிச்சது. ஆனால் தவளை எல்லாம் வெட்டிப்பார்க்க இல்லை. மற்ற ஆக்கள் வெட்டும்போது பக்கத்தில புதினம் பார்த்தது மாத்திரம்தான்.

மச்சி நான் ஸ்கூல்ல எக்ஸ்ஷிவிசனில LED பல்ப் எரிக்கிறதைபாத்திட்டு தவளையை உயிரோட பலகையில குண்டுப்பின் பண்ணி வெட்டி அம்மாட்ட ஏச்சு வாங்கிகட்டினான்.

  • தொடங்கியவர்

மேற்கண்ட அனுபவங்களால என்னால தவளையை பொரிச்சோ குளம்பாகவோ சாப்பிட ஏலாது. தவளையை விட தேரை அளவில பெருசாய் இருக்கும். தவளையை விட தேரை பார்க்கிறதுக்கு அகோரம் குறைவாய் இருக்கும்.

மச்சி இந்த லிங்குகளை பாத்திங்கலெண்டால் சாப்பிட மனம்வரும்

சிங்கபூர் தவளைப்பண்ணை.. சுற்றுலா பயணிகளை அதிகம் கவருமிடமுமாம் http://www.jurongfrogfarm.com.sg/main.html

அப்படியே இந்த ரிசிப்பிகளையும் பாருங்கோ. http://www.jurongfrogfarm.com.sg/forms/Frog_Recipes.pdf

அடுத்தது என்ன பாம்புப் பொரியலா... :D

படத்தைப்பாத்து சொல்லுங்கோ பாப்பம் :lol:

****Picture is removed by Manithan****

இங்கு எனது தொழில் சமயல்.நித்தம் நான் தவளை கால் பொரியல் செய்கிறேன்.(சமைக்கிறேன்)எனக்கு இந்த திரியும் சாதாரனமே.அது தான் எனது இந்த திரிக்கான முதல் பதிலுக்கான காரனம்.

என்ரை ரிசிப்பியையும் ஒரக்கா..ரை பண்ணுங்கோ..

?!--------வரால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் மனிதனுக்காக படைக்கப்பட்டவை.

மனிதன் யாருக்காக படைக்கப்பட்டான் குருவே?

Edited by மனிதன்

என்ன மனிதன் இந்தப்பகுதியில் இதை எல்லாம் போட்டு சமையல் பக்கம் வர விடாமல் பண்ணுகிறிர்கள்... அம்மாடியோவ் மரக்கறி வகை சாப்பாடு போடலாம் எல்லோ.... இதுகளை பார்த்தால் சாப்பிடவே மனம் வராது.... ^_^:(

  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ வயித்தப் பிரட்டிப் பிரட்டிச் சத்தி வருது. உவாக்! உவாக்!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில் தவளைப் பொரியல் சாப்பிட்டிருக்கிறன் (தெரிஞ்சுதான்)..! :( நல்லாத்தான் இருந்திச்சு..! ^_^

  • கருத்துக்கள உறவுகள்

பலர் தெரியாமல் சாப்ட்டு இருக்கிறார்கள்..........சிக்கன் போல் இருக்குமாம்

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் உள்ள பிரபலமான சீன உணவகங்களிலும் கிடைக்கும்.

China town இல் விலை 10 பவுண்ட்ஸுக்குள்தான்! சிக்கன் விங்ஸுக்கும் தவளைக்காலுக்கும் அதிக வித்தியாசமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் வந்தால் உங்கள் வீட்டில் தான் நான் தங்குவன் என்று இப்பவே முடிவெடுத்துட்டன்...

தாராளமாக ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.