Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தேர்தல் உத்தியோகபூர்வற்ற முடிவுகள் - TNA 5, EPDP 3 , UNP 1;மாவை முன்னிடம்

Featured Replies

உதாரணத்துக்கு யாழ்ப்பானத்தில் பதிவான 18% வாக்குக்களில் கூட்டமைப்பு 50% பெற்று இருக்கிறது... அது ஒட்டு மொத்த மக்களின் 8%..

8% மக்கள் தலைமையாக ஏற்று கொண்டார்கள் எண்றால் ஒட்டு மொத்த தமிழர்களின் தலைமை எண்று அர்த்தப்பட முடியுமா என்ன...?? 91% மான மக்கள் அவர்களை ஆதரிக்க வில்லை எண்றுதானே அர்த்தம்.... இது ஜனநாயகத்தில் இருக்கும் ஓட்டை எண்றாலும் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்...

உங்கடை கருத்துப்படி இந்த 8 வீத மக்களும் ஏன் போட்டார்கள் என்றா?????........... அது சரி போடாமல் விட்டா வெற்றிலை பெரும்பாண்மை பெறும் .... எவ்வளவு சந்தோஷம்

  • Replies 71
  • Views 6.2k
  • Created
  • Last Reply

நாங்கள் எல்லோரும் நல்ல சுடலைஞானதேசிகர்கள்.

ஆறாமர இருந்து அலசி ஆராய இராசபட்ச சோதரர்கள் விட்டுவைக்கப் போவதில்லை.

இந்த தேர்தல் முடிவுகளை வைத்து சில நாட்க்களுக்குள் வரவிருக்கும் வடக்குஇ கிழக்கு பிரிந்த மாகாணசபைத் தேர்தலில் யார்யார் வெல்லுவார்கள் என்பதை இப்போதே கணக்கிட்டு சொல்லமுடியுமா?

சந்தடிசாக்கில் தமிழீழ நாடுகடந்த அரசாங்க தேர்தலும் வரப்போகுதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்கள் அமரர் நடேசனைக் கொன்றது நம்பியார்தான் என்பதை வள்ளிசாக மறந்துவிட்டாரா அன்றேல் தமிழினவிரோத இந்தியாவுக்காக நடிக்கிறாரா? உதயன் தினமுரசு போன்ற பத்திரிகைகளை தங்கள் வசப்படுத்தி டெல்கியில் கட்சிஅலுவகம் நடாத்தப்போகிறவர்கள் கைகளில் வீழ்தியாயிற்று. மெல்ல மெல்ல புலத்துத் தமிழர்களை இந்திய அடிமையாக்கும் வேலை இனிமேல் தீவிரமாகும். புலம்பெயர் தமிழர்கள் இனிமேல் ஓடிப்போனவர்கள் என்ற பட்டப்பெயருடன் ஒதுங்கிக்கொள்ளவேண்டியதுதான் இதைத்தானே தமிழர் விரோததேசமாம் இந்தியவும் எதிர்பார்க்கிறது. தமிழின விரோததேசம் இந்தியா அதற்கு யாரும் வக்காலத்துவாங்காதீர்கள். இந்தியவின் தமிழின விரோதம் எக்காலத்திலும் மாறப்போவதில்லை. கவிஞருக்குக் கனவுகாண உரிமையிருக்கின்றது. தமிழினவிரோத இந்தியாவின் எடுபிடிகள் ஒழிக!

இங்கே வரும் கருத்துக்களைப் பார்த்தால் கொள்கை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை

நான் சொன்னதுதான் சரி நான் தான் பெரிசு எண்டு நினைக்கும் மூன்றாம் பட்ச மனோபாவம்தான்.

மக்கள் வாக்களிக்காவிட்டால் அதுக்கு என்ன காரணம் என்று இன்னொரு வாக்கெடுப்பு நடத்த முடியாது.

வாக்களித்தவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதுதான் முக்கியம்.

மக்கள் விரும்பி தேர்தலில் ஈடுபடும் மனோபாவத்தில் இல்லை. இதை இன்று வரை யாரும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. சும்மா விதண்டாவாதத்தை விடுங்கள். இந்த தேர்தல் முடிவுகளை நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இதுதான் முடிவு.

ஆயிரம் ஓட்டுக்களோடு டக்கிலஸ் எம்பியாகி ஆறுவருஷம் ஒட்டவில்லையா அல்லது அவன் எம்பி இல்லையெண்டு வேறுயாரும் அவனோடு பேசவில்லையா?

கண்ணைமூடி இருந்தால் உலகம் இருண்டுவிடாது.. ஏற்கவே மாட்டம் என்று இருந்தால் எத்தின தரம் தேர்தல் வைத்தாலும் திருப்தி வராது. நீங்கள் ஏற்கும் முடிவை மக்கள் எடுக்கவும் முடியாது.

இதுவரைக்கும் செய்த கூத்துக்களால் இருந்த இரண்டு ஆசனத்தையும் டக்கிலஸ் கொண்டுபோனான் இது போதாதென்று இன்னுமும் கூத்தா?

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். எட்டு வீதத்தில் பாடம் படிக்காதவர்கள் என்பது விதத்தில்தான் படிப்பமேன்றால் படுயிங்கோ பின்ன.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது ஒன்று படுத்தும் முயற்சி .........???

தங்களது ஒன்று படுத்தும் முயற்சி .........???

ஒன்றுபடவேண்டும் என்ற எண்ணமும் தேவையையும் நான்தான் உணர்த்தவேண்டும் மென்று இல்லை.

பொறுப்பும் கடமையு எல்லோருக்கும் உண்டு..

ஒன்றுபட மறுப்பவர்களை என்னதான் செய்வது.. குறைந்தது தங்களுக்குள் என்றாலும் ஒன்றுபட்டால் நல்லதுதான்.

தமிழன் என்றொரு இனம் உண்டு அவனுக்கொன்று ஒரு குணம் உண்டு.

சனம் ஜனாதிபதி தேர்தலிலையும் சொன்னது அதுவும் உங்களுக்கு புரிய இல்லை, இப்பவும் சொல்லி இருக்கு இதுவும் உங்களுக்கு புரியவில்லை... நீங்களும் உங்கட ஆதரவு அமைப்பும்...

தமிழ் மக்களின் குழப்பமாக நிலையிலை இருக்கும் சிலர் தேர்தலிலை கூட்டமைப்புக்கு வாக்கு போட்டு இருக்கிறார்கள் எண்டும் சொல்ல முடியும்... நிலையான முடிவெடுத்த இன்னும் ஒரு 15% மக்கள் இலங்கை சிங்களவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்...

உங்கட ஜனநாயகத்தினூடு எந்த ஒரு நன்மையும் தமிழர்களுக்கு வரப்போவது இல்லை... தீமைகள் வராமல் தடுக்கவும் முடியாது... இதுதான் உண்மை...

சனநாயத்தில் நம்பிக்கை இல்லாதோர் தேர்தலில் பங்க்கேடுப்பனேன்?

விரும்பியோ விரும்பாமலோ சனநாயகம்தான் நாளைக்கு இருக்கிறதுகளுக்கு தஞ்சம்.

மக்கள் சொன்னது புரியாமல் நாகங்களா தேர்தலை வைத்தோம்? மக்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியாமல் மக்களுக்கு இன்று என்ன முக்கியம் என்றுதெரியாமல் இருந்ததையும் பிரித்தது யார்?

சனம் பிச்சைப் பாத்திரத்தோடு திரும்போது பட்டுப் பஈதாம்பரத்தைப் பற்றி பேசினால் யாருக்குத்தான் ஆசைவரும்?

இராணுவ அடக்கு முறைக்குள் வாழும் சனங்கள் பெரும் அழிவை சந்தித்த சனங்கள் எந்த நேரத்திலும் மரண அச்சுறுத்தலில் வாழும் சனங்கள் தேர்தலுக்கு வாக்களித்தாலே மற்றவன் கண்டு கொன்றுவிடுவான் என்று பயப்படும் சனங்கள் சாரை சாரையாக வந்து வாக்களிக்கும் என்றா நினைப்பீர்கள்?

நிலைமை சரிவராமல் இதில் மாற்றம் வராது? அதுவரைக்கும் இதுதான் முடிவு.

இவர்களின் முறையில் தான் இழப்பின்றி சனங்கள் ஓரளவுக்கேன்றாலும் நிலைமைகளை சீர் செய்யமுடியும்.

டக்கிலசுக்குப் போட்டதுகளும் இதுக்குத்தான்... நீங்கள்தான் புரிய மறுக்கிறீர்கள்.

85% ஆன மக்கள் வாக்களிக்கவில்லை. இது சிங்கள அரச தேர்தல் தமிழ் ஈழத்தில் செல்லாது என்பதை காட்டவில்லையா? இது இரு தேசம் என்பதற்கு மேல், இரு நாடு என்பதைக் காட்டுகிறது எனக் கொள்ளலாமா?

பதிவிசெய்யபட்ட வாக்குகள், 700000 ஆனால் யாழ் மக்கள் தொகை 300000, உங்கள் விகிதம் பிளைக்கும், 100% மக்கள் வாக்களித்தால் கூட அது 50% த்தை தாண்டாது...

யாழ்நகர பகுதியை உள்ளடக்கிய தமிழ்ர் வோட்டு போடவில்லை. அவர்களது புளிப்புத்தனத்தால் எல்லா போச்சு.

100 வோட்டு கூட வந்திருந்தால் தமிழ்தேசியமக்கள் முன்னி சார்பாக ஒருவர் வந்திருப்பார். யாழ்நகர மக்கள் போடததால்

யு.ன்.பி 1 சீட் கிடைத்ததாம்.

ஊர்காவற்துறை தொகுதியில் சுருவில் ,கரம்பம், நாரந்தனை பகுதிகளில் தாதாவாக செயற்படுகிறவர் மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். அவர் டக்கிலசின் முதன்மை ஆள்.

அவர் தான் எல்லாரிடமும் வாக்கு சீட்டை சேகரித்து புள்ளடி போட்டுவிட்டு வாக்கு சாவடிக்கு அனுப்பி போட்டாராம்.

6000 வோட்டுக்கு ஒரு இடத்தில் கூட மக்கள் வரிசை நின்றதில்லையாம்.

அவர் மகா ஜனங்களுக்கு சொன்னாராம். டக்கிளஸ் அண்ணை வராட்டி இங்க எங்களை ஒருவரும் மதிக்கமாட்டார்கள் என்று தன்ர சுற்றங்களுக்கு சொல்லி கொடுத்தாராம்.

அவர்தானாம் சென்ற கிழமை ஜக்கியதேசிய கட்சி கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்தவர்.

டக்கிலஸின் வெற்றி இரகசியம் இதுதான்

இண்டைக்கு வாக்குப்போடாமல் நாளைக்கு வந்து எம்பிமார் செய்திருக்கலாம் தானே எண்டு கதைக்காமல் விட்டால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிவிசெய்யபட்ட வாக்குகள், 700000 ஆனால் யாழ் மக்கள் தொகை 300000, உங்கள் விகிதம் பிளைக்கும், 100% மக்கள் வாக்களித்தால் கூட அது 50% த்தை தாண்டாது...

இப்ப என்ன, எங்களுக்கு தெரிந்த உண்மைகளை நன்றாக பறையடித்து சொல்லுகிறோம், போன முறை பத்தாக இருந்து இந்த முறை 9 ஆக மாறினது அடுத்தமுறை 7 ஆகவோ 8 ஆகவோ வரலாம். ஆனால் இங்குள்ளவர்கள் சிலரும் அங்குள்ள சிலரும் 4 ஆகவோ அல்லது 3 ஆகவோ வரவேண்டும் என்று நன்றாக பாடுபடுகிறோம். ஆனால் இதன் தாக்கம் பாராளுமன்ற பிரதிநிதுவத்துடன் மட்டும் நிற்கப்போவதில்லை என்று அறிந்தால் சரி...யாழ்பாணத்திலிருந்து பல்கலை சென்றவர்களும் அது பற்றி தெரியாமல் பேசுவதுதான் கவலையாக இருக்கிறது....இங்கே கனடாவில் ஒரு ஆய்வாளர் 2004 தேர்தலில் மக்கள் முழு உற்சகத்துடன் வாக்களித்தார்கள் இந்தமுறை அவர்கள் அப்படி செய்யவில்லை என்றார்...உண்மை இலங்கை முழுவதுமே வாக்களிப்பு குறைந்துள்ளது, தனியே யாழ் என்று குறைபடுவதால் என்ன பயன்? 2004 நடந்த தேர்தலிலேயே 50 % மேல் வாக்களிக்கவில்லையே? அன்று 100000 விருப்பு வாக்கேடுத்தவர்கள் இன்று 4000 வாக்குகள் எடுத்தால் என்ன நடந்தது, நடந்திருக்கும் என இனியும் விளக்கம் பேசாமல் தாயகத்தோடு இணைந்து செயற்படுகிற வழியை பார்ப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

சனம் பிச்சைப் பாத்திரத்தோடு திரும்போது பட்டுப் பஈதாம்பரத்தைப் பற்றி பேசினால் யாருக்குத்தான் ஆசைவரும்?

இப்ப அங்கை உள்ள சனத்துக்கு அரசியல் முக்கியம் இல்ல.இது சரியோ பிளையோ அது வேறு விசயம்.ஆனால் அது தான் உண்மை.சரி இங்க உள்ளவர்கள் அரசியலையும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளையும் சமந்திரமாக அனுகி இருக்க வேனும்.அதாவது அவர்களுக்கு எதாவது ஒரு வழியில் உதவ வேனும்.

இது மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு புலன் பெயர்ந்தவர்கள் இனி உங்கள் ஈழப்புலன்களை நிறுத்துங்கள்

ஈழமாக்களுக்கு இனி புலன் பெயர்ந்ததுகள் தேவையுமில்லை

அவர்கள் எல்லாம் இனி சொந்தக்காலில் சுயமாக உழைப்பார்கள் :rolleyes:

சம்பந்தரும் டக்ல்ஸூம் இனி இவர்களைப் பார்த்துக்கொள்ளுவார்கள் :wub:

வன்னி மக்களின் தாகம் மட்டுமே தமிழீழம் என்பதை மீண்டும் இந்த குலாம் மீண்டும் நிரூபித்து விட்டது உங்களுக்காக மட்டும் எமது குரல் ஓயாது

Edited by tamilsvoice

இலங்கை ஜனநாயகத்திலை ஈழத்தமிழருக்கு நம்பிக்கை இல்லை எண்டதை சனம் ஆணி அடிச்ச மாதிரி சொன்னாப்பிறகும் வாக்கு போட்டு இருந்தலா புடுங்கலாம் எண்டவை இப்ப தெரிவானவை எதையாவது புடுங்கட்டும்... பிறகு பாக்கலாம் இலங்கை அரசியலை நம்பலாமோ இல்லையோ எண்டு..

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி அல்லது சிங்கள அரசாங்க ஆயுதக் குழுவுக்கு எப்பவும் யாழ்ப்பாணத்தில ஊர்காவற்றுறையில வெற்றி வருகுதே அதெப்படி...???! உவர் டக்கிளஸ் அந்தத் தொகுதி இல்லையேல்.. என்றோ கதிரை விட்டு எப்பவோ காலியாகி இருப்பார்.

கடந்த தேர்தலில் மக்கள் நிறைய வாக்களித்திருந்தார்கள். விடுதலைப்புலிகளின் வேண்டுகோளை ஏற்று. இந்தத் தேர்தலில் மக்கள் அதிகம் வாக்களிக்கவில்லை. இது ஈபிடிபி போன்ற சில ஆயிரம் கள்ள வாக்குகளில் கதிரையை தீர்மானிக்கும் கட்சிகளுக்கு வாய்ப்பாகி இருக்கிறது. அதுமட்டுமன்றி யாழ் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முஸ்லீம் மற்றும் சிங்கள வாக்காளர்களின் வாக்குகளும் சிங்கள ஆளும் கட்சிக்கு கிடைத்திருக்கும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிங்களப் படைகளின் எண்ணிக்கையே 40,000 ஆயிரம். அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளோ வெறும் 130,000 இதில் செல்லுபடி அற்ற வாக்குகள் போக.. ஈபிடிபி கட்சி போட்ட கள்ள வாக்குகளே அதிகம். அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை பெற்றுள்ளன.

பதிவு செய்து ஒரு மாதத்துக்குள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாக்கு பலம்.. 20 ஆண்டுகளாக கள்ள வாக்கு அரசியல் செய்து வரும் ஈபிடிபி சிங்கள அரசாங்க தமிழ் ஆயுதக் குழுவின் கள்ள வாக்குப் பலத்தை விட அதிகம் எனலாம்.

வாழ்த்துக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஐ தே க மகேஸ்வரன் அக்காச்சி.

தேர்தலை பற்றியோ, தமிழ் கட்சிகளிடையே குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு, புடுங்குப்பாடுகள், யாழ்களத்தில் இரு ஒவ்வொரு பக்கத்தையும் ஆதரித்து நடைபெற்ற வாக்குவாதங்கள் பற்றியோ கருத்து கூறுவதை தவிர்த்து வந்தேன். ஈழப்பிரதேசத்தில், தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டமைப்பு, ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட காலங்களில் (1977ம் அதற்கு முன்னரும்) மக்கள் தமிழ் காங்கிரஸ் (சைக்கிள் சின்னம்) போட்டியிட்டாலும், தமிழரசுக்கட்சிக்கோ, அல்லது தமிழர் விடுதலை கூட்டணிக்கோ வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். தமிழ் காங்கிரஸ் என்பது தமிழர்களின் பலத்தை உடைக்கும் கட்சி என சொல்லி அந்த பக்கமே திரும்பி பார்க்க கூட்டது என சொல்லிய சந்ததி ஒன்றும் இருந்தது, எனக்கு நேரடி அனுபவம் இல்லாவிட்டாலும், ஊரில் பெரியவர்கள் கதைக்க வாய்பாத்து கொண்டிருந்தது இப்பவும் ஞாபகம் இருக்கு. இப்ப இருக்கும் வாக்களர்களில் ஒரு பகுதியினர் அந்த சந்ததியை சேர்ந்தவர்கள். அத்துடன் பொன்னம்பலம் எனும் அரசியல் தலைவரை பலருக்கு பிடிப்பதில்லை. இப்போ அவரின் வாரிசு மீண்டும் அதே சைக்கிள் சின்னத்தில் போய் வாக்கு கேட்டால் எப்படி பொன்னம்பலம் எனும் பழைய தலைவரை பிடிக்காத சந்ததி சைக்கிளுக்கு போய் வாக்கு போடும். இதை நாடி பிடித்து அறியமுடியாத/ மக்களுடன் எந்த தொடர்பும் அற்ற தலைமைகளால் எப்படி மக்கள் பற்றி சிந்திக்கவும், அவர்களுக்காக செயற்படவும் முடியும். :rolleyes:

இவர்களும் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து உடையாது போட்டி போட்டிருந்தா, ஈ.பி.டி.பி, மகிந்த கும்பலுக்கு கிடைத்த வாக்கு சதவிகிததை விட இவர்களுக்கு அதிகம் கிடைத்திருக்கும். தமிழ் கட்சி ஒன்றின் சார்பில் அதிக உறுப்பினர்கள் பாராளுமன்றம் போய் இருப்பார்கள் :lol: (எந்த தமிழ் கட்சி வெண்டு பாரளுமன்றம் போனாலும் ஒண்டும் புடுங்க போறேல்லை எண்டுறது வேற விசயம்).

தேர்தல் பிரச்சார கடைசி நாட்களில் புற்றிசல் போல முளைத்த புலம்பெயர் நாட்டு கடதாசி சங்கங்கள் அறிக்கை மாறி அறிக்கை விட்டதுக்கு தான் ஒருபலனும் இல்லை. :D

தமிழத்தேசியத்தின் மிகப்பெரும் சரிவு முள்ள்வாய்காலில் நடந்தேகியது. அதன்பின்ப தமிழின உரிமைக்கான போராட்டம் மீண்டும் தொடக்கப்புள்ளிக்கே சென்றுவிட்டது. ஆக இப்பொதுத்தேர்த்தல் முடிந்தமுடிவல்ல தமிழின் புதிய போராட்ட வழிமுறையின் ஆரம்பப்புள்ளியேஇ ஆனால்என்னஇ புலத்துத் தமிழர்கள் கடந்தகால அனுபவங்களிலிருந்து படிப்பினையைப் பெறத்தவறிவிட்டார்கள் இன்னமும் இந்தியாவை நம்புகின்ற ஒரு குழுவிடம் தமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பிகைக் கொடுத்துள்ளார்கள். ஆனால் இதனால் எவ்வித பிரயோசனமும் இல்லை. இங்கு தமிழத்தேசியக் கூட்டமைப்புக்கு வக்காளத்து வாங்குவோரும் புலத்துத் தமிழரும் ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருங்கள் புலம்பெயர்தேசங்களில் வாழ்கின்ற தீவழர தமிழ்த்தேசிய ஆதரவாளர்களில் அனேகர் முள்ளிவாய்காலுக்குப் பின்பு இனம்புரியாத விரக்தி நிலையின் காரணமாகவும் போராட்ட ஆதரவுத் தளத்திலிருந்து மிக நீண்டதூரம் விலகிவிட்டார்கள் அதன்பின்பு இத்தேர்தல் முடிவுகள் மிகுதியாயிருக்கும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களையும் ஒதுக்கித்தள்ளிவிட்டதென்பதே எனது எண்ணம். இதன்மூலம் சிங்களத்தினதும்இ இந்தியாவினதும் தமிழர் இனவழிப்பைத் தொடர்வதற்கு எதிராக புலம்பெயர் தேசங்களில் குரல் பொடுப்பவர்களது எண்ணிக்கையை மட்டுப்படுத்திவிடலாம் எனும் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளார்கள். மேலும் நாடுகடந்த தமிழீழ அரசினது செயற்பாட்டினையும் இதன்மூலம் வரையறைசெய்யலாம். அத்துடன் தொட்டகுறை விட்டகுறையாக அங்குமிங்கும் தாவித்திரியும் புலமபெயர் தமிழர்களை சனியன் விட்டுத்தொலைஞ்சுதுபோ என்பதைப்போல் ஏதாவது தமக்கு தாயம் தரக்கூடிய அன்றேல் தம்மைப்பாதுகாத்துக்கொள்ளக்கூடிய ஒரு அரசியல்முகாமுக்குள் முகாமுக்குள் அடைக்கலம்தேட வழிசமைக்கும் ஆக புலத்தின் தமிழசமூகம் தவறான பாதையில் போகத்தீர்மானித்துவிட்டது இனிமேல் கடவுளாலும் காப்பாற்றமுடியாது தமிழர் விடிவென்பது வெறும்கனவுமட்டுமே இக்கருத்து எக்காலத்துக்கும் பொருந்தும.; இந்தியாவெனும் இனவழிப்புத்தேரினில் ஏறித்தமிழர்விடுதலையப் பெற்றிடமுடியாது. இங்குள்ள இந்திய இராணுவகாலத்து மண்டையன் குழுவினதும் சப்ராயுனிக்கோ ஊழல் புகழ் சரவணபவான் புலம்பெயர் நாடுகளில் தமிழத்தேசியம் எனும்பெயரில் இணையத்தளவியாபாரம்செய்வர்களதும் கூட்டாளிகளான தமிழத்தேசியக்கூட்டமைப்பு ஆதரவாளர்கள்இ இக்கருத்தை விருப்பமாகில் எழுதிவைத்திருக்கவும்.

உதாரணத்துக்கு யாழ்ப்பானத்தில் பதிவான 18% வாக்குக்களில் கூட்டமைப்பு 50% பெற்று இருக்கிறது... அது ஒட்டு மொத்த மக்களின் 8%..

8% மக்கள் தலைமையாக ஏற்று கொண்டார்கள் எண்றால் ஒட்டு மொத்த தமிழர்களின் தலைமை எண்று அர்த்தப்பட முடியுமா என்ன...?? 91% மான மக்கள் அவர்களை ஆதரிக்க வில்லை எண்றுதானே அர்த்தம்.... இது ஜனநாயகத்தில் இருக்கும் ஓட்டை எண்றாலும் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும்...

80 வீதமான மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்திருக்கிறார்கள். 5 வருடங்களுக்கு முன்னம் உற்சாகமாக வாக்களித்த மக்கள் வாக்களிப்பைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்றால் என்ன கருத்து தற்போதைய தலைமைகளை ஏற்கத் தயாராகவில்லை என்றுதானே பொருள்படுகிறது.வாக்களித்த மக்களில் பெரும்பாலும் வயதான முதியோர்கள் பாரம்பரியக் கட்சியான தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள். இளைஞர்கள் பங்கேற்காத இந்தத் தேர்தல் தமிழருக்கு எந்த விடிவையும் பெற்றுத் தரப்போவதில்லை.

இது மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு புலன் பெயர்ந்தவர்கள் இனி உங்கள் ஈழப்புலன்களை நிறுத்துங்கள்

ஈழமாக்களுக்கு இனி புலன் பெயர்ந்ததுகள் தேவையுமில்லை

அவர்கள் எல்லாம் இனி சொந்தக்காலில் சுயமாக உழைப்பார்கள் :wub:

சம்பந்தரும் டக்ல்ஸூம் இனி இவர்களைப் பார்த்துக்கொள்ளுவார்கள் :lol:

வன்னி மக்களின் தாகம் மட்டுமே தமிழீழம் என்பதை மீண்டும் இந்த குலாம் மீண்டும் நிரூபித்து விட்டது உங்களுக்காக மட்டும் எமது குரல் ஓயாது

நெடுக்ஸ், குளக்காட்டான், எழுஞாயிறு, தயா, புலவர், தமிழ்க்குரல். உங்கள் ஆழமான கருத்துக்களுக்கு நன்றி.

நல்ல, ஆக்க பூர்வமான கருத்துக்களால் மனதிற்கு சிறிது ஒத்தடம் கிடைத்தமாதிரி இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

சனத்துக்கு தேர்தலில் அக்கறையில்லை என்பது உண்மைதான்

ஆனால் யார் வரவேணும் என்றும் சாடையா சொல்லியிருக்கினம்

அதை ஏற்கும் பக்குவம் வந்தாலே மக்களை நேசிக்க முடியும்

முற்றிலும் உண்மை. யாழ் மக்களின் அதிக விருப்பு வாக்கைப் பெற்ற மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தாதான் தமிழர்களின் தலைவனாக இருக்கவேண்டும் என்று யாழ் மக்கள் சாடையாகவும் வெளிப்படையாகவும் ஜனநாயக முறைப்படி தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே மக்களை நேசிக்கும் பக்குவத்துடன் மாண்புமிகு டக்ளஸ் அவர்களின் தலைமையை ஏற்று நடந்தால் தமிழர் தாயகப் பகுதிகள் அழிவுகளில் இருந்து அபிவிருத்திப் பாதைக்குப் போக உதவி செய்யலாம். இதைப் புலம்பெயர் தமிழர்கள் உணர்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தயா அண்ணை

சனத்துக்கு தேர்தலில் அக்கறையில்லை என்பது உண்மைதான்

ஆனால் யார் வரவேணும் என்றும் சாடையா சொல்லியிருக்கினம்

அதை ஏற்கும் பக்குவம் வந்தாலே மக்களை நேசிக்க முடியும்

இனியாவது தங்களது ஒத்தை றோட் கொள்கையை நீங்கள் மாத்தவில்லையென்றால் தாங்கள் ............

நீங்கள் த.தே.ம.மு யை ஆதரித்தது டக்லசையும் மற்றவர்களையும் வெல்ல செய்வதற்கு...

இப்போ அது நடந்திருக்கு..

முற்றிலும் உண்மை. யாழ் மக்களின் அதிக விருப்பு வாக்கைப் பெற்ற மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தாதான் தமிழர்களின் தலைவனாக இருக்கவேண்டும் என்று யாழ் மக்கள் சாடையாகவும் வெளிப்படையாகவும் ஜனநாயக முறைப்படி தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே மக்களை நேசிக்கும் பக்குவத்துடன் மாண்புமிகு டக்ளஸ் அவர்களின் தலைமையை ஏற்று நடந்தால் தமிழர் தாயகப் பகுதிகள் அழிவுகளில் இருந்து அபிவிருத்திப் பாதைக்குப் போக உதவி செய்யலாம். இதைப் புலம்பெயர் தமிழர்கள் உணர்வார்களா?

விசுகு, நீங்கள் பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் என்று தான் அடம் பிடிக்கிற ஆள் போலை ......

நீங்க சொன்ன மாதிரி.... " ஒத்தை றோட் " கொள்கையை ஆரோவின் சொல்லைக்கேட்டு, கடைப்பிடித்து தமிழரின் பலத்தைக் குறைத்ததில்..... சம்பந்தப்பட்டவர்களின் நெஞ்சு இப்பவும் ...... குடு, குசுக்கத்தான் செய்யும்.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு பகலா சைக்கில் ஓடி ஒரு பலனுமில்ல.

இனி எவனாவது தனிநாடு, தமிழ்தேசியம், மண்ணாங்கட்டி எண்டு வெளிக்கிட்டா,

புடிச்சு கட்டிவைச்சு கருக்குமட்டை அடிபோடோணும்..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இரவு பகலா சைக்கில் ஓடி ஒரு பலனுமில்ல.

உங்களால் என்ன பலன் கிடைக்கும்? நத்திங்......

வாயிலை, சுவிங்கதைப்போட்டு சும்மா சப்பாதேங்கோ..........

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்ட தமிழர்களின் இந்த முடிவை எண்ணி மிகவும் துயரத்துடன்

எழுதுகின்றேன்.

அகிம்சையா? ஆயுதமா? என்ற கேள்விக்கு ஆயுதம் என்று சொல்லாமல்

சொல்லிவிட்டார்கள்.

2004 இல் 250.000 வாக்குகள் ஆயுதத்துடன் கூடிய அரசியல் போரட்டத்திற்கு.

2010 இல் 73.000 வாக்குகள் ஆயுதம் இல்லாத அரசியல் போரட்டத்திற்கு.

யாழ் மக்களே உணர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் விட்ட பிழைகளை.

கண்ணாமூச்சி விளையாடதீர்கள்.

கூட்டமைப்போ மக்கள் முன்னணியோ யாரொ ஒருவருக்காவது அல்லது இடதுசாரிகளுக்கோ

உங்கள் விரல்களை நீட்டியிருக்க வேண்டும்.

இனி மேலும் உலக வல்லரசுகளை எதிர்த்து ஆயுதமேந்திப் போராட களத் தமிழனுக்கோ

புலத் தமிழனுக்கோ திராணியில்லை.

மக்களின் அரசியல் போரட்டம் ஒன்றே இன்று இருக்கும் வழி.

த.தே.ம.முன்னணிக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

முதலில் யாழ் மக்களை விழிப்புணர்ச்சியுடன் அரசியல் மயப்படுத்துங்கள்.

அதற்கு நாடாளுமன்றம் தேவையில்லை.

வாத்தியார்

..............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னண்ணை இரவு பகலா சைக்கில் ஓடியும் சனம் எட்டிக்கூட பாக்கேல்லயாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னண்ணை இரவு பகலா சைக்கில் ஓடியும் சனம் எட்டிக்கூட பாக்கேல்லயாம். :rolleyes:

அவர்கள் அனைவரும் இந்த தேர்தலில் அக்கறை காட்டவில்லை என்று வாக்குப் பதிவை வைத்துப்பார்க்க தெரியவில்லையா......

மேல் உள்ள கருத்துக்களை விபரமாக வாசித்து பார்த்து கருத்து எழுதவும்.

விபரம் புரியாவிட்டால்..... போய் , அங்கோடை ஆசுப்பத்திரியில் இருக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜநாதிபதி தேர்தலில பொன்சேகா யானையில சவாரிசெய்யிறத பாக்க வந்த சனம் கூட சைக்கிலோட்டம் பாக்க வரேல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.