Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வி.உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்தமடல் - சேரமான்

Featured Replies

வி.உருத்திரகுமாரனுக்கு ஒரு திறந்தமடல் - சேரமான்

விசுவநாதனின் ருத்திர புத்திரனே, நியூயோர்க்கை கலங்கடிக்கும் சட்ட அறிஞனே, நாடுகடந்து அரசமைக்கும் அறிஞர்களின் அதிபதியே,

வணக்கம்!

மே 2 - நாடுகடந்த தமிழீழ அரசுக்கு தேர்தல்! கேட்கும் போதே மெய்சிலிர்க்கின்றது. மயிர்க்காம்பெல்லாம் கூச்செறிந்து புல்லரிக்கின்றது.

புதிய வடிவம்!

புதிய சிந்தனை!

புதிய பாதை!

தமிழீழம் தமிழர்களுக்கானது மட்டுமல்ல:

அங்கு இரண்டு தாயகங்கள் என்கின்றீர்கள்! ஒன்று முஸ்லிம்களின் தாயகம், மற்றையது தமிழர்களின் தாயகம் என்கின்றீர்கள் ஈழத்தீவில் தமிழீழ அரசமைக்கும் உரிமை தமிழர்களுக்கு உண்டென்றால்... தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்கும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டென்கின்றீர்கள்!

இப்படித்தான் உங்கள் இறுதி அறிக்கை கூறுகின்றது.

தமிழர்களைப் போன்று முஸ்லிம்கள் ஒரு தனித்துவமான இனம் என்கின்றீர்கள். மதசார்பற்ற தமிழீழம் அமைப்பது உங்கள் இலக்கு என்கின்றீர்கள். ஆனால் முஸ்லிம்களின் மதத் தனித்துவம் பேணப்படும் என்கின்றீர்கள்.

ஐயா!

தமிழீழத்தைத் துண்டாடி அரசமைக்க வேண்டும் என்று எப்போது உங்களிடம் எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் மனுச்செய்தார்கள்?

தமிழீழத்தில் தமிழ் - முஸ்லிம் பிராந்தியங்கள் இருப்பதாக உங்களிடம் எந்த வரலாற்று அறிஞர் கூறினார்?

இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என மூன்று மதங்களைத் தழுவி வாழும் ஈழத்தமிழர்களை, தமிழர்கள் என்றும் முஸ்லிம்கள் என்றும் இரு தேசிய இனங்களாகக் கூறுபோடும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தார்கள்?

ஈழத்தீவு என்பது தமிழர்களின் பூர்வீகப் பூமிஅங்கு ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்தவர்கள் தமிழர்கள்.

பௌத்தத்தின் வருகையோடு அங்கு தோற்றம்பெற்றது சிங்களம். அதற்கு முன் மாதகலில் இருந்து இருந்து தெய்வேந்திரமுனை வரை தமிழர்கள் ஆட்சிசெய்தது பண்டைய வரலாறு. திருகோணமலையும், மாந்தையும், அனுராதபுரமும் தமிழர்களின் தலைநகர்களாக விளங்கியது அன்றைய கல்வெட்டு.

பின்னர் யாழ்ப்பாண அரசாகவும், வன்னிமைகளாகவும் ஈழத்தீவின் வடகிழக்கு மாநிலத்தில் தமிழரது ஆட்சி சுருங்கிப் போக, கண்டியும், கோட்டையுமாக தென்னிலங்கையில் சிங்கள ஆட்சி விரிந்தது வரலாறு.

16ஆம் நூற்றாண்டில் ஈழமண்ணில் வெள்ளையர்கள் கால்பதித்த பொழுது அங்கு இருந்தது இரண்டு இனங்களின் அரசுகள்: ஒன்று தமிழரசு, மற்றையது சிங்கள அரசு. பின்னர் எங்கிருந்து முஸ்லிம் அரசு முளைத்தது?

தனித்துவமான மதத்தையும், பண்பாட்டையும் எமது முஸ்லிம் சகோதரர்கள் கொண்டிருப்பதை எவரும் மறுக்கவில்லை.தமது மதத்தையும், பண்பாட்டையும் இஸ்லாமியத் தமிழர்கள் பேணிப் பாதுகாக்கும் உரிமையை யாரும் மறுதலிக்கவுமில்லை.

தமிழீழ மண்ணின் விடிவிற்காகப் போராடி வீழ்ந்த மாவீரர்களில் எத்தனையோ முஸ்லிம் சகோதரர்களும் உள்ளார்கள். இறுதியாக ஆனந்தபுரத்தில் நிகழ்ந்தேறிய நெருப்பாற்றில் கனரக ஆயுதமேந்தி வீரகாவியமாகிய முஸ்லிம் போராளியை நாங்கள் மறந்துவிட முடியாது.

வீட்டுகொரு மாவீரன் என்ற நிலைமாறி வீட்டில் இரண்டு மாவீரர்களைக் கண்ட முஸ்லிம் குடும்பங்களும் இன்றி வன்னி மண்ணில் வாழ்கின்றன.தமிழகத்தில் தீக்குளித்து ஈகைச்சாவெய்திய எங்கள் அப்துல் ரவூப்பை நாங்கள் யாரும் மறக்கவில்லை.

இந்த மாவீரர்களின் வாழ்வும் சாவும் தமிழீழத்திற்கானது.தமிழீழத்தைக் கூறுபோடுவதற்காக அல்ல!

ஐயனே!

தமிழீழத்தில் இருந்து பிரிந்து சென்று முஸ்லிம் தனியரசை முஸ்லிம்கள் நிறுவலாம் என்கின்றீர்கள்.

சரி.

அந்த அரசுக்கான தொடர்ந்தேர்ச்சியான நிலம் எது? காத்தான்குடியா? சம்மாந்துறையா? பொத்துவிலா? மூதூரா? புத்தளமா? மன்னாரா? அல்லது யாழ் நகரமா? பலஸ்தீனர்களை காசாவிலும், மேற்குக்கரையிலும் இஸ்ரேலிய ஏகாதிபத்தியம் முடக்கியமை போன்று எமது முஸ்லிம் சகோதரர்களை முடக்கிச் சிதறடிப்பதா உங்கள் எண்ணம்?

அப்படித்தான் இருந்தாலும்...

அங்கு வாழும் ஏனைய தமிழர்களின் கதி? ஆரையம்பதியும், வீரமுனையும், சம்பூரும், வண்ணாத்திவில்லும், திருக்கேதீச்சரமும், முற்றவெளியும் எந்த அரசின் ஆளுகைக்கு உட்படும்? தமிழீழ அரசினதா? முஸ்லிம் அரசினதா? அல்லது சிங்கள அரசினதா?தமிழீழத் தனியரசை நிறுவுவது ஈழத்தமிழர்களின் கடன்.

அதற்கு இராசதந்திர அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பது புகலிட உறவுகள் ஒவ்வொருவரின் கடன்.

ஆனால் தமிழீழத்தை துண்டாடுவது எவரது கடன்? தமிழீழத்தை தமிழ், முஸ்லிம், சிங்களப் பிராந்தியங்களாகப் பிரித்து தீர்வுத் திட்டமொன்றை 1985இல் இந்தியப் பேரரசு முன்வைத்த போது அதனை அடியோடு நிராகரித்தவர் எமது தேசியத் தலைவர்.

அந்த சூரியத்தேவனால் நிராகரிக்கப்பட்ட திட்டத்திற்கு நீங்கள் செயல்வடிவம் கொடுக்க முற்படுவதன் சூத்திரம் என்ன? இதுதான் உங்கள் நாடுகடந்த அரசமைக்கும் திட்டத்தின் விஞ்ஞாபனம் என்றால் இதற்கு எதற்காக புகலிட தேசத்தில் தேர்தல்? இந்தியாவிலேயே உங்கள் தேர்தலை நிகழ்த்தலாமே?

புகலிடத் தமிழர்களை சிதறடிப்பது சிங்கள அரசின் திட்டம் என்றால்...

தமிழீழத்தை துண்டாடுவது இந்தியாவின் திட்டமா?

புலம்பெயர் உறவுகளை இணைப்பதற்காக நாடுகடந்த அரசமைப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் ஈழத்தமிழர்களின் தன்னாட்சியுரிமையைப் பற்றிப் பேசுவதை விடுத்து புதிதாக முஸ்லிம்களின் தனியரசு உரிமையைப் பற்றி நீங்கள் பேசுவதன் சூத்திரத்தைத்தான் எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தயைகூர்ந்து விளக்குவீராக.

நிற்க:

தமிழீழத் தேசியக் கொடியாகிய புலிக்கொடியை நீங்கள் அங்கீகரிக்கவில்லையாமே? உங்கள் நாடுகடந்த அரசின் கொடியாக புலிக்கொடி அமையாது என்று உங்கள் அறிவாலோசகர் பீற்றர் சால்க் கூறியுள்ளாராமே? இதன் அர்த்தம்தான் என்ன? உங்களின் தேசியக் கொடிதான் என்ன?

அதுசரி... உங்கள் நாடுகடந்த அரசுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒவ்வொரு வேட்பாளரும் தலா ஆயிரம் பவுண்கள் கட்டுப்பணம் செலுத்த வேண்டுமாமே? எதற்காக? ஏழை எளியவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்கா? அல்லது தடுப்பதற்கா? பிரித்தானிய நாடாளுமன்றம் செல்வதற்கு ஐநூறு பவுண் கட்டுப்பணம் செலுத்தினால் போதும்.

ஆனால் உங்கள் அரசில் இணைவற்கு ஆயிரம் பவுண்களா? நினைக்கவோ பிரமிப்பாக இருக்கின்றது. சட்ட அறிஞரே! நாடுகடந்த தேர்தல் திருவிழா தொடங்கும் நிலையில் இறுதியாக உங்களிடம் இரண்டு கேள்விகள். தென்சூடானிற்கு இடைக்கால நிர்வாகம் கிடைத்தது போன்று தமிழீழத்திற்கும் இடைக்கால நிர்வாக ஆட்சி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக 2003ஆம் ஆண்டில் தேசியத் தலைவரிடம் வாக்குறுதி அளித்திருந்தீர்களே, உங்கள் வாக்குறுதி என்னவாயிற்று?

அதுதான் போகட்டும். ஐ.நா செக்கியூரிட்டிக் கவுன்சிலிலும், ஒபாமாவுடனும் பேசி அமெரிக்கப் படைகளை முள்ளிவாய்க்காலுக்கு அனுப்புவதாக நடேசன் அண்ணாவிடம் கதையளந்தீர்களே, அதற்கு என்ன நடந்தது?

எங்கள் போராளிகளும், பொறுப்பாளர்களும் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியும், சிறைப்பிடிக்கப்பட்டதன் சூத்திரமும் உங்களுக்கும், திருவாளர் கே.பி அவர்களுக்கும் நன்கு தெரியும்.

தயைகூர்ந்து விளக்குவீராக!

ஈழமுரசு

http://www.pathivu.com/index.php/news/6368/54//d,view/

தொடங்கிவிட்டார்கள் புலத்தில். சேரமான், நான் நினைக்கிறேன் இவர் வட்டுக்கோட்டைத் தீர்மானக் காரர் எண்டு.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

இவையளுக்கு சொல்லவேணும் இதுபோல விசயங்களை சனிக்கிழமையிலை படிக்கவேணாமென்டு. சும்மா இருக்கேக்கையே சுத்தம் பிறகு சனிக்கிழமையிலை எண்டா கேக்கவும் வேணுமே. அதுசரி உவர் சிதம்பர சக்கரத்தை பாத்திட்டது போல அலறியிருக்கிறார் வாய்குவாய் ருத்திரகுமாரன் ருத்திரகுமாரன் எண்டும் உளறுரார் என்ன ஏது என்டு தெரியேல்லை. நான் நினைக்கிறன் இவர் நா. க. த. அரசுக்கான மதி உரைஞர் குழுவின்ரை அறிக்கையை படிச்சிருப்பார் போல. அதை உருத்திரகுமார் தான் எழுதினார் என்று இந்தாள் சொல்லது மாதிரியும் தெரியுது. இந்தாள் குப்பை மேடா இல்லை வைக்கல் பட்டறையா எண்டும் தெரியேல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களே(அரசியல் கட்சிகள்) தாங்கள் எந்த பக்கம் சாய்ந்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் என செயற்படுகிரார்கள்.இதில் தமிழர் தங்களது பிரச்சனையை விட்டு விட்டு முஸ்லிம்களோடு எப்படி இணைய முடியும்?. முஸ்லிம்களுக்கு பிரச்சனை எனில் அவர்கள் யாருடன் இணைய வேண்டும் என அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.நாங்களல்ல. யார் இந்த சேர(ரா)மான்?.ஒரு கிழங்காக இருக்கிறார். :lol::lol:

அதை உருத்திரகுமார் தான் எழுதினார் என்று இந்தாள் சொல்லது மாதிரியும் தெரியுது. இந்தாள் குப்பை மேடா இல்லை வைக்கல் பட்டறையா எண்டும் தெரியேல்லை.

கேள்விகளுக்கு உருத்திரகுமார் தான் பதிலளிக்க கடப்பாடுள்ளவர் பாருங்கோ அது கூட தெரியாமல் வைக்கல் பட்டறையில் இருப்பது யார் ? :lol:

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பாக உமது கேள்விகளை இங்கே பதியவும்

View Postதராக்கி, on 25 March 2010 - 04:21 AM, said:

நிச்சயமாக ஞாயிற்றுக்கிழமைக்குள் பதிலகள் வரும்..

இது போல் தராக்கி படம் காட்டி ஒரு தலைப்பு தொடங்கி எங்களுக்கு படம் காட்டி விட்டு அப்படி எதுவும் நடக்காதது போல் இருக்கின்றார் ? அதில் கேள்வி எழுதிய அத்தனை பேரையும் முட்டாள் ஆக்கியது பலருக்கும் தெரியாது போலும்

Edited by tamilsvoice

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வழி பண்ணியாச்சு. இனி நாடு கடந்த தமிழீழ அரசையும் ஒரு வழி பண்ணியாக வேண்டும். அதாவது, அவர்களையும் இயங்கவிடாது குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்கின்ற சிந்தனையில்தான் இவ்வாறாக எழுதி வருகின்றனர்.

சீசனுக்கு ஏற்ப இவர்கள் ஒவ்வொன்றை கையில் எடுத்துக் கொள்கின்றனர். எதனையாவது எதிர்க்க வேண்டும் என்கிற மனோபாவத்தில்தான் இருக்கின்றனர் என்பது இதிலிருந்து நன்கு புலனாகின்றது.

இது ஒருவகை மனோவியாதி. இவர்கள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை என்பது மட்டும் நன்கு புலனாகின்றது.

விசுவநாதனின் ருத்திர புத்திரனே, நியூயோர்க்கை கலங்கடிக்கும் சட்ட அறிஞனே, நாடுகடந்து அரசமைக்கும் அறிஞர்களின் அதிபதியே,

இந்த நக்கல் தானே வேண்டாம் என்கிறது.இந்த நக்கல் ருத்திரகுமாருக்கல்ல எல்லா தமிழனுக்கும்

ஐ.நா செக்கியூரிட்டிக் கவுன்சிலிலும், ஒபாமாவுடனும் பேசி அமெரிக்கப் படைகளை முள்ளிவாய்க்காலுக்கு அனுப்புவதாக நடேசன் அண்ணாவிடம் கதையளந்தீர்களே, அதற்கு என்ன நடந்தது?

எங்கள் போராளிகளும், பொறுப்பாளர்களும் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியும், சிறைப்பிடிக்கப்பட்டதன் சூத்திரமும் உங்களுக்கும், திருவாளர் கே.பி அவர்களுக்கும் நன்கு தெரியும்.

தயைகூர்ந்து விளக்குவீராக!

மே 19 இற்கு முன்னர் தாயகத்தில் ஈழம் அமைப்பதற்குப் புலத்தில், சர்வதேச இராசதந்திரப் போர்பரிந்தவரும், மே 19 இன் பின் நாடு கடந்து வாழும் தமிழர்களுக்கு அரசு அமைத்துக்கொடுப்பதற்கு அல்லும் பகலும் அயராது உழைக்கும் தோழரிடம், தோழர்கள் இப்படிக் கேள்விகள் கேட்கும் நிலை ஏற்பட்டிருப்பது தவிர்க்கமுடியாதது.

உருத்திரகுமாரன் அவர்களிடம் காலம் கடந்து கேட்கப்பெற்ற கேள்விகளாகத்தான் இந்தக் கேள்விகள் இருக்கின்றது. உருத்திரகுமாரனிடம் மட்டுமல்ல, புலம் பெயர் தேசமெங்கும் சர்வதேச சக்திகளுடனான தொடர்பைப்பேணி அரசியல் செய்தவர்களிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் பல கேட்கப்படாமலேயே இருக்கின்றது. மக்களிடம் இருந்து தம்மை நோக்கி கேள்விகள் வராமல் இருப்பதற்காவே தேர்தல்கள், தேர்தல் தொடர்பான செய்திகள், கலந்துரையாடல்கள், காணொளிக் கருத்துப்பகிர்வுகள் என மக்களிற்குச் செய்திகளைக் கொடுத்து, செய்திகளுக்குள் கேள்விகளை உருவாக்கி ஒரு வருடத்தைக் கரைத்துள்ளார்கள்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு வழி பண்ணியாச்சு. இனி நாடு கடந்த தமிழீழ அரசையும் ஒரு வழி பண்ணியாக வேண்டும். அதாவது, அவர்களையும் இயங்கவிடாது குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்கின்ற சிந்தனையில்தான் இவ்வாறாக எழுதி வருகின்றனர்.

சீசனுக்கு ஏற்ப இவர்கள் ஒவ்வொன்றை கையில் எடுத்துக் கொள்கின்றனர். எதனையாவது எதிர்க்க வேண்டும் என்கிற மனோபாவத்தில்தான் இருக்கின்றனர் என்பது இதிலிருந்து நன்கு புலனாகின்றது.

இது ஒருவகை மனோவியாதி. இவர்கள் ஒருபோதும் திருந்தப் போவதில்லை என்பது மட்டும் நன்கு புலனாகின்றது.

இது தானுங்க என் கருத்தும்.

அதனாலை ஒரு பச்சைப்புள்ளி தாறேன்.

கருத்து கூற விருப்பம் இல்லை.... :lol:

குளப்பாமல்... குளம்பாமல்... ஆனால் யாவையும் உள்வாங்கி உற்றுநோக்குவோம் மிகமிக அவதானமாக இதுதான்

ஈழத்தமிழர் இன்றைய யதார்த்த நிலையாக இருக்கும் நன்றி :):lol:

ஏறக்குறைய இது ஒரு அநாமதேயக் கடிதம். திறந்;தமடல் எழுதுபவர் நேர்மையாக தனது சொந்தப் பெயரில் எழுதினால் அது நேர்மையான உண்மையான மடலாக இருக்கும் அதிலும் இந்த மடல் வெளிவந்தது ஈழமுரசில்.ஈழமுரசு என்பது முள்ளி வாயக்காலுக்கு முன்வரை தேசியச் சொத்தாக இருந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பின் அது ஒரு தனிப்பட்ட குழுவின் சொத்தாக மாறிவிட்டது. பிரான்சில் தமிழ் தேசியத்தின் அடையாளமாக இருந்துவரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பணிமனைக்கு வாடகை செலுத்தப் பணமில்லை. ஆனால் அந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் உருவாக்கப்பட்ட ஈழமுரசு பணத்தில் புரண்டுகொண்டு மற்றவர்களுக்கு துரோகிபட்டம் கொடுக்கும் பல்கலைக்கழகமாகவும் திந்தமடல் எழுதும் புளிச்சல் ஏப்பக்காரர்களின் கூடாரமாகவம் மாறிவிட்டது.திறந்த மடலை பிரசுரித்த ஈழமுரசுக்கு ஒரு பணிமான வேண்டுகோள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனைக்குரிய வாடசை செலுத்த உதவிவிட்டு பிறது திறந்த மடலும் மூடியமடலும் எழுதுங்கள். பெற்ற தாயை பிச்சை எடுக்க விட்டு மகன் ஊருக்கெல்லூம் பொருளுதவி செய்யும் கொடை வள்ளல் என்று பட்டமெடுகக் அலையும் போலித்தனம் இனியும் வேண்டாம்

மே 19 இற்கு முன்னர் தாயகத்தில் ஈழம் அமைப்பதற்குப் புலத்தில், சர்வதேச இராசதந்திரப் போர்பரிந்தவரும், மே 19 இன் பின் நாடு கடந்து வாழும் தமிழர்களுக்கு அரசு அமைத்துக்கொடுப்பதற்கு அல்லும் பகலும் அயராது உழைக்கும் தோழரிடம், தோழர்கள் இப்படிக் கேள்விகள் கேட்கும் நிலை ஏற்பட்டிருப்பது தவிர்க்கமுடியாதது.

உருத்திரகுமாரன் அவர்களிடம் காலம் கடந்து கேட்கப்பெற்ற கேள்விகளாகத்தான் இந்தக் கேள்விகள் இருக்கின்றது. உருத்திரகுமாரனிடம் மட்டுமல்ல, புலம் பெயர் தேசமெங்கும் சர்வதேச சக்திகளுடனான தொடர்பைப்பேணி அரசியல் செய்தவர்களிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் பல கேட்கப்படாமலேயே இருக்கின்றது. மக்களிடம் இருந்து தம்மை நோக்கி கேள்விகள் வராமல் இருப்பதற்காவே தேர்தல்கள், தேர்தல் தொடர்பான செய்திகள், கலந்துரையாடல்கள், காணொளிக் கருத்துப்பகிர்வுகள் என மக்களிற்குச் செய்திகளைக் கொடுத்து, செய்திகளுக்குள் கேள்விகளை உருவாக்கி ஒரு வருடத்தைக் கரைத்துள்ளார்கள்.

இதுதான் உண்மை. இதைத் தொடர்கதையாக தொடரவே செய்வார்கள். அப்போது தான் இவர்களால் ஏற்கனவே சுருட்டிய பணங்களையும், தமது இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். தாயகத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள், "புலன்" பெயர்ந்தவர்களின் கூத்துக்களையோ அறிக்கைகளையோ தாம் கணக்கிலெடுப்பதில்லையென்பதை தெளிவாகவே தெளிய வைத்தும், உருத்திரகுமார் போன்றவர்கள் புரியாதது போல் நடிக்கத் தான் செய்வார்கள். அவர்களுக்குத் தேவை தாயக மக்களின் தேவைகளல்ல, தமது இருப்புகள் மட்டுமே.........

ஈழமுரசு தனது கடமையைச்செய்து வருகின்றது. கொடுப்பனவிற்கு கொடிபிடிப்பதல்ல கொள்கைப் பிடிப்பிப்புள்ளோரின் செயல்.

ஏறக்குறைய இது ஒரு அநாமதேயக் கடிதம். திறந்;தமடல் எழுதுபவர் நேர்மையாக தனது சொந்தப் பெயரில் எழுதினால் அது நேர்மையான உண்மையான மடலாக இருக்கும் அதிலும் இந்த மடல் வெளிவந்தது ஈழமுரசில்.ஈழமுரசு என்பது முள்ளி வாயக்காலுக்கு முன்வரை தேசியச் சொத்தாக இருந்தது. முள்ளிவாய்க்காலுக்குப் பின் அது ஒரு தனிப்பட்ட குழுவின் சொத்தாக மாறிவிட்டது. பிரான்சில் தமிழ் தேசியத்தின் அடையாளமாக இருந்துவரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பணிமனைக்கு வாடகை செலுத்தப் பணமில்லை. ஆனால் அந்த தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் உருவாக்கப்பட்ட ஈழமுரசு பணத்தில் புரண்டுகொண்டு மற்றவர்களுக்கு துரோகிபட்டம் கொடுக்கும் பல்கலைக்கழகமாகவும் திந்தமடல் எழுதும் புளிச்சல் ஏப்பக்காரர்களின் கூடாரமாகவம் மாறிவிட்டது.திறந்த மடலை பிரசுரித்த ஈழமுரசுக்கு ஒரு பணிமான வேண்டுகோள் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனைக்குரிய வாடசை செலுத்த உதவிவிட்டு பிறது திறந்த மடலும் மூடியமடலும் எழுதுங்கள். பெற்ற தாயை பிச்சை எடுக்க விட்டு மகன் ஊருக்கெல்லூம் பொருளுதவி செய்யும் கொடை வள்ளல் என்று பட்டமெடுகக் அலையும் போலித்தனம் இனியும் வேண்டாம்

உந்த சேரமான் ருத்ர குமாரோட சேர்ந்து வேலைசெய்கிறதை விட்டு போட்டு. குழப்பி அடிக்கிற வேலை எண்டா காணும்.

நீங்க சொன்ன மாதிரி பல நாடுகளில் கூத்துகள்.

ஜ.பி.சி நிதி இல்லாமல் பெரும் திண்டாட்டம்.

நோர்வேயில் தமிழர் ஒருங்கினைப்பு குழுவில கொஞ்ச பேர் தமிழரின் பாடசாலையை கையகபடுத்தி வைத்து கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசு பாடசாலையின் உள்ளே வந்து விளக்கவுரை, பிரசுரம் கொடுக்க அனுமதி இல்லை.

தாங்க வேற அவை வேற எண்டு வியாக்கானம் வேற

***

Edited by இணையவன்
*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

சேரமானின் கருத்து வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப் பட்டதை நியாயப் படுத்துவதுபோல அமைந்திருக்கிறது. வடபகுதி முஸ்லிம்களதும் அம்பாறை மாவட்ட தமிழர்களதும் நலன்களை உச்சப்படுத்தும் வகையில் ஒரு தீர்வு வ்ஏண்டும். உருத்திரகுமாரனின் நிலைபாடு சரியான ஆரம்பமமென நினைக்கிறேன். உருத்திர குமாரன் தமிழ் மக்களது ஆணையை மதித்து தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தலைமையோடு சேர்ந்து ஈழத்து முஸ்லிம் தலைவர்களோடும் பன்முகப் பட்ட கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.

2008, 2009 மே வரைக்கும் புலம் பெயர்ந்த நாடுகளில் இராசதந்திர பணி ஆற்றியவர்கள் அனைவரிடமும் கேட்க்கப் பட வேண்டிய கேழ்விகள் இவை உருத்திர குமாரனிடம் மட்டும் கேகட்க்காதீர்கள் எல்லோரிடமும் கேழுங்ககள். மிகவும் அவசியமான வரலாற்றுக் கேழ்விகள் அவை.

Edited by poet

பேசாமல் உருத்திரகுமார் தான் இவ்வளவு அழிவுக்கும் கால் என்று இந்த சோரமான் எழுதியிருக்கலாம்.

இப்படி வசைபாடுவதை விட இந்த முண்டத்திடம் வேறு என்ன மாற்றுத் திட்டம் இருக்காம் ?

சேரமானின் கருத்து வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப் பட்டதை நியாயப் படுத்துவதுபோல அமைந்திருக்கிறது. வடபகுதி முஸ்லிம்களதும் அம்பாறை மாவட்ட தமிழர்களதும் நலன்களை உச்சப்படுத்தும் வகையில் ஒரு தீர்வு வ்ஏண்டும். உருத்திரகுமாரனின் நிலைபாடு சரியான ஆரம்பமமென நினைக்கிறேன். உருத்திர குமாரன் தமிழ் மக்களது ஆணையை மதித்து தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தலைமையோடு சேர்ந்து ஈழத்து முஸ்லிம் தலைவர்களோடும் பன்முகப் பட்ட கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.

ஜயா அவசரம் வேண்டாம். நாடுகடந்த அரசும், கூட்டமைப்பும் ஓர் இடத்தில் சந்திக்கும்.

தளங்கள் வேறு, கொள்கை வேறல்ல

Edited by aathirai

இதை எழுதிய சேரமானும் கிழக்கு மாகாணசபை வளாகத்தில் குப்பை கூட்டுறதுக்கு பொறுப்பான சேரமானும் ஒரே ஆளோ?

(உருத்திர குமாரன் அவர்களுடனான ஆதவன் இதழ் பொறுப்பாசிரியர் பொன்னில்லா மேற்கொண்ட நேர்காணலின் சிலபகுதிகள் வருமாறு: முழுமையான நேர்காணல் அடுத்த சில நாட்களில் பதிவு செய்யப்படும்.)

2009 மே மாதத்திற்குப் பிறகு உருவான நாடு கடந்த தமிழீழ அரசு ஈழத் தமிழ் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

*

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்னும் அமைக்கப்படவில்லை; அதனை உருவாக்குவதற்கான பணிகள்தான் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதனைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முன்மொழிவு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து இவ் அரசாங்கத்தினை அமைக்கும் பணி முன்னேற்றமடைந்து வருகிறது. இவ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்பதனை ஆய்வு செய்து இதனை அமைக்கும் வழிவகைகள் தொடர்பான அறிக்கையினை மதியுரைக்குழு தைத்திருநாளன்று மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்காக வெளியிட்டிருந்தது. 15.02.2010 வரை மக்கள் கருத்துக்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் மீளமைக்கப்பட்ட அறிக்கை 15.03.2010 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் இடம் பெறுவர். இவர்களில் 115 பேர் மக்கள் மத்தியிலிருந்து இதற்கென நடாத்தப்படும் தேர்தல்கள் மூலமாக ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் பல்வேறு நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்தல்கள் உடனடியாக நடாத்துவதற்கு கடினமான இடங்களில் 20 பேராளர்கள் முதலாவது அரசவையால் தெரிந்தெடுக்கப்படுவார்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான நேரடித் தேர்தல்கள் மே மதம் 2 ஆம் திகதி உலகளாவியரீதியில் நடாத்தப்படுகிறது. அரசாங்கத்தின் முதலாவது அமர்வினை மே மாதம் 17-19 காலப்பகுதிக்குள் கூட்டுவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு ஈழத் தமிழர் தேசம் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படுவது ஈழத் தமிழ் மக்களிடம் புதியயொரு நம்பிக்கையையும் நாம் தோற்றுப் போய்விடவில்லை என்ற உணர்வையும் கொடுத்து வருகிறது.

கே.பி. பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள். குறிப்பாக அவர் இலங்கை அரசோடு பேசிக் கொண்டு தானாக முன் வந்து கைதாகி கொழும்பில் அரசு அரவணைப்பில் இருக்கிறார் என்பது பிரதான குற்றச்சாட்டு இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

* திரு செ. பத்மநாதன் அவர்கள் (கே.பி.) மலேசியா கோலாலம்பூரில் வைத்து மலேசிய இராணுவப் புலனாயு;வுத்துறையால் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் சிறிலங்கா அரசிடம் கையளிக்கபட்டிருக்கிறார். இது தொடர்பான நம்பகமான தகவல் எமக்குக் கிடைத்தமையால் சட்டநெறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட இக் கடத்தலைக் கண்டித்தும் இச் சம்பவம் குறித்து விசாரணை கோரியும் நாம் அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தோம். அவர் தானாக முன்வந்து கைதாகியது என்று கூறப்படுவதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. 30 வருடங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்தில் இயங்கிய ஒரு போராளி குறித்து எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமானதும் அல்ல.

இவர் சிறிலங்காவின் கைதியாகிய பின்னர் பல்வேறுவகையான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. இவர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதில் இருந்து வசதியாக வைக்கப்பட்டள்ளார் என்பது வரையிலான செய்திகள் வரை ஊடகங்கள் வெளியிடுகின்றன. இவற்றின் உண்மை பொய் குறித்த விடயங்கள் எதுவும் எமக்குத் தெரியாது. இருந்த போதும், சிறிலங்கா தமிழ் அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் உலகறிந்தது. அனைத்துலக மனித உரிமை அரங்குகளில் சித்திரவதை சிறிலங்காவில் ஒரு நிரந்தர விடயம் எனத் தொடர்ச்சியாகக் கூறப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததொன்று.

எனவே அவர் மட்டுமல்ல தமிழீழ விடுதலைப்புலிகளது ஏனைய தலைவர்களும் போராளிகளும் என்ன சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறைக்கைதிகளாக இருக்கும் அவர்களது நிலையை அந்தச் சூழலில் இருந்து தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான முதல் அறிவிப்பினை இவரே விடுத்திருந்தபடியால் எத்தயை ஏற்பாட்டின் அடிப்படையில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதனை இச் சந்தர்பத்தில் வெளிப்படுத்தல் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் பணியைப் பொறுத்த வரையில்; நாம் இந்த முயற்சியினை ஆரம்பிக்கும் போதே எழக்கூடிய சட்டப்பிரச்சினைகள் காரணமாகவும் தற்போதய சர்வதேச அரசியல் யதார்த்த நிலை காரணமாகவும் இது ஒரு சுயாதீனமான முயற்சியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தோம். இந்த அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சியை ஒருங்கிணைக்கும் பணியை நான் ஏற்றுக் கொண்டேன்.

இதற்கமைய திரு செ.பத்மநாதன் அவர்களும் 15.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தான் விடுத்திருந்த அறிவிப்பில் இதனை அமைக்கவுள்ள செயற்குழு சுயாதீனமானது என அறிவித்திருந்தார். ஆரம்பம் முதல் நாம் எமது முயற்சியினை சுயாதீனமான குழு என்ற நிலையிலிருந்தே முன்னெடுத்து வருகிறோம்.

இதற்கிடையில், திரு செ.பத்மநாதன் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் நாம் அவருடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் அவரது வழிகாட்டலில் செயற்படுவதாகவும் வதந்திகளை சிலர் பரப்ப முனைவதான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன நாம் அவருடன் எந்தவகையான தொடர்புகளையும் பேணவில்லை. அவரது வழிகாட்டலில் செயற்படவும் இல்லை. இந்த விசமத்தனமான வதந்தி பரப்பும் முயற்சி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் எமது முயற்சிக்கு இடையூறு விளைவிக்கும் கெட்ட உள்நோக்கம் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.

இவை மட்டுமன்றி, நாம் எடுத்துள்ள முயற்சி ஒரு ஜனநாயக வழியிலான முயற்சி. இதில் வெளிப்படைத் தன்மை முக்கியமானதாக உள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தை நடத்தப்போகிறவர்கள் திரு கே.பி யோ அல்லது ருத்ரகுமாரனோ அல்லது மதியுரைக்குழுவோ அல்லது நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களோ அல்ல.

இதனை நடத்தப்போகிறவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்காக நடத்தப்படவுள்ள நேரடித் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்படுபவர்கள். கொள்கை மீதும் மக்கள் மீதும் நேர்மையான விசுவாசம் கொண்ட, சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைக்கும் பணிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்கும் ஆற்றல் உள்ளவர்களைத் தான் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.

நேர்காணல் தொடரும்

  • தொடங்கியவர்

வட்டுக்கோட்டைத் துpர்மான வாக்கெடுப்பு தேர்தல்கள் நாட்டுக்கு நாடு நடத்துவதோடு நின்றுவிடும் என்றுதான் நினைக்கின்றேன். அவர்களின் அடுத்த கட்டவேலைகள் என்னவென்பதில் தெளிவில்லை. ஆனால் நாடுகடந்த அரசாங்கம் அமைப்பவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு வரம்புக்குட்பட்ட செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லக் கூடிய திட்டங்களை வைத்தள்ளார்கள்.

யார் இந்த ஆள்? சேரமன்னனின் பெயருக்கு அவமானத்தை தருபவன்? உருப்படியாக ஒன்றை நடத்தவிடுங்கள். இந்த ஆள் கட்டுரையை ஏன் பகுத்தறிவுள்ள ஊடகங்கள் வெளியிட வேண்டும்? காட்டுமிராண்டிகள் கூட இனத்தின் இன்னல்களுக்கு ஒற்றுமையாக இருந்தனர் தமிழனுக்கு தன் இனத்தவனை கொச்சைபடுத்துவதற்கு மட்டுமே ஒற்றுமையாக இருந்துள்ளான். சென்று கொண்டிருக்கிறது ஒருவருடம் நாம் இழந்ததை எப்பொழுது மீட்போம்? சிந்திக்கின்றோமா? இனியாவது தமிழன் ஒற்றுமையாக இருப்போம், சதிகளை முறியடிப்போம்.

"ஈழமுரசு தனது கடமையைச்செய்து வருகின்றது. கொடுப்பனவிற்கு கொடிபிடிப்பதல்ல கொள்கைப் பிடிப்பிப்புள்ளோரின் செயல். "........

ஆகா அற்புதமான கொள்கைப் பிடிப்பு. தாயக விடுதலையையும் தேசியத் தலைவரையும் நேசித்த பல்லாயிரக் கணக்கான ஏழைப் போராளிகளும் ஏழை மக்களும் சிங்கள் இராணுவத்தின் கொடுஞ்சிறையில் வாடிக் கொண்டிருக்க அடுத்த வேளை உணவுக்கு வழியின்றி பசியோடும் பட்டிணியோடும் எதிரியிடம் கையேந்திக் கொண்டிருக்க தங்களுக்கு வேண்டிய விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரை கோடிக் கணக்கில் சிங்கள இராணுவத் தரகர்களுக்கு பணக் கொடுத்த வெளியல் எடுத.தவிட்டது அற்புதமான மேன்மையான கொள்கை. வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் சமூக சேவை

Edited by athiyan

எல்லோரையும் ஏற்றிப்போக கப்பல் வருமாம்?

இந்த நம்பிக்கையைக் கொடுத்தவர்கள் யார் என்று கேட்பது தவறா?

கடைசி மணித்துளி வரை தொடர்பில் இருந்தவர்கள் மௌனமா இருப்பதன் மர்மம் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரையும் ஏற்றிப்போக கப்பல் வருமாம்?

இந்த நம்பிக்கையைக் கொடுத்தவர்கள் யார் என்று கேட்பது தவறா?

கடைசி மணித்துளி வரை தொடர்பில் இருந்தவர்கள் மௌனமா இருப்பதன் மர்மம் என்ன?

கடைசி நம்பிக்கையை கொடுத்து இந்தியா இது தவறு, தவறுக்காக வருந்துகாலம் உருவாக்கபடும், ஒட்டு மொத்த தமிழர்களின் எதிரி இந்தியா. இந்தியாவின் எதிரிகளுடன் கைகோப்போம், அவர்களை பலப்படுத்துவோம்,அவர்களுக்கு உதவிகள் செய்வோம், இந்தியாவை உடைப்பதையே லட்சியமாக வரித்து கொள்வோம், இந்திய நக்சலட்டுகளின் போராட்டத்துக்கு உலகவெளியில் ஆதரவை திரட்டுவோம், அவர்களது வெற்றிகளை உலகம் முழுதும் பரவும் வகை செய்திடுவோம், அடக்கபட்ட மக்களுக்காக குரல் கொடுப்போம் ,அவர்கள்சார்ந்த ஒன்றுகூடல்களிலும், பேரணிகளிலும் விருப்புடம் பங்கேற்போம். அவர்களுக்கு ஆதரவாக எ்ன்றும் செயற்படுவோம். :rolleyes::):lol:

சேரமான் என்ற பெயரில் பத்திரிகை ஆசிரியரின் திருவிளையாடலே .... யாரிந்த பத்திரிகை ஆசிரியர் யாரும் தெரிந்தால் சொல்ல முடியுமோ? இவரை நாடுகடந்த அரசில் இணைக்கவில்லை என்ற ஆதங்கமோ? இவரை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினாலே எல்லா பிரைச்சனைக்கும் முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

பாவம் அவர் ஒரு அப்பாவி.இது எல்லாம் ஓளி மயமானவர்களின் திருவிளையாடல். பணத்துக்காக எதுவும் செய்யலாம்.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.