Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சிப் படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது‐

Featured Replies

யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற காட்சிப் படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது‐

13 July 10 12:57 am (BST)

GA.salam.Chadrasri.copy.jpg

யாழ்ப்பாண அரச அதிபர் கணேஸ் யாழ் மாவட்ட முன்னாள் ராணுவத் தளபதியும் தற்போதைய வடக்கு மாகாண ஆளுனருமான மேஜர் ஜெனரல் ஜீ ஏ சந்திரசிறியின் கால்களில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்ற நிகழ்வின் ஒளிப்படம் குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ளது.

அரச அதிபர் கணேஸ் அரசாங்கத்தின் கால்களில் வீழ்ந்தே தனது சேவைக்கால நீடிப்பினைப் பெற்றுக் கொண்டதாக அண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்திருந்தார்.

69 வயதைக் கடந்துள்ள யாழ் அரச அதிபர் கணேசின் சேவைக்காலம் மறுஅறிவித்தல் வரை மீண்டும் நீடிக்கப்பட்டமையானது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அரசின் ஆளும் உயர் மட்டத்தினரது கால்களில் விழுந்தே அவர் தனது சேவைக்கால நீடிப்பைப் பெற்றுக் கொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன.

குளோபல் தமிழ் செய்திகளுக்கு கிடைத்துள்ள மிக இரகசியமான இந்தப் படத்தின் மூலம் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அம்பலமாகியுள்ளன.

யாழ்ப்பாண அரச அதிபர் தன்னிலும் மிகவும் வயது குறைந்த சந்திரசிறியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியதனையும் அரச உயர்மட்ட அதிகாரிகள் அதனை வரவேற்பதனையும் இந்தப் படத்தில் காணலாம்.

இதே வேளை யாழ் அரச அதிபர் தனது பதவி ஆசைக்காக ஆசனத்தை கட்டிக் கொண்டிருப்பதாக செயலக உள்ளுர் அதிகாரிகளே விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.

முன்னதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவரது இடமாற்றம் அரசியல் காரணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை பொதுநிர்வாக அமைச்சு தனக்கு வழங்கிய இடமாற்றத்தினை ரத்துச் செய்யவில்லை என இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=27133&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் அடிமை என்பதை நிரூபித்துவிட்டார் கணேஷ். இப்படியும் ஒரு மானம்கெட்ட பிழைப்பு வேண்டுமா ?

Edited by Queen

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்து கும்பிட கூடியவரை தானே அரச அதிபராக போடுகிறார்கள்.

இருந்தாலும் என்ன பிழைப்போ??

எதைச் சாதிக்க இப்படி விழுந்திருக்கிறார்.?

  • கருத்துக்கள உறவுகள்

.

69 வயதிலை, கணேசுக்கு இது தேவையா......

கணேசின் இந்தச் செயலால் ஒட்டு மொத்த தமிழ் இன மக்களையே..... மேலும் தலை குனிய வைத்து விட்டாரே. பாவி.

.

எல்லாரும் தானே இப்ப சிங்களவனின் காலில விழுகினம். இவர் நூறோட நூற்றொண்டா விழட்டும். தன்மானம் என்றா இவங்களிட்ட எவ்வளவு காசென்று கேட்கவேண்டும்.

எல்லோருடைய கருத்திற்கும் எதிராக எழுதினால் பெட்சீற் அடிவிழுமோ தெரியல ஆனாலும் எழுத வேண்டும்

இப்படி ஒரு படத்தைப்போட்டு கிழிப்பதால் என்ன பயன்?

கணேஸ் அவர்களின் அனுபவம், பட்டறிவு, வேலைத்திறன், மொழியாற்றல், பணிவு இப்போ இருக்கும் அரசாங்க அதிபர்களுள் யாருக்கும் இல்லை. வவுனியாவில் 1997 தொடக்கம் நெருக்கடியான காலகட்டங்களில் அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்தாலும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் பல திட்டங்களை செய்தவர். இவர் மற்றும் இலங்கா நேசன் போன்றோர்கள் மீது பல குற்ற சாட்டுக்களை நாம் முன்வைத்தாலும். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் நெகோட் திட்டம், நியாப் திட்டம் ஆகிய பெரும் திட்டங்களை வடக்கு கிழக்கிற்காக தயாரித்து நேரடியாக அந்த அமைப்புக்களுடன் பணி செய்தவர்கள் மட்டுமன்றி சிங்களப்பகுதிகளில் ஆசிய அபிவிருத்தி பணிகள் உகல வங்கி பணிகள் பின்னடைவை கண்டபோது வடக்கு கிழக்கில் நல்ல முறையில் நடந்தது. இதற்காக விடுதலைப்புலிகளுடன் கூட சண்டை பிடித்து திட்டங்களை நிறைவேற்றி இரண்டாம் கட்டம் மூன்றாம் கட்டங்களுக்கு நகர்த்தியவர்கள். இதன் மூலம் போர் நடைபெறும் பகுதிகளில் புனர்வாழ்வை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சேர்ந்து செய்ய முடியும் என்ற எண்ணக்கருவை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் செய்து காட்டியவர்கள்.

இன்றும் கூட ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கிகள் இவர்கள் பொறுப்பை எடுத்தால் திட்டங்கள் கொடுக்க தயாராக இருக்கின்றார்கள். ஆனால் இவர்கள் புலிகள் எண்டாலும் சரி, டக்கு எண்டாலும் சரி, இராணுவம் எண்டாலும் சரி அதற்கேற்ப பணிந்து பணிகள் செய்வார்கள்.

அமைச்சின் செயலர் பதவிக்கு வவுனியாவில் இருந்தபோது வாய்ப்பு கிடைத்த போதுதான் விடுதலைப்புலிகளின் வேண்டு கோளுக்கு அமைய யாழ்ப்பாணம் அனுப்பபட்டார். இதே வேளை மற்றொரு திறமையான அரச அதிபர் கூட அமைச்சு செயலர் பதவிக்கு சென்ற வேளை மீண்டும் புலிகளால் கிளிக்கு அழைக்கபட்டார்.

காரணம் இவர்களிடம் திட்டங்களை தயாரித்து அரசாங்கத்திடன் கொடுத்துவிட்டு வரும்வரை கொட்டாவி விடும் பழக்கம் இல்லை பல தரப்பிடம் நிதி பெற்று வேலை செய்யும் ஆழுமை இருந்தது. இப்போதும்தான். யார் காலில் விழுந்தாலும் பொறுப்பில் இருந்துகொண்டு மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்தால் செய்யட்டும்.

இவர்களுடன் ஒப்பிடும் போது இமெல்டா சுகுமார் மற்றும் இப்போது நியமிக்கப்பட்டுவரும் அரச அதிபர்கள் 10 வீதம் கூட அனுபவமோ தன்னியல்பான அறிவோ இல்லை. விடுதலைப்புலிகள் இருந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி வேலைகளில் முன்னேற்றம் இன்மையால் ஆசிய அபைவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் மூன்றாம் தரப்பு நிதி வழங்குனர்களால் எச்சரிக்கப்பட்டும் இருந்தனர். புலிகளுக்கும் இது பற்றி அந்த அமைப்புக்கள் கூறி வந்தனர்.

ஆகவே இருக்கின்றவரை அனுபவமானவர்கள் இருந்து பணி செய்வதுதான் நல்லது. அல்லது இமெல்டா சுகுமார் உட்பட பல அதிகாரிகள் அரசாங்கம் நிதி தந்தால் செய்வார்கள் இல்லாவிட்டால் அப்படியே இருப்பார்கள். அதுதான் தேவை என்றால் இப்படி படங்கள் போட்டு கிளியுங்கோ.

இராணுவ அதிகாரிகளுடன் பியர் அடிச்சிட்டு களியாட்டம் ஆடி பொழுதை கழிக்கும் தமிழ் பெண், ஆண் அதிகாரிகளைவிட இப்படி காலில் விழுந்தாவது தமது பதவிகளை தக்கவைத்துக்கொண்டு ஏதாவது நல்ல திட்டங்களை செய்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

உமையது கருத்தடன் நான் சிலவிடையங்களில் ஒத்துப்போகிறேன். மிகவும் திறமைவாய்ந்த அதிகாரி. அவர் சிங்களத்தின் காலில் வீழ்வது அவருக்கு என்ன பிரச்சனையோ! அதைவிட இங்கு விழுவது கணேசு எனும் தனிமனிதனே அவர் என்ன நோக்கத்திற்காக விழுகிறார் என்பது அவருக்கத்தான் தெரியும். எமது தேசத்தின் விடுதலைக்காய் எத்தனை வீரர்களை நாம் இழந்துள்ளோம்? அவாகள் வீரகாவியமாகியதன் பின்பும் அவர்களது புனித வித்துடல்களை எத்தனை களிசடைகள் அம்மணமாகப் படம்பிடித்து தங்களுக்கள் பத்திரப்படுததினர் அதனை புலம்பெயர் இணையத்தளங்கள் வெளியிட்டு வக்கிரப்படுத்தின. ஆயிரக்கணக்கான எழைகளதும் முதியோரதும் சேமிப்பினை நிதிநிறுவனம் தொடங்கி ஏப்பம் விட்டது சரபணபவான் என்பவர். கடந்த பொதுத்தேர்தலில் இந்தியாவிற்கு எதிரான தமது உணாவினை வெளிப்படுத்தக்கூடிய தமிழ்மக்கள் ஒற்றமையை இந்தியா உடைத்தெறிய சம்பந்தன் மாவை மண்டையன்குழுத் தளபதி சுரேஸ் போன்றோருக்க உறுதுணையாக நின்றது சரவணபவானே.

  • தொடங்கியவர்

தமிழனின் கல்விச்சமூகத்தை சேர்ந்த ஒருவர் வெளிப்படையாக சிங்களவனின் கால்களில் விழுவது ஒட்டுமொத்த தமிழினத்தை பற்றி சிங்களவனுக்கு இளி நிலையை தான் ஊட்டும்... ஒரு மாவட்ட அரச அதிபர் என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்... அப்படியான ஒருவர் சிங்களவன் ஒருவனின் கால்களில் விழுவது அதுவும் வெளிப்படையான ஒரு இடத்தில் விழுவது தமிழனுக்கு பெருமை சேர்க்காது...!

  • கருத்துக்கள உறவுகள்

புது வருடப் பிறப்புப் போன்ற பண்டிகைக் கால்களில் பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் வயது வித்தியாசமில்லாமல் தங்களது உயரதிகாரிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் வழக்கம் உள்ளது.

அதைத் தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்பதில்லை.அதை அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை.

உந்தாள் எதுக்காக விழுகுதோ தெரியாது. எதுக்கும் பட்த்தை முழுசாகப் பார்த்தால்த்தான் விசயம் விழுங்கும்.

துவக்கோட பின்னால நிண்டு ஆமிக்காரன் உதைக்கிறானோ தெரிய இல்லை. அந்தாள் என்ன செய்யும் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் பலத்தோடு இருந்த பொழுது நிமிர்ந்து நின்றவர்கள் இப்பொழுது குனிய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பதே படத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளக் கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண அரசாங்க அதிபராக தாம் இன்று பதவியேற்றுள்ளதாக இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண செயலகத்தில் இன்று பிற்பகல் 2.20 மணிக்கு அவர் தமது பொறுப்புக்களை முன்னாள் அரசாங்க அதிபர் கே கணேஸிடம் இருந்து ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே இந்த பதவி ஏற்பு கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த போதும், அது பின்னர் பிற்போடப்பட்டது.

இந்தநிலையில் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக கே கணேஸ் இன்று வரை கடமையாற்றி வந்தார்.

இதேவேளை கிளிநொச்சியின் முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் முல்லைத்தீவின் அரசாங்க அதிபராக பதவியேற்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

அது தொடர்பான தகவல்களுக்காக வேதநாயகத்தை தொடர்புகொண்டபோது தாம் முக்கிய கலந்துரையாடல் ஒன்றில் இருப்பதாக தெரிவித்தார்.

இமெல்டா யாழ்ப்பாண அரசாங்க அதிபரானார். கணேஸ் ஓய்வு பெற்றார்.

யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இமெல்டா சுகுமார் இன்று பதவி ஏற்றுள்ளார்.

யாழ்ப்பாண செயலகத்தில் இன்று பிற்பகல் 2..20க்கு அவர் தமது பொறுப்புக்களை முன்னாள் அரசாங்க அதிபர் கே கணேஸிடம் இருந்து ஏற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் பணிப்பிற்கு ஏற்ப இன்று தாம் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக கடமையை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களையும் தாம் சந்தித்து கலந்துரையாடியதாக இமெல்டா சுகுமார் குறிப்பிட்டார்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கிளிநொச்சியின் முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விரைவில் முல்லைத்தீவில் தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வார் என இமெல்டா தெரிவித்தார்.

இதனையடுத்து, முல்லைத்தீவு அரசாங்க அதிபராக பெயரிடப்பட்டுள்ள நாகலிங்கம் வேதநாயகத்தை தொடர்பு கொண்டபோது தமக்கு இன்னும் பதவி பொறுப்பேற்றல் தொடர்பான அறிவித்தல் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.

இந்தநிலையில் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக செயலாற்றிய கே கணேஸ் இன்றுடன் ஒய்வு பெற்றுள்ளார்.

இது தொடர்பில் கருத்துரைத்த அவர் மிகவும் கஸ்டமான காலப்பகுதியிலும் தாம் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக செயலாற்றி தற்போது ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக தாம் பொதுமக்கள் படையினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தாம் நன்றி கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடரப்போகும் தமிழனின் வாழ்வின் படம் இது.

இதைத்தானே நாம் விரும்பினோமெனில்......

வரவேற்பதே சிறந்தது

அதுவுமில்லாமல்

இதுவுமில்லாமல் வாழ்வது சரிவராது

முடிவு எம் கையில்.

எம்மை பிரதிநிதிப்படுத்தும் நிலையில் உள்ள அவர் தனது முடிவை செய்து காட்டியுள்ளார்

நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதை...

ஆனால் இந்தப்படத்தை பார்த்திலிருந்து....

என் கண்கள் எதற்காகவோ குளமாகின்றன.

எனக்கே தெரியவில்லை

ஏன் இன்னும் என் மனம் எதற்காகவோ ஏங்குகிறதே....

உனக்கும் அப்படியிருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.....

நாம் ஒருநாள் நிமிர்வோம் என்ற நம்பிக்கையாவது எனக்குள் இருக்கட்டும்

Edited by விசுகு

கணேசின் கடந்தகால சேவை பாராட்டுக்குரியது.

ஆனால், அண்மைக் காலமாக அவரது நடவடிக்கைகள் பல கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவது வெளிவராத செய்தி. அதில் சிங்கள நீதிமன்ற உயர் பாதுகாப்பு வலய குடியேற்ற உத்தரவு அமுலாக்க இழுத்தடிப்பும், உயர் பாதுகாப்பு வலய மக்கள் சந்தித்து தமது பிரச்சனைகளை கூற இடம் கொடாமையும் அடங்கும்.

இறுதியாக நாவற்குழியிலுள்ள களஞ்சியசாலையை யாழ் நாக விகாரையின் பாவனைக்கு வழங்கியதும் அடங்கும். களஞ்சியசாலையை தற்போது சிங்கள பௌத்த சுற்றுலா பிரயாணிகளின் தங்குமிடமாக கணேஷால் மாற்றப்பட்டு, ஒரு நபருக்கு 30 ரூபா நாகவிகாரையில் செலுத்தி அங்கு தங்கலாம். நாக விகாரையிலுள்ள பிக்கு பயங்கரவாதிகள் தினமும் ஒலிபெருக்கி மூலம் தமிழின விரோத கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.