Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவை: ஈழவேந்தன்

Featured Replies

நாடு கடந்த அரசு எல்லோருடைய உள்ளக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து செயற்பட இருக்கிறது, அதனுடைய அடித்தளம் 1976ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தன் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான கனடிய செயற்பாட்டுக்குழுவின் உத்தியோகபூர்வ ஒலிபரப்பான தமிழீழத்தின் குரல் நிகழ்ச்சியின் போது வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் சில கேள்விகளுக்கான பதிலில் அவர் தெரிவித்ததாவது:

கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது இது கட்டாயம் எமக்குத் தேவை.

இன்றைய சூழ்நிலையில் இதைவிட நாம் வேறொன்றும் செய்வதற்கு வாய்ப்பில்லை என்று அந்த அறிவித்தல் வெளியிடப்பட்ட போது தாம் திரு உருத்திரகுமாரனிடம் தொலைபேசி மூலம் கூறியதாகவும் அதை முழுமையாக வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசைக் கண்டு எவரும் அஞ்சுவதற்கும் ஐயுறுவதற்கும் ஒன்றும் இல்லை, நாடு கடந்த அரசானது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லிச் செயற்படுகிறது அங்கே மூடி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

நாடு கடந்த அரசு எல்லோருடைய உள்ளக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து செயற்பட இருக்கிறது, அதனுடைய அடித்தளம் 1976ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும் என்றும் அவர் கூறினார்.

அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தொடர்ந்து அதற்கெதிராக நடைபெற்ற ட்ரயல் அற் பார் வழக்கில்,

சிங்களவர்கள் எம்மை ஆண்டதுமில்லை, தொடர்ச்சியாக எம்மை ஆண்டதாக வரலாறும் இல்லை, அதற்கு நாம் என்றுமே இசைவும் கொடுத்த்தில்லை, அது எம் விருப்பத்திற்கு மாறாகத் திணிக்கப்பட்டது இலங்கை என்பது ஒரு நாடல்ல அது ஒரு தீவு, இரு நாடுகளின் உள்ளடக்கம், இருந்ததை இழந்ததை மீண்டும் நிலை நாட்டுகிறோமேயன்றி இல்லாத ஒன்றைக் கேட்கவில்லை என்று அரசியல் யாப்பாக்கத்திற் தலைசிறந்த அறிஞரான திரு முருகேசு திருச்செல்வம் அவர்கள் வாதிட்டதையும் திரு ஈழவேந்தன் நினைவுபடுத்தினார்.

[The Sinhalese never conquered us, nor did we give our consent, nor were there a continuity of rule. What we ask is what we had, what we lost we want to regain and re assert. It comes in the category of restoration and reconstitution.]

அத்தோடு 1926ம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் வைத்து இலங்கையின் முன்னாள் பிரதமரான பண்டாரநாயக்காவும், இலங்கை என்பது ஒரு நாடல்ல அது ஒரு தீவு, இரண்டு முரண்பட்ட இனங்களின் உள்ளடக்கம்தான் இலங்கை, ஆகவே இவ்விரு இனங்களையும் ஒன்றாக்க முனைபவன் பொறுப்பற்றவன் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

நாடு கடந்த அரசை உருவாக்குகின்றபோது மதியுரைக்குழுவின் உடனடிக் கவனம் முழுவதும் நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்குவதோடு நிற்காமல் முள்வேலிகளுக்குள் இருப்பவர்களின் நலனில் அக்கறை காட்டுவதாகவும் இருப்பதானது, இன்றைய யதார்த்தத்துடன் நாடு கடந்த அரசு உருவாக்கக் குழு செயற்படுவதை எடுத்துக் காட்டுகிறது என்றார்.

கடந்த காலங்களில் பல நாடுகளுக்கும் சென்ற போது எமக்குத் தனித் தமிழீழம் அமைய வேண்டும் என்று அவர் சாவதேசத் தலைவர்களிடம் விடுத்த கோரிக்கைகளுக்கு எவ்வாறான பதில்கள் கிடைத்தன என்று கேட்கப்பட்டபோது,

1983ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் திகதி தான் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த சமயம் “தமிழீழ விடுதலையும் இந்திய பாதுகாப்பும் பின்னிப் பிணைந்தவை, தமிழன் வாழும் போது இந்தியா வாழுகின்றது தமிழனுக்கு அழிவு ஏற்பட்டால், இந்தியாவிற்கும் அழிவு ஏற்படும்” என்று தான் கூறியதற்கு “அருமையான சொல்லாட்சி சென்னை செல்கின்றபோது சொல்லுங்கள் உலகம் முழுவதும் இந்தக் குரலை எழுப்புங்கள்” என்று கூறி “உங்களுக்கு நான் பக்க பலமாக இருப்பேன் உங்களை எதிர் நோக்கும் மிகப் பெரிய பிரச்சினை தமிழர் தாயகத்தினுள் சிங்களக் குடியேற்றம் திணிக்கப்படுவது”, என்று இந்திரா அம்மையார் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு அவரது பதில்கள் அமைந்திருந்தன.

http://www.puthinappalakai.com/view.php?20100317100717

நாடு கடந்த அரசைக் கண்டு எவரும் அஞ்சுவதற்கும் ஐயுறுவதற்கும் ஒன்றும் இல்லைஇ நாடு கடந்த அரசானது அனைத்தையும் வெளிப்படையாகச் சொல்லிச் செயற்படுகிறது அங்கே மூடி மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

சொல்லாத செய்திகள் உண்டு, சொல்லப்போகும் செய்திகளும் உண்டு.

Edited by kalaivani

என்ன செய்தாலும் இனி இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இன்னொமொரு பேரவலத்தை கொடுக்க கூடாது. இனியும் சகித்துபோகும் திராணி அற்றவர்களாக இருக்கின்றார்கள். முடிந்தால் வன்னியில் இருந்து மீண்ட மக்களை நேரே சென்று பாருங்கள். வன்னியில் ஏதும் இல்லை ஒரு காட்டினுள் தான் புதிதான குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. வவுனியாவில் இருந்து பேரூந்துகளில் ஏற்றப்படும் மக்களை பாருங்கள்.. ஆண்டு அனுபவித்தவர்கள் இன்று உடுத்த உடுப்புடன் ஏதிலிகளாக உரப்பைகளுக்குள் உடைகளையும் வைத்துக்கொண்டு பேருந்துகளில் ஏறும் காட்சிகளை உங்கள் மனக்கண்களில் நிறுத்திப்பாருங்கள். பிள்ளைக்கு பால் வாங்க வவுனியா நகரில் வீடு வீடாக படலை தட்டி இரந்து கேட்கும் இளம் தாய்களை கண்டீர்களா? பேரூந்துகளில் பிச்சை எடுக்கும் இளம் ஆண்களை / சிறுவர்களை கண்டீர்களா? அன்றொரு நாள் இவர்களும் எங்களை போல் சம்பாதித்தவர்கள் சிறுவர்களின் எதிர்காலமும் இனி கேள்விக்குறி தான். வீட்டில் போதிய உணவு கிடைக்காமல் வயிற்றுப் பசிக்காக விபச்ச்சார தொழிலில் ஈடுபடும் பெண்கள், சிறுமிகளை ஒரு கணம் நினைத்துப்பாருங்கள். நாம் ஏதோ விரவசனமும், வீராப்பும் பேசுகின்றோம். ஒரு பாரிய அழிவின் பின் எமது இனம் சீர்கெட்டு சின்னாபின்னமமகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவலை புரிகிறது. அதே வருத்தமே இங்கு எல்லோருக்கும். ஆனால் நாடு கடந்த அரசுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? :wub:

எல்லோரும் அடுத்த சந்ததியாவது நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல நோக்கோடு தான் செயற்படுகிறார்கள். இதற்கு எமது மக்கள் கொடுத்த விலை தான் மிக அதிகம்.யாருமே எதிர்பாராதது எமது மக்களுக்கு நடந்து விட்டது.

சொல்லாத செய்திகள் உண்டு, சொல்லப்போகும் செய்திகளும் உண்டு.

உந்த .... நாடு கடந்த அரசு ... எனும் வசனத்தை கண்டால் சிலபேருக்கு இல்லாத பொல்லாத வருத்தமெல்லாம் வருகுது!!

உங்களை மாதிரி நால்வரே போதும், நாற்பது வதந்திகளை கிளப்புவதற்கு!!!! இப்படி நாலு இணைத்தளங்களே போதும், சிங்களவன் விரும்புகிறதை செய்வதற்கு!!! கேட்டால் .... தமிழ்த்தேசியத்தின் தூண் ... என்பார்கள்!!!! .... சொல்லுவார்கள் .... தானும் படாது, தள்ளியும் படாது .... என்று!! தயவுசெய்து புலத்தில் செய்யக்கூடியதை என்றாலும் செய்ய விடுங்கோ!!! :wub:

தயவுசெய்து புலத்தில் செய்யக்கூடியதை என்றாலும் செய்ய விடுங்கோ!!!

அமாம் நெல்லையன் புலத்தில் நாங்கள் செய்த எல்லாவற்றிக்கும் இப்போது பதில் கிடைத்துவிட்டது தானே? முள்ளிவாய்காலில் மக்கள் கொன்றொழிக்கபடும் போது புலத்தில் நாம் குய்யோ முறையோ என்று குத்தி முறிந்து என்ன கண்டோம்? மக்களை இந்த வெள்ளையர்களை கொண்டு காப்பாற்ற முடிந்ததா?

உங்கள் கவலை புரிகிறது. அதே வருத்தமே இங்கு எல்லோருக்கும். ஆனால் நாடு கடந்த அரசுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? :lol:

ரொம்பத்தான் குளம்பிப்போய் இருக்கிறம் என்பது மட்டும் புரியுது....

ரொம்பத்தான் குளம்பிக்கொண்டிருக்கிறம் என்பதும் புரியுது....

ரொம்பத்தான் குளம்பிக்கொண்டிருக்கிறம் என்பதும் புரியுது....

உண்மை தான் விசுகு போருக்கு தப்பிய மக்களின் வாழ்க்கையை வெளிநாடுகளில் இருந்து நாம் குளப்பிகொண்டிருக்கின்றோமோ என்று நினைக்க தோன்றுகின்றது

Edited by vidivelli

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் எழுதினேன் விடிவெள்ளி

முதலில் எமக்குள் இருக்கும் இதுபோன்ற குழப்பங்களை களையவேண்டும்

அதுவரை விடிவில்லை.

அந்த மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பலமும் பாதுகாப்பும் நாம்தான்

அதை எதிரி நன்கு அறிவான்

நாம் அறிவோமா?

அறிந்தால் இப்போதே ஒன்றிணைவோமா?

உங்கள் கவலை புரிகிறது. அதே வருத்தமே இங்கு எல்லோருக்கும். ஆனால் நாடு கடந்த அரசுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

நிறையவே சம்மந்தம் இருக்கின்றது. நாடுகடந்த அரசு முனைப்பு சிங்களத்திற்கு அச்சுறுத்தலாகவே அமையும் தவிர தமிழர்களுக்கு நன்மையாக அமையாது. இந்த முனைப்பை முறியடிக்க சிங்கள அரசு மாற்று நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும். நாடுகடந்த அரசை தாயகத்தில் வருங்காலத்தில் நிறுவுவதை தடுப்பதற்கு அனைத்து வழிமுறைகளையும் சிங்களம் கையாழும். இதில் பிரதானமானது சிங்களக் குடியேற்றங்களும் மக்கள் தனித்துவமற்று கலந்து வாழும் சூழலை ஏற்படுத்துவதுமாக இருக்கும். இதனால் நெருக்கடிக்கு உள்ளாகப்போவது அவலப்பட்ட மக்களே. தாயகத்தில் ஏஞ்சியுள்ள தமிழ்த்தேசிய உணர்வு துடைத்தளிக்கப்படும். இந்த நாடுகடந்த அரசு முயற்சியானது தாயக மக்களின் விருப்பு வெறுப்பு தற்போதைய அவலநிலை அதிலிருந்து மீளும் முயற்சி அனைத்தையும் நிராகரித்து புலம்பெயர் வழிநடத்துனர்களால் தான்தோன்றித்தனமாக ஏற்படுத்தப்படுவதாகும்.

முள்ளிவாய்க்காலில் தமிழரின் தனியரசு இலட்சியம் உடைத்தெறியப்பட்டது. அதே மூச்சோடு புலத்தில் நாடுகடந்த அரசு முயற்ச்சி தொடங்கப்பட்டது. இங்கே அவலப்பட்ட மக்கள் குறித்தும் அவர்களது மறுவாழ்வு குறித்தும் எதுவும் கருத்தில் கொள்ளப்படவில்லை மாறாக தனியரசு குறித்த கனவும் கருத்தாதிக்கமுமே கோலோச்சுகின்றது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். மக்கள் மீண்டெழுந்தால் தான் எதுவும் சாத்தியப்படும். இவ்வாறான சிந்தனை அடியோடு நிராகரிக்கப்பட்டது. புலத்தில் இருந்து எவனும் தாயகம் சென்று அமைக்கப்படும் அரசில் பங்கு பெறப்போவதில்லை. இன்நிலையில் தாயக மக்களே முயச்சிகளின் பிரதான சக்தியாக இருக்கவும் அதற்கு துணையாகவுமே புலம்பெயர் மக்கள் இருக்கவும் முடியும். இங்கு நடப்பதோ தலைகீழானது.

நாடுகடந்த அரசு முயற்ச்சியை புலம்பெயர் மக்கள் முனைப்பது தனியே புலம்பெயர் தமிழ்மக்களின் முடிவல்ல மாறாக இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முனையும் இந்திய மேற்குலகு போன்ற நாடுகளின் மறைமுக உந்துதலும் இதற்குப் பின்னணியில் இருக்கவே அதிகமான சந்தர்ப்பம் இருக்கின்றது. எவ்வாறு தமிழர்களின் தனிநாட்டுக்கு கோரிக்கைக்கும் அது சார்ந்த ஆயுதப்போராட்டத்திற்கும் ஆரம்பத்தில் ஆதரவு வழங்கி வளர்த்த இந்தியா மேற்குலகு போன்ற நாடுகள் பின்னர் அதை கட்டுப்படுத்துவது போல் இலங்கை அரசுடன் உறவாடியதோ அதே பாணியிலான நாடுகடந்த அரசும் அதை இலங்கைக்காக தாடுப்பதற்குமாக தொடர்ச்சியான இலங்கைக்குள் மூக்கு நுழைக்கும் நடவடிக்கையே.

எமது முனைப்புகளே எமக்கு எமனாக இனியும் அமையக் கூடாது. எமது முனைப்புகளை இந்தியாவோ அல்லது மேற்குலகமோ தமது சுய லாபங்களுக்கும் போட்டிகளுக்கும் பயன்படுத்தக் அனுமதிக்கக் கூடாத. தற்போதைய தேவை அதிக எண்ணிக்கையிலான மக்களின் ஆதரவோடு கூடிய மனித உரிமைகளுக்கான தமிழர் அமைப்பே தவிர நாடுகடந்த அரசு இல்லை. தனியே அரசுக்கனவும் கருத்தாதிக்கமும் எம்மை அழிக்கும். எம்மை அழிப்பதற்கு எதிரிகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை கொடுக்கும். எம்மை அழிப்பது குறித்த பெரும் திட்டமிடல்களை உருவாக்கும். அழிவின் விழிம்பில் நிற்கும் நாம் ஆபத்துடன் விழையாட முடியாது. எஞ்சிய மக்களை ஸ்திரப்படுத்துவதன் ஊடகவே எமது கருத்தையும் கனவையும் நோக்கி நகரமுடியும். நாம் அவலப்படும் மக்களுக்காக அழிக்ப்படும் மக்களுக்காக உலகில் குரல்கொடுக்கும் மனித உரிமை அமைப்பாகவே இப்போத எழுச்சி பெற வேண்டும். அவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனமாக எழுச்சி பெற வேண்டும். இதுவோ ஒரு கால இடைவெளியின் பின்பு நாடுகடந்த அரசு என்ற கோணத்தில் மாற வேண்டும். இதனால் ஏற்படக் கூடிய நன்மைகளாக, எம்மை இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் பயன்படுத்துவதில் இருந்து விலகி இலக்கு நோக்கி பயணிக்க முடியும். சிங்களத்தை அச்சுறுத்தி எமது தாயகம் தனித்தவத்தை சிதைப்பதை தடுக்க முடியும். அவலப்பட்ட மக்கள் வாழ்வை மீளக் கடடி எழுப்பவும் அதற்கான காலத்தையும் கொடுக்க முடியும். தாயக மக்களை அழித்தால் குரல்கொடுக்க ஒரு பெரிய சக்தி இருக்கின்றத என்று அவர்களின் அழிவுகளை மட்டுப்படுதத்த முடியும். எமக்கும் தாயக மக்களுக்கம் இடையில் உறவை ஏற்படுத்த முடியும். அடியாளத்தேடிலின் அல்பத்தனத்துக்குள் புதைந்திருக்கும் எமது சமூகத்தில் இருந்து ஒரு தலைமையை இனம்காண கால அவகாசம் கிடைக்கும். நாடுகடந்த அரசுக்குப் பதிலாக மனித உரிமை அமைப்பே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு புலம் பெயர் தேசத்தில் உருவாவதால் தான் சிங்கள குடியேற்றங்கள் உருவாகிறது என்பது ஏற்க முடியாது.தமிழருக்கான இராணுவ கட்டமைப்பு இல்லாத போது இது போன்ற அமைப்பு இனிமேலும் உருவாகாமல் தடுக்கவே சிங்கள அரசு குடியேற்றங்களை அசுரகதியில் செய்கிறது.இதன் மூலம் தமிழரின் பலத்தை உடைக்க முடியும் என மகிந்த அரசு நினைக்கிறது. இதே நிலை தான் பஞ்ஞாப்பில் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டது.

நாடுகடந்த அமைப்பைக் குழப்ப சிங்களவன் ஒண்டும் செய்யத்தேவை இல்லை... அதை நாங்களே பார்த்துக்கொள்வோம்.

சிங்களவன் பின்னுக்கிருந்து இரசிச்சால் pழவாரஅ.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கவலை புரிகிறது. அதே வருத்தமே இங்கு எல்லோருக்கும். ஆனால் நாடு கடந்த அரசுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? :wub:

சம்மந்தமா இப்ப முக்கியம்????

மக்ளின் நிலையை பற்றி நாலு வார்த்தை எழுதினோமாம்............ எதையும் ஆக்கபூர்வமாக சிந்திக்க மறுத்தோமாம் போனோமாம் என்று இருக்கும் எங்களை ஏனய்யா வம்புக்கிழுக்கின்றீர்கள்? எல்லொரும்தானே வாசிக்கின்றார்கள்? அவர்கள்மாதிரி நீங்களும் வாசித்துவிட்டு போக கூடாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.