Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் தமிழ்க் காங்கிரஸ் எதனைச் சாதிக்க முற்படுகிறது?

Featured Replies

பிரச்சனையின் மையத்தைத் திசை திருப்புவதாக இருக்கின்றது இந்த வாதகங்கள்.

வாதங்களை விதைப்பவர்கள் இந்த வாத நோய்க்கு உற்பட்ட வலது குறைந்தவர்களே!

தூண்டாமணி விளக்கு தூண்டாமல் நின்று எரியும்.

உங்களை தூண்டுவது யார்?- ஆதிரை

ஆதிரை விவாதத்தை முன்வையுங்கள். விவாதங்களில் இயலாமையிலும் பொய்மையிலும் இருந்துதான் தூற்றுதல் ஆரம்பிக்கிறது. தோழன் இதயச் சந்திரனும் நானும் எங்கள் ஆய்வுகலையே முன்வைக்கிறோம். நீங்கள் விரும்பியதை திரும்ப சொல்லவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? பேனாவை வைத்துக்கொண்டு இப்படி பேசுகிற உங்களிடம் துப்பாக்கி இருந்தால்? இலங்கை இராணுவத்தரப்பிலோ போராளிகளிடமோ இந்திய காவல் துறையிடமோ கேட்டுப்பாருங்கள். துப்பாக்கிகளை எப்பவும் எதிர்நோக்குகிறேன். துப்பாக்க்களுக்கே எப்பவும் பணிந்ததில்லை ஆதிரை. உங்கள் வசவுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் கருத்தை முன்வையுங்கள்.

தேர்தல் களம் இறைய வைவாதமாக தொடருமாதலால் தேர்தல் சம்பந்தப்பட்ட விவாதங்களை தனி பத்தியாக்கினால் நல்லது.

களத்தில் பணிபுரிகிறவர்களுக்கு மட்டுமே தீவாக புரியக்கூடிய மக்கள் மத்தியில் நிகழ்கிற, புலம்பெயர்ந்தோர் பலருக்குத் தெரியாத, சான்றோர் மத்தியில் பேசப்படாத பொருள் ஒன்று உண்டு. அது முள்ளிவாய்க்காள் நிகழ்வுகள் பற்றிய மக்களது விமர்சனங்களாகும். இவற்றை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவது அரச தரப்பின் வெற்றிக்கே வழிவகுக்கும். இந்த பேசாப் பொருளை பேசியதற்க்காக என்மீது பாயவேண்டாம். கூட்டமைப்பின் தலைமை உணர்ந்துள்ளதையே அவர்களது வேட்ப்பாளர் தெரிவு உணர்த்துகிறது.

செயபாலான் உங்கள் ஆய்வு தான் என்ன? தமிழரின் இறையாண்மை சுயாட்சி என்பவற்றைத் தாரை வார்ப்பதன் மூலம் சம்பந்தரும் நீங்களும் தமிழருக்கு வழங்கும் தீர்வு தான் என்ன?ஒற்றை ஆட்ச்சியின் கீழ் வழங்கப்படும் தீர்வின் மூலம் எங்கனம் தமிழரின் தாயகம் பாதுகாக்கப்படப் போகிறது?

  • Replies 51
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒஸ்லோ ஒப்பந்ததைதான் தேசியதலைவர் தனது முகத்தில் கிழித்து வீசியதாக கருணாவே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து இருகிறான், அன்ரன் அன்ணாவுக்கும் தலைவருக்கும் இதனால் முரண்பாடு வந்திருக்கு. தலைவர் விரும்பாத ஒப்பந்ததை கூட்டமைப்பு தூக்கினால் கூட்டமைப்பை தமிழ் சனம் தூக்கி போடும். :D

கூட்டமைப்பின் தலைமைதான் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கு பிரச்சினை என்றால், தேசியபட்டியல்மூலம் சமந்தர் வரமுடியாது என்றால், சம்பந்தரை தோற்கடித்து சம்பந்தரை தலைமை பொறுப்பில் இருந்து நீக்க முடியும், அதன்மூலம் கூட்டமைப்பை மீண்டும் ஒற்றுமைபடுத்த முடியும். :D:D

Edited by சித்தன்

திருமலையில் சம்பந்தரை வெற்றியடைய வைத்து எவற்றையெல்லாம் சாதிக்கலாம் என்ற ஆய்வை ஆய்வுச்சுடர்கள், ஆய்வு செய்திருந்தால், ஆய்வுச்சுடர்கள் எமக்கு அரசியல் வெளிச்சம் காட்டியிலுக்கலாம்.

போருக்குப் பரணிபாடியவர்களும், போருக்கு புரணிபாடியவரும், போராட்டத்தைக் காட்டிக்கொடுத்தவர்களும். தோழர்களாகி மக்களை மந்தைகளாக்கி மேய்க்க முற்படுவது. அதிசயமாகவுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மே க்குப் பிறகு முல்லை நகர் பற்றி எந்த ஒரு செய்திக் குறிப்பும் இல்லை. என்ன அந்த நகரை இலங்கைத் தீவில் இருந்தே எடுத்துவிட்டார்களோ...??!

கிளிநொச்சி ஏ 9 சாலையில் இருப்பதால் அதனைப் பற்றி கிசுகிசுக்கிறார்கள். ஆனால் தமிழர்களின் பாரம்பரிய நகர்களில் ஒன்றான முல்லை நகர் பறிபோனது கூடத் தெரியாமல்.. பறி போவதை அறிந்தும் வாழாது கிடந்துவிட்டு இப்போ திருமலைக்கு கூவுவது.. பறி போவதை தடுத்து நிறுத்தாது.

சிறீலங்காவும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் அகதித் தமிழர்கள் பிரஜா உரிமை பெற்று "கெளரவமாக" வாழக் கூடிய ஒரு நாடு என்பதை தமிழர்களே ஏற்று பாராளுமன்றத் தேர்தலில் கூட ஏட்டிக்குப் போட்டி இட்டு நின்று இந்திய தேசிய விசுவாசிகளாக தங்களைக் காட்டி நிற்கும் இன்றைய காலக்கட்டத்தில்.. திருமலையாவது.. முல்லைத்தீவாவது. பிரபாகரனுக்கு வேலை இல்லை என்பதற்காக எங்களுக்குமா. எங்களுக்குத்தானே வெளிநாட்டுப் பிரஜா உரிமையும் சிறீலங்கன் எயார் லைன்சும் இருக்குதே பிறகென்ன வேண்டும். திருமலையில் எவன் தான் வாழ்ந்திட்டுப் போகட்டன். :D :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த கருத்தாடலுக்குள்ளும் யாழ்ப்பான மையவாதம் என்ற கருத்து வலிந்து திணிக்கபடுகிறது இது கடுமையாக கண்டிக்கபடவேண்டியது, இவ்வளவு இழப்பின் பின்பும் இப்போதும் நாம் ஒற்றுமைபடவில்லை என்றால் எப்போதும் எமக்கு மீட்சி கிடையாது. :D

கருணாவும் யாழ்ப்பாணி என்னும் பிரதேசவாத்தைக் கிளறியே தனது சுய லாபதுக்காக கிழக்குத் தமிழ் மக்களை விற்றான்.சம்பந்தர் குழுவும் இதையே சொல்லி முழுத் தமிழரையும் விற்க உள்ளது.இவர்களிடம் கேட்கப்படும் எந்த அரசியல் ரீதியிலான கேள்விக்கும் பதில் இல்லை.மாற்றாக பிரதேச வாதம் தலைமைப் போட்டி என்று உப்புச் சப்பில்லாத குற்றச் சாடுக்களையே முன்வைக்க முடிகிறது.இதன் மூலம் தாங்கள் இழைக்கும் அரசியற் தூரோகத்தை மூடி மறைக்கின்றனர்.மக்களை ஏமாற்றுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு கருத்தாடல் செய்கிற ஆய்வாளர்களிடம் ஒரு கேள்வி.

திருமலைத் தொகுதியும், இரட்டை அங்கத்தவர் கொண்ட மூதூர் தொகுதியில் ஒரு அங்கத்தவரும் தமிழரசுக் கட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்தே தெரிவு செய்யப்பட்டு வந்தார்கள். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், திருமலை மாவட்டத்தில் மேற்படி கட்சிகளின் பிரதிநிதிகளே தெரிவு செய்யப்பட்டார்கள். (89ல் ஈரோஸ் ன் ஈழவர் ஐனநாயக முன்னணி).

ஆனால் கடந்த அறுபதுவருடகாலமாக அங்கு சிங்களக் குடியேற்றங்கள் அதிகரித்த வண்ணமுள்ளதையே புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இந்நிலையில், திரு இராசவரோதயம் சம்பந்தன் மீளத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அங்கு புதிதாகசிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதை, தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுதனை எவ்வாறு தடுத்து நிறுத்துவார் என்பதனை விளக்குவீர்களா?

நேரம் இருந்தால் இன்னொரு கேள்வி...

சிறிலங்கா அரசாங்கம்தான் உங்களுக்கு எதிரானது ஆனால் இந்தியா உங்களது நட்புச் சக்தி எனின்...

திருமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் இந்தியாவால் நிறுவப்பப்படும் அனல் மின்னிலையத்திற்காக அங்கிருந்து குடிபெயர்க்கப்பட்ட தமிழ் - முஸ்லீம் மக்களுக்கு இந்தியாவிடமிருந்து நஸ்ட ஈட்டினை பெற்றுக் கொடுப்பார்களா? குறைந்தபட்சம் ஒரு கோரிக்கையையாவது வெளிப்படையாக முன்வைப்பார்களா?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் காங்கிரஸ் என்ற தலைப்பே பிழையாக இருக்கின்றது.

தலைப்பில் இருப்பது போல் தமிழ்க்காங்கிரஸ் அங்கு போட்டியிடவில்லை.

தமிழ்த்தேசியத்திற்கான மக்கள் முன்னணியே அங்கு தமிழ் காங்கிரஸின் சைக்கிள்

சின்னத்தில் போட்டியிடுகின்றது.

த.தே.ம.முன்னணியின் முக்கிய குறிக்கோள் சம்பந்தரின் தோல்வியே.

காரணம் அவருடைய இந்தியா சார்பான நடைமுறைகள்.

ஈழத்தமிழர்கள் இன்றைய இந்திய அணுகுமுறைகளை விரும்பமாட்டார்கள்.

திருமலையிலிருந்து சம்பந்தர் விலகட்டும்.

த.தே.ம.முன்னணியும் விலகிக்கொள்ளும்.

திருமலையில் தமிழரின் பிரதி நிதித்துவம் தக்கவைக்கப்படும்.

வாத்தியார்

...............

தளபதி கேணல் அமிதாப்பின் சகோதரர் வன்னியில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் சார்பில் போட்டியிடுகிறார்

பிரிகேடியர் தீபனின் மனைவியின் சொந்த சகோதரர் யாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுகிறார்;

ஆனால் அதிபர் தேர்தலில் மகிந்தவிற்கு ஆதரவு வழங்கிய திருமலை நகர சபை தலைவர் கெளரி முகுந்தன் தமிழ் காங்கிரசில்

போட்டியிடுகிறார்;

உது எப்படியிருக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

கலைவாணி நன்றி,

“வணக்கம் கவிஞர் அவர்களே!

தூண்டுவதும், தூண்டப்படுவதாலும் நிகழ்ந்ததாக உணரமுடியாதுள்ளது.

காலம் மாறி, காட்சிகளும் மாறிவிட்டன

உங்கள் வார்த்தைகள் மாறவில்லை.”

காவாலி ஒரு இடத்தில் குறிப்பிட்டதுபோல “முதல் குழிக்குள்ள இருந்து ஏறுற வழியை பார்க்கவேணும் ”

கலைவாணி பலசிங்கம் அண்ணர் மட்டும்தான் மாறிவரும் தேசிய சர்வதேசிய அரசியல் தொடர்பாக தெளிவோடு இருந்தார்.மேற்க்கு நாடுகலை அவரால் கையாள முடிந்தது. ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் பார்வையாளராக இரு்ந்தேன், எங்கள் துர் அதிஸ்டம் வன்னி அவர் சொன்னதை கேட்க்கவில்லை. த.செ மற்றும் வெளிநாட்டு அதிமேதவிகள் சிலரும் வன்னியை பிழையாக வழி நடத்தி விட்டார்கள். இப்படித்தான் ஜெனீவா பேச்சில் சிங்கள அணி நமதுதரப்பை பேச்சை முறிக்கும் வண்ணம் தூண்டிவிட்டு பழம் எடுத்தார்கள். தோல்வி அன்று ஆரம்பித்ததுதான். குழியுக்குள் கிடக்கிறது எம்மினம். வெளிநாட்டுக்காரர் உள்ளுக்கு இறங்க மாட்டினம். இறங்காமல் வெளியில் நின்று வேட்டியில மண்படக்கூடாது கண்டியளோ என்று மிரட்டுகிறார்கள்.

“முதல் குழிக்குள்ள இருந்து ஏறுற வழியை பார்க்கவேணும் ”

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைவாணி நன்றி,

“வணக்கம் கவிஞர் அவர்களே!

தூண்டுவதும், தூண்டப்படுவதாலும் நிகழ்ந்ததாக உணரமுடியாதுள்ளது.

காலம் மாறி, காட்சிகளும் மாறிவிட்டன

உங்கள் வார்த்தைகள் மாறவில்லை.”

காவாலி ஒரு இடத்தில் குறிப்பிட்டதுபோல “முதல் குழிக்குள்ள இருந்து ஏறுற வழியை பார்க்கவேணும் ”

கலைவாணி பலசிங்கம் அண்ணர் மட்டும்தான் மாறிவரும் தேசிய சர்வதேசிய அரசியல் தொடர்பாக தெளிவோடு இருந்தார்.மேற்க்கு நாடுகலை அவரால் கையாள முடிந்தது. ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் பார்வையாளராக இரு்ந்தேன், எங்கள் துர் அதிஸ்டம் வன்னி அவர் சொன்னதை கேட்க்கவில்லை. த.செ மற்றும் வெளிநாட்டு அதிமேதவிகள் சிலரும் வன்னியை பிழையாக வழி நடத்தி விட்டார்கள். இப்படித்தான் ஜெனீவா பேச்சில் சிங்கள அணி நமதுதரப்பை பேச்சை முறிக்கும் வண்ணம் தூண்டிவிட்டு பழம் எடுத்தார்கள். தோல்வி அன்று ஆரம்பித்ததுதான். குழியுக்குள் கிடக்கிறது எம்மினம். வெளிநாட்டுக்காரர் உள்ளுக்கு இறங்க மாட்டினம். இறங்காமல் வெளியில் நின்று வேட்டியில மண்படக்கூடாது கண்டியளோ என்று மிரட்டுகிறார்கள்.

“முதல் குழிக்குள்ள இருந்து ஏறுற வழியை பார்க்கவேணும் ”

வெளிநாட்டுகாறன் வெளியில் ஏற்றி விடமாட்டான் என்பது உண்மைதான், ஆனால் இந்தியன் மண்ணை அள்ளி போட்டு மூடி விடுவான், வயிற்று குத்தை நம்பினாலும் வடக்கத்தியான நம்பாத என்று எமது முன்னோர் எமக்கு படிச்சு அனுபவிச்சு சொல்லி இருக்கினம். :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் தலைமைப் பொறுப்பைச் சரிவரச் செய்யாததால்தான் கூட்டமைப்பு உடைந்தது.அதாவது கூட்டமைப்பை உடையாமல் பாதுகாக்க முடியாத ஒருவரைத் தமிழினம் மீண்டும் எதற்காகத் தெரிவு செய்ய வேண்டும். மீண்டும் தெரிவு செய்யப்படும் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கா?பலவீனமான தலைமையைச் தேர்வு செய்வதிலும் பார்க்க தலைமையே இல்லாமல் இருப்பது மேல்.

சம்பந்தரைத் திருமலையில் தோற்கடிப்பது கடினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தரைத் திருமலையில் தோற்கடிப்பது கடினம்.

மக்கள் நினைச்சலும் முடியாதா??? :lol::lol::lol:

மக்கள் நினைச்சலும் முடியாதா??? :lol::lol::lol:

மக்கள் அவரை மறப்பதற்கில்லை.

மக்கள் அவரை மறப்பதற்கில்லை.

அப்படி அந்த மக்களுக்காக என்ன செய்து போட்டார்.?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்ததுதான் அவர் செய்த வேலை.அதை மறக்காமல் மக்கள் தேர்தலில் முடிவைச் சொல்வார்கள்.

அப்படி அந்த மக்களுக்காக என்ன செய்து போட்டார்.?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்ததுதான் அவர் செய்த வேலை.அதை மறக்காமல் மக்கள் தேர்தலில் முடிவைச் சொல்வார்கள்.

அப்படியல்ல, சிறிலங்காவில் எங்கு சிங்களவர் தடுக்கி விழுந்தாலும் திருகோணமலை தமிழ்மார்க்கட்டிலும் மூதூர் , வெருகல் வீதியில் அமைந்திருக்கும் "அலிஒலுவ" என்ற இடத்திலும்தான் தமிழர்கள் முதலில் வெட்டப்படுவார்கள். அந்தப் பிரதேசங்களில் நடைபெறும் சம்பவங்கள் எதுவும் அக்காலத்தில் வெளிவருவதில்லை.

தமிழர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் சிங்களக் குடியேற்றக் கிராமம். அந்த இடத்தையே பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அந்தப் பிரதேசத்தில் வேலைபார்த்தவன் என்ற ரீதியில் அன்று தொடக்கம் நான் அறிந்திருந்தது, இப்படியான கலவரங்களின்போது சம்பந்தரின் தலையீடுகள்தான் தமிழர்களை அங்கு பலவேளைகளில் காப்பாற்றியிருக்கிறது.

தமிழர் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னே உடைந்துவிட்டது. தலைமையின் செயற்பாட்டை விமர்சித்தாலும் அதிலிருந்து மற்றவர்கள் வெளியேறாது இருந்திருக்க வேண்டும். அப்படி வெளியேறியவர்களால்தான் இன்று தமிழர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியல்ல, சிறிலங்காவில் எங்கு சிங்களவர் தடுக்கி விழுந்தாலும் திருகோணமலை தமிழ்மார்க்கட்டிலும் மூதூர் , வெருகல் வீதியில் அமைந்திருக்கும் "அலிஒலுவ" என்ற இடத்திலும்தான் தமிழர்கள் முதலில் வெட்டப்படுவார்கள். அந்தப் பிரதேசங்களில் நடைபெறும் சம்பவங்கள் எதுவும் அக்காலத்தில் வெளிவருவதில்லை.

தமிழர் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னே உடைந்துவிட்டது. தலைமையின் செயற்பாட்டை விமர்சித்தாலும் அதிலிருந்து மற்றவர்கள் வெளியேறாது இருந்திருக்க வேண்டும். அப்படி வெளியேறியவர்களால்தான் இன்று தமிழர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இறைவன்

சம்பந்தர் பற்றி எழுதுவதாக யாரும் போர்க்கொடி தூக்கவேண்டாம்

இன்று ஏதுமற்ற நிலைக்கு இந்த பிரிந்து சென்றோரே காரணம்

இது மிகவும் ஆபத்தான விளையாட்டு

இன்றைய நிலையில்..

ஏதோ சொல்வார்கள்

..... முடியாதவன்

.... முயற்சித்தானாம் என்று.

எந்த பலமும் எம்மிடம் இல்லை என்று அறிந்தும் இருப்பதையும் பிரித்தது முட்டாள்களின்வேலையே தவிர இனத்துக்கான அர்ப்பணிப்பல்ல.

ஒரு சிறுபான்மை இனத்தை அது அடிபாளத்தில் தள்ளக்கூடியது என்பதைக்கூட அறியாதவர்கள் எப்படி தலைவர்களாக முடியும்

தமிழரை அதல பாதாளத்திற்கு இட்டுச்செல்லும் ஒருவருடன் தொடர்ந்திருந்து, தாமும் அழிந்து தமிழரையும் அழிக்கவேண்டும் என நினைப்பது சரியல்ல.

திருகோணமலையில் பெரும்பான்மையாக தமிழர் இருந்த காலத்தில் இருந்து அரசியல்வாதியாக இருந்துவரும் சம்பந்தன், தம்பலகாமத்தையோ, கந்தளாயையோ காப்பாற்றாமல், ஒருசில உறவினருக்கு அரச வேலை பெறுவதற்காக அப்பிரதேசங்களில் சிங்களவன் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் இருந்தவர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் பெரும்பான்மையாக தமிழர் இருந்த காலத்தில் இருந்து அரசியல்வாதியாக இருந்துவரும் சம்பந்தன், தம்பலகாமத்தையோ, கந்தளாயையோ காப்பாற்றாமல், ஒருசில உறவினருக்கு அரச வேலை பெறுவதற்காக அப்பிரதேசங்களில் சிங்களவன் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் இருந்தவர் தான்.

மீண்டும்மீண்டும்மீண்டும்மீண்டும்மீண்டும்மீண்டும்............

சொல்கிறேன்

நான் எழுதுவது

ஆதரிப்பது

வருந்துவது

எல்லாமே கூட்டமைப்புக்காக மட்டுமே.....

மீண்டும்மீண்டும்மீண்டும்மீண்டும்மீண்டும்மீண்டும்............

சொல்கிறேன்

நான் எழுதுவது

ஆதரிப்பது

வருந்துவது

எல்லாமே கூட்டமைப்புக்காக

எந்த அடிப்படையில் கூட்டமைப்பைத் தொடர்ந்தும் ஆதரிக்கின்றீர்கள்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது ஆதரிப்பதிலிருந்து வருந்துவதற்கு வந்துள்ளேன்

எனவே ஆதரவுக்காக எழுத வேண்டியதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.