Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடம் பெயர்ந்த நிலையில் கல்வி கற்றுவரும் 2 மாணவர்கள் தற்கொலை!! யாழ் பல்கலைக்கழகம் துக்கத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய், பிப்ரவரி 9, 2010 19:55 | ஞானசீலன், யாழ்ப்பாணம்

இடம் பெயர்ந்த நிலையில் கல்வி கற்றுவரும் 2 மாணவர்கள் தற்கொலை!! யாழ் பல்கலைக்கழகம் துக்கத்தில்

யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த முதலாமாண்டு மாணவர்கள் இருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தையும் கல்வி சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள என பதிவு இணையத்தின் யாழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த உற்ற நண்பர்களான இருவரும் இருபாலையில் உள்ள தமது உறவினர் வீடு ஒன்றுக்கு இன்று காலை சென்ற பின்னர் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளனர்.

இவ் முடிவுக்கு முன்னர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தாம் போர்க் காலத்தில் பலதை இழந்துள்ளோம் தற்போது சாதாரண மக்கள் போல் எங்களால் வாழ முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்கிளில் ஒருவர் போர்க் காலத்தில் சிறீலங்கா படையினர் வீசிய எறிகணையில் தனது அவயவம் ஒன்றை இழந்திருந்தவர் எனத் தெரிவித்துள்ள அவரது பிற சில நண்பர்கள் வருவாய் அற்று அகதி முகாமில்; முடங்கியுள்ள தமது பெற்றோரை எண்ணி இவர்கள் என்றும் கவலைப்பட்ட வண்ணம் இருந்ததாகவும் தாம் எவ்வளவு காலத்துக்கு நிவாரணங்களையும் கொடுப்பனவுகளையும் நம்பி கல்வி கற்க முடியும் என தம்மிடம் ஏக்கம் கலந்த நிலையில் உரையாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் உதவிகள் குவிந்தபோதும் தற்போது அவை சிறிது சிறிதாக குறைந்து வருவதால் தமது கல்வி வெகுவிரைவில் இடைநிறுத்த வேண்டி வரும் என அவர்கள் கவலை வெளியிட்டு வந்ததாகவும் பதிவுடன் பேசிய அவர்களது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகப் பெரும் மனித அவலத்தின் பின்னர் கல்வியை தொடரும் மாணவர்கள் பலர் இவ்வாறான மனநிலையில் இருப்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளதுடன் இன்னும் பல மாணவர்கள் பண ரீதியான இக்கட்டில் இருப்பது பெரும் ஆபத்துக்குரிய விடயமாகியுள்ளதும் இதன் மூலம் வெளிப்படையாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள பல்கலை மாணவர்கள் யாழ் கல்விச் சமூகத்தை காப்பாற்றி அவர்களின் தலையாய சொத்தை காப்பாற்ற இடம் பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு உதவ அனைவரும் முன்வந்து இவ்வாறான அநியாய இழப்புக்களை நிறுத்துங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்........போதிய ஆதரவு..ஆறுதல் ...மன ஆற்றுப் படுத்தல் இருக்கவில்லை

....படிபதற்கும் ஏற்ற மன நிலை வேண்டும்.

உளவியல் ஆலோசனை வழங்கப்படவில்லை.இது அரசின் தவறு. மற்றும்படி தற்கொலை செய்வது முட்டாள்தனம்.அதுவும் படித்தவர்கள்.இப்படி இன்னும் எத்தனை பேரோ யார் கண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தற்கொலை – வடகிழக்கு காகிதத்தில் மட்டும்தான் பிரிப்பு என்கிறார்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இந்த இளம் காதலர்கள்

யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார். முகாமைத்துவபீடத்தைச் சேர்ந்த இந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த திருவிழி மற்றயவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த விக்டர் அருள்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காதலர்களான இவர்களில் விக்டர் அருள்தாஸ் வன்னி இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் இயங்காத நிலையில் வவுனியா தடுப்பு முகாமில் இருந்து கல்வியைத் தொடர்வதற்காக யாழ் பல்கலைக்கழகம் சென்றவர்.

இவருடைய காதலியான திருவிழியும் முதலாம் வருட முகாமைத்துவ பீட மாணவி. இவரும் தடுப்பு முகாமில் இருந்து பல்கலைக்கழகம் சென்றவர். யுத்த அழிவுகளில் எல்லாவற்றையும் இழந்து எஞ்சிய சிறு நம்பிக்கையுடன் கல்வியைத் தொடடரச் சென்ற இவர்கள் இருவரும் தாம் வாழ்வதில் பயன் இல்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு கிணற்றில் ஒரேதாக வீழ்ந்து உயிரை மாய்துள்ளார்கள்.

காரணம் அண்மையில் கிடைக்கப்பெற்ற மருத்துவ அறிக்கையில் விக்கடர் அருள்தாசின் கால்கள் மட்டும் அல்ல இன்னும் சில மாதங்களில் அவரது இடுப்பிற்கு கீழான அனைத்து பகுதிகளும் இயங்கமாட்டாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தாம் எஞ்சிய காலத்தை கழிப்பதில் பயன் எதுவும் இல்லை என கடிதம் எழுதியுள்ள அவர்கள் இருவரும் ஒருமித்த மனதுடன் மரணத்தை தழுவுவதாக கூறியுள்ளனர்.

இந்த இளம் காதலர்களது மரணம் வடக்க்கும் கிழக்கும் காகிதத்தில்தான் பிரிக்கப்பட்டு உள்ளது என்பதனை மீண்டும் ஒருமுறை எடுத்தியம்பியிருக்கிறதா?

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=20598&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவே இவர்கள் நண்பர்களா அல்லது காதலர்களா...பதிவில் நண்பர்கள் எனவும் குளோபல் செய்தியில் காதலர்கள் எனவும் போட்டியிருக்கிறார்கள் எது உண்மை...இனையங்கள் தாங்கள் விரும்பிய படி செய்தியை திரிக்கின்றன்...என்ன இருந்தாலும் அந்த மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பதிவில் நண்பர்கள் எனவும் குளோபல் செய்தியில் காதலர்கள் எனவும் போட்டியிருக்கிறார்கள் எது உண்மை...இனையங்கள் தாங்கள் விரும்பிய படி செய்தியை திரிக்கின்றன்...

பதிவின் செய்திகள் என்றுமே திரிபுபட்டவை என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்கு இந்தச் செய்தியும் சிறந்த உதாரணம். யாழ்ப்பாணத்துச் செய்திகளையே சரியாகத் தரமுடியாதவர்கள் ஏனைய செய்திகளை எப்படி சரியாகத் தருவார்கள்?

குளோபல் செய்தித் தளம் இன்று அவர்களின் மரணம் தொடர்பான வீடியோவையும் விவரத்தையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்ட வகையில் மாணவன் முதலாம் ஆண்டு மருத்துவபீட மாணவன் எனவும் வன்னியில் ஆட்சேர்ப்பு நடக்கும் வேளையில் இருவருக்கும் இளவயதில் மணம் முடித்து வைத்ததாகவும் பின்னர் மோதலின் போது 2 கால்களிலும் காயமேற்பட்டு இயங்க முடியாத நிலையில் மன அழுத்தம் கூடி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாகவும் கேள்விப்பட்ட மனைவியும் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.எனது அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் TYO க்கள் எதற்கு இருக்கின்றன. படங்களை பகிஸ்கரிக்கக் கோருவதற்கு மட்டும் தானா. தாயகம் நோக்கிய ஆதரவுக் கரம் நீட்டத் தயங்கியதன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.

மரணமான பின்.. அவர்கள் காதலர்களா.. நண்பர்களா.. வன்னியில் பாதிக்கப்பட்டு மன உழைச்சலில் மாண்டார்களா என்று ஆராய்வதிலும் இவ்வாறான முடிவுகளை எடுக்க முதல் இளைய சமூகம் இவர்களை நாடிச் சென்று உதவும் நிலை வர வேண்டும்..!

வசதி இருந்தும் வாய்ப்பிருந்தும் காப்பாற்றத் தவறப்பட்ட உயிர்கள். முடிந்ததை இட்டு பரிதாபப்படுவதை விட.. எனி மேலும் இதற்கு இடமளிக்காமல் இருப்பது மேல்..! :huh::lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்......நீங்கள் கூறியது போலதான்.........அந்த பையனுக்கு மருத்துவ பரிசோதனியில் அவரது உடல் நிலை மேலும் இடுப்புக்குகீழ் இயங்க முடியாத் நிலை ஏற்படும் என கூறியதாகவும் அதனால் மனமொடிந்து தற்கொலை செய்ததாகவும் எழுதி இருந்தார்கள்

ஆழ்ந்த இரங்கல்கள், இதய அஞ்சலிகள். உடல் உபாதையினால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்கு காரணம் என்றால் அவரை பேசி பயனில்லை. ஒவ்வொருத்தருக்கும் அப்படியான நிலமை வந்தால்தான் அதன் வலி புரியும். அந்தப்பெண்ணும் தன்ர வாழ்க்கையை அழிச்சுபோட்டா. காதல் என்று சொல்வதா, பிரிவு வேதனயை தாங்கமுடியாமை என்று சொல்வதா... எல்லாம் முடிஞ்சு போச்சிது. ஆழ்ந்த இரங்கல்கள், இதய அஞ்சலிகள்.

வெளிநாடுகளில் TYO க்கள் எதற்கு இருக்கின்றன. படங்களை பகிஸ்கரிக்கக் கோருவதற்கு மட்டும் தானா. தாயகம் நோக்கிய ஆதரவுக் கரம் நீட்டத் தயங்கியதன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.

...

உண்மை!

காதலர்களோ, நண்பர்களோ, உறவினர்களோ... எது எப்படி இருப்பினும், இரண்டு உயிர்கள் போய்விட்டது, இனிமேலாவது இப்படியான மரணங்கள் நடக்காமல் தடுக்கப் படவேண்டும். தமிழர் அமைப்புக்கள் முன்வந்து உதவ வேண்டும்.

வெளிநாடுகளில் TYO க்கள் எதற்கு இருக்கின்றன. படங்களை பகிஸ்கரிக்கக் கோருவதற்கு மட்டும் தானா. தாயகம் நோக்கிய ஆதரவுக் கரம் நீட்டத் தயங்கியதன் விளைவே இந்த அநியாய மரணங்கள்.

குறுந்தகவல்கள் மூலம் திரைப்படங்களை பகிஸ்கரிக்கச் சொல்லி விட்டு இங்கு அவர்கள் தான் முதல் காட்சிக்குசென்றார்கள்.

இனியாவது உணர்வார்களா

Edited by சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.