Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வன்னியில் இருந்து ஒரு மடல்" என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது: கஜேந்திரன்

Featured Replies

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளருமாகிய கஜேந்திரன் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு வடிவம் இங்கே தரப்படுகின்றது.

15-03-2010

ஊடக அறிக்கை

கடந்த 14-03-2010 அன்று தமிழ் இணையத்தளத்தில் கஜேந்திரன் குழுவினருக்கு வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபராக சிறீதரன் அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கிளிநொச்சிப் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் பெறுவது தொடர்பாக அதிபர் சிறீதரன் அவர்கள் விடுதலைப் புலிகளது அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களை அணுகியதாகவும் அதன்போது தமிழ்ச்செல்வன் குழுவில் இருந்த சிலருடன் இணைந்து அந்த முயற்சியை நானும் எதிர்த்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். அத்துடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு மைதானம் பெறுவது தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலிலும் எந்தவொரு சந்தற்பத்திலும் நான் கலந்து கொண்டிருக்கவில்லை. அப்படியிருக்க தமிழ்ச்சசெல்வன் குழுவில் இருந்து நானும் எதிர்த்ததாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான விடயமாகும்.

மைதான விடயத்தில் தமிழ்ச்செல்வன் குழு, நடேசன் குழு என்ற இரண்டு குழுக்கள் உருவாக நான் காரணம் என்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதன் மூலம் என் மீது சேறு பூசுவதன் மூலம் கொள்கையில் இருந்து விலகிச் செல்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதற்கான அரசியல் வங்குரோத்துத்தனமான பிரசார உத்தியை கூட்டமைப்பு கையாள்கின்றது.

அத்துடன் தலைவர் பிரபாகரனின் ஆழுமையை கேவலப்படுத்தும் மறைமுக நிகழ்ச்சி நிரலும் அரங்கேறுகின்றது. மைதானம் வழங்க தமிழ்ச்செல்வன் முட்டுக்கட்டாயக இருந்தார் என்றும், தமிழ்ச்செல்வன் குழு என்ற ஒரு இந்தது போன்றதொரு பொய்ப்பரப்புரையை இச் சந்தற்பத்தில் என்னோடு தொடர்பு படுத்தி கூற முற்படுவதன் மூலம் உலகத் தமிழ் மக்களால் ஆழமாக நேசிக்கப்பட்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றி தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் சதித்திட்டம் ஒன்றை நாசூக்காக அரங்கேற்றுகின்றனர்.

திரு.சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்குப் பின்னர் நடேசன் அண்ணா அவர்கள் அரசியல் துறைப் பொறுப்பாளராக பதவியேற்ற காலத்திற்கு முன்னரும் பின்னரும் அவருக்கும் எனக்கும் மிகவும் நெருக்கமான நட்புறவு இருந்தது. இது உண்மையில் வன்னியில் வசித்த மக்களுக்கு தெரியும். பிளவுகளை ஏற்படுத்த நான் முயல்வதாக வதந்திகள் பரப்பப்படுகின்றது. ஆனால் பிளவுபட்டு சோர்வடைந்து, மரணபயத்தில் உறைந்து போயிருந்த யாழ் மக்களையும் ஏனைய தாயக மக்களையும் பொங்குதமிழ் என்ற நிகழ்வினூடாக சாதி, சமய, பிரதேச, வர்க்க வேறுபாடுகளை தாண்டி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களது தலைமையினால புனிதப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் பணியை செய்திருந்தேன்.

வேற்றுமைகளை களைந்து கொள்கை அடிப்படையில் ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தமையே என்னுடய வாழ்நாளில் நான் அதிகம் செய்த பணியாகும்.புலம் பெயர் மக்கள் வாழும் தேசங்களிலும் கூட பல்லாயிரம் மக்களை தேசிய விடுதலைப் போராட்த்தின் பின்னல் அரவணைத்து ஒன்று திரட்டும் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். ஒற்றுமை என்பது ஒரு சமூகத்தினது உரிமைகளை பெறுவதனூடாக கௌரவமானதும் பாதுகாப்பானதுமான, நீதியுடன் வாழக் கூடிய எதிர்காலத்தை பெற்றுக் கொடுப்பதற்கானதாக இருக்க வேண்டும்.

கொள்கைக்காக 150000 மக்களும் 40000 இளைஞர்களும் உயிர்த்தியாகம் செய்துள்ள நிலையில் அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் அடிப்படை கொள்கைகளை கைவிட்ட அடிப்படையிலான தீர்வுத்திட்டம் ஒன்றை மக்களுக்கு தெரியாமலே ஒற்றுமை என்னும் பெயரால் ஏமாற்றி பிறசக்திகளின் தேவைக்காக திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு ஒத்துழைப்பது ஒன்றுமை அல்ல.

இராஐதந்திரம் என்பது வல்லமை மிக்க சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் வழங்குவதை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது அல்ல. கடந்த 12-3-2010 அன்ற தினம் இரவு கல்வியங்காட்டுப்பகுதிக்கு வாகனத்தில் சென்ற எனது ஆதரவாளர்கள் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் சுவரொட்டிகள் மீது எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டியதாகவும் அவ்விடத்தில் இருந்த பொது மக்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பொழுது எனது ஆதரவாளர்கள் டக்களஸ் வென்றாலும் பரவாயில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெல்லக் கூடாதுதென எனது ஆதரவாளர்கள் கூறியதாகவும் 13-3-2010 அன்று தமிழ்வின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இன்று வரை எனக்குரிய சுவரொட்டிகள் எதனையும் அச்சிடுப் பெற்றுக் கொள்ளவில்லை. சுவரொட்டிகளே அச்சிடப்பட்டிருக்காத நிலையில் மேற்படி சம்பவம் எப்படி நடந்திருக்க முடியும். அது மட்டுமன்றி கடந்த நான்கு நாட்களாக எனது தேர்தல் பிரசாரம் என்பது வடமராட்சிப் பிரதேசத்தில் மட்டுமே இடம் பெற்று வருகின்றது. இவர்கள் குறிப்பிடுவது போன்று கல்வியங்காட்டுப் பகுதியில் எனது ஆதரவாளர்கள் யாரையும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நான் ஈடுபடுத்தியிருக்கவில்லை.

எனக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைகளுக்கும் தாயகத்திலும், புலத்திலும் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் ஆதரவை கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலையில் எமது நற்பெயருக்கு கழங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களை செய்து வருகின்றனர். கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டிருந்தாலும் கூட கூட்டமைப்பில் போட்டியிடும் தனது சகோதரரை வெல்ல வைக்க வேண்டும் என்ற சுயநல நோக்கின் அடிப்படையில் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக கூட்டமைப்பில் போட்டியிடும் சிலருடன் இணைந்து கஜேந்திரன் குழுவினருக்கு ஒருமடல் என்ற தலைப்பிலும், வன்னியில் இருந்து ஒரு மடல் என்ற பெயரிலும் தமிழ்வின் இணையத்தள உரிமையாளரே மேற்படி பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்.

இதற்கு முன்னரும் இவ்வாறான பொய்யான ஆதராம் அற்ற செய்திகளை சொந்த சுயநலனுக்கான தமிழ்வின் இணையத்தளம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செ.கஜேந்திரன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் வேட்பாளரும்.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

:wub: நேற்று இந்தப் பொய்ச் செய்தியை இணைத்து விட்டு, இந்தா அந்தா இந்தியா தமிழ்க்கூட்டமைப்பினூடாக தமிழர்க்கு சுதந்திரம் வாங்கித் தரப்போகிறது, இனி எல்லாம் சுகமே என்று நாய்க்குட்டியும், மாமனிதர் சிவராமின் புனைபெயருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு இன்னொருத்தரும் இங்கே பரவசப்பட்டிருந்தனர். பிறகு பார்த்தால் செய்தியும் பொய், இணைக்கப்பட்டுப் பரவசப்பட்ட கருத்தும் தூக்கப்பட்டு விட்டது.

கூட்டமைப்பு திருந்திக்கொள்வதற்கு இன்னும் அவகாசமிருக்கிறது. ஆனால் திருந்துவார்களா என்பது கேள்விக்குறிதான்.

ம்ம்...கருணா பிரிந்தால் துரோகம்..கஜேந்திரன் பிரிந்தால் தியாகம்....

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கியின் ஒப்பீடு தொடர்பில் எந்தவித லொயிக்கும் காண முடியவில்லை

முதலில் நிழல் மனிதராக இல்லாமல் சொந்தமாக பெயரையும் கருத்துக்களையும் வெளியிடுவது நாகரிகமானனது

வேறு இடத்தில் வந்த செய்திகளை இங்கு ஒட்டுவது , பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்துவது உயவானது என்று கருதுகின்றீர்களா.

கயேந்திரன் கையில் ஆயுதம் ஏந்தாத ஒரு போராளி , அவர் தனது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் பல்கலைகழக காலத்திலும் ( நீரும் யாழ் பல்கலைக்கழக மாணவன் என்று அறிந்தேன் உமது காலத்தில் தான் அவரும் அங்கே இருந்திருப்பார்), பராளுமன்ற உருப்பினராக இருந்த காலத்திலும் இருந்தார் ஆனாலும் அவர் தனது கருத்துக்களை சொல்ல தயங்கவில்லை ,

கொள்கையிலும் அவர் மாறவில்லை , கொள்கை மாறிய தலைமையில் இருந்து விலக வைக்கப்பட்டார் , அவரின் கொள்கயிலோ அல்லது செய்கையிலோ உங்கள் எவராலும் குறை காண முடியாத நிலையில் தான் இன்னும் இருக்கிரார்

எனது எதிரி சிங்களவன் தான் கஜேந்திரன் இல்ல என்பதை முதலில் கூறிகொள்கிறேன்...அதேவேளை கஜேந்திரனின் எதிரி சன்பந்தனல்ல சிங்களவன் தான் இவ்வாறு இருக்கும்போது தங்களுக்குள்ளேயே சண்டைபிடிப்பது தமிழனின் சாபக்கேடு...இருப்பினும் கஜேந்திரன் குளுவினர் இந்த தேர்தலில் ஈ.பீ.டீ.பி யையோ,அரசையோ,இந்தியாவையோ விமர்சிப்பதிலும் பார்க்க..கூட்டமைப்பையே அதிகம் தாக்குகிறார் இது சந்தேகத்தை ஏற்படுத்தும்ன் தானே...இவர் சொல்றார் சம்பந்தன் இந்தியாவின் கைப்பொம்மையெண்டு..அப்ப இவர் தேவ****ன் கைப்பொம்மையா...இன்னுமொன்று இந்த ஆயுதம் ஏந்தாத போராளி இறிதி யுத்தத்தின் போது சம்பந்தர் என்ன செய்தார் என்று கேட்கிறார் இவர் என்ன செய்தார் எண்டு சொன்னால் சாலச் சந்தோச்சம்...

சரத்தைப் போட்டியிடவைத்து சிங்களவரைத்தான் பிரித்தார்கள் என்றுபார்த்தால் இப்போது நாம் அடிபட்டுக் கொண்டிருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா பிரதேசவாதம் பேசிக்கொண்டு சிங்களவனுடன் சேர்ந்து போனான். இன்றுவரை அவன் சிங்களத்தின் கைக்கூலியாக, எடுபிடியாக, வேட்டை நாயாகத்தான் இருந்து வருகிறான். கஜேந்திரன் பிரிந்து சென்று தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்றுதான் இன்றுவரை பேசிக்கொண்டிருக்கிறார்.ஆனால் தாம் தொடங்கிய இடமான தமிழ்த்தேசியத்திற்கான முற்று முழுதான ஆதரவு என்கிற தளத்திலிருந்து விலகிச் சென்று சிங்களவனுடன் சமரசப் போக்கைக் கடைப்பிடிக்க ஆயத்தப்படுவது சம்பந்தர் தலமையிலான குழுவே ஒழிய கஜேந்திரன் கிடையாது.புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையை தூக்கிப்பிடித்துக்கொண்டு, "புலிகள் விரும்பியதும் இதைத்தான் " என்று பொய் சொல்வதும் அதே குழுதான்.

எமது அனைத்துத் துண்பங்களுக்கும் காரண கர்த்தாவான இந்தியப் பயங்கரவாதத்துடன் சிநேக பூர்வமான ஒத்துழைப்பு என்கிற பெயரில் அதன் நிகழ்ச்சி நிரலை தூக்கிப்பிடிப்பதும் சமபந்தர் குழுதான்.

இப்போது சொல்லுங்கள், யார் கருணாவுக்கு நெருங்கியவர், சம்பந்தரா அல்லது கஜேந்திரனா??

***

Edited by இணையவன்
*** உறுப்பினர் பற்றிய கருத்து நீக்கப்பட்டுள்ளது.

ம்ம்...கருணா பிரிந்தால் துரோகம்..கஜேந்திரன் பிரிந்தால் தியாகம்....

:):D :D

இன்னுமொன்று இந்த ஆயுதம் ஏந்தாத போராளி இறிதி யுத்தத்தின் போது சம்பந்தர் என்ன செய்தார் என்று கேட்கிறார் இவர் என்ன செய்தார் எண்டு சொன்னால் சாலச் சந்தோச்சம்...

என்ன செய்தார் என்பதைவிட எங்க இருந்தார் என்பது பொருத்தமாக இருக்கும் :wub:

தெரியாமல் தான் கேக்கிறன் இறிதி யுத்தத்தின் போது இவர் எங்க இருந்தவர்?

Edited by நாய்க்குட்டிடி

  • கருத்துக்கள உறவுகள்
:wub: இறுதி யுத்தத்தின்போது சம்பந்தர் இந்தியாவிலும் கஜேந்திரன் புலம்பெயர் நாடுகளிலில் ஈழத்தமிழர் செய்துவந்த போராட்டங்களில் பங்குபற்றியும் இருந்தனர்.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இருவரும் ..நானும் உட்பட புலத்தில் தான் இருந்து கொண்டு இதை எல்லாம் வாதிக்கிறோம் , நாங்கள் இங்கு எதை கதைத்தாலும் தாயக மக்கள் தான் வாக்களிக்கப்போகிறர்கள் , அவர்கள் அளிக்கும் தீர்ப்பை பொருத்திருந்து பார்போம்.( நேர்மையான தேர்தல் நடந்தால்).....கடந்த தேர்தலில் அதி கூடிய விருப்பு வாக்கைப்பெற்ற கஜேந்திரனுக்கு சீட் கொடுக்காமல் விட்டது சம்பந்தரின் பாரிய தவறு , நிச்சயம் கஜன் தனித்து போட்டியிடுவார் என்பது சம்பத்தருக்கும் , சம்பந்தரை வழி நடத்திய இந்தியவுக்கும் தெரியும் .....மொத்ததில் தனித்து ஒரு கூட்டணி பெரும்பான்மை பெருவதை தடுப்பது அரசினதும் இந்தியாவினதும் நோக்கம் .....அது இலகுவாக நிறைவேறுகிரது...இந்த இடத்தில் கஜன் போட்டியிடாமல் தவிர்த்திருக்கலாம் என்று சிலர் வாதிடலாம் ....ஆனால் கூட்டமைப்பு தவறான அணுகுமுறையுடன் நகர்ந்தமை ...கஜனுக்கு போட்டியுடும் நோக்கத்தை ஏற்படுத்தி கொடுத்து உள்ளதாக நான் கருதுகிரேன்

நான் அறிந்தவரை கஜனுக்கு இளையோரில் இருந்து முதியோர் வரை அதுமட்டுமன்றி பல்கலை கழக சமூகமும் மிகுந்த ஆதரவு கொடுப்பதாக நேரடி தகவல்கள் மூலம் அறிந்தேன் ,

பொறுத்திருந்து பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரை கஜனுக்கு இளையோரில் இருந்து முதியோர் வரை அதுமட்டுமன்றி பல்கலை கழக சமூகமும் மிகுந்த ஆதரவு கொடுப்பதாக நேரடி தகவல்கள் மூலம் அறிந்தேன் ,

பொறுத்திருந்து பார்ப்போம்

நல்ல வடிவா பொறுத்திருந்து பாருங்கோ. உங்களுக்கு யாரோ சொன்ன தகவல். நாங்கள் பல்கலைகழக் சமூகத்தவரையும் மக்களையும் நேரில காண்கிற ஆக்கள். பல்கலைகழக சமூகம் முழுவதுமாக தமிழ்க் கூட்டமப்புக்கே தங்கள் ஆதரவு என்டு சொல்லுகினம். கொஞ்சம் பழைய ஆக்களிண்ட வாக்குகளால ஆனந்த சங்கரிக்கு ஒரு ஆசனம் கிடைக்கலாம். இதுவும் ஒரு நேரடித் தகவல்தான். :wub:

Edited by காவாலி

கடந்த மாநகர சபை தேர்தலி EPDP யிடம் மாநகரசபையை கோட்டை விட்ட கூட்டமைப்பு தானே வெல்ல போகிறது. ? பிறகு என்ன பதட்டம் COOL .

ம்ம்...கருணா பிரிந்தால் துரோகம்..கஜேந்திரன் பிரிந்தால் தியாகம்....

நீங்கள் குறிப்பிடுவது பொன்னம்பலம் கஜேந்திரகுமாரா.? அல்லது செல்லதுரை கஜேந்திரனா...??

கருணா போல கஜேந்திரன் பிரிந்து போனாரா...? அல்லது பிரிய வேண்டும் எண்று பிரித்து அனுப்பினார்களா....?

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குறிப்பிடுவது பொன்னம்பலம் கஜேந்திரகுமாரா.? அல்லது செல்லதுரை கஜேந்திரனா...??

கருணா போல கஜேந்திரன் பிரிந்து போனாரா...? அல்லது பிரிய வேண்டும் எண்று பிரித்து அனுப்பினார்களா....?

உண்மையில் 100 வீதம் தலைவரை ஏற்பவன்நான்

அன்றும்இன்றும் என்றும்.....

ஆனால் அதை நான் இன்று வெளிக்காட்டுவதால் எனது இனத்துக்கு எந்த நன்மையும் இல்லை

அதைவிட அது மிகவும் பாதகமானது அவர்களுக்கு...

எனவே என்னை நான் மறைத்துக்கொள்கின்றேன்

என் மக்களுக்காக..

இதையே நான் கூட்டமைப்பை விட்டுச்சென்றவர்களிடமும் எதிர்பார்க்கின்றேனே தவிர..

அவர்களுக்கு எதிரானவன் அல்ல யான்.

அவர்களுக்கு மிகவும் வேண்டியவன்

அவர்கள் அனைவரது தியாகங்களையும் மதிக்கின்றேன்

ஆனால் நேரம் காலம் இருக்கிறது

அண்ணோய் செல்லத்துரை கஜேந்திரனுக்கு வன்னியில் இருந்து ஒரு புனைவு கடிதம் எழுதியவர்கள் ஒருவிடயத்தை மிகமுக்கியமாக குறிப்பிட்டு இருந்தார்கள்... அவர் விடுதலைப்புலிகளுக்குள் மிகுந்த செல்வாக்குள்ளவராக இருந்தார் என்பதுதான் அது... அது உண்மையும் கூட ... !

அந்த கஜேந்திரன் மட்டும் காரணமே குறிப்பிடாது கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றியதின் பின்னணி என்ன எண்று பலரும் பலகாலமாக கேட்ட போதும் கூட்டமைபின் தலைமை எதுக்காக சொல்ல முன் வரவில்லை...? காரணத்தை நீங்கள் தன்னும் சொல்லாமே...?

புலிகளின் நம்பிக்கை பெற்ற ஒருவர் கூட்டமப்புக்குள் இருந்து விலத்தபட வேண்டிய தேவை என்ன...?

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பதில் தங்களது பதிலுக்குள்ளேயே இருக்கிறது

எனது பதிலுக்குள்ளேயும் இருக்கிறது

புலியோடு பேச எவரும் விரும்பவில்லை

இது எமக்கு மிகவும் கடினமானது

ஆனால் அது தான் இன்றைய நிலை.

பதில் தங்களது பதிலுக்குள்ளேயே இருக்கிறது

எனது பதிலுக்குள்ளேயும் இருக்கிறது

புலியோடு பேச எவரும் விரும்பவில்லை

இது எமக்கு மிகவும் கடினமானது

ஆனால் அது தான் இன்றைய நிலை.

புட்டும் தேங்காப்பூவுமாய் இருந்த நம்மள் இன்று சண்டைபிடித்து டக்லசுக்கு இலகுவாக வெல்ல வழிவிட்டிருக்கம்....என் எதிரி சிங்களவன் தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலமில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

. கஜேந்திரன் பிரிந்து சென்று தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்றுதான் இன்றுவரை பேசிக்கொண்டிருக்கிறார்

.ஆனால் தாம் தொடங்கிய இடமான தமிழ்த்தேசியத்திற்கான முற்று முழுதான ஆதரவு என்கிற தளத்திலிருந்து விலகிச் சென்று சிங்களவனுடன் சமரசப் போக்கைக் கடைப்பிடிக்க ஆயத்தப்படுவது சம்பந்தர் தலமையிலான குழுவே ஒழிய கஜேந்திரன் கிடையாது.

இப்போது சொல்லுங்கள், யார் கருணாவுக்கு நெருங்கியவர், சம்பந்தரா அல்லது கஜேந்திரனா??

***

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில்

முரளி எமக்கு வேண்டவே வேண்டாம்

கஜேந்திரன்

இப்போதைக்கு வேண்டாம்

கிடைப்பதை ஏற்போம்

புலத்தில் ஒன்றுபடுவோம்

புலத்தில் பொருளாதாரத்தையும் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து அதைக்கொண்டு கிடைப்பதை முன்னோக்கி நகர்த்தி...

அதன்பின் உலக நடப்பை எமதாக்கி நகருவதே இன்றைய தேவை....

எமக்கிருக்கும் ஒரேயொரு வழியும் அதுவே.

பிரபாகரனை தேடுவதும் கஜேந்திரனை தெரிவு செய்வதும் ஒன்றுதான் இன்று.

  • கருத்துக்கள உறவுகள்

பதில் தங்களது பதிலுக்குள்ளேயே இருக்கிறது

எனது பதிலுக்குள்ளேயும் இருக்கிறது

புலியோடு பேச எவரும் விரும்பவில்லை

இது எமக்கு மிகவும் கடினமானது

ஆனால் அது தான் இன்றைய நிலை.

தமிழ் மண்ணுக்கும் தமிழுக்கும் தம்மை வார்த்தைகளால் அல்ல நிஜமாகவே தந்தவர்கள் புலிகள்தான்.

புலிகளோடு கொஞ்சம் சினேகிதம் என்பதற்காகவே பேச மறுக்கிறார்கள் என்றால். அவர்களுடன் தமிழர்களுக்கா பேச என்ன இருக்கின்றது என்பதுதான் புரியாமலிருக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மண்ணுக்கும் தமிழுக்கும் தம்மை வார்த்தைகளால் அல்ல நிஜமாகவே தந்தவர்கள் புலிகள்தான்.

புலிகளோடு கொஞ்சம் சினேகிதம் என்பதற்காகவே பேச மறுக்கிறார்கள் என்றால். அவர்களுடன் தமிழர்களுக்கா பேச என்ன இருக்கின்றது என்பதுதான் புரியாமலிருக்கின்றது?

இது எமக்கு மிகவும் கடினமானது

ஆனால் அது தான் இன்றைய நிலை.

உண்மையில் 100 வீதம் தலைவரை ஏற்பவன்நான்

அன்றும்இன்றும் என்றும்.....

ஆனால் அதை நான் இன்று வெளிக்காட்டுவதால் எனது இனத்துக்கு எந்த நன்மையும் இல்லை

அதைவிட அது மிகவும் பாதகமானது அவர்களுக்கு...

எனவே என்னை நான் மறைத்துக்கொள்கின்றேன்

என் மக்களுக்காக..இதையே நான் கூட்டமைப்பை விட்டுச்சென்றவர்களிடமும் எதிர்பார்க்கின்றேனே தவிர..

அவர்களுக்கு எதிரானவன் அல்ல யான்.

அவர்களுக்கு மிகவும் வேண்டியவன்

அவர்கள் அனைவரது தியாகங்களையும் மதிக்கின்றேன்

ஆனால் நேரம் காலம் இருக்கிறது

இன்று தங்களது கருத்துக்களுக்கு விளக்கம் எழுதவெளிக்கிட்டு

என்னை நான் இனம் காட்டவேண்டி வந்துள்ளதாலும் எமக்கு பாதிப்புத்தான்

எந்த நன்மையுமில்லை

பதில் தங்களது பதிலுக்குள்ளேயே இருக்கிறது

எனது பதிலுக்குள்ளேயும் இருக்கிறது

புலியோடு பேச எவரும் விரும்பவில்லை

இது எமக்கு மிகவும் கடினமானது

ஆனால் அது தான் இன்றைய நிலை.

நண்றி மறப்பது நண்று அண்று...

இருக்கிறதாக சொல்லப்படும் புலிகளை எல்லாம் தற்கொலை செய்ய சொல்லுவமோ...????

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2010/02/100227_rudrakumarcase.shtml

விடுதலைப்புலிகள் இருக்கிறார்கள்'' -சொல்கிறார் ருத்திரகுமார்

பதில் தங்களது பதிலுக்குள்ளேயே இருக்கிறது

எனது பதிலுக்குள்ளேயும் இருக்கிறது

புலியோடு பேச எவரும் விரும்பவில்லை

இது எமக்கு மிகவும் கடினமானது

ஆனால் அது தான் இன்றைய நிலை.

பேச விருப்பம் இல்லாதவையை ஏன் வெளிய விட்டு வைப்பான். ?? காட்டி குடுப்பமே.? இப்படித்தானே கருணா, டக்கிளஸ் குழு செய்துவருகிறது.

நாளைக்கு புலிகள் வெளியில் செயற்படுவதுக்கு வந்தாலும் நீங்கள் கட்டாயம் அதை செய்வீர்கள் என்பது உங்கட பதிலில் இருந்து தெரிகிறது. மனதுகை அழுதபடி எண்டு கருணாநிதி போல அறிக்கை விட்டால் போச்சுது.

எல்லாம் மக்களின் நன்மைக்காக.

Edited by பொய்கை

புட்டும் தேங்காப்பூவுமாய் இருந்த நம்மள் இன்று சண்டைபிடித்து டக்லசுக்கு இலகுவாக வெல்ல வழிவிட்டிருக்கம்....என் எதிரி சிங்களவன் தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலமில்லை...

கிடைப்பதைப் பெற்றுக் கொள்வோம் என்பதே டக்கிளஸ் கருணா ஆகியோரின் அரசியல், சம்பந்தரும் இப்போது அதனையே செய்கிறார்.

நாம் என்றும் தேசியம் தாயகம் தன்னாட்ச்சி என்பதன் அடிப்படியிலையே இருக்கிறோம். நீங்கள் இப்போது எங்கிருகிறீர்கள் என்பது இன்னும் சில காலத்தில் தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

:D நாரதர்,

உவர் இருக்கிறது அவுஸ்த்திரேலியா, மெல்பேனில். ஆனால் கதை மட்டும் களத்தில் இருக்கிறதாகத்தான் வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.