Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏப் 30, 2010 மணி தமிழீழம்

பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல்.

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்ரர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு!

எனது மரியாதைக்கும் மதிப்புக்குமுரிய தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல்.

parvathi.gif

நான்நீண்டகாலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது காலும் கையும் செயலற்ற நிலையில் இருந்து வருகிறேன். நான் தமிழ் நாட்டில் இருந்த காலத்தில் முசிறியிலுள்ள டாக்ரர் ராஜேந்திரனிடம் வைத்தியம் பெற்று வந்தேன் ஆனால் 2003 ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு சென்றபடியால் தொடர்ந்து வைத்தியம் செய்ய முடியாமல் போய்விட்டது. வன்னியிலும் இராணுவ முகாமிலும் சரியான மருத்துவ வசதிகள் இல்லாதபடியால் எனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுவிட்டது.

கொழும்பில் எளிதில் விசா எடுக்க முடியாத சூழ்நிலையில் எனது மகள் விநோதினி இராஜேந்திரம் என்னை மலேசியாவிற்கு வரவழைத்து அங்கு இந்தியா விசா பெற்று என்னை சென்னைக்கு ஒரு பெண்ணின் உதவியுடன் அனுப்பி வைத்தார்.

கனடிய குடிமகளான எனது மகளுக்கு மலேசியாவில் இருந்து கொண்டு இந்திய விசாவிற்கு விண்ணப்பித்தபோதும் அதனை உரிய நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் எங்கோ ஒரு தவறு ஏற்பட்டு இருக்க வேண்டும் இல்லாது விடின் உரிய கடவுச்சீட்டு, ஆறுமாதவிசாஅனைத்தும் இருந்தும் சென்னையில் நான் விமானத்தை விட்டு இறங்க முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு என்னையும் என்னுடன் துணைக்கு வந்த பெண்மணியையும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

எனது வைத்தியத்திற்கு டாக்ரர் இராஜேந்திரன் வேறு தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் ஏற்பாடு செய்வார் என்பதால் தயவு செய்து நான் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு மலேசியாவிலள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக ஏற்பாடு செய்து தருமாறு அன்போடு வேண்டுகின்றேன்.

நான் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது தெமாடர்பாக தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தில் பதில் அளித்த நீங்கள் நான் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரம்பினால் அதைப்பற்றி பரிசீலித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதத்தயார் என தெரிவித்திருந்தீர்கள். உங்களது உறுதிமொழி எனக்கு ஆறுதலைத் தந்துள்ளது.

தங்கள் உதவியினை என்றும் மறக்கமாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.

நன்றியுடன் தங்கள் உடன்பிறப்பு

திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதி

pathivu

Edited by கறுப்பி

  • Replies 54
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் குத்தினாலும் அரிசியானா சரிதான்!

பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை வழங்கத் தயார் : தமிழக அரசு வக்கீல் _

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் நிபந்தனையின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்கத் தயார் என தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா தெரிவித்தார்.

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகக் கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை, இந்தியாவுக்குள் அனுமதிக்காகதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது தமிழக அரசு வக்கீல் ராஜா கலிபுல்லா கூறுகையில்,

"பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளிடம் இருந்து அரசுக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. அவர் மனு கொடுத்தால் நிபந்தனையின் அடிப்படையில் சிகிச்சைக்கு அனுமதிக்கத் தயார்" என்றார்.

மத்திய அரசு வக்கீல் ரவீந்திரன் கூறுகையில்,

"தமிழக அரசு கேட்டுக்கொண்டால் இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளது" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில்,

"பார்வதியம்மாளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக 2 வாரத்துக்குள் மனு கொடுக்கப்படும். அந்த மனுவை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து 4 வாரத்துக்குள் முடிவைத் தெரிவிக்க வேண்டும்" என்றனர்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=22756

  • கருத்துக்கள உறவுகள்

சில, விடயங்களில் கருணாநிதி இழகிய மனப்பான்மையுடன் இருக்கின்கின்றார்.

சோனியா எப்படி கருணாநிதிக்கு அம்மையார் போலை தான்.........

:mellow:தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென்பதையே அறிய முடியாத நிலையிலுள்ளவரின் பெயரில் இப்படியொரு கடிதம் வெளிவந்திருப்பதை அறிய முடியுமா என்ன?? :huh:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:mellow:தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென்பதையே அறிய முடியாத நிலையிலுள்ளவரின் பெயரில் இப்படியொரு கடிதம் வெளிவந்திருப்பதை அறிய முடியுமா என்ன?? :huh:

நீங்க எல்லாரும் எங்கையோ இருக்க வேண்டியவங்கப்பா... இங்கை வந்து குப்பை கொட்டுறிங்க.. :)

(உங்க கண்டுபிடிப்பை பாராட்டாமல் இருக்க முடியலை)

  • கருத்துக்கள உறவுகள்

:mellow:தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென்பதையே அறிய முடியாத நிலையிலுள்ளவரின் பெயரில் இப்படியொரு கடிதம் வெளிவந்திருப்பதை அறிய முடியுமா என்ன?? :huh:

ஒரு நோயாளியின் சார்பில் அவரின் மருத்துவ தேவையை விளக்கி கடிதம் எழுதுவிப்பது சாதாரணமானது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பார்வதியம்மா ஒரு நோயாளி. அவர் இந்திய தேசத்திற்கு பிரபாகரனின் தாயாக.. ஈழக்கோரிக்கையை முன் வைத்துப் போகவில்லை. அவர் சாதாரண மனிதனாக நோயாளி என்ற வகையில் மருத்துவ உதவி வேண்டி பயணம் செய்ய விரும்புகிறார் அவ்வளவே. அது ஒரு மனிதாபிமான தேவை. இந்த உதவியை வன்னியில் இருக்கும் சாதாரண மக்கள் கேட்டாலும் செய்து கொடுக்கத்தான் வேண்டும்.

அரசியல் செய்யத்தான் பார்வதிப்பிள்ளைய பாடாய்ப்படுத்துறீங்கள். கொழும்பில விசாவெடுத்து இந்தியாவோ கணடாவோ டென்மாக்குக்கோ போயிருக்கலாம். சிவாஜிலிங்கம் சிங்கப்பூர் கூட்டிக்கொண்டு போனதே பார்வதிப்பிள்ளைய வச்சு பிரபாகரன் அரசியல் செய்யத்தான். இங்க பிரதான செயத்தியா ரண்டு கிழமை இழுபடுறதிலயிருந்து விளங்கவேணும் உவயட நோக்கம். உங்கட மனிதாபிமானத்த காம்பில உப்புடி இருக்கிற சனத்திட்ட காட்டுங்கோ. :mellow::huh:

இவர் நேர இருந்து ஆராஞ்சிட்டு வந்து சொல்லுறார் எல்லோரும் கேளுங்கோ. இலங்கையை விட்டு வெளியில போறதே பார்வதி அம்மாளுக்கு பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்தது. அப்படியான நிலையில் அவரை மகளிடம் கையளிக்க மலேசியா கொண்டு போனார்களே அன்றி.. அரசியல் செய்ய அல்ல.

அரசியல் செய்வது கருணாநிதியும் சோனியாவும் தான். இந்திய தூதரகம் விசா வழங்கி விமானத்தில் பறக்கும் மட்டும் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை பார்க்கல்லையாக்கும் ஒருத்தரும். போய் இறங்கின உடனதான் கிண்டி எடுத்துப் பார்த்தவையாக்கும்.

கருணாநிதிக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் இருக்கும் அவப்பெயரை நீக்க.. இதனை அரசியலாக்க வேண்டிய தேவை இருந்தது. அதன் பொருட்டு ஜெயலலிதாவின் கடிதத்தை சாட்டு வைத்து திருப்பி அனுப்பி அதனை வைத்து இப்போ தாங்கள் பார்வதி அம்மாளுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என்று கூட்டறிக்கை விட்டு நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார்கள்.

அதுவும் வைகோ போன்றோர் நீதிமன்றம் போய் அதன் வழி கேட்டதால் தான் இந்த நடிப்பும் அரங்கேறியது.

இதில் அரசியல் செய்வதால் சிவாஜிலிங்கத்திற்கோ எவருக்குமோ எந்த இலாபமும் இல்லை. சிவாஜிலிங்கம் உறவினர் என்ற வகையில் தன்னாலான உதவிகளை செய்து வருகிறார். அவ்வளவே.

பார்வதி அம்மாளுக்குத்தான் விசா. ஆனால் காம்பில இருந்த பல பேர் ஐரோப்பா.. இந்தியா.. கனடா.. அவுஸ்திரேலியா என்று களவாப் போய் அசைலம் அடிச்சிருக்கினம். அதுகளுக்கும் கணக்குப் பாருங்கோ. அதோட தாடிமாமாவிற்கு கொலைக் கூலிகளா இருந்ததுகளும் இப்ப அகதியாத்தான் களவா உலக நாடுகள் எங்கனும் வந்திருக்கினம்.

அதைக் கருத்தில் கொண்டே சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தியடி குத்தியரின் கூட்டாளி ஒருத்தருக்கு வெளிநாடு தப்பிக்க முடியாத பிடிவிறாந்து போட்டிருக்கினம். உதுகளையும் கணக்குப் பாருங்கோ.

யார் எப்படி எங்க என்ன அரசியல் செய்யினம் என்பது புரியும்.

பார்வதி அம்மாளை விடுங்கோ. அவா நோயாளி மட்டுமே. அரசியல் செய்யவில்லை.

இந்தியாவை துரோகி எண்டு சொல்லிக்கொண்டிருக்கிறாக்கள் சொல்லுங்கோ பார்வதி அம்மா கடிதம் எழுதினது பிழையோ சரியோ, துரோகியட்ட கையேந்திறது சரியோ, உங்களில கனபேருக்கு இந்தியா வேணும். அதுக்க பெரிய லெவல் கதையளும். போங்கடா போங்க உங்க இந்திய எதிர்ப்பும் நீங்களும்

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்போரில் அநேகர் அமெரிக்காவில் குடியேறத்தான் விரும்புகின்றனர் ஏனெனில் அமெரிக்கா சுதந்திரமாக வாழவும் கருத்துச் சொல்லவும் அனுமதித்துள்ளது. இதைப்போலவே இந்தியா என்ற நாட்டில் விரும்பிப் போய் வாழ்வதற்கும் பலருக்கு விருப்பம் இருக்கலாம். அதற்காக இந்தியாவின் ஆளும் வர்க்கத்தின் அரசியல் கொள்கைகளை விரும்பவேண்டிய கட்டாயம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அந்தளவிற்குப் போவான்.. இந்தியாவுக்குள் தான் சீமானும் இருக்கிறான். நெடுமாறன் ஐயாவும் இருக்கிறார். வைகோவும் இருக்கிறார். முத்துக்குமாரும் இருந்தான்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பது என்பது அதன் கொள்கை மாற்றத்தை வேண்டியே அன்றி.. இந்தியாவை பகை என்று வரையறுத்துக் கொள்வதை அல்ல. நாளை இந்திய ஆளும் வர்க்கம் தனது கொள்கைகளில் மாற்றம் செய்து எம்மை அனுசரிக்கும் போக்கை கைக் கொண்டால் நிச்சயம் அதை வரவேற்கத்தான் வேண்டும். இன்றைய சூழலில் இந்திய ஆளும் வர்க்கங்களின் அது மாநிலமாக இருக்கட்டும் மத்தியாக இருக்கட்டும் அவற்றின் போக்குகள் குறித்தே மக்கள் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனரே தவிர.. அதன் பிரதிபலிப்பாக எழுதும் இந்திய எதிர்ப்புணர்வு என்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் வெறுப்பதாக கருத முடியாது. அப்படி அமையவும் இல்லை.

Edited by nedukkalapoovan

:mellow:தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றதென்பதையே அறிய முடியாத நிலையிலுள்ளவரின் பெயரில் இப்படியொரு கடிதம் வெளிவந்திருப்பதை அறிய முடியுமா என்ன?? :huh:

நீங்களுமா?

உங்கள்மீது பெருமதிப்பு வைத்திருந்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களுமா?

உங்கள்மீது பெருமதிப்பு வைத்திருந்தேன்

அவர் நினைத்திருக்கலாம் இந்தியா எங்களுக்கு எல்லாம் எதிரி...எங்களைப் போன்ற சாதரணமானவர்களுக்கே எதிரி என்றால் தேசிய தலைவரைப் பெற்றவர் அந்த தாய்...அத் தாயை வைத்து நாங்களும் அரசியல் செய்ய வேண்டுமா...என நினைத்திருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்......மகிந்தாவே பார்வதியம்மா வெளியேற தடையில்ல எங்கு வேண்டுமென்றாலும் போகலாம் என்டு சொன்னதா இங்கினேக்க எங்கயோதான் வாசிச்சன், சிவாஜிலிங்கத்தாரும் விசா எடுக்காமல் சிங்கப்பூருக்குத்தான் கொண்டு போனவர். மலேசியாவில மகள் இல்லாமல் மலேசியாவுக்கு கொண்டு போனது இந்தியாவுக்கு கொண்டுபோய் அங்கைவச்சு அரசியல் செய்யத்தான். சிவாஜிலிங்கத்தின்ட விசா மறுக்கப்பட்டதும் அவர் போய் அரசியல் செய்யப்போறார் எண்டுதான்.

இந்தியாவில மகள் இருக்க மகள் எடுக்க போகாமல் வைகோ நெடுமாறன் எயாப்போட்டுக்கு எடுக்க போனதும் அரசியல் செய்யத்தான். பார்வதியம்மா போறதுக்கு தடையிருந்தது வைகோ நெடுமாறனுக்கு தெரியாமல் இருந்திருக்காது. ரகசியமா வச்சிருந்து திருப்பி அனுப்பிப்போட்டு அரசியல் செய்யிறது வைகோ நெடுமாறன் பிளானாக்கூட இருக்கலாம். கருணாநிதிக்கு உந்த விசயம் தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

இந்தியாவில கனடாவில டென்மாக்கில புள்ளையள் இருக்கு முறையா விசாவெடுக்க எந்த பிரச்சனையும் இருக்கவுமில்ல அப்பிடியிருக்க விசா தேவையில்லாத சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கினம்..... அங்கயிருந்து மலேசியா விசாவெடுத்து கூட்டிக்கொண்டு போயிருக்கினமெண்டா.....

உந்த பிள்ளையள் மூண்டுபேருக்கும் வாய் இல்லயோ? சத்தத்தயே காணேல்ல!!!!! :mellow:

இவர் நேர இருந்து ஆராஞ்சிட்டு வந்து சொல்லுறார் எல்லோரும் கேளுங்கோ. இலங்கையை விட்டு வெளியில போறதே பார்வதி அம்மாளுக்கு பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்தது. அப்படியான நிலையில் அவரை மகளிடம் கையளிக்க மலேசியா கொண்டு போனார்களே அன்றி.. அரசியல் செய்ய அல்ல.

அரசியல் செய்வது கருணாநிதியும் சோனியாவும் தான். இந்திய தூதரகம் விசா வழங்கி விமானத்தில் பறக்கும் மட்டும் ஜெயலலிதா எழுதிய கடிதத்தை பார்க்கல்லையாக்கும் ஒருத்தரும். போய் இறங்கின உடனதான் கிண்டி எடுத்துப் பார்த்தவையாக்கும்.

கருணாநிதிக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் இருக்கும் அவப்பெயரை நீக்க.. இதனை அரசியலாக்க வேண்டிய தேவை இருந்தது. அதன் பொருட்டு ஜெயலலிதாவின் கடிதத்தை சாட்டு வைத்து திருப்பி அனுப்பி அதனை வைத்து இப்போ தாங்கள் பார்வதி அம்மாளுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என்று கூட்டறிக்கை விட்டு நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார்கள்.

அதுவும் வைகோ போன்றோர் நீதிமன்றம் போய் அதன் வழி கேட்டதால் தான் இந்த நடிப்பும் அரங்கேறியது.

இதில் அரசியல் செய்வதால் சிவாஜிலிங்கத்திற்கோ எவருக்குமோ எந்த இலாபமும் இல்லை. சிவாஜிலிங்கம் உறவினர் என்ற வகையில் தன்னாலான உதவிகளை செய்து வருகிறார். அவ்வளவே.

பார்வதி அம்மாளுக்குத்தான் விசா. ஆனால் காம்பில இருந்த பல பேர் ஐரோப்பா.. இந்தியா.. கனடா.. அவுஸ்திரேலியா என்று களவாப் போய் அசைலம் அடிச்சிருக்கினம். அதுகளுக்கும் கணக்குப் பாருங்கோ. அதோட தாடிமாமாவிற்கு கொலைக் கூலிகளா இருந்ததுகளும் இப்ப அகதியாத்தான் களவா உலக நாடுகள் எங்கனும் வந்திருக்கினம்.

அதைக் கருத்தில் கொண்டே சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அத்தியடி குத்தியரின் கூட்டாளி ஒருத்தருக்கு வெளிநாடு தப்பிக்க முடியாத பிடிவிறாந்து போட்டிருக்கினம். உதுகளையும் கணக்குப் பாருங்கோ.

யார் எப்படி எங்க என்ன அரசியல் செய்யினம் என்பது புரியும்.

பார்வதி அம்மாளை விடுங்கோ. அவா நோயாளி மட்டுமே. அரசியல் செய்யவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எல்லாரும் எங்கையோ இருக்க வேண்டியவங்கப்பா... இங்கை வந்து குப்பை கொட்டுறிங்க.. :mellow:

(உங்க கண்டுபிடிப்பை பாராட்டாமல் இருக்க முடியலை)

சரியா சொன்னீங்கள்.. :huh:

உங்களுக்கு ஒரு பச்சை புள்ளி :)

ஏப் 30, 2010 மணி தமிழீழம்

பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல்.

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்ரர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு!

எனது மரியாதைக்கும் மதிப்புக்குமுரிய தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கட்கு மறைந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் துணைவியார் பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல்.

parvathi.gif

நான்நீண்டகாலமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது காலும் கையும் செயலற்ற நிலையில் இருந்து வருகிறேன். நான் தமிழ் நாட்டில் இருந்த காலத்தில் முசிறியிலுள்ள டாக்ரர் ராஜேந்திரனிடம் வைத்தியம் பெற்று வந்தேன் ஆனால் 2003 ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு சென்றபடியால் தொடர்ந்து வைத்தியம் செய்ய முடியாமல் போய்விட்டது. வன்னியிலும் இராணுவ முகாமிலும் சரியான மருத்துவ வசதிகள் இல்லாதபடியால் எனது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுவிட்டது.

கொழும்பில் எளிதில் விசா எடுக்க முடியாத சூழ்நிலையில் எனது மகள் விநோதினி இராஜேந்திரம் என்னை மலேசியாவிற்கு வரவழைத்து அங்கு இந்தியா விசா பெற்று என்னை சென்னைக்கு ஒரு பெண்ணின் உதவியுடன் அனுப்பி வைத்தார்.

கனடிய குடிமகளான எனது மகளுக்கு மலேசியாவில் இருந்து கொண்டு இந்திய விசாவிற்கு விண்ணப்பித்தபோதும் அதனை உரிய நேரத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டது.

ஆனால் எங்கோ ஒரு தவறு ஏற்பட்டு இருக்க வேண்டும் இல்லாது விடின் உரிய கடவுச்சீட்டு, ஆறுமாதவிசாஅனைத்தும் இருந்தும் சென்னையில் நான் விமானத்தை விட்டு இறங்க முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு என்னையும் என்னுடன் துணைக்கு வந்த பெண்மணியையும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பி விட்டார்கள்.

எனது வைத்தியத்திற்கு டாக்ரர் இராஜேந்திரன் வேறு தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் ஏற்பாடு செய்வார் என்பதால் தயவு செய்து நான் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வருவதற்கு மலேசியாவிலள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக ஏற்பாடு செய்து தருமாறு அன்போடு வேண்டுகின்றேன்.

நான் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது தெமாடர்பாக தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தில் பதில் அளித்த நீங்கள் நான் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரம்பினால் அதைப்பற்றி பரிசீலித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதத்தயார் என தெரிவித்திருந்தீர்கள். உங்களது உறுதிமொழி எனக்கு ஆறுதலைத் தந்துள்ளது.

தங்கள் உதவியினை என்றும் மறக்கமாட்டேன். நீங்கள் நீடுழி வாழ வாழ்த்துகின்றேன்.

நன்றியுடன் தங்கள் உடன்பிறப்பு

திருவேங்கடம் வேலுப்பிள்ளை பார்வதி

pathivu

பிறகென்ன பார்வதியம்மா தேசியத்தாயாரே கலைஞரை உடன்பிறப்பு எண்டு சொல்லிப்போட்டா இனியெதுக்கு வெளிநாட்டிலை உள்ளவை கருணாநிதியை திட்டிக்கொண்டிருக்கவேண்டும் இனி திட்டிறதுக்கு வேறை யாரையாவது தேர்ந்தெடுக்கவும்.

நான் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது தெமாடர்பாக தமிழக சட்டசபையில் நடந்த விவாதத்தில் பதில் அளித்த நீங்கள் நான் தமிழகத்தில் மீண்டும் சிகிச்சை பெற விரம்பினால் அதைப்பற்றி பரிசீலித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதத்தயார் என தெரிவித்திருந்தீர்கள். உங்களது உறுதிமொழி எனக்கு ஆறுதலைத் தந்துள்ளது.

pathivu

தேத்தண்ணி குடிச்சுகொண்டு வாசிச்சனான்.. வாய்விட்டு சிரித்ததில் தேத்தண்ணி மூக்குக்கிலால வந்திட்டுது... :mellow:

சனியங்களே.. உங்கட கோமாளித்தனாத்துக்கு அளவேயில்லையா.... :huh:

ஒரு நோயாளியின் சார்பில் அவரின் மருத்துவ தேவையை விளக்கி கடிதம் எழுதுவிப்பது சாதாரணமானது. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். பார்வதியம்மா ஒரு நோயாளி. அவர் இந்திய தேசத்திற்கு பிரபாகரனின் தாயாக.. ஈழக்கோரிக்கையை முன் வைத்துப் போகவில்லை. அவர் சாதாரண மனிதனாக நோயாளி என்ற வகையில் மருத்துவ உதவி வேண்டி பயணம் செய்ய விரும்புகிறார் அவ்வளவே. அது ஒரு மனிதாபிமான தேவை. இந்த உதவியை வன்னியில் இருக்கும் சாதாரண மக்கள் கேட்டாலும் செய்து கொடுக்கத்தான் வேண்டும்.

பிரக்கடிச்சு சாகப்பார்த்தன்...... :):):lol::lol:

quote name='Panangkai' date='01 May 2010 - 08:10 PM' timestamp='1272741004' post='585003']

தேத்தண்ணி குடிச்சுகொண்டு வாசிச்சனான்.. வாய்விட்டு சிரித்ததில் தேத்தண்ணி மூக்குக்கிலால வந்திட்டுது... :)

சனியங்களே.. உங்கட கோமாளித்தனாத்துக்கு அளவேயில்லையா.... :)

பிரக்கடிச்சு சாகப்பார்த்தன்...... :lol::lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பிரக்கடிச்சு சாகப்பார்த்தன்...... :mellow::huh::):)

பனங்காய்க்கும் பிரக்கடிக்கும் என்பது இன்றுதான் அறிஞ்சேன். கொஞ்சம் வெளில உலகத்தையும் வந்து தரிசியுங்கள். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதும் இக்கருத்தினை வாசிப்போர் என்னை என்னவிதமான தராசிலையும் வைத்து எனது மனிதநேயத்தை அளவிட்டு விமர்சம் செய்தாலும் பரவாயில்லை. முதலில் ஒன்றைத்தெரிந்து கொள்ளவேண்டும். அவர் மிகவும் வயது முதிர்ந்தவர் கிட்டத்தட்ட ஒரு

மூன்று நான்கு வயதுக் குழந்தைக்குரிய மனோநிலையினில்தான் அவர் ஊசாடுகிறார் என்றுமில்லை, உயிர்வாழ்கிறார் என்பதே உண்மை. இங்கு கருத்தெழுதும் கனவான்களுக்கு தாய்தந்தை இல்லையா? அன்றேல் சிறு குழந்தைகள் இல்லையா? தவிர அந்த மூதாட்டியது இவ்விழிநிலைக்கு அனைத்துத் தமிழர்களும்தான பொறுப்பு மதிவதனங் உட்பட. ஏதோ பலம்பெயர்ந்து வந்து பெரும்படிப்புகள் படித்து பணம் சம்பாதித்து மசிர்புடுங்கிக்கொண்டிருக்கிறம் எண்டுசொல்லுறியளோ இப்படி ஒரு கடிதத்தை அம்மூதாட்டி எழுதும் வரை என்ன செய்துகொண்டிருக்கிறியள்? புலம்பெயர் தமிழர்களில் காணப்படும் மருத்துவர்கள் அனைவருமே அம்மூதாட்டியினது சிகிச்சைக்கு உத்தரவாதம் தரமுடியாதா? முள்ளிவாய்காலில் எமைச் சாய்த்தானே அவன் வந்து எங்கள் வீட்டுவாசலில் கடைபரப்பி நிற்கிறான,; வெக்கம் மானம் ரோசம் எதுவமின்றி "கீயதை" எண்டு விலைபேசி அவனிடம் பொருட்களை வாங்குகிறார்களே அங்கிருக்கும் ஈனப்பிறப்பகள் அவர்களுக்கும் அம்மூதாட்டியில் மருத்துவத்திற்க ஆவனசெய்யாத புலம்பெயர்ந்து வாழும் புத்திஜீவிகளுக்கம் என்ன வித்தியாசம்? நாம் வாழகின்ற நாடுளில் கிடைக்காத மருத்துவ வசதிகள் இந்தியாவில் மட்டும் கிடைத்திடுமா? இங்க கருத்தெழுதும் இழிபிறப்புகளது பல்லுக்கும் சொல்லுக்கும் எம்தேசத்தின் விடிவக்காய உழைத்திட்ட ஒரு மகவை ஈன்ற தாயை ஆளாக்கிவிட்டு வள்ளிசாகக் கருத்தெழுத வந்திட்டியள்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்......மகிந்தாவே பார்வதியம்மா வெளியேற தடையில்ல எங்கு வேண்டுமென்றாலும் போகலாம் என்டு சொன்னதா இங்கினேக்க எங்கயோதான் வாசிச்சன், சிவாஜிலிங்கத்தாரும் விசா எடுக்காமல் சிங்கப்பூருக்குத்தான் கொண்டு போனவர். மலேசியாவில மகள் இல்லாமல் மலேசியாவுக்கு கொண்டு போனது இந்தியாவுக்கு கொண்டுபோய் அங்கைவச்சு அரசியல் செய்யத்தான். சிவாஜிலிங்கத்தின்ட விசா மறுக்கப்பட்டதும் அவர் போய் அரசியல் செய்யப்போறார் எண்டுதான்.

இந்தியாவில மகள் இருக்க மகள் எடுக்க போகாமல் வைகோ நெடுமாறன் எயாப்போட்டுக்கு எடுக்க போனதும் அரசியல் செய்யத்தான். பார்வதியம்மா போறதுக்கு தடையிருந்தது வைகோ நெடுமாறனுக்கு தெரியாமல் இருந்திருக்காது. ரகசியமா வச்சிருந்து திருப்பி அனுப்பிப்போட்டு அரசியல் செய்யிறது வைகோ நெடுமாறன் பிளானாக்கூட இருக்கலாம். கருணாநிதிக்கு உந்த விசயம் தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.

இந்தியாவில கனடாவில டென்மாக்கில புள்ளையள் இருக்கு முறையா விசாவெடுக்க எந்த பிரச்சனையும் இருக்கவுமில்ல அப்பிடியிருக்க விசா தேவையில்லாத சிங்கப்பூருக்கு கூட்டிக்கொண்டு போயிருக்கினம்..... அங்கயிருந்து மலேசியா விசாவெடுத்து கூட்டிக்கொண்டு போயிருக்கினமெண்டா.....

உந்த பிள்ளையள் மூண்டுபேருக்கும் வாய் இல்லயோ? சத்தத்தயே காணேல்ல!!!!! :rolleyes:

இந்தியாவிற்கு அவரை நேரடியாக அனுமதித்திருப்பின் சிவாஜிலிங்கம் மாலைதீவூடு மலேசியாவிற்கு அவரை கொண்டு போயிருக்கமாட்டார்.

இந்தியாவிற்குச் செல்ல நேரடி அனுமதி வழங்கப்படவில்லை. அதுமட்டுமன்றி இலங்கையில் அவருக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியில் இருந்து அவரை முதலில் விடுவிக்க வேண்டிய தேவை ஒன்றிருந்தது. கனடா டென்மார்க்கிற்கு உடனடியாக விசா வழங்கமாட்டார்கள். அதற்கு நீண்ட காலம் தேவை. அதற்குள் அவரை சிறீலங்கா அரசும் படைகளும் ஒட்டுக்குழுக்களும் நெருக்கடி தந்தே கொன்றுவிட்டிருக்கும்.

இந்த நிலையில் மாற்று வழியாகவே அவரை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து தமிழக நலன்விரும்பிகளின் உதவியோடு பார்வதி அம்மாவை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல முயன்றிருக்கிறார்கள்.

கருணாநிதிக்கு இவை அனைத்தும் தெரியும். விமான நிலையத்தில் நடந்தவை அனைத்தும் கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டே இருக்கும். அதில் சந்தேகிக்க ஏதும் இல்லை. தமிழக அரசின் கடிதத்தை காரணம் காட்டி ஒருவரை நாடு கடத்தும் போது அந்த அரசிற்கு இது பற்றி சொல்லப்படவில்லை என்பது கேலிக்கூத்தான ஒரு கருத்து வாதம்.

அதுமட்டுமன்றி சட்ட சபையில் இது குறித்துப் பேசிய கருணாநிதி ஜெயலலிதாவை சாடிவைத்தாரே தவிர நேற்றைய தினம் உயர் நீதிமன்றத் தீர்ப்பெழுதும் வரை கருணாநிதி அம்மையாருக்கு மனிதாபிமான உதவி வழங்கக் கூட முன் வரவில்லை. நீதிபதிகள் வழங்கிய கட்டளைக்கு அமைவாகவே இறுதியில் கருணாநிதி அம்மையாருக்கு உதவி அளிக்க முன்வந்தார். அதிலும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு வாரத்துக்குள் பார்வதி அம்மாவிடம் இருந்து அனுமதி கேட்டு கடிதம் வரும். 4 வாரத்துக்குள் அதற்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று. ஆகவே இந்த மனிதாபிமான மனித உரிமை மீறல் வழக்கை சமர்ப்பித்த பார்வதி அம்மா நலன் விரும்பி வழக்கறிஞர் கறுப்பனின் முயற்சியின் பெயரால் தான் இந்த நீதி கிடைக்கப்பெற்றுள்ளதே அன்றி இதில் கருணாநிதியின் மனிதாபிமான இயல்பாக வெளிப்பட்டுள்ளதாக கொள்ளவே முடியாது.

அவர் இந்த விடயத்தை தனக்கான அரசியல் செல்வாக்கை உயர்த்த பாவிக்க முயன்றார். வைகோ நெடுமாறனை சாடினார். ஜெயலலிதா தமிழக அரசு சார்பில் 7 ஆண்டுகளுக்கு முன்னர் சமர்ப்பித்த கடிதத்தைக் காரணம் காட்டினார். அதே கடிதத்தை விலக்கச் சொல்லி சொல்ல கருணாநிதிக்கு சில நிமிடங்கள் போதும். ஆனால் அவர் செய்யவில்லை. ஜெயலலிதாவையும் ஈழத்தமிழர்களையும் பார்வதி அம்மாவையும் வைத்து அரசியல் செய்யவே அவர் முயன்றுள்ளார். உண்மையில் அவர் செய்ய நினைத்திருந்தால் உயர் நீதிமன்றம் செல்ல முதலே பலவற்றை செய்து முடித்து தனது மனிதாபிமான அக்கறையை உண்மையில் வெளிப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் கருணாநிதி செய்யத் தவறிவிட்டார். மீண்டும் ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்யவே முற்பட்டுள்ளார். இதுதான் உண்மை. யதார்த்தம்.

Edited by nedukkalapoovan

ஏன் அந்தளவிற்குப் போவான்.. இந்தியாவுக்குள் தான் சீமானும் இருக்கிறான். நெடுமாறன் ஐயாவும் இருக்கிறார். வைகோவும் இருக்கிறார். முத்துக்குமாரும் இருந்தான்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பது என்பது அதன் கொள்கை மாற்றத்தை வேண்டியே அன்றி.. இந்தியாவை பகை என்று வரையறுத்துக் கொள்வதை அல்ல. நாளை இந்திய ஆளும் வர்க்கம் தனது கொள்கைகளில் மாற்றம் செய்து எம்மை அனுசரிக்கும் போக்கை கைக் கொண்டால் நிச்சயம் அதை வரவேற்கத்தான் வேண்டும். இன்றைய சூழலில் இந்திய ஆளும் வர்க்கங்களின் அது மாநிலமாக இருக்கட்டும் மத்தியாக இருக்கட்டும் அவற்றின் போக்குகள் குறித்தே மக்கள் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனரே தவிர.. அதன் பிரதிபலிப்பாக எழுதும் இந்திய எதிர்ப்புணர்வு என்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் வெறுப்பதாக கருத முடியாது. அப்படி அமையவும் இல்லை.

இதே போல நாம் வேறு சிலவிடய்ங்களையும் சிந்திக்கலாம் தானே.

சிங்கள ஆட்சியாளர் எதிர்ப்பது என்பது சிறிலங்காவை எதிர்ப்பது என்றில்லை

புலிகளை வசை பாடுவது என்பது மாவீரர்களை வசைபடுவது என்றில்லை சில தளபதிகளின் செயல்பாடுகளை

சிறீலங்காவை யாரும் எதிர்க்கவில்லை. சிங்கள மக்களின் தேசியத்தை யாரும் மறுதலிக்கவில்லை. சிங்களப் படைகளுக்கு படைய மதிப்பை அளித்தவர் தான் எங்கள் தேசிய தலைவர். நாம் எதிர்த்து நின்றது எம்மை அடிமைப்படுத்த நினைக்கும் நினைத்த சிங்கள ஆட்சியாளர்களையும் பேரினவாத சக்திகளையுமே. எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்க வந்த சிங்களப் படைகளையும் கட்டாயக் குடியேற்றவாசிகளையுமே. எமது மண்ணை ஆக்கிரமிக்க நிற்கும் சிங்கள பெளத்த புத்த சின்னங்களையுமே. சிங்கள மக்களையோ உலகில் பெளத்தத்தையோ இதற்காக நாம் எதிர்க்கிறோம் என்பதல்ல பொருள். எமது சுதந்திரத்தை எமது மண்ணில் அளிக்காது தடுப்பவர்களையே நாம் பகைத்து நிற்கிறோம்.

தளபதிகளை தெளிவாகச் சொல்லி வசைபாடுங்கள். புலிகளை வசைபாட முடியாது. புலிகள் என்பவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வசைபாட எவருக்கும் தகுதி இருப்பதாக தெரியவில்லை. அதற்கான தகுதியை சொல்லிவிட்டு வசைபாடுங்கள். நாம் உங்களின் வசையில் நியாயம் இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்வோம். புலிகளை வசைபாடுவது என்பது மாவீரர்களை அவமதிப்பது போன்றது. காரணம் மாவீரர்கள் புலிகளே. ஆனால் இந்திய அரசியல்வாதிகள் மக்களின் விருப்பை அல்ல பிரதிபலிக்கிறார்கள். மாவீரர்கள் ஒவ்வொரு போராளியின் கொள்கையையும் மக்களின் எண்ணங்களையும் பிரதிபலித்தவர்கள். அவர்களை இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகளோடு ஒப்பிடுவதே அபந்தமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியாச்சொன்னியள் நெடுக்கர் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.