Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரம்பா என்ட கஸ்பனின்ட பிரண்டின்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சாருங்கோ...இஞ்சாருங்கோ ஒருக்கா இதை வந்து பாருங்கோ என்று மனைவி கூப்பிட்டதால் ஏதோ அவசரவிடயமாகத்தான் கூப்பிடுகிறாள் என்று நினைத்தபடியே,என்னப்பா என்ன நடந்தது என்று அறைக்குள் ஒடினேன்.இஞ்சபாருங்கோ இவள் ரம்பா கலியாணம் கட்ட போறாளாம் பார்த்து கொண்டிருந்த இணையத்தளத்தை எனக்கு காட்டினாள்.

அட சீ இதுக்கு போய் இப்படி கத்துறீர்,நானும் ஏதொ அவசரமாக்கும் என்று ஒடிவந்தேன்,புறு புறுத்தபடியே இணையத்தை பார்த்தேன்.அவளும் பெண்தானே கலியாணம் கட்டுவதில் என்ன தப்பு .அவளுக்கும் உம்மைப்போல ஒரு ஆசை வந்திருக்கும் என்றபடியே அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன்.

பின் தொடர்ந்து வந்தவள் உங்களுக்கு இப்படியான நல்ல இணையங்களுக்கு போய் நல்ல செய்திகளை படிக்கத் தெரியாதே ? சும்மா வெடிகுண்டு ,துப்பாக்கி,மகிந்தா,சரத் என்ற ஒரு சதத்திற்கு உதவாத செய்திகளை படிக்கத்தான் தெரியும் என்றவள்,அந்த பெடியன் எங்கட யாழ்ப்பாணத்து பெடியனாம் உண்மையோ சந்தேகத்துடன் கேட்டாள்.

என்னுடைய சினேகிதனின் தம்பியைதான் கட்டப்போறாள் ,அந்த பெடியனை சின்னவயசில கண்டிருக்கிறேன் என்று கொஞ்சம் பில்டப் பண்ணி கதையை சொண்ணதுதான் தாமதம் அவளின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஏன் இதை எனக்கு முதலே சொல்லவில்லை என்ற செல்ல கோபத்துடன்,தொலை பேசியை எடுத்தவள் மறு முனையில் கலோ சொல்லமுதலே "இஞ்ச ரம்பா கலியாணம் கட்டப்போறது என்ட கஸ்பனின்ட பிரண்டின் தம்பியையாம் "என்றவள் தொலை பேசியை துண்டித்தாள்.

தொலைபேசி வீட்டுக்கு வந்தாலோ அல்லது வெளியே தொலை பேசி எடுத்தாலோ "ஜயோ ரம்பா கட்டப்போறது என்ட கஸ்பனின்ட பிரண்டின் தம்பியாம்" என்று சொல்ல மறக்கவில்லை

மறுநாள் தொலை பேசியை நான் எடுத்தேன் ,அண்ணே நீங்கள் சரியான ஆள் ரம்பா உங்களின்ட பிரண்டின் தம்பியையாம் கட்டுறாள், நீங்கள் எனக்கு சொல்லவே இல்லையே? உங்களுக்கு இப்பவும் அந்த பிரண்ட்டுடன் தொடர்பிருக்குதோ?என்றாள் உறவுக்கார பெண் ஒருத்தி.போன கிழமையும் டெலிபோன் பண்னினவன் கலியாணத்திற்கு வரச்சொல்லி கூப்பிட்டான் என்று றீல் விட்டேன்,படசாலை விட்டபின்பு அவனை நான் சந்திக்கவுமில்லை டெலிபொனில் கதைக்கவுமில்லை இதைஎல்லாம் இவர்களுக்கு சொல்லி நான் ஏன் என்னுடைய பிரபல்யத்தை குறைப்பான் என்ற நல்லெண்ணம் தான் காரணம் .

அன்று மாலை கோயிலில் பிரசாதம் வாங்கி அருகில் இருக்கும் மதிலில் சாய்ந்தபடியே சாப்பிட்டுகொண்டுஇருந்தேன்.என்னடாப்பா ரம்பாவின் பெடியன் உன்களின்ட ஊர் பெடியணாம் உன்னோடைபடிச்சவனின்ட தம்பியாம் என்று எனது முதுகை தட்டியபடியே வந்தார் என்கன்ட கந்தர்,எனக்கு எரிச்சலாக வந்தது இருந்தும் காட்டிக்கொள்ளவில்லை.

கடந்த மே மாதம் என்னுடன் படித்தவன் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றான். அவனைப்பற்றி எவரும் என்னிடம் விசாரிக்கவில்லை.ஆனால் இந்த ரம்பா யாரையோ கட்டப்போகிறாளாம் அதைப்பற்றி நேரிலும்,தொலை பேசியிலும் விசாரிக்கின்றனர் ,என்னடா உலகம் இது.உயிரை ,உடலை இனத்திற்காக அர்ப்பணித்தவர்களை விட ,உடலைகாட்டி நடித்த நடிகை எம்மவர் மனதில் இடம் பிடித்துள்ளார் என்று எண்ணியபடியே வீடு சென்றேன்.

நாட்கள் செல்ல மற்றவர்கள் என்னிடம் ரம்பாவைப்பற்றி கேட்கமுதலே நானேசொல்ல ஆரம்பித்தேன்,என்னுடைய பிரண்டின் தம்பியை தான் ரம்பா கட்டப்போறாள் என்றும் இதனால் எனக்கு எதோ புகழ் வருவது போல எண்ணினேன் .

இடக்கிட ரம்பா கனவிலயும் வாரா......நித்திரையில் புலம்பினேன்..,மனைவி என்னப்பா ரம்பா என்று புலம்பினீங்கள் ...அது ஒன்றுமில்லை என்னுடைய பிரண்டின் தம்பியை கனவில கண்டனான் அதால ரம்பா என்று புலம்பிட்டன் போல என சாமாளித்துகொண்டேன்.

(யாவும் அதிஉச்ச கற்பனையே)

Edited by putthan

புலம் பெயர் தமிழர் அதிகமானோர் எதில் அளவுக்கு மீறிய அக்கறை எடுத்துக் கொள்கின்றார்கள் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,

போலித்தனமில்லாத உண்மையின் தளத்தில் இருந்துகொண்டு உங்கள் படைப்புக்களை தந்து வருகிறீர்கள். உங்கள் வேறு சில படைப்புக்களையும் நான் படித்திருக்கிறேன். நமது வாழ்வியல் போலித்தனத்தை அற்புதமாக எழுத்துகளினூடக படம்பிடித்து காட்டுகிறீர்கள். அந்தவகையில் இந்தக் கதையும் பாராட்டுக்கும் சிந்தனைக்கும் உரியது. தொடர்ந்தும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

உண்மையுடனும் அன்புடனும்,

காவாலி

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் எப்படி எல்லாம் யோசிக்கிறீங்கள் ...யாதார்த்தத்தை சொன்ன விதம் அருமை...அது சரி உண்மையாகவே உங்களுக்கு அவரைத் தெரியுமா...

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் மானிப்பாயிலை அவங்கடை குடும்பத்தை எனக்கு சத்தியமாய் தெரியாது..தெரியாது..தெரியாது...(எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்) :):D

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் உங்கள் கதை உண்மைக்கதை போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசித்து சிரிப்புத் தாங்க முடியவில்லை.

கதை நல்லாய் இருக்கிது புத்தன்.

ஏற்கனவே சொன்னபடி பச்சையும் குத்தி இருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சொன்னபடி பச்சையும் குத்தி இருக்கிறன்.

என்ன ரம்பாவின் பெயரையா உங்கள் உடலில் பச்சை குத்தி இருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தன் நீங்கள் இதை கிழப்பி விட்டு, எண்ட மனுசி வந்து "ரம்பாவை கட்ட போரவண்ட, அண்ணாவிண்ட பிரண்டோட, இவர் இணையத்தளத்தில கதைக்கிரவராம்" எண்டு டெக்ஸ்ட் மெசேஜ் ஊருக்கு அனுப்பி அலுப்பு தாறாள். :)

நானும் என்ரை அண்ணாவின் (புத்தன்) சினேகிதனை தான் ரம்பா கட்டபோகிறா என்று உலகமெல்லாம் சொல்லி குட்டி சந்தோசத்தோட இருக்கிறன். கெடுத்துப்போடாதைங்கோ புத்தன் :)

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி சிட்னிக்கு ரம்பா வந்த புத்தன் வீட்டில தான் இனி தங்குவா என்று புத்துவின் மனைவி சொன்னதாக கேள்விப்பட்டேன்.

கந்தப்பு, அது நான் யாழில இருக்கிற புள்ளி குத்திற பச்சையை பற்றி சொன்னன். :)

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, அது நான் யாழில இருக்கிற புள்ளி குத்திற பச்சையை பற்றி சொன்னன். :)

தெரியும். சும்மா பகிடிக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வாசித்து சிரிப்புத் தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அது நான் இந்தியாவிற்கு போனகாலம் சிறிதுகாலமே நான் அங்க இருந்தேன் எனினும் நான் அவதானித்த விடையம் ஒன்று. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் லண்டனிலிருந்து திருமணத்திற்காக மதராஸ் வந்திருந்தார். கலியானப்பெண்ணின் பெயரை விசாரித்ததில் அனுராதாவெனச் சொன்னார். குறுகியகாலத்தில் நான் வந்தவேலைகளை முடிக்கவேண்டுமென்பதால் அதுக்குப்பிறகு அவரைப்பற்றி பெரிதாக அறிந்துகொள்ள முற்படவில்லை. சிறிதுகாலத்தில் கேள்விப்பட்டன் குறிப்பிட்டநபர் மனநலவைத்தியரிடம் சிகிச்சைபெறவதாக. காரணம் அவர் கலியானம்கட்ட முயற்சித்தது திரைப்பட நடிகை அனுராதாவை. அதற்குமாறாக இன்னுமொரு சம்பவம் லணடனிலிருந்து தற்செயலாக மதராஸ் வந்த புலம்பெயர்தமிழ் வாலிபர் அதே தற்செயலாக எற்பட்ட சந்திப்பினால் நடிகை மாதுரியுடன் தொடர்பு இறுதியில் திருமணத்தில் முடிந்து இருவரும் லண்டன் வந்து சிறுதுகாலத்தில் மணமுறிவு தற்போது மாதுரி சென்னையில். இப்போ "காட்ரொப்பிக"; ரம்பாவைத்திருமணம் செய்த அந்த ஈழத்து வாலிபர். கதையோட கதை, தமிழ்நாட்டின்ர முதல்வர் நாற்காலியிலை அமர்ந்திருக்கிற கருனாநிதியை அவ்வளவு எளிதில் யாரும் நினைத்த வோளைகளில் சந்தித்தவிடமுடியாது சினிமா நடிககைகளைத்தவிர அண்மையில் ஒரு செய்தி வாசித்தேன் நடிகை ரம்பா முதல்வரைச் சந்தித்ததாக, இதிலிருந்து தெரிய வருகின்றது ரம்பாவைத்திருமணம் செய்தவர் தமிழ்நாட்டில் வியாபார விடையங்களுக்காக ரம்பாமூலம் கருனாநிதியை அணுகியிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தமிழர் அதிகமானோர் எதில் அளவுக்கு மீறிய அக்கறை எடுத்துக் கொள்கின்றார்கள் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு.

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்

புத்தன்,

போலித்தனமில்லாத உண்மையின் தளத்தில் இருந்துகொண்டு உங்கள் படைப்புக்களை தந்து வருகிறீர்கள். உங்கள் வேறு சில படைப்புக்களையும் நான் படித்திருக்கிறேன். நமது வாழ்வியல் போலித்தனத்தை அற்புதமாக எழுத்துகளினூடக படம்பிடித்து காட்டுகிறீர்கள். அந்தவகையில் இந்தக் கதையும் பாராட்டுக்கும் சிந்தனைக்கும் உரியது. தொடர்ந்தும் எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

உண்மையுடனும் அன்புடனும்,

காவாலி

படித்தமைக்கும் ,வாழ்த்து கூறிஅமைக்கும் நன்றிகள்

புத்தன் எப்படி எல்லாம் யோசிக்கிறீங்கள் ...யாதார்த்தத்தை சொன்ன விதம் அருமை...அது சரி உண்மையாகவே உங்களுக்கு அவரைத் தெரியுமா...

தெரியுமோவா? ரம்பா எனக்கு தங்கை மாதிரி :lol:

நன்றிகள் ரதி

புத்தன் மானிப்பாயிலை அவங்கடை குடும்பத்தை எனக்கு சத்தியமாய் தெரியாது..தெரியாது..தெரியாது...(எல்லாம் ஒரு முன்னேற்பாடுதான்) :( :(

சாத்திரியாருக்கு தெரியாது தெரியாது....ரம்பாவை... :):D

நன்றிகள்

புத்தன் உங்கள் கதை உண்மைக்கதை போலிருக்கிறது.

சீ சீ சீ....அதி உச்ச கற்பனை :D

இதை வாசித்து சிரிப்புத் தாங்க முடியவில்லை.

சும்மா சிரிச்சு கொண்டிருந்தால் ஆச்சி உங்களை நேர்ஸிம்கோம் கொண்டுபோய்விடுவா கவனம் :D

கதை நல்லாய் இருக்கிது புத்தன்.

ஏற்கனவே சொன்னபடி பச்சையும் குத்தி இருக்கிறன்.

பச்சை குத்தினதிற்கு நன்றிகள் மச்சி

இதை வாசித்து சிரிப்புத் தாங்க முடியவில்லை.

வாசித்து சிரித்தமைக்கு நன்றிகள்

ஒரு செய்தி வாசித்தேன் நடிகை ரம்பா முதல்வரைச் சந்தித்ததாக, இதிலிருந்து தெரிய வருகின்றது ரம்பாவைத்திருமணம் செய்தவர் தமிழ்நாட்டில் வியாபார விடையங்களுக்காக ரம்பாமூலம் கருனாநிதியை அணுகியிருக்கிறார்.

உந்த ரம்பா உண்மையாகவே வியாபார தூதுவராகதான் இருந்தவ....பிறகு.....பெடியன் ....

நானும் என்ரை அண்ணாவின் (புத்தன்) சினேகிதனை தான் ரம்பா கட்டபோகிறா என்று உலகமெல்லாம் சொல்லி குட்டி சந்தோசத்தோட இருக்கிறன். கெடுத்துப்போடாதைங்கோ புத்தன் :)

இனிமேல் யாராவது கேட்டால் ரம்பா எங்கன்ட சொந்தம் என்று சொல்லுங்கோ

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.