Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்று வந்தவர்களுக்கும்... செல்ல இருப்பவர்களுக்கும்...! - பார்த்தசாரதி

Featured Replies

சென்று வந்தவர்களுக்கும்... செல்ல இருப்பவர்களுக்கும்...! - பார்த்தசாரதி

திகதி: 02.07.2010 ஃஃ தமிழீழம்

அன்புடன்,

புலத்தின் புத்திசீவிகள் என்ற நினைப்பில் கொழும்புக்கு பின் கதவு வழியாக போய் வருபவர்களுக்கு.! (இனிமேல் செல்ல இருப்பவர்களுக்கும்தான்)!!

நாங்களெல்லாம் நலம்விசாரிக்கும் இடத்தில் இப்போது நீங்கள் எல்லோரும் இல்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால் எழுதவேண்டிய தேவை. அதனால் இதை எழுதுகிறோம்.

ஏதோ உங்களுக்கு லங்காமாதாவின் அபிவிருத்திபற்றி சிந்தித்து மிச்சமாக இருக்கும் நேரத்தில்தன்னும் இதை படியுங்கள்.

சரி!

போனவருடத்தின் அவலப்பொழுதுகளில் உங்களில் சிலர் எங்களுடன் தெருக்களில் நின்றீர்கள். தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் உங்களில் சிலர்தோன்றி எமது மக்களை கூவி அழைத்தீர்கள்.

எல்லாம் முடிந்துவிடப்போகின்தென அவசரமாக அழைத்தீர்கள்.

உங்கள் அறைகூவலை ஏற்று மக்களும் லட்சமாக ஆயிரமாக கூடினார்கள். அப்போதே ஒன்று நெருடியது நெஞ்சுக்குள்.

உங்கள் அழைப்பை ஏற்று ஒன்றுதிரண்ட மக்கள் எழுச்சியடைந்து தெருக்களில் இறங்கியபோது நீங்கள் திகைத்ததும், அதை தடுக்க ராஜதந்திரம்.. அது.. இது என ஏதேதோசொல்லி நின்றதும்,

தேசியக்கொடியை இங்கு நாம் உயர்த்திப்பிடிப்பதால்தான் அங்கு வட்டக்கச்சியில் எரிகுண்டு சிங்களம் வீசுகிறது என புதுப்புது சமன்பாடுகளை சொல்லி எல்லாவற்றுக்கும் கொடியும் கொடியில் இருக்கும் துப்பாக்கியும்தான் காரணம் என்றும் நீங்கள் அறிவுசீவிகளாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்ன போதும் ஏதோ நெஞ்சுக்குள் நெருடிய போதும் இனம் எரிகின்ற போதில் எதற்காக முரண்பாடு என விட்டுவிட்டோம்.

பின்னர் அதை மறந்தும்தான் போய்விட்டோம்.

ஆனால் சிலநாட்களுக்கு முன்னர் நீங்கள் கொழும்பில் கோத்தபாயாவையும் சிங்கள தளபதிகளையும், கே.பியையும் சந்தித்த செய்தி உறுதியாக வந்தபோதில்தான் உங்களின் ஈனத்தனமான கோரமுகம் கொஞ்சம் உறைத்தது.

சிங்கள பேரினவாதத்தின் அறுபத்தி இரண்டு வருட வரலாற்றை எப்படிஇலகுவாக மறந்து ரத்தம் சிந்தும் கத்தி வைத்திருக்கும் சிங்கத்துடன் கூடிக்குலவுகின்றீர்களோ புரியவில்லை.

கே.பி யை விடுங்கள். அவர் சிங்கள தேசத்தின் ராணுவ தளபதிபோல மாறி எத்தனையோ காலம் ஆகிவிட்டது. அவர் கடந்த காலங்களில் தாய்லாந்திலும், சுவிசிலும், நோர்வேயிலும், கனடாவிலும் இருந்துகொண்டு செய்த காட்டிக்கொடுப்புகளை இப்போது கொழும்பில் இருந்து செய்கிறார்.

அது ஒன்றுதான் இப்போதைய வித்தியாசம். அவர் அழைத்தார். நாங்கள் சென்றோம் என்பதெல்லாம் சொல்வதற்கு எதுகை மோனையாக இருந்தாலும் அதற்குள் திரண்டிருக்கும் அசிங்கமும் கேவலமும் உங்களுக்கு தெரியவில்லையா?

புலத்தின் தெருக்களில் நடந்த ஊர்வலங்களில் இனப்படுகொலைப் படங்களை தாங்கி நின்றதற்காகவே இங்கிருந்து அங்கு செல்லும் தமிழர்கள் கைதுசெய்யப்படும் நிலையில் தினமும் தொலைக்காட்சிகளிலும், ஊர்வலங்களிலும் முன்னுக்கு முகத்தை காட்டிய உங்களை எப்படித்தான் சிங்களம் ராசமரியாதையுடன் கும்பவரவேற்பு தந்ததோ தெரியவில்லை.

நீங்கள் மாறினீர்களோ உங்களை கே.பி மாற்றினாரோ அதுஎல்லாம் இப்போதைக்கு தேவையில்லை. நீங்கள் மாறினால் மாறிவிட்டு போங்கள். எல்லா விடுதலைப் போராட்டங்களிலும் காணப்படும் துரோகிகளின் முகங்கள் ஆரம்பத்திலேயே அடையாளம் காணப்பட்டவையல்ல.

துரொகத்தனங்களை பார்ப்பது இதுதான் எமது விடுதலைப் போராட்டத்துக்கு முதன் முறையும் அல்ல. எனவே நீங்கள் மாறியதற்கு காரணம் அபிவிருத்தி, புனர்வாழ்வு என புலுடாக்களை விடுவதுதான் கேவலமாக இருக்கிறது.

தினமும் தமிழீழத்தின் பாழடைந்த கிணறுகளுக்குள்ளும், ஓடைகளுக்குள்ளும், மலக்கிடங்குகளுக்குள் இருந்தும் எடுக்கப்படும் ஆண்கள், பெண்கள் சடலங்கள் உங்களுக்கு சொல்லும் சேதி என்ன?

ராஜபக்சகளும் மகாநாயக்க தேரர்களும் ஈழத்தமிழர்களை மனிதர்களாக நினைக்கவும் நடத்தவும் ஆரம்பித்துவிட்டார்களா என்ன?

2009 மே மாதம் 18ம் திகதிக்கு பின்னர் தமது கோரப்பற்கள் திடீரென மறைந்துவிட்டன என்று காட்டுவதற்காகவும், தமிழர்களின் தேசிய எழுச்சி மீண்டும் எழுவதை தடுப்பதற்காகவுமே உங்களை சிங்களம்பாவிக்கின்றது என்பதை புரிந்துகொள்ளும் சிறு அறிவுகூட உங்களுக்கு இல்லாதுவிட்டால் என்ன புத்திஜீவிகள் நீங்கள்.

கொழும்பில் வர்த்தகம் ஆரம்பிக்கவும் கசூரினா கடற்கரையில் உல்லாசவிடுதி கட்டவும், கொழும்புக்கும் திருமலைக்கும் பயணவழிகளை செப்பனிடவும் உங்களுக்கு வர்த்தக நோக்கம் ஏதம் இருந்தால் போய் கோத்தபாயாவுடனும், ஜெகத் யெயசூரியாவுடனும் போய் கூழைக்கும்பிடு போடுங்குள். அதற்கு சப்பைக்காரணங்களை அடுக்குவதற்காக எமக்கு அபிவிருத்தி அருச்சுவடிப் பாடங்களை எடுக்க முயலவேண்டாம்.

அது சரி, வெள்ளத்து என்றும் வேறு வேறு காரணங்களுக்காகவும் இங்கு எமது மக்களிடம் சேர்த்த நிதிகளை கொண்டுபோய் கே.பியுடன் இணைந்து சிங்களத்து ஓநாய்களுக்கு தாரைவார்க்க போகிறீர்களாம். நீங்கள் வழங்கும் இந்த நிதியைக்கொண்டே அவன் இன்னும் பலநூறு சிங்கள கிராமங்களை கிழக்கில் உருவாக்கி எமது பாரம்பரிய நிலத்தை பறிப்பதற்காகவும், எமது மண்ணின் வீரர்களின் நினைவுத் துயில் இல்லங்களை உடைத்தெறிந்து அவற்றின் மீது பேரினவாதம் எங்களை ஆளும் குறியீடுகளான சிங்கள ராணுவத்தின் சின்னங்களையும் நிறுவுவதற்காகவும், ஒட்டுக்குழுக்களுக்கு ஊட்டம் அளித்து தேசிய எழுச்சியை மீள எழவிடாமல் செய்வதற்குமே பயன்படுத்துவான் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

அல்லது தெரிந்துகொண்டும் ராஜதந்திர கோமாளி ஆட்டம் ஆடுகிறீர்களா?

தங்களையும், தங்களது இளமை வாழ்வையும், உயிரையும் அர்ப்பணித்து தாயக விடுதலைக்காக போராடி உயிர்நீத்த பல்ஆயிரம் மாவீரர்களின் கல்லறைகளை சிங்கள வெறியர்கள் வெறுமனே உடைத்து எறிந்தார்கள். ஆனால் நீங்களோ மாவீரர்களின் ஆன்மாவையே சுக்குநீறாக உடைத்துவிட்டீர்கள்.

அல்லலுறும் எமது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற புனித நோக்கம் இருந்தால் அரசுசாரா நிறுவனங்கள் ஏதாவது ஒன்றின் மூலம் செய்வதுதான் புத்திசாலித்தனம்.

வாருங்கள். ஒன்றாக இருந்துகதைப்போம். எப்படியாக அரசுசாரா அமைப்புகளுக்கு ஊடாக உதவிகளை சென்றடையவைக்கலாம் என்ற நுட்பங்களை அறியலாம்.

அதைவிடுத்து கொழும்பின் குளிர்சாதன அறைகளுக்குள்ளும், விசம்புவ விடுதிக்குள்ளும் கட்டித்தழுவல்களாலும், காட்டிக்கொடுப்புகளாலும் ஏதும் செய்யமுடியாது.

அவை உங்களை இந்த இனம் எதிரிகளைப்போல பார்க்கும் நிலையையே எதிர்காலத்தில் தோற்றுவிக்கும்.

எனவே இன்றே கைவிடுங்கள்.

கே.பி உடனான தொடர்புகளை.

கே.பி யை எதிர்காலம் எப்படிக்கணக்கில் எடுத்து தூற்றும் என்று பாருங்கள்.

நீங்களும் அந்த பாவப்பட்ட மக்களின் சாபங்களுக்கு ஆளாகாமல் இருக்கவேண்டுமானால் இன்றே கொழும்புடனான அபிவிருத்தி ஆலோசனைகளை கைவிடுங்கள்.

முடிந்தால் துண்டியுங்கள்.

விடுதலையான போராளிகளுக்கும், விடுதலையாகமல் இருக்கும் போராளிகளுக்கும், வாழ்விழந்த மக்களுக்கும் உதவ ஆயிரம் கதவுகள் திறந்து இருக்கின்றன.

அதற்குள்ளாக முயல்வோம். எங்கள் இனத்தை முற்றாக அழித்து சிதைக்க நினைப்பவர்களுடன் இணைந்து எதுவும் செய்யமுடியாது.

வரலாற்றின் பாடமும் அதுவே!

அன்புடன்

பார்த்தசாரதி

http://www.sankathi.com/

Edited by aathirai

1) அல்லலுறும் எமது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற புனித நோக்கம் இருந்தால் அரசுசாரா நிறுவனங்கள் ஏதாவது ஒன்றின் மூலம் செய்வதுதான் புத்திசாலித்தனம்.

2) வாருங்கள். ஒன்றாக இருந்துகதைப்போம். எப்படியாக அரசுசாரா அமைப்புகளுக்கு ஊடாக உதவிகளை சென்றடையவைக்கலாம் என்ற நுட்பங்களை அறியலாம்.

இந்த இரண்டையும் மே 18இன் உடனேயே செய்ய முற்பட்டிருக்கவேணும்!! ... விட்ட தவறுகளில் இவை மிகப்பெரிய தவறுகள்!!! ... விட்ட தவறுகளை மறைப்பதற்காக துரோகப்பட்டங்கள் அழித்து கவுரவிப்புகள் நடைபெற்றதே ஒழிய ... ஆக்கபூர்வமாக எவையும் மே 18இற்குப்பின்னர் நடைபெறவில்லை!!!!

... ஆனால் இன்னும் நிலைமை எட்டாத்தூரத்துக்கு செல்லவில்லை ... அது செல்லும்முன் ... தயவுசெய்து ... காஸ்ரோக்களோ, உருத்திரகுமாரர்களோ, முன்னால் போராளிகளோ.... உங்கள் ஈகோக்களை விடுத்து ... ஒரு பொது வேலைத்திட்டத்தை வரையறுத்து ... தொடர்ச்சியான தொடர்பாடல்கள்/சந்திப்புக்கள் மூலம் .... செயற்படுவோம் வாருங்கள்!!!! ... இல்லையேல் வரலாறு உங்களை மன்னிக்காது!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கிளசு கருணா இருவரையும் தெரியும்.இப்ப கே.பி. புதுசு. சிங்களத்தின் கு..நக்காத எவராயிருந்தாலும் எம்மினத்திற்கான விடிவிற்காய் உழைக்கமுன்வந்தால் நாம் அணிதிரளக்காத்திருக்கிறோம்.

டக்கிளசு கருணா இருவரையும் தெரியும்.இப்ப கே.பி. புதுசு. சிங்களத்தின் கு..நக்காத எவராயிருந்தாலும் எம்மினத்திற்கான விடிவிற்காய் உழைக்கமுன்வந்தால் நாம் அணிதிரளக்காத்திருக்கிறோம்.

இனி எந்த நாய்களை நம்பியும் வரமாட்டேன் வீடு அடகு வைத்து கொடுத்த காசை முகத்திற்காக திரும்ப கொடுத்தற்கு நன்றிகள்.

அனுபவம் வாய்ந்த தலைவனே ஏமாந்து போனான்

Edited by நேசன்

  • தொடங்கியவர்

2008 மே 19 இன் பின்பு தமிழ்த்தேசிய எழுச்சியைத் தக்கவைப்பதற்கும், சிங்களம் ஈழத்தமிழர் வரலாற்றில் செய்து வரும் தமிழ் இனப்படுகொலையைச் சட்டப்படி நிறுவுவதற்கும், புதிய அரசியல் சூழலுக்கு ஏற்ப இனி நாம் எப்படிச் செயற்படலாம் என்பதை தீர்மானிப்பதற்கும் கூடியிருந்து கதைத்து இருக்கவேண்டும். அனால் மே 19இன் பின்பு வெளிப்படையாக பிறப்பெடுத்த இந்த அணிகள் திரைமறைவில் தமக்குள் கலந்துரையாடல்களை நிகழ்த்திவிட்டு ஒரு அணி மௌனமாகிவிட்டது. கே.பி தலைமையிலான அணி நாடுகடந்த அரசு என்று கவற்சிகரமான பெயரை சூட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் தனது அரசு தொடர்பான செய்தித் திணிப்புப்போரை நிகழ்த்தி புலம் பெயர் தேசத்து தலைமையைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தும். புலம் பெயர் தேசத்து தலைமையை கைப்பற்ற முடியாது போய்விட்டது. நாடு கடந்த அரசிற்கான தேர்தலில் கே.பி அணி அல்லாதோர் பெரும் எண்ணிக்கையில் பங்கு பற்றி வெற்றி அடைந்தமையாலும், கே.பி அணியைப் புலம் பெயர் தேசத்து கட்டமைப்புகள் ஏற்றுக்கொள்ளாமையினாலும், புலம் பெயர்தேசத்திலிருந்து சிங்களத்துடன் பின்கதவால் சென்று அபிவிருத்தி அரசியல் பேசுகின்றனர்.

கே.பி தலைமையிலான குழு புலம்பெயர்தேசத்துத் தமிழர் தலைமையைக் கைப்பற்றியிருந்தால், இணக்க அரசியல், அடிபணிவு அரசியல், அபிவிருத்தி என எல்லாவற்றையும் முன்கதவால் சென்றே செய்து வந்திருப்பர். சிறிலங்காத் தேசிய நீரோட்டத்தில் தமிழ் மக்களை இணைப்பதற்கு சமூகத்து பெரியவர்கள் மட்டத்திலும் முயற்சிகள் இடம்பெற இருக்கின்றது.

Edited by aathirai

2008 மே 19 இன் பின்பு தமிழ்த்தேசிய எழுச்சியைத் தக்கவைப்பதற்கும், சிங்களம் ஈழத்தமிழர் வரலாற்றில் செய்து வரும் தமிழ் இனப்படுகொலையைச் சட்டப்படி நிறுவுவதற்கும், புதிய அரசியல் சூழலுக்கு ஏற்ப இனி நாம் எப்படிச் செயற்படலாம் என்பதை தீர்மானிப்பதற்கும் கூடியிருந்து கதைத்து இருக்கவேண்டும். அனால் மே 19இன் வெளிப்படையாக பிறப்பெடுத்த இந்த அணிகள் திரைமறைவில் தமக்குள் கலந்துரையாடல்களை நிகழ்த்திவிட்டு ஒரு அணி மௌனமாகிவிட்டது. கே.பி தலைமையிலான அணி நாடுகடந்த அரசு என்று கவற்சிகரமான பெயரை சூட்டிக்கொண்டு புலம் பெயர் தேசத்தில் தனது அரசு தொடர்பான செய்தித் திணிப்புப்போரை நிகழ்த்தி புலம் பெயர் தேசத்து தலைமையைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தும். புலம் பெயர் தேசத்து தலைமையை கைப்பற்ற முடியாது போய்விட்டது. நாடு கடந்த அரசிற்கான தேர்தலில் கே.பி அணி அல்லாதோர் பெரும் எண்ணிக்கையில் பங்கு பற்றி வெற்றி அடைந்தமையும், கே.பி அணியைப் புலம் பெயர் தேசத்து கட்டமைப்புகள் ஏற்றுக்கொள்ளாமையினால், புலம் பெயர்தேசத்திலிருந்து சிங்களத்துடன் பின்கதவால் சென்று அபிவிருத்தி அரசியல் பேசுகின்றனர்.

கே.பி தலைமையிலான குழு புலம்பெயர்தேசத்துத் தமிழர் தலைமையைக் கைப்பற்றியிருந்தால், இணக்க அரசியல், அடிபணிவு அரசியல், அபிவிருத்தி என எல்லாவற்றையும் முன்கதவால் சென்றே செய்து வந்திருப்பர். சிறிலங்காத் தேசிய நீரோட்டத்தில் தமிழ் மக்களை இணைப்பதற்கு சமூகத்து பெரியவர்கள் மட்டத்திலும் முயற்சிகள் இடம்பெற இருக்கின்றது.

நாடுகடந்த அரச குழுவுக்குள் KP தனது ஆதரவு சக்திகளை திணித்து விட்டு போனார் என்பதை விட நாடுகடந்த அரசில் எந்த விதமான குறைகளையோ அல்லது தலைமையில் இருக்கும் உருத்திரகுமார் அண்ணாவை சந்தேகிக்க வேண்டிய தேவையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை...! மே 18 க்கு அண்மையில் எம்மை போல உருத்திர குமார் அண்ணாவும் ஏமாற்ற பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை...

எத்தினை குழுக்கள் வேண்டுமானாலும் செயற்பட்டு விட்டு போகட்டும்... செயற்பட்டு பலம் சேர்க்கட்டும்... நடுநாயகமாக நாடுகடந்த அரசை இயக்க வேண்டியது புலம்பெயர்ந்தவர்களின் கடமை... தமிழர் போகக்கூடிய சரியான பாதையும் அதுதான்...

Edited by தயா

  • தொடங்கியவர்

மே 18 க்கு அண்மையில் எம்மை போல உருத்திர குமார் அண்ணாவும் ஏமாற்ற பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை...

நல்லது.

தயா. நான் இன்று வரை சிலரை நம்பும் அளவிற்கு செயற்பாடுகள் இல்லை.

கடந்த ஒரு வருடமாக நிகழ்ந்துவரும் திரைமறைவுப் போரின் பங்காளிகளாகவே இவரையும் பார்க்கிறேன்.

இவர் தனது நிலைப்பாட்டை வெளிபடையாக தெரிவிக்கும் காலம் நெருங்கிவருகின்றது.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

.

2006 ல் இருந்து கேபிக்கு, சிங்களத்துடன் தொடர்பு.....

கோத்தபாயாவை கட்டி அரவணைத்து வாழ்த்துச் சொல்ல கேபி முயன்றார்.

இதுகளை கேள்விப்பட..... கேபி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வந்த போது.........

நாம் துடித்தோமே..... எங்களுக்கு செருப்பாலை அடிக்க வேணும்.

நல்ல தலைவன் கிடைத்தும், விலை போனவர்களால் அழிந்து போன,

எனது தமிழ் இனமே நீ என்ன பாவம் செய்தாய்.

.

சென்று வந்தவர்களுக்கும், செல்ல இருப்பவர்களுக்கும் -

இப்படிக்கு ஒருத்தரும் கூப்பிடாதவர்கள் .

இது நல்லாக இருக்கு.இதுதான் இன்றய தமிழனின் நிலை.

புலம் பெயர்ந்தவர்கள் தலைவர்களாக முயற்சிப்பது சிங்களம் தங்களையும் கூப்பிடாதா என்பதற்காகத்தான். இங்கு ஒருத்தருமே சுத்தமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இவர்கள் என்னதான் செய்தாலும், தலைகீழாக நின்றாலும் கூட சிங்களம் எதுவுமே இவர்களுக்குத் தரப்போவதில்லை. முள்ளிவாய்க்கால்ப் படுகொலையே கே.பீ இன் துணையுடந்தான் அரங்கேற்றப்பட்டது என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கே.பீ யினூடாக மக்களுக்கும் போராளிகளுக்கும் புனர்வாழ்வு அழிக்கப்போவதாகப் பாசாங்கு காட்டுவது கேவலமானது.

உங்களின் சொந்த லாப நோக்கங்களுக்காக என்ன செய்ய வேண்டுமே அதைச் செய்துவிட்டுப் போங்கள், அதை "மக்களுக்குப் புனர்வாழ்வு" எனும் போர்வைக்குள் செய்ய வேண்டாம். டக்கிளசோ, கருணாவோ அல்லது என்ன இழவோ...அத்துடன் உங்களையும் சேர்த்துவிட்டுப் போகிறோம்.

லட்சக்கணக்கான எம் மக்களைக் கொன்றுவிட்டு வெற்றிக்களிப்பில் இருக்கும் ஒரு மிருகத்திடம் அந்த மக்களுக்குப் புனர்வாழ்வு அளிக்கும்படி எப்படி கேட்க முடிகிறது.

உங்களைச் சேர்த்துக்கொண்டால் யுத்தக்குற்றங்களிலிருந்து எளிதாகத் தப்பிவிடலாம் என்று அவன் போடும் கணக்கு உங்களுக்குத் தெரியாமல் போவது எப்படி? உங்களைக் காட்டி வெளிநாடுகளிலிருந்து வரும் அழுத்தத்தைக் குறைத்து, தனது நாட்டை அபிவிருத்தி செய்யப்போகிறான் அவன், எங்கள் நிலம் முழு ஆக்கிரமிப்பில் அழிந்துவருகிறது. இது உங்கள் கண்ணுக்குத் தெரியாமல்ப் போனது எப்படி??யுத்தக்குற்றங்களை மறந்துவிட வேண்டும், தமிழர்க்கான உரிமை பற்றியோ அல்லது அரசியல் தீர்வு பற்றியோ இனிப் பேச்க்கூடாது என்ற நிபந்தனையை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள். இதை விட வேறு அவனுக்கு என்ன வேண்டும் யுத்தக்குற்றங்களிலிருந்து தப்புவதற்கு? இவ்வளவுதானா அல்லது "சிங்கள அரசாங்கம் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை, அவர்கள் யுத்தக்குற்றம் எதுவும் செய்யவில்லை, ஒரு தமிழனைக் கூடக் கொல்லவில்லை" என்று எழுதிக் குடுத்து விட்டு வரவில்லையா??

நரகத்து முள்ளுகளே, உங்கள் குடும்பங்களும் உங்கள் குழந்தை குட்டிகளும் அழிந்தால் இந்த முடிவிற்கு வருவீர்களா?? நாசமாய்ப் போங்கள்.

இதற்குள் இங்கு ஒரு ஈனம் "நூறு ரூபாவில் பத்து ரூபா எங்கட சனத்துக்குப் போனால் பரவாயில்லை" என்று வக்காலத்து வாங்குது. நாசமாப் போனதுக்கு சிங்களவன் எப்போது சொன்னானாம் அந்தப் பத்து வீதத்தையும் தமிழனுக்குக் கொடுப்பதாக?? அல்லது அந்தப் பணம் உனது பணமா நீ தூக்கிச் சிங்களவனுக்குத் தானம் குடுப்பதற்கு?? உனது எழுத்துலிருந்தே தெரிகிறது நீ இவ்வளவு காலமும் என்ன செய்திருப்பய் என்பது. ஒரு சதமாவது போட்டிருப்பாயா அந்தப் பணத்திற்குள்? பின் எந்த லட்சணத்தில் அதைத் தூக்கிக் கொடுக்க வேன்டும் என்கிறாய்??

கே.பீ இன் மூலம் கோத்தாவும் மகிந்தவும் சேர்த்துவைத்திருக்கும் பணத்தை முடிந்தால் தமிழனுக்கு கேட்டுப்பார். பிறகு மற்றதைப் பற்றிப் பேசலாம்.

யாழ்க்களம் உங்கள் போன்ற ஒட்டுண்ணிகளுக்குக் களம் அமைத்துகொடுப்பது வேதனை. கேட்டால் இது சுதந்திரத் தளம், எவரும் எழுதலாம் என்கிறார்கள்.

அதைப் பாவித்து சிங்கள அடிவருடிகளும், துரோக நாய்களும் இங்கு மடம் கட்டியிருக்கின்றன.

இவர்கள் என்னதான் செய்தாலும், தலைகீழாக நின்றாலும் கூட சிங்களம் எதுவுமே இவர்களுக்குத் தரப்போவதில்லை. முள்ளிவாய்க்கால்ப் படுகொலையே கே.பீ இன் துணையுடந்தான் அரங்கேற்றப்பட்டது என்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கே.பீ யினூடாக மக்களுக்கும் போராளிகளுக்கும் புனர்வாழ்வு அழிக்கப்போவதாகப் பாசாங்கு காட்டுவது கேவலமானது.

இந்தப் பாசாங்கு காட்டும் பச்சோந்திப் பெரியவர்கள், எமது பிரதிநிதிகளாகவும், எமது பிரமுகர்களாவும், எமது கல்விமாண்களாகவும் எமக்கருகிலேயே இருக்கின்றணர். இவர்களை நாம் இனம் கண்டு ஒதிக்கிவைக்காதவரை, நாமும் பச்சோந்திகளே.

Edited by kalaivani

வாணிக்கு கலை??? ... அன்று தொடக்கம் ... கூட்டணியை ஒதுக்கியும்/போட்டும் தள்ளினம், பின் இயக்க முரண்பாடுகளில் ஒதுக்கியும்/போட்டும் தள்ளினம், பின் உட்கட்சி துரோகங்களில் ஒதுக்கியும்/போட்டும் ... இன்னும் முடியவில்லை!! ... இறுதியாக யாரும் தப்பமுடியுமோ தெரியாது, ஒதுக்கும் வேகத்தில்??? .... இனியாவது எம்மவர்களிடையே வித்தியாசமாக உந்த போடுதல்/ஒதுக்குதலை விடுத்து அரவணைத்து சென்று பார்ப்போம்!!

முடிந்த வரை தொடர்பாடகள், பேச்சுக்கள், புரிந்துணர்வுகள் மூலம் பிரட்சனைகளை தீர்ப்போம்!! இந்த பொறுமை எமக்கில்லை என்பதை நன்குணர்ந்த சிங்களவன், இதையே வைத்து எம்மை உடைக்கிறான்!!!!... சிறிய இனம்!! உந்த வேகத்தில் எம்மினம் தாங்காது, வாணி அக்கா!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.

2006 ல் இருந்து கேபிக்கு, சிங்களத்துடன் தொடர்பு.....

கோத்தபாயாவை கட்டி அரவணைத்து வாழ்த்துச் சொல்ல கேபி முயன்றார்.

இதுகளை கேள்விப்பட..... கேபி கைது செய்யப்பட்டார் என்ற செய்தி வந்த போது.........

நாம் துடித்தோமே..... எங்களுக்கு செருப்பாலை அடிக்க வேணும்.

நல்ல தலைவன் கிடைத்தும், விலை போனவர்களால் அழிந்து போன,

எனது தமிழ் இனமே நீ என்ன பாவம் செய்தாய்.

காட்டிக்காடுப்புகள் பற்றி அறியாது இருந்து ஒருவர் எப்படி நல்ல தலைவராய் இருக்க முடியும். மாத்தையா , கருணா , கே.பி ....

  • கருத்துக்கள உறவுகள்

சென்று வந்தவர்களுக்கும், செல்ல இருப்பவர்களுக்கும் -

இப்படிக்கு ஒருத்தரும் கூப்பிடாதவர்கள் .

இது நல்லாக இருக்கு.இதுதான் இன்றய தமிழனின் நிலை.

புலம் பெயர்ந்தவர்கள் தலைவர்களாக முயற்சிப்பது சிங்களம் தங்களையும் கூப்பிடாதா என்பதற்காகத்தான். இங்கு ஒருத்தருமே சுத்தமில்லை.

மூத்த போராளி ஒருவாராக நீங்களாவது இருக்கின்றீர்களே???

காட்டிக்காடுப்புகள் பற்றி அறியாது இருந்து ஒருவர் எப்படி நல்ல தலைவராய் இருக்க முடியும். மாத்தையா , கருணா , கே.பி ....

தலைவர் என்ற வார்த்தைக்குள் கடவுள் என்ற அர்த்தம் உங்களுக்கு தெரிகிறதா? அல்லது எப்படியாவது இந்த தலைப்பின் கீழேயும் சாணியடித்துவிட்டோம் என்ற நிம்மதி தெரிகிறதா?

காட்டிக்காடுப்புகள் பற்றி அறியாது இருந்து ஒருவர் எப்படி நல்ல தலைவராய் இருக்க முடியும். மாத்தையா , கருணா , கே.பி ....

உங்கட நண்பர்கள் எல்லாரும் எப்போதும் நல்லவர்கள் தானோ...?? எப்பவும் நீங்கள் உட்ப்பட பிழை விட்டது இல்லையோ...???

தலைவன் எண்டால் கெட்டவர்களை கண்டு பிடிக்கும் இயந்திரம் எண்டு அர்த்தம் எண்டு எந்தப்படிதர் சொல்லித்தந்தாரோ எனக்கு தெரியாது... ஆனால் தலைவர் எண்றால் சிறப்பான செயற்பாடுகளை தலைமை தாங்கி வெற்றிகரமாக முன் எடுப்பவர் அதிலை சொத்தைகளில் இருந்து பெரும்தலைகள் வரை எல்லாரையும் கட்டி மேய்ப்பது எண்டும் எடுத்துக்கொள்ளலாம்...

யாராவது சொல்வதை கேட்டு ஒப்பிச்சால் மட்டும் போதாது... உண்மை என்ன எண்டு ஆராய தெரிவதும் தான் பகுத்தறிவு...

ஒரு அமைப்பின் தலைவருக்கு தனது உறுப்பினர்களே யார் யார் தமக்கு எதிராக செயற்படுகின்றார்கள் என்ற விபரம் தெரியவில்லை. ஆனால் இறுக்கமான புலனாய்வுப்பிரிவு வேறு.

நீங்கள் நல்லவரா கெட்டவரா எண்டு எப்படி கண்டு பிடிக்கலாம் எண்டு ஒருக்கா சொல்லித்தாங்கோவன்...

பார்த்தசாரதிகளுக்கும், நெடியமான்களுக்கும் ... தொடர்ச்சியாக கேபிக்கும், கேபியின் ஆதரவாளர்களுக்கும் காதல் கடிதங்களை எழுதுவதற்கு முன் ...

யார் கேபி? ஒதுக்கிய கேபியை யார் மீண்டும் சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்தியது?? ... இதற்கான பதில்கள் எல்லோருக்கும் தெரியும் ...

சரி கேபி நீண்ட நாட்களாக சிங்களத்தின் வலையில் வீழ்ந்து காட்டிக்கொடுப்பதைதான் செய்து கொண்டு வருகிறார் என்றால், ஏன் கேபியை சர்வதேசம் தெரிய அறிமுகப்படுத்தினீர்கள்??? ... இதற்கு உங்களிடம் விடையில்லை!!! ... இவ்வாறு பல கேள்விகளுக்கு உங்களுக்குள் விடையில்லை!!

... இவற்றுக்கு நீங்கள் விடை தேடினால் ... பல குட்டுக்கள் அவிழும்!!

அடுத்தது கேபி நல்லவாரா? கெட்டவரா? சரணடைந்தாரா? கைது செய்யப்பட்டாரா? ... இவைகளுக்கு நீங்கள் எல்லாம் விடயளிக்கும் போது ... பலர் நினைக்கிறார்கள் ... இப்படியா ஒரு பலம் பொருந்திய கெரில்லா இயக்கம் இருந்ததென்று! ... நகைப்பிற்கிடமாக்காதீர்கள் தயவுசெய்து!! ... இதற்கான விடை தேடுவதை நிறுத்துங்கள் என சொல்லவில்லை! தேடுங்கள் .... அதை உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள், தருணம் வரும் அப்பாது ..! ...

... ஆனால் இப்போது ... உவைகள் பல எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. ஆகவே உங்கள் குப்பைகளை கிளறும் தொழில்களை நிறுத்தி விட்டு ... சரி கேபி ... கடத்தப்பட்டு விட்டாரோ/சரணடைந்தார் ... ஏதோ ஒன்றாக இருக்கட்டும்!! இனி அவர் சிங்களத்தின் கைகளில்!! அவர் செய்வதெல்லாம் சிங்கள ஏவல்களிலோ/வற்புறுத்தல்களிலோ மட்டுமே! இதனை உரக்க/உறுதியாக சொல்லுங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக, எல்லோருடைய ஈகோக்களை விட்டு விட்டு ... பொதுவான கொள்கையின் அடிப்படையில் ... வெவ்வேறு குழுக்களாக இருக்கட்டும் ... தொடர்ச்சியான கலந்துரையாடல்களின் மூலம் ... பயணிக்க எத்தணியுங்கள்! அது காலத்தின் தேவையும்!!!

இல்லையேல் .... மக்கள் உங்களை கவணித்துக் கொண்டிருக்கிறார்கள் ... புலத்தில் துரத்தி அடிக்கப்படும் நிலைமையினை உருவாக்காதீர்கள்!!!

நீங்கள் கேக்கிற கேள்விகளுக்கு விடை இருக்கு... KP யை யாரும் சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்த இல்லை... அப்படி உங்களாலை எப்படி சொல்ல முடிகிறது...??? KP இந்தியாவுடன் பேசுவதுக்கு தான் கடிதம் வாங்கியவர்...! அவர் வேறு யாருடனும் சமாதானம் பேசவில்லை...

எங்கள் தரப்பில் இருந்துஅவர்கள்( இந்தியர்கள்) யாருடன் பேச முன் வருகிறார்களோ அவர்களை தூதராக அறிமுகப்படுத்துவது தவறும் இல்லை... அப்போது இருந்த நிலையில் அதவிட வேறு வளியும் இருக்கவில்லை...

மற்றது KP யை புறம் தள்ளி ஒதுக்கின எண்டு ஒரு கதை சொல்கிறீர்களே யார் உங்களுக்கு அந்தக்கதையை சொன்னவை...?? KP செய்த வேலையில் இருந்து மாற்றப்பட்டார்... அதுக்கு நீங்கள் கற்பனை செய்யும் காரணங்கள் எண்டு எதுவும் இல்லை... !

KP க்கு நிரிழிவு நோயில் தாக்கம் அதிகமானதால் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது, மற்றது KP யின் செலவுகள் அதிகமாக இருந்தன அவற்றுக்கு கணக்குகளை அவர் அக்கறையாக கொடுக்கவில்லை... ( இதுக்கு அவர் பணத்தை கையாடினார் எண்று அர்த்தம் இல்லை) பொறுப்பில் இருப்பவர் பொறுப்பாக இல்லை எண்றால் கிழ் வேலை செய்யும் போராளிகளை எப்படி வளிநடத்த முடியும் என்பது புலிகளில் இருக்கும் வழமையான வழமை... அதன் படி KP யிடம் கொடுக்க பட்ட பொறுப்புக்கள் வாங்கப்பட்டன... அதுக்காக அனைத்து பொறுப்புக்கள் இல்லை...

சும்மா உங்கட கற்பனைக்கு ஏற்றமாதிரி திரிக்காதேங்கோ...

Edited by தயா

என்ன தயா, ... கேபி காட்டிக் கொடுக்கிறார்? கேபி தான் அடித்த கப்பல்களை காட்டிக்கொடுத்தார்? வலையில் வீழ்ந்து விட்டார்? ... தெரிந்து கொண்டு .. இந்தியாவுடன் கதைக்க கடிதமா???? ... என்ன இது????? :lol:

என்ன தயா, ... கேபி காட்டிக் கொடுக்கிறார்? கேபி தான் அடித்த கப்பல்களை காட்டிக்கொடுத்தார்? வலையில் வீழ்ந்து விட்டார்? ... தெரிந்து கொண்டு .. இந்தியாவுடன் கதைக்க கடிதமா???? ... என்ன இது????? :lol:

KP காட்டிக்கொடுப்புக்களை நேரடியாக செய்ததாக எந்த தகவலும் யார் மூலமாகவும் கிடைக்க பெறவில்லை... KP யால் மிகக்கவனமாக சில கருணாவின் ஆக்கள் ஊடுருவ விடப்பட்டு இருந்தவர்களால் தான் பிரச்சினையே இருந்தது.... KP கடைசிவரைக்கும், அதாவது தலைவர் சாவடைந்து விட்டார் நான் தான் தலைவர் எண்று பிரகடனப்படுத்தும் வரைக்கும் மிகக்கவனமாக இருந்து இருந்தார்....! பின்னர் வெளிப்படையாக செய்ய தொடங்கியதும் தான் அனைவரும் ஓடி முளித்தனர்... பின்னர் தான் புரிந்தது KPயின் விசுவாசிகளால் உள்வாங்கப்பட்டவர்கள் செண்றவை சம்பந்தப்படவைகளை பிடிபட்டு கொண்டு இருந்தன எண்று...! ( அதுக்கும் முன்னர் கருணாவின் ஆக்கள் எனும் வகையிலேயே சந்தேகம் இருந்தன.)

நீண்டகாலமாக உலக காவல்துறைக்கு எல்லாம் தண்ணிகாட்டின மனுசன்... எங்களை நன்கு அறிந்து வைத்து இருந்தவரால் எங்களை ஏம்மாற்றுவது கடினமா என்ன....?? ( நான் நாங்கள் எண்டது தமிழர்களை)

KP யின் திட்டம் உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை எல்லாம் தனதுகைகளுக்கு கொண்டு வந்து விடுவதுதான்... அப்படி இல்லை எண்றால் இப்போது செய்தவைகளை அப்போதே செய்து இருக்கலாம்...

Edited by தயா

தயா, உதுகளை திரும்பத் திரும்ப கதைத்து என்னத்தை இனி சாதிக்கப்போகிறோம்! ஏதாவது??? ... தலைவரின் பாசறையில் வளர்ந்த புலி, எதிரியிடம் சிக்குண்டதையா??????? ... இனி எப்படி காய்களை நகர்த்துவது? எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவது? ... இவற்றைச் செய்வோம்! ... இந்த சேரமான்களும், பார்த்தசாரதிகளும் ... நிலைமையை சகதியாக்குகிறார்களே ஒழிய ... சீர் செய்யவில்லை!!!!!!!!! ... இதைத்தான் சிங்களமும் எதிர்பார்க்கிறது!!!!!!! :lol:

நான் உங்களுக்கு சொல்ல கூடியது என்ன எண்டால் நீங்கள் சொல்பவர்கள் யார் எண்டது எனக்கு உண்மையில் தெரியாது... எனக்கு தெரிந்து கொள்ள அக்கறையும் எப்போதும் இருந்தது இல்லை....!

ஆனால் அவர்களுக்கும் மேலை விடுதலைப்புலிகள் இப்போதும் செயற்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்... நீங்கள் சொல்பவர்கள் தங்களை விடுதலைப்புலிகள் எண்டு சொல்லிக்கொள்கிறார்களா என்பது கூட எனக்கு தெளிவாக தெரியாது.... ஆனாலும் செய்ய வேண்டிவைகள் இப்போதைய நகர்வுகள் என்பனவுக்கான கட்டளைகள் வந்து கொண்டு தான் இருக்கின... யார் கட்டளைகளை குடுக்கிறார்கள் எங்கிருந்து என்பன எனக்கு தெரியாது....! அதை அறிய முயல்வது எனக்கு வேண்டாத வேலையும் கூட..

அப்படியானால் அவர்கள் தங்கள் செய்ய வேண்டியதை செய்யட்டும் நீங்கள் உங்களின் கடமைகளை செய்யுங்கள்... நான் செய்ய வேண்டியவைகளை நான் செய்கிறேன்... !

விசயம் இவ்வளவுதான்...

அதிலையும் குழப்பங்களை நீக்கி நாடுகடந்த அரசுக்கு பின்னாலை மக்களை அணிதிரட்ட உதவுவீர்கள் எண்டால் புண்ணியமாய் போகும்..

Edited by தயா

அப்படியானால் அவர்கள் தங்கள் செய்ய வேண்டியதை செய்யட்டும் நீங்கள் உங்களின் கடமைகளை செய்யுங்கள்... நான் செய்ய வேண்டியவைகளை நான் செய்கிறேன்... !

கடந்த 60 வருட அனுபவங்களை மீட்டிப் பார்த்து பௌத்த சிங்கள, 'மதச் சார்பற்ற' இந்திய பயங்கரவாதிகளின் கூடுச்சதிகளுக்கு துணை போகாமல், ஜால்ரா போடாமல் இருந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

தயா,

மிகவும் சரியான கருத்து. இப்போதைக்கு எமக்கு முன்னால் இருக்கும் ஒரே தீர்வும் நாடுகடந்த தமிழீழ அரசுதான். தமிழர் கூட்டமைப்பு செல்லும் பாதை சரியாக இருந்தாலும் மகிந்தவும் அவனது பரிவாரங்களும் சம்பந்தரையோ அல்லது மற்றையவர்களையோ தலை தூக்க விடப்போவதில்லை, அதைவிட இந்தியாவின் செல்வாக்கும் தமிழர் கூட்டமைப்பிற்குள் நன்கு வேரூன்றி விட்டது. அண்மையில் ஒரு பத்திரிக்கையில், சம்பந்தர் தலமையிலான தமிழர் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்கு மகிந்தவும் அவனது பரிவாரங்களும் கே.பீ தலமையில் முன்னால் புலிப் போலிகளையும், இன்னாள் அரச அடிவருடிகளையும் சேர்த்து தேர்தல்களில் போட்டியிட வைப்பதன் மூலம் சிங்கள அரச பயங்கரவாதத்தை தமிழர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று காட்ட ஆயத்தப்படுவதாகப் படித்தேன். உண்மையில் நடக்கப்போவதும் அதுதான்.

ஆகவே கூட்டமைப்பின் சக்திக்கு மேலாக நாம் அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.

எம்முடமுள்ள ஒரே தீர்வான நாடுகடந்த தமிழீழ அரசை முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் சிங்களப் பயங்கரவாதம் எமக்குச் செய்த அநியாயத்தை உலகின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், அதன் மூலம் கிடைக்கும் அழுத்தங்களினூடாக எமக்கான தீர்வை நோக்கி சிங்களத்தை நகர்த்துவதும்தான் நாம் செய்ய வேண்டியது.

கே.பீ இன் வால்களும், செதில்களும் ஏதாவது புலம்பெயர் அமைப்புகளில் இன்னுமிருந்தால் அவர்களை இனங்கண்டு இப்போதே அகற்றுவதும் மிகவு அவசியம்.

மீண்டும், உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தயா, உதுகளை திரும்பத் திரும்ப கதைத்து என்னத்தை இனி சாதிக்கப்போகிறோம்!

இனி எப்படி காய்களை நகர்த்துவது? எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவது? ... இவற்றைச் செய்வோம்! ...

அப்படியானால் அவர்கள் தங்கள் செய்ய வேண்டியதை செய்யட்டும் நீங்கள் உங்களின் கடமைகளை செய்யுங்கள்... நான் செய்ய வேண்டியவைகளை நான் செய்கிறேன்... ! விசயம் இவ்வளவுதான்...

அதிலையும் குழப்பங்களை நீக்கி நாடுகடந்த அரசுக்கு பின்னாலை மக்களை அணிதிரட்ட உதவுவீர்கள் எண்டால் புண்ணியமாய் போகும்..

தயா,

மிகவும் சரியான கருத்து. இப்போதைக்கு எமக்கு முன்னால் இருக்கும் ஒரே தீர்வும் நாடுகடந்த தமிழீழ அரசுதான்.

எம்முடமுள்ள ஒரே தீர்வான நாடுகடந்த தமிழீழ அரசை முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் சிங்களப் பயங்கரவாதம் எமக்குச் செய்த அநியாயத்தை உலகின் கண்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன், அதன் மூலம் கிடைக்கும் அழுத்தங்களினூடாக எமக்கான தீர்வை நோக்கி சிங்களத்தை நகர்த்துவதும்தான் நாம் செய்ய வேண்டியது.

ஆமென்

நேரமின்மையால் விரிவாக எழுதமுடியவில்லை.

எனது கருத்தும் ஆசையும் இதுதான்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்த அரச குழுவுக்குள் KP தனது ஆதரவு சக்திகளை திணித்து விட்டு போனார் என்பதை விட நாடுகடந்த அரசில் எந்த விதமான குறைகளையோ அல்லது தலைமையில் இருக்கும் உருத்திரகுமார் அண்ணாவை சந்தேகிக்க வேண்டிய தேவையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை...! மே 18 க்கு அண்மையில் எம்மை போல உருத்திர குமார் அண்ணாவும் ஏமாற்ற பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் எனது நம்பிக்கை...

எத்தினை குழுக்கள் வேண்டுமானாலும் செயற்பட்டு விட்டு போகட்டும்... செயற்பட்டு பலம் சேர்க்கட்டும்... நடுநாயகமாக நாடுகடந்த அரசை இயக்க வேண்டியது புலம்பெயர்ந்தவர்களின் கடமை... தமிழர் போகக்கூடிய சரியான பாதையும் அதுதான்..

உண்மை!!! சரியான கொள்கை நிலைப்பாடு தவறான ஒருவரால் முன் மொழியப்பட்டது என்பதற்காக நாடுகடந்த தமிழீழ அரசையும் அதன் தலைவர் உருத்திரகுமாரையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது ஆரோக்கியமாகாது.(தமிழீழக் கோரிக்கையும் தவிகூட்டணியால் முன்மொழியப்பட்டு பின்னர் அவர்கள் அதைக் கைவிட்ட போதிலும் புலிகள் அந்தக் கொள்கையை முன் நகர்த்திச் சென்றிருந்தனர் என்பது வரலாறு) நாடு கடந்த அரசுக்கான தேர்தலிலும் வட்டுக்கோட்டைத் திர்மானத்தின் மீதான தேர்தலின் போதும் மக்கள் ஆர்வத்தடன் வாக்களித்திருந்தனர்.தலைமைகள் தங்களுக்குள் அடிபட்டாலும் மக்கள் இரண்டும் வேறுவேறல்ல ஒரே நோக்கத்திற்கானவை என்று கருதியே வாக்களித்திருந்தனர்.இனி ஒரு கணமும் தாமதிக்காமல் இரண்டு தரப்பினரும் ஒன்று கூடி தங்களுக்குள் கலந்துரையாடல்களை மேற்கொண்டு தங்களுக்குள்ள சந்தேகங்களைப் போக்கிக் கொண்டு ஒரு அணியாகச் செயற்படுவதே எதிர்காலத்தில் நன்மையளிக்கக் கூடியது.இன்றைய சூழ்நிலையில் புலம் பெயர் தமிழர்களே தமிழர்களின் உரிமைக்காக துணிவுடனும் சுதந்திரத்துடனும் குரல் கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கிறார்கள்.அவர்கள் ஒற்றுமையின்றி பிளவுபட்டிருப்பது எதிரிக்கே சாதகமானதாகும்.ஆகவே எல்லோரும் ஒற்றுமையாகப் போராடுமாறு எங்களுக்காகத் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். ஒற்றுமையே பலம்.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.