Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வதி வேலுப்பிள்ளை எழுதும் அன்பு மடல்.

Featured Replies

சிறீலங்காவை யாரும் எதிர்க்கவில்லை. சிங்கள மக்களின் தேசியத்தை யாரும் மறுதலிக்கவில்லை. சிங்களப் படைகளுக்கு படைய மதிப்பை அளித்தவர் தான் எங்கள் தேசிய தலைவர். நாம் எதிர்த்து நின்றது எம்மை அடிமைப்படுத்த நினைக்கும் நினைத்த சிங்கள ஆட்சியாளர்களையும் பேரினவாத சக்திகளையுமே. எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்க வந்த சிங்களப் படைகளையும் கட்டாயக் குடியேற்றவாசிகளையுமே. எமது மண்ணை ஆக்கிரமிக்க நிற்கும் சிங்கள பெளத்த புத்த சின்னங்களையுமே. சிங்கள மக்களையோ உலகில் பெளத்தத்தையோ இதற்காக நாம் எதிர்க்கிறோம் என்பதல்ல பொருள். எமது சுதந்திரத்தை எமது மண்ணில் அளிக்காது தடுப்பவர்களையே நாம் பகைத்து நிற்கிறோம்.

தளபதிகளை தெளிவாகச் சொல்லி வசைபாடுங்கள். புலிகளை வசைபாட முடியாது. புலிகள் என்பவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வசைபாட எவருக்கும் தகுதி இருப்பதாக தெரியவில்லை. அதற்கான தகுதியை சொல்லிவிட்டு வசைபாடுங்கள். நாம் உங்களின் வசையில் நியாயம் இருக்கா இல்லையா என்பதை தெரிந்து கொள்வோம். புலிகளை வசைபாடுவது என்பது மாவீரர்களை அவமதிப்பது போன்றது. காரணம் மாவீரர்கள் புலிகளே. ஆனால் இந்திய அரசியல்வாதிகள் மக்களின் விருப்பை அல்ல பிரதிபலிக்கிறார்கள். மாவீரர்கள் ஒவ்வொரு போராளியின் கொள்கையையும் மக்களின் எண்ணங்களையும் பிரதிபலித்தவர்கள். அவர்களை இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகளோடு ஒப்பிடுவதே அபந்தமானது.

சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள இராணுவம் இரண்டும் ஒன்றொடு ஒன்று பின்னி பினைந்தவைதானே??ஏன் சிங்கள மக்களும் அப்படித்தானே

  • Replies 54
  • Views 4.6k
  • Created
  • Last Reply

நீங்களுமா?

உங்கள்மீது பெருமதிப்பு வைத்திருந்தேன்

உங்கள் கருத்திற்கு நன்றி. உங்கள் ஆதங்கம் தான் ஏன் என்று புரியவில்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சுயநினைவும் இழந்து தவிக்கும் ஒரு மூதாட்டியை சிலர் தமது சுயநல அரசியலுக்கு பகடைக்காயாக பாவிப்பது தங்களுக்கு சரியாகப்படுகின்றதா?? இன்றைய நிலையில் அவருக்குத் தேவை ஒழுங்கான வைத்தியமும் பெற்ற பிள்ளைகளின் பராமரிப்புமே. ஆனால் இங்கு பெற்ற பிள்ளைகளை விட வேறு சிலர் அவரைத் தமது அரசியலுக்குப் பயன்படுத்தியதாலேயே இவ்வளவும் நடந்துள்ளது.

பலர் இங்கு கதையளப்பதிலேயே காலம் கடத்துகின்றார்கள். வெளிநாட்டிலுள்ள பிள்ளைகள் அவரைத் தம்முடன் எடுப்பதற்கு பல வருடங்கள் எடுக்குமாம். ஆனால் மதிவதனியின் தாயார் மட்டும் உடன் போய் பிள்ளைகளுடன் இணைந்து விட்டார். தமிழக முதல்வர் கருணாநிதியை மட்டும் குறை கூறச் சிலர் விளைகின்றனர். ஆனால் 2003 இல் ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதமெழுதிய போது வைகோ என்ன செய்தார்?? அன்று ஜெயலலிதாவோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த வைகோ, ஏன் அதைத் தடுக்க முன்வரவில்லை?? சரி அன்று செய்யாதவர் தற்போது சிகிச்சைக்கு வருவதற்கு முன்பாவது, பழைய தடையால் ஏதாவது பிரைச்சினைகள் ஏற்படலாமென்பதை உணர்ந்து தமிழகச் சட்டமன்றம் மூலம் விவாதித்து அந்தத் தடையை நீக்க வைத்திருக்கலாம். திருப்பியனுப்பிய பின் எடுத்த நடவடிக்கைகளை முதலிலேயே எடுத்திருந்தால், இவ்வளவு பிரைச்சினைகளும் வந்திருக்காது. ஆனால் வைகோவும் நெடுமாறனும் தாம் மத்திய அரசின் கண்ணிலும், தமிழக அரசின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு தாம் நினைத்ததைச் சாதித்து விடடோமென்று தம்பட்டம் அடிக்கவே, இதனைப் பாவிக்கப் பார்த்தார்கள். அது முடியாமல் போனபின் இன்று எத்தனையோ கதையளக்கின்றார்கள். இவர்கள் இப்படியெல்லாம் அவரை வைத்து அரசியல் செய்வது தங்களுக்கு ஏற்புடையதா??

போதாக்குறைக்கு நம்மவர்களும் அவரை வைத்து கடித அரசியல் செய்ய நினைக்கின்றார்கள். இங்கும் சிலர் இந்தியாவைக் கேவலமாக எழுதுவதும் தேவை ஏற்பட்டால் இந்தியாவின் காலில் விழுவதும் கைவந்த கலைபோல கருத்தெழுதுகின்றார்கள். இதில் தங்களுக்கும் உடன்பாடா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க உள்ளவைக்கும் அரசியல் செய்ய பார்வதியம்மாதான் கிடைச்சிருக்கா, 4-5 இடத்தில வைகோ நெடுமாறன் பேர் வரத்தக்கதா வேறவேறமாதிரி எழுதி போட்டு இங்க களத்திலவேற அரசியல். அரசவை தேர்தலுக்கு முன் சிவாஜிலிங்கம் சிங்கப்பூருக்கு கூட்டிச்சென்றதாக இந்த செய்தி வந்தபோது விநோதினி பற்றி ஒரு சொல்லுக்கூட சொல்லப்படவில்லை, மூன்று பிள்ளைகள் இருந்தும் ஒருவர்கூட சுகயீனமான தாயை கூட்டிச்செல்ல சிங்கப்பூரோ மலேசியாவோ செல்லவில்லை! இந்தியாவுக்கு போய் திருப்பி அனுப்பப்பட்டபோதுகூட வினோதினி ராஜேந்திரம் பற்றி எந்த ஒரு சொல்லுக்கூட வெளியே வரவில்லையென்றால் பாருங்களேன். வைகோ நெடுமாறன் எயாப்போட் போனதே உள்ளே வரவிடாமல் தடுத்து அரசியல் செய்யத்தான். மனிதாபிமானம் மனித நேயமெல்லாம் புலம்பெயர்ந்தோர்க்கு போடும் புல்லுக்கட்டு. :rolleyes:

ஆனால் இந்திய அரசியல்வாதிகள் மக்களின் விருப்பை அல்ல பிரதிபலிக்கிறார்கள். மாவீரர்கள் ஒவ்வொரு போராளியின் கொள்கையையும் மக்களின் எண்ணங்களையும் பிரதிபலித்தவர்கள். அவர்களை இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகளோடு ஒப்பிடுவதே அபந்தமானது.

ஆனால் உங்களால் கேடுகெட்ட அரசியல்வாதிகளாகக் குறிப்பிடப்படுவர்களுக்கு பார்வதியம்மா எழுதியது போல கையேந்தி கடிதமெழுதுவது மட்டும் இனிக்கிறது. இதிலேயே முன்னுக்குப்பின் முரண்படுகின்றீர்களே?? வைகோவோ, நெடுமாறனோ முன்பே நீதிமன்றம் சென்று பயணத்தடை சட்டபடி நீக்கிவிட்டு, சிகிச்சைக்காக பார்வதியம்மாவை அழைத்ததிருந்தால் இவ்வளவும் நடந்திருக்குமா?? அல்லது இப்படிக் கையேந்தும் நிலைதான் ஏற்பட்டிருக்குமா?? முன்பும் ஒருமுறை வைகோ தமிழகம் சென்ற கூட்டடைமப்பினரை, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காமல் தடுத்து, தானே பிரதமர் மன்மோகன்சிங்குடன் சந்திப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்து டெல்லி அழைத்துச் சென்றார். ஆனால் மூக்குடைபட்டது தான் மிச்சம். மூக்குடைபட்ட கூட்டமைப்பினர் பின்பு தமிழக முதலமைச்சர் மூலமாகவே மன்மோகன்சிங்கை சந்திக்க முடிந்தது. இன்று பார்வதியம்மாவிற்கும் நடந்தது இதுதான். பார்வதியம்மாவிற்குத் தேவை எதுவோ அதைவிடுத்து அனைத்தையும் செய்து அரசியலாக்குகின்றார்கள் சிலர். இது நடக்கும்வரை இந்த அவலமும் தொடரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாகப்பட்டது

கருணாநிதியின் காலை நக்குவதே தஞ்சம்.

அதாகப்பட்டது

கருணாநிதியின் காலை நக்குவதே தஞ்சம்.

:rolleyes:அதைத் தானே கடிதம் சுட்டி நிற்கின்றது. இதைப் புரிந்து கொள்ள தங்களுக்கு 2 பக்கக் கருத்துகள் தேவைப்பட்டுள்ளது. :rolleyes::lol:

:rolleyes:அதைத் தானே கடிதம் சுட்டி நிற்கின்றது. இதைப் புரிந்து கொள்ள தங்களுக்கு 2 பக்கக் கருத்துகள் தேவைப்பட்டுள்ளது. :rolleyes::lol:

:huh:

இதற்கு கருத்தெழுதவே சங்கடமாக இருக்கின்றது.

ஆனால் இதை முன்னர் பிரிட்டிஷ் பாஸ்போட் கோல்டர் பாலசிங்கமும் செய்யவிழைந்தார்.எவ்வளவு நாடுகள் இருக்க அவருக்கும் நீரழிவு சிகிச்சைக்கு இந்தியாதான் தேவைப் பட்டது.புலிகள் இந்தியாவுடனான உறவை புதிப்பிப்ப எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள். இந்தியாவையும் டெலோ,ஈ.பீ.ஆர்.எல்.எf மாதிரி நினைத்துவிட்டார்கள்.புலியுடன் உறவு வைத்திருக்க விரும்பிய கருணாநிதியே சோனியாவிற்கு பயந்து நடுங்குகின்றார்.நளினியை விடுதலை செய்தால் சோனியா சிலவேளை கோவித்துவிடுவாரோ என்று யோசிக்கின்றார்.

சிலருக்கு தாங்களும் ஒரு கட்டப் பொம்மன் என்ற நினைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கருணாநிதியின் ஒப்புதல் வாக்குமூலம்

எண்பது வயதில் பக்கவாதத்தாலும் இன்ன பிற நோய்களாலும் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு சிகிச்சை பெற வந்த பார்வதி அம்மாள் ஒரு கொடிய பயங்கரவாதி போல நடத்தப்பட்டு விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாது வந்த விமானத்திலேயே அந்த விமானம் திரும்பி செல்லும் வரை இருக்க வைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் கருணாநிதி வழக்கம் போல 1975 கதையையும் சில புள்ளி விபரங்களையும் அள்ளி விட்டுருக்கிறார்.

அவரது அறிக்கைப்படி, நடந்த விவகாரத்திற்கு முழு பொறுப்பு. 5.5.2003 அன்று, அன்றைக்கிருந்த ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி, மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் படியே பார்வதியம்மாள் இந்தியாவுக்குள் நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், கருணாநிதி மிகத் தெளிவாக, சொல்லாது திட்டமிட்டு மறைத்த விஷயம், அன்றைக்கிருந்த மத்திய ஆட்சி வாஜ்பாய் தலைமையில், திமுகவின் ஆதரவுடன் நடந்த ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி. மாறன், டி.ஆர். பாலு, ஆ.ராசா என்று திமுகவின் முக்கிய புள்ளிகள் எல்லாம் ஆட்சியில் முக்கிய பங்கும், அதிகாரமும் செலுத்திய ஆட்சி. தமிழ்நாட்டு விவகாரங்களில் மாறனையும் திமுகவையும் மீறியோ, அல்லது அவர்களுக்கு தெரியாமலோ எந்த ஒரு முடிவையும் மத்திய அரசு எடுக்க முடியாத படி, திமுகவின் முழு செல்வாக்கின் கீழ் நடந்த ஆட்சி.

(இதன் பின்னரே முரசொலி மாறன் நவம்பர் 23, 2003ல் இறக்கிறார். உடல்நலமில்லாது இருந்த அவரை, இந்திய அரசின் செலவில் தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தது இதே கருணாநிதி தான் என்பது இங்கு தேவையில்லாத விஷயம்)

அதாவது, ஜெயலலிதாவின் அதிமுக அரசு எழுதிய கடிதத்தை மாறனும், பாலுவும், கருணாநிதியும் நினைத்திருந்தால் ஏற்காது கிடப்பில் போட்டிருக்கலாம். ஆனால், கருணாநிதியின் மந்திரிகள் முழு ஒப்புதல் அளித்தே பார்வதி அம்மாள் இந்தியா உள்ளே நுழைய தடை செய்யப்பட்டிருக்கிறது! இதையே சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க கோரியோ, கருணாநிதியை கைது செய்ய கோரியோ ஜெ. அரசு கடிதம் கொடுத்திருந்தால் செய்திருப்பார்களா?

ஆக, இந்த மனிதத் தன்மையே இல்லாத செயலில் பொறுப்பு அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மட்டுமா? இல்லை கருணாநிதிக்கும் பங்கு உண்டா? இதைப் படிப்பவர்களும், திமுக தொண்டர்களும் முடிவு செய்து கொள்ளலாம்.

=============

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், விமான நிலையத்தில் நடந்த விஷயம் எதுவுமே தனக்கு இரவு 12 மணி வரை தெரியாது என்று சொல்லியிருக்கிறார். அதே சமயம், அங்கு சென்னை நகர போலீசும், விமான நிலைய பாதுகாப்பு போலீசும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்வதி அம்மாளை வரவேற்க சென்ற வைக்கோவும், நெடுமாறனும் உள்ளே செல்லவே முடியாது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

போலீஸ் துறைக்கு பொறுப்பான முதல்வருக்கு, தலைநகரின் ஏர்போர்ட்டில் போலீஸ் குவிக்கப்படுவதே தெரியாதாம்..இது என்ன விதமான நிர்வாகம் என்ற கேள்வி எழுந்தாலும் கருணாநிதியின் வயதும் உடல்நிலையும் கருதி அதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், துணை முதல்வர், அன்பழகன், வீராசாமி போன்ற மூத்த மந்திரிகள், டிஜிபி, தலைமைச் செயலாளர் என்று யாருக்குமே தெரியாதா? அப்படியானால், போலீசார் யார் உத்தரவும் இன்றி அவர்களே குவிந்து கொண்டார்களா??

===========================

அடுத்து, இந்திய இறையாண்மை குறித்து நான் கேள்வி எழுப்புவதை சில‌ நண்பர்கள் தனிப்பட்ட முறையில் கண்டித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் எழுப்பும் கேள்விகள்,

1. ஒரு எண்பது வயதான, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதிய பெண் எந்த விதத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? இன்னும் பத்து வருடத்தில் உலகின் சூப்பர் பவர் ஆவோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் நாடு, நடக்கவே முடியாத ஒரு மூதாட்டியை பார்த்து தொடை நடுங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

2. கார்கில் போருக்கு முக்கிய காரணம் முஷாரஃப் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தார்கள். உங்கள் இந்தியாவின் ஜனாதிபதியும், பிரதமரும் அவருக்கு விருந்தளித்து அவரை கடவுள் போல நடத்தினார்கள். கார்கில் போரில் இறந்து போனவர்களுக்கு இது இந்தியா செய்த துரோகமா இல்லையா? இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட முஷாரஃப்ஃபுக்கு விருந்தளித்தால் அது இறையாண்மையை பாதுகாப்பதாக அர்த்தமா?

3. பார்வதி அம்மாள் ஒன்றும் விசா, பாஸ்போர்ட் என்று எதுவும் இல்லாது வந்து விடவில்லை. முறைப்படி அனுமதி பெற்றே வந்திருக்கிறார். அவரை அனுமதிக்க முடியாது என்றால் விசா தராது மறுக்க வேண்டியது தானே? உடல் நலமில்லாத ஒருவரை எதற்கு அலைக்கழிக்க வேண்டும்? யாரெல்லாம் தடை செய்யப்பட்ட லிஸ்டில் இருக்கிறார்கள் என்பது விசா வழங்கிய இந்திய தூதரகத்துக்கும் இந்திய தூதருக்கும் தெரியவில்லை, ஆனால் விமான நிலையத்தில் இருக்கும் குடியேற்ற அதிகாரிகளுக்கு பயணி விமானத்தை விட்டு இறங்கும் முன்னரே தெரிகிறது. இது தற்செயலாக நடந்த தவறா இல்லை பிரபாகரனின் தாய் என்பதற்காக அவரை வரவழைத்து அவமானப்படுத்த உங்களின் இந்திய அரசும் தமிழக அரசும் திட்டமிட்டு செய்த இழிவான செயலா?

http://muranthodai.blogspot.com/2010/04/blog-post_19.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு கருத்தெழுதவே சங்கடமாக இருக்கின்றது.

ஆனால் இதை முன்னர் பிரிட்டிஷ் பாஸ்போட் கோல்டர் பாலசிங்கமும் செய்யவிழைந்தார்.எவ்வளவு நாடுகள் இருக்க அவருக்கும் நீரழிவு சிகிச்சைக்கு இந்தியாதான் தேவைப் பட்டது.புலிகள் இந்தியாவுடனான உறவை புதிப்பிப்ப எவ்வளவோ முயற்சிகள் செய்தார்கள். இந்தியாவையும் டெலோ,ஈ.பீ.ஆர்.எல்.எf மாதிரி நினைத்துவிட்டார்கள்.புலியுடன் உறவு வைத்திருக்க விரும்பிய கருணாநிதியே சோனியாவிற்கு பயந்து நடுங்குகின்றார்.நளினியை விடுதலை செய்தால் சோனியா சிலவேளை கோவித்துவிடுவாரோ என்று யோசிக்கின்றார்.

சிலருக்கு தாங்களும் ஒரு கட்டப் பொம்மன் என்ற நினைப்பு.

அர்ஜுன்...நீங்கள் எழுதிய பதில்களில் நான் மிக வியந்தது என்றால் இதுதான்...

இங்கே மனிதாபிமானம் பற்றி கதைப்பது வியப்பாய் இருக்கிறது..நேற்று இந்த செய்தி வந்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. மற்ற மற்ற தளங்களையும் சென்று பார்த்தேன், "பதிவை" தவிர எதிலும் இல்லை...நாகீரனை பார்த்தேன் அதிலும் போட்டிருந்தார்கள். மனதுக்குள் சந்தோசப்படுவதை தவிர போசாமல் இருந்து விட்டேன். கிட்டதட்ட 250 / 300 பார்வைகள் வரை ஒரு பதிலும் இல்லை. இன்னும் தமிழ் நெட், புதின பலகை, போன்றவற்றில் செய்தியாகவே இல்லை. யாழில் வீழ்ந்த சிவப்பு புள்ளிகளே சாட்சி அந்த வயோதிப மாது தனது சிகிச்சைக்காக இந்தியா போக கடிதம் எழுதியது பிடிக்காமல் வெதும்பும் ?தேசிய வாத செமல்களின் வரட்டு/ கொலைகார/ மனோபாவம். ஒன்று அந்த தாய் சிகிச்சைக்கு போவதர்ற்கு கடிதம் கொடுத்து தனக்கு மாத்திரமல்ல, எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறாள். நீங்கள் செய்த, செய்கிற அரசியல் போதும்.

பார்வதி அம்மாவை வைத்து, நெடுமாறன், வைகோ, திருமால்வளவன், இங்கே புலம் பெயர்ந்த அரசியல் அறிஞர்கள் அரசியல் செய்யலாம், ஆனால் கருணாதி செய்யக்கூடாது.இங்கே எங்களுக்குள்ள பிரச்சனை, நாங்கள் இந்தியாவின் பின்னால் போவதா அல்லது இந்திய எங்களின் பின்னால் போவது.அர்ஜுன், சரியாக சொன்னீர்கள், இங்கே இவர்கள்தான் கட்டப்பொம்மன், கருணாதி கையில்லா பொம்மை..அட போங்கப்பா, அந்த தாய் செய்ததை முதலில் மனிதனாக ஏற்றுக்கொள்ளப்பாருங்கள், அதுக்கு பிறகு அரசியல் பேசுங்கள், அதிலும் நாய் யார் நிலவு யார் என தெரிந்து கதையுங்கள்/ குலையுங்கள்.

நண்பர்களே, நானும் உங்களைப்போல் வசம்புவின் பதிலை பார்த்து, முகம் சுளித்தேன் ஆனால் பின்னர் சொன்ன பதில்களை பார்த்தால், வசம்பு எத்தனை வெறுப்படைந்த மனோ நிலையில் அதை எழுதியிருக்கிறார் என அறிய கூடியதாக இருக்கிறது. அதை விளங்கிக்கொள்ள பார்வதி அம்மா தொடர்பாக வந்த இந்த இணைப்புகளை பாருங்கள்...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71412 .....8 பதில் 1050 பார்வை ...பார்வதியம்மா /கனடா ...எதுவித தொடர்பும் இல்லாமல் இங்கே பார்வதி அம்மாவை இணைத்திருக்கிறார்கள். சிலர் சொல்லக்கூடும், பார்வதி அம்மாவை தவிர்த்தது / தடை செய்த படியால்தான் ..இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்று. என்னிடம் அதற்கெல்லாம் பதில் இல்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71414 ....2 பதில் 427 பார்வை. கருணாநிதி பார்வதி அம்மா கேட்டால் அனுமதி தரப்படும் என்ற தலைப்புக்கு..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71336 பார்வதி அம்மாவை இந்தியா /கனடா நீரகரித்தால் இலங்கை வருவார்..181 பார்வை, ௦ பதில்.........

இதுதான் நான் இங்கே மனிதாபிமானம் பேசும் அன்பர்களுக்கு சமர்பிக்க கூடியது....

இந்த விடயத்தில் நான் வசம்பின் கருத்தை ஆதரிக்கின்றேன்

மாவீரர்களை வைத்தும், பிணங்களை வைத்தும் அரசியல் வியாபாரம் செய்தாயிற்று, இனி மூதாட்டியான தலைவரின் தாயின் அந்திமக் கால துயர உணர்வுகளை வைத்து வியாபாரம் செய்ய தொடங்கியாச்சு

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உங்களால் கேடுகெட்ட அரசியல்வாதிகளாகக் குறிப்பிடப்படுவர்களுக்கு பார்வதியம்மா எழுதியது போல கையேந்தி கடிதமெழுதுவது மட்டும் இனிக்கிறது. இதிலேயே முன்னுக்குப்பின் முரண்படுகின்றீர்களே?? வைகோவோ, நெடுமாறனோ முன்பே நீதிமன்றம் சென்று பயணத்தடை சட்டபடி நீக்கிவிட்டு, சிகிச்சைக்காக பார்வதியம்மாவை அழைத்ததிருந்தால் இவ்வளவும் நடந்திருக்குமா?? அல்லது இப்படிக் கையேந்தும் நிலைதான் ஏற்பட்டிருக்குமா?? முன்பும் ஒருமுறை வைகோ தமிழகம் சென்ற கூட்டடைமப்பினரை, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்காமல் தடுத்து, தானே பிரதமர் மன்மோகன்சிங்குடன் சந்திப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்து டெல்லி அழைத்துச் சென்றார். ஆனால் மூக்குடைபட்டது தான் மிச்சம். மூக்குடைபட்ட கூட்டமைப்பினர் பின்பு தமிழக முதலமைச்சர் மூலமாகவே மன்மோகன்சிங்கை சந்திக்க முடிந்தது. இன்று பார்வதியம்மாவிற்கும் நடந்தது இதுதான். பார்வதியம்மாவிற்குத் தேவை எதுவோ அதைவிடுத்து அனைத்தையும் செய்து அரசியலாக்குகின்றார்கள் சிலர். இது நடக்கும்வரை இந்த அவலமும் தொடரும்.

பார்வதி அம்மாக்கு இந்திய தூதரகம் விசா வழங்கி இருந்ததன் அடிப்படையில் அவர் இந்தியாவிற்கு வர தடையில்லை என்பதைத்தான் வைகோ நெடுமாறன் ஐயா போன்றவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

திமுக அரசில் இருக்கும் திருமாவே தமிழக அரசின் இந்தச் செயலை ஆரம்பத்தில் கண்டித்திருந்தார்.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட 7 ஆண்டுகளுக்குள் நிலைமைகள் மாறியுள்ளன. அதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் தான் முடிவை சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ஜெயலலிதா ஆட்சியை விட்டுப் போய் பல காலம். அப்போதிருந்து ஆட்சியில் இருக்கும் கருணாநிதிக்கு உதுகள் தெரியாமல் இல்லை.

வைகோ நெடுமாறன் போன்றவர்கள் தமிழக அரசில் அங்கம் வகிக்கவில்லை. ஜெயலலிதா கடிதம் எழுதிய காலத்தில் எல்லாம் வைகோ அவருடன் இருக்கவில்லை. அதுகுறித்து அவர் அறிந்திருக்கக் கூட வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். விசா வழங்கப்பட்டதை அடுத்து பார்வதி அம்மா இந்தியாவுக்கு வர முடியும் என்பதையே வைகோ உணர்ந்திருந்தார்.

இப்போது கூட வைகோ போன்றவர்களின் உதவியுடன் தான் நீதிமன்றம் போய் கருணாநிதியை வாய் திறக்க வைச்சிருக்கிறார்கள். கருணாநிதி தனக்கு எதுவுமே தெரியாது என்று முதலில் அறிக்கை விட்டார். பின்னர் ஜெயலலிதா எழுதிய கடிதம் காரணம் என்றார். அதன் பின்னர் பார்வதி அம்மா தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றார். இப்போ நீதிமன்றத்தின் ஆணையை அடுத்து பார்வதி அம்மாள் கேட்டுக் கொண்டால் அவருக்கு நிபந்தனை அடிப்படையில் சிகிச்சை அளிக்கத் தயார் என்கிறார்.

இதில் தானும் குழம்பி இந்த விவகாரத்தை ஜெயலலிதா மீது அரசியல் செய்ய பயன்படுத்திக் கொண்டது கருணாநிதியே அன்றி வைகோவோ.. நெருமாறன் ஐயாவோ... திருமாவோ அல்ல. இதனை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். இப்போது கூட நீதிமன்றத் தீர்ப்பின் படி கருணாநிதி நடக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அதை செய்ததும் வைகோ போன்றவர்கள் என்பதை முதலில் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உங்களிடம் கருணாநிதி மீது தனிப்பட்ட நல்லபிப்பிராயம் இருக்கலாம். அதற்காக அவரின் தவறுகளை மற்றவர்கள் மீது போட்டுவிட்டு அவரை தப்பி வைக்கும் உங்களின் முயற்சியை சகித்துக் கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் நான் வசம்பின் கருத்தை ஆதரிக்கின்றேன்

மாவீரர்களை வைத்தும், பிணங்களை வைத்தும் அரசியல் வியாபாரம் செய்தாயிற்று, இனி மூதாட்டியான தலைவரின் தாயின் அந்திமக் கால துயர உணர்வுகளை வைத்து வியாபாரம் செய்ய தொடங்கியாச்சு

எனக்கு இதில் உடன்பாடில்லை.

போராட்டம் அரசியல் இது இரண்டுக்கும் இடையில் வேறுபாடுண்டு. மாவீரர்கள் போராளிகள். கொள்கைக்காக மாண்டவர்கள். அவர்களை வைத்து அரசியல் செய்யும் நிலையில் இப்போ யாரும் இல்லை. ஆனால் பார்வதி அம்மா என்ற நோயாளியை தமது அரசியல் எதிரிகளை பழிவாங்க கருணாநிதி பயன்படுத்துவதுதான் அப்பட்டமான அரசியல். சந்தர்ப்பவாத அரசியல். அது கருணாநிதிக்கு கை வந்த கலை.

பார்வதி அம்மாவின் மடல் நீதிமன்ற வேண்டுகோளின் படி.. தமிழக முதல்வர் என்ற வகையில் கருணாநிதிக்கு வரையப்பட்டுள்ளதே அன்றி கருணாநிதி நன்றே செய்கிறார் என்ற கணிப்பில் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமா போன்றவர்களே ஆரம்பம் தொட்டு தேசிய தலைவரின் பெற்றோரை விடுவிக்க பாடுபட்டனர். ராஜபக்சவை பார்க்கப் போன திமுக எம்பிகள் குழுவில் கனிமொழி இவர்களைப் பற்றி கேட்டதும் இல்லை சந்திக்க முயன்றதும் இல்லை. ஆனால் அப்போதே திருமா இவர்களின் நலன் குறித்து ஊடகங்களுக்கு கருத்துக் கூறி இருந்தார் என்பதையும் கவனிக்க வேண்டும். அதுமட்டுமன்றி தேசிய தலைவரின் தந்தையின் இறுதி நிகழ்வில்.. திருமா மற்றும் வைகோ நெடுமாறன் ஐயாவின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திமுக அதிமுக சார்பில் எவரும் கலந்து கொள்ள முன்வரவில்லை என்பதையும் கவனியுங்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தாய் பார்வதி அம்மாவை வைத்து அரசியல் செய்யும் போலி தமிழ் தேசியவாதிகள்..திருவேங்கடம் வேலுப்பிள்ளையை வைத்து அரசியல் செய்த மகிந்த ராஜபக்சே..! கூடு விட்டு கூடு பாயும் உத்தியா..? ஈழதேசம் பார்வையில்..!

பார்வதி அம்மா மலேசியாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்திறங்கினார்...மருத்துவ உதவிக்காக..! சென்னை வந்து இறங்கவில்லை.. சாய்வு நாற்காலியில் இருந்தவாறே மீண்டும் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்..அப்படியெனில் எப்படியப்பா..சென்னை வந்திறங்கும் விமானம் திரும்ப போக முடியும்..? ஒருவேளை மலேசியா அரசின் உள்குத்தும் இருக்கிறதா..? மலேசியா - இந்திய அரசின் கூட்டு தயாரிப்பா..? சென்னை வந்த விமானம் உடனே மலேசியாவிற்கு திரும்பும் விமானத்தில் ஏற்றி உள்ளனரா மலேசியா அரசு..? அப்படியெனில் ஏன் விமானத்தில் ஏற்றி இறக்கி விளையாடினீர்கள்.? நோய்வாய்ப்பட்டு இருந்தால் என்ன..? இல்லாமல் இருந்தால் என்ன..? எங்களின் விருப்பம் வேறு என்றா..?

தமிழ் தமிழர் என்ற அடையாளம் இருக்கக்கூடாது..? தி.மு.க தான் தமிழ் தமிழர்..கருணாநிதிதான் தமிழ் தமிழர் தலைவர்..! திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஆகட்டும்... தமிழ் தாய் பார்வதி அம்மா ஆகட்டும்..! தமிழ் மக்கள் மனதில் திரும்பவும் தமிழ் தமிழர் என்ற உண்மையான உணர்வு திரும்ப ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கருணாநிதியின் கும்பல்..( மு.க ஸ்டாலின்,டி.ஆர்.பாலு, துரை முருகன் மற்றும் இந்தக் கும்பல்கள் .) அவரை சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் பதறுகிறது...பயப்படுகிறது..என்னடா இது ஒரு புதிய பிரச்சனை என்று..! நோய் வாய்ப்பட்டால் என்ன ..? வயதானால் என்ன..? உடனே திரும்ப அனுப்பு..எக்காரணத்தையும் கொண்டு தமிழகத்தில் இவர்கள் வரக்கூடாது..காங்கிரஸ் பெருச்சாளிகளை விட மிகவும் கவலைப்பட்டது இந்த கொள்ளைக்கார தி.மு.க கும்பல்..!

தி.மு.க கும்பலை கடந்த ஆண்டுகளில் இருந்து மிகச்சரியாக பிரித்து கட்டி வருகிறார் விஜயகாந்த்..

சமீபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கூட தமிழகத்தின்..ஏன் இந்தியாவின் மிக மோசமான ஒரு அரசியல்வாதி என்றால் அது கருணாநிதிதான் என்று...பேசுவது ஒன்று..செயல்படுவது பேசுவதிற்கு எதிராக..மிகப்பெரும் ஊழல் பேர்வழி... தமிழகத்தின் கொள்ளைக்கும்பல் என்று..ஏன் மற்ற தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் பேச மறுக்கின்றன..கிழடு தட்டிப்போன, கண்பார்வையற்ற, பேசும் திறன் இழந்த, எழுதும் பேனா பிடிக்கும் திறனை முற்றிலும் இழந்த..( இந்த லட்சணத்தில் ஒரு படத்தில் கதை வசனம் அல்லது ஏதோ ஒன்று எழுதியதற்காக சுமார் 45 லட்சம் பணம் கொடுத்தார்கள் இந்த நிலையில் உள்ள கருணாநிதிக்கு...) கருணாநிதியை மட்டும் முன்வைத்து அரசியல் பேசுகின்றனர்

கருணாநிதியின் கும்பல்..மற்றும் முக்கிய வைகோ போன்ற எதிர்க் கட்சிகள்..கருணாநிதி மட்டும் ஆட்சி செய்யவில்லை...செம்மொழி மாநாடு நடத்தவில்லை...இதன் பின்னால் யார் இருக்கிறார்கள்..சன் குழுமம், மாறன் கும்பல்..ஆற்காடு வீராசாமி, ராசா மற்றும் திருமா கும்பல்... இப்படி அனுமான் வால் போல நீண்டு கொண்டிருக்கும் இந்தக் கும்பல் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படுகின்றனர் இந்த போலி தமிழ் தேசிய கும்பலால்..!

இது கூட தி.மு.க கும்பலின் உள்குத்தாகக் கூட இருக்கலாம்..எல்லாம் கருணாநிதி என்று

சொல்லுவோம்..மற்றைய தலைமுறையை ஏன் காட்டிக்கொடுக்க வேண்டும்..கருணாநிதியை விட மிக மோசமான கும்பல் நாங்கள் ... என்று கூட மாறன் அழகிரி கும்பல் நினைத்திருக்கலாம்..! இலங்கை யுத்தம் முடிந்தவுடன் ஒரு எம்பிக்கள் குழு சென்றது இலங்கைக்கு..போனார்கள்..தங்கினார்கள்..

பார்த்தார்கள் இலங்கை டீ எஸ்டேட்களை..ஆளுக்கு ஆயிரம் ஏக்கர் என்று பேசினார்கள்..பட்டா போட்டார்கள் திரும்பினார்கள்..கருணாநிதியின் கனிமொழி வேறு இதில்...இப்பொழுது வெளியுறவுத் துறை மந்திரி கனிமொழிக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு பேச்சு இருக்கிறது...கொடுத்தாலும் கொடுப்பார்கள் காங்கிரஸ் பெருச்சாளிகள்...இவர்கள் இந்திய பாராளுமன்ற குழு என்று சென்று பார்த்து விட்டு கூறினார்கள்.." நாங்கள் முகாம் மக்கள் புனர் வாழ் குறித்து பேசிவிட்டு வந்தோம்..மகிந்த ராஜபக்சே உறுதி அளித்து விட்டார் என்றெல்லாம் கூறினீர்களே அப்பா..? இதில் டி.ஆர்.பாலு..ரொம்ப கோபப்பட்டாரே..? ஐயா டி.ஆர்.பாலு..முகாம் மக்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லையே..

எப்பொழுதும்...! எவன் செத்தால் என்ன..! எவன் பிழைத்தால் என்ன..?

ஊர் ஊருக்கு எஸ்டேட் வாங்க வேண்டும்...கொள்ளை அடிக்க வேண்டும்..கப்பல் வாங்க வேண்டும்..

கம்பெனி கட்ட வேண்டும்..உங்களைப் பாதுகாக்கும் சன் குழுமம்..தி.மு.கவின் ரகசிய கும்பல்கள்..

பார்ப்போம் எவ்வளவு நாள் இந்நிலை நீடிக்கும் என்று..! எம்.ஜி.ஆர் என்று ஒரு இரும்பு மனிதர் இருந்தார்..அவர் மறைவிற்கு பின் அந்த இரும்புக் கோட்டைக்குள் பல கொலைகளும் சொத்து சூறையாடல்களும் நடந்தன..அதுபோலவே கருணாநிதியின் மறைவுக்கப் பிறகு அவருடைய சொத்துக்கள் மட்டும் அல்ல...டி.ஆர்.பாலு, மாறன் கும்பலின் சொத்துக்கள்..வீராசாமியின் சொத்துக்கள்

எல்லாம் பல கொலைகளுக்கும் சூறையாடல்களுக்கும் வழிவகுக்கும் என்று நம்பலாம்..கொஞ்சமா செய்துள்ளீர்கள்..இலங்கை தமிழர்களுக்கு..அதற்கு பலன் வேண்டாமா..? என்ன..!

ஈழதேசம் செய்திக்குழு

பார்வதி அம்மாக்கு இந்திய தூதரகம் விசா வழங்கி இருந்ததன் அடிப்படையில் அவர் இந்தியாவிற்கு வர தடையில்லை என்பதைத்தான் வைகோ நெடுமாறன் ஐயா போன்றவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

திமுக அரசில் இருக்கும் திருமாவே தமிழக அரசின் இந்தச் செயலை ஆரம்பத்தில் கண்டித்திருந்தார்.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட 7 ஆண்டுகளுக்குள் நிலைமைகள் மாறியுள்ளன. அதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் தான் முடிவை சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தார்.

ஜெயலலிதா ஆட்சியை விட்டுப் போய் பல காலம். அப்போதிருந்து ஆட்சியில் இருக்கும் கருணாநிதிக்கு உதுகள் தெரியாமல் இல்லை.

வைகோ நெடுமாறன் போன்றவர்கள் தமிழக அரசில் அங்கம் வகிக்கவில்லை. ஜெயலலிதா கடிதம் எழுதிய காலத்தில் எல்லாம் வைகோ அவருடன் இருக்கவில்லை. அதுகுறித்து அவர் அறிந்திருக்கக் கூட வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம். விசா வழங்கப்பட்டதை அடுத்து பார்வதி அம்மா இந்தியாவுக்கு வர முடியும் என்பதையே வைகோ உணர்ந்திருந்தார்.

இப்போது கூட வைகோ போன்றவர்களின் உதவியுடன் தான் நீதிமன்றம் போய் கருணாநிதியை வாய் திறக்க வைச்சிருக்கிறார்கள். கருணாநிதி தனக்கு எதுவுமே தெரியாது என்று முதலில் அறிக்கை விட்டார். பின்னர் ஜெயலலிதா எழுதிய கடிதம் காரணம் என்றார். அதன் பின்னர் பார்வதி அம்மா தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றார். இப்போ நீதிமன்றத்தின் ஆணையை அடுத்து பார்வதி அம்மாள் கேட்டுக் கொண்டால் அவருக்கு நிபந்தனை அடிப்படையில் சிகிச்சை அளிக்கத் தயார் என்கிறார்.

இதில் தானும் குழம்பி இந்த விவகாரத்தை ஜெயலலிதா மீது அரசியல் செய்ய பயன்படுத்திக் கொண்டது கருணாநிதியே அன்றி வைகோவோ.. நெருமாறன் ஐயாவோ... திருமாவோ அல்ல. இதனை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். இப்போது கூட நீதிமன்றத் தீர்ப்பின் படி கருணாநிதி நடக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அதை செய்ததும் வைகோ போன்றவர்கள் என்பதை முதலில் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உங்களிடம் கருணாநிதி மீது தனிப்பட்ட நல்லபிப்பிராயம் இருக்கலாம். அதற்காக அவரின் தவறுகளை மற்றவர்கள் மீது போட்டுவிட்டு அவரை தப்பி வைக்கும் உங்களின் முயற்சியை சகித்துக் கொள்ள முடியாது.

ஏதோ செய்திகளை நீங்கள் மட்டும் தான் பார்ப்பது போல் கதையளக்கின்றீர்கள். பார்வதியம்மா விடயமாக கருப்பன் என்ற வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தார். ஆனால் அதற்கு முதலிலேயே தமிழ்நாடு சட்டசபையில் இவ்விவ்காரம் எழுப்பப்பட்டு அப்போதே முதல்வர் கருணாநிதி பார்வதியம்மா விரும்பினால் தமிழஇநாடு வந்து சிகிச்சை பெற வேண்டிய நடவடிக்கைகளை தான் மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு செய்யத் தயார் என்று அறிவித்து விட்டார். எனவே வைகோ போன்றவர்களின் நடவடிக்கைகள் தான் முதல்வரை வாய் திறக்க வைத்தது என்பன போன்றன தங்களின் அபத்தமான கற்பனை. அதுபோல் நீதிமன்றம் பார்வதியம்மா விடயமாக மத்திய மாநில அரசுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு மட்டுமே பணித்திருந்தது. எந்த இடத்திலும் பார்வதியம்மாவை தமிழக அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ கடிதம் ஏழுதுமாறு தங்கள் கற்பனை போல் கூறவில்லை.

அதுபோல் பார்வதியம்மா தமிழகம் வருவதற்கு சில தினங்கள் முன்பு தான் உரிய கடவுச்சீட்டு (அதுவும் விஐபி கடவுச்சீட்டு) விசா போன்றன இருந்தும் சிவாஜிலிங்கம் விமானநிலையித்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டார். பார்வதியம்மாவிற்கு இந்தியா வர தடையிருப்பது வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா அழைத்துச் சென்று முயற்சித்தார். ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய போது அவருடனேயே வைகோ கூட்ட வைத்திருந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தான் வைகோ மீண்டும் திமுக கூட்டணிக்கு வந்திருந்தார். அதுபோல் திருமாவளவன் தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை விட்டதாகவும் கதையளந்துள்ளீர்கள். திருமாவளவனும் . ஜெயலலிதாவையும் மத்திய அரசையும் கண்டித்தே அறிக்கை விட்டிருந்தார். அது தங்கள் கண்ணுக்கு தமிழக அரசைக் கண்டித்ததாக தெரிகின்றது போலும்.

அதுபோல் முதலவர் கருணாநிதி எந்த இடத்திலும் பார்வதியம்மா தமிழகம் வர தன்னிடம் அனுமதி பெறிவல்லையெனக் கூறவுமில்லை. எல்லா இடத்திலும் தங்கள் கற்பனை நன்றாகத் தான் புகுந்து விளையாடுகின்றது. வைகோ நெடுமாறன் போன்றவர்களின் நடவடிக்கைகளை சுபவீரபாண்டியன் போன்ற தமிழின உணர்வாளர்கள் கூடக் கண்டித்திருந்தது தங்கள் கண்ணிற்கு படவில்லைப் போலும். பார்வதியம்மாவின் வருகையை ஏனையவர்களுக்கும் தெரிவித்திருந்தால் எத்தனையோ விடயங்கள் நடைபெறாது தடுத்திருக்க முடியும். ஆனால் வைகோவும் நெடுமாறனும் ஏதோ இலங்கைத் தமிழரின் விடயங்களை தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்தது போல் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே இதிலிருந்தே தெரியவில்லையா இங்கு பார்வதியம்மாவை வைத்து யார் அரசியல் செய்கின்றார்களென்று?? அதனால் தன் பங்கிற்கு முதல்வர் கருணாநிதியும் அரசியல் காய் நகர்த்துகின்றார். இதற்கு உதாரணமாகத் தான் முன்பு வைகோ கூட்டமைப்பையும் மூக்குடைபட வைத்த சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதைப் பற்றித் தாங்களும் வசதியாக வாயே திறக்கவில்லை.

முதல்வர் கருணாநிதியுடன் எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவுமேயில்லை. தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதாவை விட இவர் பறுவாயில்லை என்பதே எனது நிலை. அதற்கு தாங்கள் வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக கற்பனையில் கதையளப்பது போல் நான் செய்யவில்லையே??

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ செய்திகளை நீங்கள் மட்டும் தான் பார்ப்பது போல் கதையளக்கின்றீர்கள். பார்வதியம்மா விடயமாக கருப்பன் என்ற வழக்கறிஞர் ஒருவரே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றைத் தொடர்ந்திருந்தார். ஆனால் அதற்கு முதலிலேயே தமிழ்நாடு சட்டசபையில் இவ்விவ்காரம் எழுப்பப்பட்டு அப்போதே முதல்வர் கருணாநிதி பார்வதியம்மா விரும்பினால் தமிழஇநாடு வந்து சிகிச்சை பெற வேண்டிய நடவடிக்கைகளை தான் மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு செய்யத் தயார் என்று அறிவித்து விட்டார். எனவே வைகோ போன்றவர்களின் நடவடிக்கைகள் தான் முதல்வரை வாய் திறக்க வைத்தது என்பன போன்றன தங்களின் அபத்தமான கற்பனை. அதுபோல் நீதிமன்றம் பார்வதியம்மா விடயமாக மத்திய மாநில அரசுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு மட்டுமே பணித்திருந்தது. எந்த இடத்திலும் பார்வதியம்மாவை தமிழக அரசுக்கோ அல்லது மத்திய அரசுக்கோ கடிதம் ஏழுதுமாறு தங்கள் கற்பனை போல் கூறவில்லை.

அதுபோல் பார்வதியம்மா தமிழகம் வருவதற்கு சில தினங்கள் முன்பு தான் உரிய கடவுச்சீட்டு (அதுவும் விஐபி கடவுச்சீட்டு) விசா போன்றன இருந்தும் சிவாஜிலிங்கம் விமானநிலையித்திலிருந்து திருப்பியனுப்பப்பட்டார். பார்வதியம்மாவிற்கு இந்தியா வர தடையிருப்பது வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா அழைத்துச் சென்று முயற்சித்தார். ஜெயலலிதா மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய போது அவருடனேயே வைகோ கூட்ட வைத்திருந்தார்.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் தான் வைகோ மீண்டும் திமுக கூட்டணிக்கு வந்திருந்தார். அதுபோல் திருமாவளவன் தமிழக அரசைக் கண்டித்து அறிக்கை விட்டதாகவும் கதையளந்துள்ளீர்கள். திருமாவளவனும் . ஜெயலலிதாவையும் மத்திய அரசையும் கண்டித்தே அறிக்கை விட்டிருந்தார். அது தங்கள் கண்ணுக்கு தமிழக அரசைக் கண்டித்ததாக தெரிகின்றது போலும்.

அதுபோல் முதலவர் கருணாநிதி எந்த இடத்திலும் பார்வதியம்மா தமிழகம் வர தன்னிடம் அனுமதி பெறிவல்லையெனக் கூறவுமில்லை. எல்லா இடத்திலும் தங்கள் கற்பனை நன்றாகத் தான் புகுந்து விளையாடுகின்றது. வைகோ நெடுமாறன் போன்றவர்களின் நடவடிக்கைகளை சுபவீரபாண்டியன் போன்ற தமிழின உணர்வாளர்கள் கூடக் கண்டித்திருந்தது தங்கள் கண்ணிற்கு படவில்லைப் போலும். பார்வதியம்மாவின் வருகையை ஏனையவர்களுக்கும் தெரிவித்திருந்தால் எத்தனையோ விடயங்கள் நடைபெறாது தடுத்திருக்க முடியும். ஆனால் வைகோவும் நெடுமாறனும் ஏதோ இலங்கைத் தமிழரின் விடயங்களை தாம் மட்டுமே குத்தகைக்கு எடுத்தது போல் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத் தக்கது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே இதிலிருந்தே தெரியவில்லையா இங்கு பார்வதியம்மாவை வைத்து யார் அரசியல் செய்கின்றார்களென்று?? அதனால் தன் பங்கிற்கு முதல்வர் கருணாநிதியும் அரசியல் காய் நகர்த்துகின்றார். இதற்கு உதாரணமாகத் தான் முன்பு வைகோ கூட்டமைப்பையும் மூக்குடைபட வைத்த சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதைப் பற்றித் தாங்களும் வசதியாக வாயே திறக்கவில்லை.

முதல்வர் கருணாநிதியுடன் எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எதுவுமேயில்லை. தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதாவை விட இவர் பறுவாயில்லை என்பதே எனது நிலை. அதற்கு தாங்கள் வைகோ நெடுமாறன் போன்றவர்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக கற்பனையில் கதையளப்பது போல் நான் செய்யவில்லையே??

முதலில் நீதிமன்றம் சொன்னவற்றை தெளிவாகப் படியுங்கள்.

பார்வதி அம்மா சார்பில் இரண்டு வாரங்களுக்குள் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்படும். அதை மையமாக வைத்து 4 வாரங்களுக்குள் மத்திய மாநில அரசுகள் முடிவுகளை அறிவிக்கக் கோரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தான் பார்வதி அம்மாவின் இந்தக் கடிதம் வந்துள்ளது.

பார்வதி அம்மாவிற்கு வர தடையிருப்பது தெரிந்திருந்தால் வைகோ நெடுமாறன் சீமான் திருமா போன்றவர்கள் வாழாதிருக்கமாட்டார்கள். அதுமட்டுமன்றி திமுக பார்வதி அம்மா திருப்பி அனுப்பட்டதற்கு வருத்தம் கூட வெளியிடவில்லை. மாறாக ஜெயலலிதாவை இழுத்து வைத்து அரசியல் செய்ததை உலகமே அறியும்.

வைகோ தமிழக ஆட்சியில் இருந்தவரல்ல. நெடுமாறன் ஐயாவும் தான். கருணாநிதியும் ஜெயலலிதாவும் தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்களே இந்த நடவடிக்கைக்கு பொறுப்பாவர். இதில் இருந்து கருணாநிதியோ ஜெயலலிதாவோ பிரித்து வைத்துப் பார்க்கக் கூடிய நிலை இல்லை.

கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை விட வேறெதுவும் செய்யவில்லை. இதுதான் யதார்த்தம். இதில் நீதிமன்றத்தால் மூக்குடைபட்டிருப்பவர் கருணாநிதியே.

சட்டமன்றத்தில் கருணாநிதி தானாக வாய்திறக்கவில்லை. வைகோ நெடுமாறன் திருமா போன்றவர்கள் உட்பட பலரும் பார்வதி அம்மாவின் நாடுகடத்தலை கண்டித்ததன் பின்னணியில் நிலைமையை சமாளிக்க ஒரு அறிக்கை விட்டார். அதன் பின் அடங்கி விட்டார். ஆனால் இப்போ நீதிமன்ற நிபந்தனை தான் அவரை மேலும் நிற்பந்தத்துக்குள் தள்ளி பார்வதி அம்மாவிற்கு உதவ வேண்டிய காட்டாய நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது வைகோ நெடுமாறன் மற்றும் வழக்கறிஞர் கறுப்பன் போன்றவர்களால் தான் சாத்தியமானது என்பது மறுக்கமுடியாத உண்மை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71414

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes:அதைத் தானே கடிதம் சுட்டி நிற்கின்றது. இதைப் புரிந்து கொள்ள தங்களுக்கு 2 பக்கக் கருத்துகள் தேவைப்பட்டுள்ளது. :rolleyes::lol:

படிப்பறிவில்லாத எனக்கு இருபக்கங்கள் போதுமானது.

ஆனால்..

பலதும் பத்தும் தெரிந்த உங்களுக்கு.................. . ?

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்வதி அம்மாவிற்கு வர தடையிருப்பது தெரிந்திருந்தால் வைகோ நெடுமாறன் சீமான் திருமா போன்றவர்கள் வாழாதிருக்கமாட்டார்கள். அதுமட்டுமன்றி திமுக பார்வதி அம்மா திருப்பி அனுப்பட்டதற்கு வருத்தம் கூட வெளியிடவில்லை. மாறாக ஜெயலலிதாவை இழுத்து வைத்து அரசியல் செய்ததை உலகமே அறியும்.

வைகோ தமிழக ஆட்சியில் இருந்தவரல்ல. நெடுமாறன் ஐயாவும் தான். கருணாநிதியும் ஜெயலலிதாவும் தான் மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்களே இந்த நடவடிக்கைக்கு பொறுப்பாவர். இதில் இருந்து கருணாநிதியோ ஜெயலலிதாவோ பிரித்து வைத்துப் பார்க்கக் கூடிய நிலை இல்லை.

கருணாநிதியும் சரி ஜெயலலிதாவும் சரி ஈழத்தமிழர்களை வைத்து அரசியல் செய்வதை விட வேறெதுவும் செய்யவில்லை. இதுதான் யதார்த்தம். இதில் நீதிமன்றத்தால் மூக்குடைபட்டிருப்பவர் கருணாநிதியே.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71414

நெடுக்காலபோவான் மற்றும் ஏனையோருக்கும்...

நெ; நீங்கள் இந்த பிரச்னையை விளங்கினது இப்படித்தான் என்கிற போது என்ன சொல்லுவததேன்றே தெரியவில்லை.

ஆனால் முதலே நான் சொன்ன மாதிரி, இந்த கடிதம் எழுதியதை பிடிக்காமல் , மௌனம் சாதிக்கும், உதாரணம் தமிழ் நெட், பலபேரின் எதிர்பார்ப்பு ஒன்று இங்கே இருக்கிறது, கருணாநிதி திரும்பவும் ஏதாவது குளறுபடி செய்து/ அல்லது மத்திய அரசு எதாவது செய்து விசா அல்லது உட்புகுவதற்குரிய அனுமதியோ கிடைக்க கூடாது என்று. ஒன்று மட்டும் விளங்கி கொள்ளுங்கள் இந்த கடிதம் முதல் படிதான், என்னும் பல படி போக வேண்டும். அதற்கு அந்த தாயின் உடல்நிலையும் ஒத்துக்கொள்ள வேண்டும். அதெல்லாம் விட்டு விட்டு எல்லாம் முடிந்த மாதிரியும், இனி கருணாதியோ இந்திய அரசாங்கமோ தேவையில்லை என்ற மாதிரி பேசுவது என்ன விதத்தில் நன்மை பயக்கும் என யோசித்து கதையுங்கள். மற்றது இங்கே ஆகக் குறைந்தது யாழுக்கு வருபவர்களாவது கொஞ்சம் செய்திகளை வாசிப்பார்கள் என்கிற மாதிரி பதில்களை எழுதுங்கள். அளக்கும் கதைகளையாவது அளந்து விடுங்கள். நாங்கள் "400000 பேர் செத்தபிறகு சர்வதேச நாடுகளின் கவனம் எங்களின் மீது திரும்பும்" என்ற ஆய்வாளர்கள் இன்றும் ஆய்வு செய்யும் இனம் நாங்கள்தான் என்பதை நினைவு படுத்துகிறமாதிரி செயற்பாடுகளை இனியும் செய்யவேண்டாம். அந்த தாய் சரியானதை செய்துள்ளார் அதற்க்கு உரியதை மற்றவர்களும் செய்ய நாங்களும் மனத்தால்தானும் பிராத்திப்போம்.

கருணாநிதியோ இந்தியாவோ ஜெயலலிதாவோ எமக்கு வேண்டாம் என்பதல்ல நிலைப்பாடு. இவர்கள் எமக்காக எமது விருப்பை புரிந்து கொண்டு எதனையும் செய்யமாட்டார்கள் என்பதுதான் நிலைப்பாடு.

எமது தேசிய தலைவர் இவர்கள் எல்லோரோடும் நெருக்கமானவர். அவரே சொல்லி இருக்கிறார்.. நாம் தான் எமக்காகப் போராட வேண்டும் என்று, சர்வதேசமோ.. இந்தியாவோ.. கருணாநிதியோ.. ஜெயலலிதாவோ எமக்காக வெட்டிப் புடுங்குவார்கள் என்று நாம் வாழா திருந்தால்.. எமக்கு மிஞ்சுவது அடிமை வாழ்வே.

தேசிய தலைவரின் தாயார் இந்தியா செல்ல எடுத்த முடிவுக்குக் காரணம் அவர் முன்னர் இந்தியாவில் பல காலம் வாழ்ந்தவர். அங்கு பரீட்சையமான டாக்டர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் அவர் முன்னரும் சிகிச்சை பெற்றுள்ளார். அந்த வகையில் அவருக்கு இன்னொரு நாட்டில் சிகிச்சை பெறுவதிலும் இந்தியாவில் பெறுவது இலகு. வைத்திய ரீதியில் அவருடைய மன நிலையை பலப்படுத்தும். இதைத் தவிர இங்கு வேறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறான ஒரு வெளிப்படையான விடயத்துக்குள் அரசியலை புகுத்தி உயிரோடு விளையாடும் கருணாநிதியை என்னென்பது.

40,000 மக்களை குண்டு வீசிக் கொல்லும் போது யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிக்கை விட்டவர்தான் இந்தக் கருணாநிதி என்பதையும் வரலாறு மறக்காது. மன்னிக்காது. முதுகு வலி என்று வைத்தியசாலையில் போய் கிடந்தவர் தான் இவர். மக்களின் உயிரோடு உணர்வோடு.. கடிதம் எழுதி காலம் கடத்தியவர் தான் இவர். இவரிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வசம்புண்ணன் இந்தச் செய்திகளை வடிவா படியுங்கோ கோட் என்ன சொன்னது என்று புரியும் தெளிவாக.

----------

பார்வதி அம்மாளின் விசாவை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாரகனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை வந்து சிகிச்சை பெற வசதியாக அவரது விசாவை தேவைப்படும் காலம் வரை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்தில் அனுமதிக்க மறுத்து குடியுறுமை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பி கடிதம் எழுதினால், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பரிந்துரை செய்தது.

இதனையடுத்து பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதிக்கும்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பார்வதி அம்மாளின் விண்ணப்பத்தின் மீது மத்திய மாநில அரசுகள் முடிவெடுக்க 2 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதனிடையே பார்வதி அம்மாளுக்கு மலேசிய அரசு வழங்கிய விசா வரும் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வரும் 16ஆம் தேதிக்குள் சென்னை வர அவருக்கு அனுமதி கிடைக்காவிட்டால், அவருடைய விசாவை தேவைப்படும் காலம் வரை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

----------

பிரபாகரன் தாய்க்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைத்து கலைஞர் கடிதம்: ஸ்டாலின் தகவல்

பிரபகாரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி தர பரிந்துரை செய்து முதல்வர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் துணை முதுல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சை குறித்து பேசிய துணை முதல்வர் ஸ்டாலின்,

மலேசியாவிலிருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் திருவேங்கடம் வேலுப் பிள்ளை பார்வதியம்மாளை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பிய நிகழ்வு குறித்து சட்டப்பேரவையில் கடந்த 19.4.2010 ஆம் நாளன்று விவாதிக்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய முதல் அமைச்சர் கருணாநிதி, இந்தச் செய்தி முறையாக உரிய வகையில் தமக்குச் சொல்லப்படவில்லை என்றும், அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை என்றும், அதன் காரணமாக அவர் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார். அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர் மலேசியாவிற்கே அதாவது கோலாலம்பூருக்கே திரும்பச் சென்றிருக்கிறார். அவர் அங்கே வைத்திய வசதி பெறுவாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. மீண்டும் தமிழகத்திற்குத் தான் சென்று வைத்திய வசதி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அவர் அறிவிப்பார்களேயானால், அதைப்பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அதை பற்றி எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நீதிப் பேராணை விண்ணப்பம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 30.4.2010 ஆம் நாளன்று தமிழக அரசின் வழக்கறிஞர், மாநில அரசுக்கு மருத்துவ சிகிச்சை கோரி மனு ஏதும் அளித்தால் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசுக்கு தக்க முன் மொழிவுகள் அனுப்பப்படும் என்ற கருத்தை, நீதிமன்றத்தின் முன் வைத்தார்.

இரு தரப்பினரின் வாதுரைகளையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்வதி அம்மாளின் மருத்துவ சிகிச்சை குறித்த முறையீட்டை மனுதாரரோ அல்லது பார்வதி அம்மாள் தரப்பிலோ கொடுக்க வேண்டும் எனவும், அப்படி கொடுக்கப்பட்ட மனு வினைத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்கள்.

நக்கீரன்.கொம்

நெ,

இந்த பகுதியில் நான் எழுதும் கடைசி பதில்...

நீங்கள் இதை விளங்கப்போவதில்லை என்று முடிவேடுத்தமாதிரி உள்ளபோது மேலும் மேலும் எழுதுவதில் பலன் இல்லை.சக வாசகனாக நான் சொல்லுவது இதுதான், நீங்கள் தடித்த எழுத்துகளால் செய்திகளை வேறுபடுத்தும்போது அல்லது முக்கியப்படுத்தும்போது, அதில் உள்ள முழுக்கருத்தையும் கிரகிக்க பாருங்கள், அதற்கு மேலுள்ள பந்திகளையும் வாசியுங்கள்.

நன்றி

முதலில் நீதிமன்றம் சொன்னவற்றை தெளிவாகப் படியுங்கள்.

பார்வதி அம்மா சார்பில் இரண்டு வாரங்களுக்குள் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்படும். அதை மையமாக வைத்து 4 வாரங்களுக்குள் மத்திய மாநில அரசுகள் முடிவுகளை அறிவிக்கக் கோரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தான் பார்வதி அம்மாவின் இந்தக் கடிதம் வந்துள்ளது.

பார்வதி அம்மாவிற்கு வர தடையிருப்பது தெரிந்திருந்தால் வைகோ நெடுமாறன் சீமான் திருமா போன்றவர்கள் வாழாதிருக்கமாட்டார்கள். அதுமட்டுமன்றி திமுக பார்வதி அம்மா திருப்பி அனுப்பட்டதற்கு வருத்தம் கூட வெளியிடவில்லை. மாறாக ஜெயலலிதாவை இழுத்து வைத்து அரசியல் செய்ததை உலகமே அறியும்.

அது என்ன வசதியாக முக்கியமானவற்றை மறைத்துவிட்டு கதையளக்கின்றீர்கள். ஏற்கனவே சிவாஜிலிங்கம் இலங்கையில் பார்வதியம்மாவிற்கு இந்திய விசா பெற முயன்று மறுக்கப்பட்டதனாலேயே மலேசியா சென்று முயற்சித்தனர். இது கூட தவறான முயற்சி என்பது தங்களுக்கு தெரியாதா?? இவ்விடயம் கூட வைகோவிற்கோ, நெடுமாறனுககோ தெரியாதென்று கதையளக்க வேண்டாம். முதலில் வைகோ ஜெயலலிதாவோடு 2003இல் கூட்டில்லையென்று கதையளந்தீர்கள். இப்போ வைகோ தமிழக ஆட்சியில் இருந்தவரில்லையென அடுத்த கதையளப்பு. அவரின் கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அன்று இருந்தது தங்களுக்கு இலகுவாக மறந்து விட்டது போலும். தமிழக அரசு ஒரு தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்புவதென்றால் அதனைச் சட்டமன்றத்தில் விவாதித்து தீர்மானம் எடுத்தபின் தான் அதனை மத்தியஅரசுக்கு அனுப்பி வைக்க முடியும். இந்தத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் விவாதிக்கும் போது மதிமுக உறுப்பினர்கள் ஒருவேளை தூக்கத்தில் இருந்தினமோ?? இன்றுவரை இந்த விடயம் தமக்குத் தெரியாதென்று வைகோவோ,நெடுமாறனோ புலம்பவில்லை. ஆனால் தாங்கள் தான் தங்கள் பங்கிற்கு புகுந்து விளையாடுகின்றீர்கள்.

படிப்பறிவில்லாத எனக்கு இருபக்கங்கள் போதுமானது.

ஆனால்..

பலதும் பத்தும் தெரிந்த உங்களுக்கு.................. . ?

நான் ஆரம்பத்திலேயே இதுதான் விடயமென போட்டுடைத்து விட்டேன். ஆனால் 2 பக்கங்களை தாண்டியும், தங்களுக்கு இன்னும் சரியாகப் புரியவில்லையென்பது இப்போது புரிகின்றது.

வசம்புண்ணன் இந்தச் செய்திகளை வடிவா படியுங்கோ கோட் என்ன சொன்னது என்று புரியும் தெளிவாக.

----------

பார்வதி அம்மாளின் விசாவை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாரகனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை வந்து சிகிச்சை பெற வசதியாக அவரது விசாவை தேவைப்படும் காலம் வரை நீட்டிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்தில் அனுமதிக்க மறுத்து குடியுறுமை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற விரும்பி கடிதம் எழுதினால், அதற்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் பரிந்துரை செய்தது.

இரு தரப்பினரின் வாதுரைகளையும் கேட்டறிந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்வதி அம்மாளின் மருத்துவ சிகிச்சை குறித்த முறையீட்டை மனுதாரரோ அல்லது பார்வதி அம்மாள் தரப்பிலோ கொடுக்க வேண்டும் எனவும், அப்படி கொடுக்கப்பட்ட மனு வினைத் தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்கள்

ஒரு நீதிமன்றம் தனது தீர்ப்பில் இரண்டு விதமாக தீர்ப்பு வழங்கியது இது தான் உலகிலேயே முதல் முறை. ஒரு நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரை செய்ய முடியுமே தவிர அதனைச் செய் என்று ஆணையிட முடியாது. அது என்னவோ தங்களைப் போல் நக்கீரனும் கதையளப்பில் கில்லாடி தான். தாங்கள் இணைத்ததை தாங்களே ஒருமுறை படித்துப் பார்ப்பது உத்தமம்.

Edited by Vasampu

இதை மனிதாபிமானத்துக்கு அப்பாற்பட்டு எல்லோரும் அரசியலாக்கிறோம்!

ஆமா, பார்வதி அம்மாளிடம் நிற்கும் சிலர் ஏன் அங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், மிரட்டல்கள் போன்ற செய்து வரும்போது மவுனமாகி விட்டுகிறார்கள்??????? வெட்கமோ, அதைக்கதைக்க???? :D

Edited by Nellaiyan

பல ஈழ தமிழர்கள் கேட்காததை வை.கோ கேட்டுள்ளார். தமிழ் நாட்டில் ஈழ தமிழர்களின் அரசியலை வைத்து மட்டும் அரசியல் நடாத்த முடியாது. இதற்கு நல்ல உதாரணம் ஜெயலலிதா சந்தர்ப்ப வாதியாக மாறி தேர்த்தலில் தோல்வி அடைந்தது. மேலும் பழ நெடுமாறன் அவர்கள் தமிழர்களுக்காக பல காலமாக குரல் கொடுக்கும் ஒருவர். அவரின் அரசியல் கட்சியின் பெயர் என்ன? எனக்கு தெரிந்து அவருக்கு அரசியல் கட்சி இருந்ததாக தெரியவில்லை.எந்த அரசியல் கட்சியுடன் கூட்டாகவும் இருக்கவில்லை. எப்படி அவர் அரசியல் பேச முடியும்?.

http://www.youtube.com/watch?v=epHQ-_9plNg&feature=channel

இப்போ தெரியுமே யார் மௌனித்தார்கள் என்று?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.