Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பாக உமது கேள்விகளை இங்கே பதியவும்

Featured Replies

நாளை நண்பர் ஒருவர் நாடுகடந்த அரசியல் பிரிவுடன் பேட்டி எடுக்க உள்ளார் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பாக உமது கேள்விகளை இங்கே பதியவும்;அவற்றிற்கு பதில்களை பெற நாம் முயற்சிக்கிறோம்...

--நன்றி---

தலாய்லாமாவைபோல் பல வருடங்களாக வெத்து வேலைகள் செய்வது போல் இந்த அமைப்பும் செய்யுமா??

எத்தனை வருட திட்டம் இது..??

நாடுகடந்த அரசுக்கும் கே.பிக்கும் என்ன தொடர்பு? தற்போதும் தொடர்புகள் உள்ளதா??

இந்த அமைப்பு தாயகத்தில் உள்ள அரசியல் கட்சி ஏதாவதுடன் தொடர்பில் உள்ளதா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

OPEN DAY – Official Launching of the TGTE Election Process

by admin on Mar.22, 2010, under Sri Lanka

OPEN DAY – Official Launching of the Transnational Government of Tamil Eelam (TGTE) Election Process

Date: Sunday, 28th March 2010 Time: 10:30 am – 3:30 pm

Venue: Olympus Hall, The Concorde Club, Crane Lodge Road, Cranford, Middlesex, TW5 9PQ.

http://www.uktamilnews.com/

Please confirm your attendance by phone or email.

Yours Sincerely

Abarna Sanjeev

Open Day Coordinator, Phone: 07944892031 Email: abarna@hotmail.com

நாங்கள் உங்களிடம் கேள்வியை தந்து நா க த அ நல்வழிப்படுத்த மாட்டோம். எல்லம் உருவாகிய பின் மாற்று கருத்துக்கள் என்ற போர்வையில் சிங்களவனுக்கும் , வட இந்திய றோ குழுவுக்கும் அவர்கள் போடும் பிச்சைக்கும் எலும்ம்புத்துண்டுக்குமாக கருத்துக்களை முன் வைப்போம். இப்பவே நாம் எமது தொழிலை காட்டி கொடுக்க மாட்டோம். அல்லாவிடில் எங்களை எல்லோரும் தூக்கி எறிந்து விடுவார்கள். இப்பவே கருணாவுக்கு நடந்தது. சங்கரியாருக்கு நடந்தது. எல்லாம் எமக்கு பாடம்.

  • தொடங்கியவர்

தற்போது நடைபெறும் இலங்கை தேர்தல் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

நாடுகடந்த அரசு என்பது புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மீது வரலாறு சுமத்தியுள்ள பெரும் பொறுப்பு. நாங்கள் இந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றி புதிய வரலாறு படைக்கப் போகிறோமா? அல்லது புலத்திலும் சாதி ஊர் பிரதேச வேறுபாடுகள் என்பவற்றை அடைகாத்து அடுத்த தலைமுறைக்கும் கடத்தி களத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்கள் செய்தி அளப்பரிய தியாகத்தை வைத்து பிழைப்பு நடத்தி அவன் துரோகி இவன் துரோகி என்று எல்லோருக்கும் முத்திரை குத்தி எங்கள் தலையில் நாங்களே மண் அள்ளிப் போடப் போகிறோமா எனப்பது தான் இப்போதுள்ள கேள்வி.

சிறீலங்கா அரசு நாடுகடந்த அரசு அமைக்கும் வேலைத் திட்டத்தை முறியடிப்பது தான் தனது அடுத்த வேலைத்திட்டம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது.நாடுகடந்த அரசு அமைப்பதற்கு முட்டுக் கட்டை போடுபவர்கள் அது தொடர்பான தவறான தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பி மக்களை குழப்புபவர்கள் நிச்சயமாக ஏதோ ஒரு வித்தில் சிறீலங்கா அரசின் வேலைத்திட்டத்திற்கு துணை போகிறார்கள் என்று தானே அர்த்தம் கொள்ள வேண்டி உள்ளது.

நிறைய விடயங்களை எழுதி பலரை அம்பலப்படத்த முடியும் ஆனால் அது யாழ் களத்துக்கும் அழகல்ல எனக்கும் அழகல்ல. நிச்சயமாக வரலாற்றின் பாதையில் கால வெளியில் இவர்கள் தாங்களாவே அம்பலப்பட்டு நிற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு

Edited by navam

நாடுகடந்த அரசு அமைப்பதற்கு முட்டுக் கட்டை போடுபவர்கள் அது தொடர்பான தவறான தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பி மக்களை குழப்புபவர்கள் நிச்சயமாக ஏதோ ஒரு வித்தில் சிறீலங்கா அரசின் வேலைத்திட்டத்திற்கு துணை போகிறார்கள் என்று தானே அர்த்தம் கொள்ள வேண்டி உள்ளது.

யாரைக் குறிப்பிடுகின்றீர்கள் இப்பச் சொல்லி விட்டு கேள்வி கேள் என்றால் யார் கேட்பார்கள் ??

நான் கேட்பதற்கு தயார் நிர்வாகம் விடுமா ?

பிழைப்பு நடத்தி அவன் துரோகி இவன் துரோகி என்று எல்லோருக்கும் முத்திரை குத்தி எங்கள் தலையில் நாங்களே மண் அள்ளிப் போடப் போகிறோமா

நீங்கள் சொன்னாலு சொல்லாவிட்டாலும் பல துர்நாற்றங்கள் மின்னஞ்சலில் வந்துகொண்டு தான் இருக்கின்றன அவை மக்களிடம் எடுபட்டுக்கொண்டு போகின்றன என்பதையும் மறவாதீர்கள்

அவற்றை தெளிவு படுத்தப் போவது யார் ?

மக்களிடம் உண்மைகளைச் சொல்லுங்கள் அவற்றை ஏன் மறைக்கின்றார்கள் ?

நெருடல் இணையம் இப்படி 48 மணியில் சொல்லப்போவதாக விளம்பரப்படுத்தி விட்டு பின்னர் அமர்ந்து கொண்டது

மக்கள் இப்போது எதையும் நம்ப முடியாத கையறு நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கின்றது இது இனி புலிகளே வந்து சொன்னாலும் அது புலியா என்று கேட்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்ட நிலையை நீங்களே உருவாக்கிவிட்டீர்கள்

இனி நீங்கள் எதாவது சொன்னால் உங்களைத் தான் துரோகியாக்கிவிடுவார்கள் முன்பு புலி உறுப்பினர் ஒருவர் பிடிபட்டால் அவர் சித்தரவத்க்குட்பட்டு காட்டிக்கொடுப்பதோடு நின்று விடும் ஆனால் இப்போது அவர்களின் கையாளாகவும் அவர்களை உருவாக்கி வருகின்றார்கள்

தற்போது நடைபெறும் இலங்கை தேர்தல் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

இந்த அமைப்பு தாயகத்தில் உள்ள அரசியல் கட்சி ஏதாவதுடன் தொடர்பில் உள்ளதா ?

1.புகலிட அரசு(Eelam in Exile) என்ற இணையம் நாடுகடந்த அரசின் இணையமா ?

அப்படியாயின் ஏன் புதிய இணையம் உருவாக்கப்பட்டது ?

2.புலத்தில் நடைபெறும் வட்டுகோட்டை, மக்களவைத் தேர்தலை, நா.க.அரசு ஆதரிக்கின்றதா ? இவர்களுக்குள் முரண்பாடுகள் மோதல்கள் இன்னும் இருக்கின்றதா ? அப்படியாயின் ஏன் பகிரங்கமாக அறிக்கை விடாதது ஏன் ?

3.நா.க.அரசின் உறுப்பினர்களுக்கு மாதக் கொடுப்பனவுகள் ?? சம்பளங்கள் விபரம் என்ன ? அதை எவ்வாறு தீர்மானிக்கப்போகின்றார்கள் ?

4.மாத சந்தா எவ்வளவு ? இதில் சந்தா செலுத்தாதவர்களின் நிலை என்ன ?

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சர்வதேச அரசியலில் உலகின் சிறுபான்மையினத்தவரின் உரிமைக்கான ஆயுதப்போராட்டங்களை சில நாடுகள் மறைமுகமாக அரவணைத்து தமது சுயநலனுக்காக ஆதரவு வழங்கினாலும்கூட இதுபற்றிய சர்வதேச சமுகத்தின் முடிவுஒருமுகமானது ஆணித்தரமானது. அது: ஆயுதப்போராட்டத்தால் எதையும் அடையமுடியாது, ஆயுததாரிகளுடன் பேச்சில்லை, பயங்கரவாதத்திற்கெதிராக உலகநாடுகள் அனைத்தும் கைகோர்த்து ஒன்றுபடுவது, எந்தவிலையானாலும் சர்வதேச நியதிகளை ஓரங்கட்டியாவது ஆயுதப்போராட்டங்களை நசுக்கவேண்டும் என்ற நோக்கங்களில் உலகநாடுகள் ஐக்கியமாகிவிட்டன. இன்று எமக்குள்ள ஒரேவழி சர்வதேச விதிகளுக்கு இயைபான ஒரு மார்க்கத்தில் எமது பிரச்சினையை கையிலெடுப்பதுதான். உதிர்வரும் மே 2. இல் நடைபெறவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலுக்குமுன்பாக உலகநாடுகள் பலவற்றிலுமுள்ள தமிழர்களை ஒன்றிணைத்து இணையவழியூடாக "ஸ்கைப்" தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி திரு உருத்திரகுமார் அவர்கள் பல கருத்தரங்குகளை நடாத்திவருகிறார். இவ்வாறான கருத்தரங்குகளில் பங்கேற்பதன்மூலம் எவரும் நேரடியாக திரு. உருத்திரகுமார் அவர்களுடன் உரையாடி தமது கேள்விகளை முன்வைக்கமுடியும். தேசியத்தலைவரின் வழிகாட்டலில் நாம் ஏற்கனவே பல தடைகளைக் கடந்து எமது குறிக்கோளைச் அண்மித்துவிட்டோம். இனிமேலிருக்கும் சிறிய தூரத்தை நா.க.த.அரசின் வழியாக சென்றடைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

. இன்று எமக்குள்ள ஒரேவழி சர்வதேச விதிகளுக்கு இயைபான ஒரு மார்க்கத்தில் எமது பிரச்சினையை கையிலெடுப்பதுதான். உதிர்வரும் மே 2. இல் நடைபெறவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலுக்குமுன்பாக உலகநாடுகள் பலவற்றிலுமுள்ள தமிழர்களை ஒன்றிணைத்து இணையவழியூடாக "ஸ்கைப்" தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி திரு உருத்திரகுமார் அவர்கள் பல கருத்தரங்குகளை நடாத்திவருகிறார். இவ்வாறான கருத்தரங்குகளில் பங்கேற்பதன்மூலம் எவரும் நேரடியாக திரு. உருத்திரகுமார் அவர்களுடன் உரையாடி தமது கேள்விகளை முன்வைக்கமுடியும். தேசியத்தலைவரின் வழிகாட்டலில் நாம் ஏற்கனவே பல தடைகளைக் கடந்து எமது குறிக்கோளைச் அண்மித்துவிட்டோம். இனிமேலிருக்கும் சிறிய தூரத்தை நா.க.த.அரசின் வழியாக சென்றடைவோம்.

ஆமோதிக்கின்றேன்

பகையை அல்லது பிரிவுகளை எம்முள் வளர்க்கும் எந்த முயற்ச்சிக்கும் இடமளியோம்

இவ்வாறான கருத்தரங்குகளில் பங்கேற்பதன்மூலம் எவரும் நேரடியாக திரு. உருத்திரகுமார் அவர்களுடன் உரையாடி தமது கேள்விகளை முன்வைக்கமுடியும்

எல்லோராலும் இதில் பங்கேற்க முடியாது எல்லாக் கேள்விகளையும் http://govtamileelam.org/gov/ Question & Answer பகுதியில் இணைத்து அவற்றிற்கு அவர்களே பதில் எழுதினால் நம்பிக்கையாகவும் இருக்கும்

email-info@govtamileelam.org

Edited by tamilsvoice

பகையை அல்லது பிரிவுகளை எம்முள் வளர்க்கும் எந்த முயற்ச்சிக்கும் இடமளியோம்

இந்த வார்த்தைகளால் ஓன்றும் செய்ய இயலாது ஏற்கனவே வட்டுக்கோட்டை மக்களவைக்கும் நா.க.அரசுக்கும் இடையில் பனிப்போர் நடந்து வருகின்றது இதை ஒருங்கினைக்காமல் அப்படி ஒன்றும் இல்லை என்று மூடிமறைப்பத்தால் கூட்டமைப்பு -தமு என்றது போல் இதுவும் நேரடியாக மோதும் நிலைக்கு வரும்

இந்த விடயத்திலாவது புலம்பெயர் தமிழர் முயற்சி எடுக்கவேண்டும்

1- தற்போதைய சூழ்நிலையில் தாயகத்தில் அவலப்படும் மக்களுக்கு புனர்வாழ்வே அவசியம். சிறையில் இடப்பட்ட மக்கள் விடுவிக்கப்படவேண்டும். மீள்குடியேற்றமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும். இவ்வாறான அத்தியாவசிய விடயங்களுக்கு குரல்கொடுக்கவல்ல பெரும்பான்மை புலம்பெயர் மக்கள் அங்கம் வகிக்கும் மனித உரிமை அமைப்பை நிறுவுவதற்குப் பதிலாக நாடுகடந்த அரசை அமைப்பதன் சூட்சுமம் என்ன? மேற்கண்ட பிரச்சனைகள் நிலுவையில் இருக்கும் போது அவற்றுக்காக போராடும் மக்களை தடுத்து நாடுகடந்த அரசு என்ற அமைப்பின் மீது கவனத்தை திருப்பியதன் நோக்கம் என்ன?

2- சிங்கள ஒடுக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதில் இருந்து தமிழர்களின் போராட்ட வளங்களை குறிப்பாக ஆயுதப்போராட்டத்தினனை சிதைத்தும் வளர்த்தும் முடக்கியும் இலங்கை அரசின் மீது ஆதிக்கம் செலுத்திய இந்திய மற்றும் அது சார்ந்த மேற்குலக நாடுகள் நாடுகடந்த அரசையும் அவ்வாறு கையாள மாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? உறுதிமிக்க தளபதிகளை கூட விலைக்கு வாங்கிய உளவு நிறுவனங்கள் நாடுகடந்த அரசு நிறுவனர்கள் விலைபோக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவ்வாறு நிகழ்ந்தால் தற்போது எஞ்சியுள்ள ஒரே ஒரு குரலான புலம்பெயர் தமிழனின் குரலும் நலிந்து நம்பிக்கை இழந்து விடும் என்ற அச்சத்திற்கு என்ன பதில்?

3- ஆயுதப்போராட்டம் முப்பது வருடங்களை தாண்டியும் நகர்ந்ததுக்கு பிரதான காரணங்கள் சாதி மத பிரதேசவாதம் இறுக்கமான கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. அவைகள் தன்னிச்சையாக செயற்பட முடியாத தடைகள் இறுக்கமாக இருந்தது. அவ்வாறு இருந்தும் இறுதியில் அவைள் உடைத்து வெளியே வந்தது போராட்டத்தை சிதைத்தது. மேலும் குறிப்பாக புத்திசீவிகளின் தலையீடு குறைவாக இருந்ததும் பிரதான காரணம். இன்நிலையில் தனியரசு என்ற கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட நாடுகடந்த அரசு நிறுவனர்களின் சாதி மத பிரதேசவாத உணர்வுகளை கட்டுப்படுத்தும் சக்தி யாது? இவைகள் தலைவிரித்து ஆடாது என்பதற்கு என்ன அடிப்படை? அதிகளவு புத்தியீவிகள் இந்த அமைப்புக்குள் வருவது இந்த அமைப்பை குறுகிய காலத்துள் அடயாளப்போட்டிக்காக சிதைப்பார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. இதற்கு என்ன மாறீடு? சிங்களம் தமிழர்களை கொல்லும் போதெல்லாம் புலிகளின் குறைகண்டுபிடித்த புத்தியீவிகள். ஆயிரம் சிறார்கள் சிங்களத்தால் கொல்லப்படுவதை அலட்சியப்படுத்தி சிறார்கள் புலியில் இருக்கின்றார்கள் என்று வாழ்நாள் முழுக்க கூக்குரல் இட்ட புத்தியீவிகள். லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது ஒரு சொட்டு கண்ணீர் விடாத புத்தியீவிகள் ராயினி திரணகம என்ற ஒருத்திக்காக இன்றுவரை குடம்குடமாக அழுதுகொண்டிருக்கும் புத்தியீவிகள். என்னும் ஆயிரத்தெட்டு இசங்களை தூக்கிப்பிடித்து தமிழர்களின் போராட்டத்தை விமர்சித்தே கருவறுத்த புத்தியீவிகள் இந்த அமைப்பை என்னசெய்யவார்கள்?

இந்த அசை நிர்வகிக்கப்போகின்றவர்கள் யார்? உங்கள் இதுவரைகால மக்கள் பணி என்ன? உங்களை நம்புவதற்கான அடிப்படை என்ன? பிரதேசவாத வாத வேறுபாடற்ற நிலையில் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் சம அளவில் இந்த அமைப்பில் உள்ளனரா? எல்லா மதங்களில் இருந்தும் சம அளவில் அங்கம் வகிக்கின்றனரா? நீங்கள் ஏற்கனவே இந்திய இலங்கை மேற்குலக உளவு நிறுவனங்களிடம் விலை போக வில்லை என்பதை எப்படி நம்புவது? இனிப்போக மாட்டீர்கள் என்பதற்கு என்ன அடிப்படை?

sukan

1.உங்கள் இதுவரைகால மக்கள் பணி என்ன? உங்களை நம்புவதற்கான அடிப்படை என்ன?

2.பிரதேசவாத வாத வேறுபாடற்ற நிலையில் எல்லாப் பிரதேசங்களில் இருந்தும் சம அளவில் இந்த அமைப்பில் உள்ளனரா?

3.எல்லா மதங்களில் இருந்தும் சம அளவில் அங்கம் வகிக்கின்றனரா?

இதில் உள்ள உறுப்பினர்களின் பின்னணி ,சுய விபரங்கள் , இதுவரைகால மக்கள் பணி தேர்தலில் வெளியிடப்படுமா ? இவர்களில் பலரை மக்களுக்கு யார் என்றே ஏன் இங்குள்ள அமைப்புகளுக்கே தெரியவில்லை ?

Edited by tamilsvoice

தமிழர்களுக்கு விடுதலை தேவையில்லை....

அவனவன் பிழைப்புக்கும்... பொழுதுபோக்குக்கும் செய்யும் கூத்துக்கள் ஊரில் இருக்கும்திருவாளர் தமிழ் சனத்துக்கு முதுகுமுறிய மொத்துவிழ வைக்கும்..

அப்பவும் குனிஞ்சு நிண்டு மொத்துவாங்கும் சனங்களில் முன்னுக்கு நிக்கிரவனின் குண்டி மணக்குது எண்டு பின்னுக்கு நிண்டு மொத்துவாங்குரவர் கொம்பிளைன் பண்ணுவார்..

தேவயா இதெல்லம்..

தனிநாடும் மண்ணாங்கட்டியும்.. நீங்கள் கெட்டகேட்டுக்கு, சிங்களவன் உங்களை ஒண்டிவாழ அனுமதித்ததே பெரியவிடயம்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

நா.க.த.அரசு

தேர்தலுக்கு இன்னும் ஏறத்தாள 5 வாரங்களே உள்ளன. இதில் ஒவ்வொரு தமிழ் குடிமகனும் கலந்துகொள்ள வேண்டியது அவர்களின் தார்மீக கடமை. நா.க.த.அரசின் செயற்பாடுகள் அனைத்தும் வெளிப்படையானதாகவும் ஜனநாயமுறைப்படியும் இருக்கும் என்று அனைவரும் உறுதியாக நம்பலாம். அன்று போராட்ட காலத்தில் நாம் எதையும் எதிர் கேள்வி கேட்காமலே செய்யவேண்டியிருந்தது. அதற்கான தேவையும் அந்த காலகட்டத்தில் இருந்ததை மறுக்கவும் முடியாது. இப்போது ஈழத்தமிழர்கள் ஒரு புதிய பாதையில் பயணிக்கவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். உங்கள் கேள்விகளை நேரடியாகவே உரிய தலைமையிடம் கேட்பதற்கு "ஸ்கைப்" சந்திப்பில் கருத்தரங்குகளை ஒழுங்கு செய்து தரும்படி ஒரு வேண்டுகோளை நா.க.த.அரசுக்கான சர்வதேச இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரனுக்கு நீங்களே விடுக்கலாம். அல்லது அதன் செயலகம் உங்கள் நாடுகளில் இருந்தால் அதன் பொறுப்பாளரை தொடர்புகொள்ளுங்கள்.

Edited by vanangaamudi

1.புகலிட அரசு(Eelam in Exile) என்ற இணையம் நாடுகடந்த அரசின் இணையமா ?

அப்படியாயின் ஏன் புதிய இணையம் உருவாக்கப்பட்டது ?

2.புலத்தில் நடைபெறும் வட்டுகோட்டை, மக்களவைத் தேர்தலை, நா.க.அரசு ஆதரிக்கின்றதா ? இவர்களுக்குள் முரண்பாடுகள் மோதல்கள் இன்னும் இருக்கின்றதா ? அப்படியாயின் ஏன் பகிரங்கமாக அறிக்கை விடாதது ஏன் ?

3.நா.க.அரசின் உறுப்பினர்களுக்கு மாதக் கொடுப்பனவுகள் ?? சம்பளங்கள் விபரம் என்ன ? அதை எவ்வாறு தீர்மானிக்கப்போகின்றார்கள் ?

4.மாத சந்தா எவ்வளவு ? இதில் சந்தா செலுத்தாதவர்களின் நிலை என்ன ?

நீங்கள் சொல்வது சரி. என்னுள் எழுந்த கேள்விகளும் இவைதான். முதலில் இந்த வேறுபட்ட நிலை களையப்பட வேண்டும். வட்டுக் கோட்டைத்தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பும், நாடுகடந்த அரசும் வெளிப்படுத்தும் முகங்கள் வௌ;வேறானவை. இருபகுதியினரும் முதலில் ஒரு செயல்திட்டத்திற்குள் வர வேண்டும். அல்லது குழப்பங்கள்தான் மிஞ்சும்.

அடுத்த எனது கேள்வி.

நாடுகடந்த அரசு அமைக்கப்படும் போது, தாயகத்தில் அரசியல் முன்னெடுப்பில் ஈடுபட்டவர்களுடன் எவ்வாறான உறவுகள் பேணப்படும்?

Edited by Iraivan

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள சொத்துக்கள்,கணக்குகள்,சம்பளவிபரங்கள் காட்டப் படுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த அரசு இந்திய அரசோடு இணக்கப் போக்கைக் கடைப் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் கருத்து என்ன?இந்திய அரசின் விருப்பங்கள் நாடு கடந்த அரசின் மீது தாக்கங்களை ஏற்படுத்துவதற்கு நாடுகடந்த அரசு அனுமதிக்குமா?அப்படியாயின் எந்த எல்லை வரை இந்தியா வரலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்குள் முரண்பாடுகள் மோதல்கள் இன்னும் இருக்கின்றதா ?

நா.க.த. அரசின் அடிப்படையே நாம் சர்வதேச விதிகளையும் ஜனநாயகத்தையும் மதித்து தமிழரின் கோரிக்கையை உலக அரங்கில் முன்வைக்கப்படவேண்டும் என்பதால் நாம் முன்னர் சென்ற பாதையில்(?) மீண்டும் செல்வது அக்கோட்பாட்டுக்கு ஒவ்வாது. எனவேதான் முரண்டுபிடிக்கும் ஒரு சிலர் நா.க.த.அரசின் செயற்பாடுகளிலிருந்து தாமாகவே அன்னியப்பட்டிருப்பது எனக்குப் புரிகிறது. எது எப்படியாயினும் ஒவ்வொரு தமிழ்மகனதும் கோரிக்கை உள்வாங்கப்படவேண்டும். அனைவரது கேள்விகளுக்கும் பதில் சொல்லப்படவேண்டும். புரியாத விடயங்கள் புரியவைக்கப்பட வேண்டும். சந்தேகங்கள் தீர்த்துவைக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. சுருக்கமாக சொல்லப்போனால் "சமத்துவம் - சகோதரத்துவம் - விடுதலை" என்பதுதான் நா.க.த.அரசின் புதியபாதை.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

:) நாடு கடந்த அரசிற்கெதிராக வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்வாக்கெடுப்பு செயல்ப்பட்டு வருவதாக வேண்டுமென்றே பரப்பப்படும் விசமப் பிரச்சாரங்களை களைந்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டிருக்கிறதா?? இவ்விரண்டு செயல்ப்பாடுகளும் சிங்களப் பேரினவாதத்திற்கெதிரான ஈழத்தமிழரின் ரெட்டைக்குழல் துப்பாக்கிள் என்று திரு உருத்திரகுமார் அவர்களே ஓரிடத்தில் சொல்லிய பின்னரும், இன்னும் எதிர்ப்பிரச்சாரம் செய்யப்படுவது ஏன்?? விளக்கமான அறிக்கை உடன் தேவை.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மதியுரைக்குழுவின் ஆய்வறிக்கை

பலரது கேள்விகளுக்கு இவ்வறிக்கையில் பதிலுண்டு.

ஆய்வறிக்கை

TGTE.gif?sizeM=3

Edited by vanangaamudi

மதியுரைக்குழுவின் ஆய்வறிக்கை

பலரது கேள்விகளுக்கு இவ்வறிக்கையில் பதிலுண்டு.

அப்படியா?

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடந்த தமிழர் பேரவை கூட்டம் ஒன்று வாத பிரதிவாதங்களின் பின்னர் முடிவடைந்தது

அதன் பின் எனது அங்கலாய்ப்பை தனிமையில் நான் அவர்களிடம் சொல்லியிருந்தேன்

அதாவது எல்லோர் முன்நிலையிலும் எனதுஆதங்கத்தை எழுப்பவிரும்பவில்லை

ஏனெனில் என்னை நானே காயப்படுத்துவது போன்றது அது.

எனவே

நீங்களும் சொல்கின்றீர்கள்

உருத்திரகுமாரும் சொல்கின்றார்

எல்லாம் ஒன்றே என்று.

ஆனால் ஊடகங்களும் வரும் செய்திகளும் அறிக்கைகளும் மக்களை பீதிகொள்ள வைக்கின்றன.

எனவே கேள்விகளும் பிளவுகளும் தோன்றுகின்றன.

மக்கள் குழம்புகின்றனர் என்றோ மக்கள் தெளிவில்லாமல் இருக்கின்றனர் என்றோ சொல்லவேண்டாம்

ஏனெனில் தங்களது அழைப்புக்கு 99 வீதமான மக்கள் ஆம்என்று உறுதி கூறியுள்ளனர்.

எனவே பிரச்சினை தங்களுக்குள் மட்டுமே.

எனவே நீங்கள் அனைவரும் ஒன்று கூடி பேசுவதுடன் அனைவும் இணைந்த ஒரு அறிக்கை தங்களுடைய படங்களுடன் செய்தியாக வந்தால் மட்டுமே இவை ஒரு உறங்குநிலைக்கு வரும்

அதை முதலில் செய்யுங்கள்

இது போன்ற கூட்டங்களுக்கு முன் செய்யவேண்டியது இதுதான் என்று சொன்னேன்

அது ஒரு புறம் நடந்து கொண்டிருப்பதாக சொன்னார்கள்.

ஆனால் இன்னும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.